ஞாயிறு, 28 ஜூன், 2015

மொகலாய வரலாறு 7

                                              ஒரு தருணத்தில் ராணா மயிரிழையில் உயிர் தப்பினார். அவனின் படைகள் சிறைப்பிடிக்கப்பட்டு, சிலர் கொல்லப்பட்டனர். ராஜ புத்திரர் கள் வெகுவேகமாகத் தோல்வியை நோக்கி நகர்ந்தனர். மேலும், ஹசன் கான் மேவதி, ராவல் உதை சிங் துங்கார்புர் மற்றும் சில தலைவர்களும் கொல்லப் பட்டனர். சொந்ததேசத்தில் வீரத்தின் விளைநிலங்களாக இருந்த ராஜ புத்திரர் களுக்கு இது எதிர்பாராத தோல்வியாக இருந்தது. அதேசமயம், கன் வாஹ் வெற்றி பாபரின் எதிர்கால இந்தியப் பேரரசின் உதயத்திற்கு மிகப்பெரிய வெளி ச்சத்தை ஏற்படுத்தியதாகவும், மேலும் பல பகுதிகளை வென்று இந்தியாவில் பலமான பேரரசை நிர்மாணிக்க உதவியதாகவும் பேராசிரியர் ரஷ்ப்ரூக் வில் லியம் தெரிவிக்கிறார். மிச்சமிருந்த ராஜபுத்திரர்கள் சந்தேரியின் மதிம்ராவ் என்பவரின் தலைமையில் ஒன்று கூடினார்கள். 1528 ல் மதிம்ராவை வென்று சந்தேரியைக் கைப் பற்றினார். இதன்பிறகு, ராஜபுத்திரர்களின் கடைசி நம்பிக் கையாக இருந்த ராணா சிங் மரணமடைந்தார். இதற்கிடையில், ஆப்கானிஸ் தானில் தலைதூக்கிய புரட்சியை அடக்கினார். இந்த தொடர் வெற்றிகள் பாப ரை ‘மாஸ்டர் ஆஃப் ஹிந்துஸ் தான்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுத்தந்தது.
                                                         பாபரின் பேரரசு காபூல், பஞ்சாப், பெங்கால், பீஹார், ஔத், குவாலியர் மற்றும் மேவார் அடங்கிய பெரிய பகுதியான ராஜபுதனா ஆகியவை சேர்ந்ததாக இருந்தது. வடக்கில் ஹிமாலயாவிலிருந்து தெற்கில் குவாலியர் வரையிலும், மேற்கில் பஞ்சாபிலிருந்து கிழக்கில் பெங்கால் வரை யிலும், பரவி இருந்தது. தைமூரியர்கள் கலை, கலாச்சாரத்தில் மிகவும் உலகப் பிரசித்தி பெற்றவர்கள். அவர்களின் சமர்கண்ட் நகரம் மேற்கு, மத்திய ஆசியா வின் கலாச்சார மையமாக இருந்தது. மொகலாயர்கள் அந்த பாரம்பரிய அரா பிய துருக்கிய கலை நுணுக்கங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்து, இந்து முஸ்லீம் கலாச்சாரத்திற்கு வித்திட்டார்கள். பாபர் இராணுவத்திறமையும், சிறந்த போர்வீரராகவும், நிர்வாகத் திறமை வாய்ந்தவராகவும், கலை, கவிதை களை ரசிப்பவராகவும் இருந்தார். அழகான தோட்டங்களை நிர்மாணித்து அதில் விருந்துகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி ரசிப்பார். போர் வீரராக இருந்த அதேநேரத்தில் மிதமிஞ்சிய பலசாலியாகவும் இருந்தார். உடற்பயிற்சி க்காக சர்வசாதாரணமாக மலை ஏறுவார்.
                                          பாபரின் ஆட்சியில்தான் டெல்லியிலிருந்து காபூல் வரை கிரேட் டிரங்க் ரோடு என்னும் பரந்தசாலை சீரமைக்கப்பட்டது. மிகக்குறிகிய காலத்தில் ஆக்ராவில் தோட்டங்கள், கட்டிடங்கள், சாலைகள், கிணறுகள், மர ங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் கட்டி னார். இவரின் கவிதைத்தொகுப்பு பாபர் நாமா என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து, அக்பரின் காலத்தில் பெர் ஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. விரைவில் ஆப்கானிஸ்தான் மற் றும் இந்தியாவின் மற்ற பகுதிகளையும் வென்றார். தன் ஆட்சியின் கீழிருந்த பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை அறிபவராக இருந் தார். பொதுப்பணித்துறையை அறிமுகப்படுத்தி பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டினார். பாபர் இன்னும் கூட இந்தியாவின் பெரும் பகுதிகளை வெல்லக்கூடி யவர்தான். பாபர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் தான் ஒரு மிகச் சிறந்த நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதை நிரூபித்திருப்பார் என்று பரஷ்ப் ரூக் வில்லியம் ஆணித்தரமாகக் கூறுகிறார்
                                                       இதற்கு ஆதாரமாக பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்த பாதுகாக்கப்பட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டுகிறார். அதன் விவரமானது : (நான் அப்படியே மொழி பெயர்த்திருக்கி றேன்)
இறைவன் புகழுக்குறியவன்.
                                    ஸாஹிருத்தீன் முஹம்மது பாபர் பாதுஷாவின் ரகசிய மர ணசாசனமான இது இளவரசர் நசீருத்தீன் முஹம்மது ஹுமாயுனுக்கு, இறை வன் அவர் ஆயுளை நீட்டிக்கச் செய்யட்டும்.  
பேரரசின் ஸ்திரத்தன்மைக்காக எழுதப்படுவது.
                                               ஓ என் மகனே ஹிந்துஸ்தான் என்ற இந்த பிரதேசம் பல மதக்கோட்பாடுகளை கொண்டது. நேர்மையானவனும், புகழுக்குரியவனும், உயர்ந்தோனுமாகிய இறைவன் இந்த பிரதேசத்தை ஆளும் அதிகாரத்தை நம க்கு தந்திருக்கிறான். நமது இதயம் தூய்மையாக இருந்து  எல்லா மதத்தவர் களின் மீதும் நம்பிக்கை வைத்து நியாயமான நீதி அனைவருக்கும் கிடைத்திட வேண்டும், குறிப்பாக பசுவை பலி இடுவதிலிருந்து, விலகி நில் அப்போதுதான் இந்த மக்களின் இதயங்களை வெல்லமுடியும். கோயில்களையும், மடங்களை யும் சேதப்படுத்தாதே. மக்களுக்கு பயனுள்ள தீர்ப்பை வழங்கு, திருப்பி மக்கள் பயனளிப்பார்கள். இஸ்லாமின் முன்னேற்றம் அன்பெனும் ஆயுதத்தால் ஏற்பட வேண்டுமே தவிர, கொடுமை எனும் ஆயுதத்தால் ஏற்படக்கூடாது. ஷியா மற் றும்  சுன்னி பிரிவுகளில் இருக்கும் வேறு பாட்டைத் தவிர்த்துவிடு, அவைகள் இஸ்லாமின் பலவீனங்கள். அதை மக்களிடமே விட்டுவிடு. அவர்கள் தண்ணீர், காற்று, தீ, மண் போன்றவற்றி லிருந்து மனித உடலின் வியாதிக்கு எது பாதுகா ப்பென்று கருதுகிறார்களோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஹஸ்ரத் தைமூர் சாஹிப் குர்தினியின் போதனைகளை நினைவில் வைத்துக்கொள். அதனால், அரசாங்க விவகாரங்களில் முதிர்ச்சி பெறுவாய்.
  1 ஜமாதி உல் அவ்வல் 935 ஹிஜ்ரி 11, ஜனவரி 1529.
                                              துருக்கிய, மங்கோலிய இரத்தப்பரம்பரையில் வந்த ஒரு மன்னன் சம்பந்தமில்லாத பலதரப்பட்ட மதங்களைச்சார்ந்த மக்களை வேறொ ரு நாட்டில் ஆளப்போகும் தன் மகனுக்கு கூறிய அறிவுரையைப் பாருங்கள். பெர்ஷிய மொழியில் உள்ள இதன் மூல ஆவணம் போபாலில் ஹமிதா நூலக த்திலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் போபாலைச் சேர்ந்த நவாப்சாஹிப் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இதை என்.சி. மெஹ்தா என்பவர் அல ஹாபாத்தில் வெளியிட்டார்.            
                                                   மெய்விர்ஸ் என்பவரின் சுயசரிதத்தில் பாபரைப் பற்றி பெருவாரியான தகவல்களைத் தந்திருக்கிறார். அதில் பாபருக்கு கலையின் மீதான ஈடுபாட்டை தெளிவாக வெளியிட்டிருக்கிறார். தன் அரண்மனையில் தினசரி 680 கல்வெட்டுப் பணியாளர்களையும், ஆக்ரா, சிக்ரி, பைனா, தோல்பூர், குவாலியர் மற்றும் காயில் போன்ற இடங்களுக்கு 1491 கல்வெட்டுப் பணியாள ர்களையும் வேலைக்கு அமர்த்தி கட்டிடப்பணிகளை நிர்வகிப்பாராம். பானிபட் டில் காபுல்பாக் என்ற இடத்திலுள்ள கிரேட் மசூதியும், சம்பலில் உள்ள ஜாமியா மசூதியும் அப்படிக் கட்டப்பட்டவைதானாம். பாபர் பிறப்பிலேயே கவிஞராக இருந்திருக்கிறார். இவரின் கவிதைத் தொகுப்புகளான துஸ்க் இ பாபரியைப் பற்றி அபுல் ஃபஸ்ல் என்பவர் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார்.
                                               முபின் என்றழைக்கப்பட்ட இவரின் பெர்ஷிய காதலைப் பற்றிய நூல் அந்தக்காலத்தில் மிகவும் புகழப்பட்டது. யாப்பிலக்கணத்தைப் பற்றி எழுதிய முஃபஸ்ஸிலும், தரிதில் இ ராஷிதி போன்ற நூல்களும் எழுதி யுள்ளார். சித்திரங்களிலும் மிகவும் ஈடுபாடுள்ளவராக இருந்திருக்கிறார். தனது தைமூரிய மூதாதையர்களின் நூலகங் களிலிருந்து அற்புதமான சித்திரங் களை டெல்லிக்கு கொண்டு வந்திருக்கிறார். இடையில் நாதிர்ஷா என்பவரின் படையெடுப்பால் பெர்ஷியாவுக்கு கொள்ளையடித்துச் செல்லப்பட்டது. இசை யிலும், தோட்டக்கலையிலும் ஆர்வமுள்ளவராக இருந்திருக்கிறார். பாக் இ வஃபா, பாக் இ கிலன் என்ற அற்புதமான தோட்டங்களை காபூலுக்கு அருகில் அமைத்திருந்தார். ராம் பாக், ஜொஹ்ரா பாக் தோட்டங்களையும் ஆக்ராவில் அமைத்திருந்தார். 1530 ல் கடுமையான கோடையில் மகன் ஹுமாயுன் மோச மான நோயில் விழுந்தார். தன் மகனின் நோயின் காரணமாக பாபர் மிகவும் வருத்தப்பட்டார். தன்னிடமிருந்த விலையுயர்ந்த சரித்திரப்புகழ் வாய்ந்த “கோஹிநூர்” வைரத்தைக்கூட தன் மகனுக்கு ஈடாகத்தருவதாக நண்பர்களி டம் கூறினார். பிறிதொரு முறை தன் உயிரைக்கூடத் தருவதாகக் கூறுகிறார். இவருக்குப்பிறகு, இவர் மகன் ஹுமாயுன் இந்தியாவின் பேரரசர் ஆனார். ஆனால், தனது சிறுவயதிலிருந்து பெரும் போராட்டத்துடன் வாழ்க்கையை துவங்கிய பாபர் வெற்றிகள் பெற்று ஒரு பேரரசை நிறுவிய வேகத்திலேயே கோக்ரா போருக்குப்பிறகு, ஓராண்டுகழித்து, 1530 டிசம்பர் 26 ல் ஆக்ராவில் மரணமடைந்தார். பாபருக்குப்பின் அவர் மகன் ஹுமாயுன் மொகலாயப் பேரர சின் மன்னர் ஆனார்.              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக