புதன், 8 ஏப்ரல், 2015

தைமூரியர்கள் வரலாறு

 இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் ஜெங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டுவந்தனர். நாளடைவில் அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார் கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே அழைத்தார்கள்.
                                     1336 ல் இவர்களில் பிரபலமாக ஒருவர் பிறந்தார் அவர் பெயர் தைமூர். மேற்கத்தியர்களால் டாமெர்லேன் என்று அழைக்கப்பட்டார். துருக்கிகள் டிமுர் இ லெங்க் என்று அழைத்தனர். இவர் எப்படியேனும் ஒரு பேர ரசை மீண்டும் நிலைநாட்டிட முயற்சி செய்தார். துருக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவே கருதப்பட்டார். இவருக்கு சொந்தமாக பெரிய நிலப்பரப்பு இருந் தது. இவர் தனிச்செல்வாக்காக அவரின் கூட்டத்தினருள் திகழ்ந்தார். சிறந்த கலை ஞராகவும், கட்டிடக்கலை நிபுணராகவும் இருந்தார். மாபெரும் இஸ்லாமிய மார் க்க அறிஞர் இப்ன் கல்தூன் என்பவரின் மாணாக்கராக இருந்தார். 1383 ல் இவரு க்கு அப்போதே 50 வயதாகி இருந்தது. இருபது ஆண்டுகள் விடாது போரிட்டு மேற் கில் பாதி பகுதிகளை வென்றார். முதலில் ஹிராத் என்ற ஆஃப்கானிஸ்தான் மற் றும் ஈரானிய எல்லைப்பகுதியை வென்றார். ஹிராத் பின்னாளில் பெர்ஷிய கலாச்சாரத்தில் சிறந்து விளங்கியது. பின் தைமூர் கிழக்கு பெர்ஷியாவையும் வென்றார். 1394 ல் மொத்த பெர்ஷியா, மெஸோபொடாமியா, கருங்கடல், கஸ்பி யன் கடல், அர்மேனியா, அஸெர்பைஜான் மற்றும் ஜியார்ஜியாவை வென்றெடுத் தார். 1396 ல் புயலைப்போல் ரஷ்யாவை வெற்றி கொண்டு ஒரு ஆண்டு கையகப் படுத்தி வைத்திருந்தார்.
                                                                        தைமூரின் ஆட்சி மிகவும் மிருகத்தனமாக இருந்தது. பெர்ஷியாவில் தன்னை எதிர்த்தவர்களை ஜெங்கிஸ்கானைவிட கொடுமையாகத் தண்டித்தார். மக்களை கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கினார். கொல்லப்பட் டவர்களின் மண்டை ஓடுகளால் பெரிய கோபுரம் அமைத்து மற்றவர்களுக்கு அதை எச்சரிக்கை ஆக்கினார். ஜெங்கிஸ்கான் தவறிய ஒன்றை 1398 ல் தைமூர் செய்தார். ஆம் அதுதான் இந்தியாவின் மீதான படையெடுப்பு. டெல்லி நகரில் நுழைந்து அதை சூறையாடி, பல மாதங்கள் தங்கி கொள்ளையடித்து, கைது செய்தவர்களை கொன்று, 120 யானைகளையும் கைப்பற்றி திரும்பினார். தனது நகரமான சமர்கண்டை இஸ்லாமிய கலைவடிவத்தில் அமைத்தார். இந்தியாவில் இருந்து கொண்டு வந்த யானைக ளையும், கலை விற்பன்னர்களை வைத்தும் நகரை அழகுபடுத்தினார். 1399 ல் 60 வது வயதிலும் ஆக்ரோஷத்தோடு மேற்கு நோக்கி படையெடுத்தார்.
                                    1401 ல் தைமூர் எகிப்தின் மம்லூக் இராணுவத்தை சிரியாவில் வென்றார். டமாஸ்கஸ் நகரத்தை சேதப்படுத்தினார். அதே ஆண்டு பாக்தாத் மீது தாக்குதல் நடத்தி 20,000 பேரை கொன்று குவித்தார். 1402 ல் அனுப வம் வாய்ந்த வீரர்களுடன் அனடோலியாவை நோக்கி முன்னேறினார். ஓட்டோ மான் பேரரசர் பயேஸெட் என்பவரை அங்காரா என்ற இடத்தில் தோற்கடித்து சுல்தானைக் கொன்றார். மேலும் மேற்காக நகர்ந்து ஏஜியன் மற்றும் ரோட்ஸ் மன்னனை வென்று இஸ்மிர் நகரத்தையும் கைப்பற்றினார். பின் தைமூர் 1404 ல் சமர்கண்ட் திரும்பினார். அப்போது அவருக்கு 68 வயதாகி இருந்தது. அப்போதும் அவர் ஓய்வெடுக்க விரும்பவில்லை. 1404 ல் தைமூர் சீனாவின் மீது ஆக்கிரமித்தார். சிம்கெண்ட் என்ற இடத்தில் இருக்கும் போது 1405 ல் நோயில் விழுந்து இறந்துபோனார். தைமூரின் பிடியிலிருந்து சீனா தப்பித்ததாகவே கருதப்பட்டது. இவருக்குப் பின் இவரது பிரதேசம் தைமூரின் இராணுவ கமாண்டர்களாலும், எதிரிகளாலும் பிரிக்கப்பட்டது.