புதன், 13 மே, 2015

விதைத்தவர்கள் 4

 ஆங்கிலோ ஸாக்சன் இங்கிலாந்தில் பெண்கள் உயர்தரத்தில் நடத்தப்பட்டனர். அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிலங்களை விற்கலாம் வாங்கலாம். நார்மன்களின் கீழ் பெண்களை கடுமையாக கையாள்வதிலிருந்து, பெண்கள் ஆணுக்கு நிகராகவும் கருதப்பட்டனர். கீழ் தரமான நிலையிலிருந்த பெண்களின் நிலை எதிர்ப்பின்றி செயிண்ட் பாலின் நிபந்தனைப்படி, செயிண்ட் அகஸ்டின் மற்றும் முன்பிருந்த தேவாலய பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆதி கிறிஸ்தவர்கள் பெண்களை ‘சைத்தானின் வழிமுறைகள்’, ‘கழிவு நீரின் மேல் கட்டப்பட்ட கோவில்’ என்று எழுதி வைத்திருந்தனர். செயிண்ட் ஜான் க்ரைஸோடம் என்பவன் பெண்களை இரத்தம், பித்தநீர், கீழ்வாதம், செறிமானமான உணவின் நீர்ப்பாகம் என்று கேவலமாக குறிப்பிட்டான். ஃப்ரென்ச் மேதாவி பெர்ட்ராண்ட் டு கூவெஸ்லின் ‘ஒரு ஆட்டை விட அதிகமான அறிவு பெண்ணுக்கில்லை’ என்றான். ஆனால் இறுதி தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் சமமாக உணவளித்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள், அவர்கள் அன்பெனும் ஆடையணிந்தவர்கள், ஆணுக்கு உதவி புரிந்து, இணையாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று உயரிய கருத்தை சொன்னார்கள்.
                                    ஐரோப்பிய வரலாற்றில் இங்கிலாந்தின் தோல்வியைப் போல் ஒன்று நிகழவில்லை. பெரும்பான்மையான சொந்த மக்களை சொந்த நாட்டில் பத்திலிருந்து, இருபது லட்சம் மக்களை வெறும் பனிரெண்டாயிரம் வெளிநாட்டினர் அடக்கி ஆண்டனர்.  (இதே ஃபார்முலா தான் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு ஆரியர்களால் கையாளப்படுகிறது. காரணம் இங்கு மண்ணுக்கு சொந்தமான திராவிடம் என்னும் இனம் பின் தள்ளப்பட்டு, நாமெல்லாம் இந்து என்னும் மதம் முன்னிலைப் படுத்தப்படுகிறது. ஒருநாள் இந்திய கிறிஸ்தவர்கள், தலித்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் என்று ஆரியர்களால் வெறும் வார்த்தையில் மட்டுமே சொல்லப்படும் மக்களும் இனத்தைக் கையில் எடுப்பார்கள்.) இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து ஃப்ரான்சின் காலனியாக்கப்பட்டு நார்மண்டிகள் வசமும், நார்மன்கள் ஃப்ரென்ச் மன்னர்களுக்கு கட்டுப்படுவதும், ஃப்ரென்ச் மன்னர்கள் போப்களுக்கு கட்டுப்படுவதுமாக இருந்தனர். நார்மன் ஆட்சியாளர்கள் வெகு சில ஆண்டுகளே இங்கிலாந்தில் இருந்தனர். ஏனென்றால் ஃப்ரென்சின் பிரபு, தேசங்களை ஒப்பிட்டு இங்கிலாந்தை சாதாரண பகுதியாகவே எண்ணினார். வில்லியம் பிரபு புதிய பிரதேசத்தில் மொழியைக் கற்றுக் கொள்வது பற்றி கவலைப்படவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஃப்ரென்ச் மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் தாய் மொழியான ஃப்ரென்சையே பேசினர்.
கீழ் காணும் ஆங்கில வார்த்தைகள் ஃப்ரென்சிலிருந்தே வந்தன:
நிர்வாகம் - அட்மினிஸ்ட்ரேஷன், லா, க்ரவுன், பார்லிமெண்ட் (பார்லெர்), ரீன், ராயல், ஸ்டேட், சிட்டி, கவுன்சில், கோர்ட், எவிடன்ஸ், ஃபைன், ஃப்ராட், கோல்(GOAL), ப்ரிசன், ஆல்ஸோ, எம்பெஸ்ல், ஜட்ஜ், ஜூரி, லார்செனி, லீஸ், பெர்ஜூரி.
உடைகள் – ஏப்ரான், பான்னட், பூட், ப்ரூச், செயின், காலர், ஜாக்கெட், ஜ்வெல், லேஸ், ஆர்னமெண்ட், பெட்டிகோட்
குடும்பம் – ஆண்டி, கசின், நெப்யூ, நீஸ், அங்கிள்
உணவு – பீஃப், மட்டன், பேட்ரிட்ஜ், பீசண்ட், பைஜீன், பவுல்ட்ரி, சுகர், ட்ரைப், வீல், டின்னர், ஃபீஸ்ட், சப்பர், டேட், ஃபிக், க்ரேப், லெமன், ஆரஞ்ச், ரைஸின், ஃப்ளார், ஆயில்
வீடு – சேம்பர், பேன்ட்ரி, ப்ளாங்கெட், கர்டன், குஷன், க்வில்ட், டவல், சேர், ட்ரெஸ்ஸர், வார்ட்ரோப்
இராணுவம் – ஆர்மி, பேட்டிள், கார்ட், நேவி, பீஸ், ஸோல்ஜர், ஸ்பை, கேப்டன், லியூடெனண்ட்
பதவி – க்ளெர்க், ட்யூக், ஃபார்மர், மாஸ்டர், மிஸ்ட்ரெஸ், ப்ரின்ஸ், செர்வண்ட், சர்
மதம் – அப்பே, கன்வெண்ட், லெசன், மெர்சி, பார்சன், பிட்டி, ப்ரேயர், ப்ரீசர், செயிண்ட், செர்மன், வைசார்
பெயர்கள் – வில்லியம் (கில்லியம்-GUILLIAME), ராபர்ட், ரிச்சர்ட், நார்மன், ஹென்றி, சார்லஸ்
பொருளாதாரம் – ஸ்டெர்லிங்க் (ஃப்ரென்ச் வார்த்தை ‘எஸ்டெர்லின்-ESTERLIN’) இதன் பொருள் லிட்டில் ஸ்டார் என்பதாகும். இங்கிலாந்து நாணயம் பென்னிக்களில் காணப்படும் சின்னம் நார்மண்டியில் உருக்கப்பட்டது.
மேலும் சில – டஸன், ஃப்ளவர், க்ரீஸ், ஹவர், லிட்டெர், மோர், பாஸ்சர், பீப்பிள், பெர்சன், பாக்கெட், க்வாரி, க்வார்ட், க்வார்டர், ரீன், ஸெகண்ட், ஸ்க்யூரல், ஸ்டால்லியன், ஸ்ட்ரேஞ்சர், டெய்லர், ட்யூன் இன்னும் பல வார்த்தைகள் உள்ளன.
மேற்ச் சொன்னவை பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளவை. ஒரு சில படித்த ஆங்கிலேயர்கள் மட்டும் தாய் மொழியுடன் சரளமாக ஃப்ரென்சும், லத்தீன் மொழியும் பேசக் கூடியவர்களாக இருந்தனர். ஃப்ரென்சும், லத்தீனும் பேசக் கூடியவர்கள் உயர் வகுப்பினராக கருதப்பட்டனர். முதலாம் எட்வர்ட் மற்றும் மூன்றாம் ஹென்றியின் (லயன் ஹார்ட்ஸ் ரிச்சர்டின் உறவினன்) ஆட்சியின் போது ஃப்ரென்ச் அதிகார பூர்வமான ஆட்சி மொழியாகியது. மதபோதகர்களும், அறிவுஜீவிகளும் சர்வதேச தேவாலயங்களின் மொழியாக இருந்த காரணத்தால் லத்தீன் மொழியையே பயன்படுத்தினர். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிரபலமான ஃப்ரென்ச் பிரமுகர்கள் தாமஸ் பெக்கெட், மேக்னா கார்டா போன்றோரின் கொலைக்குப் பிறகு மெதுவாக ஆங்கிலம் அரசியல் மொழி ஆகியது. பெரும்பான்மையான ஆங்கிலோ சாக்ஸன்களின் தாய்மொழி ஆர்வத்தால் ஆங்கிலம் கீழ்தர மக்களின் மொழியாகியது. ஆங்கிலம் பேசுபவர்கள் அடிமைகளாகக் கருதப்பட்டனர். கேண்டர் பரியின் ஆர்ச்பிஷப் லான்ஃப்ராங்க் இரண்டாம் போப் அலெக்ஸாண்டருக்கு எழுதிய கடிதத்தில் ஆங்கிலம் பேசியவர்களை ‘காட்டுமிராண்டி மக்கள்’ என்று குறிப்பிட்டார்.
                                    கொஞ்சம் கொஞ்சமாக லண்டன், நார்விச், பிரிஸ்டால் மற்றும் இதர நகரங்களில் ஆங்கிலம் வியாபார மொழியாகி சமூக அந்தஸ்தைப் பெற்றது. டுயூடர் காலத்தில் புகழ்பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் காவிய நாடகம் எழுதும் வரை சிறப்புப் பெற்றது. 1066 C.E. க்குப் பிறகு, ரோமின் தேவாலயம் பிரிட்டிஷ் அரசியலில் ஆர்வம் காட்டியது. நார்மன்களின் போர் பிரிட்டிஷை இராணுவ கிறிஸ்தவ மத நாடாகவே மாற்றியது. இது சாக்ஸன் தேவாலயத்தின் கட்டாயமான, தீவிரமான மத மறு மாற்றத்தாலும், முன்பு குறிப்பிட்ட மிருகத்தனமான வெறியாட்டத்தாலும் சாத்தியமானது. பெரும்பான்மையான ஆங்கில தேவாலயங்கள் நார்மன்களாலும், ஃப்ரென்ச் மடங்களாலும் கைப்பற்றப்பட்டன. 1086 C.E. ல் ஏறக்குறைய இருபது தேவாலயங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகள் செஸ்டர், டெவ்கெஸ்பரி, எவிஷம் போன்ற ஃப்ரென்ச் மடங்களுடன் இணைக்கப்பட்டன. பனிரெண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் க்ளாஸ்டன்பரியின் மடாதிபதியாக ப்ளோயிசின் நார்மன் ஹென்றி இருந்தான். எவிஷாமிலும் நார்மன் ஒருவனே மடாதிபதியாக இருந்தான். 1070 C.E. ல் தனது எழுபதாவது வயதில் கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்பின் இருந்த லான் ஃப்ரான்க் சிறந்த அறிவாற்றலால் பிரிட்டிஷ் தேவாலயங்களை நார்மன் தேவாலயங்களாக மாற்றினான். எல்லா ஆங்கில தேவா லயங்களையும் பிஷப்புகளுக்கு கட்டுப்படுவதாக எழுத்து பூர்வமாக நிர்பந்திக்க வைத்தான். லான்ஃப்ரா ன்க் வில்லியம் பிரபுவுக்கு தன் முழு ஒத்துழைப்பையும் தந்து, எல்லா ஆங்கில பிஷப்புகளையும், மடாதிபதிகளையும் நீக்கிவிட்டு, பதிலுக்கு நார்மன்களையும், மற்ற கண்டங்களைச் சேர்ந்தவர்களையும் அந்த பதவிக்குகளுக்கு நியமித்தான். 1070 C.E. ல் இங்கிலாந்திலும், நார்மண்டியிலும் ஏறக்குறைய அந்த பதவிகளில் இருந்தவர்கள் வில்லியம் பிரபுவுக்கு நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருந்தார்கள். இங்கிலாந்து வெளிநாட்டவர்கள் தங்கும் நாடாகவும், வெளிநாட்டவர்களின் சொத்தாகவே இருந்து அதன் வளங்களை சுரண்டினர். பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் மடாதிபதிகளும், பிஷப்புகளும் பணிப்பெண்களை வைத்துக்கொண்டனர். அவர்களுக்குள் இயற்கைக்கு மாறான உறவுகளும், ஒரே இன உறவுகளும், கன்னி சந்நியாசி பெண்களுக்குள் லெஸ்பியன் (பெண்ணுடன் பெண்) உறவுகளும் சகஜமாக இருந்தன. இவைகளுக்கு வெளிப்படையாக கடும்தண்டனை இருந்தாலும், உள்ளுக்குள் மூடி மறைக்கப்பட்டன. இந்த கண்றாவிகளை சில சமயம் ஹாலிவுட் திரைப்படங்களிலும் காட்டியுள்ளனர். 1086 C.E. ல் ஆர்டெனின் துர்கில், லின்கனின் கோல்ஸ்வீன் என்ற இரு செல்வந்தர்களைத் தவிர இங்கிலாந்திலிருந்து ஏறக்குறைய 4000 செல்வந்தர்கள் 200 நார்மன் சீமான்களால் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிறந்த சீமான்களாக மோர்டைனின் ராபர்டும், வில்லியம் பிரபுவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனும் ஆவர். இதனால் உண்மையான குடிமக்கள் வரியை செல்வப்பிரபுக்களுக்கும், செல்வப்பிரபுக்கள் வரியை மன்னருக்கும், மன்னர் ஆண்டு காணிக்கையாக ஆசீர்வாதம் அருளும் தேவாலயங்களுக்கும் வழங்கினர். இந்த தேவாலய காணிக்கைக்குப் பெயர் ‘பீட்டர்ஸ் பென்ஸ்’ என்று வழங்கப்பட்டது. இதனால் இங்கிலாந்தின் செல்வம் ஆசீர்வாதம் வழங்குவதன் பேரில் சுலபமாக ஐரோப்பாவுக்குள் நுழைந்தது.
                                      இந்த பொருளாதாரம் நார்மண்டிகளின் இராணுவ சேவைக்கு பயன் படுத்தப்பட்டது. இது நார்மண்டிகளின் சக்திவாய்ந்த மத சார்புள்ள இராணுவமாக அமைந்தது. மேலும் ஆங்கிலேயர்களை ஃப்ரான்சின் சண்டைகளுக்கும், சிலுவைப்போருக்கும் பயன் படுத்திக் கொண்டது. இந்த மதப்போர்வை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், பொது எதிரியான இஸ்லாத்தின் மீது சிலுவைப்போர் மூலமாக சண்டையிட வைத்தது. பதிமூன்றாம் நூற்றாண்டின் உண்மையான ஸ்காட் லாந்த், இங்கிலாந்தின் அடிமை அவலங்களை மெல் ஜிப்சன் என்னும் நடிகரால் நடிக்கப்பட்டு ‘ப்ரேவ் ஹார்ட்’ என்னும் ஹாலிவுட் திரைப்படமாகக் கூட எடுத்துக் காட்டினார்கள்.
                                                                                     1085 C.E. ல் க்ளூசெஸ்டரின் கிறிஸ்தவக் கூட்டத்தில் வில்லியம் புதிய வரித்திட்டத்தை அறிமுகப்படுத்தினான். இங்கிலாந்தில் பணக்காரராகவும், சொத்துடனும், வசதியுடனும், மதிப்புடனும் இருப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் ஒரு எருதுவோ, பசுவோ, பன்றியோ விடுபட விடவில்லை. பயங்கரமான சட்டதிட்டங்களுடன், உலக இறுதி நாள் வரை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு புத்தகம் இரண்டு பாகமாக வெளியிடப்பட்டது. இது கிறிஸ்தவர்களிடையே தீர்ப்புநாள் (DOOMS DAY/DOMESDAY) என்று மிகவும் பிரபலமானது இதிலுள்ள எந்தவொரு சட்டத்திற்கும் மேல்முறையீடு இல்லை. முழுக்க முழுக்க லத்தீன் மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த புத்தகம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆங்கிலத்தில் காணப்படவில்லை. ஆங்கிலேயர்கள் இன்றும் கூட உண்மையான மத விஷயங்களுக்கு இந்த புத்தகத்தை கையாள விரும்புவதில்லை. இது திருக்குர்ஆன், பைபிள் போன்ற புனித நூல்களுடன் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. படிப்பறிவில்லாத வில்லியம் இந்த புத்தகத்தை என்றுமே படித்ததில்லை, அந்த புத்தகத்திற்கு சிலுவையோடு கையொப்பம் இட்டதோடு சரி. நம்புங்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் 13,418 இடங்கள் இந்த வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இங்கிலாந்தின் மீது விதிக்கப்பட்ட இந்த புதிய வரிக் கொள்கையால் வசூலிக்கப்பட்ட தொகை உள்நாட்டு, வெளிநாட்டு தேவாலயங் களுக்கும், அதன் நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டது. இதனால் தேவாலயங்கள் பெருவாரியான நிலங்களின் உரிமையாளராகி, மிகவும் பணச்செல்வாக்கும், சக்தியும் பெற்று அரசியலிலும், அரசாங்கத்திலும் தலையிடும் அதிகாரம் பெற்றது. மடாதிபதிகளும், பிஷப்புகளும் கொடுமைக்கார சீமான்களைப் போல் செயல்பட்டு, நிலங்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு குத்தகைக்கு விட்டனர். 1086 C.E. ல் தேவாலயங்கள் இங்கிலாந்தில் மேலும் ஐந்து சதவிகித நிலங்களை கைப்பற்றின. காரணம், பிஷப்புகள் சீமான்களாகவும், சீமான்கள் பிஷப்புகளாகவும் இருந்தனர்.
                                   வொர்செஸ்டரின் பிஷப் ஸ்ராட்ஃபோர்டையும், செஸ்டரின் சீமான்கள் ஸ்டாக்போர்ட், சால்ஃபோர்ட்களையும் உருவாக்கினர். கோவென்ட்ரி நகரத்தை உள்ளூர் தீயவர்களும், நிலச் சீமான்களும் பிரித்துக் கட்டுப்படுத்தினர். 1066 C.E. லிருந்து 1130 C.E. வரை வேல்ஸில் உருவான பதினெட்டு நகரங்கள் இல்லாமல், இங்கிலாந்தில் நாற்பது புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டன. 1191 C.E. லிருந்து 1230 C.E. வரை மேலும் ஐம்பது புதிய நகரங்களுக்குத் திட்டமிடப்பட்டன. 1066 ல் ஐம்பது மதக்கூடங்களும் ஆயிரம் துறவிகள், கன்னியாஸ்திரிகள் இருந்தனர். 1216 ல் ஏறக்குறைய எழுநூறு மதக்கூடங்களும், 13,000 துறவிகள், கன்னியாஸ்திரிகள், மதஅதிகாரிகள், பெண் மதஅதிகாரிகள் இருந்தனர். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, 900 மதக்கூடங்களும், 17,500 துறவிகள், கன்னியாஸ்திரிகள், மதஅதிகாரிகள், பெண் மதஅதிகாரிகள் இருந்தனர். 1147 ல் 13 பெரிய மதக்கூடங்கள் ஃப்ரென்சுக்களால் அமைக்கப்பட்டன. அவைகள் பெனெடிக்டின் உத்தரவில் இயங்கின. இந்த மடங்கள் பெயர் பெற்ற யூத பணக்கடன் வழங்குபவரான லின்கனைச் சேர்ந்த ஆரோன் என்பவரிடம் கடன் பெற்று சொத்து விஸ்தரிப்பிலும், ஆட்டுப் பண்ணை அமைப்பதிலும், கம்பளி ஏற்றுமதியிலும் முதலீடு செய்தனர். இங்கிலாந்தில் திட்டமிட்டு, சூறையாடப்பட்ட நிலங்கள் டூம்ஸ் டே புத்தகத்தின் படி 35 பாகமாகப் பிரிக்கப்பட்டு மடாதிபதிகள், பிஷப்புகள் 26% சதவீதமும், மன்னருக்கும், அவர் குடும்பத்தினருக்கு 17% சதவீதமும், முண்ணனி சீமான்கள் 12% சதவீதமும் பிரித்து ஏறக்குறைய பாதி இங்கிலாந்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் வில்லியமின் உறவினர்கள். இங்கிலாந்தின் வளம் ஐரோப்பாவில் குவிந்தது. 1087 C.E. ல் வில்லியம் தனது மரணப் படுக்கையில், “இங்கிலாந்து மக்களை வெட்டி துன்புறுத்தி சகிக்க முடியாத வகையில் கொடுமைப்படுத்தினேன். எனது காரியத்தில் அவர்களிடம் நீதியின்றியும், காட்டுமிராண்டித்தனமாகவும் பெருவாரியானவர்களை கொன்று குவித் தேன். கடவுள் என் பாவங்களுக்காக என்னை மன்னிப்பானாக” என்று வருத்தப்பட்டான்.
                                    வில்லியம் ஃப்ரான்சில் நார்மண்டியின் பிரபுவாகவும், இங்கிலாந்தில் மன்னனாகவும் இரண்டு பதவிகளில் இருந்தான். இவனது இறப்பிற்குப் பிறகு, இவனது ஆட்சி பிளவுபட்டு மூத்த மகன் ராபர்ட் கர்ட்ஹோஸ் நார்மண்டியின் பிரபுவாகவும், இரண்டாவது மகன் ருஃபுஸ் (இரண்டாம் வில்லியமாக அறியப்பட்டவன்) இங்கிலாந்தின் புதிய மன்னனாகவும் (1087 C.E.-1100 C.E.) ஆகினர். ராபர்ட் கர்ட்ஹோஸ் முதல் சிலுவைப் போரின் செலவினங்களுக்காக 1096 C.E. யில் லயன் ஹார்ட் ரிச்சர்டுக்கு ஏறக்குறைய 150,000 மார்க்குகள் பணம் செலுத்த வேண்டி இருந்தது. அதனால், ராபர்ட் கர்ட்ஹோஸ் நார்மண்டியை சகோதரன் ருஃபூஸிடம் 10,000 மார்க் பணத்திற்கு அடமானம் வைத்தான். சிலுவைப் போருக்கு போகும் வழியில் லூக்கா என்னுமிடத்தில் இரண்டாம் போப் அர்பனை ராபர்ட் கர்ட்ஹோஸ் சந்தித்தான். ருஃபூஸிடம் அடமானப் பணம் கொடுக்க வசதி இல்லை. அவன் இங்கிலாந்து முழுவதும் காரணமில்லாமல் ஒரு வரியை வசூலிக்கச் செய்தான். மடாதிபதிகளும், சீமான்களும் எந்த காரணம் சொல்லியும் வரி வசூலிக்க முடியாது என்று ருஃபூஸிடம் முறையிட்டனர். அதற்கு அவன் ‘இறந்தவர்களின் எலும்புகளைப் போல் தங்கமும், வெள்ளியும் சேர்க்க முடியவில்லையா’? என்று கேட்டான். அவனின் புத்திசாலிகள் மடாதிபதிகள், சீமான்களிடம் நீங்கள் ஏழைகளுக்கு ஆதரவாய் இருப்பதிலிருந்து மன்னரின் கருவூலத்தை நிரப்ப வழி காணுங்கள் என்று சொல்லி அனுப்பினர். சிலுவைப் போருக்கான வசூல் தேவாலயங்களுக்கு நல்ல லாபகரமாகவே இருந்தது. மக்கள் தங்கள் நிலங்களை குத்தகைக்கோ, அடமானத்திற்கோ தேவாலயங்களிடமே ஒப்படைத்தனர். ருஃபூஸ் ஒரு கிறிஸ்தவனாக இருக்கவில்லை. அவன் நாஸ்திகனாக கடவுள் மறுப்பாளனாக இருந்து, அறிவுஜீவிகளுக்கு அதிர்ச்சியளித்து அபச்சாரமாக கருதச்செய்தான். இயற்கைக்கு மாறான இன்ப உறவுப் பழக்கங்களையும் வைத்திருந்தான்.
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக