வெள்ளி, 10 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 24

ஔரங்கஸேப் தானே அஜ்மீர் சென்று மார்வாரின் மீதான தாக்குதலுக்கு நேரடி உத்தரவிட்டார். முல்தானிலிருந்த இளவரசர் அக்பர் அழைக்கப் பட்டு தலைமை தாங்கவும், அஜ்மீரின் ஃபவுஜுதார் தஹவர் கான் உதவி செய்யவும் உத்தரவிட்டார். ராத்தோர்கள் தோற்கடிக்கப்பட்டு மார்வார் கைப்பற்றப்பட்டது. அது பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மொகலாய ஃபவுஜுதார்கள் நியமிக்கப்பட்டார்கள். ராத்தோர்கள் சிசோடியன்களுடன் சேர்ந்து  மார்வாரைப் போலவே மேவாரில் மொகலாயர்களை எதிர்த்த னர். ஜெய்பூரின் ராஜா மொகலாயர்களுக்கு சாதகமாக இருந்தார். 1679 நவம்பரில் போர் துவங்கி, 1681 வரை நடந்தது. மொகலாயர்களால் உதைய்பூரும், சித்தூரும் வெற்றி கொள்ளப்பட்டது. மொகலாயர்களிடம் போராடி களைத்துப் போன ராஜபுத்திரர்கள் கொரில்லா என்னும் போர் முறையில் இறங்கினார்கள். மொகலாயர்களுக்கு பெருத்த சேதம் விளைவித்து, பீதியை உண்டு பண்ணினார்கள். உதைய்பூர் ராணாவின் மகன் குமார் பீம் சிங் என்பவன் திடீரென்று குஜராத்தின் மீது படையெடுத்து, ராஜபுத்திரர்களிடமிருந்து மொகலாயர்களைத் திசை திருப்பினான். இடார் என்னும் நகரத்தைக் கைப்பற்றி, சில நகரங்களைக் கொள்ளையடித்து முந்நூறுக்கும் மேற்பட்ட மசூதிகளை இடித்தான். ராஜபுத்திர பொருளாதார மந்திரி தயாள் ஷா என்பவன் மால்வாவுக்குள் நுழைந்து மசூதிகளை கொள்ளையடித்து, அங்கிருந்த திருக்குரான் புத்தகங்களை தீயிட்டுக்கொளுத்தி இமாம்களை கேவலப்படுத்தினான். மேலும் திருக்குரான் புத்தகங்களை கிணற்றில் வீசியும், இமாம்களை வலுக்கட்டாயமாக தாடிகளை மழித்தும் துன்புறுத்தினான். இவைகளை டாட் என்பவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். இளவரசர் அக்பரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஔரங்கஸேப் இவரை திரும்ப அழைத்துக் கொண்டு, பெங்காலில் இருந்த இன்னொரு மகன் ஆஸாம் என்பவரை குஜராத்துக்கு வரவழைத்தார். டெக்கனிலிருந்து முஃஅஸ்ஸம் என்பவரும் அழைக்கப்பட்டார். ராஜபுத்திரர்களுக்கும், மராட்டியர்களுக்கும் இடையே தொடர்புகளை துண்டிக்க குஜராத் ஆளுநர் கேட்டுக் கொள்ளப்பட்டார். ராஜபுத்திரர்களை தெற்கிலிருந்து தாக்குமாறும் உத்தரவிடப்பட்டது. பலமுனைகளில் ராஜபுத்திரர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இளவரசர் உதைய்பூரின் ராஜா ராஜ் சிங் இருந்த மலைக்குச் சென்றார். ஒரு வழியாக வெற்றி கிடைக்கும் நிலையில் மீண்டும் இளவரசர் அக்பர் மேவார் வந்தார்.
இந்நிலையில் ராஜபுத்திரர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டார்கள். அவர்கள் இளவரசர் முஃஅஸ்ஸமிடம், அடுத்து அவரை மொகலாய மன்னராக்குவதாக ஆசை காட்டினார்கள். அவரின் தாயார் நவாப் பாய் உறுதியாக அறிவுரை கூறியும் முஃஅஸ்ஸம் மறுத்து விடுகிறார். ராஜ புத்திரர்கள் இதே அணுகுமுறையை இளவரசர் அக்பரிடம் கையாள அவர் ஒத்துப்போகிறார். ராஜபுத்திரர்களுடன் சேர்ந்து 1681 ஜனவரியில் புரட்சி யில் ஈடுபடுகிறார். தன்னை மொகலாய பேரரசராக அறிவித்துக் கொண்டு, பலவந்தமாக முடிசூட்டிக் கொள்ள அஜ்மீருக்கு சென்றார். சூழ்நிலையை நன்றாக ஔரங்கஸேப் ஆராய்ந்தார். அக்பருக்கு அடிப்படை ஆதரவாக இருந்த தஹவர்கானை டெல்லிக்கு அழைத்துக் கொண்டு, மேலும் சில இராணுவ அதிகாரிகளை அழைத்துக் கொண்டார். அக்பர் உதவியின்றி தானாக செயல்படும் திறமை இல்லாதவர். நம்பிக்கையாளர்கள் என்று இருந்த ராஜபுத்திரர்கள் இரவோடிரவாக இளவரசர் அக்பரின் உடமை களை கொள்ளை அடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். தனியாகிப் போன அக்பர் குதிரையில் தப்பித்து டெக்கானில் ஷம்பாஜியிடம் அடைக்கலம் ஆனார். சில நாட்களுக்குப் பிறகு பெர்ஷியா சென்றவர்   1704 ல் அங்கேயே இறந்து போனார். ஆலம்கீரின் ஒவ்வொரு வெற்றியும் அவரின் திறமை யான அணுகுமுறையே காரணம். சரியான நேரத்தில் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு, அக்பரை திசை திருப்பியதால் ராஜபுத்திரர்களின் தந்திரம் தோற்றுப்போனது.
1681 மார்ச் வரை நடந்த மேவார், மார்வார் போர் இருபுறமும் சமாதானம் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளியது. ராஜபுத்திரர்கள் மிகவும் தளர்ந்து போயிருந்தனர். அதேநேரத்தில் தெற்குப்பகுதியில் நிலைமை மோசமாகிப் போனதால், ஔரங்கஸேப் அங்கு போக வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த உதைய்பூர் உடன்படிக்கையானது, ஜெய்சிங் ராணாவாக இருப்பார். ராணா மூன்று மாகாணங்களை மொகலாயர் களிடம் கொடுத்து விட வேண்டும். அதற்கு பதில் ஜிஸ்யா வரி செலுத்தத் தேவையில்லை. மூன்றாண்டுகள் கழித்து மாகாணங்கள் திருப்பித் தரப்படும். ராணா இழப்புத்தொகையாக மூன்று லட்ச ரூபாய் இரண்டாண்டுக்குள் கொடுத்துவிட வேண்டும். ராஜபுத்திரர்களிடமிருந்து ஆயிரம் குதிரை வீரர்கள் எடுத்துக் கொள்ளப்படும். சித்தூர் கோட்டையை புதுப்பிக்கக்கூடாது. ராத்தோர் புரட்சியாளர்களுக்கு ராணா ஆதரவளிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. முப்பதாண்டுகளாக ராஜபுத்திரர்கள் மொகலாயர்களுக்கு எதிராக புரட்சி செய்து கொண்டிருந்தார்கள். இதனால் மால்வாவிலிருந்து டெக்கான் வரை சட்டம் சீர்குலைந்திருந்தது. தெற்கில் மராட்டியர்கள் சொந்தம் கொண்டாடினார்கள். தெற்கே சில ஷியா சுல்தான்களும் இருந்தார்கள். 
1634 ல் தெற்கில் ஷாஜி போன்ஸ்லே என்ற மராட்டிய வீரர் மொகலாய அரசியலில் தலைவலியாக நுழைந்தார். மொகலாயர்களிடமிருந்து அஹ்மத்நகர் மற்றும் பிஜப்பூரை மீட்கப் போராடினார். பெரும் ஆதரவாளர் களுடனும், நவீன ஆயுதங்களுடனும் இருந்தார். அவருக்குத் துணையாக மொகலாய அதிகாரிகளை கடத்தியும், வரி வசூலித்து வரும் வாகனங் களை சிறை பிடித்தும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அவர் மகன் சிவாஜி இருந்தார். சிவாஜியின் பிறப்பு முறையானதல்ல. இவன் ஏதோ மொத்த இந்தியாவையும் ஹிந்துக்கள் சார்பாக மொகலாயர்களிடமிருந்து காப்பாற்றுவது போல் தோற்றம் தந்தான். மராட்டியர்களுக்கு தலைநகரம் போலிருந்த மஹாராஷ்டிரா தெற்கில் நர்மதா ஆறும், எதிர்புறம் விந்தியா, சத்புரா பகுதியுடன் மலைகள் சூழ்ந்திருந்தது. இயறகையாகவே மேற்கு கட் அல்லது சஹ்யாத்ரி பகுதி நீண்ட சுவர் போல் நகரை இரண்டாக பிரித்தது. முடிவில் இருந்த கோட்டை நகரைப் பாதுகாப்பது போல் இருந் தது. இந்த அமைப்பினால் முன்பிருந்த இளவரசர்களும், தலைவர்களும் வடக்கில் அதிகாரம் செய்பவர்களுக்கு பணியாமல் ஆதாயம் அடைந்த னர். மறைந்து தாக்குவதற்கு ஏற்றவாறு மலைப்பாதைகளில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகளும், கோட்டைக் கதவுகள் போலுள்ள நுழைவுவாயில்களும், வெகுதொலைவில் வந்தாலும் அறிந்து கொள் ளும் வசதியுள்ள கண்காணிப்பு தூண்களும் வரணாக அமைந்திருந்தன. இந்த இயற்கை அமைப்பினால் மராட்டியர்களும், சில தகுதிகளை வளர்த்துக் கொண்டார்கள். கொரில்லா தாக்குதல் முறை எதிரிகளின் பலம் குறைக்கவும், அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடிக்கவும் பயனுள்ளதாக இருந்தது. மராட்டியர்களை வெல்வது மொகலாயர் களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
மராட்டியர்கள் ஹிந்துக்களிடையே வெறியூட்டும் விதமாக கவர்ச்சிகரமான ‘பக்தி’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார்கள். இது ஒட்டு மொத்த இந்துக்களையும் ஒன்று படுத்தியது. தகுதியான பிரச்சாரகர் களை வைத்து இந்தியா முழுவதும் பிரபல்யமாக்கினார்கள். (இதுதான் பல பெயர்கள் மாறி மாறி, சில காலம் அடங்கி இன்று ரத்தம் குடிக்கும் RSS என்று இருக்கிறது.) அனைத்து முஸ்லீம்களுக்கு எதிராக தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வண்ணம் வளர்த்தார்கள். எல்லாவழிகளிலும் பிரிவினை வாதத்தை வளர்த்தார்கள். டெக்கானில் இந்துக்களின் புனித இடமாக கருதப்பட்ட பந்தர்பூரை மையமாக வைத்து, துகா ராம்,ராம் தாஸ், வமன் பண்டிட் மற்றும் ஏக்நாத் ஆகிய போதகர்களை வைத்து இந்துக்களை ஒருங்கிணைத்தார்கள். தங்களுக்கு வேண்டிய இராணுவ மற்றும் சமூக நிர்வாகப் பயிற்சிகளை பிஜப்பூர், கோல்கொண்டா ஆகிய ஷியா பிரிவினர் ஆளும் பகுதிகளில் இருந்து பயின்று கொண்டார்கள். முதார் ராவ், மதன் பண்டிட் போன்ற ராஜ் ராய் குடும்பத்தினர் கோல்கொண்டாவில் மந்திரி களாக இருந்தனர். நர்சு, யாசு பண்டிட் போன்ற மராட்டிய தலைவர்கள் பிஜப்பூரில் சிறப்பான இடத்தில் இருந்தார்கள். பாமனி ராஜாக்கள் இந்துக்களின் மீது நம்பிக்கை வைத்து பல பொறுப்பான பதவிகளில் வைத்திருந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் அழுக்குக்கறை போல் படிந்து போன அஹ்மத்நகர் ஆட்சியும், மிரட்டலாகத் தோன்றிய பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆட்சியும் இருக்கும் சூழல் மொகலாயர்களை எதிர்க்க இதுவே தக்க தருணம் என்று மராட்டிய மந்திரிகளையும், வீரர்களையும் நினைக்கத்தோன்றியது.
    முக்கியமாக சிவாஜியைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். மராட்டியர்கள் முக்கிய நடவடிக்கைகள் எடுத்து அதில் வெற்றியும் கண்டனர். மராட்டியர்களுக்கு தலைவராக ஜாகிர்தாராக இருந்த ஷாஜி போன்ஸ்லே. ஷாஜி 1632 ல் பிஜப்பூர் சுல்தானால் பணியமர்த்தப்பட்டு, வஸீராக இருந்த கவாஸ்கானின் நண்பர் முராரி ஜக்தேவா என்பவரின் சிபாரிசில் விரைவாக முன்ணனிக்கு வந்தார். சிரா, பெங்களூர் அடங்கிய மைசூர் மீது படையெடுத்து வெற்றிகரமாக வருமானம் வரும் ஜாகிராக மாற்றினார். 1627 ல் மராட்டியர்கள் பலம் வாய்ந்த சிவானர் பகுதியில் ஷாஜி போன்ஸ்லே, ஜிஜா பாய் தம்பதியினருக்கு மகனாக சிவாஜி போன்ஸ்லே பிறந்தார். (சிவாஜியின் பிறப்பில் பல இரகசியங்கள் இருப்ப தாக சில பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எப்படி சம்பந்தமே இல்லாமல் நேரு குடும்பத்தில் காந்தியின் பெயர் அடைமொழி ஆனதோ அதைப்போல). தந்தை வழியில் உதைப்பூரின் ராஜ்புத் ராஜாக்கள் வழியிலும், தாய் வழியில் தீயோகரியை ஆண்ட யாதவாக்கள் வழியிலும் வந்தவர் என்று சொல்லப்படுகிறது. தீவிர ஹிந்துப் பெண்மனியான சிவாஜியின் தாய் ஜிஜா பாய் முன்னோர்களின் பல வீரக்கதிகளை கூறி மகனை வளர்த்தாராம். ஷாஜியின் பரந்த தோட்டங்களின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த   தரகர் தாதாஜி கொண்டதேவ் என்பவரிடம் சிவாஜியை கல்வி கற்க வைத்தார் தந்தை. கல்வியுடனே குதிரையேற்றம், வேட்டையாடுதல் மற்றும் இராணுவப் பயிற்சிகளைப் பெற்றார். பல திறமைகளைப் பெற்ற சிவாஜியை எதிர்கால அரசியலுக்கு கொண்டுவர மராட்டிய சாமியார்களும், போதகர்களும் திட்டமிட்டார்கள். மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரு ராம் தாஸ் முழக்கமிட்டார். மேலும் சிவாஜி பிராமணர்களையும், பசுவையும் காக்க வந்தவர் என்று கூறினார். (இதனால் தற்போது மராட்டியர்கள் வசமான மஹாராஷ்டிராவில் மாடு அறுக்கத்தடை, மறுபுறம் சிவசேனா மராட்டியர்கள் தவிர அனைவரும் வெளியேறிவிடவேண்டும் என்று அறைகூவல். முஸ்லீம்களுக்கு வேலை மறுப்பு போன்றவை.) தாய் பூமி தாய்க்கு சமானம் என்றும் கூறி சிவாஜியை நன்கு முறுக்கேற்றினார். சிவாஜியும் முறுக்கேறி தாய் நாட்டிற்காக எதையும் செய்ய முன் நின்றார். 
மஹாராஷ்டிராவிலேயே பிறந்து வளர்ந்ததால் அதன் பூமியின் அமைப்பு இவருக்கு அத்துப்படியானது. மவாலிகளின் உதவியுடன் பல கொள்ளை களும், அரசுக்கெதிராக பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார். (சிவாஜியின் கொள்ளைகள் என்று தனி அத்தியாயங்கள் அடங்கிய வரலாறுகள் உண்டு. அதிலிருந்து சில பகுதிகளைத்தான் எழுதுகிறேன்) பத்தொன்பதாவது வயதில் பொது வாழ்வில் ஈடுபட்டான். 1646 ல் பிஜப்பூர் சுல்தான் நோய்வாய்பட்ட போது, பாதுகாப்பு கொடுத்த இடத்திலேயே துரோகித்தனமாக டோர்னா மற்றும் ராய்கர் கோட்டையை சுலபமாகக் கைப்பற்றினான். கொட்டையை மறுசீரமைப்புச் செய்து மாமன் ஷம்பூஜிக்கு கொடுத்தான். சகன்களின் பலமான இந்தாபூர், பாரமதி ஆகியவற்றைக் கைப்பற்றினான். கொண்டானா, புரந்தர், சிங்கார் கோட்டைகளை வரிசையாகக் கைப்பற்றி, குடும்பத்தின் பண்ணைகளை பாதுகாத்துக் கொண்டான். பிஜப்பூர் சுல்தானை நோயிலேயேவிட்டு, நட்பாக இருந்த சில மந்திரிகளை வைத்து தர்பார் நடத்தி, எதிர்ப்பான வர்களை சிறை பிடித்தான். அதை தன் குடும்ப சொத்தாக்கிக் கொண்டான். விரைவில் மராட்டிய குதிரைப்படை ஒன்றை அபாஜி சுந்தர் என்பவனது தலைமையில் கொங்கன் பகுதிக்கு அனுப்பி, கல்யானைக் கைப்பற்றி னான். தென்பகுதி கொலாபாவுக்கு சென்று முஸ்லீம் தலைவர்களைத் தூக்கிவிட்டு இந்துத் தலைவர்களை அமர்த்தி அவர்களின் கருணையைப் பெற்றான்.
   கல்யானைக் கைப்பற்றியதால் பிஜப்பூர் நிர்வாகம் எதிர்ப்பாகிப் போனது. ஓரளவு தேறிய பிஜப்பூர் சுல்தான் தனது இராணுவ உயரதிகாரி முஸ்தபாவுக்கு கட்டுப்படாத காரணத்தாலும், மகன் சிவாஜி தன் நாட்டின் பல பகுதிகளை குடும்பச் சொத்தாக ஆக்கிக் கொண்டதாலும் தந்தை ஷாஜியை சிறையிலடைத்தார். சிறையிலிருந்த தந்தையைக் காப்பாற்றித் தருமாறு அப்போது டெக்கானிலிருந்த பேரரசரின் மகன் முராத் பக் ஷிடம் வேண்டுகோள் விடுத்தான். அவர் தந்தை ஷாஜஹானிடம் முறையிட, மொகலாய எதிர்ப்பைத் தவிர்த்திட வேண்டி பிஜப்பூர் சுல்தான் ஷாஜியை நான்கு ஆண்டுகளுக்கு சிவாஜி பிஜப்பூர் பக்கம் வரக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்தார். சிவாஜி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு பிஜப்பூரின் கவனம் செலுத்தாமல் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் கைப்பற்றிய பகுதிகளின் நிர்வாகத்தை சீர்படுத்தினான்.
  ஷாஜி விடுதலையான பின் கர்நாடகாவில் ஜாகீராகத் தொடர்ந்தார். சிவாஜி மீண்டும் தெற்குப்பகுதியில் தாக்குதல்களைத் தொடர்ந்தான். சிவாஜி தென் கொங்கனின் பரந்த நிலப்பரப்பை பிடிக்க ஜாவ்லியின் ராஜாவான சந்திர ராவ் என்பவருடன் இணைந்தான். அவர் பிஜப்பூரின் மன்னரின் பேரில் அதை நிர்வகித்து வந்தார். தற்போது முஸ்லீம் மாகாணங்களை எதிர்க்க சிவாஜியுடன் சேர சம்மதித்தார். அப்போது அவருக்கு சிவாஜி தனக்கு பெரும் துரோகம் செய்யப் போகிறான் என்று தெரியவில்லை. ராஜாவைக் கொல்லும் நோக்கத்துடன் இரண்டு தரகர்களை ராஜாவின் மகள் மூலமாக சந்திக்க வைத்தான். ராஜா மிகவும் மரியாதயுடன் தரகர்களை வரவேற்க, தனிச் சந்திப்பில் தரகர்கள் ராஜா வைக் குத்திக் கொன்றார்கள். பின் மறைந்தோடி கட்ச் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த சிவாஜியுடன் சேர்ந்து கொண்டார்கள். ஒன்றுமே தெரியாதவர்கள் போல் திடீரென்று அரண்மனையைத் தாக்கினார்கள். ராஜாவின் மகன்கள் பலமாக போராடியும் முடியாமல் சிறைப் பிடிக்கப் பட்டு தென்பூனாவில் நிம்கஸா என்ற இடத்தில் அடைக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட ராஜாவின் அரசப் பெண்கள் ரகசியமாக புரந்தர் என்ற இடத்தில் வைக்கப்பட்டு பல நாட்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர்.
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக