வியாழன், 25 ஜூன், 2015

மொகலாய வரலாறு 2

மொகலாயப் பேரரசு 2  
                                                                     பெரும்பாலும் மொகலாய வரலாறு பாபரிட மிருந்து தான் ஆரம்பிக்கும். ஆனால், முதல் முதலில் இந்திய மண்ணில் கால் பதித்த முஸ்லீம் வீரர் முஹம்மது பின் காசிம் என்பவர். தனது பதினேழாவது வயதில் அவர் இந்த சாதனையை செய்தார். இவர் தைமூ ருக்கு முன் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தனது படையுடன் சிந்து மாகாணத்தில் நுழைந்து வெற்றி கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தார். இவரைப் பற்றி தெரிந்து கொண்டு நாம் இந்த மொகலாய வரலாற்றைத் தொடர்வோம். 695 ல் அரேபியாவின் தாயிஃப் நகரத்தில் பிறந்தவர் முஹம்மது பின் காசிம். உமய்யாத்களுக்காக மேற்கு பஞ்சாப், சிந்து போர்களை நடத்தியவர். தாகீஃப் என்னும் குலப் பிரிவை சேர்ந்தவர். இவர் தந்தை பெயர் காசிம் பின் யூசுஃப், முஹம்மது பின் காசிம் இளமையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர். இவரது நெருங்கிய உறவினரும் (சிறிய தந்தை) உமய்யாத் கவர்னராக இருந்த அல் ஹஜ்ஜாஜ் இப்ன் யூசுஃப் அல் தகாஃபி என்பவர் காசீமை வளர்க்கும் பொறு ப்பை ஏற்றுக் கொண்டார். நிர்வாகம், போர் பயிற்சி போன்றவற்றை சிறிய வயதிலேயே கற்று தேர்ந் தார். அல் ஹஜ்ஜாஜின் மகள் சுபைதாவை மணந்து கொண்டார். இவரின் இன்னொரு நெருங்கிய உறவினர் முஹம்மது பின் யுசுஃப் என்பவர் ஏமனில் கவர்னராக இருந்தார். அல் ஹஜ்ஜாஜின் வழி காட்டுதலில் பெர்ஷி யாவின் கவர்னராக நியமிக்கப்பட்டு அங்கு நடந்த உள்நாட்டு கலவரத்தை திறமையாக அடக்கி புகழ் பெற்றார். முஹம்மது பின் காசிம் மூலம் உமய்யாத் கள் சிந்துவைக் கைப் பற்றியதற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுகின் றன. பெர்ஸினின் கூற்றுப்படி சிந்துவிலிருந்து ராஜா தஹீர் என்பவர் மூலம் முஸ்லீம் வணிக கப்பல்கள் துருக்கி கந்தாராவிலிருந்து கைபர் கண வாயைக் கடக்கும் போதெல்லாம் தாக்கப்பட்டும், முஸ்லீம் ஆண், பெண்கள் சிறைப் பிடிக்கப்பட்டும் வந்தனர். மேலும், சிந்துவைக் கைப்பற்றுவதால் கந்தாராவி ற்கு செல்ல இன்னுமொரு வழி சுலபமாகும் போன்ற காரணத்திற்காக சிந்து வை கைப்பற்றினார்கள். அடுத்து விங்க்கின் கூற்றாவது, சிந்துவிலிருந்த மெட்ஸ் என்னும் பழங்குடியினர் டிக்ரிஸ் நதியிலிருந்து இலங்கை செல்லும் கடல்வழியில் கட்ச், டிபால் மற்றும் கதியாவார் போன்ற மெட்ஸ்களின் தளங் களி லிருந்து அரபுக்களின் கப்பல்களை கொள்ளையடித்து வந்தனர். மேலும், டிபால், கட்ச் பகுதிகளை வெல்வதின் மூலம் இந்தியாவிற்கான வாணிப வழி யும் சுலபமாகும் என்ற காரணத்தாலும், அல் ஹஜ்ஜாஜ் கவர்னராக இருந்த போது இலங் கையிலிருந்து அரேபியா திரும்பிக்கொண்டிருந்த பெண்கள் நிறைந்த கப்பல் ஒன்றை மெட்ஸ்கள் கடத்திச் சென்றனர். இதனால் அல் ஹஜ் ஜாஜ் தன் உறவினரான முஹம்மது பின் காசிம் தலைமையில் ஒரு படையை அனுப்பி சிந்துவைக் கைப்பற்ற உத்தரவிட்டார். காசிமின் சிந்துவின் மீதான படையெ டுப்பு மூன்றாவது முறையாக தான் முழுமையானது. முதல் இரண்டு முறை எதிரிகளைப்பற்றி சரியாகக் கணிக்கத் தவறியதாலும், கடுமையான வெப்பத்தாலும் பாதில் பின் துஹ்ஃபா என்பவரின் தலைமை யில் சென்று வெல்ல தவறவிட்டனர். அல் ஹஜ்ஜாஜ் தனது தனிப்பட்ட கவனம் கொண்டு கூஃபா நகரிலிருந்து மொத்த போர் நடவடிக்கைக்கும் உத்தரவுகளும், ஆலோச னைகளையும் வழங்கினார். 710 ல் முஹம்மது பின் காசிம் தலைமையில் ஷிராஸ் நகரத்திலிருந்து 6,000 சிரிய வீர்ர்கள் மற்றும் மாவாலிப் படைகளுடன் கிளம்பினார். சிந்துவின் எல்லையில் மேலும் சில முன்ணனிப் படைகளும், 6,000 ஒட்டகப் படைப்பிரிவினரும், மக்ரானின் கவர்னரின் உதவியில் ஐந்து போர்ப்படகுகளும் வழங்கப்பட்டன. காசிம் சிந்துவை கைப்பற்றிய சூட்டோடு, ஏற்கனவே இழந்திருந்த உமய்யாத்களின் நகரங்களான ஃபன்னாஸ் புர் மற்றும் அர்மானபெலாஹ் (லாஸ்பெலா) போன்றவற்றைக் கைப்பற்றினார். அல் ஹஜ்ஜாஜின் அறி வுரைப்படி டெபால் நகரை ஆக்ரோஷமாகத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்.
                            டெபாலுக்குப் பிறகு, அரபு இராணுவம் வடக்கில் அமைதியாக நெருன் மற்றும் சடுசான் (செஹ்வான்) நகரங்களைக் கைப்பற்றியது. போரில் கைப்பற்றிய ஐந்தில் ஒரு பகுதி பொருட் களும் அடிமைகளும் அல் ஹஜ்ஜாஜு க்கும், கலிஃபா வுக்கும் அனுப்பபட்டது. அடுத்தப் பகுதியில் ராஜா தஹிர் காசி மை எதிர்ப்பதற்கு படையைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார். காசிம் இந்துக் கரையை அடைந்து பெட் தீவின் ராஜா மோகாஹ் பசாயாஹ்வின் உதவியுடன் கரையின் அடுத்தபுறம் அடைந் தார். ரோஹ்ரி என்ற இடத்தில் தஹீரை எதிர் கொண்டார். போரில் ராஜா தஹிர் கொல்லப்பட்டு சிந்து வின் அதிகாரம் காசி மின் வசப்பட்டது. அதைத்தொடர்ந்து பிராமனாபாத், அரொர் மற்றும் முல்டான் போன்ற பகுதிகள் அரபுப் படைகளின் சிறிய இழப்பிற்குப் பின் கைப்பற்றப் பட் டன. காசிம் இந்து ராஜா க்களுக்கு கடிதம் எழுதி அவர்களை சரணடையும்படி யும், இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். ராஜா தஹிர் புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், அவருக்கு இந்துக்களிடம்  வெறுப் பிருந்தது. இது அவரை வெற்றி கொண்ட காசிமிற்கு சாதகமாக இருந்தது. வெற்றி கொண்ட பகுதிகளில் காசிம் புதிய இஸ்லாமிய நிர்வாகத்தின் கீழ் ஆட்சிமுறையை ஏற்படுத்தினார். கிராமப் புறங்களில் இந்துக்கள் அவர்களின் நிர்வாகத்தையே நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சச்னாமா, ஜைனுல் அக்பர் மற்றும் தரிக் இ பைஹாகி ஆகியோர் காசிமின் படைகளின் மீது போர் தொடுத்தனர். சிறை பிடிக்கப்பட்ட ஜாட்கள் ஈராக்குக்கு காசிமால் அடிமை களாக அனுப்பப்பட்டனர். முல்டானில் இருந்த சூரியக்கோவில் காசிமால் தகர்க்கப்பட்டதாக சில சரித்திர ஆசிரியர் களால் சொல்லப்படுகிறது. ஆனால், எல்லியாட், கோசென்ஸ், மஜும்தார் மற்றும் வைத்தியா போன்ற சரித்திர ஆசிரியர்கள் இது புனையப் பட்ட கதை என்று மறுக்கிறார்கள். சிலர் முஸ்லீம் களாக மதம் மாறியதாகவும், இந்துக்களும், புத்தமதத்தவர்களும் திம்மிக்களாக வே கருதப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.
                                                        இதற்கிடையில் ஹஜ்ஜாஜ் இறந்துவிட, கலீஃபா முதலாம் அல் வலீத் சுலைமான் இப்ன் அப்த் அவர்கள் அல் மாலிக்குக்கு பதிலாக பதவிக்கு வந்தார். இவர் ஹஜ்ஜாஜிக்கு மிகவும் நெருங்கியவர்களை பழிவாங்கினார். ஹஜ்ஜாஜால் முன்பு வெறுக்கப்பட்ட யாஸித் இப்ன் அல் முஹல்லப் என்பவரை ஃபார்ஸ், கிர்மான், மக்ரான் மற்றும் சிந்த் பகுதிகளுக்கு கவர்னராக்கி உடனடி யாக காசிமை விலக்கினார். முஹம்மது பின் காசிம் மேலும் இந்தியாவை நோக்கி முன்னேற விரும் பினார். அல் ஹஜ்ஜாஜின் நெருங்கிய உறவினர் என்ற காரணத்தாலேயே கலீஃபா ஆட்சிக்கு வந்ததும் முஹம்மது பின் காசிம் கொல்லப்பட்டார். சொந்த கலீஃபாவாலேயே கொல்ல ப்பட்டபோது காசிமிற்கு இருபது வயது. பிற்காலத்தில் இவரது மகன் அம்ர் பின் முஹம்மது அதே சிந்துவிற்கு கவர்னராக வந் தார். முஹம்மது பின் காசிம் தான் முதன் முதலாக இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த முஸ் லிம் ஆட்சியாளர். இவரைப்பற்றி ஸ்டான்சி லேன் பூலே என்பவரின் மெடீவல் இண்டியா என்ற புத்தகத்தை 1970 ல் ஹாஸ் கெல் ஹவுஸ் பப்ளி சர்ஸ் லிமிடட் வெளியிட்டிருக்கிறது.          
                                                                                  மஹாராஷ்டிராவில் மராத்திகளும், பஞ்சாபில் சீக்கியர்களும் பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். விவசாயி களாக இருந்த சீக்கியர்களுக்கு அவர்களின் தலைவர் கள் நாட்டின் நலம்கருதி போர்ப்பயிற்சி அளித்தார்கள்.

மொகலாய வரலாறு 1

மொகலாயர்கள் வரலாறு-1
கூ.செ.செய்யது முஹமது
                                                                                 உங்களுக்கு சந்தர்ப்பம் அமைந்தால் வாழ்நாளில் ஒருமுறையேனும் விடுமுறைப் பயணத்தை இந்தியாவின் வடக்குப்பகுதியில் அமைத்துக்கொண்டு டெல்லி, ஆக்ரா, அஹம தாபாத், ஃபதேபூர்சிக்ரி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு போய் பாருங்கள். மொகலாயர்களின் ஆட்சியைப்பற்றி யாரும் உங்களுக்கு பக்கம்பக்கமாகச் சொல்லத் தேவையில்லை. அங்கிருக்கும் கோட்டைகளும், அரண்மனைகளும், தோட்டங்களும் மௌனமாய் உங்களுக்கு மொகலாயர்களைப் பற்றிச் சொல்லும் அல்லது பார்த்தவர்களைக் கேளுங்கள் சொல்வார்கள். மொகலாயர்களை வென்று இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் பார்த்து வாயடைத்து அனுபவங்களை பிரிட்டிஷ் நூலகங் களில் புத்தகமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இது மிகைப்படுத்தப்பட்டதல்ல ஒருமுறை வட இந்தியா பயணித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சரித்திரத்தை எழுத வருபவன் நன்றாக அதன் உண்மைகளை கூடுமான வரை அறிய முயற்சித்திருக்க வேண்டும் அல்லது  அறிந்திருக்க வேண்டும் என்று புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  குறிப்பாக  எழுதுகோல் எந்த விதத்திலும் அநியாயத்தின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது. காலமெல்லாம் நல்ல சிந்தனையில் இருந்து விட்டு சாகும்போது மது குடிக்க பணமில்லாமல் ‘அர்த்தமுள்ள ...............’ என்று எழுதிவிட்டுப்போன கவிஞர்களையெல்லாம் கண்டவர்கள் நாம். இந்த தொடர் ஏதோ வாந்தி எடுத்தவர்கள் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ போல அல்ல. சரித்திரத்தில் தவறு ஏற்பட்டபோதெல்லாம் இந்த மனித சமுதாயம் உலகில் பல இடங் களில் இரத்தம் சிந்தி இருக்கிறது.
                                                                                  அதுவும் இந்தியா போன்ற பல சமுதாயத்தினர் இணைந்து வாழும் ஒரு நாட்டில் மிகவும் கவனமாக எழுதப்பட வேண்டும். எழுதினார்களா? அதை அறிந்தால் வேதனையின் உச்சிக்கே போய் விடுவீர்கள்.  இதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1934 ல் பூனாவில் நடைபெற்ற ஆல் இந்தியா சரித்திர மாநாட்டில் ஒரு கமிட்டியை அமைத்து இந்திய வரலா ற்றை குறிப்பாக முஸ்லீம்களின் ஆட்சியை முடிந்த மட்டிலும் உண்மைகளைத் திரட்டி எழுதிட பணித் தது. இஸ்லாமுக்குப் பிறகு, ‘தீனே இலாஹி’ என்ற மதத்தைத் தோற்றுவித்தவர் அயோக்கியனில்லாமல் எப்படி ‘மாமன்னன்’ அக்பர் ஆனார். (அக்பரின் மற்ற திறமைகளை நாம் குறை கூறவில்லை. இவர் தான் முழு இந்தியாவை உருவாக்கினார்.) நேர்மையான கலீஃபாக்களின் ஆட்சிக்கு ஈடாக ஆட்சி செய்த ஔரங்கஸேப் எப்படி உண்மைக்குப் புறம்பாக தீய ஆட்சியாளரானார். ஜஹாங்கீர் இந்தியாவிலேயே பிறந்தவர். இந்திய கலாச்சாரத்தை மிகவும் விரும்பியவர். இந்தி பாடல்கள் கவிதைகளை நேசித்தவர். டெல்லியை ஆட்சி செய்த முதல் மன்னன் அய்பெக். மொகலாயப் பேரரசை ஆட்சி செய்த முதல் பேரர சர் பாபர். இவரிலிருந்து தொடர்ந்த மொகலாய வாரிசுகள் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்களாய் இருந்தார்கள், இந்திய மக்களை ஆண்டார்கள். இவைகள் ஆதார பூர்வமாக அப்போதைய உயர் அதிகா ரிகள், இராணுவத்தினரின் உத்தரவுகள், நாட்குறிப்புகள் மூலம் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட ஆவணங் களின் மூலமும், கவர்னர்கள், ரகசிய உளவாளிகள், செய்தி ஆசிரியர்களின் மூலமும் தெரிகிறது. இது அல்லாமல் அக்பர்நாமா. பாபர் நாமா போன்ற சுயவரலாற்றிலிருந்தும், அக்கால வெளிநாட்டு பயணி கள் வான் நோயர், டி லாயட், கோர்யட், நிக்கோலியோ மனுச்சி, பெர்னியர் மற்றும் தவர்னியீ ஆகியோ ரின் பயணக்குறிப்பிலிருந்தும் தெரிகிறது. இந்த தொடர் பிரிட்டிஷ் சரித்திர எழுத்தாளர்கள், போர்ச்சு கீஸிய கடல் பயணிகளின் அனுபவங்களை கேட்டும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து திரட்டியது.
                                           இங்கிலாந்தின் சார்பில் ராஜ்ய பிரதிநிதி மற்றும் வைசிராயாக பேரரசர் ஜஹாங்கீரின் சபையில் டெர்ரி என்பவரும், ஹாகின்ஸ் என்பவரும் இருந்திருக்கிறார்கள். போர்ச்சுகீசிய நாட்டின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மான்செர்ரட் சேவியர் மற்றும் சிலர் மொக லாய அரண்மனையில் தங்கி இருந்திருக்கிறார்கள். 1857 ல் நடந்த கலவரத்தில் அதிகமான மொகலாய ஆவணங்கள் அழிந்து போனாலும், எஞ்சியவைகள் ஐரோப்பிய நூலகங்களில் மௌனமாக மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் உண்மைகளைச் சுமந்து கொண்டு இருக்கின்றன. பேராசிரியர் ரஷ்புரூக் வில்லிய ம்ஸ், இந்தியா புராதன நாடுதான் என்பதை மறுப்பதற்கில்லை இந்து, புத்தமத கலவரங்களாலும், சிறிய பிரதேச மன்னர்களின் முறையற்ற ஆட்சியாலும் களையிழந்திருந்த இந்தியாவை நவீனத்திற்கு இட்டுச் சென்றது பதினைந்தாம் நூற்றாண்டின் வாஸ்கோடா காமாவின் வருகையும், மொகலாய பேரரசர்களின் ஆட்சியும்தான் என்று கூறி இருக்கிறார். ஒருவகையில் நிச்சயமாக மொகலாயர்கள் இந்தியாவை வேறு காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்களின் பிடியில் செல்லாமல் பாதுகாத்ததா கவே மதிப்பிடுகிறார்கள். மங்கோலியர்கள் டெல்லியை நாசப்படுத்தியதை உதாரணமாகக் கூறுகி றார்கள். நமது இந்திய சரித்திரத்திலேயே மிகவும் ஆர்வமான பகுதி மொகலாயர்கள் ஆட்சி தான். மொகலாயர்கள் மதத்தால் இஸ்லாமையும், கலாச்சாரத்தால் பெர்ஷியாவையும் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அதுவும் ஔரங்கஸேப் குறிப்பாக மதப்பற்றுள்ளவராக இருந்தார்.
இந்த தொடரின் ஆதார மூலங்கள் :
ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால்                                 ஜர்னல் ஆஃப் தி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் லண்டன்                                   ஜர்னல் ஆஃப் தி ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸ், லண்டன்                                அலிகார் முஸ்லிம் யூனிவர்சிடி                                                                                                  மொகல் எம்பரர் ஆஃப் திமூர்                                                                      
 மெமோயர்ஸ் ஆஃப் ஸெஹிருத்தீன் பாபர்                                                           ஜஹாங்கீர் நாமா                                                                                        
ஹிஸ்டரி ஆஃப் ஹுமாயூன்                                                                              
 ஹிஸ்டரி ஆஃப் ஔரங்கஸேப்                                                                        
 மற்றும் பல பிரிட்டன் லைப்ரரி ஆன் லைன் புத்தகங்கள்.