ஞாயிறு, 28 ஜூன், 2015

மொகலாய வரலாறு 7

                                              ஒரு தருணத்தில் ராணா மயிரிழையில் உயிர் தப்பினார். அவனின் படைகள் சிறைப்பிடிக்கப்பட்டு, சிலர் கொல்லப்பட்டனர். ராஜ புத்திரர் கள் வெகுவேகமாகத் தோல்வியை நோக்கி நகர்ந்தனர். மேலும், ஹசன் கான் மேவதி, ராவல் உதை சிங் துங்கார்புர் மற்றும் சில தலைவர்களும் கொல்லப் பட்டனர். சொந்ததேசத்தில் வீரத்தின் விளைநிலங்களாக இருந்த ராஜ புத்திரர் களுக்கு இது எதிர்பாராத தோல்வியாக இருந்தது. அதேசமயம், கன் வாஹ் வெற்றி பாபரின் எதிர்கால இந்தியப் பேரரசின் உதயத்திற்கு மிகப்பெரிய வெளி ச்சத்தை ஏற்படுத்தியதாகவும், மேலும் பல பகுதிகளை வென்று இந்தியாவில் பலமான பேரரசை நிர்மாணிக்க உதவியதாகவும் பேராசிரியர் ரஷ்ப்ரூக் வில் லியம் தெரிவிக்கிறார். மிச்சமிருந்த ராஜபுத்திரர்கள் சந்தேரியின் மதிம்ராவ் என்பவரின் தலைமையில் ஒன்று கூடினார்கள். 1528 ல் மதிம்ராவை வென்று சந்தேரியைக் கைப் பற்றினார். இதன்பிறகு, ராஜபுத்திரர்களின் கடைசி நம்பிக் கையாக இருந்த ராணா சிங் மரணமடைந்தார். இதற்கிடையில், ஆப்கானிஸ் தானில் தலைதூக்கிய புரட்சியை அடக்கினார். இந்த தொடர் வெற்றிகள் பாப ரை ‘மாஸ்டர் ஆஃப் ஹிந்துஸ் தான்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுத்தந்தது.
                                                         பாபரின் பேரரசு காபூல், பஞ்சாப், பெங்கால், பீஹார், ஔத், குவாலியர் மற்றும் மேவார் அடங்கிய பெரிய பகுதியான ராஜபுதனா ஆகியவை சேர்ந்ததாக இருந்தது. வடக்கில் ஹிமாலயாவிலிருந்து தெற்கில் குவாலியர் வரையிலும், மேற்கில் பஞ்சாபிலிருந்து கிழக்கில் பெங்கால் வரை யிலும், பரவி இருந்தது. தைமூரியர்கள் கலை, கலாச்சாரத்தில் மிகவும் உலகப் பிரசித்தி பெற்றவர்கள். அவர்களின் சமர்கண்ட் நகரம் மேற்கு, மத்திய ஆசியா வின் கலாச்சார மையமாக இருந்தது. மொகலாயர்கள் அந்த பாரம்பரிய அரா பிய துருக்கிய கலை நுணுக்கங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்து, இந்து முஸ்லீம் கலாச்சாரத்திற்கு வித்திட்டார்கள். பாபர் இராணுவத்திறமையும், சிறந்த போர்வீரராகவும், நிர்வாகத் திறமை வாய்ந்தவராகவும், கலை, கவிதை களை ரசிப்பவராகவும் இருந்தார். அழகான தோட்டங்களை நிர்மாணித்து அதில் விருந்துகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி ரசிப்பார். போர் வீரராக இருந்த அதேநேரத்தில் மிதமிஞ்சிய பலசாலியாகவும் இருந்தார். உடற்பயிற்சி க்காக சர்வசாதாரணமாக மலை ஏறுவார்.
                                          பாபரின் ஆட்சியில்தான் டெல்லியிலிருந்து காபூல் வரை கிரேட் டிரங்க் ரோடு என்னும் பரந்தசாலை சீரமைக்கப்பட்டது. மிகக்குறிகிய காலத்தில் ஆக்ராவில் தோட்டங்கள், கட்டிடங்கள், சாலைகள், கிணறுகள், மர ங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் கட்டி னார். இவரின் கவிதைத்தொகுப்பு பாபர் நாமா என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து, அக்பரின் காலத்தில் பெர் ஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. விரைவில் ஆப்கானிஸ்தான் மற் றும் இந்தியாவின் மற்ற பகுதிகளையும் வென்றார். தன் ஆட்சியின் கீழிருந்த பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை அறிபவராக இருந் தார். பொதுப்பணித்துறையை அறிமுகப்படுத்தி பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டினார். பாபர் இன்னும் கூட இந்தியாவின் பெரும் பகுதிகளை வெல்லக்கூடி யவர்தான். பாபர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் தான் ஒரு மிகச் சிறந்த நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதை நிரூபித்திருப்பார் என்று பரஷ்ப் ரூக் வில்லியம் ஆணித்தரமாகக் கூறுகிறார்
                                                       இதற்கு ஆதாரமாக பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்த பாதுகாக்கப்பட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டுகிறார். அதன் விவரமானது : (நான் அப்படியே மொழி பெயர்த்திருக்கி றேன்)
இறைவன் புகழுக்குறியவன்.
                                    ஸாஹிருத்தீன் முஹம்மது பாபர் பாதுஷாவின் ரகசிய மர ணசாசனமான இது இளவரசர் நசீருத்தீன் முஹம்மது ஹுமாயுனுக்கு, இறை வன் அவர் ஆயுளை நீட்டிக்கச் செய்யட்டும்.  
பேரரசின் ஸ்திரத்தன்மைக்காக எழுதப்படுவது.
                                               ஓ என் மகனே ஹிந்துஸ்தான் என்ற இந்த பிரதேசம் பல மதக்கோட்பாடுகளை கொண்டது. நேர்மையானவனும், புகழுக்குரியவனும், உயர்ந்தோனுமாகிய இறைவன் இந்த பிரதேசத்தை ஆளும் அதிகாரத்தை நம க்கு தந்திருக்கிறான். நமது இதயம் தூய்மையாக இருந்து  எல்லா மதத்தவர் களின் மீதும் நம்பிக்கை வைத்து நியாயமான நீதி அனைவருக்கும் கிடைத்திட வேண்டும், குறிப்பாக பசுவை பலி இடுவதிலிருந்து, விலகி நில் அப்போதுதான் இந்த மக்களின் இதயங்களை வெல்லமுடியும். கோயில்களையும், மடங்களை யும் சேதப்படுத்தாதே. மக்களுக்கு பயனுள்ள தீர்ப்பை வழங்கு, திருப்பி மக்கள் பயனளிப்பார்கள். இஸ்லாமின் முன்னேற்றம் அன்பெனும் ஆயுதத்தால் ஏற்பட வேண்டுமே தவிர, கொடுமை எனும் ஆயுதத்தால் ஏற்படக்கூடாது. ஷியா மற் றும்  சுன்னி பிரிவுகளில் இருக்கும் வேறு பாட்டைத் தவிர்த்துவிடு, அவைகள் இஸ்லாமின் பலவீனங்கள். அதை மக்களிடமே விட்டுவிடு. அவர்கள் தண்ணீர், காற்று, தீ, மண் போன்றவற்றி லிருந்து மனித உடலின் வியாதிக்கு எது பாதுகா ப்பென்று கருதுகிறார்களோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஹஸ்ரத் தைமூர் சாஹிப் குர்தினியின் போதனைகளை நினைவில் வைத்துக்கொள். அதனால், அரசாங்க விவகாரங்களில் முதிர்ச்சி பெறுவாய்.
  1 ஜமாதி உல் அவ்வல் 935 ஹிஜ்ரி 11, ஜனவரி 1529.
                                              துருக்கிய, மங்கோலிய இரத்தப்பரம்பரையில் வந்த ஒரு மன்னன் சம்பந்தமில்லாத பலதரப்பட்ட மதங்களைச்சார்ந்த மக்களை வேறொ ரு நாட்டில் ஆளப்போகும் தன் மகனுக்கு கூறிய அறிவுரையைப் பாருங்கள். பெர்ஷிய மொழியில் உள்ள இதன் மூல ஆவணம் போபாலில் ஹமிதா நூலக த்திலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் போபாலைச் சேர்ந்த நவாப்சாஹிப் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இதை என்.சி. மெஹ்தா என்பவர் அல ஹாபாத்தில் வெளியிட்டார்.            
                                                   மெய்விர்ஸ் என்பவரின் சுயசரிதத்தில் பாபரைப் பற்றி பெருவாரியான தகவல்களைத் தந்திருக்கிறார். அதில் பாபருக்கு கலையின் மீதான ஈடுபாட்டை தெளிவாக வெளியிட்டிருக்கிறார். தன் அரண்மனையில் தினசரி 680 கல்வெட்டுப் பணியாளர்களையும், ஆக்ரா, சிக்ரி, பைனா, தோல்பூர், குவாலியர் மற்றும் காயில் போன்ற இடங்களுக்கு 1491 கல்வெட்டுப் பணியாள ர்களையும் வேலைக்கு அமர்த்தி கட்டிடப்பணிகளை நிர்வகிப்பாராம். பானிபட் டில் காபுல்பாக் என்ற இடத்திலுள்ள கிரேட் மசூதியும், சம்பலில் உள்ள ஜாமியா மசூதியும் அப்படிக் கட்டப்பட்டவைதானாம். பாபர் பிறப்பிலேயே கவிஞராக இருந்திருக்கிறார். இவரின் கவிதைத் தொகுப்புகளான துஸ்க் இ பாபரியைப் பற்றி அபுல் ஃபஸ்ல் என்பவர் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார்.
                                               முபின் என்றழைக்கப்பட்ட இவரின் பெர்ஷிய காதலைப் பற்றிய நூல் அந்தக்காலத்தில் மிகவும் புகழப்பட்டது. யாப்பிலக்கணத்தைப் பற்றி எழுதிய முஃபஸ்ஸிலும், தரிதில் இ ராஷிதி போன்ற நூல்களும் எழுதி யுள்ளார். சித்திரங்களிலும் மிகவும் ஈடுபாடுள்ளவராக இருந்திருக்கிறார். தனது தைமூரிய மூதாதையர்களின் நூலகங் களிலிருந்து அற்புதமான சித்திரங் களை டெல்லிக்கு கொண்டு வந்திருக்கிறார். இடையில் நாதிர்ஷா என்பவரின் படையெடுப்பால் பெர்ஷியாவுக்கு கொள்ளையடித்துச் செல்லப்பட்டது. இசை யிலும், தோட்டக்கலையிலும் ஆர்வமுள்ளவராக இருந்திருக்கிறார். பாக் இ வஃபா, பாக் இ கிலன் என்ற அற்புதமான தோட்டங்களை காபூலுக்கு அருகில் அமைத்திருந்தார். ராம் பாக், ஜொஹ்ரா பாக் தோட்டங்களையும் ஆக்ராவில் அமைத்திருந்தார். 1530 ல் கடுமையான கோடையில் மகன் ஹுமாயுன் மோச மான நோயில் விழுந்தார். தன் மகனின் நோயின் காரணமாக பாபர் மிகவும் வருத்தப்பட்டார். தன்னிடமிருந்த விலையுயர்ந்த சரித்திரப்புகழ் வாய்ந்த “கோஹிநூர்” வைரத்தைக்கூட தன் மகனுக்கு ஈடாகத்தருவதாக நண்பர்களி டம் கூறினார். பிறிதொரு முறை தன் உயிரைக்கூடத் தருவதாகக் கூறுகிறார். இவருக்குப்பிறகு, இவர் மகன் ஹுமாயுன் இந்தியாவின் பேரரசர் ஆனார். ஆனால், தனது சிறுவயதிலிருந்து பெரும் போராட்டத்துடன் வாழ்க்கையை துவங்கிய பாபர் வெற்றிகள் பெற்று ஒரு பேரரசை நிறுவிய வேகத்திலேயே கோக்ரா போருக்குப்பிறகு, ஓராண்டுகழித்து, 1530 டிசம்பர் 26 ல் ஆக்ராவில் மரணமடைந்தார். பாபருக்குப்பின் அவர் மகன் ஹுமாயுன் மொகலாயப் பேரர சின் மன்னர் ஆனார்.              

மொகலாய வரலாறு 6

                                         ஓமர் ஷெய்க் மிர்சாவுக்கு பாபர் தான் மூத்த பிள்ளை. இவர் தாயாரின் பெயர் கூத்லுக் நிகார் கானும். இரண்டு வயது இளையவராக ஜஹா ங்கீர் மிர்சா என்று ஒரு சகோதரர். இவரின் தாயார் பாரம்பரியமிக்க மொகல் துமான் என்ற பரம்பரையைச் சேர்ந்த ஃபாத்திமா சுல்தான் ஆவார். மூன்றாவது சகோதரர் நாசிர் மிர்சா இவரின் தாயார் அந்திஜான் நாட்டைச் சேர்ந்த உமெய்த் ஆவார். பாபரின் தாயாருக்குப் பிறந்த கான்ஸாதே பேகம் என்ற சகோதரி ஒரு வர் இருந்தார். உமெய்த் என்னும் தாயாருக்கு பிறந்த மெஹர்பானு பேகம், ஷெஹெர்பானு பேகம் என்று மேலும் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அகா சுல்தான் என்னும் அதிகாரமில்லாத தாயார் மூலம் யாத்கார் சுல்தான் என்ற சகோதரியும், சுல்தான் மக்தூம் பேகம் என்ற தாயாருக்குப் பிறந்த ருக் கையா சுல்தான் அல்லது கரகூஸ் பேகம் என்ற சகோதரியும் இருந்தார்கள். பாபரின் தாயார் கூட்லுக் நிகார் கானும் மகனுடன் பல போர்களில் உடன் சென் றார். பாபர் காபூலை வென்ற ஆறு மாதங்களில் தாயார் இறந்து போனார்.  
                                                      இவரின் உறவுக்காரர்கள் இவரைப் பதவியை விட்டு விரட்டி, இவரின் ராஜ்ஜியத்தை திருடிக்கொண்டார்கள். இவர் மீது கருணை கொண்ட சில மக்களும், சில நண்பர்களும் இவருக்கு உணவளித்து தங்க இடம் கொடுத்து ஆதரித்தனர். மூன்று முறை போரிட்டு வென்று சில மாதங்களே சமர்கண்டை வைத்திருந்தார். பின்னர் ஏழு மாத கடும் சிரமத்திற்குப்பின் பாபர் சமர்கண்டை நகரைக் கைப்பற்றினார். உடன் கடுமையான நோயில் விழுந் தார். நோய் வாய்பட்டிருந்த இந்த தருணத்தைப் பயன்படுத்தி, இவரின் பேரா சைப்பிடித்த மந்திரி ஒருவன் பாபர் இறந்துவிட்டதாகப் புரளி கிளப்பி ஃபர்கா னாவை  கைப்பற்ற சமர்கண்டிலிருந்து படையுடன் சென்றான். அவன் கிளம் பியவுடன் அவனின் உறவினன் அலி என்பவன் 1498 ல் சமர்கண்டை அபகரித் துக் கொண்டான். பின் 1499 ல் ஃபர்கானாவையும் கைப்பற்றிக் கொண்டான். ஆனால், உஸ்பெஸ்கிஸ்தான் அவனை அமைதியாக ஆட்சி செய்ய விடவில் லை. அவன் 1501 ல் கடுமையான போரில் தோற்கடிக்கப்பட்டு உயிர் தப்பி ஃபர் கானாவையும், சமர்கண்டையும் இழந்து ஓடினான்.
                                                    நோயிலிருந்து மீண்டு வந்த பாபர் இதன்பிறகு  1502 ல் இந்துகுஷ் பகுதியில் காபூலைக் கைப்பற்ற முயற்சி மேற் கொண்டார். இவரின் உறவினர்கள் ஆண்ட காபூலை இவர்களின் வம்சாவழியில் வரும் ஒரு இளவ ரசன் மட்டுமே ஆளமுடியும் என்று கேள்விப்பட்டார். 1504 ல் கடும் போராட்டத் திற்கு  பின் காபூலை வென்றெடுத்தார். தங்கள் மூதாதையர்களின் பாரம்பரிய முறைப்படி காபூலில் தோட்டம் அரண்மனை அமைத்து ஆட்சி புரியத் தொடங் கினார். மேற்கில் முதலாம் இஸ்மாயில் என்ற மன்னரின் தலைமையில் சக்தி வாய்ந்த பெர்ஷிய பேரரசும், வடக்கில் ஷைபானிகான் தலைமையில் முரட் டுத் தனமான உஸ்பெஸ்கிஸ்தான் அரசும் இருந்தது. இந்த இருஅரசுகளைத் தவிர்த்தே பாபர் இந்தியாவின் மீது வெற்றி கொள்ள விருப்பம் கொண்டார். அதைத் தொடர்ந்து கந்தஹார், ஹிராத், பதக் ஷான் ஆகிய நகரங்களையும் வென்றார். 1513 ல் பெர்ஷியாவின் ஷாவுடன் இணைந்து போகரா மற்றும் சமர்கண்டை மீண்டும் வென்றார். இவரையும் உஸ்பெஸ்கிஸ்தான் மக்கள் நிம்மதியாக ஆளவிடவில்லை. காரணம் இவர் ஷியா பிரிவு முஸ்லிம்களான அவர்களுக்கு எதிரான சுன்னி பிரிவைச் சேர்ந்தவராக இருந்தார். 24 காவது வய தில் முகச்சவரம் செய்யத் துவங்கினார். துருக்கிகள் முதன்முதலில் முகச்சவ ரம் செய்வதை சகவயது வாலிபர்களுடன் குதூகலமாக கொண்டாடுவார்கள். 1505 ஷாபான் மாதத்தில் ஹிந்துஸ்தானை வெல்லும் எண்ணத்துடன் காபூலி லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அதினாபூர் வந்தடைந்தார். பாபர் கண்ட மனிதர்கள், புல், மரங்கள், மிருகங்கள் அனைத்திலும் ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார்.
கைபரைக் கடந்து ஜாம் என்ற இடத்தில் முகாமிடு கிறார். பெஷாவரில் குர்கத்ரி என்ற இடத்திற்கு இந்துக்கள் தலைமுடி காணிக் கை செலுத்த வருவார்கள் என்று அறிகிறார்.  தங்களுக்கு ஹிந்துஸ்தானுக்கு வழிகாட்டியாக வந்த மாலிக் பு சயீத் கமரி என்பவரிடம் குர்கத்ரியைப் பற்றி விசாரித்தார். அவர் சரியான விளக்கம் சொல்லவில்லை.
                                                         கஸ்னினிலும், கோரசானிலும் தனது அதிகாரத்தை நிலை நாட்டிவிட்டு, சற்று பலத்துடன் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய இருந் தார். அப்போது டெல்லியை ஆப்கானைச் சேர்ந்த லோடிகள் ஆண்டு வந்தனர். இவர்களுக்கு முஸ்லீம் புரட்சி குழுக்களிடமிருந்தும், ராஜபுத்திர இந்து ஆட்சி யாளர்களிடமிருந்தும் மிரட்டல்கள் இருந்தன. திறமை வாய்ந்த ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி மரணித்திருந்தார். அவருக்குப்பிறகு, அவரின் முட்டாள் மகன் இப்ராஹிம் லோடி டில்லியில் பதவியிலிருந்தார். இவரின் திறமையற்ற ஆட் சியும், முரட்டுத்தனமான நடவடிக்கைகளும் இப்ராஹிம் லோடியின் உறவின ர்களுக்கு பிடிக்காமல் போனது. மேலும், அதிகாரிகளையும் தரக்குறைவாக நடத்தியதால் அவர்களும் இவர் மீது வெறுப்பாக இருந்தனர். இதனால் இப்ரா ஹிம் லோடிக்கு எதிராக இரகசிய திட்டம் தீட்டினார்கள். பெங்கால், ஜான்பூர், மால்வா, குஜராத் மற்றும் சில பிரதேசங்கள் சுதந்திரமாகிப் போயின. கிழக்கு மாநிலங்களான குத், பீஹாரில் மன்னனுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். இப்ரா ஹிம் லோடியின் உறவினர் அலாவுத்தீன் புரட்சியில் ஈடுபட்டு, ஏற்கனவே பாபரை இந்தியாவுக்கு வர ஆலோசனை கூறியிருந்தார். ஏற்கனவே நான்கு முறை இந்து ஆற்றின் கரையைக் கடந்து இந்தியா வர முயற்சித்த பாபர் ஏதே னும் ஒரு காரணத்தால் தோல்வி அடைந்து திரும்பியவர்.
                                                    1525 ல் இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கருதிய பாபர் லாஹூர் வழியாக இந்தியா வந்து தௌலத்கானுடன் போரிட்டு பஞ்சாபைக் கைப்பற்றி, டெல்லியை நோக்கி முன்னேறினார். இப்ராஹிம் லோடியும் படைகளை ஒன்று திரட்டி பாபரை ஆக்ராவில் எதிர்த்தான். 1526 ல் இரு படைகளும் நேருக்குநேர் சரித்திரப்புகழ் வாய்ந்த பானிபட் என்ற இடத்தில் சந்தித்தன. பாபர் தனது 12,000 வீரர்கள் அடங்கிய படையை திறமையாக திட்ட மிட்டு அமைத்திருந்தார். இப்ராஹிம் லோடி 100,000 வீரர்கள் அடங்கிய பிரமா ண்டமான படையுடன் வந்து போரிட்டான். பாபரின் பீரங்கி வீரர்கள் மிகச் சரி யான இடத்தில் நின்று போராடியதால், பாபர்,இப்ராஹிம் லோடியை வென்று டெல்லி மற்றும் ஆக்ராவைக் கைப்பற்றினார். 1526 ஏப்ரல் மாதம் 22 ந் தேதி வெள்ளிக்கிழமை டெல்லியின் தலைமை மசூதியின் உரை புதிய பேரரசர் பாப ரின் பெயரில் துவங்கியது. அந்த முதல் வெற்றி சாதாரணமானது அல்ல. எதிர் காலத்தில் இந்தியா என்ற பரந்ததேசத்தை ஆளப்போகும் அவர் சந்ததிக்களுக் கான முதல் வெற்றி. இந்த நிலையில் இப்ராஹிம் லோடியின் தாயார் பாபரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்தார். அது நடந்திருந்தால், இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரி மாறியிருக்கும். பாபருக்கு ஆரம்பத்தில் நிறைய எதிர் ப்பு கிளம்பியது. இவருக்கெதிராக நாடெங்கும் கலவரங்களும் நடந்தன. பாபர் தனது சாமர்த்தியமான பதவியேற்பு விழா பேச்சில் அனைத்தையும் அடக்கி னார். தன் எதிர்காலமும், மரணமும் இந்தியாவில் தான் நடக்குமென்றும், மிகச்சிறந்த ஆட்சியைத் தன்னிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கலாம் என்று உறுதிபட பேசினார்.
                                                     இவரின் இந்த பேச்சு இந்தியாவின் ராஜபுத்திரர்களை உசுப்பிவிட்டது. ராஜபுத்திரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருந்தார்கள். இந்தியாவின் ஆட்சி ஆப்கானைச் சேர்ந்த ஒருவருக்கும் பங்காகிப்போனதால், திட்டமிட்ட அனைத்து சிறு இந்து இளவரசர்களும், மேவாரின் ராஜாவும் ராணா சிங் தலைமையில் ஒன்று கூடினார்கள். இந்தியாவின் பல பகுதிகளை சிறு மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். ராஜபுத்திர வம்சத்தில் ராணா புகழ் பெற்றவ ராக இருந்தார். மேவார் ராஜா மற்றும் அஜ்மீர், சிக்ரி, ரைசின், புண்டி, சந்தர், கார் காவுன், ராம்பூரா இளவரசர்கள் ராணாவுக்கு தலை வணங்குபவர்களாக இருந் தார்கள். ராணா பாபரை சந்திப்பதற்கு முன்னாலேயே நூறு போர்களைச் சந்தி த்தவர். எண்பது வீரத்தழும்புகளை உடல் முழுதும் பெற்றிருந்தார். ஒரு கையையும், ஒரு காலையும், ஒரு கண்ணையும் போர்களில் இழந்திருந்தார். 1527 பிப்ரவரியில் ராணா முகாமிட்டிருந்த ஃபதே பூருக்கு அருகிலிருந்த சிக்ரி என்ற கிராமத்திற்கு, பாபர் ஆக்ராவிலிருந்து புறப்பட்டார். முதல் தாக்குதலி லேயே பாபரின் படையை ராஜபுத்திரர்கள் திருப்பி விரட்டினர். பாபரின் படை நட்சத்திரக் கூட்டம் போல் சிதறியது. இக்கட்டான ஒரு தருணத்தில் பாபரின் இரத்தக்குழாய் ஒன்று வெட்டுப்பட்டு, எப்போதுமே பயன் பெறாது போனது. 

மொகலாய வரலாறு 5

         ஸஹீருத்தீன் முஹம்மது என்ற பாபர்
கூ.செ.செய்யதுமுஹமது
                                                    “மெமாயர்ஸ் ஆஃப் ஜஹீர் எத் தின் முஹம்மத் பாபர்” என்று பாபரால் கைப்பட துருக்கி மொழியில் எழுதப்பட்ட மூலப் புத்தகத்தை ஜான் லெய்டென் மற்றும் வில்லியம் எர்ஸ்கீன் ஆகியோர் 1826 ல் ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கப்பட்டு, இந்தியன் சிவில் சர்வீசிலும், யூனிவர்சிடி ஆஃப் டப்ளினில் அரபிக், பெர்ஷியன் மொழி மற்றும் இந்திய வரலாற்றுப் பேராசிரிய ராக இருந்த ஸர். லூகாஸ் கிங் அவர்களால் மறுபதிப்பும் செய்யப்பட்ட புத்தகத் தின் தமிழ் மொழி மாற்றம் இந்த வரலாறு. அவர், ஜஹீருத்தீன் முஹமது பாப ரின் உடை, உணவு மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். சென்ற நாடுகள், அதன் காட்சிகள், தட்பவெப்ப நிலை, கலைநயம், மனிதர்களின் குணாதிசயம் ஆகியவற்றைப் பற்றி பாபர் விளக்கி இருப்பதை படிக்கும் போது நாம் உடன் இல்லையே என்று வருத்தம் தருவதாக லூகாஸ் கிங் புகழ்கிறார். இதன் ஆதி பெர்ஷிய மொழி மூலப்புத்த கம் 1590 ல் அப்த் உர் ரஹீம் என்பவரால் எழுதப்பட்டது. இதன் இரண்டு புத்தகங் கள் பாரீஸ் ப்ப்ளிக் லைப்ரரியிலும், ஒரு புத்தகம் தன்னிடமும், ஒரு புத்தகம் இந்திய அரசாங்கத்திடமும் (பு. எண்:2989), ஒரு புத்தகம் பிரிட்டிஷ் அருங்காட்சி யகத்திலும் இருப்பதாக லூகாஸ் கிங் கூறுகிறார். பயண்டாஹ் கான் மற்றும் முஹம்மது கூலியின் 1586 ம் வருட இதே புத்தகம் இடங்களும், பெயர்களும் மற்றும் முழுமை பெறாத நிலையில் (6588 II- 913) இந்திய அரசில் இருப்பதாக வும், 1590 ல் ஷெய்க் ஸெய்னுத்தீன் க்வாஃபி அவர்களால் எழுதப்பட்ட இதே புத்தகம் முடிக்கப்படாத நிலையில் (1999-26202) ஒன்று உள்ளதாகவும் சொல்கி றார். 1817 ல் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட புத்தகம் ஏனோ வெளியிடவில்லை.
அப்போதைய ஆசியா கண்டம் இரு பகுதிகளாக இருந்தது. சீனாவிலிருந்து சங்கிலித் தொடர் போல் மலைகள் கிழக்கிலும், கருங்கடலும், மெடிட்டரேனியன் பகுதியுடன் மேற்கிலும், வட மேற்கில் மலைப் பகுதிகளாக அஸ்ஸாம், பூடான், நேபால், ஸ்ரீநகர், திபெத் மற்றும் லடாக் பகுதிகள் இருந்தன. மேற்கிலிருந்து வடக்காக பெஷாவர் மற்றும் காபூல் இருந்தது. மேற்கிலிருந்து தென் மேற்காக சிறு சிறு மலைகளாக பிரிந்து கோரசான் பகுதியை தனியாக்கி யது. கிழக்கு காஷ்மீர் பகுதி இந்துக்கள் நிறைந்ததாக இருந்தது. மேற்கு காஷ் மீர், தார்த், திபெத்பால்டி, சிறிய திபெத், சிட்ரால் மற்றும் காஃபிர்ஸ்தான் பகுதி களில் கோவார், பஞ்சாபி, ஷினா, காஃபிர் போன்ற மொழிகள் பேசிய மக்கள் கலந்திருந்தனர்.  
                                                                   முஸ்லிம் பேரரசர் பாபர் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர், இவர் திட்டமிட்டு வெற்றிகரமாக மொகலாயப் பேரரசை இந்தியா வில் நிறுவினார். பாபரின் தந்தை பெயர் உமர் ஷெய்க் மிர்ஸா, மத்திய ஆசியப் பகுதியின் தைமூர் இனத்தைச் சேர்ந்தவர். ஃபர்கானா என்ற மாகாணத்தின் ஆட்சியாளராக இருந்தார். பாபர் தந்தை வழியாக தைமூர் இனத்தையும், தாயின் வழியாக மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கானின் பரம்பரையையும் சேர்ந்தவர். இவர் தைமூரித் மற்றும் சகாதாய்-துர்கிக் என்னும் வழிமுறையி லேயே அறிமுகப் படுத்தப்பட்டார். இவரின் வீரம், பயிற்சி மற்றும் கலாச்சாரம் பெர்ஷிய கலாச்சாரத்தை ஒத்து இருந்தது. பாபர் 1483 பிப்ரவரி மாதம் 24 ந் தேதி இன்றைய உஸ்பெஸ்கிஸ்தான் பகுதியில் அண்டிஜான் என்ற இடத்தில் பிறந் தார். இவர் சார்ந்த மங்கோலிய வம்சம் துருக்கியையும், பெர்ஷியாவையும் ஆண்டது. இவரின் பெயர் ஸஹிருத்தீன் முஹம்மது ஆகும். பாபர் என்ற இவ ரது விருப்பப்பெயர் பெர்ஷிய மொழியில் சிங்கத்தைக் குறிக்கும்.
                                                  இந்தியாவில் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய பாபர் அவர்களின் ஆரம்ப வாழ்க்கை என்னதான் மன்னனின் மகனாய் இருந்தாலும் அவ்வளவு ஆனந்தமாக இருக்கவில்லை. துரோகம், கவலை, உயிர் காக்கும் போராட்டம் என்று வயதிற்கு மீறிய சிரமத்தில் இருந்தது. 1494 ல் தனது பனிரெ ண்டாவது வயதில் தந்தைக்குப் பிறகு, ஃபர்கானா மாகாணத்தின் மன்னனாக முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தார். ஃபர்கானாவைச் சுற்றியுள்ள சிறு சிறு பகுதிகளை இவரின் இரு பிரிவு குடும்பவாரிசுகளே போட்டி பொறாமையு டன் ஆண்டார்கள். பல ஆசிய பகுதிகளை வெற்றிகரமாக ஆண்ட மன்னரான தைமூர் பேக் 1405 ல் சிர் ஆற்றின் அருகில் ஓட்ரார் நகரத்தில் இறந்து போனார். இவரின் வாரிசுகள் ஆளத்தகுதி இல்லாமல் ஒற்றுமையின்றி இருந்தார்கள். இறக்கும் தருவாயில் மகன்களையும், மற்ற உறவினர்களையும் சிறு பகுதி யாக பிரதேசங்களைப் பிரித்து கொடுத்து ஆளச் செய்தார். இவரது பேரன் கலீல் என்பவர் பாட்டனாரின் தலைநகரான சமர்கண்டிலிருந்து ஆட்சி செய்தார். இவ ரை சுற்றி இருந்தவர்களே கலீலை கொன்று விடுகிறார்கள்.    
                                                     இதைக் கேள்விப்பட்ட கலீலின் மாமனும், தைமூரின் கடைசி மகனுமான ஷாருக் 1415 ல் தான் ஆண்டு கொண்டிருந்த கோரசான் பகுதியிலிருந்து வெகுண்டு வந்து  கலகக்காரர்களை அடக்கி சமர்கண்டை கைப்பற்றினார். 1446 ல் இறக்கும் வரை ஆண்டு வந்தார். அவருக்குப் பிறகு அவ ரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை ஆங்காங்கிருந்த அவர் மகன்களும் கவர்னர்களும் பங்கு போட்டு ஆண்டார்கள். இவரின் பகுதி மூத்த மகனான உலுக் பேக் வசம் வந்தது. உலுக் பேக் திறமையுடன் சமர்கண்டை ஆண்டார். பதவிக்கு வந்தவுடன் கோரசானை அபகரித்த சகோதர் மகன் அலா உத் தௌ லத் மீது முர்காப் ஆற்றின் அருகே போரிட்டு விரட்டினார். அலா உத் தௌலத் தன் சகோதரன் பாபர் மிர்சாவிடம் ஓடி அடைக்கலம் அடைந்தான். பாபர் மிர்சா தனது பாட்டனார் ஷாருக் காலத்திலிருந்து கஸ்பியனின் தென் கிழக்கில் உள்ள ஜோர்ஜான் (அல்லது கோர்கான்) என்ற பகுதியை ஆண்டு வந்தான். தன் சகோதரன் அலா உத் தௌலதுக்கு உதவும் வண்ணம் பாபர் மிர்சா உலுக் பேக் மீது படையெடுத்து வந்தான். ஆனால் படுதோல்வி அடைந்து தன் சொந்த தலைநகரமான அஸ்தராபாத்தையும் இழந்தான். இரு சகோதரர்களும் உயிர் பிழைத்து ஈராக்கை ஆண்ட மற்றொரு சகோதரன் முஹம்மது மிர்சாவிடம் ஓடினார்கள். உலுக் பேக் திரும்பிய பிறகு தான் பாபர் மிர்சா கோரசான் வந்தார். இதற்கிடையே உலுக் பேக்கின் சொந்த மகன் அப்துல் லதீஃப் என்பவர் கலகம் செய்து பால்க் பகுதியைப் பிடித்துக் கொண்டார். உலுக் பேக்கின் துரதிஷ்டம் முஹம்மது மிர்சாவின் மகன் அபு சயீத் மிர்சா, தைமூரின் இன்னொரு பேர ரும், பாபரின் பாட்டனாருமான மிரான் ஷா என்பவரும் எதிர்த்தார்கள். முஹம் மது மிர்சாவின் மகன் அபு சயீதை, உலுக் பேக் தான் ஆதரவும், பாதுகாப்பும் தந்து படிக்க வைத்து ஆளாக்கினார். இவர்களை எதிர்க்கும் போது, சொந்த மகன் அப்துல் லதீஃபால் தந்திரமாக உலுக் பேக் கொல்லப்பட்டார். பின் அப்துல் லதீஃப் அபு சயீத் மிர்சாவை வென்று சிறை பிடித்து சமர்கண்டைக் கைப்பற்றி னார்.
   அபு சயீத் மிர்சா சிறையிலிருந்து தப்பித்து பொகாராவில் தஞ்சமடைந்தார். அப்போது அப்துல் லதீஃப் சொந்த இராணுவத்தினரின் கலகத் தால் கொல்லப்பட்டு, ஷாருக்கின் இரண்டாவது மகன் இபுராஹீமின் மகன் அப் துல்லாஹ் ஆட்சிக்கு வந்ததாக அறிகிறார். இதை ஒரு சந்தர்ப்பமாகக் கருதிய அபு சயீத் மிர்சா தானிருந்த பால்கிலேயே கலகம் செய்து பால்கைக் கைப்பற்றி அங்கிருந்து சமர்கண்டின் மீது படையெடுத்தார். ஆனால் தோல்வியுற்று துர்கி ஸ்தான் (இது தாஷ்கண்டின் கீழுள்ள பகுதி) ஓடினார். அடுத்த ஆண்டு பாலை வன உஸ்பெக்குகளை துணைக்கு அழைத்துக் கொண்டு, சமர்கண்டில் அப்துல் லாஹ்வை எதிர்த்து கடுமையாகப் போரிட்டு மொத்த மாவெரல்நெஹாரையும் வென்றார். பாபர் மிர்சா தந்திரமாக அலா உத் தௌலத்தை கைது செய்து தீக்கம் பியினால் கண்களை குருடாக்க உத்தரவிடுகிறார். எதேச்சையாகவோ அல் லது தண்டிப்பவனின் கருணையாலோ அலா உத் தௌலத்தின் கண் குருடாக வில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அலா உத் தௌலத் தப்பித்து விடுகிறார். கோரசா னில் 1457 ல் அளவுக்கதிகமான மது அருந்தியதால் நோய்வாய்பட்டு பாபர் மிர்சா மரணமடைந்தார். இப்போது அபு சயீத் மிர்சா மீண்டும் கோரசானை வெல்ல முயன்றார். இதற்கிடையே துருக்கிய தலைவர் ஜிஹான் ஷா என்பவ ரும் கோரசானில் நுழைய இருவருவரும் சமாதானத்திற்கு முன் வந்தனர்.
         செம்னான் நகரை எல்லையாகக் கொண்டு அப்புறம், இப்புறம் என்று பிரித்துக் கொண்டார்கள். இதுவரை சொன்னதுக்கே நீங்கள் தளர்ந்திருப்பீர்களோ என்று அச்சப்படுகிறேன். ஸஹீருத்தீன் பாபர் வெறுமனே இந்தியாவை ஆண்டவரில்லை. சாம்ராஜ்ஜியம் அமைத்தவர். அதனால் பாரம் பரிய பிண்னணியும், சூழ்நிலையும் மிக முக்கியம் என்பதாலேயே விளக்க வேண்டிய அவசியமாகிறது. இன்னும் நிறைய இருந்தாலும் நேரடியாக பாபரி ன் வருகைக்குள் செல்வோம்.
சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் பாபரின் உறவினர்கள் கௌரவத்திற்காகவும், அடாவடித்தனத்திற்காகவும் ஆட்சி செய்து வந்தனர். சமர்கண்டில் சுல்தான் அஹ்மது மிர்சாவும், டாஷ்கண்டில் சுல்தான் மஹ்மூத் கானும் ஆட்சி செய்து கொண்டிருந்த சூழ்நிலையில் தந்தை சுல்தான் ஒமர் ஷெய்க் மிர்சாவின் மரணத்திற்கு ஸஹீருத்தீன் முஹம்மது என்ற பாபர் ஃபர் கானாவில் ஆட்சிக்கு வந்தார். முஹர்ரம் 6 ல் ஃபிப்ரவரி 14 1483ல் பாபர் பிறந் தார். ஐந்து வயது ஆனபோது சமர்கண்டில் சுல்தான் அஹ்மத் மிர்சாவின் மகள் இளவரசி ஆயிஷா சுல்தான் பேகமுடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட் டது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக சொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வாஸ்கோடா காமா இந்தியாவில் கால் பதித்ததற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபர் ஃபர்கானாவில் ஆட்சிக்கு வந்தார். ஃபர்கா னாவின் கிழக்கில் காஷ்கரும், மேற்கில் சமர்கண்டும், தெற்கில் மலைகளைத் தொடர்ந்து பதக் ஷானும், வடக்கில் புராதன நகரங்களான அல்மாலி(G)க் (ஆப் பிள் மரங்கள் வளரும் இடம்), அல்மாட்டு, யாங்கி ஆகியவை இருந்தன. இந் நகரங்கள் சரித்திர ஆய்வாளர்களால் ஓட்ரார் என்றும் சமீபகாலங்களில் உஸ் பெக் என்றும் சொல்லப்படுகிறது. ஃபர்கானா நாடு சிறியதென்றாலும், தானியங் களும், பழவகைகளும் விளைந்தன. சமர்கண்டின் புறம் வெளிநாட்டு எதிரிகள் நுழைவதற்கு ஏதுவாய் இருந்தது.