புதன், 29 ஜூலை, 2015

ஈராக் வரலாறு 1

ஈராக் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
இப்போது இருக்கும் நவீன ஈராக் 1920 ல் வடிவமைக்கப்பட்டது. சரித்திர காலத்தில் பாபிலோனியாவாக இருந்தது. ஈராக் மத்தியில் மொசொபோடாமியாவின் கீழ் பகுதியும், குர்திஸ்தானில் மேல் மொசொபொடாமியாவையும், சிரிய மற்றும் அரேபிய பாலைவனப் பகுதியையும் கொண்டுள்ளது. 1957 ல் ரால்ஃப் சோலெச்கி என்பவர் கொலம்பியா பல்கலைக்கழக குழுவுடன் ஷனிடர் குகையில் நடத்திய ஆராய்ச்சியின் போது நியாண்டர்தால் மனித உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்தார். கீழ் மொசொபொடாமியாவின் உபைத் காலத்தில் சுமேரிய நாகரீகம் இங்கு இருந்திருக்கிறது. கி.மு. 1894 ல் அமோரிட் மன்னன் சுமுவாபும் பாபிலோனை தலைநகராக உருவாக்கி சுதந்திரமாக ஆண்டிருக்கிறார். மேல் மெசொபொடாமியாவை அஸ்ஸூரை தலைநகராக ஆக்கி அக்காடியன்கள் ஆண்டிருக்கிறார்கள். இந்த அஸ்ஸைரிய பேரரசு பாபிலோனியாவுக்கு மிகப்பெரிய வரலாறுகள் பக்கம் பக்கமாக இருக்கிறது. நாம் மேலோட்டமாகப் பார்ப்போம். 539 ல் மெசொபொடாமியா அக்காயிமெனிட் பெர்ஷியர்களால் சைப்ரஸ் தி கிரேட்டால் வெற்றி கொள்ளப்பட்டு இரண்டு நூற்றாண்டுகள் ஆளப்பட்டது. 331 ல் பெர்ஷியப் பேர்ரசு மாசிடோனியாவின் அலெக்ஸாண்டரால் வெற்றி கொள்ளப்பட்டு, செல்யூசிட் பேரரசாக ஆளப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் முதலாம் மித்ரிடேட்ஸ் என்பவரால் பார்த்தியன்கள் ஆட்சியாக ஆளப்பட்டது. இடையில் ரோம ட்ராஜனால் வெல்லப்பட்டு, உடனே பார்த்திய ஹத்ரியனால் வெல்லப்பட்டது. முதலாம் நூற்றாண்டில் ரோம சிரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு, மெசொபொடாமியா பகுதிகளில் கிறிஸ்துவம் வந்தது. ஆனாலும், நான்காம் நூற்றாண்டு வரை அஸ்ஸைரிய கடவுளான அஷூரின் கோவில்கள் அங்கிருந்தன. 7 ம் நூற்றாண்டில் இஸ்லாம் வரும் வரை சஸ்ஸானியர்கள் ஆண்டு வந்தார்கள். மேல் மெசொபொடாமியா டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் சூழப்பட்டிருந்ததால் அல் ஜஸீரா (அரபியில் தீவு) என்று அழைக்கப்பட்டது. கீழ் மெசொபொடாமியா ஈராக் (அரபியில் செங்குத்தான பகுதி) என்று அழைக்கப்பட்டது. 602 ல் பெர்ஷிய பேரரசின் அரபு லக்மிட் மன்னராக அல் ஹிராஹ் ஆட்சி செய்தார். அவரிடமிருந்து பழங்குடியினர்களின் ஆக்கிரமிப்பு மூலம் ஷாஹென்ஷா இரண்டாம் கோஸ்ரூ ஆட்சி செய்தார். 634 ல் 5000 முஸ்லீம் வீரர்களுடன் போரிட்ட காலீத் பின் அல் வலீத் (ரலி) என்ற இஸ்லாமிய தளபதியின் மூலம் அரபு இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. மீண்டும் 636 ல் சாஃத் இப்ன் அபி வக்காஸ் (ரலி) என்னும் தளபதியால் பெர்ஷியர்களின் தலைநகர் செஸிபோனும் ‘கதீஸிய்யாஹ்’ போரில் வெல்லப்பட்டது. 638 ல் இஸ்லாமியர்கள் மேலும் மேற்கு சஸ்ஸானிய பகுதிகளை (தற்போதைய ஈராக் உட்பட) வென்று சஸ்ஸானிய பேரரசர் மூன்றாம் யஸ்திகெர்டை வடக்கு பெர்ஷியாவை நோக்கி விரட்டினார்கள். அவர் 651 ல் கொல்லப்பட்டார்.
புதிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாதுகாப்பு நகரங்களாக புராதன பாபிலோனில் அல் குஃபாவையும், தெற்கில் பஸ்ராஹ்வையும் நிர்மாணித்தார்கள். வடக்கில் அஸ்ஸைரியன்களும், கிறிஸ்தவர்களும் பெருவாரியாக இருந்தார்கள். 8 ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சியாளராக இருந்த அப்பாஸிய கலீஃபாவால் பாக்தாத் நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இது உலகில் இஸ்லாமியர்களின் கலாச்சாரம், கலை, விஞ்ஞானம், கணிதம், பொது அறிவு, நுண்ணறிவு, மருத்துவம் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் முக்கிய நகரமாக விளங்கியது. 13 ம் நூற்றாண்டில் மங்கோலிய ஹுலகுகானால் சரணடையச் சொல்லி மறுத்ததால், ஆட்சியிலிருந்த கலீஃபா அல் முஸ்தஸீம் கொல்லப்பட்டு பாக்தாத் நகரம் பலத்த சேதமடைந்தது. இடையில் தைமூர் ஆட்சி செய்தார். 14 ம் நூற்றாண்டில் துருக்கி கருப்பின ஆடுகள் ஆட்சி செய்தார்கள். 1466 ல் அவர்களை துருக்கி வெள்ளையின ஆடுகள் வென்றார்கள். 16 ம் நூற்றாண்டில் மொத்த பகுதிகளும் ஓட்டோமானால் நியமிக்கப்பட்ட பாஷாக்களின் ஆட்சியின் கீழ் சென்றது. அன்றிலிருந்து இன்றுவரை பாக்தாத் நகரம் போர்களமாகவே இருந்து வருகிறது. உள்ளூர் போட்டி குழுக்களாலும், பழங்குடி இனத்தவர்களாலும், அருகாமை நாட்டு எதிரிகளாலும், சமீபத்தில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பாலும் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒருகாலத்தில் அறிவை அள்ளி வழங்கிய பாக்தாத் போர்ப்பதட்டத்திலேயே இருக்கிறது. 15 மற்றும் 16 ம் நூற்றாண்டுகளின் இடையில் சஃபாவிட் ஆட்சிவம்சம் ஈராக் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்தது. 16 மற்றும் 17 ம் நூற்றாண்டுகளில் ஜியார்ஜிய மம்லுக்குகள் ஓட்டோமானுக்கு கப்பம் செலுத்தும் வகையில் ஈராக்கை ஆண்டுவந்தார்கள். இடையில் ஜானிஸ்ஸரீஸ் என்னும் படைகளாலும், பழங்குடியினர்களாலும் ஏற்பட்ட கலவரங்களால் ஓட்டோமான்கள் மம்லுக்குகளை நீக்கிவிட்டு ஈராக்கை நேரடியாக தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.
முதலாம் உலகப்போரில் ஓட்டோமான் ஜெர்மனியின் மத்திய அதிகாரத்தை ஆதரித்தது. குட் போரில் பிரிட்டிஷ் படைகள் ஓட்டோமானைத் தோற்கடித்து 1817 ல் பாக்தாதைப் பிடித்தது. பிரிட்டிஷ் அங்கிருக்கும் பழங்குடிகள், குர்துக்கள், கிறிஸ்தவர்களை அரசியல் ரீதியாக பொருட்படுத்தாமல் ஹாஷிமிட்களை ஆட்சியில் வைத்தார்கள். ஒருபுறம் குர்துக்களும், ஷியாக்களும் பிரிட்டிஷின் போக்கிலிருந்து விடுதலை வேண்டி சண்டையிட்டார்கள். பிரிட்டிஷார் அஸ்ஸைரியன்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்ய வைத்தார்கள். ஈராக் முழுதும் தன்னலக் குழுக்களாக ஆனது. 1932 ல் ஈராக் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. சுதந்திர ஈராக் அரபு சுன்னிப்பிரிவு முஸ்லீம்கள் வசமானது. இதனால் அஸ்ஸைரியன்கள், யஸிதி மற்றும் ஷியா பிரிவினர்கள் இடைவிடாமல் கலவரத்தில் இறங்கினார்கள். ஈராக் ஆட்சியாளர்கள் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்கள். 1936 ல் பக்ர் சித்கி என்பவர் அரபு நாடுகளிலேயே முதல்முறையாகவும், ஈராக்கிலும் முதல்முறையாக இராணுவப்புரட்சியைச் செய்தார். ஹாஷிமிட்களின் மன்னராக யாசீன் அல் ஹாஷிமி ஈராக்கை ஆட்சி செய்தார். ஈராக்கின் இராணுவத் தளபதியாக பக்ர் சித்கி இருந்தார். 1936 ல் 11 ஈராக்கிய இராணுவ ஹெலிகாப்டர்கள் மன்னரை யாசீன் அல் ஹாஷிமை நீக்கிவிட்டு, பிரதம மந்திரி ஹிக்மத் சுலைமான் தலைமையில் மாற்று அரசு நிர்மாணிக்குமாறு நாடுமுழுதும் துண்டு பிரசுரங்களை வீசியது. மேலும், மக்களைத் தங்களுக்குக் கட்டுப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என்றும் எச்சரித்து தேசிய மறுசீரமைப்புப்படை தளபதி என்று பக்ர் சித்கின் கையொப்பம் இடப்பட்டிருந்தது.

ஈராக் வரலாறு 2

இராணுவ ஜெனெரல் தாஹா அல் ஹாஷிமி துருக்கிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தை பக்ர் சித்கி நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். தரைப்படை, வான்படையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். தாஹாவுக்கு ஈராக்குக்கு வராதீர்கள் என்று எச்சரிக்கை செய்தார். மன்னர் பிரிட்டிஷ் தூதர் ஸர். ஆர்சிபால்ட் கிளார்க் கெர்ரை ஆலோசனைக் கேட்க, அவர் அனைத்து மந்திரிகளையும் கூட்டி அவசர ஆலோசனை செய்யச் சொன்னார். அதன்படி மந்திரிகள் ஆலோசனை நடைபெற, பக்ர் சித்கி எச்சரிக்கும் வண்ணம் சில இடங்களில் குண்டுகளை வீசிவிட்டு படையுடன் அரண்மனையை நோக்கி வந்தார். நூரி அல் சாஃஇத் என்ற மந்திரி தவிர, அனைத்து மந்திரிகளும் பக்ர் சித்கின் சொல்படி ஹிக்மத் சுலைமானை ஆட்சியில் வைக்க ஒப்புக் கொண்டார்கள். பிரிட்டிஷ் தூதரின் ஆலோசனைப்படி  ஹிக்மத் சுலைமானை அழைக்க, அவர் பக்ர் சித்கியும், லதீஃப் நூர் என்பவரும் இராணுவ புரட்சிக்கான காரணத்தை விளக்கி எழுதிய கடிதத்துடன் அரண்மனைக்கு வந்தார். யாசீன் அல் ஹாஷிமி ராஜினாமா செய்தார். யாசீனால் இருமுறை பிரதம மந்திரியாகவும், அப்போது இராணுவ மந்திரியாகவும் இருந்த ஜாஃபர் அல் அஸ்கரி பக்ர் சித்கின் உத்தரவுப்படி அரண்மனைக்கு வந்து கொண்டிருக்கும் இரண்டு பட்டாலியன் படைகளை தனக்குக் கீழ்படியும் அதிகாரிகள் மூலம் திசை திருப்பினார். இதுபோல் ஏதும் நடக்கும் என்று எண்ணியிருந்த பக்ர் சித்கி விமானபடை வீரர் அக்ரம் முஸ்தபாவையும், இஸ்மாயில் தோஹல்லா என்பவரையும் அனுப்பி ஜாஃபர் அல் அஸ்கரியைக் கொன்றார். ஜாஃபரின் கொலை பழைய ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாகக் கருதப்பட்டது. நூரி அல் சாஃஇத் கெய்ரோவுக்கும், யாசீன் அல் ஹாஷிமி இஸ்தான்புல்லுக்கும் நாடு கடத்தப்பட்டார்கள். பக்ர் சித்கி பாக்தாத நகர வீதிகளில் இராணுவ அணிவகுப்பை நடத்தி ஈராக்கில் புதிய ஆட்சியைப் பறைசாற்றினார். 1937 ல் துருக்கிக்குச் செல்லும் வழியில் மோசூலில் விமானப்படைத் தோட்டத்தில் பக்ர் சித்ரி கொல்லப்பட்டார். உடனிருந்த இராணுவ அதிகாரி முஹம்மது அலி ஜவாதும் கொல்லப்பட்டார். சுலைமானின் பத்து மாத ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் ராஜினாமா செய்ய ஜமீல் அல் மிட்ஃபாய் ஆட்சிக்கு வந்தார். 1941 ல் இரண்டாம் உலகப்போரின்போது, கோல்டன் ஸ்கொயர் என்னும் அதிகாரிகளால் அப்த் அல் லாஹ் என்பவர் பதவி நீக்கப்பட்டார். அவர் நாஜிகளைச் சார்ந்திருந்ததால் இந்த நடவடிக்கையை ராஷித் அலி என்பவர் எடுத்தார். 1945 ஈராக் ஐ.நா. சபையில் உறுபினராகி அராப் லீகிலும் இணைந்தது. அதேசமயத்தில் குர்திஷ் தலைவர் முஸ்தபா பர்ஸானி என்பவர் ஈராக்கின் மத்திய ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தார். புரட்சி தோல்வி அடைந்ததால் அவரும் ஆதரவாளர்களும் சோவியத் யூனியன் தப்பிச் சென்றார்கள். 1948 ல் ஈராக் பிரிட்டிஷுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து அல் வத்பாஹ் கிளர்ச்சி உண்டானது.
1958 ல் ஜோர்டானின் மன்னர் ஹுஸ்ஸெய்ன் மற்றும் அப்த் அல் லாஹ் ஆகியோர் ஹாஷிமிட்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டி எகிப்து சிரியா கூட்டுடன் இணைய வேண்டுமென்று ஈராக்கை அழைத்தனர். பிரதம மந்திரி நூரி அஸ் ஸைத், குவைத்தையும் அழைத்தார். இக்கூட்டுக்கு பிரிட்டிஷ் எதிர்ப்பு தெரிவித்தது. எகிப்து நாசரின் கொள்கைகளால் கவரப்பட்ட பிரிகேடியர் அப்த் அல் கறீம் காசிம், கர்னல் அப்துல் சலாம் ஆரிஃப் ஆகியோர் ஈராக்கின் ஹாஷிமிட் ஆட்சியை 1958 ல் நீக்கினார்கள். பின் ஜோர்டானின் கோரிக்கையை நிராகரித்து ஈராக்கை சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அப்த் அல் கறீம் காசிம் சோவியத் யூனியனிலிருந்த முஸ்தபா பர்ஸானியை ஈராக்குக்கு வரவழைத்து குர்திஷ்கள் அதிகமுள்ள வடக்குப்பகுதியில் அரசுப்படைகளுக்கு அவரை அதிகாரமுள்ளவராக ஆக்கி முதலாம் குர்திஷ் ஈராக் போருக்கு வழிவகுத்தார்.
காசீம் படுகொலைக்குப்பிறகு, பாத் கட்சியின் சார்பில் பிரதம மந்திரியாகவும், ஜெனரலாகவும் அஹ்மத் ஹசன் அல் பாக்ர் மற்றும் கர்னல் அப்துல் சலாம் ஆரீஃப் ஆகியோர் ஈராக்கின் ஆட்சியை 1963 ல் கைப்பற்றினார்கள். அதேகாலகட்டத்தில் நான்கு மாதங்களுக்குப்பிறகு, சிரியாவிலும் பாத் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற, சிரியா, ஈராக்குக்கு குர்துக்களை எதிர்க்க விமானம், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், 6000 இராணுவ வீரர்களைத் தந்து உதவியது. பல மாதங்களுக்குப்பிறகு, அப்தல் சலாம் முஹம்மது என்பவர் கடும் முயற்சியில் பாத் கட்சியின் ஆட்சியை விரட்டினார். 1966 ல் அதிபர் அப்துல் சலாம் ஆரீஃப் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு, அவர் சகோதரர் ஜெனெரல் அப்துல் ரஹ்மான் ஆரீஃப் ஆட்சிக்கு வந்தார். இவர் குர்துக்களின் புரட்சியை முறியடிக்க பெரும்பாடுபட்டார். 1967 ல் முஸ்தபா பர்ஸானி ஆறுநாள் படையெடுப்பாக ரவாண்டுஸுக்கு அருகில் மவுண்ட் ஹண்ட்ரின் போரில் ஆளும் பாத் கட்சிக்கு பெரும் சேதத்தை விளைவித்து 1968 ல் அஹ்மது ஹசன் அல் பக்ர் தலைமையில் ஆட்சியைப் பிடித்தார். பாத் கட்சி மக்களிடையே குர்திஷ்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. சோவியத் யூனியன் ஈராக் மக்களை குர்திஷ்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. பாத்துக்கும், குர்திஷ்களுக்குமான வேறுபாட்டில் ஏறக்குறைய 100,000 பேர் காயமடைந்தார்கள். முதலாம் குர்திஷ் போரின்போதே ஆளும் கட்சிக்கும், குர்திஷ்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தமானது. அதன்படி, ஆட்சியில் குர்திஷ்களுக்கும் அதிகாரமுள்ள பதவிகள் கொடுக்கப்பட்டன. 1972 ல் ஈராக் அரசு சோவியத் யூனியனுடன் நெருங்கிய உறவு கொண்டு அரபுலகை விட்டு விலகியது போல் தோன்றியது. குர்திஷ்கள் அருகாமை ஈரானுடன் இராணுவத் தொடர்பு வைத்திருந்தார்கள். 1974 ல் மீண்டும் இரண்டாவது குர்திஷ் ஈராக் போர் நடந்தது. 1979 ல் அதிபர் அஹமது ஹசன் அல் பக்ர் சதாம் ஹுசெய்ன் (இவரைப் பற்றி பின்னால் பார்ப்போம்) என்பவரால் கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். சதாம் ஹுசெய்ன் அதிபராகவும், ரெவல்யுஷனரி கமாண்ட் கவுன்சிலுக்கு சேர்மனாகவும் பதவியேற்றார். 1980 லிருந்து எட்டு ஆண்டுகள் எல்லைகளுக்காகவும், குர்திஷ் ஆதரவுக்காகவும் ஈரானுடன் சதாம் ஹுசெய்ன் போர் தொடுத்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்தது. இறுதியில் ஐ.நாவின் தலையீட்டின் பேரில் அவரவர் எல்லைகளை வகுத்துக்கொண்டு, போரை நிறுத்திக் கொண்டார்கள். ஈரான் ஈராக் போர் இருதரப்பிலும் ஐந்து லட்சம் இராணுவத்தினரும், குடிமக்களும் இறந்து போக, பல லட்சம் பேர் காயமடைய பெரும் பொருளாதார வீழ்ச்சியுடன் முடிந்தது. 1990 ல் தனது எண்ணெய் கிணறுகளிலிருந்து குவைத் அனுமதி இல்லாமல் மில்லியன் கணக்கான காலன்கள் எண்ணெய் திருடிவிட்டது என்று குவைத் மீது ஈராக் ஆக்கிரமிப்பு செய்தது. உடனடியாக குவைத்திலிருந்து வெளியேற ஐ.நா அறிவுறுத்தியும் ஈராக் படைகள் வெளியேறாததால், அமெரிக்காவுடன் பல நாடுகள் ஒன்று சேர்ந்து கூட்டுப்படைகளுடன் ‘டெசெர்ட் ஸ்டார்ம்’ என்னும் தாக்குதலை ஈராக் படைகள் மீது நடத்தி ஏறக்குறைய 30,000 இராணுவ வீரர்களையும், பல ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தார்கள். 1991 ல் குர்திஷ்கள் அதிகமுள்ள வடக்கு ஈராக்கில் ஷியா பிரிவினர் புரட்சியில் இறங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதிபர் சதாம் ஹுசெய்னைக் கொல்லவும் முயற்சித்தார்கள்.

ஈராக் வரலாறு 3

குவைத் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கா ஈராக் மீது உலகப் பொருளாதாரத்தடை விதித்தது. இதனால் ஈராக் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்து வறுமையுடனும், நோய்களுடனும் மக்கள் அவதிப்பட்டனர். இதனால் தென், மத்திய ஈராக்கில் பலர் இறந்து போனார்கள். 1996 ல் ஐ.நா. சபை ‘எண்ணெய்காக உணவு’ என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தடையைத் தளர்த்தியது. இதன்பின் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்கா, ஈராக் அதிபயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, சதாம் ஹுசெய்னை தூக்கிலிடும்வரை நடத்திய நாடகத்தை உலகமே அறியும். கண் துடைப்புக்காக அதிபயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிக்க ரிச்சர்ட் பட்லர் தலைமையில் அனுப்பப்பட்ட குழு, ஈராக் ஒத்துழைக்கவில்லை என்ற முடிவை ஐ.நாவுக்கு தெரியப்படுத்தியது. பின்னால் வந்த பெண்பித்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஈராக்கின் இராணுவ, அரசு நிலைகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தினார். 9/11 அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின் சௌதியைச் சேர்ந்த ஒசாமா பின் லாடன் என்ற கோடீஸ்வரர் தான் காரணம் என்று அல்வாவில் இனிப்பு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது போல் அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிக்க, அமெரிக்க வெளியுறவுத்துறைச் சட்டப்படி, ஈராக்கின் பாத் கட்சியை ஆட்சியைவிட்டு விலக்க அமெரிக்கா முடிவு செய்தது. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்ற அந்நாட்டு மக்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால், உலக அதிசயமாக அமெரிக்கா 99% சதவீத வாக்குகளை செனெட் சபையில் (அதுவும் தன் அரசாங்கத்தில் பெற்று) பெற்று ஈராக் ஆட்சியை விரட்ட அனுமதி பெற்றது. கண்டம் வேறு, நாடு வேறு, இனம் வேறு, மொழி வேறு எங்கேயோ இருக்கும் அமெரிக்கா, ஈராக்கின் ஆட்சியை நீக்க தீர்மானம் போட்டது. ஈராக்கைச் சுற்றியுள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளும் (நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, உண்மை ஜிஹாதை மறந்து பாழாப்போன தனது பழங்குடி இனங்களே ஆள வேண்டும் என்ற குடும்ப பெருமைக்காகவே ஆளும் நாடுகள் வேடிக்கை மட்டும் பார்த்தன.) தள்ளி இருக்கும் விளக்கை தானே அணைக்கிறார்கள் நமக்கென்ன என்று இருந்துவிட்டார்கள். அமெரிக்க அதிபர் ஈராக் ஐ.நாவின் சொல்லுக்கு மதிப்பளிக்கவில்லை என்று கூப்பாடு போட்டு, இங்கிலாந்துடன் படை சேர்ந்து ஈராக்கை ஆக்கிரமித்தது. சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கூட்டுப்படைகளுக்கு விமானதளம், துறைமுகம், எரிபொருள், உணவு ஆகியவற்றைக் கொடுத்து தங்கள் நன்றியை தெரியப்படுத்திக் கொண்டன. இதில் ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்கும் திட்டமும் இருந்ததாக இன்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். 2003 ல் சதாம் ஹுசெய்ன் பதுங்கு குழியில் மயக்க மருந்து பீய்ச்சப்பட்டு பிடித்து கண்துடைப்பு வழக்காடி தூக்கிலிடப்பட்டார். இன்றுவரை ஈராக் என்னும் ஆதியில் மனிதன் சுமேரிய நாகரீகத்திலிருந்து வாழ்ந்ததாகவும், உலக கலாச்சாரத்திற்கும், அறிவுக்கும் வித்திட்ட அந்நாடு தினசரி பல உயிர்களை தீவிரவாத குண்டு வெடிப்பின் மூலம் இழந்து கொண்டிருக்கிறது. அல் காயிதா என்ற அமைப்பே இல்லை. ஆனால் இன்னும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, அமெரிக்கா முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்களின் உயிர்களை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. ஒருநாளைக்கு குறைந்தது 50 உயிர்கள் என்றால் 2003 லிருந்து 2015 வரை சராசரி எதிர்சண்டை இல்லாமல் 300,000 லட்சம் உயிர்களைக் கொன்றிருக்கிறார்கள். பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றால் அது தீவிரவாதிதான். இப்படி குண்டு வீசி திருமண கோஷ்டிகள், மத ஊர்வலங்கள், பள்ளிக்குழந்தைகள், ஈராக் காவலர்கள், அப்பாவிக் குழந்தைகள் என்று பல்லாயிரம் பேரைக் கொன்றிருக்கிறார்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போரில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பேர்களைக் கொன்ற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷே ஒரே ஒரு (சாரி - SORRY) மன்னியுங்கள் என்று ஆட்சியை விட்டுப் போகும்போது சொல்லிவிட்டார். இப்போது அமெரிக்க இராணுவம் ஏற்கனவே அச்சடித்து வைக்கப்பட்ட மன்னியுங்கள் என்ற அறிக்கையை ஒவ்வொரு தவறான குண்டுவீச்சின் போதும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஈராக்கில் இருக்கும் ஆட்சி மக்களின் ஆட்சியல்ல அமெரிக்காவால் வலுக்கட்டாயமாக ஈராக் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்சி.
மக்கா நகரின் ஷரீஃபாகவும், எமிராகவும் ஹுசெய்ன் பின் அலி என்பவர் இருந்தார். அவரின் மூன்றாவது மனைவி அதிலா கானுமுக்கு பிறந்தவர் இளவரசர் ஸெய்த். இவர்தான் ஈராக்கின் ஹாஷிமிட்கள் ஆட்சியாளராக இருந்தார். இவர் இஸ்தான்புல் கலடாஸராய் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பின்னர் கான்ஸ்டாண்டிநோபில், ஆக்ஸ்ஃபோர்டின் பல்லியோல் பல்கலைக்கழகங்களில் பயின்றார். 1916 லிருந்து 1919 வரை வடக்கு அரபு இராணுவத்தின் தளபதியாக இருந்தார். 1918 ல் மட்டுப்படுத்தப்பட்ட சிரியாவின் ஆட்சியாளராகவும் இருந்தார். ஃப்ரென்ச் அதிகாரத்தில் இருந்தபோது 1923 ல் ஈராக்கின் குதிரைப்படைக்கு கர்னலாக இருந்தார். 1930 ல் ஈராக்கின் தூதராக பெர்லின் மற்றும் அங்காராவிலும், 1950 ல் லண்டனிலும் இருந்தார். ஜெனெரல் முஹம்மது நஜீப் அர் ருபாஃஇ என்பவர் மன்னராட்சி கூடாது என்று சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஈராக்கின் மன்னர் இரண்டாம் ஃபைசலைக் கொன்றார். அதனால் 1958 ல் இளவரசர் ஸெய்த் ஈராக்கின் ஆட்சியாளரானார். இவர் கிரீசைச் சேர்ந்த இளவரசி ஃபஹ்ரெல்னிசா என்பவரை மணந்து அவர் மூலம் இளவரசர் ராஃஅத் பின் ஸெய்த் என்ற மகனைப் பெற்றார். இளவரசர் ஸெய்த் 1970 ல் மரணமடைந்து ஜோர்டான் அம்மானில் ரக்தான் அரண்மனையில் ராயல் மொசோலியமில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்குப்பிறகு, இளவரசர் ராஃஅத் பின் ஸெய்த், ஹாஷிமிட் மன்னராக ஈராக்கின் ஆட்சிக்கு வந்தார். தந்தை வழியில் ஜோர்டானின் மன்னர் தலாலுக்கும், ஈராக்கின் காஸிக்கும் மிக நெருங்கிய உறவினர் (தம்பி மகன்?). இவர் எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவிலும், 1960 ல் கேம்பிரிட்ஜின் கிறிஸ்ட் கல்லூரியில் இளங்கலையும், 1963 ல் முதிர்கலைப்பட்டமும் பெற்றார். இவர் ஜோர்டானின் மன்னர்கள் ஹுஸ்ஸெய்ன் மற்றும் இரண்டாம் அப்துல்லாஹ்வுக்கும் கூட நெருங்கிய உறவினர். இவர் ஸ்வீடனைச் சேர்ந்த மார்கரெடா இங்கா எலிசபெத் லிண்ட் என்ற மஜ்தா ராதை மணந்தார். அவர் மூலம் இவருக்கு இளவரசர்கள் ஸெய்த் பின் ராத், மிரித் பின் ராத், ஃபிராஸ் பின் ராத், ஃபைசல் பின் ராத் என்ற மூன்று மகன்களும், இளவரசி ஃபக்ரெல்னிசா பின்த் ராத் என்ற மகளும் பிறந்தார்கள்.
சதாம் ஹுசெய்ன் வரலாறு 
ஈராக்கின் திக்ரித் மாகாணத்தில் அல் பு நாசீர் என்ற பழங்குடியினத்தின் ஒரு பிரிவாக அல் பெகத் பழங்குடியினர் இருந்தார்கள். அவர்களில் சுபா துல்ஃபாஹ் அல் முஸ்ஸல்லத் என்ற பெண்மனிக்குப் பிறந்தவர் தான் சதாம் ஹுசெய்ன் (அனுகூலமானவர்). தன் தந்தை ஹுசெய்ன் ஆபித் அல் மாஜிதை அறியாதவர். தந்தையார் சதாம் ஹுசெய்ன் பிறப்பதற்கு முன்பே காணாமல் போய்விட்டார். 13 வயதான மூத்த சகோதரரும் புற்று நோயால் இறந்து போனார். சிறு குழந்தையாய் இருந்த சதாம் ஹுசெய்னை அவரது மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ் எடுத்துச் சென்று வளர்த்தார். யாருமில்லாத சதாம் ஹுசெய்னின் தாயார் மறுமணம் செய்து கொண்டார். அதன் மூலம் சதாமுக்கு மூன்று ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருந்தார்கள். மூன்று வயதானபோது திரும்பிவந்த சதாம் ஹுசெய்னை அவரது தாயாரின் கணவர் இப்ராஹீம் அல் ஹஸ்ஸன் கொடுமைப்படுத்தினார். இதனால் 10 வயதானபோது சதாம் ஹுசெய்ன் மீண்டும் பாக்தாத் நகரம் வந்து மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ்வுடன் சேர்ந்து கொண்டார். கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ் பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த ஆங்கிலோ ஈராக் போரில் அனுபவம் பெற்றவர். அவர் திக்ரித் நகரத்தைச் சேர்ந்தவராதலால் அங்கு அவருக்கு பல ஆலோசகர்களும், ஆதரவாளர்களும் இருந்தார்கள். மாமனின் ஆதரவில் பாக்தாதின் தேசிய பள்ளியில் படித்தார். பின் மூன்றாண்டுகள் சட்டம் படித்தார். 1957 ல் இருபது வயதானபோது பாத் புரட்சிக் கட்சியில் சேர்ந்தார். நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக இருந்த மன்னராட்சியை எதிர்த்து பல நாடுகளிலும் புரட்சி நடந்தது போல் ஈராக்கிலும் ஆட்சியாளரை எதிர்த்து புரட்சி நடந்தது. காலனி ஆதிக்கவாதம், நில முதலாளிகள், வாணிப செல்வந்தர்கள், பழங்குடியினத் தலைவர்கள் இவர்களே பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். எகிப்தின் கமால் அப்தெல் நாசர், சதாம் ஹுசெய்ன் போன்ற இளம் பாத் கட்சியினரை ஆதரித்தார். 1950- 60 ன் மத்தியில் எகிப்து நாசரின் புதிய எழுச்சியால் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மன்னராட்சி ஒழிந்தது. அப்போது சூயஸ் கால்வாய் பிரச்சினையும் உச்சத்திலிருந்ததால், பல நாடுகளில் பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ் ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போரிட்டனர்.
சதாம் ஹுசெய்ன் பாத் கட்சியில் சேர்ந்த சமயத்தில் அதன் இராணுவ அதிகாரி ஜெனெரல் அப்த் அல் கறீம் காசீம் என்பவர் இரண்டாம் ஃபைசலை ‘ஜூலை 14’ புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து விரட்டி இருந்தார். 16 உறுப்பினர்களைக் கொண்ட காசிமின் மந்திரிசபையில் 12 உறுப்பினர்கள் பாத் கட்சியைச் சேர்ந்தவர்கள். எகிப்து கமால் அப்தெல் நாசரின் ஐக்கிய அரபு குடியரசில் காசீம் சேர மறுத்ததால், பாத் கட்சி அவருக்கு எதிரானது. அதை ஈடுகட்ட எப்போதுமே பாத் கட்சிக்கு எதிராக இருக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காசீம் கூட்டு வைத்துக் கொண்டார். பாத் கட்சியினர் காசீமைக் கொல்லத் திட்டம் தீட்டினார்கள். பாத் கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் தீவிரமானவர்கள், நன்கு படித்தவர்கள், மாணாக்கர்கள், இளைஞர்கள் என்று நிரம்பி இருந்தார்கள். இக்கொலைத் திட்டத்திற்கு சதாம் ஹுசெய்ன் தலைமை ஏற்றார். இதற்காக அவரும், சிலரும் டமாஸ்கசில் பயிற்சி பெற்றார்கள். 1959 அக்டோபர் 7 ல் அல் ராஷித் சாலையில் காசீமைக் கொல்லத் திட்டமிடப்பட்டது. காரில் காசீமுடன் பின் இருக்கையில் இருப்பவர் காசீமைக் கொல்ல பொறுப்பெடுத்திருந்தார். திட்டமிட்டபடி வந்து கொண்டிருந்த காரின் முன்புறம் சென்று சதாம் ஹுசெய்ன் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டு, அப்த் அல் கறீம் காசிமும் துப்பாக்கியாலும், காரின் பின்புறம் இருந்தவராலும் தாக்கப்பட்டார். கொலையாளிகள் காசீம் இறந்தவிட்டதாகக் கருதி சென்றுவிட்டார்கள். ஆனால் காசீம் தப்பித்துவிட்டார். அப்போது பாத் கட்சியில் தீவிரமான 1000 உறுப்பினர்களுக்கும் கீழ்தான் இருந்தனர். கொலையில் ஈடுபட்ட சிலர் பாத் கட்சியின் பிறப்பிடமான சிரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். சதாம் ஹுசெய்ன் பாத் கட்சியின் தலைவரான மிசெல் அஃப்லக் என்பவரின் ஆதரவின் கீழ் இருந்தார். கொலைக்கு காரணமான ஆறு பேர் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதண்டனை கொடுக்கப்பட்டார்கள். ஆனால், என்ன காரணமோ தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1959 ல் சதாம் ஹுசெய்ன் எகிப்துக்கு தப்பித்துப் போய் 1963 வரை அங்கிருந்தார். சில வெளிநாடுகளும் அப்த் அல் கறீம் காசீமை வெறுத்தனர். அவர் குவைத் மீது ஆக்கிரமிப்பு செய்ய இருந்தார். 1960 ல் அமெரிக்க CIA அமைப்பு காசீமை விஷமருந்து துவைக்கப்பட்ட கைக்குட்டையால் கொல்ல முயன்றது. ஆனால் அதிலிருந்து காசீம் தப்பித்துக் கொண்டார். ஆனால், ஈராக்கின் இராணுவ அதிகாரிகள் ‘ரமதான் புரட்சி’ என்றதின் கீழ் அப்த் அல் கறீம் காசீமை ஆட்சியைவிட்டுத் தூக்கி அப்துல் சலாம் ஆரிஃப் என்பவரை அதிபராக்கினார்கள். ஆரீஃப் அனைத்து பாத் கட்சி உறுப்பினர்களையும் கைது செய்து பாத் கட்சியைக் கலைக்க உத்தரவிட்டார். 1966 ல் அப்துல் சலாம் ஆரீஃப் ஒரு விமான விபத்தில் பலியானார். இராணுவத்தில் பாத் கட்சியின் ஆதரவுள்ள ஒருவரால் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று ஒரு கருத்து நிலவியது. பின் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அப்த் அர் ரஹ்மான் அல் பஸ்ஸாஸ் என்பவர் சில நாட்களுக்கு ஆட்சி செய்தார். நிரந்தரமாக அவர் ஆள்வதற்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு தேவை. அது கிடைக்காமல் அவர் தோல்வி அடைய இறந்து போன அப்துல் சலாம் ஆரீஃபின் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆரீஃப் ஈராக்கின் அதிபரானார்.

ஈராக் வரலாறு 4

1963 ல் ஈராக் திரும்பிய சதாம் ஹுசெய்ன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவரை அஹ்மத் ஹசன் அல் பக்ர் துணை செய்லாளராக நியமித்தார். 1967 ல் சதாம் ஹுசெய்ன் சிறையிலிருந்து தப்பித்து பாத் கட்சிக்கு புத்துணர்வையும், திறமையான செயல்பாடுகளையும் ஒரு செயலாளராக சிறப்பாக அளித்தார். பாத் கட்சியின் ஸ்தாபகர் மிசெல் அஃப்லக்கால் மாகாண தலைவரானார். 1968 ல் அஹ்மது ஹசன் அல் பக்ர் தலைமையில் இரத்தமில்லாமல் அப்துல் ரஹ்மான் ஆரிஃபை ஆட்சியை விட்டுத் தூக்கிவிட்டு, அல் பக்ர் ஈராக்கின் அதிபராகவும், சதாம் ஹுசெய்ன் ஈராக்கின் துணை அதிபராகவும், பாத் கட்சியின் புரட்சிக்குழுக்கு தளபதியாகவும் ஆனார்கள். அப்துல் ரஹ்மான் ஆரீஃப் இஸ்தான்புல்லுக்கு நாடு கடத்தப்பட்டார். ஒரு துணை அதிபராக இருந்து புதிய அரசை வளப்படுத்தி, பாத் கட்சியையும் வளர்த்து, நாட்டின் விவகாரங்களில் அதிக அக்கரை கொண்டு தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார். உண்மையான உழைப்பைக் கொடுத்து ஈராக்கின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். எண்ணெய் வளம் இருந்த காரணத்தால் உலக அளவில் ஈராக்கை முன்னிலைப் படுத்தினார்.
சதாம் ஹுசெய்ன் ஆட்சிக்கு முன்பு ஈராக் பலவழிகளில் வேறுபாடு கண்டிருந்தது. சுன்னிப்பிரிவு-ஷியாபிரிவு, அரபுகள்-குர்துக்கள், பழங்குயின தலைவர்கள்-நவீன வாணிப செல்வந்தர்கள், பழங்குடியினர்-பொதுமக்கள் என்று அனைத்திலும் வேறுபட்டிருந்தார்கள். ஈராக்குக்கு அப்போதைக்கு தேவையான நிலையான ஆட்சியை உறுதி செய்து அனைவரின் தேவைகளையும் அவரவர்கேற்ப பூர்த்தி செய்து அரவணைத்துச் சென்றார். நாட்டையும் முன்னேற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றினார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்நாட்டு புரட்சிகள் எழாத வண்ணம் வைத்துக் கொண்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, கருத்து சொன்ன சதாம் ஹுசெய்ன், நான் குர்துக்களை கொன்றதற்காக வருத்தப்படவில்லை. ஒரு நாட்டின் மன்னரைக் கொல்ல முயல்பவர்களுக்கு என்ன தண்டனையோ அதைத்தான் நான் செய்தேன். என்னளவில் ஒரு தலைவன் இருந்தால் ஆட்சிக்கு வந்தவுடனே, அத்தனை குர்துக்களையும் கொன்று குவித்திருப்பான். ஆனால், நான் மற்ற எவருமே செய்ய முடியாத உதவிகளை ஒரு எதிர்தரப்பு ஆட்சியாளனாக இருந்து குர்துக்களுக்குச் செய்தேன்.இன்று எனக்கெதிராக் சாட்சி சொன்ன ஒரு குர்து இனத்தவன் கூட அதை எண்ணிப்பார்க்கவில்லை’ என்றார். உலக எண்ணெய் உற்பத்தியில் ஏறக்குறைய 40% சதவீதம் ஈராக்கிலிருந்து தான் அப்போது கிடைத்தது. 1973 ல் உலகெங்கிலும் எரிவாயு உற்பத்தியில் குழப்பம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெயின் விலை பலமடங்கு உயர்ந்து ஈராக்குக்கு நல்ல வருவாயைத் தந்தது. மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சொத்துக்கள் 20, 22 பில்லியன் டாலர்களிலிருக்க சதாம் ஹுசெய்னின் சொத்துக்கள் அவர் நாட்டு எண்ணெய் வளத்திற்க் 
மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் 20, 22 பில்லியன் டாலர்களில் இருக்க சதாம் ஹுசெய்னின் ஈராக்கின் எண்ணெய் வளத்திற்கு அவரின் சொத்து ஐந்து மடங்கு அடுத்தவர்களை விட இருக்க வேண்டும். ஆனால் 2000 ல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் இவருக்கு 5 பில்லியன் டாலர்கள் சொத்து இருந்ததாகக் கூறியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் வருமானத்தை நாட்டில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாதவராக இருக்கக்கூடாது என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதுவும் சர்வதேச அளவிலான கல்வியைக் கொடுத்தார். இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பல சலுகைகளை அளித்தார். விவசாயிகளுக்கு கடனுதவிகள் கொடுத்தார். மத்திய கிழக்கு நாடுகளிலேயே உயர்தர மருத்துவத்தை இலவசமாக நாட்டுமக்களுக்கு கொடுத்தவர் இவர்தான். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு கல்வி, விஞ்ஞான, கலாச்சார விருதை சதாம் ஹுசெய்னுக்கு கொடுத்து கௌரவித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, அன்று அம்மக்கள் இவரின் சிலையை மட்டும் தள்ளவில்லை. உலகின் சிறந்த அதிபர் அளித்த பல சலுகைகளையும், நல்லாட்சியையும் சேர்ந்தே தள்ளினார்கள். அதை அனுபவித்த தலைமுறையினர் இனி எப்பாடுபட்டாலும் அமெரிக்காவாலும், தங்கள் கரங்களாலும் ஏற்படுத்திக் கொண்ட சேதாரத்திலிருந்து அவைகளைப் பெறமுடியாது. காரணம் ஈராக் போன்ற ஒரு நாட்டை சதாம் ஹுசெய்ன் என்பவரால் மட்டுமே அரவணைத்து வாழமுடியும். அந்த அரவணைப்பு என்பது ஆயிரம் இழைகளில் ஒரு இழை, அந்த இழை எல்லார் கைகளுக்கும் வசப்படாது. அது சதாம் ஹுசெய்னுக்கு அழகாக வசப்பட்டது. இதற்கு இக்கட்டுரை எழுதும் நானே சாட்சியாகவும் இருக்கிறேன். நான் துபாயிலிருந்த காலங்களில் சில காலம் அல் ஷாப் என்னும் பகுதியில் இருந்தேன். அதன் கீழே குடியிருந்த ஒரு ஈராக்கியர் (2003 என்று நினைக்கிறேன்) என்னிடம் சொல்லி இருக்கிறார். எங்கள் தேசத்தை சதாம் ஹுசெய்ன் தவிர எந்த கொம்பனாலும் ஆளமுடியாது என்று.
இவரைக் கொல்வதற்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த மற்ற நாட்டு அதிபர்கள் போல் பாட்டன், தந்தை, மகன் என்ற அடிச்சுவட்டில் ஆட்சிக்கு வந்தவரல்ல அதிபர் சதாம் ஹுசெய்ன். அதிகப்படியாக வந்த எண்ணெய் வளத்தின் மூலம் பல சாலைகள், புதிய கட்டிடங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகளை அமைத்தார். மின்சாரம் இல்லாத ஊரே ஈராக்கில் இல்லாமல் செய்தார். 1972 ல் 15 ஆண்டாக இருந்த சோவியத் யூனியன் ஒப்பந்தத்தை புதுப்பித்தார். உலகில் அடுத்த நாடு வளம் பெறுவதையோ, சோவியத் யூனியனுடன் நட்பு கொள்வதையோ விரும்பாத அமெரிக்கா வழக்கம் போல ஈரானின் ஷா முஹம்மது ரேஸா பஹ்லவியை CIA  மூலம் தொடர்பு கொண்டு, ஈராக் குர்திஷ்களுக்கு ஈரான் மூலம் ஆயுதங்கள் வழங்கி இரண்டாவது குர்திஷ் ஈராக் போரைத் துவங்கியது. சதாம் ஹுசெய்ன் விவசாயிகளுக்கு இலவச நிலங்களைப் பகிர்ந்தளித்து பெரிய அளவில் விவசாயத்தை நாட்டில் வளர்த்தார். ஈராக் படுவேகமாக வளர்ச்சி அடைந்து பல அரபு நாடுகளிலிருந்தும், யூகோஸ்லேவியாவிலிருந்தும் பணியாட்களை வரவழைத்தார்கள். அதிபர் அல் பக்ர் வயது மூப்பின் காரணமாக அவ்வளவாக ஆட்சியில் ஆர்வம் காட்டாதபோது சதாம் ஹுசெய்ன் தான் முன்னிலையில் இருந்தார். இடையில் 1979 ல் அல் பக்ர், சிரியாவுடன் இணைந்து செயல்பட சிரிய அதிபர் ஹஃபீஸ் அல் அஸ்ஸாதுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இது சுதந்திரமாக பல நல்ல திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சதாம் ஹுசெய்னுக்கு எதற்கெடுத்தாலும் சிரியாவையும் கலந்து கொள்ள வேண்டுமென்பது ஒரு இடையூறாக இருந்தது. அவர் அல் பக்ரை ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டார். 1979 ல் அதிபரான சதாம் ஹுசெய்ன் முதலில் பாத் கட்சியின் கூட்டத்தைக் கூட்டி, அதை வீடியோபதிவு எடுக்கச் செய்தார். பாத் கட்சியில் சதிகாரர்கள் (சிரியாவுடன் ஒப்பந்தம் போட ஆதரவாய் இருந்தவர்கள்) என்று இருந்தவர்களை முஹ்யீ அப்தெல் ஹுஸ்ஸெய்னை விட்டு ஒவ்வொரு பெயராகப் படிக்கச் சொல்லி, அவர்களை அவையைவிட்டு வெளியேற்றி கைது செய்யச் சொன்னார். அதில் மிகவும் எதிர்ப்பாக இருந்த 68 பேரில் 22 கட்சி உறுப்பினர்களை தூக்கிலிட்டார். எஞ்சிய உயர்பதவியில் இருந்த பாத் கட்சி உறுப்பினர்கள் சதாம் ஹுசெய்னை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். அவர்களையும் சதாம் ஹுசெய்ன் தூக்கிலிட்டார். ஈராக் சமூகம் மதம், மொழி, இனத்தின் அடிப்படையில் பிரிந்திருந்தது. குர்திஷ்கள் வட ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட பிரிக்கச் சொன்னார்கள். ஒரு பிரிவினர் அருகாமை ஈரானின் ஷியா பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். சதாம் ஹுசெய்ன் நாட்டின் பலன்கள் அனைத்து தரப்பினருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக அனைவரையும் பாத் கட்சியில் சேரச்சொன்னார். சதாம் ஹுசெய்னைப் பொருத்தவரை தன் எண்ணத்திலுள்ள ஈராக்கின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள புற்களைத்தான் அழித்ததாகச் சொல்லப்பட்டது. எதிர்ப்பாளர்கள் அதை அடக்குமுறை என்றார்கள்.
1974 ல் தாஹா யாசீன் ரமதான் என்ற உறவினர் தலைமையில் நடமாடும் மக்கள் இராணுவம் ஒன்றை அமைத்தார். அவர்கள் மக்களிடையே ஊடூருவி புரட்சியில் ஈடுபட இருப்பவர்களை துல்லியமாகக் கண்டுபிடித்து சிறையில் அடைத்தார்கள். உள்நாட்டுப் பாதுகாப்பை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். அடுத்து ஒன்றுவிட்ட சகோதரர் பர்ஸான் இப்ராஹீம் அல் திக்ரிதி என்பவர் தலைமையில் பொது புலனாய்வு துறை ஒன்றையும் அமைத்தார். இது ஈராக்கின் சார்பாக வெளிநாடுகளிலும் செயல்பட்டதாகக் கூறினார்கள். இவர் தன் புகழ் பாடப்படுவதற்காக நாடெங்கிலும் சுவரொட்டிகள், புகைப்படங்கள், சிலைகள் என்று வடித்துக் கொண்டார் என்றும் குறை கூறினார்கள். இவரது உருவம் அரசுக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், கடைகள், நாணயங்களின் மீது அச்சடிக்கப்பட்டதாகக் கூறினார்கள். (ஏன் மற்ற இஸ்லாமிய நாடுகளில் இல்லையா என்ன?) பெரும்பாலும் சதாம் தான் சிறுவயதிலிருந்து அணியும் பிதோயின் பழங்குடியின உடையிலேயே இருப்பார். சில சமயங்களில் குர்திஷ் உடையும், சில சமயம் தலையிலிருந்து கால்வரை அரபுகள் உடையும் அணிந்திருப்பார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மேற்கத்திய உடையில் செல்வார். 1995, 2002 ல் நடந்த தேர்தல்களில் 8.4 மில்லியன் ஓட்டுகளில் வெறும் 3,052 ஓட்டுகள் மட்டும் எதிர்த்து வாக்கு பெற்றார். 99.96% வாக்குகள் ஆதரவாகப் பெற்றார். இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தின் போது எகிப்திய அதிபர் அன்வர் சதாதுடன் கருத்துவேறுபாடு கொண்டு ஈராக் உறவை முறித்துக் கொண்டது. இருநாட்டுக்கும் தூதரக உறவு இல்லாத நிலையிலும், எகிப்து ஈரானுடனான போரின் போது ஈராக்கை ஆதரித்தது. வைரம் பதித்த ‘ரோலக்ஸ்’ நிறுவன கைக்கடிகாரத்தை எப்போதும் அணிந்திருப்பார். ஸாம்பியா நாட்டின் முதல் அதிபரும், தனது நண்பருமான கென்னெத் டேவிட் கௌண்டாவுக்கு போயிங் 747 விமானம் முழுக்க விலை உயர்ந்த தரைவிரிப்புகளும், தொலைக்காட்சி பெட்டிகளும், தங்க நகைகளும் மற்றும் பல பொருட்களும் அனுப்பினார். கௌண்டாவும் தான் பொழுதுபோக்காகச் செய்யும் மாந்திரீக விளையாட்டுப் பொருள்களை சதாம் ஹுசெய்னுக்கு அனுப்பினார். இவர் ஒரே ஒருமுறைதான் மேற்கத்திய நாட்டுக்கு சென்றார். பெரும்பாலும் ஈராக் சார்பாக ஈராக்கின் வெளியுறவு மந்திரி தாரிக் அஜீஸ் தான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். 1975 ல் ஃப்ரான்ஸ் பிரதம மந்திரி ஜாக்வெஸ் சிராக்கைச் சந்தித்தார். சில ஈராக் தலைவர்களும், லெபனானின் ஆயுத வியாபாரி சர்கிஸ் சோகானாலியனும் சதாம் ஹுசெய்ன் சிராகின் கட்சிக்கு நிதியுதவி செய்தார் என்றார்கள். சதாம் ஹுசெய்னின் ஆட்சியின் போது ஈராக்குக்கு பெருமளவு ஆயுதம் விற்பனை செய்தது ஃப்ரான்ஸ் தான்.

ஈராக் வரலாறு 5

1979 ல் ஈரானில் ஷா முஹம்மது ரேஸா பஹ்லவி இஸ்லாமிய புரட்சியின் மூலம் துரத்தப்பட்டு, அயாதுல்லாஹ் ரூஹல்லாஹ் கொமெய்னி ஆட்சிக்கு வந்தார். இவர் தீவிர ஷியா பிரிவானதால், தன் பகுதி ஈராகில் குர்திஷ்கள் பலம் பெருவார்களோ என்று சதாம் ஹுசெய்ன் அச்சப்பட்டார். காரணம் 1964 ல் ஈரானை விட்டு ஓடிய கொமெய்னி ஈராக்கில் ஷியாக்கள் நிறைந்த அந்நஜஃப் பகுதியில் தான் தங்கி இருந்தார். அங்கிருந்தபடி சதாம் ஹுசெய்னுக்கும் தொல்லை கொடுத்திருந்தார். 1980 ல் ஃப்ரென்சின் உதவியுடன் ஈராக்கில் நியூக்ளியர் அணுஉலை ‘ஓசிரக்’ துவங்கப்பட்டது. 1981 ல் இஸ்ரேல் அதை குண்டுவீசி தகர்த்தது. 1980 ல் ஈராக் ஈரானின் தெஹ்ரான் மெஹ்ராபாத் விமான நிலையத்தைத் தாக்கி, எண்ணெய் வளமிக்க குஸெஸ்தான் பகுதியில் நுழைந்தது. அப்பகுதியை ஈராக்குடன் இணைத்து விட்டதாக செய்தி சொல்லியது. ஈரானை எதிர்த்து அரபு மாகாணங்கள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில நாடுகளின் பொருளாதார உதவியாலும் ஈராக் மத்திய ஆசியாவிலேயே பலம் பொருந்திய நாடாகக் கருதப்பட்டது. ஈரானுடனான போரின்போது ஆரம்பத்தில் ஈராக்குக்கு ஆதரவாய் இருப்பதாக அறிவித்த சோவியத் யூனியனின் மிக்காயில் கோர்பசேவ் பிறகு, பொதுவாக இருப்பதாக அறிவித்தார். முதல்நாள் போரில் பலனடைந்தது போலிருந்த ஈராக் அடுத்த நாட்களில் ஈரானின் தற்கொலைப்படை தாக்குதல்களால் பலம் இழந்தது. 1982 ல் ஈராக் போரை நிறுத்திக்கொள்ள தயாராய் இருந்தது. போரில் ஈராக் ஜெர்மனி நிறுவனம் கொடுத்த இரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது. அமெரிக்காவின் அதிபர் ரீகன் ஈரானின் செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தந்து, தெஹ்ரானில் மக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீச ஆலோசனை தந்தது. ஃப்ரான்ஸ் 25 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஈராக்குக்கு ஆயுதங்கள் விற்றது. அதேநேரத்தில் ஈராக்கின் எண்ணெய் வளங்கள் ஈரானின் கடற்படையால் பெர்ஷியா வளைகுடாவில் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஈராக்குக்கு தொடர்ந்து சோவியத் யூனியன் (மறைமுகமாக), சீனா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்தன. ஈரானும் விடாமல் போரிட்டு ஈராக்கை போரின் இழப்புகளுக்கு நஷ்டஈடு கொடுக்கச் சொன்னது. 1988 வரை ஐ.நா. சபை போரை நிறுத்தச் சொல்லி பேசி வந்தது. 1988 ல் ஈராக்கில் குர்துக்கள் அதிகம் வாழும் ஹலப்ஜா பகுதியில் இரசாய குண்டு வீசப்பட்டு, 10,000 பேர் வரை இறந்து போனார்கள். ஈராக் இதற்கு ஈரானைக் குற்றம் சாட்டியது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருநாடுகளிடையேயும் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏறக்குறைய இரு தரப்பிலும் 10 லட்சம் பேர் இறந்திருக்க, லட்சக்கணக்கானோர் காயமுற்றிருந்தனர். எண்ணெய் வளமிக்க குஸெஸ்தான் மற்றும் பஸ்ரா பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தன. ஈரானுக்கு சிறிதளவு வட குர்திஷ்கள் பகுதியில் நிலப்பரப்பு கிடைத்தது. பொதுவில் இருநாடுகளும் பெரிதும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டிருந்தன. 1986 ல் திருக்குரானின் அல் அன்ஃபால் சூராவின் பேரில் ‘அல் அன்ஃபால் பிரச்சாரம்’ என்று வட குர்திஷ்கள், ஷபக்குகள், யஸிதிஸ்கள், அஸ்ஸைரியன்கள், மண்டீயன்கள், துருக்கிகள் ஆகியோரை எதிர்த்து நடத்தப்பட்டது. மனித உரிமை கழகம் இதில் சதாம் ஹுசெய்னின் தரப்பில் 50,000 லிருந்து 100,000 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கணக்கிட்டது. ஆனால் குர்திஷ்கள் 182,000 பேர் என்றார்கள்.
ஈராக், குவைத் விவகாரம், ஈராக் மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, சதாம் ஹுசெய்னை கைது செய்து தூக்கிலிட்ட வரலாறுகள் நீங்கள் நன்கு அறியப்பட்டதே அதனால் மேலே செல்வோம். சதாம் ஹுசெய்ன் சரித்திரப் பூர்வமாக குவைத் ஈராக்கைச் சேர்ந்ததே என்றும், பிரிட்டிஷார் தான் அதைப்பிரித்து குவைத்தை தனியாக்கினார்கள் என்று பலகாலமாக சொல்லி வந்தார். தான் ஈரானுடன் போரில் ஈடுபட்டிருந்த எட்டாண்டு காலத்தில் குவைத் தனது பகுதியின் எண்ணெய் வளத்தைத் திருடிக் கொண்டதாக அமெரிக்காவிடம் குற்றம் சாட்டினார். அவ்வப்போது எடுத்து சேமித்து வைத்த தனது 27 லிட்டர் ரத்தத்தில் திருக்குரானை எழுதச் சொன்னார். அல்லாஹ் தன்னை பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியதற்காக தான் இதைச் செய்வதாகச் சொன்னார். எந்த ஓரு நாட்டின் தலைவர்களின் வழக்குகளும் சர்வதேச நீதிமன்றத்தில் தான் நடத்தப்படும். ஆனால், சதாம் ஹுசெய்னின் வழக்கு மட்டும் ஒருதலைப்பட்சமாக அவர் நாட்டில் அவரின் எதிரிகளின் முன்பு நடத்தப்பட்டு தூக்குதண்டனை கொடுக்கப்பட்டது. ஏனென்றால் எந்த ஒரு நாட்டு அதிபர் மீதும் கொலைத்தாக்குதல் நடந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதைத்தான் சதாம் ஹுசெய்ன் குர்திஷ்கள் மீது எடுத்தார். குர்திஷ்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தார். குர்திஷ்கள் பகுதியில் ஒரு கூட்டத்திற்கு சதாம் ஹுசெய்ன் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து அவர் வாகனம் அவ்வூர் எல்லையைக் கடக்கும் முன் சரமாரியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக சதாம் ஹுசெய்ன் வேறு ஒரு காரில் சென்று விட்டார். இது முழுக்க முழுக்க குர்திஷ்கள் செய்த தவறு. தலைநகர் திரும்பிய சதாம் ஹுசெய்ன் பாதுகாப்பு அதிகாரியை அழைத்து ஏவுகணைகள் விடப்பட்ட அந்த குறிப்பிட்ட குர்திஷ் கிராமத்தில் நடவடிக்கை எடுக்கச் சொன்னார். மொத்த கிராமமக்களும் வாயைத் திறக்காமல் மௌனமாகி விட்டார்கள். பாதுகாப்பு அதிகாரி பொறுமையைக் கைவிட்டு, 1800 பேருக்கு மேல் இருந்த அந்த கிராமத்தில் இரசாயன குண்டை வீசி அனைவரையும் கொன்று போட்டார். சதாம் ஹுசெய்னை தூக்கிலிட்டதற்கு இந்த வழக்குதான் காரணம். இவர் சிறையிலிருந்தபோது, தலைநிறைய முடியுடன் சீர்செய்யப்படாத தாடியுடன் தன் உடைகளை தானே துவைப்பது போன்றும், உறங்குவது போன்றுமான புகைப்படங்களை ‘தி சன்’ என்னும் பத்திரிக்கை வெளியிட்டது. சிறைக்குப் பக்கத்தில் தானே ஒரு சிறு தோட்டத்தை நிர்மாணிக்க அனுமதிக்கப்பட்டார். வழக்குக்கு முன்பே தீர்ப்பை திட்டமிட்டபடி 2006 டிசம்பர் 30 ல் சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்டார். சமாதியில் அடைக்கம் செய்தவர் தூக்குக்குப் பிறகு, சதாம் ஹுசெய்னின் உடலை ஆறு இடத்தில் குத்தி இருந்தார்களாம். அது நிச்சயமாக அவர் இறக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக என்று சொன்னார். அன்று அவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை, அவரால் வளம் கண்ட ஈராக்கும், அதன் மக்களும் தான் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று அமெரிக்க கைப்பாவையாக ஈராக்கை ஆளும் ஆட்சியினரால் வீணாக வளரும் ஒரு புல்லைக்கூட ஒரு நூற்றாண்டானாலும் வளர்க்க முடியாது. 
சதாம் ஹுசெய்ன் தன்னை வளர்த்த மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாவின் மகள் சஜிதா துல்ஃபாவை முதல் மனைவியாக மணந்து கொண்டார். அப்போது சதாம் ஹுசெய்னுக்கு ஐந்து வயது, மனைவி சஜிதாவுக்கு ஏழு வயது. திருமணம் எகிப்தில் நடந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். முதல் மகன் உதைய் ஹுசெய்ன். இவர் ஈராக் கால்பந்து சங்கத்தின் தலைவராக இருந்தார். ஈராக் தொலைக்காட்சி, பாபெல் பத்திரிக்கை ஆகியவற்றை நடத்தினார். இவரை உலக பத்திரிக்கைகள் பெரிய காமக்கொடூரனாக சித்தறித்தார்கள். ஏனென்றால் அமெரிக்கா இவரையும் குண்டுவீசிக் கொன்றுவிட்டது. சரித்திரமும், பூகோளமும் தெரியாத தமிழ் பத்திரிக்கைகள் தினத்தந்தி, தினமலர் கூட இவர் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு தன் மேனியை சொறிந்து கொண்டார்கள். ஒரு சாதாரண தனியார் நிர்வாகத்தில் பணிபுரிபவன் கூட வாரத்திற்கு மூன்று பெண்களுடன் சுற்றுகிறான். உதைய் ஒரு நாட்டு அதிபரின் மகன். இஸ்லாமைப் பொறுத்தவரை தவறுதான் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதன் தண்டனை அவனின் தனிப்பட்ட கணக்கு. இங்கிலாந்து ராணியின் பேரன் ஹாரி மட்டுமென்ன பாதிரியார் உடையணிந்து அப்பமும், தீர்த்தக் கூஜாவுடனுமா அலைகிறார்? அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகள், இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேரின் மகன் ஆகியோர் இரவுவிடுதியில் போதைமருந்துடன் கும்மாளமிட்டார்கள் அது கூட செய்தியாக வந்தது. ஆனால், அது புகாராக வரவில்லை, நாகரீகத்தின் அடையாளமாக வந்தது. உதைய் ஹுசெய்னைப் பற்றி மேலைநாட்டினர் சொல்லும் கதைகள் 1000 பக்கத்திற்கு ஒரு பெரிய புத்தகமாகப் போடலாம். விடுங்கள். அடுத்த மகன் குஸாய் ஹுசெய்ன். இவரும் அமெரிக்காவால் கொல்லப்பட்டார். சதாம் ஹுசெய்னுக்கு அடுத்து இவர்தான் ஆட்சிக்கு வருவதாக இருந்தார். அடுத்ததாக மகள் ராகத் ஹுசெய்ன். இவரை ஜோர்டானின் அரசகுடும்பம் ஆதரவாக அழைத்துக் கொண்டது. தற்போதைய ஈராக் அரசு இவர் பாத் கட்சிக்கு பொருளுதவி கொடுத்து ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி ஒப்படைக்கக் கேட்டது. ஆனால், ஜோர்டான் அரசு மறுத்துவிட்டது. அடுத்து இரண்டாவது மகள் ரணா ஹுசெய்ன் இவரையும் ஜோர்டான் அரசு ஆதரவில் வைத்துக் கொண்டது. இவர் சதாம் கமெல் என்பவரை மணந்து நான்கு குழந்தைகளைப் பெற்றார். மூன்றாவது மகள் ஹாலா ஹுசெய்ன் இவரும் குழந்தைகளுடன் ஜோர்டானில் இருக்கிறார். சதாம் ஹுசெய்ன் இரண்டாவதாக சமீரா ஷாஹ்பந்தர் என்ற பெண்மனியை மணந்தார். இவர் ஈராக் ஏர்வேஸ் தலைவரின் முன்னாள் மனைவி ஆவார். போரின் சமயம் சமீரா லெபனானின் பெய்ரூட்டுக்கு போய்விட்டார். இவருக்கு சதாம் ஹுசெய்னுடன் ஆறு குழந்தைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சதாமின் முதல் குடும்பம் இதை மறுக்கிறது. மூன்றாவது மனைவியாக சோலார் எனர்ஜி ரிசர்ச் செண்டரின் ஜெனரல் மேனேஜராக இருந்த நிடால் அல் ஹம்தானியை மணந்தார். நான்காவதாக வஃபா எல் முல்லாஹ் அல் ஹொவெய்ஷ் என்பவரை மணந்ததாக புரளி நிலவுகிறது.
மகள்கள் ராகதும், ரணாவும் அன்ணன், தம்பிகளான ஹுசெய்ன் காமெல் அல் மஜீதையும், சதாம் காமெல் அல் மஜீதையும் மணந்திருந்தார்கள். ஒரு விவகாரத்தில் சதாம் ஹுசெய்னால் ஆபத்து ஏற்படும் என்று கருதி, மருமகன்கள் இருவரும் ஜோர்டானுக்கு சென்றுவிட்டார்கள். 1996 ல் சதாம் ஹுசெய்னால் ஆபத்து இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின் ஈராக் திரும்பிய இவர்களை, இவர்களால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பழங்குடியினரால் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்கள். சகோதரிகள் இருவரும் ஜோர்டானில் CNN என்ற தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும்போது தந்தையைப்பற்றி மிக உயர்வாகச் சொன்னார்கள். சதாம் ஹுசெய்னைத் தூக்கில் போட்டவுடன் குவைத் மக்கள் தெருவில் வந்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாக தொலைக்காட்சியில் காட்டி அமெரிக்கா அகமகிழ்ந்தது. அதுவும் அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள் அளவுக்கதிகமாக இவரைப்பற்றி கதைகள், நடனங்கள் என்று ஆரவாரப்படுத்தின. ஆனால், உண்மையில் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் கவலை தெரிவித்தனர். இந்தியாவின் தென்பகுதி கேரளா மாநிலத்தில் பரப்பனங்காடி என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய மீன்பிடி கிராமத்திற்கு சதாம் கடற்கரை என்று பெயரிட்டார்கள். இதற்கு முன் இந்த கடற்கரை பிரிட்டிஷாரை எதிர்த்ததின் காரணமாக திப்பு சுல்தான் கடற்கரை என்று இருந்தது. சதாம் ஹுசெய்ன் அமெரிக்காவை எதிர்த்த காரணத்திற்காக தற்போது சதாம் கடற்கரை என்று மாற்றிக்கொண்டதாக அம்மக்கள் தெரிவித்தார்கள். அவரைத் தூக்கிலிட்ட ஆண்டில் உலகம் முழுவதும் பிறந்த 20 லட்சம் குழந்தைகளுக்கு மேல் சதாம் ஹுசெய்ன் பெயர் சூட்டப்பட்டது. சதாம் கடற்கரை மக்கள் தூக்குச் செய்தியைக் கேட்டவுடன் ஜார்ஜ்புஷ்ஷுக்கு எதிராக கோஷமிட்டு, குழந்தைகளும், பெண்களுமாக ஊர்வலம் சென்றார்கள். பாவம் எந்த தொலைக்காட்சிக்கும், பத்திரிக்கைகளுக்கும் கண் தெரியாமல் போனது. ஸ்ரீலங்காவில் பட்டிகோலா என்ற இடத்தில் இருந்த முஸ்லீம்கள் அதிகமுள்ள ஒல்ரு பகுதிக்கு சதாம் ஹுசெய்ன் டவுன் என்று பெயரிட்டார்கள். அவர் அதிபராய் இருந்த போது அந்த டவுனை வளர்ச்சி அடையவும், மஸ்ஜித் கட்டவும் உதவி புரிந்திருந்தார். 1978 ல் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியபோது ஈராக் தூதரகம் மூலம் அம்மக்களுக்கு பல உதவிகளைச் சதாம் ஹுசெய்ன் செய்திருந்தார். வெள்ளத்திற்குப் பிறகு, 100 வீடுகள், பள்ளிக்கூடங்கள், மஸ்ஜிதுகள் கட்டிக் கொடுத்தார். அமெரிக்க மக்களே சதாம் ஹுசெய்ன் ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், திருத்துவது அமெரிக்காவின் வேலையில்லை என்று ஆணித்தரமாக BBC யில் தெரிவித்தார்கள். ஆயிரம் அமெரிக்கா வந்தாலும் சூரியனை மறைத்துவிட முடியாது. நாம் சதாம் ஹுசெய்னுக்காக வாதாடவில்லை. சதாம் ஹுசெய்ன் சொந்தமாக நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ஸ்பீபாஹ் அண்ட் தி கிங், தி ஃபோர்டிஃபைய்ட் கேஸல், மென் அண்ட் தி சிட்டி, பிகோன் டெமென்ஸ் ஆகியவை ஆகும்.