புதன், 19 ஆகஸ்ட், 2015

லிபியா வரலாறு 1

லிபியா வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் பெர்பெர் பேரரசினால் சிதைந்துபோன வட ஆப்பிரிக்காவின் (பார்பரி கோஸ்ட்) கடற்கரையோரப் பகுதிகள் இரண்டு மெடிட்டரேனியன் நகரங்களான மேற்கின் ஸ்பெயினையும், கிழக்கின் துருக்கியையும் கவர்ந்தது. பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் துருக்கியின் பகை துருக்கியின் மதப்பூர்வமான அணுகுமுறையால் கொஞ்சம் சமாதானமாகியது. அதனால் துருக்கியின் கடற்கொள்ளையர்கள் அந்த கடலோரப் பகுதியை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்பட்டு ஓட்டோமான் பேரரசின் பாதுகாப்பில் வந்தது. அப்படி முதலில் 1512 ல் அல்ஜீரியா கரையில் ஒரு கூட்ட மும், இரண்டாவது கூட்டம் 1551 லிபியா கரையிலும் குடியேறியது. அந்த கடற் கொள்ளைக் கூட்டங்களிலேயே மிகவும் புகழ்பெற்ற கைர் எத் தின் என்பவர் 1535 ல் துனீஷியாவில் குடியேறினான். ஐரோப்பியர்கள் இவரை பார்பரொஸ்ஸா என்று அழைத்தனர். 1535 ல் ஸ்பெயினையும், 1574 ல் துனீஷியாவையும் ஓட்டோமான் பேரரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
கடற்கொள்ளை அந்த பார்பேரிய பகுதிகளில் துருக்கிய குடியேற்றவாசிகளுக்கு முக்கிய தொழிலாகவும், வருமானம் பெற்றுத்தரக்கூடிய தாகவும் இருந்தது. முந்நூறு ஆண்டுகளாக நடந்துவந்த கடல்கொள்ளை 1830 ல் பிரான்சு அல்ஜீரியாவில் நுழைந்ததால் தடைப்பட்டது. ஆனால் பிரான்சு 1847 வரை முழுமையாக அல்ஜீரியாவைக் கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால், துருக்கி கடல்பகுதியிலிருந்து பெர்பெர்கள் எதிர்த்துக்கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் கள் தொல்லைமிகுந்த அந்த மொத்த பார்பேரிய கடல்பகுதிகளையும் காவல் புரிந்துவந்தார்கள். 1881 ல் துனீஷியா பிரான்சின் பாதுகாப்பில் வந்தது. மாரினிட் பேரரசின் உள்நாட்டு சுல்தானிடமிருந்து சுதந்திரம் அடைய போராடிக் கொண்டிரு ந்த மொரோக்கோவும் 1912 ல் பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதே 1912 ல் இத்தாலி துருக்கிகளிடமிருந்த லிபியாவை கைப்பற்றியது.
துருக்கிகளிடம் நவீன லிபியா இருந்தபோது ஓட்டோமான் பேரரசின் வசம் இருந்ததைவிட சற்று நன்றாக இருந்தது. மேற்கு மாகாணமான திரிபோலிடானியாவை ஓட்டோமான் பேரரசின் கவர்னரின் சந்ததியைச் சேர்ந்தவ ரான அஹ்மத் கரமான்லி பரம்பரைப் பிரதேசமாக 1711 லிருந்து 1832 வரை ஆண்டு கொண்டிருந்தார். கிழக்கு மாகாணமான சைரெனைக்கா பத்தொன்பதாம் நூற்றா ண்டுகளில் பிதோயின் பழங்குடியின மக்களிடையே புகழ்வாய்ந்த இஸ்லாமிய சுன்னி பிரிவு தலைவர் அல் செனுஸ்ஸி அல் கபிர் என்பவரின் சந்ததிகள் செனு ஸ்ஸிகளின் அதிகாரத்தில் இருந்தது. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் கைய கப்படுத்துவது உள்நாட்டு எதிர்ப்புகிளம்பும் என்று கருதிய இத்தாலி ஆப்பிரிக்கா வில் படர சற்று அவகாசம் எடுத்துக்கொண்டது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அல்ஜீரியா மற்றும் துனீஷியா பிரான்சின் வசமும், எகிப்து பிரிட்டன் வசமும் இருந்தது.  பிரா ன்சு மற்றும் பிரிட்டன் பகுதிகளுக்கு மத்தியில் வட ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாக இருந்த லிபியாவில் இத்தாலி பெரிய வாணிப ஸ்தலமாக உருவாக்கி யது. 1900 ல் பிரான்சும், இத்தாலியும் சுமூகமாகவும், ரகசியமாகவும் ஒரு ஒப்பந் தம் செய்துகொண்டன. அதன்படி பிரான்சும் மொரோக்கோவை வடிவமைத்தது. லிபியாவிலும், மொரோக்கோவிலும் எல்லாவற்றிற்கும் சுலபமாக அனுமதித்துக் கொள்ளவேண்டும் என்பதே ஒப்பந்தமாகும். 1911 ல் திடீரென்று ஒருநாள் இத்தாலி தன் படைகளை திரிபோலியானாவுக்கும், சைரெனைக்காவுக்கும் அனுப்பி அங்கி ருக்கும் உள்நாட்டு இத்தாலியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனுமதி வேண்டி இஸ்தான் புல்லுக்கு மிரட்டல் விடுத்து இருபத்திநான்கு மணிநேர நிபந்தனை விடுத்தது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் இத்தாலி வட ஆப்பிரிக்காவில் நுழை வதற்கு  உடனடி போர் அறிவித்தது.
இத்தாலிக்கு செனுஸ்ஸியின் பழங்குடியினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. துருக்கியின் அனைத்துப்பகுதியிலும் தொல்லைவர ஆரம்பித் தது. ஏரிப்பகுதி மாகாணமான லாசன்னில் அவ்சி என்ற இடத்தில் ஒரு உடன்படிக் கை ஏற்க்கப்பட்டு, திரிபோலிடானியாவும், சைரெனைக்காவும் இத்தாலியின் கீழ் படிதலுக்கு ஆளானது. இதனால் இத்தாலி செனுஸ்ஸிகளின் அதிகாரத்திலிருந்த தென்மேற்கு பகுதியான ஃபெஸ்ஸானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந் தது. இணைக்கப்பட்ட ஃபெஸ்ஸான் மாகாணம் நவீன லிபியாவாக இத்தாலியால் மாற்றப்பட்டது.
உலகப் போர்
இத்தாலி லிபியாவில் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கும் போதே, இரண்டு உலகப்போர்களை லிபியா சந்தித்தது. மேலும், இத்தாலி அரசுக்கு எதிராக எதிர்ப்புக்குழுவும் உருவானது. முதல் உலகப்போரின் கோரிக்கைப்படி இத்தாலி லிபியாவின் கடற்கரை நகரங்களைத்தவிர, மற்ற இடங் களை விட்டு விடவேண்டும் என்று முடிவாகியது. இதனால், எங்கு பார்த்தாலும் செனுஸ்ஸிகளின் ஸவியா (ZAWIYA- மசூதிகளின் பிண்ணனியிலுள்ள பலமான அமைப்பு) வின் அதிகாரத்திற்கு மீண்டும் லிபியா நகரங்கள் வந்தன. முதல் உலக போருக்குப் பிறகு, செனுஸ்ஸிகளின் தலைவர் முஹம்மது இத்ரிஸ், இத்தாலி யுடன் வெற்றிகரமாக ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். அதாவது, இத்தாலியின் வசமுள்ள சைரெனைக்கா கடற்கரைப் பகுதிகளை தாங்கள் அங்கீ கரிப்பதாகவும், பதிலுக்கு தன்னை எமிராக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரி இருந்தார்.
ஆனால், இந்த சிரமமான உறவு நிறைய எதிர் விளைவுகளை உண்டாக்கியது. 1923 ல் முஹம்மது இத்ரிஸ் எகிப்து பயணம் போயிருந்த போது, மதப்பற்றுள்ள லிபியாவின் கவர்னர்கள் திரிபோலிடானியாவிலும், சைரெனைக்காவிலும் அதிகப்படியான அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள். (இந்த இரண்டு மாகாணங்களும் தான் 1934 ல் இணைக்கப்பட்டு லிபியா காலனி நாடாகியது). இரண்டாம் உலகப்போர் செனுஸ்ஸிகளுக்கு வெற்றியைத் தந்தது. அவர்கள் இத்தாலியின் எதிரிகளாக இருந்ததால், இயற்கையிலேயே பிரிட்டனுடனும், அமெரிக்காவுடனும் போரில் கூட்டு வைத்திருந்தார்கள். 1942-43 ல் செனுஸ்ஸிகள் எல்லா போர் நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துக்கொண்டு இத்தாலியையும், ஜெர்மனியையும் வட ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற்றினார்கள்.
போருக்குப் பிறகு. சில சிறிய சண்டைகளின் மூலம் திரிபோலிடானியா மற்றும் சைரெனைக்கா பகுதிகளின் நிர்வாகத்தை பிரிட்டனும், ஃபெஸ்ஸான் மாகாணத்தை பிரான்சும் எடுத்துக்கொண்டன. லிபியாவின் எதிர்காலத்தை ஐக்கியநாட்டுசபையில் வைத்து தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது. இது லிபியாவின் சுதந்திரத்திற்கான புரட்சியாகிப்போனது. 1950 ல் லிபியாவின் மூன்று பெரிய மாகாணங்களும் முஹம்மது இத்ரீஸ் அவர்களை லிபியாவின் மன்னராக தேர்வு செய்தது. 1951 டிசம்பர் 24 ல் இத்ரீஸ் அவர்கள் லிபியாவை சுதந்திரநாடாக அறிவித்தார்.
ராயல் லிபியா 1951-1969
முஹம்மது இத்ரீஸ் அவர்களின் ஆட்சி பழைய மன்னர்களின் நடைமுறை ஆட்சிபோல் இருந்து எந்த ஜனநாயக அறிகுறியும் தெரியவில்லை. முதல் எட்டாண்டுகள் இவரின் ஆட்சியின் கீழ் லிபியாவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் பின் தங்கிப்போனது. பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானப்படைதளத்துக்கு அனுமதி அளித்ததன் பேரின் கிடைத்த வருவாயிலும், சர்வதேச நாடுகளின் மூலம் கிடைத்த உதவியாலும் நிர்வாகம் தடுமாறிக்கொண்டு இருந்தது. இந்த நிலை அப்படியே 1959 ல் தலைகீழாக மாறியது. லிபியாவின் எண்ணேய் வளம் கண்டறியப்பட்டது. முஹம்மது இத்ரிஸ் அவர்கள் தன் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொண்டு, புதிய சுதந்திர லிபியாவின் தரத்தை மேம்படுத்த தயாரானார். வெளிநாட்டு சக்திகள் லிபியாவை விட்டு வெளியேற பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், மன்னரை ஓய்வுபெறச்சொல்லி எதிர்ப்பு வலுத்தது. 1969 ல் மன்னர் முஹம்மது இத்ரிஸ் துருக்கிக்கு சென்றிருந்த போது, 27 வயதான இராணுவ தளபதி மாம்மர் அல் கத்தாஃபி என்றவரால் இரத்தமின்றி மன்னராட்சி நீக்கப்பட்டது.
1969 லிருந்து மாம்மர் அல் கத்தாஃபியின் ஆட்சி
மாம்மர் அல் கத்தாஃபி உடனே ஆயுதப்படையின் கமாண்டர் இன் சீஃப் மற்றும் லிபியாவின் புரட்சிப்படை கவுன்சிலின் சேர்மனாகவும் இருந்து லிபியாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். 1979 லிருந்து இவர் சாதாரண புரட்சியாளராய் இருந்து பிடிப்புடன் ஆட்சிசெய்தார். இவருடைய சொந்த சட்டமே லிபியாவின் சட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மாம்மர் அல் கத் தாஃபி விரைவில் ஒரு சர்வாதிகாரியாக மாறினார். இவரது அரசியல் தத்துவம் இஸ்லாம், அரபு தேசியம் மற்றும் சோஷலிசம் உள்ளடங்கியதாக இருந்ததாக இவரைப்பற்றி தி க்ரீன் புக் தெரிவிக்கிறது. மேலும் தனிப்பொருள் சேரும் வண்ணம் 1977 ல் பீப்பிள்ஸ் சோஷியலிஸ்ட் லிபியன் அராப் ஜமஹிரியா என்று நாடு குறிக்கப்பட்டது. அதாவது கூட்டமாக ஆள்வது என்று பொருள். அதற்கேற்றார் போல் 1500 உள்நாட்டுக்குழுக்களை அமைத்தார். ஆனால், இதெல்லாம் வெளி உலகத்திற்கு மட்டும்தான் உண்மையில் அவர் ஒருவர்தான் ஆட்சிசெய்தார்.
அதிகமாக சர்வதேச உலகில் அறியப்படாத பெயராக இருந்த மாம்மர் அல் கத்தாஃபி லிபியாவின் எண்ணெய் வளத்தால் உலகம் அறிந்தவரானார். துருக்கிக்கும், சாட் நாட்டுக்கும் இடையே நல்ல உறவைப் பேணாதிருந்தார். வெளிநாட்டில் இருந்த லிபியா எதிர்ப்பாளர்களை உளவாளிகள் மூலம் கொன்றார். லிபியாவின் பொருளாதாரம் வெளிநாட்டு தீவிரவாதத்திற்குப் பயன் படுத்தப்பட்டது. 1972 ல் மாம்மர் அல் கத்தாஃபி வட அயர்லாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக செயல்படும் ஐ.ஆர்.ஏ என்ற அமைப்பை ஆதரிப்பதாகக் கூறினார். தீவிரவாதத்திற்கு எதிராக தங்கள் நடவடிக்கையை தெரிவிப்பதாகக் கூறி 1986 ல் அமெரிக்க ஜனாதிபதி ரீகன் பிரிட்டனிலிருந்து லிபியாவின் நகரங்களான திரிபோலி மற்றும் பென்காஸியின் மீது விமானத்தாக்குதல் நடத்தினார். அதில் மாம்மர் அல் கத்தாஃபியின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தனர். மாம்மர் அல் கத்தாஃபி மயிரிழையில் உயிர் தப்பினார். அதன் பிறகு, அழுகிய மூளையுள்ள அமெரிக்கா பலமுறை கடாஃபியைக் கொல்ல முயற்சி செய்து தோற்றுப்போனது.

லிபியா வரலாறு 2

பின் சில காலம் கழித்து 1988 ல் ஸ்காட்லாந்தில் லாக்கர்பீ என்னுமிடத்தில் 259 பயணிகளுடன் பான் அம் என்ற விமானம் வெடித்துச் சிதறியது. தரையிலிருந்த மேலும் 11 பேரும் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு லிபியர்கள் தான் பாரிஸிலிருந்து புறப்படும் போது வெடிகுண்டு வைத்ததாகக் கூறப்பட்டது. அந்த இரண்டு லிபியர்களையும் விசாரணைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கூறியது. ஆனால், அதிபர் கடாஃபி மறுத்துவிட்டார். இதனால் ஐக்கிய நாட்டு சபை 1993 ல் லிபியா மீது பொருளாதாரத்தடை கொண்டு வந்தது. மேலும் எண்ணெய் எடுப்பதற்காகத் தேவைப்படும் கருவிகளை லிபியாவிற்கு விற்பதற்கும் வியாபாரத்தடை போட்டது.
1970 ல் லிபியாவிலிருந்த இத்தாலியர்களும், யூதர்களும் வெளியேறி விட்டனர். அருகிலிருந்த வடஆப்பிரிக்க நாட்டவர்களும் வெளியேறி விட்டனர். ஆனால், இவர்களை கடாஃபி தான் வெளியேற்றி விட்டார் என்று கூறப்பட்டது. அப்படி அது உண்மை என்றாலும் அது தவறில்லை. தன் நாட்டு எண்ணெய் வளத்தை தன் தேசத்தவர்களே அனுபவிக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு. கடாஃபி லாக்கர் பீ விமான வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்பட்ட இருவரை நெதர்லாந்தில் விசாரணைக்கு அனுப்பினார். லிபியா மீதிருந்த பொருளாதாரத்தடையும் நீங்கியது. லிபியாவின் புராதன இடங்கள் உலக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டது.
லிபியாவில் அதன் அதிபர் மாம்மர் கடாஃபி செய்திருக்கும் கீழே சொல்லப்பட்ட நன்மைகள் இதுவரை எந்த செல்வநாடும் உலகில் செய்ததில்லை. தன் நாட்டு வளத்தை (இந்திய அரசியல்வாதிகள் போலல்லாமல்) தன் மக்களுக்கே கொடுத்த இராணுவ வழி வந்த அதிபர். பொறாமைப்படாதீர்கள்.
1. திருமணமான அனைத்து தம்பதிகளுக்கும் புதிய வாழ்க்கை ஆரம்பிக்க 50,000 டாலர் அரசுப்பணம்.
2. அனைத்து லிபிய மக்களுக்கும் வீடு இலவசம்
3. அனைத்து லிபிய மக்களுக்கும் மின்சார கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம்.
4. இஸ்லாத்தில் வட்டி இல்லாததால் எந்த வங்கி, அரசாங்கம், கம்பெனி கடன்களுக்கு வட்டி இல்லை.
5. கடாஃபி அதிபராக வருவதற்கு முன் 25% மட்டுமே இருந்த கல்வியறிவு பெற்ற லிபிய மக்களை 83% உயர்த்தினார். அரசு பல்கலைக்கழகங்களில் அனைத்தும் இலவசம்
6. லிபியாவில் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மருந்து உட்பட.
7. உலகில் எண்ணெய் வளத்தில் மிகச்சிறப்பான நிலையில் இருந்த லிபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 0.14 செண்ட்கள்.
8. லிபிய குடிமகன் கார் வாங்கினால் அரசாங்கம் 50% தொகையை ஏற்றுக் கொள்ளும்.
9. குடும்ப அளவு (FAMILY SIZE) ரொட்டியின் 40 துண்டுகள் இணைந்ததின் விலை 15 செண்ட்கள்.
10. பொருளாதாரம் மிகவும் உச்சத்திலிருந்தது. 150 பில்லியன் டாலர்கள் கையிருப்பு இருந்தது.
11. வேலை கிடைக்கும் வரை அரசு ஊக்கத்தொகை கிடைக்கும்.
12. லிபிய தாய் குழந்தைப் பெற்றால், 5000 டாலர்கள் ஊக்கத்தொகை
13. விவசாயம் செய்ய முன்வருபவர்களுக்கு நிலம், கருவிகள், விதைகள், இலவசம்.
14. லிபிய இளைஞர்கள் வெளிநாடுகளில் படித்தால் மாதம் 2000 டாலர் தொகை, தங்குமிடம், போக்குவரத்து இலவசம்.
15. 27 பில்லியன் டாலரில் மனித முயற்சியில் செயற்கை ஆறு திட்டம்.
16. லிபியாவின் எண்ணெய் வருமானத்தில் ஒரு பங்கு அனைத்து குடி மக்களுக்கும் அவர்களின் வங்கிக்கணக்கில் போய்விடும்.
லிபியாவில் உலகின் மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலையைக் கட்ட திட்டமிட்டிருந்தார். அது இப்போதே உலகின் 8 வது அதிசயமாகக் கூறப்பட்டது. கடாஃபியின் தகப்பனார் இறந்தபோது, அவரது தாயும், மனைவியும், அவரும் வீடில்லாமல் கூடாரம் அடித்து வாழ்ந்தார்கள். அதன் வேதனை அறிந்து நாட்டு மக்களுக்கு இலவச வீடு கொடுத்தார். பெண் காவலர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த புகைப்படத்தைப் போட்டு அவரை எப்படியெல்லாம் யூத, அமெரிக்க நாடுகள் கேவலப்படுத்தின. ஒரு சர்வாதிகாரி மேற்சொன்ன விஷயங்களைத் தன் நாட்டு மக்களுக்கு செய்வாரா? அல்லது செய்ததாக சரித்திரம் இருக்கிறதா?
உலக யூத வங்கிக்கு எதிராக கடாஃபியின் நடவடிக்கை இருந்ததால், அவருக்கு எதிராக இருந்த அவரின் மக்களாலேயே நாயைவிட கேவலமாக கொல்லப்பட்டார். இனி அந்த மக்களுக்கு யார் தருவார் சலுகைகளை, கடுமையான மன்னராட்சியில் இருந்து லிபிய புரட்சியின் மூலம் மீட்டார். ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரே கரன்சியைக் கொண்டு வர முயன்றார். சென்ட்ரல் பேங்க் ஆஃப் லிபியாவை தானே நடத்தினார். 150 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்திருந்தார்.

லிபியா வரலாறு 3

பின்வரும் காரணங்களுக்கு அவர் ஒத்துப்போக மறுத்ததே மேற்க்குலகினர் அவரை அடித்துக் கொல்ல காரணமாகியது.
ரோத்ஸ்சைல்ட் சென்ட்ரல் ரிசர்வ் பேங்கிங் கார்டெல்லின் கட்டளையை ஏற்க மறுத்தார்.
மொத்த ஆப்பிரிக்காவுக்கும் 400 மில்லியன் டாலரில் சொந்த சாட்டிலைட் நிறுவ தயாரானார். அதில் 300 மில்லியன் லிபியா செலவிடவும் முடிவெடுத்தார். இதில் அடுத்தவர்களுக்கு என்ன என்று நீங்கள் நினைக்கலாம். ஆப்பிரிக்கா கண்டம் வருடத்திற்கு 500 மில்லியன் டாலர் ஐரோப்பிய மேற்கு நாடுகளுக்கு சாட்டிலைட் பயன்பாட்டிற்கு கொடுத்துக் கொண்டிருந்தது. ஆப்பிரிக்கா சொந்தமாகத் தொடங்கினால் ஐரோப்பிய பொருளாதாரம் தடைபடும்.
ஆப்பிரிக்கா மானிட்டரி ஃபண்ட் இனி ரோத்ஸ்சைல்ட் சென்ட்ரல் வங்கியிடம் கடன் பெறாது. தங்கள் வசம் இருக்கும் தங்கத்தின் மூலம் சொந்த கரன்சியை உருவாக்கிக் கொள்ளும். வட்டி இல்லை
மொத்த ஆப்பிரிக்கா கண்டத்தின் எண்ணெய் வளத்தையும் லிபியா சொந்தமாகக் கண்காணிக்கும். மேற்கத்தியர்களின் தலையீடு போய்விடும்
தன் நாட்டு எண்ணெய் வளத்திலிருந்து ஆப்பிரிக்கா கண்டத்தை ஐரோப்பிய அதிகாரத்திலிருந்து அனைத்து விஷயங்களிலும் துண்டித்து விட நினைத்தார்.
1960 களில் லிபிய பாலைவனத்தில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட போது, கூடவே தரமான இயற்கை நீர் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நீர் வளம் லிபியாவுக்கு மிகப்பெரிய பொக்கிஷம். இதனால் பூமிக்கு அடியிலேயே குஃப்ரா பேசின், சிர்ட் பேசின், மொர்ஸுக் பேசின் மற்றும் ஹமதா பேசின் என்று பிரம்மாண்டமான நான்கு பெரிய ராட்சத பேசின் அமைப்புகளுக்காக 1984 ல் “கிரேட் மேன் மேட் ரிவர் ப்ராஜக்ட்” ஒன்றை 25 பில்லியன் டாலர் செலவில் முதல் கட்டமாகத் துவங்கினார். இந்த திட்டத்தால் 35,000 க்யூபிக் கிலோமீட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். இது உலகின் மிகப்பெரிய சரித்திரத்துவம் வாய்ந்த திட்டம். இதில் லிபிய நிர்வாகத்தால் மூன்று கட்ட பணிகள் முடிந்து விட்டன. ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் க்யூபிக் மீட்டர் தண்ணீரை பாலவனத்திலிருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு வரமுடியும். ஒரு க்யூபிக் மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 3.75 டாலரில் கிடைக்கும். இங்கு கிடைக்கும் மொத்த தண்ணீரும் நைல் நதியிலிருந்து 200 வருடங்கள் கிடைக்கும் தண்ணீருக்கு ஈடாகும் என்று அறிஞர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். இதனால் ஆப்பிரிக்கா கண்டம் வளமடைந்து விட்டால், ஐரோப்பிய நாடுகள் பின் தங்கி விடுமே என்ன ஒரு கேடு சிந்தனை.
சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் கையிலிருந்து ஐஸ் நழுவி விழுந்தாலே பார்த்து பரிதாபப்படும் நாம். ஒரு நாட்டு அதிபர் இறைவன் கொடுத்த சொந்த நாட்டு வளத்தை மொத்த கண்டத்திற்கும் வளம் கொடுக்க இருந்ததை ஈவு இரக்கம் இல்லாமல் சிதைத்து விட்டனர் மேற்குலகத்தினர். நேற்றுவரை தங்களுடன் ஐ.நா மற்றும் வெளிநாட்டு விழாக்களில் கை குலுக்கி மகிழ்ந்த ஒரு தலைவரை, அதுவும் கௌரவமற்ற முறையில் ஒரு பிக்பாக்கெட்காரன் போல் ஒரு அதிபரை கேவலப்படுத்தினார்கள். ஆம் இதுவும் ஒரு யூத, கிறிஸ்தவ தீவிரவாதம் தான்.
எந்த ஒரு உண்மையான லிபிய குடிமகனைக் கேட்டாலும் சொல்வான் தங்களுக்கு கடாஃபிதான் அதிபராக வேண்டும் என்று. அவர் ஒரு வேளை ஒழுங்கிணத்திலும், நட்பு பாராட்டுவதிலும் தடுமாறி இருக்கலாம். ஏன் ஜார்ஜ் புஷ் மகள் திருமணமாகாமல் ஆண் நண்பருடன் கேளிக்கைக்கு போனாரே, இங்கிலாந்து ராணியின் பேரன் ஹாரி இரவு விடுதியில் குடித்து கும்மாளமிட்டாரே அது மட்டும் சோஷலிசமா? கடாஃபி ஒரு நல்ல தலைவராக இல்லாமலும் இருக்கலாம். தெரியாமல் ஒரு சொட்டு தேனோ அல்லது நெய்யோ விரலில் விழுந்தால் நக்கித்தான் பார்ப்போம். ஆனால் ஒரு நாட்டின் அதிபர்களுக்கு கை முழுவதும் தேனோ, நெய்யோ நனைந்து கொண்டே இருக்கும். அதை நக்காமல் தவித்துக் கொள்பவர்கள் தான் ஈமான் உள்ள தலைவர்கள். மாம்மர் கடாஃபி தன் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். நானோ, நீங்களோ அவர் புறம் ஆதரவளிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவரின் மரணம் இறைவனின் விருப்பம்.
லிபியாவின் அரசியல்வாதி மஹ்மூத் ஜிப்ரில் என்பவர், “யார் இந்த உள்நாட்டு கலவரத்தைச் செய்து பல அப்பாவி லிபிய மக்களின் உயிர்களைப் பறித்தார்களோ அவர்களுக்கு தெரியாது. இது மேற்கத்தியர்களின் வேலை என்று. கடாஃபி வீழ்ந்ததால் மொத்த லிபியாவும் வீழ்ந்ததென்று. ஆனால், லிபியா இப்போது தலைவன் இல்லாமல் தனித்து விடப்பட்டு விட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவன் சொந்தம் கொண்டாடுகிறான். இது எங்கே ஆப்பிரிக்காவின் இன்னொரு சோமாலியா ஆகிவிடுமோ என்று அச்சம் வருகிறது.” என்று கூறுகிறார்.
அமெரிக்க ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த, சர்வதேச பிரச்சினைகளின் மதிப்பீட்டாளர் பால் க்ரீக் ராபர்ட்ஸ் என்பவர், “வாஷிங்டன் கடாஃபியை விலக்கி விட்டது. அதே போல் காட்சியை சிரியாவிலும் நடத்த திட்டமிடுகிறது. மேலும், சீனாவை மெடிட்டரேனியன் கடல்பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என்றும் நம்புகிறது. ஆப்பிரிக்காவின் எரிசக்தி துறையில் சீனாவின் பங்கு இல்லாமல் செய்வதற்கும் முயற்சிக்கிறது. இதை ஏற்கனவே அமெரிக்காவும், இங்கிலாந்தும் 30 ம் வருட ஆரம்பத்தில் செய்தன. கடாஃபிக்கு அமெரிக்கா வழங்கிய தண்டனை அவர் அமெரிக்க ஆப்பிரிக்க (AFRICOM) உத்தரவுக்கு பணியாததே. தற்போது இவர்கள் லிபியா உள்நாட்டு கலவரத்திற்கு வழங்கிய ஆயுதங்கள் பணிமுடிந்து ஆப்பிரிக்க தீவிரவாதிகளின் கைகளில் சிக்கியுள்ளன. லிபியா அம்மக்கள் சிலரின் தவறான முடிவினால் படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கடாஃபி செய்து வைத்திருந்த நன்மைகள் போய் எங்கு பார்த்தாலும் வெடி, வெடி என்று நிம்மதியை இழந்து விட்டார்கள்.” என்று கூறியுள்ளார். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஜார்ஜ் புஷ் கொன்று குவித்துவிட்டு பதவியை விட்டுப் போகும் போது 'ஸாரி' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போய்விட்டான். ஆனால், சதாம் ஹுசெய்னுக்கும், மாம்மர் கடாஃபிக்கும் வாய்ப்பிருந்தும் 'ஸாரி' என்னும் வார்த்தை சொல்லாமலே போய்விட்டார்கள்.
இன்னும் நிறைய அரசியல்வாதிகளும், நலம் விரும்பிகளும் லிபியாவின் உண்மைகளை தினசரி எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னவொன்று கடாஃபியுடன் தொலைந்து போன லிபிய மக்களின் நல்வாழ்வு திரும்ப கிடைக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 1

டெல்லி சுல்தானேட்  வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
அடிமைகளாய் இருந்து உமய்யாக்களின் ஆட்சியின் போது, இஸ்லாத்தில் இணைந்த பின்  இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மம்லுக்குகள். இவர்கள் 9 ம் நூற்றாண்டிலிருந்தே பல ஆட்சியாளர்களின் ஆட்சியில் இராணுவத்தில் பெரும் பதவிகளை வகித்தார்கள். குறிப்பாக அரசியலிலும், இராணுவத்திலும் இவர்கள் எகிப்து, லீவண்ட், ஈராக், இந்தியா போன்ற பகுதிகளில் தலையெடுத்தார்கள். தற்போதைய மத்திய ஆப்கானிஸ்தானிலிருந்த கோர் என்ற பகுதியை கஸ்னவித் ஆட்சியாளர் கஸ்னி முஹம்மதுவிடமிருந்து அபு அலி இப்ன் முஹம்மது வெற்றி பெற்று சுன்னிப்பிரிவு இஸ்லாமாக ‘குரித் ஆட்சிவம்சம்’ என்று துவக்கினார். 1011 லிருந்து ஆண்ட இவர் பல மஸ்ஜித்கள், இஸ்லாமிய பள்ளிக்கூடங்களைக் கோர் பகுதியில் கட்டினார். 1186 ல் கஸ்னவித்களிடம் கடைசியாக எஞ்சி இருந்த லாகூரை கோரியின் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது (கோரி முஹம்மது) வெற்றி பெற்று அவர்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
குரித் ஆட்சிவம்சம்
குரித் ஆட்சிவம்சமாக இருந்த அவர்கள் ஆட்சியின் உச்சமாக மேற்கில் கோரசானையும் வடக்கில் இந்தியாவின் பெங்கால் வரை வந்தார்கள். குரித்கள் பெர்ஷிய கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். இவர்கள் புஷ்டோ என்னும் மொழியை பேசுபவர்களாக இருந்தார்கள். ஆரம்பத்தில் கோர் பகுதியை அமீர் பான்ஜி என்ற குரித் இளவரசர் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் அல் ரஷீதின் கீழ் நிர்வகித்து வந்தார். குரித்கள் 150 ஆண்டுகாலம் கஸ்னவித் மற்றும் செல்ஜுக் ஆட்சியாளர்கள் கீழும் ஆண்டு வந்தார்கள். தாங்கள் சுயமாகவே ஆளவேண்டும் என்று பிரியப்பட்ட குரித் தலைவர் குத்ப் அல் தீன் முஹம்மது என்பவர் கஸ்னவித் ஆட்சியாளர் பஹ்ராம் ஷா என்பவரை விஷம் வைத்துக் கொன்றார். 1161 க்குப் பிறகு, கியாத் அல்தீன் முஹம்மதும், அவர் சகோதரர் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மதும் குரித் ஆட்சிக்கு போட்டியாக இருந்த அபுல் அப்பாஸைக் கொன்றார்கள். 1173 ல் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது சகோதரர் கியாத்துடன் இணைந்து கஸ்னாவை வென்று ‘க்வாரிஸ்மித் பேரரசு’ என்று கோரசானில் ஏற்படுத்தினார். இந்த சகோதரர்களுக்கு எதிராக இவர்களின் சிறிய தந்தை ஃபக்ருத்தீன் மசூத், ஹிராத்தின் செல்ஜுக் கவர்னர் தஜிதுதுதீன் யில்ஸித்துடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தார். சகோதரர்கள் அவரை வென்று கவர்னரைக் கொன்று, ஸமீன்தவார், பட்கிஸ், கார்சிஸ்தான், குஸ்கன் ஆகிய பகுதிகளை வென்றார்கள். 1175 க்குப் பிறகு, முல்டான், உச், லாகூரை வென்று குரித்கள் ஆட்சியை நிலைப்படுத்தினார். தென் ஆசியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு இவர்தான் வித்திட்டார்.
இவரது ஆட்சியின் பகுதிகளாக தற்போதைய ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், ஈரான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகியவை இருந்தன. குஜராத்தில் போரிடும் போது அதன் இந்து ராணி நைகிதேவியால் தோற்கடிக்கப்பட்டார். 1191 ல் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் கணவாய் வழியாக பஞ்சாபில் நுழைந்து பிரித்திவிராஜ் சௌஹான் வசமிருந்து பதிண்டா கோட்டையை வென்றார். அதற்கு காஸி ஜியாசுத்தீன் என்பவரை கவர்னராக்கினார். பின் அக்கோட்டையை மீண்டும் பிடிக்க பிரித்திவிராஜ் உத்தரவின் பேரில் இளவரசர் கோவிந்த் தாய் என்பவனுடன் ஹரியானாவில் போரிட்டார். அதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 3000 யானைகள், 300,000 காலாட்படை, குதிரைப்படைகளுடனும், ராஜபுத்திர ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடனும் போரிட்ட கோவிந்தை, திறமையான 120,000 வீரர்களுடன் போரிட்டு வென்று பிரித்திவிராஜையும் கைது செய்தார். 1193 ல் அஜ்மீர் பகுதியிலிருந்து ஒழுங்காக கப்பம் வராததால் அதை குதுப்தீன் அய்பக் மூலம் கைப்பற்றச் செய்தார். பின்னர், இந்துக்களின் சிறிய பிரதேசங்களான சரஸ்வதி, சமனா, கோஹ்ரம் மற்றும் ஹன்சி ஆகியவற்றை சிரமமில்லாமல் கைப்பற்றினார். வடக்கிந்திய பகுதிக்கு குதுப்தீன் அய்பக்கை கவர்னராக துர்கிய ஜெனெரல்களுடன் நியமித்தார். பஞ்சாபில் கலவரம் நடக்க அதைச் சரிசெய்து இந்தியாவின் நடவடிக்கைகளை குதுப்தீன் அய்பக்கிடம் ஒப்படைத்து விட்டு, கஸ்னி திரும்பினார். வரும் வழியில் ஜீலம் நதிக்கரையில் கோகர் பழங்குடி ஒருவனால் கொலை செய்யப்பட்டு 1206 ல் இறக்கும் வரை ஆட்சி செய்தார். முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது (கோரி முஹம்மது) தன்னுடன் இருந்த அடிமைகளை மிகவும் அன்பாக நடத்தினார். எப்போதும் சிலருக்கு சில மகன்கள் தான் இருக்கும் ஆனால், எனக்கு ஆயிரக்கணக்கான இந்த அடிமைகளும் மகன்கள் தான் என்பாராம். இவருக்குப் பிறகு இவருடைய ஆட்சியை அடிமைகளாய் இருந்த குதுப்தீன் அய்பக் 1206 ல் டெல்லி சுல்தானேட்டையும், நசீருத்தீன் கபாச்சா 1210 ல் முல்டானையும், தாஜுத்தீன் யில்டோஸ் கஸ்னியையும், இக்தியாருத்தீன் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி பெங்காலையும் பிரித்து ஆண்டு வந்தார்கள். இந்து மன்னனான பிரித்திவிராஜ் சௌஹானை வென்றதால், முஃஇஸ்ஸத்தீன் முஹம்மதை பாகிஸ்தானியர்கள் பெரிதும் மதிப்பார்கள். இன்றைக்கும் சில பாகிஸ்தானியர்கள் இவருடைய மற்றும் மம்லுக் இராணுவத்தினரின் வழித்தோன்றல்கள் தான். பாகிஸ்தான் இராணுவம் இவரைக் கௌரவிக்கும் வகையில் நடுத்தர வீச்சுள்ள ஏவுகணைகளான கௌரி 1,2,3 க்கு இவர் பெயரை வைத்துள்ளது.
குதுப்தீன் அய்பக், கோரி முஹம்மதிடம் அடிமையாக இருந்தவர். டெல்லியைத் தலைநகராகக் கொண்டு, வடமேற்கு இந்தியாவை 1206 லிருந்து 1210 வரை ஆட்சி செய்தார். இன்றளவும் இந்தியாவைக் குறிக்க பாரம்பரிய சின்னமாக அறியப்படும் “குதுப்மினாரை’ இவர்தான் கட்டினார். 100 மீட்டர் உயரத்தில் மொஹாலியிலுள்ள ஃபதேஹ்புர்ஜுக்குப் பிறகு, இந்தியாவிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் இந்த குதுப்மினார் தான். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும் இருக்கிறது. டெல்லியின் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்துள்ள குதுப்மினார் 73 மீட்டர் உயரத்தில் கீழ்புறம் 14.32 மீட்டர் அகலமும், உச்சியில் 2.75 மீட்டர் அகலமும் உள்ளது. 1981 ல் உச்சியைப் பார்வையிடச் செல்லும்போது மின்சாரம் தடைபட்டதால், இருட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் இறந்த பிறகு, இதன் பார்வையாளர்கள் அனுமதி தீவிரமாக்கப்பட்டது. கீழிருந்து மேலே செல்ல 379 படிக்கட்டுகள் உள்ளன. டெல்லியின் ஆட்சியை நிர்மாணித்த குதுப்தீன் அய்பக்கால் 1220 ல் ஆரம்பிக்கப்பட்ட குதுப்மினார் அவர் மருமகன் ஷம்சுத்தீன் மற்றும் ஃபிரோஸ் ஷா துக்ளக் ஆகியோராலும் சில பாகங்கள் கட்டப்பட்டது. செந்நிற கற்களாலும், பளிங்கு கற்களாலும் கட்டப்பட்ட இதில் பல சரித்திர அடையாளங்களான குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித், அலய் தர்வாஜா, இல்டுட்மிஷ் சமாதி, அலய் மினார், அலாவுத்தீன் மதரஸா மற்றும் சமாதி, இமாம் ஜமீனின் சமாதி ஆகியவை உள்ளன. குதுப்மினார் பலமுறை பூகம்பத்தாலும், இடியாலும் பாதிக்கப்பட்டு அவ்வப்போதைய டெல்லி ஆட்சியாளர்களால் பழுது பார்க்கப்பட்டது. டெல்லி மெட்ரோ இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள குதுப்மினாரை தனது சினிமாவில் பதிவு செய்ய ஆசைப்பட்டு தேவ் ஆனந்த் என்ற இந்தி திரைப்பட நடிகர் ‘தேரே கர் கி சாம்னே’ என்ற படத்தில் தில்கா பன்வார் கரே புகார் என்ற பாடலில் பதிவு செய்தார். 2006 ல் தாஜ்மஹால் 2.5 பார்வையாளர்களைக் கொண்டிருக்க, குதுப்மினார் 3.9 பார்வையாளர்களைக் கொண்டு ஆச்சரியப்படுத்தியது. இதன் வளாகத்திலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜிதின் தென்பகுதியில் பிரத்தியேகமான ‘அலய் தர்வாஸா’ (அலய் கதவு) என்ற நுழைவுவாயிலை 1311 ல் அலாவுத்தீன் கில்ஜி அமைத்தார். துருக்கிய கலைஞர்களின் கை வண்ணத்தில் கோபுரத்துடன் செந்நிற கற்களைக் கொண்டு இந்த நுழைவுவாயிலை அவர் அமைத்தார். குதுப் மஸ்ஜித் எனப்படும் குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித் தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் முதல்முறையாகக் டெல்லியில் கட்டப்பட்ட மஸ்ஜிதாகும். குதுப்மினாரின் நடைவளாகத்தில் 7.21 மீட்டர் உயரத்தில் 6 டன் எடையுள்ள இரும்பு தூண் நிறுவப்பட்டுள்ளது. குதுப்தீன் அய்பக் லாகூர் நகரில் போலோ என்னும் குதிரை விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்து போனார்.

டெல்லி சுல்தானேட் வரலாறு 2

குதுப்தீன் அய்பக்கிற்குப் பிறகு, ஷம்சுத்தீன் இல்டுட்மிஷ் என்பவர் டெல்லி சுல்தானேட்டுக்கு ஆட்சியில் வந்தார். இல்டுட்மிஷ் என்பது துருக்கிய பெயர். இவர் துர்கிஸ்தானைச் சேர்ந்த இல்பரி பழங்குடியைச் சேர்ந்தவர். இவர் சிறுவயதாக இருந்த போது புகாரா அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார். அங்கு முஹம்மது கோரியின் தர்பாருக்கு வாங்கப்பட்டார். இவருடைய திறமையால் விரைவில் சுல்தானுக்கு தனிப்பட்ட உதவியாளரானார். பின்னர் குதுப்தீன் அய்பக்கின் மகளையே மணந்து தபரிந்த், க்வாலியர், பரான் பகுதிகளுக்கு கவர்னரானார். அய்பக் மரணமடைந்தபின் இஸ்லாமிய தலைவர்கள் அரம்ஷா என்பவரை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். குத்பி தலைவர்கள் இல்டுட்மிஷை தேர்ந்தெடுத்தார்கள். அரம்ஷா லாகூரிலும், இல்டுட்மிஷ் டெல்லியிலும் ஆட்சி அமைத்தார்கள். அரம்ஷா, இல்டுட்மிஷ்ஷுக்கு எதிராக டெல்லி நோக்கி படையெடுத்துவர பாக் இ ஜுட் என்ற மலைப்பகுதியில் இல்டுட்மிஷ்ஷால் கொல்லப்பட்டு குரித் தலைவர்களின் வேண்டுகோள்படி குரித்களின் டெல்லி சுல்தான் ஆனார். அதுவரை தலைநகராக இருந்த லாகூரை, இல்டுட்மிஷ் டெல்லிக்கு மாற்றியதால் இவரே முதல் டெல்லியின் ஆட்சியாளராக சிலர் கணக்கிடுகிறார்கள். இவருக்கு ஆரம்பத்தில் பல இடையூறுகள் இருந்தன. முஹம்மது கோரியின் பகுதிகளைப் பிரித்து ஆண்டவர்களாலும், குதுப்தின் அய்பக்கால் வெல்லப்பட்ட இந்து மன்னர்களாலும், அரம்ஷாவின் ஆதரவாளர்களாலும் எதிர்ப்பு இருந்தது. முதலில் அவாத்ம் பதாவுன், பெனாரஸ், சிவாலிக் ஆகிய பகுதிகளை வென்றார். இவர் மகன் நசீருத்தீன் மஹ்மூத் மூலம் பெரும் இழப்புகளைச் சந்தித்து பெனாரஸையும், ரோஹில்கந்தையும் வென்றார். 1221 ல் ஒரு புயலைப்போல மங்கோலியர்கள் மத்திய மற்றும் மேற்கு ஆசியாவில் நுழைந்து நாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கவாரிஸ்மை வெல்ல அதன் ஆட்சியாளர் ஜலாலுத்தீன் மிங்புர்மு பஞ்சாபில் நுழைந்து இல்டுட்மிஷ்ஷின் உதவியை நாடினார். ஆனால் இல்டுட்மிஷ் அவருக்கு உதவாமல் மறுப்பு தெரிவித்தார். இதை சரித்திர ஆய்வாளர்கள் வெகுவாகப் புகழ்கிறார்கள். ஏனென்றால் முல்டான் வரை வந்த மங்கோலியர்கள் இவரைத்தேடி இந்தியாவில் நுழைந்திருந்தால் இந்தியாவின் சரித்திரம் மாறி இருக்கும். (பின்னால் மங்கோலியர்கள் டெல்லியைச் சூறையாடினார்கள். அதுவேறு சூழ்நிலை). முல்டானை ஆண்ட நசீருத்தீன் கபாச்சா, கஸ்னியை ஆண்ட தாஜுத்தீன் யில்டோஸ், பெங்காலை ஆண்ட இக்தியாருத்தீன் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி ஆகியோரை வரிசையாக இல்டுட்மிஷ் வென்றார். அஜ்மீர், நாக்பூர், க்வாலியர் ஆகியவற்றையும் வென்ற இல்டுட்மிஷ் பெரும் இழப்புடன் குஜராத்தின் சாளுக்கியர்களை எதிர்த்து உஜ்ஜைய்னியைக் கைப்பற்றினார். இவர் பதாவுனில் கட்டிய கோட்டையும், மஸ்ஜிதும் புகழ் வாய்ந்தது. டெல்லியின் ஜும்மா மஸ்ஜிதை அலாவுத்தீன் விரிவாக்கம் செய்வதற்கு முன் இல்டுட்மிஷ்ஷின் மஸ்ஜித் பெரியதாக இருந்தது. பல மடங்களையும், அப்போது டெக்கானில் பிரபலமாக இருந்த காரணத்தால் சூஃபி ஞானிகளுக்கு தர்காக்களையும் கட்டினார். கந்தகி பௌலி தர்காவுக்கருகில் இவர் கட்டிய அவ்ஸ் இ ஷம்சி என்னும் பெரிய தண்ணீர் தொட்டி மிகவும் புகழ் பெற்றது. அதன் அருகில் ஜஹாஸ் மஹால் என்ற ஒன்றையும் கட்டினார். பின்னாளில் அதை மொகலாயர்கள் பயன்படுத்தினார்கள். இவர் இறந்த பின் இவர் மகன் நசீருத்தீன் மஹ்மூத் கட்டியதுதான் டெல்லியில் முதல் இஸ்லாமியர்களின் சமாதி ஆகும். குதுப்மினாரில் குவ்வத் உல் இஸ்லாம் என்ற மஸ்ஜிதைக் கட்டினார். அதுவரை இந்து ராஜபுத்திரர்களின் நாணயங்களே பயன்பட்டுவந்த நிலையில் இல்டுட்மிஷ் 3.38 கிராம் எடையில் 0.59 கிராம் வெள்ளியுடன் செம்பும் கலந்து நாணயங்களை வெளியிட்டார். இன்று நாம் ரூபாய் என்றழைக்கும் மதிப்பு இவர் காலத்தில் டங்கா என்று அழைக்கப்பட்டது. 53 வகை ஈரடியாக நாசிரி என்ற கவிஞரால் எழுதப்பட்ட கவிதைக்கு 53,000 டாங்காக்கள் பரிசளித்தார். ரூஹானி அல் சமர்கண்டி என்பவரும் இவரைப் பற்றி புகழ்பெற்ற கவிதை எழுதியுள்ளார். புகழ்பெற்ற கவிஞர் அமீர்குஸ்ரு இவர் அரசவையில் இருந்தவர். 1229 ல் இல்டுட்மிஷ் நோய்வாய்ப்பட்டிருந்த போது மூத்தமகன் நசீருத்தீன் மஹ்மூத் பெங்காலில் இறந்து போனார். இல்டுட்மிஷ்ஷின் மற்ற மகன்கள் ஆட்சிக்கு தகுதியில்லாத காரணத்தால் அவர் தன் மகள் ரஸியாவை (ரஸியா சுல்தானா என்று புகழ்பெற்ற இவரைப்பற்றிய தனிப்பதிவு இன் ஷா அல்லாஹ் பின்னால் வரும்) ஆட்சிக்கு பரிந்துரைத்தார். ஆனால் இஸ்லாமிய தலைவர்கள் பெண்கள் ஆட்சிக்குத் தகுதியற்றவர்கள் என்று மறுத்து விட்டார்கள். இதனால் இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு மகன் ருக்னுத்தீன் ஃபிருஸ் ஆட்சிக்கு வந்தார். இவர் நிர்வாகத்தை தன் தாயார் ஷா துர்கினிடம் கொடுத்தார். ஆறு மாதங்களிலேயே ருக்னுத்தீன் ஃபிருஸ் ஆட்சி இழந்தார். மகள் ரஸியா தனது தனிப்பட்ட தகுதியால் குழப்பங்களிடையே ஆட்சிக்கு 1236 ல் வந்தார். 1240 ல் இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு மகன் முஃஇஸ்ஸத்தின் பஹ்ரமால் புரட்சி செய்யப்பட்டு ரஸியாவுக்கு பதில் அவர் ஆட்சிக்கு வந்தார். சகோதரி ரஸியா பாதிண்டா பகுதியில் இருக்கும்போது 40 தலைவர்களின் ஆதரவில் ஆட்சியை இவர் பிடித்தார். பாதிண்டாவின் தலைவராக இருந்த தன் கணவர் அல்தூனியாவின் துணையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ரஸியா முயன்றபோது கைது செய்யப்பட்டு கணவருடன் தூக்கிலிடப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பஹ்ராமின் ஆட்சியின் போதுதான் மங்கோலியர்கள் டெல்லியை துவம்சம் செய்தார்கள். அதைத் திறமையாக கையாளத் தவறியதால் ஆட்சியில் அமர்த்திய 40 தலைவர்களே இராணுவத்தைவிட்டு இவரைக் கொன்றார்கள். அடுத்து ருக்னுத்தீன் ஃபிருஸின் மகன் அலாவுத்தீன் மசூத் என்பவரை 1242 ல் தேர்ந்தெடுத்தார்கள். அவர் கொஞ்சம் கூட ஆட்சி ஆளும் திறமை இல்லாதவராக இருந்து மதுபோதைக்கு அடிமையாக இருந்தார். அதனால் அவரை நீக்கினார்கள். யாருடைய குரித்களின் ஆட்சியும் நிலையாக இல்லாத பட்சத்தில் இல்டுட்மிஷ்ஷின் அடிமை கியாசுத்தீன் பால்பனைத் துணையாகக் கொண்டு இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு பேரர் நசீருத்தீன் மஹ்மூத் 1246 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் மிகவும் இஸ்லாத்தை நேசிப்பவராக இருந்தார். கடமையான தொழுகைகள், ஏழைகளுக்கு உதவுதல் என்று இருந்து, திருக்குரானை கைகளால் எழுதி அதில் வரும் வருமானத்தில் தனது சொந்த செலவுகளைச் செய்தார். மற்ற சுல்தான்களைப்போல் ஆடம்பரமில்லாமல் தன் மனைவியைச் சமைக்கச் சொல்லி அதையே உண்டார். தன் சொந்த வேலைகள் அனைத்தையும் உதவியாளர் இன்றி தானே செய்து கொண்டார். 1266 ல் நசீருத்தீன் மஹ்மூத் இறந்துபோக, பின்னர் கியாசுத்தீன் பால்பனே ஆட்சி செய்தார்.
கியாசுத்தீன் பால்பன் துருக்கியைச் சேர்ந்த ஒரு தலைவரின் மகன். இவர் குழந்தையாய் இருந்த போது மங்கோலியர்களால் பிடிக்கப்பட்டு, கஸ்னி அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார். பஸ்ராவைச் சேர்ந்த க்வாஜா ஜமாலுத்தீன் என்பவர் இவரை வாங்கி பஹாவுத்தீன் என்று பெயரிட்டார். பின் அவர் டெல்லி அழைத்து வரப்பட்டு மற்ற அடிமைச் சிறுவர்களுடன் விற்கப்பட, சுல்தான் இல்டுட்மிஷ், கியாசுத்தீன் பால்பனை வாங்கினார். ஆரம்பத்தில் தண்ணீர் சுமப்பவராக பணியில் இருந்த கியாசுத்தீன் பால்பன் திறமையால் சுல்தானின் தனி செயலாளர் ஆனார். டெல்லியின் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் 40 துருக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். ரஸியா சுல்தானின் ஆட்சியின்போது இராணுவத்தையும், நிர்வாகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் கொண்டிருந்தார். ரஸியாவிற்குப் பிறகு, பஹ்ராம் ஆட்சியில் ரிவாரியின் தலைவராகவும், ஹான்சி பகுதியின் ஜாகீராகவும் இருந்து முன்ணனிக்கு வந்தார். தன் மகளை முந்தைய ஆட்சியாளர் நசீருத்தீன் மஹ்மூதுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார். தன் இளைய சகோதரர் கிஷ்லு கானை அமீர் இ ஹாஜிப்பாக ஆக்கினார். தன் உறவினர் ஷேர்கானை லாகூர் மற்றும் பாதிண்டா பகுதிக்கு ஜாகீராக்கினார். இவர் முன்பு தளபதியாக இருந்த போது பல இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். பட்டப்பகலிலேயே டெல்லியில் நுழைந்து மேவாத் பகுதி ஆட்கள் கொள்ளை அடித்தபோது அவர்கள் மீது கியாசுத்தீன் பால்பன் கடுமையான நடவடிக்கை எடுத்து புகழ் பெற்றார். மேவாத்கள் தப்பித்து அருகில் காட்டுக்குள் ஒளிந்து கொள்ள, சுற்றிலும் மரங்களை வெட்டிக் கொண்டுவந்து அவர்களை சிறைப்பிடித்துக் கொன்றார். டெல்லியைச் சுற்றி புறக்காவல் நிலையங்களை அமைத்து கண்காணிக்க வைத்து வாணிபத்திற்கும், யாத்ரீகர்களுக்கும் பாதுகாப்பளித்தார். நீண்ட முற்றுகையிட்டு ரனதம்போர் கோட்டையைக் கைப்பற்றினார். நசீருத்தீன் மஹ்மூதுக்கு ஆண் வாரிசில்லாத நிலையில் ஆட்சிக்கு வந்த கியாசுத்தீன் பால்பனுக்கு அப்போது 60 வயது. அடிக்கடி ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரம் கொண்ட 40 பேர் குழுவை முதலில் கலைத்தார். இரும்புக்கரம் கொண்டு அடக்கி அனைவரும் ஆட்சியாளருக்கு நன்றியுடன் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திறமையான ஓற்றர்படையையும் அமைத்தார். ஒருமுறை குடிந்திருந்த காரணத்தால் ஒரு அடிமையை சாகும்வரை அடித்துக் கொல்லச் செய்தார். இன்னொரு அடிமையின் விதவை மனைவியுடன் தொடர்பிருந்த காரணத்தால் அந்த விதவையின் முன்பாகவே  ஒரு தலைவரைக் கொன்றார். இவைகளை கவனிக்காமல் இருந்த ஒற்றனை நகரத்தின் முகப்பில் தூக்கில் தொங்கவிடச் சொன்னார். மங்கோலியர்களின் மிரட்டல் இருந்ததால் இராணுவத்தை மறுசீரமைத்தார். அதுவரை டெல்லிப்பக்கமே வராத தன் சகோதரர் ஷேர்கானை விஷம் வைத்துக் கொல்லும் அளவுக்கு இவரின் முன்னெச்சரிக்கை பிரபல்யமாக இருந்தது. இவர் எப்போதும் தர்பாருக்கு முழு ராஜ உடையுடன் தான் வருவார். தர்பாரில் தானும் சிரிக்காமல், யாரையும் சிரிக்க அனுமதிக்க மாட்டார். மேலும், மது, சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்தார். 1286 வரை 20 வருடங்கள் ஆட்சி செய்த இவர் 80 வயதில் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். கியாசுத்தீன் பால்பனின் மூத்தமகன் முஹம்மது கான் மங்கோலியர்களுடன் போரிட்டு இறந்து போனார். அடுத்த மகன் புக்ரா கான் ஆட்சிக்கு தகுதியில்லாத நிலையில் பெங்காலை மட்டும் நிர்வகித்து வந்தார். அதனால் கியாசுத்தீன் பால்பன் புக்ராகானின் மகன் கைய் குஸ்ராவை ஆட்சிக்கு பரிந்துரைத்தார். ஆனால் கியாசுத்தீன் பால்பன் இறந்த பிறகு தலைவர்கள் இன்னொரு பேரன் கைய்குபாத்தை தேர்ந்தெடுத்தார்கள்.  கைய்குபாத் ஆட்சிக்கு வந்தவுடன் பெங்காலில் இருந்த தந்தை புக்ரா கான் அதை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டார். கொஞ்சம் கூட திறமையே இல்லாத கைய்குபாத் உறுப்புகளும் செயலிழந்த நிலையில் தன் மூன்று வயது மகன் ஷம்சுத்தீன் கயுமார்சிடம் ஆட்சியை மாற்றினார். அக்குழந்தைக்கு பொறுப்பாளராக இருந்த ஜலாலுத்தீன் ஃபிருஸ் கில்ஜி குழந்தையைக் கொன்று, கில்ஜி ஆட்சிவம்சம் தோன்றச்செய்து மம்லுக்குகளின் அடிமை ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கியாசுத்தீன் பால்பனின் சமாதி இன்றும் டெல்லியின் மெஹ்ராலி ஆர்சியாலஜி பூங்காவில் உள்ளது.

டெல்லி சுல்தானேட் வரலாறு 3

இன்று நாம் பார்க்கும் இந்தியாவை ஏறக்குறைய சிறிதும் பெரிதுமாக 500 மேற்பட்ட ராஜபுத்திர, சாளுக்கிய, மராட்டிய, சீக்கிய, பாண்டிய, சேர, சோழ, கூர்ஜர, கன்னோசி, பாலர்கள், கலிங்க, பிரதிஹர என்று பலமொழி, பலசட்டங்கள் கொண்டு பலதரபட்ட ஆட்சியாளர்கள் ஆண்டு வந்தார்கள். 50 கிலோமீட்டருக்கு ஒரு மொழி பேசிக்கொண்டு எவனும் எவனுக்கும் ஒத்துவராமல் இருந்தார்கள். முஸ்லீம்களின் பாதம் இங்கு படாமல் போயிருந்தாலோ, மங்கோலியர்கள் முழுமையாக வந்திருந்தாலோ இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரியாக மாறி இருக்கும் என்பது அனைத்து சரித்திர ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து. அனைத்து மன்னர்களையும் போரிட்டு ஒரு நாடாக ஆக்கியதில் கோரி முஹம்மதுக்கும், குதுப்தீன் அய்பெக்குக்கும், இல்டுட்மிஷ்ஷுக்கும், கியாசுத்தீன் பால்பனுக்கும் முக்கிய பங்குண்டு. அதற்குப்பிறகு வந்த அலாவுத்தீன் கில்ஜி ஒரே நாடு என்பதில் தீவிரமாய் இருந்து இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். ஆனால், என்ன கொடுமை இந்த மகத்தான உண்மையை இந்திய மக்களுக்கு வலுக்கட்டாயமாக பாடமாக போதிக்க மறுத்துவிட்டார்கள். ஒருநாள் அல்லாஹுத்தாலாவால் அழிக்கப்படப்போகும் பூமிதானே என்று எண்ணியோ முஸ்லீம்களும் பாமரமக்களுக்கு அதை எடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டார்கள். முஸ்லீம்கள் வந்தார்கள் அவனை வென்றார்கள், இவனை வென்றார்கள், கோவிலை இடித்தார்கள், கொள்ளையடித்தார்கள் என்று இன்றுவரை கூப்பாடுதான் போடுகிறார்களே தவிர, முஸ்லீம்கள்தான் இந்தியா என்று ஒரு நாட்டை உருவாக்கினார்கள் என்று உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் முதல்முதலாக வந்த அப்துல் காசீம் கூட அப்படியே போட்டுவிட்டு  மத்திய ஆசியாவின் கலீஃபா அழைக்க சென்று மரணமடைந்துவிட்டார். அதன்பிறகு மேற்சொன்ன ஆட்சியாளர்களிலிருந்து மொகலாய ஆட்சியாளர்கள் வரை யாரும் இந்தியாவிலிருந்து எந்த செல்வங்களையும் எடுத்துச் சென்றதாக வரலாறு இல்லை. மேலும் அனைவரும் இங்கேயே பிறந்து, இங்கேயே போரிட்டு, பிரிந்திருந்த இந்திய மக்களை ஒன்றாக்கி 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இங்கேயே இறந்து போனார்கள் இது சரித்திரம். வெறும் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து 46,000 கப்பல்கள் செல்வத்தை இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இன்றுவரை கேட்பதற்கோ, அதைப்பள்ளிகளில் ஓங்கிச் சொல்லிக் கொடுக்கவோ ஆளில்லை. சரி, அப்படி அனைவரையும் விரட்டி இன்றுவரை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு (இந்தியாவிலிருந்தது இந்து மதமல்ல திராவிட இனம்) ஆண்டார்களே கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில்தான் ட்ரில்லியன் கணக்கில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா கொள்ளையடித்தவன் திராவிடன் அல்ல. அவன் எங்கும் போக மாட்டான். 500 ஆண்டுகால முஸ்லீம்கள் ஆட்சியில் எந்த நாட்டில் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். யாராவது சொல்லமுடியுமா. நல்லுணவு உண்டு, நல்லுடை உடுத்தி, நல்ல கருவில் பிறந்த மாமன்னர்கள் முஸ்லீம் ஆட்சியாளர்கள். தான் கொண்ட மார்க்கத்திற்கு பயந்தார்கள், தான் ஆட்சி செய்யும் மக்களுக்கு பயந்தார்கள். சில ஆட்சியாளர்கள் அதனாலேயே சில இந்துக்களுக்கு சலுகைகளும் தந்தார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தின் உயர்பதவிகளில் இந்துக்களுக்கு இடமளித்திருக்கிறார்கள். சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் தவறாக ஆண்டிருக்கலாம் அது நியதி. ஊன்றிப்பார்த்தோமானால் பொதுநிலையிலிருந்து சிந்தித்துப்பார்த்தால் இந்திய மக்கள் விழி இரண்டையும் அகல விரித்து, சேர்ந்து விடாமல் இருக்க குறுக்கே தடுப்பிட்டு, உலகிலுள்ள அனைத்து வகையான மண்ணையும் தங்கள் கண்களில் தாங்களே இட்டு நிரப்பிக் கொண்டார்கள். ஒரு இன்னலிலிருந்து ஒருநாடு விடுபட்டால் பலமடங்கு முன்னேற வேண்டும். உலகில் பலநாடுகள் இதற்கு உதாரணமாக இருக்கின்றன. சொல்ல வேண்டுமானால் சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் எத்தனையோ மடங்கு உயர்ந்துவிட்டது. ஜப்பான் ஒரு அழிவிற்குப் பிறகு, எத்தனையோ படி முன்னேறிவிட்டது. ஆனால், இந்தியா மட்டும் முன்னேறாமல் முஸ்லீம் ஆட்சியைவிட, ஆங்கிலேய ஆட்சியைவிட மக்களின் வாழும்தரம் கீழே போய்விட்டது. வாழும் தரம் என்பது ஒரு எல்.சி.டிவி வைத்துக் கொள்வதோ, ஒரு மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொள்வதோ, விதவிதமாக உணவகங்களில் உண்பது மட்டுமல்ல. அப்படி நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இல்லை. ஜப்பான் முன்னேற 50 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியாவிலிருக்கும் அறிவிற்கும், வளத்திற்கும் முன்னேறுவதற்கு 25 ஆண்டுகள் போதும். இதுவரை ஆண்ட ஜெய்ஹிந்த்களும், பாரத்மாதாக்களும், ஹமாரா பாரத்களும் என்ன செய்கிறார்கள். தீவிரவாதம் தீவிரவாதம் என்று கூப்பாடு போட்டு முஸ்லீம்களைப் பழிசுமத்துகிறார்கள். அட தீவிரவாதத்தால் நாம் கொல்லப்பட்டுவிடுவோம் என்று பயந்து யாராவது ஆட்சிக்கு வராமலோ, தேர்தலில் நிற்காமலோ இருக்கிறார்களா?. இந்தியாவை ஆள்வது இந்துக்கள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு ஆள்பவர்களே பிறரைக் குற்றம்சாட்டும் முன் சிந்தியுங்கள். மக்கள் என்றும் முட்டாளாகவே இருக்கமாட்டார்கள். தன்னுடைய கடையில் தன்னுடைய கல்லாவில் இருக்கும் ஒருவன் ஐயோ முந்தாநாள் 7000 ரூபாய் காணாமல் போய்விட்டது, நேற்று 5000 ரூபாய் காணாமல் போய்விட்டது என்று குறிப்பாக ஒரே திருடன் மீது எத்தனை நாள் பழி சொல்லமுடியும்?. எனதருமை மாற்றுமத சகோதரனே ஒன்றைச் சிந்தித்தாயா? 4,000, 5,000 பேரைத்திரட்டிக் கொண்டு உருவிய வாளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் போகும் தலைவரும் இந்துதான். வியாபம் எனப்படும் ஊழலை வெளிக் கொண்டுவந்த அரசு ஊழியன் ஒருவன் அவனும் ஒரு இந்துதான். ஆனால், வாளுடன் பெரும் கூட்டத்துடன் இருக்கும் ஒரு இந்துவுக்கு 150 கோடி ரூபாய்க்கு அரசு பாதுகாப்பு. ஊழலில் பங்குபெற்ற 1000 பேருக்கு மேலானவர்களால் எந்நேரமும் உயிருக்கு வெளிப்படையாக ஆபத்து இருக்கும் ஒரு இந்துவுக்கு ஒரு சைக்கிள் காவலர் பாதுகாப்பு. உங்களுக்கே இது சிரிப்பாகத் தோன்றவில்லையா? அல்லது சிந்திக்கும் அறிவே இல்லாமல் படைக்கப்பட்டுவிட்டீர்களா?. மறைக்கப்பட்டுவிட்ட இஸ்லாமிய சரித்திரங்களைப் படித்துப்பாருங்கள். இஸ்லாமிய ஆட்சி என்பது அனைத்துப் பக்கமும் கூர் உள்ள கத்தியைப் போன்றது. உலகமுழுவதுமுள்ள முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்களுக்கு இறைவன் வழங்கிய ஆட்சியை அந்த கத்தியை அவ்வளவு லாவகமாகக் கையாள்கிறார்கள். சுதந்திரம் பெற்று நம் இந்திய நாட்டை முன்னேற்றாமல் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிய துணைபோனது யார்?, சீனாவுக்கு எதிராக திபெத்தில் தலாய்லாமாவை ஆதரிப்பது யார்?. 80 கோடிகளில் இருந்த நம் மக்களின் நலனைவிட, மேற்சொன்ன இரண்டும் முக்கியமா?. அதெல்லாம் சர்வதேச அரசியல் என்றால், சீனாவிடம் பல ஆயிரம் சதுரஅடிகள் நிலப்பரப்பை கோட்டைவிட்டு விட்டு அமைதியாக இருப்பது ஏன்?. நாம் முஸ்லீமாக இருந்து ஆயிரம் சொல்லிவிடலாம். ஆனால், நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலைமையும், வந்தபின் இருந்த நிலைமையும் ஒருவர் ஆர அமர சரித்திரங்களைப் புரட்டிப்பார்த்தால் தெரிந்து கொள்வார்கள்.
முஸ்லீம்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த பகுதிகளை எதிர்த்தே பிற்காலத்தில் போரிட்டார்கள். எங்கே? இன்று ஆளூம் ஆரியர்களை இஸ்ரேலை எதிர்த்துப் போரிடவேண்டாம். பேசச்சொல்லுங்கள். மாட்டார்கள். இதுதான் அவர்களின் தேசபக்தி. திருட வந்தவனுக்கும், குடியிருக்க வந்தவனுக்கும் உள்ள வித்தியாசமும் இதுதான். ஒரு உருவத்தை (நாட்டை) பல பாகமாகப் பிரித்து அவரவர் என்னுடையது என்று வைத்திருந்தார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்கள் அவர்களை (இந்து மன்னர்களை) வென்று இந்தியா என்னும் மறைந்திருந்த உருவத்தைக் கொடுத்தார்கள். நிலப்பரப்பையே ஆண்ட அவர்களை வென்று முத்தரப்பிலும் கடல்சூழ ஒரு நாடாக்கினார்கள். இதை உலகில் யாராலுமே செய்யமுடியாது. அல்லாஹுத்தாலா அந்த அற்புதத்தை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கையில் கொடுத்தான். இந்தியா ஒரு உலகில் ஒரு அற்புதபூமி. நபிமார்கள் வரலாற்றில் ஆதம் (அலை) நபிகள் பூமிக்கு வரும் போது சொர்க்கத்திலிருந்து கொண்டுவந்த வாசனைப் பொருட்கள் கையிலிருந்து இந்தியப் பகுதியின் மீது சிதறியதால்தான் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சந்தனம் போன்ற பல வாசனைப் பொருடகள் இங்கு விளைவதாக ஒரு வரலாறு. முஹம்மது கோரி முதலில் கன்னாசிகளையும், பிரதிஹரர்களையும் வென்று டெல்லி சுல்தானேட்டை உருவாக்கினார். இல்டுட்மிஷ் மேலும் நிலப்பரப்புகளை வென்று நாட்டை விரிவுபடுத்தினார். அலாவுத்தீன் கில்ஜிதான் டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியா என்னும் பெரிய நாடு உருவாக காரணமாக இருந்தார். ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே ஆட்சிமொழி என்று கொண்டுவந்தார். ஆனால், இந்திய பள்ளிக்கூடங்கள் இவர்களை எல்லாம் படையெடுப்பாளர்களாகத் தான் போதிக்கின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஊர்வலத்தில் வடை விற்றவன், தேநீர் விற்றவனை எல்லாம் சுதந்திரப் போராளிகளாக சித்தரிக்கிறார்கள். பால்பனின் மகன் முஹம்மது கான் இந்தியாவைக் காக்க மங்கோலியப் போரில் உயிர்விட்டான் இதை யாராவது மறுக்கமுடியுமா?. தனது தள்ளாத 80 வயதிலும் எல்லைப்புரத்தில் கோட்டைகளைக் கட்டி இந்தியாவை மங்கோலியர்களிடமிருந்து பால்பன் காப்பாற்றினார். அப்படியும் நுழைந்த மங்கோலியர்களை மாலிக் காபூர், ஜாபர்கான், காஜி மாலிக் போன்ற தளபதிகள் வீரமாகப் போரிட்டு விரட்டினார்கள் அதைச் சொன்னார்களா?. அதாவது மங்கோலியர்கள் வரலாற்றிலே ஒரு சொல் உண்டு. குதிரைகள் நீர் அருந்த தயங்கினால், ‘ஏன் ஜாபர்கான் தென்படுகிறாரா’? என்று கேட்பார்களாம்.


டெல்லி சுல்தானேட் வரலாறு 4

கில்ஜி ஆட்சிவம்ச வரலாறு

குரித்களின் ஆட்சிக்குப்பிறகு, டெல்லி சுல்தானேட்டின் இரண்டாவது ஆட்சியாளர்களாக கில்ஜி ஆட்சிவம்சத்தினர்கள் தோன்றினார்கள். இவர்களும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்கி இனத்தவர்கள். தற்போதைய ஆப்கானிஸ்தானின் கில்ஜி என்ற கிராமத்திலிருந்து வந்தவர்கள். துண்டுத்துண்டாக ஆண்டுகொண்டிருந்த பகுதிகளை ஒன்றுபடுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். டெல்லியின் குரித் ஆட்சியாளர் குதுப்தீன் அய்பக்கிடம் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி என்பவர் இராணுவ ஜெனெரலாக இருந்தார். இவர்தான் முதலில் பெங்காலை வெற்றி கொள்ள துணை புரிந்தார். இவருக்கு பிறப்பிலேயே கால் முட்டியிலிருந்து அடிப்பாதம் வரை வழக்கத்தைவிட நீண்டிருக்கும். ஆனால் இடுப்புக்கு மேற்புறம் குறைவாக இருக்கும். கோர் பகுதியில் ஆரம்பத்தில் திவான் இ அர்தாக நியமிக்கப்பட்ட இவர் குதுப் அல்தீன் படையில் சேர ஆர்வம் காட்டினார். ஆனால் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டு, கிழக்குப்புறம் சென்று மாலிக் ஹிஸ்பர் அல்தீனுடன் சேர்ந்து வட இந்தியாவில் பதயூன் போரில் கலந்து கொண்டார். சிலகாலம் கழித்து அவ்த் பகுதிக்குச் சென்ற இவரின் திறமை அறிந்த மாலிக் ஹுசம் அல்தீன், பக்தியார் கில்ஜிக்கு பெரிய பண்ணை ஒன்றை மிர்சாபூர் மாகாணத்தில் கொடுத்தார். அங்கிருந்து பக்தியார் கில்ஜி திறமையும், வேகமும் கொண்ட இஸ்லாமிய படை ஒன்றைத்தயார் செய்து அருகாமை பகுதிகளை வென்றார். மிகச்சிறந்த 18 குதிரைவீரர்களைக் கொண்ட இவர் படை மிகவும் புகழ்பெற்றது. 1203 ல் பீகாரை வென்றதின் பிறகு, டெல்லி ஆட்சியாளரின் கவனம் பெற்றார். லட்ச்மன் சென் என்பவரை எதிர்த்து நபத்விப் பகுதியை வென்றார். 1206 ல் தேவகோட்டையை விட்டு திபெத் நோக்கி புறப்பட்ட பக்தியார் கில்ஜி அலி மர்தான் கில்ஜி என்பவரை கிழக்குப்பகுதியின் முக்கியமான பாரிசல் பகுதியைக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டார். அஸ்ஸாமை வென்று உடல்நலம் சரியில்லாமல் தேவகோட்டை திரும்பிய பக்தியார் கில்ஜியை கொடுமைக்காரன் அலி மர்தான் கில்ஜி படுகொலை செய்தார். பக்தியார் கில்ஜியின் படையிலிருந்த முஹம்மது ஷிரான் கில்ஜி என்பவர் பழிவாங்கும் விதமாக அலி மர்தான் கில்ஜியைக் கைது செய்தார். பக்தியார் கில்ஜிக்குப் பிறகு, கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பொறுப்புக்கு வந்தார். சிறையிலிருந்து தப்பித்த அலி மர்தான் கில்ஜியை குதுப்தீன் அய்பக் பெங்காலின் கவர்னராக நியமித்தார். இரண்டாண்டுகள் கவர்னராக இருந்த அவரை கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி கொன்று மீண்டும் தான் பெங்காலின் கவர்னராக வந்தார். தேவகோட்டையிலிருந்த பெங்காலின் தலைநகரத்தை கௌருக்கு மாற்றி பலமான கடற்படையை அமைத்தார். 15 ஆண்டுகள் பெங்காலை நிர்வகித்த கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி கிழக்கு பெங்காலின் வாங்கா, அஸ்ஸாமின் கமரூபா, வடபீகாரின் டிர்ஹுத், வட ஒரிஸ்ஸாவின் உத்கலா ஆகியவற்றை வென்று கப்பம் செலுத்த வைத்தார். கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பீகாரை வென்றபின் இவர் வளர்ச்சியின் மீது கவனம் கொண்ட டெல்லி சுல்தான் இல்டுட்மிஷ் இவரை அடக்கும் வண்ணமாக 1224 ல் இருபடைகளுடன் பெங்கால் மீது படையெடுத்தார். பீகாரின் தெலியாகர் என்ற இடத்தில் மோதிக் கொண்டதில் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜியின் கடற்படையும், தரைப்படையும் தோல்வியடைந்தன. இதனால் டெல்லிக்கு 8,000,000 டாகாவும், 38 யானைகளையும் கொடுக்கச் சொல்லி, தனது பெயரிலேயே நாணயமும் வெளியிட வேண்டுமென்று சுல்தான் இல்டுட்மிஷ் உத்தரவிட்டார். இல்டுட்மிஷ் படைகளை விலக்கிக் கொள்ள மீண்டும் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பெங்காலை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டார். இதனால் மீண்டும் படையெடுத்து வந்த இல்டுட்மிஷ் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜியைக் கொன்று பெங்காலை டெல்லி சுல்தானேட்டுடன் நேரடியாக இணைத்துக் கொண்டார். நாலாந்தா பல்கலைக்கழகத்தைச் சேதப்படுத்தியதாக சொல்லப்படும் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பல மஸ்ஜித்களையும், மதரஸாக்களையும் இந்தியப் பகுதிகளில் கட்டினார்.
அடுத்து கில்ஜி குடும்பத்தில் மாலிக் ஃபிருஸ் என்பவருக்குப் பிறந்த ஜலாலுத்தீன் ஃபிருஸ் கில்ஜி என்பவரை டெல்லி சுல்தான் கைய்குபாத் பாரான் பகுதியில் தலைவராகவும், இராணுவ தளபதியாகவும் நியமித்திருந்தார். சுல்தான் கைய்குபாத் வலிப்பு நோயால் உறுப்புகள் செயலிழக்க, டெல்லித் தலைவர்கள் கைய்குபாதின் மூன்றுவயது குழந்தை கயுமார்ஸை சுல்தானாகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய ஜலாலுத்தீன் கில்ஜியும், அவர் மகன்களும் டெல்லியில் நுழைந்து குழந்தை கயுமார்ஸைக் கொன்று, எதிர்த்த இராணுவத்தை வென்று டெல்லியின் சுல்தானேட்டைக் கைப்பற்றினார்கள். சுல்தான் கைய்குபாதைக் கொன்று யமுனா நதியில் வீசினார்கள். பின்னர் டெல்லி சுல்தானேட்டின் முதல் கில்ஜி ஆட்சிவம்ச ஆட்சியாளராக ஜலாலுத்தீன் கில்ஜி 1290 ல் ஆனார். முந்தைய குரித் ஆட்சியாளர் பால்பனின் கீழ் இருந்தவர்களின் நிர்வாகத்தை அவர்களிடமே ஒப்படைத்தார். தன் மூத்த மகனுக்கு ‘கான் கானன்’ என்றும், இரண்டாவது மகனுக்கு ‘அர்கலி கான்’ என்றும், மூன்றாவது மகனுக்கு ‘கத்ர் கான்’ என்றும் பட்டங்களை வழங்கினார். தன் இளைய சகோதரருக்கு ‘யக்ருஷ் கான்’ என்று பட்டமளித்து இராணுவ அமைச்சராக்கினார். மருமகன்களான அலாவுத்தீன் கில்ஜி, அல்மாஸ் பெக் ஆகியோருக்கும் அரண்மனையில் பதவிகள் வழங்கினார். 1292 ல் 100,000 வீரர்களுடன் சூறாவளி போல் இந்தியாவுக்குள் வந்த மங்கோலியப் படைகளை சாதுரியமாக வென்றார். 1296 ல் தன் மருமகன் அலாவுத்தீன் கில்ஜியால் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் ஜுனா முஹம்மது என்றழைக்கப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி இரண்டாவது கில்ஜி ஆட்சிவம்ச டெல்லி சுல்தான் ஆனார். மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று பெயர் பெற்ற இவரிடம் மாலிக் காஃபூர் என்ற திறமையான அரவாணி தளபதியாக இருந்தார். கொஞ்சம் மாலிக் காஃபூரைப் பற்றி தெரிந்து கொண்டு மேலே செல்வோம்.

டெல்லி சுல்தானேட் வரலாறு 5

மாலிக் காஃபூர் அடிமை இந்துவாக இருந்து பின்னர் முஸ்லீமாக மார்க்கம் மாறிய ஒரு சிறந்த படைத்தளபதி ஆவார். இவர் ஒரு அரவாணியும் கூட. கம்பட் போரில் அலாவுத்தீன் கில்ஜியின் படைகளால் அடிமையாக கைப்பற்றப்பட்ட மாலிக் காஃபூர் பார்த்தவுடன் ஈர்க்கும் கவர்ச்சி உடையவராக இருப்பாராம். அதனால் அலாவுத்தீனின் பார்வையில் பட்டு அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டார். இவரை ‘ஆயிரம் தினார் காஃபூர்’ என்றும் அழைப்பார்கள். சுல்தான் அலாவுத்தீன் கில்ஜிக்கு இவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் செய்தி உண்டு. சுல்தானால் குஜராத் புரட்சியை அடக்க அனுப்பப்பட்டார். பின் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தில் உயர்வு பெற்று இராணுவ ஜெனெரலாக ‘நாயிப்’ என்னும் உச்ச பதவியைப் பெற்றார். மாலிக் காஃபூர் 1294 ல் மலைப்பிரதேசமான தேவகிரியை ஆண்ட யாதவ மன்னன் ராம்தேவாவை எதிர்த்து போரில் அவன் மகன் சங்கர்தேவாவைக் கொன்றார். பின் தென்பகுதியில் ககாதியா ஆட்சியாளர்களை எதிர்த்து பெரும் செல்வங்களை அள்ளி வந்தார். வாராங்கல்லில் புகழ்பெற்ற ‘கோஹிநூர்’ என்னும் வைரத்தைக் கைப்பற்றினார். போர்களின் போது அடிபணிய மறுத்த இந்து மன்னர்களின் அரண்மனை, பொக்கிஷங்கள், கோவில்கள் ஆகியவற்றை துவம்சம் செய்தார். 1305 ல் மாலிக் காஃபூர் அம்ரோஹா போரில் மங்கோலியர்களை வெற்றி கொண்டார். 1309 மற்றும் 1311 ல் இரண்டுமுறை தென் இந்தியாவின் மீது படையெடுத்தார். முதல்முறை வாராங்கல் மீதும், இரண்டாவது முறை த்வார் சமுத்ரா, மலபார் மற்றும் மதுரை மீதும் படையெடுத்தார். மாலிக் காஃபூர் இறுதியாக 1318 ல் கடைசி யாதவ மன்னன் ராஜா ஹரபல்லால் கொல்லப்பட்டார்.
1296 ல் தன் மாமனார் ஜலாலுத்தீன் கில்ஜியைக் கொன்று, துருக்கிய தலைவர்களின் ஆதரவு பெற்று அலாவுத்தீன் கில்ஜி டெல்லியின் ஆட்சியில் அமர்ந்தார். அதற்கு உறுதுணையாய் இருந்த முஹம்மது ஷாவுக்கு தகுந்த அதிகாரங்களை அளித்தார். அந்தப்புரத்தில் நடமாடும் அளவுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த முஹம்மது ஷா, சிம்னா என்ற அந்தப்புரப் பெண்ணுடன் சேர்ந்து அலாவுத்தீன் கில்ஜியைக் கொன்று அவர்கள் சுல்தானும், ராணியுமாகத் திட்டமிட்டிருந்தார்களாம். இதை அலாவுத்தீன் கில்ஜி அறிந்து கொண்டார் என்று தெரிந்தவுடன் முஹம்மது ஷா தன் சகோதரருடன் டெல்லியை விட்டுத் தப்பி ஓடினார். ரனதம்போர் என்ற பகுதியை ஆண்ட ஹமிர்தேவ் என்ற ராஜபுத்திர மன்னனிடம் முஹம்மது ஷா அடைக்கலம் புகுந்தார். முஹம்மது ஷாவைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி அலாவுத்தீன் கில்ஜி ஹமிர்தேவிடம் வேண்ட, அவர் மறுத்த பின் ரனதம்பூர் மீது படையெடுத்து அதை வென்றார். அடுத்து 1303 ல் மேவாரை வென்றார். இந்த மேவார் போரில் சம்பந்தப்பட்ட ராஜா ரத்தன் சிங், சித்தூர் ராணி பத்மினி ஆகியோரைப் பற்றி பலகதைகளையும், திரைப்படங்கள் கூட எடுத்து சித்தூர் ராணி பத்மினியை கற்புக்கரசியாகவும், வீரமுள்ளவளாகவும், அலாவுத்தீன் கில்ஜியை காமுகனாகவும் காட்டினார்கள். அவைகள் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனென்றால் இவர் வரிசையாக வடஇந்தியாவை ஒன்றுபடுத்த எடுத்த இராணுவ நடவடிக்கைகளில் இந்து மன்னர்களே இருந்தார்கள். அதனால் இக்கதைகளை அலாவுத்தீன் கில்ஜி மீது அவதூறு பரப்ப கிளப்பியதாக இருக்கலாம் என்றும் ஒரு கூற்று உண்டு. அலாவுத்தீன் கில்ஜி வரிசையாக ரனதம்போர், குஜராத், மேவார் ஆகிய பகுதிகளை வென்றதால் மற்ற வட இந்திய இந்து மன்னர்கள் பயத்தில் இருந்தார்கள். அடுத்து அலாவுத்தீன் கில்ஜி மால்வாவை வெல்லத் திட்டமிட்டார். மால்வாவின் மன்னன் மஹ்லக்தேவ் 20,000 குதிரைப்படைகளையும், 90,000 காலாட்படைகளையும் தயார் செய்து ஹர்மந்தா கோகா என்ற தளபதியின் கீழ் அலாவுத்தீன் கில்ஜியை எதிர்த்தான். அலாவுத்தீன் கில்ஜி, அய்ன் உல் முல்க் மூல்தானி என்ற தளபதியின் கீழ் 160,000 வீரர்களுடன் சென்று போரிட்டு பெரும் ரத்த வெள்ளத்தில் ஹர்மந்த கோகாவைக் கொன்று, மால்வாவுடன் சேர்த்து மாண்டு, தாரா, சந்தேரியையும் கைப்பற்றினார். பின் தளபதி அய்ன் உல் முல்க் முல்தானியை மால்வாவின் கவர்னராக ஆக்கினார். 1308 ல் மார்வாரின் மன்னன் சதல்தேவை எதிர்த்து சிவானா கோட்டையையும், மார்வாரையும் வெற்றி கொண்டார். சதல்தேவைச் சிறைப்பிடித்து தூக்கிலிட்டார். பின் ஜலோரில் போரிட்டபோது கன்ஹத்தேவ் சொங்காராவிடம் தோல்வி அடைந்தார். இரண்டாம் முறை மாலிக் கமாலுத்தீன் என்ற தளபதியின் கீழ் படையனுப்பி ஜலோரை வென்றார்.
அலாவுத்தீன் கில்ஜி, உலுக்கான், நுஸ்ரத் கான் ஆகிய இரண்டு தளபதிகளை அனுப்பி குஜராத்தைக் கைப்பற்றச் செய்தார். அக்காலகட்டத்தில் தான் அடிமையாக இருந்த மாலிக் காஃபூர் 1000 தினார்களுக்கு வாங்கப்பட்டார். அலாவுத்தீன் கில்ஜி மங்கோலியர்களை வெற்றிகரமாக இந்தியாவில் நுழையவிடாமல் தடுத்தார்.  இந்திய எல்லைப்புறங்களில் பலமான கோட்டைகளைக் கட்டி பாதுகாப்புப் படைகளை அமைத்தார். மங்கோலியர்களை 1298 ல் ஜலந்தர், 1299 ல் கிலி, 1305 ல் அம்ரோஹா, 1306 ல் ராவி ஆகிய போர்களில் வென்றார். பல படையெடுப்புகளாலும், மங்கோலியர்களின் அடிக்கடி தாக்குதல்களாலும் பெரும்படையை வைத்துக்கொண்டு, ஊதியம் கொடுப்பதில் அலாவுத்தீன் கில்ஜி மிகவும் சிரமப்பட்டார். இதனால் வாணிபத்தில் கவனம் செலுத்தி அதைச் சீர்படுத்தினார். டெல்லியில் மூன்றுவித சந்தைகளை ஏற்படுத்தினார். முதலாவது தானியங்களுக்கென்று ஒன்றும், அடுத்து மளிகைச் சாமான்களுக்கென்று ஒன்றும், மூன்றாவதாக கால்நடைகளுக்கென்று ஒன்றும் அமைத்தார். உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்களையும் அரசே வாங்கி தனது கிடங்குகளில் வைத்துக் கொண்டு விலையை நிர்ணயம் செய்தது. சில சமயங்களில் தானே சென்று வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கிறார்களா என்று கண்காணிப்பார். அதற்கென அதிகாரிகளையும் நியமித்தார். இதனால் அரசுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல பலன் கிடைத்தது. அப்போதைய இம்முறை பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. 1316 ல் அலாவுத்தீன் கில்ஜி காலமானார். இவரது அடக்கவிடம் குதுப்மினார் வளாகத்தில் உள்ளது. இவரது மறைவிற்குப்பின் ஆட்சியைப் பிடிக்க மாலிக் காஃபூர் உட்பட பல கில்ஜி குடும்பத்தினர் மாறி மாறி சில ஆண்டுகள் முயற்சித்தார்கள். ஆறுவயதான கில்ஜி குடும்பத்தினர் ஒருவரை சுல்தானாக்கி அவர் சகோதரர் குத்புத்தீன் முபாரக் ஷா கில்ஜி என்பவரை மேலிருந்து ஆள நியமித்தனர். இவர் அலாவுத்தீன் கில்ஜியின் மகனாவார். தந்தையால் விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் ரத்து செய்து, கைதிகளை விடுதலை செய்து 18 வயதில் ஆட்சியில் அமர்ந்தார். நான்கு ஆண்டுகள் ஆண்ட பின் 1320 ல் குஸ்ராவ் கான் என்ற இராணுவ அதிகாரியால் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தார். பின் குஸ்ராவ்கானை நீக்க காஸிமாலிக் என்பவர் மூலம் பஞ்சாபிலிருந்து புரட்சி செய்தார். குஸ்ராவ்கான் கொல்லப்பட சுல்தான் கியாசுத்தீன் துக்ளக் என்பவர் ஆட்சி அமைத்து துக்ளக் ஆட்சிவம்சத்தை துவக்கினார்.


டெல்லி சுல்தானேட் வரலாறு 6

துக்ளக் ஆட்சிவம்ச வரலாறு

துருக்கியிலிருந்து வந்து டெல்லியை ஆண்ட முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்த துக்ளக் ஆட்சிவம்சத்தினர். இவர்கள் 1320 ல் ஆட்சிக்கு வந்தார்கள். அதற்கு முன் கில்ஜி வம்சத்தினர் டெல்லியை ஆண்டார்கள். கில்ஜி வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் குஸ்ரோ கான். இவர் ஒரு இந்துத் தளபதி. 1316 ல் அலாவுதீன் கில்ஜி மரணமடைய அவர் பிள்ளை முபாரக் கில்ஜியை குஸ்ரோ கான் கொன்று தான் முஸ்லீமாக மாறி ஆட்சியில் அமர்ந்தார். அவருக்கு பெர்ஷிய, ஆப்கான் மற்றும் டெல்லித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். டெல்லியில் இருந்த முஸ்லீம்கள் கில்ஜிகளின் கீழ் பஞ்சாபில் கவர்னராக இருந்த துருக்கிய வம்சாவழியினரான காஸி மாலிக்கை ஆட்சியிலிருந்து நீக்கி கொன்றுவிட்டு, 1320 ல் காஸி மாலிக்கை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆட்சியில் அமர்ந்தவுடன் காஸி மாலிக், கியாசுத்தீன் துக்ளக் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இவர் துருக்கிய தந்தைக்கும், இந்துத் தாய்க்கும் பிறந்தவர். தான் ஆட்சிக்கு வர ஆதரவாய் இருந்த மாலிக்குகள், ஆமிர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பதவியும் அதிகாரமும் அளித்தார். டெல்லியின் கிழக்கே ஆறு கிலோமீட்டர்கள் நகரத்தை வளர்த்து ஒரு கோட்டையையும் கட்டி, மங்கோலியர்களின் எதிர்ப்பிலிருந்து காத்தார். அப்பகுதி துக்ளகாபாத் என்று அழைக்கப்பட்டது. 1321 ல் உலுக் கான் என்ற முஹம்மது பின் துக்ளக் என்னும் தன் மகனை அனுப்பி அரங்கல் மற்றும் திலங் (தெலிங்கானா) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றச் சொன்னார். அவர் தோல்வியடைந்து திரும்பினார். பின் நான்கு மாதங்கள் கழித்து பெரும் படையுடன் மகனை அனுப்ப அவர் இம்முறை அரங்கலை வென்று சுல்தான்பூர் என்று பெயர் மாற்றினார். அங்கிருந்த பொருட்களைக் கைப்பற்றி டெல்லிக்கு அனுப்பினார். பெங்காலிலிருந்த முஸ்லீம் தலைவர்கள் கியாசுத்தீன் துக்ளக்கை லுக்னாடியைக் கைப்பற்ற அழைக்க தன் மகன் முஹம்மது பின் துக்ளக்கை டெல்லியின் ஆட்சியில் அமர்த்திவிட்டு, இன்னொரு மகன் மஹ்மூத் கானுடன் லுக்னாடியை வெல்லச் சென்றார்.
அவர்கள் லுக்னாடியை வெற்றி கொண்டு திரும்பி வரும்போது டெல்லியில் முஹம்மது பின் துக்ளக், நிஜாமுத்தீன் அவ்லியா என்னும் சூஃபி ஞானியை ஒரு மரக்கட்டுமானத்தின் மேலிருந்து தள்ளிக் கொன்றுவிட்டு விபத்து போல் காணச் செய்தார். அதேபோல் மரக்கட்டுமானத்தில் 1325 ல் கியாசுத்தீன் துக்ளக்கும், அவர் மகன் மஹ்மூத் கானும் இறந்து போனார்கள். இவைகளில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒருசாரார் கொலை என்றும், மற்றொரு சாரார் யானைகள் அந்த மரக்கட்டுமானத்தீன் மீது நடந்து அது வலுவிழந்திருந்தது என்றும் கூறினார்கள்.
கியாசுத்தீன் துக்ளக்கின் மரணத்திற்குப் பிறகு, முஹம்மது பின் துக்ளக் 1325 ல் ஆட்சிக்கு வந்து 26 வருடங்கள் ஆண்டார். இவரது ஆட்சியில் டெல்லியின் துக்ளக் ஆட்சிவம்சம் பல மாகாணங்களை நோக்கி பரவியது. மால்வா, குஜராத், திலங், கம்பிலா, துர் சமுந்தர், மாபார், லக்னாடி, சிட்டகாங், சுனர்காவ், திர்ஹுத் ஆகிய பகுதிகளைத் தாக்கினார். பெரிதாகிப்போன நிலப்பரப்பில் ஆள்வது சிரமமாகி, ஆங்காங்கு புரட்சிகள் வெடித்தன. முஹம்மது பின் துக்ளக் வரிகளை உயர்த்தினார். குறிப்பாக கங்கா, யமுனா போன்ற விவசாயம் சார்ந்த பகுதிகளில் வரிகளை அதிகப்படுத்தினார். குறிப்பாக இவர் இந்துக்கள் மீது மட்டும் வரிசுமத்தியதாகச் சொல்லப்படுகிறது. வரி சுமையைப் பொருக்கமுடியாமல் மக்கள் காடுகளில் சென்று வாழ்ந்து, நாட்டில் எதையும் பயிர் செய்யாமல் அரசை தண்டித்தார்களாம். நாட்டில் வறுமை ஏற்பட்டு பல கொள்ளைகளும் நடந்தது. இதனால் கோபமுற்ற முஹம்மது பின் துக்ளக் கடும் தண்டனைகளை விதித்தார். முஸ்லீம்களான் ஷியா சைய்யதுகள், சூஃபிகள், கலந்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கொன்றார். டெல்லியில் இணையும் வண்ணம் சிரி பகுதியில் புதிய நகரம் ஒன்றை அமைத்தார். அதற்கு ‘ஜஹன்பன்னாஹ்’ என்று பெயரிட்டார். தலைநகரை டெல்லியிலிருந்து மஹாராஷ்டிராவின் தௌலதாபாதுக்கு மாற்றினார். டெல்லியிலிருந்த பெரும் மக்களை தௌலதாபாதுக்கு கட்டாயமாக மாறச் சொன்னார். அப்படி குடிபெயர மறுத்தவர்களை கொல்ல உத்தரவிட்டார். இத்திட்டம் விரைவில் தோல்வி கண்டது. தௌலதாபாத் வறண்ட பகுதியாக இருந்து போதிய குடிநீர் வசதி இல்லாமல் போனது. பின்னர் மீண்டும் தலைநகரம் டெல்லிக்கு மாற்றப்பட்டது. இப்போது பெரும்பான்மையான முஸ்லீம்கள் டெல்லி திரும்பாமல் மத்திய மற்றும் தென்பகுதிகளில் குடியேறினார்கள். 1327 ல் முஹம்மது பின் துக்ளக் ஆட்சிக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. 1335 ல் அருகாமை தெற்கிலிருந்து விஜயநகர பேரரசு டெல்லி மீது போர் தொடுத்தது. அது டெல்லியிலிருந்து தென் இந்தியாவைப் பிரித்து வென்றது. 1336 ல் மசுனுரி நாயக் என்பவர் டெல்லியிடமிருந்து வாராங்கலை வென்றார். 1338 ல் உறவுக்காரர் ஒருவரே மால்வாவில் புரட்சி செய்தார். கிழக்குப் பகுதியிலிருந்த முஸ்லீம் கவர்னர்கள் இந்து மன்னர்களின் ஆதரவில் புரட்சி செய்து தங்கள் பகுதிகளை சுதந்திரப்பகுதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். சுருங்கிக் கொண்டிருக்கும் தனது நிலப்பரப்பை எந்தவித ஆதரவுமில்லாமல் முஹம்மது பின் துக்ளக் வேடிக்கை பார்த்தார். இவர் இஸ்லாமைப்பற்றியும், திருக்குரான் பற்றியும் மிகச் சிறந்த அறிவைப் பெற்றிருந்தாராம். ஆனால், ஆட்சியாளும் தகுதி இல்லாதிருந்தாராம். அரசு கஜானா காலியானவுடன் குறிப்பிட்ட உலோகத்தில் வடிக்க வேண்டிய நாணயங்களை சாதாரண உலோகத்தில் வடிக்கச் சொன்னாராம். இதனால் மக்கள் அவரவர் வீடுகளில் நாணயம் அடித்துக் கொண்டார்கள். குறிப்பாக இந்துக்கள் பெருவாரியாக வீடுகளில் நாணயம் அடித்து முஹம்மது பின் துக்ளக் கேட்கும் வரிகளை இல்லை என்று சொல்லாமல் உடனுக்குடன் கொடுத்தார்களாம். இதனால் நாட்டின் பொருளாதாரம் படுவேகமாக வீழ்ந்து வறுமை எங்கும் தாண்டவமாடியது.

டெல்லி சுல்தானேட் வரலாறு 7

முஹம்மது பின் துக்ளக் சீனாவையும், குராசானையும் சுன்னி முஸ்லீம் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆசைப்பட்டு போருக்குத் தயாரானார். ஒருவருட காலமாக 300,000 வீரர்களை டெல்லியில் திரட்டினார். அடுத்த ஆண்டு போருக்கு கிளம்புவதற்கு முன் அரசு கஜானா காலியாகி விட்டது. சீனாவுக்கு செல்வதற்காக 100,000 வீரர்களைத் திரட்டினார். அவர்களுக்கு கொடுக்க ஊதியம் இல்லை. போருக்கு போன வீரர்களை ஹிமாலயா மலையில் இந்துக்கள் செல்லவிடாமல் தடுத்தார்கள். பல வீரர்கள் பனியில் இறந்து போனார்கள். திரும்பிய வீரர்களை தூக்கிலிட்டுக் கொன்றார். கீழிருந்து மேல்மட்டம் வரை அரசுப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் கொடுக்காமல் முடிந்தமட்டிலும் நாட்டு மக்களிடம் தாமாகவே வரிவசூலித்துக் கொள்ளச் சொன்னார். 1351 ல் புரட்சியாளர்களைத் துறத்திச் செல்லும்போது முஹம்மது பின் துக்ளக் மரணமடைந்தார். இவரது ஆட்சி ஒரு மன்னருக்கு உரியதாக இல்லாமல் ஏதோ நகைச்சுவைப் பக்கங்களாக இருந்ததாக ஒரு கருத்துண்டு. தமிழ்நாட்டில் பிராமண வகுப்பைச் சேர்ந்த நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி என்பவர் ‘முஹம்மது பின் துக்ளக்’ என்று ஒரு திரைப்படத்தை 1970 ல் ஒரு இஸ்லாமிய மன்னரைக் கிண்டல் செய்யும் நோக்குடன் எடுத்தார். முஹம்மது பின் துக்ளக் இறப்பிற்குப் பிறகு, உறவினர் ஒருவரான மஹ்மூத் இப்ன் முஹம்மது என்பவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக ஆண்டார். பின்னர் 45 வயதான இன்னொரு உறவினர் ஃபிருஸ் ஷா துக்ளக் என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவரது தந்தையின் பின்னால் ஒரு சுவாரசிய கதை உண்டு. இவர் தந்தை பெயர் சிபாஹ் ரஜப். இவர் திலாபூரைச் சேர்ந்த இந்து இளவரசியான நைலாவை மணந்து கொள்ள கேட்டார். அதற்கு அவர் சம்மதிக்காததால், சிபாஹ் ரஜபும் விட்டுவிட்டார். பின்னால் சிலகாலங்களுக்குப் பிறகு, மன்னர் சுல்தான் முஹம்மது பின் துக்ளக் திலாபூர் மக்கள் செலுத்த வேண்டிய வரியை கட்டச்சொல்லி வற்புறுத்தினார். இதனால் திலாபூர் மக்களுக்கு பெரும் சிரம்ம் ஏற்பட்டது. அவர்கள் இளவரசியிடம் முறையிட, அவர் சுல்தானிடம் தான் சிபாஹ் ரஜபை திருமணம் செய்ய சம்மதிப்பதாகவும் தன் மக்களிடம் வரிகேட்டு தொல்லை செய்யக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறார். சுல்தானும் சம்மதிக்க சிபாஹ் ரஜபுக்கும், இந்து இளவரசி நைலாவுக்கும் திருமணமாகி அவர்களுக்குப் பிறந்தவர்தான் இந்த ஃபிருஸ் ஷா துக்ளக்.
ஃபிருஸ் ஷா துக்ளக்கின் ஆட்சியிலும் நிறைய குழப்பங்களும், கொலைகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இவர் இழந்த நிலப்பரப்புகளை மீட்டெடுக்க முனைந்தார். 11 மாதங்களாக பெங்கால் மீது படையெடுத்து சரியான தளபதி இல்லாததால் தோல்வி அடைந்தார். நாட்டில் சித்திரவதைகளை தடை செய்தார். ஷியா பிரிவினரின் மஹ்தி வழியையும், ஹிந்துக்களின் வழிபாடு முறைகளையும் வெறுத்தார். இவர் மதம் மாற மறுத்த இந்துக்களை எரித்துக் கொன்றதாகக் கூறுகிறார்கள். 1384 ல் உள்நாட்டுப்போர் நடந்தது. அதேநேரத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நாடுமுழுதும் கடைபிடித்தார். இவரது ஆட்சி முஹம்மது பின் துக்ளக் ஆட்சியைவிட சிறந்ததாக இருந்தது. வறுமையால் கைவிடப்பட்டிருந்த பல கிராமங்களையும், நகரங்களையும் சீர்படுத்தினார். பொருளாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்தார். பல மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், பாலங்கள் ஆகியவற்றைக் கட்டினார். யமுனா-காகர் மற்றும் யமுனா-சட்லஜ் நதிகளில் நீர்பாசன கால்வாய்களை அமைத்தார். டெல்லியில் வஸிராபாத் மஸ்ஜித் இவர் கட்டியதுதான். இந்துக்களுக்கு இடிந்த கோவில்களை சரி செய்து கொடுத்தார். இவர் போட்ட நீர்பாசன குழாய்கள் டெல்லியில் 19 ம் நூற்றாண்டுவரை உபயோகப்படுத்தினார்கள். 1388 ல் ஃபிருஸ் ஷா துக்ளக் இறந்த பிறகு ஆள்வதற்கு துக்ளக் வம்சத்தில் ஆள் இல்லாமல் போனது. அடுத்து ஆட்சியில் அமர்ந்த துக்ளக் கானும், அபுபக்கர் ஷாவும் உடனுக்குடன் இறந்து போனார்கள். தொடர்ந்து உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தது. ஹிமாலயா பகுதியிலிருந்த இந்துக்கள் வரி கொடுக்கமுடியாது என்று போராட்டத்தில் இறங்கினார்கள். ஆட்சியிலிருந்த சுல்தான் முஹம்மது ஷா கலகம் செய்த பலர் மீது நடவடிக்கை எடுத்து கொன்றுபோட்டார். பல முஸ்லீம், இந்து மாகாணங்கள் தனியாகப் போயின. லாகூரை இந்துக்கள் தனியாக ஆளமுயல அவர்கள் மீது மகன் ஹுமாயூன் கான் தலைமையில் சுல்தான் முஹம்மது ஷா நடவடிக்கை எடுக்க இருந்தார். அதற்குள் 1394 ல் இறந்து போனார். அவர் மகன் ஹுமாயூன் கான் ஆட்சிக்கு வர இரண்டு மாதத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். பின் ஹுமாயூன் கானின் சகோதரர் நாசிர் அல் தீன் மஹ்முத் ஷா ஆட்சிக்கு வந்தார். இவருக்கு முஸ்லீம் தலைவர்களும், வஸீர்களும், அமீர்களும் ஆதரவு தந்தார்கள். இதற்கிடையில் டர்டார் கான் என்பவர் இரண்டாவது சுல்தானாக நாசிர் அல் தின் நுஸ்ரத் ஷா என்பவரை ஃபிரோசாபாதில் அறிவித்தார். இரு சுல்தான்களுக்கிடையில் மாதந்தோறும் சண்டை நடந்தது. 1398 ல் தைமூர் படையெடுத்து வரும்வரை அப்படியே இருந்தது. தைமூர் நுழைந்த வேகத்தில் சுல்தான்கள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போனார்கள். தைமூர் டெல்லியில் என்றைக்கும் சரித்திரம் மறக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தினார். லட்சக்கணக்கான மக்களைக் கொன்று டெல்லியைக் கொள்ளையடித்தார்.
முஹம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது மொரோக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிய பயணி இப்ன் பத்தூதா டெல்லிக்கு வருகை தந்திருக்கிறார். முஹம்மது பின் துக்ளக்கை சந்தித்த இப்ன் பத்தூதா அவருக்கு அம்புகள், ஒட்டகங்கள், 30 குதிரைகள், அடிமைகள் இன்னும் பல பொருட்களை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். முஹம்மது பின் துக்ளக்கும் அவருக்கு 2,000 வெள்ளி தினார்களும், அலங்கரிக்கப்பட்ட வீடும், மாதம் 5,000 வெள்ளி தினார் ஊதியத்திற்கு கிராமங்களில் வரி வசூலிக்கும் பணியும் கொடுத்தார். இப்ன் பதூதா ஒரு சூஃபி ஞானியுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக முஹம்மது பின் துக்ளக்கால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். அந்த சூஃபி ஞானி கொல்லப்பட்டார். அடிமை வாணிபம் மிக உச்சத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 


டெல்லி சுல்தானேட் வரலாறு 8

சைய்யத் ஆட்சிவம்ச வரலாறு

குரித் ஆட்சிவம்சம், கில்ஜி ஆட்சிவம்சம், துக்ளக் ஆட்சிவம்சம் ஆகிய மூன்று ஆட்சிவம்சத்திற்கு பிறகு, டெல்லி சுல்தானேட்டின் நான்காவது ஆட்சிவம்சமாக சைய்யத் ஆட்சிவம்சத்தினர்கள் தோன்றினார்கள். இவர்கள் தங்களை நபி (ﷺ )களாரின் வழிமுறையில் வந்தவர்கள் என்று கூறினார்கள். 1396 ல் தைமூர் டெல்லியின் மீது படையெடுத்த போது ஸ்திரமில்லாத சுல்தானேட்டின் ஆட்சி அதிகாரத்தை சைய்யத் ஆட்சிவம்சத்தினர் கைப்பற்றினார்கள். முந்தைய துக்ளக் ஆட்சியாளர்கள் காலத்தில் முல்டானில் கவர்னராக இருந்த கிஸ்ர் கான் இப்ன் மாலிக் சுலைமான் என்பவர் டெல்லியைக் கைப்பற்றி சைய்யத் ஆட்சிவம்சத்தைத் தோற்றுவித்தார். இவர் முல்டானிலிருந்து மல்லு இக்பால் கான் என்பவரால் விரட்டப்பட்டு, மேவாத் பகுதி சென்று தைமூருடன் சேர்ந்து கொண்டார். தைமூர் கிஸ்ர்கானை டெல்லி வைஸ்ராயாக அனுப்ப அங்கிருந்து பலத்தை அதிகரித்துக் கொண்டு, மல்லு இக்பாலையும், தௌலத் கான் லோடியையும் வென்று 1414 ல் டெல்லி திரும்பினார். மாலிக் உஸ் ஷர்க் துர்ஃபாவை வஸீராகவும், சைய்யத் சலீமை சஹாரன்பூர் தலைவராகவும், அப்துல் ரஹ்மானை முல்டான் மற்றும் ஃபதேபூர் தலைவராகவும் நியமித்தார். கடீஹர் மன்னன் ராஜா ஹர்சிங் என்பவன் கிஸ்ர்கானுக்கு எதிராக புரட்சியில் இறங்க தாஜ் உல் முல்க் என்ற தளபதி தலைமையில் படையனுப்பி, அவனைச் சரணடைய வைத்து கப்பம் செலுத்த வைத்தார். கிஸ்ர்கானுக்குப் பிறகு, அவர் மகன் முபாரக்கான் சைய்யத் ஆட்சிவம்சத்தின் ஆட்சியாளரானார். முபாரக்கான் இறப்பிற்குப் பின் உறவினர் முஹம்மது கான் ஆட்சிக்கு வந்தார். இவர் இறக்கும் முன் பதாவூனிலிருந்த தன் மகன் அலாவுத்தீனை அழைத்து ஆட்சிப் பொறுப்பில் வைத்தார். 1451 ல் தானே முன்வந்து டெல்லி ஆட்சியை பஹ்லுல் கான் லோடியிடம் ஒப்படைத்துவிட்டு அலாவுத்தீன் பதாவூன் சென்று அங்கிருந்தபடியே 1478 ல் இறந்து போனார். 37 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த சைய்யத் ஆட்சிவம்சத்தினரின் ஆட்சி சரியான ஆட்சியாளர்கள் இல்லாததால் முடிவுக்கு வந்து டெல்லி சுல்தானேட்டின் அடுத்த ஆட்சிக்கு லோடி வம்சத்தினர் வந்தனர்.

டெல்லி சுல்தானேட் வரலாறு 9

லோடி ஆட்சிவம்ச வரலாறுகூ.செ. செய்யது முஹமது
டெல்லி சுல்தானேட்டின் ஐந்தாவது ஆட்சியாளர்களாக லோடி ஆட்சிவம்சத்தினர் 1451 ல் வந்தார்கள். இவர்களது ஆட்சியை “புஷ்டூன் ஆட்சிவம்சம்” என்றும் அழைப்பர். இவ்வாட்சியைத் தோற்றுவித்தவர் பஹ்லுல்கான் லோடி ஆவார். இவரது பாட்டனார் மாலிக் பஹ்ரம் ஃபிருஸ்ஷா துக்ளக் ஆட்சியில் முல்டானின் கவர்னராக இருந்தார். இவரது தந்தை பெயர் மாலிக் கலா ஆகும். இளமைவயதில் பஹ்லுல்கான் லோடி குதிரை வியாபாரியாக இருந்தார். ஒரு சிறந்த குதிரையை சைய்யத் ஆட்சிவம்ச ஆட்சியாளர் சுல்தான் முஹம்மது ஷாவுக்கு விற்றார். முஹம்மது ஷா பணத்திற்குப்பதில் ஒரு பகுதியை இவருக்கு வழங்கி அதன் அமீராக ஆக்கினார். இவரது சிறிய தகப்பனார் மாலிக் சுல்தான் இறந்து போக அவர் வகித்த சிர்ஹிந்த் பகுதி கவர்னராக லாகூரையும் இணைத்து நிர்வகித்தார். சுல்தான் முஹம்மது ஷாவை மால்வா சுல்தான் எதிர்த்துவர முஹம்மது ஷா பஹ்லுல்கான் லோடியின் உதவியை நாடினார். 20,000 வீரர்களுடன் சென்று அவர் வெற்றி பெறா உதவினார். இதனால் மகிழ்வுற்ற முஹம்மது ஷா பெரிய பகுதியான பஞ்சாபையும் இவர் ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதித்தார். 1443 மற்றும் 1447 என இரண்டுமுறை டெல்லி சுல்தானேட் மீது படையெடுத்து சென்று வெற்றி பெறாமல் திரும்பினார். பின்னர் சுல்தானாக இருந்த அலாவுத்தீனே 1451 ல் டெல்லியை பஹ்லுல்கான் லோடியிடம் ஒப்படைத்துவிட்டார். சமானாவின் கவர்னராக இருந்த இவரின் சகோதரியின் கணவர் மாலிக் மஹ்மூத் கான் என்னும் குத்புதீன் கான் மூலம் ஹமீத் கானை கைது செய்து சிறையில் அடைத்தார். ஜோன்பூர் ஆட்சிவம்சமாய் இருந்த ஷர்கீயை 1479 ல் கைப்பற்றினார். தனது நிலப்பரப்பை க்வாலியர், ஜோன்பூர் மற்றும் மேற்புர உத்தரபிரதேசம் வரை பரப்பினார். பஹ்லுல்கான் லோடி 1486 ல் தன் மகன் பப்ரக் ஷாவை ஜோன்பூரின் வைஸ்ராயராக நியமித்தார். 1489 ல் இவர் இறந்து போனார். இவரின் அடக்கவிடம் சூஃபி ஞானி நசீருத்தீன் சிராக் இ டெல்லியின் சமாதிக்கருகில் இருக்கிறது. பின் ஆட்சிக்கு நடந்தப் போட்டியில் இவரின் இன்னொரு மகன் சிக்கந்தர் லோடி சுல்தான் ஆனார்.
லோடி ஆட்சிவம்சத்தின் இரண்டாவது சுல்தானாக இருந்த சிக்கந்தர் லோடி சிறந்த பெர்ஷிய கவிஞராவார். இவரது தாயார் சிர்ஹிந்த் பகுதியைச் சேர்ந்த ஒரு பொற்கொல்லரின் மகளான பீபி அம்பா ஆவார். இவர் மூத்த சகோதரர் பர்பக் ஷாவும் ஆட்சிக்கு உரிமை கோரினார். ஆனாலும், தந்தை இவருக்கே முன்னுரிமை அளித்தார். சிக்கந்தர் லோடி ஆட்சி அமைத்த பிறகு, சகோதரர் பர்பக் ஷாவை ஜோன்பூரின் கவர்னராகத் தொடர அனுமதித்தார். தான் ஆட்சிக்கு வர எதிர்ப்பாய் இருந்த மாமன் ஆலம்கானுடன் சுமுகமாய் இருந்தார். தன் ஆட்சியில் வாணிபத்தை செழிக்கச் செய்தார். க்வாலியரிலும், பீகாரிலும் நிலப்பரப்பை விரிவாக்கினார். இன்றைய ஆக்ரா நகரை இவர்தான் உருவாக்கினார். தீவிர இஸ்லாமியரான இவர் இஸ்லாமை குறைத்துக் கூறிய இந்து சாது போதன் என்பவரை கொன்றார். மந்த்ரைய்ல், உத்கிர், நர்வார் ஆகிய பகுதிகளில் பல மஸ்ஜித்களைக் கட்டினார். மதுராவில் நதியில் தலைமுடி சிரைத்து, புனித நீராடுகிறேன் என்று அசுத்தம் செய்தவர்களைத் தடை செய்தார். பெர்ஷிய மொழி பயின்ற இந்துக்களுக்கு அரசுப்பணி வழங்கினார். தன் பெர்ஷிய கவிதைகளை ‘குல்ருகி’ என்னும் சிறப்பு எழுதுகோல் (பேனா) கொண்டு எழுதினார். தற்போது பயன்படுத்தப்படும் கணக்கு (AUDITING) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். மக்களின் நலனுக்காக விவசாயத்துறையையும், நீதித்துறையையும் சிறப்பாக செயல்படுத்தினார். அரசு நிர்வாகமொழியாக பெர்ஷிய மொழியை ஆக்கினார். 32 மடங்கு அளவுள்ள ‘காஸியே சிகந்தரி’ என்னும் நில அளவுமுறையைக் கொண்டு வந்தார். க்வாலியர் மஹாராஜா மான்சிங்கை எதிர்த்து ஐந்து முறை க்வாலியர் கோட்டையைக் கைப்பற்ற முயன்று தோல்வி அடைந்தார். டெல்லிக்குப் பிறகு, ஆக்ரா நகரத்தை சிறப்பாக முன்னேற்றினார். இவர் காலத்தில் ஆக்ரா ‘ஷிராஸ் ஆஃப் இந்தியா’ என்று புகழப்பட்டது. 11 மாத முற்றுகைக்குப் பிறகு நர்வார் கோட்டையைக் கைப்பற்றினார். 1517 ல் சிக்கந்தர் லோடி இறந்தபிறகு, டெல்லியின் லோடி கார்டன் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்குப்பிறகு, அவர் மகன் இப்ராஹீம் லோடி டெல்லி சுல்தான் ஆட்சிக்கு வந்தார்.
இப்ராஹீம் லோடி ஆட்சியில் அதிகமான புரட்சிகள் நடந்தன. மேவாரின் மன்னன் ராணா சங்கரம் சிங் மேற்கு உத்தரபிரதேசம் வரை கைப்பற்றி ஆக்ராவை பிடிக்க தயாரானான். கிழக்குப் பகுதியில் வயதான சில தலைவர்களையும், அதிகாரிகளையும் மாற்றி இளைஞர்களை அமர்த்தியதால் அங்கு புரட்சி வெடித்தது. அங்கிருந்த ஆப்கான் தலைவர்கள் பாபரை இவருக்கு எதிராக இந்தியாவுக்குள் அழைத்தார்கள். 1526 ல் இப்ராஹீம் லோடியின் பெரும்படையை பானிபட் போரில் பாபர் வெற்றி கொண்டார். இதனால் கடைசி டெல்லி சுல்தானேட்டின் லோடி ஆட்சிவம்சம் இப்ராஹீம் லோடியினுடன் முடிவடைந்தது. இதன் பிறகு வம்ச ஆட்சி மறைந்து மொகலாய பேரரசு தொடங்கியது. இவரது சமாதி சூஃபி ஞானி பூ அலிஷா கலந்தரின் அடக்கவிடத்திற்கு அருகில் உள்ளது. ஆங்கிலேயர்கள் கிரேட் ட்ரங்க் ரோடு அமைக்கும் போது இவரது சமாதியை மாற்றி அமைத்தார்கள்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

அந்தப்புரம் (ஹாரம்)

அந்தப்புரம்கூ.செ.செய்யது முஹமது
                            இதுவும் எழுதலாமா வேண்டாமா என்று யோசிக்க வைத்த கட்டுரை. அனால் இதிலும் பல சரித்திரங்கள் புதைந்துள்ளன. சில மன்னர்களின் புத்திசாலித்தனம், போட்டி, வெறியினால் மட்டும் சரித்திரங்கள் மாறவில்லை. குறிப்பாக உலக சரித்திரத்தை பலமுறை இந்த அந்தப்புரங்கள் மாற்றியுள்ளன. முழுக்க முழுக்க ஆணின் எதிர் இனமான பெண்கள் மட்டுமே ஆளுமை செய்த இந்த அந்தப்புரங்கள் சத்தமில்லாமல் சாதித்தவை பல. பல அற்புதமான மன்னர்கள் (உதாரணத்திற்கு மொகலாய ஔரங்கஸேப், ஓட்டோமான் சுலைமான், சௌதியின் சா ஊத் ஆகியோர்) இங்கு இளமையைக் கழித்திருக்கிறார்கள்.
                                ஆங்கிலத்தில் ஹரம் என்று அழைக்கப்படும் இந்த இடம் பெண்களின் தூய்மையான இடம் என்று பொருள்படுகிறது. அரபியில் ஹுர்மா என்ற சொல் பன்மை யில் ஹரிம் என்றாகி ஹரம் என்றாகியது. பல மனைவிகளை உள்ளடக்கிய இது முழுக்க ஆண்களின் நடமாட்டத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது. ஹரம் என்ற சொல் கிழக்கு நாடுகளிலிருந்து தான் பழக்கத்திற்கு வந்தது. இங்கு பெண்ணுறவு அடிமைகள், வைப்பாட்டிகள், அரவாணிகள், ஆங்கிலத்தில் கில்மேன் (GHILMAN)  என்று சொல்லப்படும் வெள்ளைநிற இளம் சிறுவர்கள் (இது திருக்குரானில் இறைவன் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதால் சொர்க்கத்தை நினைவு படுத்திக்கொள்ள) ஆகியோர்களும் இருப்பார்கள். கிரேக்க, ரோம காலங்களில் இந்த அந்தப்புரங்கள் சொல்லும் தரத்தில் இல்லை. இஸ் லாமியர்கள் ஆட்சியில் ஓரளவு பரவாயில்லை. ஓட்டோமான்களின் காலத்தில் இங்கிருந்த பெண்கள் (மனைவிகள் அல்ல) கல்வியறிவு பெற்று சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தில் ஆண்களின் முன் பெண்கள் நடமாடமாட்டார்கள், அதனால் உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனைவரின் அந்தப்புரத்திலும் அரவாணிகள் பணிக்கு அதிகமாக வைக்கப்பட்டார்கள். இதை சில மாற்றுமதத்தினர் கொச்சைபடுத்தினார்கள்.
                            அந்தப்புரம் என்ற சொல்லே உணர்ச்சியைத் தொடக்காரணம் இது மன்னர்களின் ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளுக்காக பயன்பட்டது தான். ஓட்டோமான்களின் ஆட்சியில் செராக்லியோ என்று அழைக்கப்பட்ட அந்தப்புரத்தில் பல பெண்களுடன் மனைவி, தாயார், மகள்கள், அரவாணிகள், பெண் அடிமைகள் என்று பெரும் பெண்கள் கூட்டமே இருக்கும். சில காலகட்டத்தில் 16 வயது வரை சுல்தான்களின் மகன்களும் அந்தப்புரத்தில் வளர்ந்தார்கள். ஓட்டோ மான்களின் டாப்காபி அரண்மனையின் அந்தப்புர வளாகத்தின் உள்ளேயே சுல்தான்களின் குடும்பத் திற்கென தனி தங்குமிடம் உண்டு. இந்த மாதிரியான ஓட்டோமான்களின் அந்தப்புரங்களிலிருந்து தான் புகழ் பெற்ற ஹூர்ரும் சுல்தான் (சுலைமானின் மனைவியும், இரண்டாம் செலிமின் தாயாருமானவர்) மற்றும் கூசெம் சுல்தான் (நான்காம் முராத்), இந்தியாவின் ரஸியா சுல்தான் போன்ற புகழ் பெற்ற பெண்மணிகள் பின்ணனியில் இருந்து நாடாண்டார்கள்.
                                    ஓட்டோமானின் அந்தப்புரத்தை ராணி வலீதே சுல்தான் நிர்வகித்தார். அந்தப்புர பாதுகாப்பை கிஸ்லர் அகா என்ற கருப்பின அரவாணி தலைமையாய் இருந்து பார்த்துக் கொண்டார். டாப் காபி என்னும் அரண்மனை அந்தப்புரத்தில் 400 அறைகள் இருந்தன. போர்களில் குறிப்பாக ஐரோப்பிய பால்கன் பகுதிகளில் பிடிக்கப்படும் அழகான அடிமைப் பெண்கள் இங்கு கொண்டுவரப்படுவார்கள். சுல்தானுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வைப்பாட்டிகள் தகுதிக் கேற்ப கூஸ்தி (GOOZDE- பிரியமானவள்), இக்பல் (IKBAL- அதிர்ஷ்டமானவள்), காதின் (KADIN-மனைவி) என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவார்கள். அதிகபட்ச அந்தப்புர அந்தஸ்து வலீதே சுல்தான் (சுல்தானுக்காக ஆட்சியின் பின்ணனியில் செயல்படுபவர்) ஆகும். வலீதே ராணியின் அனுமதி இல்லாமல் யாரும் அந்தப்புரத்திற்குள் நுழையவோ, வெளியேரவோ முடியாது. இந்த வைப்பாட்டிகளின் நடவடிக்கைகளை ராணியார் அரவாணிகள் மூலம் தெரிந்து கொள்வார். இந்த வைப்பாட்டிகளின் வாழ்வும் சாவும் ராணி யாரின் கையில் தான் உள்ளது. நான்கு காதின்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டு வரிசையாக முறையே ராணிக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள். 1868 ல் சுல்தான் அப்துல் அஜீஸ், தன் தாயார் பெர்டெய்னி யல் சுல்தானை அறிமுகப்படுத்த, ஃப்ரான்சின் பேரரசி ஈஜீனியாவை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென் றார். பெண்ணாயினும் மற்றவர்கள் பிரவேசிப்பதை விரும்பாத வலிதே சுல்தான் அவரை கன்னத்தில் அறைந்தார். மேலும் பேரரசியின் உடையலங்காரம் மேற்கத்திய கலாச்சாரத்தில் அங்கம் தெரிவதாக இருந்தது. இது அக்காலத்தில் பெரும் சர்வதேச பிரச்சினை ஆகியது. ஒரு இஸ்லாமிய அந்தப்புரம் எப்படி இருந்தது என்பதற்கு இச் சம்பவம் பெரும் உதாரணம்.  16 ம் நூற்றாண்டில் மூன்றாம் மெஹ் மூதின் தாயாரும், அந்தப்புர ராணியுமாய் வலீதே சுல்தானாக இருந்த சஃபீயே தர்பாரில் மெஹ்மூதுக் கும், ஒரு இஸ்லாமிய முஃப்திக்கும் இடையேயான வாக்குவாதத்தை திரையின் மறைவிலிருந்து மெஹ்மூதுக்கு அறிவுரை வழங்கினார்.
                            அந்தப்புரத்திற்காக கருப்பு அரவாணிகள் போரிலிருந்து சிறைப் பிடித்தும் அல்லது பால்கன், காகசஸ், அபிசீனியா மற்றும் சூடான் பகுதிகளிலிருந்து விலைக்கு வாங்க பட்டார்கள். இவர்கள் கீழுறுப்பு நீக்கப்பட்டு, எந்நேரமும் சிரைக்கப்பட்டு தூய்மையாக இருக்க வேண் டும். வைப்பாட்டிகளின் சேவையின் போது ஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டும். வெள்ளை நிற அரவாணிகளும் இருந்தார்கள். இவர்கள் ஆணுறுப்புடன் இருக்க அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களை ஓட்டோமான் அந்தப்புரத்தில் அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தினார்கள். இவர்களில் 600 பேர் வரை மாகாண கவர்னர்களால் சுல்தானுக்கு அன்பளிப்பாக அனுப்பப்பட்டவர்கள். சுல்தான் மூன்றாம் அஹ்மது காலத்தில் ஆட்சிக்கு வருவதற்கான பயிற்சியை இளவரசர்களுக்கு வழங்க தனியாக ‘தங்கக் கூண்டு’ (GOLDEN CAGE) என்ற பகுதியைத் துவக்கினார். இங்கு இளம் சுல்தான்களுக்கு அனைத்து வகை பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.
                        1640 லிருந்து 1648 வரை ஆண்ட ஓட்டோமான் சுல்தான் இப்ராஹீம் (IBRAHIM THE MAD) என்பவர் தன் அந்தப்புரத்திலிருந்த 280 வைப்பாட்டிகளை பாஸ்போரஸ் நதியில் வீசிக் கொன்றார். இப்ராஹீமின் ஒரு வைப்பாட்டி தான் புகழ் பெற்ற துர்ஹன் ஹதிஸ், உக்ரைன் பெண்ணான இவர் டடார்களின் படையெடுப்பின் போது பிடிக்கப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டார். புராதன எகிப்திய பாறோ மன்னர்கள் தங்கள் பிராந்தியங்களில் அழகிய பெண்களையே கவர்னர்களாக நியமித்தனர். ஸ்ரீலங்காவின் சிகிரியா மன்னன் கஸ்யபா ‘ஒரோதா’ என்ற தன் அந்தப்புரத்தில் 500 பெண்களை வைத் திருந்தான். மெக்சிகோவின் அஸ்டெக் ஆட்சியாளர் இரண்டாம் மொண்டெஸுமா 4,000 வைப்பாட்டி களை அந்தப்புரத்தில் வைத்திருந்தான். இவன் சந்ததியினரும் இந்த விஷயத்தில் அதேபோல் தான் இருந்தார்கள். 1421 ல் சீனாவின் யோங்கிள் பேரரசர் 2,800 வைப்பாட்டிகள், பணிப்பெண்களை சிறுகச் சிறுக சாகடித்தார். ஆப்பிரிக்க மன்னர்களின் அந்தப்புரங்களும் சொல்லும் தரத்திலில்லை.
                            ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பனாரஸ் மன்னன் தம்பா தான் அதிகபட்சமாக 16,000 பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருந்தான். ஆனால் உறுதி இல்லாத சொல்லாக சுல்தான் 15 ம் நூற்றாண்டின் சுல்தான் கியாசுத்தீன் கில்ஜி 15,000 பெண்களை அந்தப்புரத்தில் வைத்திரு ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காகவே பெரிய பட்டணம் போல் அந்தப்புரத்தை சுற்றி சுவர் எழுப்பி இருந்தாராம். 1800 ல் சியாமின் மோங்குட் ராஜா 9,000 பெண்களையும், 13 ம் நூற்றாண்டின் மங்கோலிய மன்னன் குப்ளாய் கான் 7000 பெண்களையும் வைத்திருந்தாராம். ஒவ்வொரு இரண்டாண்டுக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான வைப்பாட்டிகளை மாற்றி புதிதாய் வரவழைப்பாராம். 17 ம் நூற்றாண்டில் ஜஹாங் கீர் 6,300 பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருந்தாராம்.
Neotorama.com

ஃப்ரான்சின் வரலாறு

ஃப்ரான்சின் வரலாறுகூ.செ. செய்யது முஹமது
ஐரோப்பாவின் கிழக்கில் வாசனைமிகுந்த தீவுகளில் இருந்து வாணிபத்தின் மூலம் செல்வச்செழிப்புடன் விளங்கிய போர்சுகல் நாட்டின் மீது அதே ஐரோப்பாவின் வடஅட்லாண்டிக் பகுதியில் இருந்த இரு மன்னராட்சியின் பொறாமை கண்கள் விழுந்தன. கண்களுக்குச் சொந்தமான மன்னராட்சிகள் ஃபரான்சும், இங்கிலாந்தும் ஆகும். இதில் ஃப்ரான்சு முந்திக்கொண்டு ஒரு பானை குள்ளே விழுந்த தங்கத்தைத் தேடுவதைப் போல் மேற்குப்புறத்தில் வழி தேடியது. 1534 ல் ஃப்ரான்சு மன்னன் முதலாம் ஃப்ரான்சிஸ் என்பவன் ஜாக்வெஸ் கார்டையர் என்பவனுடன் அறுபத்தோரு ஆட்களையும் உடன் அனுப்பி, அமெரிக்காவின் மேல்புறம் வடமேற்கில் அட்லாண்டிக்கடலை இணைக்கும் வழி உண்டா என்று ஆராயச்சொன்னான். ஜாக்வெஸ் கார்டையர் தனது பயணத்தில் செயிண்ட் லாரன்ஸ் என்னும் ஆறு மகத்தான நுழைவாயிலாக கண்டத்தில் இணையும் என்ற அபாரமான நம்பிக்கையில் அடுத்த கோடைகாலத்தில் மீண்டும் பயணிக்கலாம் என்று திரும்பி வந்துவிட்டான். வந்தவன் மன்னன் முதலாம் ஃப்ரான் சிஸை மொத்த பகுதியையும் ‘நியு ஃபரான்ஸ்’ என்று பெயரிட வேண்டும் என்று வேண்டுகோள் விட்டான்.
1535 ல் ஜாக்வெஸ் கார்டையர் மீண்டும் பயணத்தைத் துவக்கி தனது நீண்ட படகை செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் வெகுதூரம் பயணிக்க விட்டு ஹுருன்இந்தியர்கள் வசப்படுத்தி வைத்திருந்த ஒரு தீவை அடைந்தான். அத்தீவு மக்கள் அவனை வரவேற்று தீவின் உச்ச பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். ஜாக்வெஸ் கார்டையர் அந்த தீவுக்கு மோண்ட்ரியல் அல்லது மவுண்ட் ராயல் என்ற பெயரைச் சூட்டினான். ஜாக்வெஸ் கார்டையர் மூன்றாம் முறையாக பயணித்து ஒரு காலனியைத் தேடினான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் அந்த ஆற்றின் பகுதியில் ஃப்ரென்சு இறகு வாணிபம் செய்பவர்களைக் கண்டுபிடித்தான். 1611 ல் சாமுவேல் டி சாம்ப்ளியன் என்பவன் ஹுருன் இந்தியர்கள் வாழும் தீவிலேயே குடியேற்றம் செய்தான். இதே சாம்ப்ளியன் மூன்று ஆண்டுகளுக்கு முன் க்யூபெக் என்னும் குடியேற்றப்பகுதியை நிர்மாணித்திருந்தான். அதற்கு ஜாக்வெஸ் கார்டையர் முன்னர் மேற்கொண்ட கிழக்கு நோக்கிய ஒரு பயணமே அடிப்படையாக இருந்தது. ஆனால், ஃப்ரான்சு பேரரசு மேற்கில் அமைந்திருந்தது.
க்யூபெக் நிறுவனர் சாமுவேல் டி சாம்ப்ளியன் 1608 ல் ஹுருன் இந்தியர்களின் உதவியுடன் ஃப்ரென்ச் இறகு வாணிபத்தை தொடங்கினான். ஆனால், வெகு தாமதமாகவே முன்னேற்றம் கண்டது. 1635 ல் சாமுவேல் டி சாம்ப்ளியன் மரணமடையும் காலத்தில் க்யூபெக்கின் மக்கள்தொகை நூறுக்குள் தான் இருந்தது. இது ரிசெலியூ என்பவருக்கு சுய ஈடுபாட்டை உண்டாக்கியது. 1627 ல் ரிசெலியூ நியு ஃப்ரான்சில் நூறுபேர் அடங்கிய குழு ஒன்றை ஏற்படுத்தினார். அதில் அப்போது சாம்ப்ளியனும் ஒருவராய் இருந்தார். இவர்கள் வருடத்திற்கு இருநூறு நபர்களை அந்த தீவில் குடியேற்றம் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் அவர்களால் திட்டமிட்டபடி செயல்படமுடியவில்லை. 1660 ல் நியுஃப்ரான்ஸில் 2300 ஐரோப்பியர்கள் மட்டுமே குடியமர்த்தப்பட்டனர். இடையில் ஹுருன் இந்தியர்கள் 1648-1650 களில் மேற்கு நோக்கி இரோக்கோயிஸ் என்ற இடத்திற்கு புலம் பெயர ஆரம்பித்ததால், ஃப்ரென்ச் இறகு வியாபாரிகளுக்கு மூலப்பொருள்களை செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 1660 ல் குடியேற்றவாசிகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் பதினைந்தாம் லூயிஸ் நியு ஃப்ரான்ஸை ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
அப்போதிருந்து நியுஃப்ரான்ஸுக்கு கவர்னரை நியமித்து இராணுவம், கல்வி, மதம், மருத்துவம் போன்ற அனைத்து வசதிகளும் ஃப்ரான்ஸ் பேரரசு மூலம் கிடைக்கச்செய்தார். இந்த புதிய தீர்மானத்தின் அதிவேக வளர்ச்சியினால் 1660 ல் மட்டும் 3000 க்கும் மேற்பட்டவர்கள் குடியேறினார்கள். இதில் திருமணப்பருவத்தில் உள்ள பெண்களும் சராசரியாக இருந்தனர். அடுத்த பத்தாவது ஆண்டில் நியுஃப்ரான்ஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் கிரேட் லேக் பகுதியின் தென் மற்றும் மேற்கு திசைகளின் மக்கள் குடியேற விரைந்தனர். 1668 ல் ஜிஷுட் சேவை மையம் மேற்கு கிரேட் ஏரியில் குடியேற்றவாசிகளுக்காக சால்ட் செயிண்ட் மேரீ என்ற மூன்று சேவை மையத்தைத் துவக்கியது. இந்த அறிவுபூர்வமான திட்டம் 1671 ல் மொத்த அமெரிக்க கண்டத்தின் உள்பகுதிக்கும் மன்னனாக ஃப்ரென்ச் மன்னன் விளங்கினான். 1660 ன் இறுதியிலும், 1670 லும் வட அமெரிக்காவின் மத்தியப் பள்ளத்தாக்கில் நீரால் சூழப்பட்ட ஒஹியோ, மிஸ்ஸிசிப்பி மற்றும் மிஸ்ஸௌரி ஆறுகளுள்ள பகுதிக்கு முதல்முதலாக ஐரோப்பியர்கள் தான் வருகை தந்தார்கள். இந்த முன்னேற்றம் நேரடியாக நியு ஃப்ரான்சின் வளர்ச்சிக்கு நல்ல பலனைத் தந்தது. மேலும் ஃப்ரென்சுக்காரர்கள் கிரேட் லேக்கின் நீர் பாயும் தென்புறம் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். கிழக்கில் அருகிலுள்ள பெரிய ஆறும், முதலில் கவனத்தைக் கவர்ந்ததும் ஒஹியோ தான்.
1669 ல் ராபர்ட் டி ல சல்லி என்பவர் ஒரு பயணத்தின் போது இதைக்கண்டுபிடித்தார். பின்னால் ஃப்ரான்ஸ் ஒஹியோவை உரிமை கொண்டாட அதுவே ஆதாரமாக இருந்தது. அடுத்த நான்காண்டுகள் கழித்து 1673 ல் சால்ட் செயிண்ட் மேரீயின் நிறுவனர் ஜாக்வெஸ் மார்க்வெட், ஜிசெட்டின் பாதிரியார், லூயிஸ் ஜுலியட், ஒரு வியாபாரி ஆக ஐந்து நபர்கள் ஒரு குழுவாக இரண்டு துடுப்பிடும் படகில் மிச்சிகன் ஏரியில் பயணித்தார்கள். பசுமைக்கரைப் பகுதியில் இருந்து ஃபாக்ஸ் ஏரி நோக்கி செல்கையில் விஸ்கான்சின் மற்றும் மிஸ்ஸிசிப்பி ஆகியவற்றை அடையாளம் கண்டனர். மிஸ்ஸிசிப்பியின் கீழ்புறத்திலிருந்து அர்கன்சாஸ் ஆறு சேருமிடம் வரை சென்ற அவர்கள் அந்த ஆறு பசிபிக் கடலில் இருந்து வரவில்லை மெக்சிகோ வளைகுடாவிலிருந்து பாய்கிறது என்று விளங்கி கொண்டு மிச்சிகன் ஆற்றை நோக்கி திரும்பிவிட்டார்கள். இவர்களின் தகவலால் ஈர்க்கப்பட்ட ல சல்லி என்பவர் மிஸ்ஸிசிப்பியின் நுழைவாயிலை கண்டுபிடிக்க மிகவும் ஆர்வம் கொண்டார். இரண்டுமுறைப் பயணித்து பெரும் தோல்வியைச் சந்தித்து மூன்றாம்முறை பல இழப்புகள், பொருளாதார சிரமங்களுக்கிடையில் 1682 ல் தன் காரியத்தில் வெற்றிபெற்று அந்த மாபெரும் ஆற்றின் நுழைவாயிலை ஃப்ரான்சுக்கான வழியாக கண்டுபிடித்தார். அந்த பகுதியை மன்னன் பதினைந்தாம் லூயிஸின் நினைவாக ‘லூஸியானா’ என்று பெயரிட்டார். பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஃப்ரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இடையே ஒஹியோ பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.
மேலும், வடக்கின் நீர்நிலைகளில் செயிண்ட் லாரன்ஸ் ஏரியின் வழியாக கடலை அடைவதில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஃப்ரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இடையே மோதல் இருந்தது. கௌரவத்திற்காகவும், வாணிபத்திற்காகவும் மட்டுமில்லாமல் இந்த பகுதியில் கிடைத்துக்கொண்டிருந்த காட் என்னும் மீன் வளத்திற்காகவும் போட்டி இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் தென்பகுதி நிலப்பரப்பு ஃப்ரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இடையே பலமுறை கை மாறியது. ஃப்ரான்ஸ் அந்தப் பகுதியை அகாடியா(அமெரிக்க இந்தியர்கள் பெயர்) என்றும், பிரிட்டன் நோவா ஸ்காடியா (நியு ஸ்காட்லாந்து) என்றும் அழைத்துக் கொண்டன. நியுஃபௌண்ட்லாந்தில் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சிறு சிறு சண்டைகள் இருநாடுகளுக்குமிடையே நடந்தன. 1713 ல் உட்ரெக்ட் உடன் படிக்கையில் (ஃப்ரான்சுக்கு மீன் பிடிக்கும் அதிகாரம் மட்டும் தந்துவிட்டு) அது பிரிட்டனுக்கு சாதகமாக ஆகியது. கேப் ப்ரீடன் என்ற இடத்தில் தனது கப்பல் படையை பாதுகாக்க ஃப்ரான்ஸ் லூயிஸ்பர்க் என்ற பலம்வாய்ந்த கோட்டையை கட்டி இருந்தது. இதை ஆஸ்டிரியன் போரில் இங்கிலாந்து கைப்பற்றி இருந்தது. இதை ஃப்ரான்சிடமே மீண்டும் ஒப்படைத்துவிட்டு, ஈடாக இந்தியாவின் மதராஸ் மாகாணத்தை பிரிட்டனுக்கு திருப்பித் தந்துவிட ஒப்பந்தமாகியது. 1754 ல் அமெரிக்க ஒஹியோ பள்ளத்தாக்கிற்காக ஃப்ரான்சும், பிரிட்டனும் சண்டைபோட ஆரம்பித்தன. இந்த சண்டை இந்தியாவில் பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனிக்கும், ஃப்ரான்சுக்கும் இடையில் நடந்தது. இது பெரிய வாணிபப்போட்டியாகவும் இருந்தது.

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 1

சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
ஆதாரனமான பதிவுகள்:                                                                                                          தி கன்னிபாலிசம் அண்ட் ப்ளட்பாத்ஸ் ஆஃப் தி க்ருசேடர்ஸ்

 இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம் என்ற இந்த தலைப்பு ஏதோ புதிது என்று நினைக்காதீர்கள். ஆராய்ந்து ஆராய்ந்து அலுத்துப் போய் சிலுவைப் போரினால் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளை அறிந்து மேற்கத்தியர்களே ஒப்புக் கொண்ட வாக்குமூலம் அது. முஸ்லீம்கள் மட்டுமல்லாமல், ஆண்டாண்டு காலமாய் மத்திய ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீதே, எங்கிருந்தோ கண்டம் தாண்டி வந்த கிறிஸ்தவர்களே நடத்திக் காட்டிய கொடுமை அது. 2001 ல் அமெரிக்காவை ஆண்ட ஜார்ஜ் புஷ் என்னும் காட்டுமிராண்டி, அரபு மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக மீண்டும் சிலுவைப் போரைத் தொடங்குவோம்’ என்றான். அட வல்லரசு நாட்டின் அறிவே வளராமல் போன மூடனே. நாகரீககாலத்தில் நாயைவிட கேவலமாக சிந்தித்த மடையனே. ஒரு பெண்ணிடம் நிர்வாணமாகு என்று சொன்னால் எந்தளவு பதறிப்போவாளோ, அந்தளவு உலக மக்களிடம் சிலுவைப்போர் என்று சொன்னால் பதறிப்போவார்கள். ஆம் அதன் பாதிப்புகள் அப்படி. பிறகு, மிகவும் கஷ்டப்பட்டு அமெரிக்க அரசு அந்த வார்த்தையை நீக்கிவிட்டு போர் என்று மாற்றியது. ஆனாலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்காவின் போர் சிலுவைப்போரின் கொடூரத்தைத்தான் காட்டியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பழங்கால அரபு மற்றும் முஸ்லீம் மக்கள் இன்னும் அவர்கள் மாறவில்லை என்று தான் உலகத்துக்குக் கூறினார்கள். உலக சரித்திரத்தில் இதுவரை நடந்த எந்த இனப்போர், மதப்போர்களிலும் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சிலுவைப் போர்களில் சிந்திய ரத்தம், கூட்டுக் கொலை, கற்பழிப்பு, காட்டுமிராண்டித்தனம் நடந்ததில்லை. அதைவிடக் கொடுமை இந்த கொடூரப்போருக்கு ‘புனிதப் போர்’ (HOLY WAR) என்று மாற்றமுடியாத பெயர் சூட்டி உலகம் முடியும் வரை அவமானத்தைத் தேடிக் கொண்டார்கள்.
மேற்கத்திய சிலுவைப் போராளிகள் ஆசிய மைனர், மத்திய ஆசியா, மெடிட்டரேனியன் கரை அரபுகளையும், யூதர்களையும் பிணங்களாக்கி ரத்தத்தில் ஊற வைத்தார்கள். சிலுவைப் போராளிகள் அனைவரையுமே அரபுகளாக கணக்கிட்டு (அரபு மண்ணில் வாழ்ந்த கிறிஸ்தவ, யூதர்களையும் சேர்த்து) ‘அரபுகளைக் கொல்லுங்கள் புனித மண்ணைக் கைப்பற்றுங்கள்’ என்று கோஷமிட்டுக் கொன்றார்கள். கிறிஸ்தவ போதகர் பால் ஜான்சன் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் கிறிஸ்டியானிட்டி’ என்ற புத்தகத்தில் பல தகவல்களை பதித்துள்ளார். பைஸாந்தியப் பேரரசர் முதலாம் அலெக்சியஸ் ஏதோ கிறிஸ்தவர்கள் அதிகப்படியான கொடுமையில் இருப்பதாக கற்பனை கலந்து போப் இரண்டாம் அர்பனை படை அனுப்ப வேண்டினான். முஸ்லீம் ஆட்சியாளர்கள் யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் வரி வசூலித்தார்கள். முஸ்லீம்கள் ஆட்சியில் முஸ்லீமல்லாதவர்கள் இராணுவப் பணிக்கு நிர்பந்தப் படுத்தப்படுவதில்லை. அதேநேரத்தில் முஸ்லீம் இராணுவம் அவர்களுக்கும் பாதுகாப்பைக் கொடுத்தது. அடுத்து முஸ்லீம் மக்கள் கண்டிப்பாக ஜக்காத் என்னும் வரியை செலுத்தி ஆகவேண்டும். மேலும் புனித தலங்களில் யூத, கிறிஸ்தவ மக்கள் வழிபட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகாலமாக இருந்து இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இது, முழுக்க முழுக்க உள்நாட்டுப் பிரச்சினை. அந்த மேதாவி போப் அர்பன் இத்தாலியின் பியாசென்ஸா நகரில் அவசர அவசரமாக அனைத்து மேற்கு ஐரோப்பிய நாட்டு மன்னர்களையும் அழைத்து பெரும் பணம் திரட்டி அழிவின் ஆரம்பத்தை சிலுவைப் போராக துவக்கினான். மேற்கத்திய மன்னர்கள், தலைவர்கள், வணிகர்கள் ஆகியோர் அரசியல், இராணுவ, வாணிபக் காரணங்களில் ஏதோ ஒன்றை கணக்கில் வைத்து வளமான புதிய மண்ணை நோக்கி புனிதப் போருக்கு கிளம்பினார்கள்.
இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போப் இரண்டாம் அர்பன் ஒன்று திரட்டி 1095 நவம்பரில் புகழ்பெற்ற மதவெறி உரையை நிகழ்த்தினான். எங்கோ இருக்கும் பாலஸ்தீனத்தில் தேனும், பாலும் ஓடுகிறது என்றான். பூமியில் கிறிஸ்தவர்களின் சொர்க்கம் என்றான். மொத்த கூட்டமும் “தியூ லெ வ்யூல்ட்” (DIEU LE VEULT) என்று வெறி பிடித்துக் கத்தியது. 476 ல் ரோமப் பேரரசு வீழ்ந்த பின் பாலஸ்தீனை நோக்கி மேற்கத்திய கிறிஸ்தவர்களின் மாபெரும் முதல் படையெடுப்பு இது. 200 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் போராக ஒன்பது முறையும், சிறு தாக்குதல்களாக பல முறையும் நடத்தப்பட்டது. முதல் சிலுவைப் போர் 1095-1099, இரண்டாவது 1147-1149, மூன்றாவது 1189-1192, நான்காவது 1198-1204, குழந்தைகள் சிலுவைப் போர் 1212, ஐந்தாவது 1217-1221, ஆறாவது 1228-1229, ஏழாவது 1248-1254, எட்டாவது 1270, ஒன்பதாவது 1290 லும் நடந்தது. உலகில் அரபு மற்றும் இஸ்லாமிய சக்திகளை வளர விடக்கூடாது என்று மிக அற்புதமாகத் திட்டமிட்ட இந்தப் போர்கள் பல பெயர்களில் 17 ம் நூற்றாண்டு வரை நடந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் 2001 பேச்சின் பிரகாரம் கணக்கிட்டால் 21 ம் நூற்றாண்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் மேற்கத்தியர்களும், அமெரிக்கர்களும் இன்னொரு சலாவுத்தீன் அய்யூபு உலகில் தோன்றுவதை விரும்பவில்லை. சரித்திரத்தை ஆழ்ந்து கவனித்தால் இதனால் தான் ஆப்பிரிக்காவை ஒன்றுபட நினைத்த உகாண்டாவின் ஈத் அமீன், லிபியாவின் மாம்மர் கடாஃபி, அரேபியாவை ஒன்றுபட நினைத்த ஈராக்கின் சதாம் ஹுசேன் ஆகியோர் ஏதோ ஒரு காரணம் கூறி கொல்லப்பட்டார்கள். பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகளைக் கொல்லும் ISIS அமைப்பு உண்மையான இஸ்லாமியர்கள் அல்ல என்பது உலகின் மூலை முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு முஸ்லீமுக்கும் தெரியும். இவைகளை ஒரு முஸ்லீம் தீவிரவாத கூட்டம் செய்வது போல் சித்தரிக்கப்படுகின்றன. எந்த மதத்தினராக இருந்தாலும் சக மனிதனை தீவிரவாதத்தின் பேரில் கொல்பவன் (போரல்லாமல்) முஸ்லீமல்ல என்பதை அறிந்தவன் எப்படி தீவிரவாதம் செய்வான். பின் லாடன் செய்தது கூட தீவிரவாதம் அல்ல. ரஷ்யாவுக்கு எதிராக பின் லாடனும், அமெரிக்காவும் நண்பர்களாக இருந் தார்கள். நண்பர்கள் பிரிந்து அடித்துக் கொண்டார்கள். அதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளுடன் சேர்ந்து தீவிரவாதம் என்று பெயர் சூட்டினால் சூட்டிக் கொள்ளட்டும். சிலரின் வாய்கள் என்ன சுத்தம் செய்தாலும் சுத்தமாகாது அது அவர்களின் பிறப்பின் சாபக்கேடு அல்லது உணவுமுறைப் பழக்கம்      நாற்றத்துடன் தான் இருக்கும்.
இந்த சிலுவைப்போருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டன. குறிப்பாக போப் இரண்டாம் அர்பனுடன் ஃப்ரான்ஸ் கலந்து கொண்டது. ஃப்ரான்ஸ் “கெஸ்ட டெய்பெர் ஃப்ராங்கோஸ்” (ஃப்ராங்குகள் இறைவனால் வழங்கப்பட்ட கருவி) என்று முழக்கமிட்டுக் கொண்டது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள், ஸ்காட்லாந்து, வெல்ஷ், ஐரிஷ், இத்தாலியர்கள், ஜெர்மனி, ஆஸ்ட்ரியங்கள், ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்கள், நார்மன்கள், பெல்ஜியம், டச்சுக்காரர்கள், ஸ்காண்டிநேவியன்கள் மற்றும் ஸ்விஸ்கள் கலந்து கொண்டார்கள். இந்த சிலுவைப் போரில் இராணுவத்தின் அனைத்துப் பிரிவினரும் கலந்து கொண்டார்கள். மேலும், ராஜாக்கள், சிறு மன்னர்கள், சிறப்பானவர்கள், நிலப்பிரபுக்கள், பாதிரியார்கள், துறவிகள், இராணுவத் தலைவர்கள், இராணுவ வீரர்கள், புத்திசுவாதீனமில்லாதவர்கள், பக்தர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், தீயவர்கள் என்று அனைத்துத் தரப்பும் கலந்து கொண்டன. மதவெறியூட்டப்பட்ட ஆண், பெண், குழந்தைகள் என்று யாவரும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக ஃப்ரான்சின் ஏமியன் நகரத்தைச் சேர்ந்த பியர்ரி லெர்மிட் (பீட்டர் தி ஹெர்மிட்) என்ற மதத்தலைவனும் கலந்து கொண்டான். இவன் ஒரு மனநோயாளி போல் தோற்றமளிப்பான். காலில் பாதணி கூட அணியாமல் குள்ளமாகவும், ஒல்லியாகவும் இருப்பான். தலை முடியால் கழுத்து, காதுகளை மறைத்திருப்பான். சிரைக்காத தாடியை மார்புக்கு கீழ்வரை வளர்த்திருந்தான். ஹெர்மிட் பேச்சுத்திறனில் மிகவும் வல்லவன். இவன் பேச்சைக் கேட்டவர்கள் இவனை “க்யோ க்யோ’ (லிட்டில் பீட்டர்) என்றார்கள். பேசிப்பேசி மக்களிடம் நன்றாக மதவெறியைத் தூண்டியிருந்தான்.
போப் இரண்டாம் அர்பன் இந்த புனித போரில் கலந்து கொள்ளும் அனைவரும் வரி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள பழைய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அவர்களின் பாவங்கள் துடைத்தெறியப்படும். சொர்க்கத்தில் அவர்களுக்கு தனி இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கவர்ச்சிகரமாகப் பேசி 160,000 பேரைத் திரட்டினான். ரோமர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஒட்டுமொத்த மேற்கு ஐரோப்பாவும் முதல்முறையாக கிழக்குப் பகுதியை நோக்கி கிளம்பின. இந்த ஐரோப்பிய கிறிஸ்தவ மதவெறியர்கள் நடத்திய கொடூரத்தைக் கண்டு சகிக்காமல் இயற்கையே பயங்கரமான பூகம்பத்தையும், குலை நடுங்கும் நிலநடுக்கத்தையும், ப்ளேக் நோயையும் அப்போது சிரியா மற்றும் அரபு தேசங்களில் நிகழ்த்தியதாக சொல்லப்பட்டது.

சிலுவைப்போர் 2

முதலாம் சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
கிறிஸ்தவ மதம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா பகுதிகளில் துவங்கிய காலத்திலிருந்து பரவிக் கொண்டிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் அனடோலியாவில் முஸ்லீம்கள் ஆட்சி பரவியவுடன் அதன் வேகம் குறைந்து போனது. உமைய்யாத் பேரரசு சிரியா, எகிப்து மற்றும் வட ஆப்பிரிக்காவை கிறிஸ்தவ பைஸாந்தியர்களிடமிருந்து வெற்றி பெற்றார்கள். விசிகோத் இராஜ்ஜியத்திலிருந்து ஹிஸ்பானியாவையும் வென்றிருந்தார்கள். நாளடைவில் நிலப்பரப்பு பெரிதானதால் நிர்வகிக்க முடியாமல் சிதைந்து பல சிறு இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. 9 ம் நூற்றாண்டில் அக்லாபித் என்பவர்கள் தன்னிச்சையாக இத்தாலியைத் தாக்கினார்கள். பிஸா, ஜினோவா, காடலோனியா போன்ற பல இஸ்லாமிய இராஜ்ஜியங்கள் மெடிட்டரேனியனில் தங்கள் அதிகாரத்தைப் பெற மஹ்தியா போர், மஜோர்கா போர் மற்றும் சர்தீனியா போர் அகியவற்றை நடத்தின.
1096 லிருந்து 1101 வரை கிரேக்க பைஸாந்தியர்கள், மேற்கு ஐரோப்பாவினருடன் மூன்று அலையாக கான்ஸ்டாண்டிநோபிள் நோக்கி வந்தார்கள். 1096 ல் முதல் பகுதி அதிகாரமற்றவர்களாக, போர் ஒழுங்கில்லாமல், முறையான ஆயுதங்களும் இல்லாமல் நகரின் வெளிப்புறத்தில் வந்து சேர்ந்தார்கள். சிலுவைப் போராளிகள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் பீட்டர் தி ஹெர்மிட் மற்றும் வால்டர் சான்ஸ் அவாயர் தலைமையில், பைஸாந்திய பேரரசர் அலெக்சியஸ் முதலாம் கம்னினசுக்கு மரியாதை அளிக்காமலும் தகவல் தெரிவிக்காமலும் வந்திருந்தார்கள். இரண்டாவது அலையாக இராணுவத்தினர் குழுக்களாக வந்திருந்தனர். இரண்டாவது குழுவுக்கு ஃப்ரான்சின் மன்னர் முதலாம் பிலிப்பின் சகோதரர் வெர்மாண்டோயிசைச் சேர்ந்த முதலாம் ஹூக் தலைவனாய் இருந்தான். இன்னொரு இரண்டாம் அலைக்கு டௌலூசைச் சேர்ந்த நான்காம் ரெய்மண்ட் தலைமை தாங்கினான். இவனது படை வழியில் 1098 ல் ஆண்டியாக்கைக் கைப்பற்றிக் கொண்டு, 1099 ஜூலையில் ஜெருசலம் வந்து சேர்ந்தது. முதலில் வந்தவர்கள், இரண்டாவது வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து 60,000 பேர் இருந்தார்கள். மூன்றாவது அலையாக லாம்பர்டி, ஃப்ரான்ஸ் மற்றும் பவேரியாவில் இருந்து மக்களைத் திரட்டி அவசரமாக உண்டாக்கிய குழுபோல் ஒன்று 1101 ல் ஜெருசலம் வந்தது.
ஐரோப்பாவின் ஐபீரிய தீபகற்பத்திலிருந்த கிறிஸ்தவர்களை போப் இரண்டாம் அர்பன் மீண்டும் டர்ரகானா பகுதியை இஸ்லாமியர்களிடமிருந்து வென்றெடுக்க வெறியேற்றினான். 10 ம் நூற்றாண்டில் ஸாக்சன், வைக்கிங்க் மற்றும் ஹங்கேரியன்களின் எழுச்சி யால் மேற்கு ஐரோப்பிய கிறிஸ்தவர்களிடையே ஒரு எழுச்சி இருந்தது. கரோலின்ஜியன் பேரரசின் வீழ்ச்சியால் அனைத்துத் தரப்பு வீரர்களும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந் தார்கள். ஐரோப்பாவின் சிறிய மன்னர்கள் அவ்வப்போது காட்டுமிராண்டித் தனமாய் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை தேவாலயம் கண்டித்தது. ரோமப் பேரரசுடனான அவர்களை பகையை போப் ஏழாம் கிரிகோரி களைந்து கிறிஸ்தவ மதத்திற்காக ஒருங்கிணைய வைத்தார். குறிப்பாக அல் அண்டலூசியா, செல்ஜுக் பேரரசை எதிர்த்து கிழக்குப் புறமாக போரிடச் செய்தார். கிழக்கு ஐரோப்பாவில் பைஸாந்தியப் பேரரசின் கிறிஸ்தவர்கள் புராதன வழக்கப்படி இருந்தார்கள். ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 1054 லிருந்து நவீன கருத்து கொண்ட கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். 1071 ல் மன்ஸிகார்ட் போரினால் செல்ஜுக் துருக்கிகள் மொத்த அனடோலியாவை வென்றிருந்தாலும், சில பகுதிகள் கப்பம் செலுத்தும் நடைமுறையில் அந்தந்த பகுதி தலைவர்களால் ஆளப்பட்டது. 1090 களின் மத்தியில் பைஸாந்தியப் பேரரசு பெருமளவு ஐரோப்பிய பால்கன் பகுதியிலும் வட மேற்கில் அனடோலியாவிலும், மேற்கில் நார்மன் எதிரிகளுடனும், கிழக்கில் துருக்கியர்களுடனும் மோதிக் கொண்டிருந்தது. மன்ஸிகார்ட் போர் தோல்விக்குப் பிறகு, போப் ஏழாம் கிரிகோரி கிறிஸ்தவர் களை ஒன்றாக சேர்ந்து பைஸாந்தியர்களுக்கு உதவுமாறு கூறினான். அப்போது அது முற்றிலும்   மறுக்கப் பட்டதுடன், எதிர்க்கவும் செய்யப்பட்டது. மன்ஸிகார்ட் தோல்வி தற்காலிகமானது தான் அதற்காக ஒன்றும் பைஸாந்தியர்களுக்கு ஆதரவாகப் போகத் தேவையில்லை என்று மறுத்து விட்டார்கள்.
சிலுவைப் போராளிகள் வரும் வரை பைஸாந்தியர்கள் அனடோலி யாவிலும், சிரியாவிலும் செல்ஜுக்குகளையும், துருக்கிய பேரரசை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். செல்ஜுக்குகள் புராதன இஸ்லாமியர்களாக சுன்னிப் பிரிவைச் சார்ந்திருந்தார்கள். மாபெரும் செல்ஜுக் பேரரசாய் இருந்த அவர்கள் 1092 ல் முதலாம் மலிக் ஷா இறந்த பிறகு சிதறி சிறு மாகாணங்களாக ஆகிப் போனார்கள். மலிக் ஷாவுக்குப் பிறகு, அனடோலியாவில் சுல்தானிய ரோம் பகுதிக்கு முதலாம் கிலிஜ் அர்சலன் ஆட்சியாளராகவும், அவர் சகோதரர் முதலாம் துடுஷ் சிரியாவின் ஆட்சியாளராகவும் இருந்தார்கள். துடுஷ் 1095 ல் இறந்து போக, அவர் மகன்கள் ஃபக்ர் அல் முல்க் ரத்வானும், டுகாக்கும் முறையே அலிப்போவையும், டமாஸ்கஸையும் ஆண்டார்கள். மேலும் சிரியாவின் சில பகுதிகளை இருவருக்குமான சில எமிர்கள் ஆண்டு வந்தார்கள். மோசூல் நகரமும் அடபெக்கால் (பொறுப்பாளர்) ஆளப்பட்டது. எகிப்தும், பாலஸ்தீனின் பெரும் பகுதியும் ஃபாத்திமிட் கலீஃபாவால் ஷியா பிரிவு கொள்கையுடன் ஆளப்பட்டது. செல்ஜுக்குகளின் எழுச்சியால் அவர்களின் பகுதி சுருங்கிப் போனது. ஃபாத்திமிட் மற்றும் செல்ஜுக்குகளுடனான போர்களால் கிறிஸ்தவர்களுக்கும், மேற்கத்திய யாத்ரீகர் களுக்கும் பெரும் தொந்திரவாக இருந்தது.
ஃபாத்திமிட் கலீஃபா அல் முஸ்தலியின் சார்பில் வைசிராயர் அஃப்தல் ஷாஹென்ஷாவின் அதிகாரத்திலிருந்த ஜெருசலம் 1073 ல் (1076 ஆகவும் இருக்கலாம்) செல்ஜுக்குகள் வசம் போனது. செல்ஜுக்குகளின் சிறிய பழங்குடியினரான அர்துகிட்களின் அதிகாரத்தி லிருந்த ஜெருசலத்தை மீண்டும் 1098 ல் சிலுவைப் போராளிகள் வரும் சமயத்தில் ஃபாத்திமிட்கள் கைப்பற்றினார்கள். சிலுவைப்போரின் காரணத்திற்கு ஜே ரூபென்ஸ்டீன், ஜெர்மனியின் கார்ல் எர்ட்மன், ஸ்பிராஸ் ரையோனிஸ், ஸ்டீவன் ருன்சிமன், மோஷி கில், தாமஸ் அஸ்ப்ரிட்ஜ், தாமஸ் மட்டன், கிறிஸ்டோபர் டயர்மேன், ஜோனாதன் ரிலெய் ஸ்மித், பீட்டர் ஃப்ரான்கோபன், வில்லியம் ஆகியோர் பல ஆவணங்களை ஆராய்ந்து பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். சிலுவைப் போர்கள் 11 ம் நூற்றாண் டில் ஐரோப்பாவில் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளை மாற்றியது. செல்ஜுக்குகள் கான்ஸ்டாண் டிநோபிளுக்கு அருகில் மேற்கில் நிகாயா வரை முன்னேறி இருந்தார்கள். இதனால் 1095 மார்சில் பைஸாந்தியப் பேரரசர் கோம்னினோஸ் முதலாம் அலெக்சியஸ் துருக்கியர்களுக்கு எதிராக உதவுமாறு போப் இரண்டாம் அர்பனை பியாசென்ஸா என்ற அமைப்பின் மூலம் அணுகினார். முதல் சிலுவைப் போர் பைஸாந்தியப் பேரரசர் கோம்னினோஸ் முதலாம் அலெக்சியசின் வேண்டுகோள்படி உதவுவதற்காக வந்தது.