செவ்வாய், 30 ஜூன், 2015

மொகலாய வரலாறு 9

                                                                   இந்த சூழ்நிலையில் ஷெய்க் அலி அக்பர் ஜாமி என்பவரின் மகள் ஹமீதா பானு பேகம் என்பவரை திருமணம் செய்து கொண் டார். ஜோத்பூரின் ராஜா இருபத்தைந்தாயிரம் ராஜ்புத் இராணுவ வீரர்களை தந்து உதவுவதாக வாக்களித்ததின் பேரில் ஹுமாயுன் அவரிடம் சென்றார். ஆனால் ராஜாவும் ஏமாற்றினார். இறுதியாக அமர்கோட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ராணா பிரசாத் ஹுமாயுனுக்கு நம்பிக்கை அளித்து தட்டா மற்றும் பக்கரை தாக்குவதற்கு உதவுவதாகக் கூறினார். இது மீண்டும் ஹுமா யுன் இந்தியாவின் பேரரசர் ஆவதற்கு சந்தர்பத்தைத் தந்தது. இந்த தருணத்தில் ஹுமாயுனுக்கு அக்பர் என்ற மகன் பிறந்தார். ராணா பிரசாதின் உதவியுடன் பக்கரை தாக்கினார். இடையில் ராஜ்புத் வீரர்களுக்கும், ஹுமாயுனின் வீரர் களுக்கும் இணக்கமில்லாமல் போக, ஹுமாயுனின் வீரர்கள் தனிமைப்பட்ட னர். அதிர்ஷ்டவசமாக பக்கரின் ஆட்சியாளர் போரினால் தளர்ந்து சமாதானத் திற்கு உடன்பட்டார். சமாதானத்தின் அடையாளமாக ஹுமாயுனுக்கு முப்பது படகுகளும், பத்தாயிரம் மிஷ்கால்களும், ஆயிரம் மூட்டை தானியங்களும், முன்னூறு ஒட்டகங்களும் கிடைத்தன. அத்தனையும் எடுத்துக் கொண்டு கந் தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த பகுதி முழுவதும் சகோதரர்கள் காம்ரான், அஸ்கர் மற்றும் ஹிந்தால் வசமிருந்தால் பாதுகாப்பிருக்காது என கருதி பெர்ஷியா செல்ல முடிவெடுத்து ஷாவுக்கு தெரியப்படுத்தினார். தனது ஒரு வயது மகன் அக்பரை பிரிந்து பெர்ஷியா செல்ல ஹுமாயுன் முடிவெடுத் தார். பெர்ஷியாவின் ஷா ஹுமாயுனுக்கு ராஜ வரவேற்பு கொடுக்க வேண்டி தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பெர்ஷியாவின் ஷா ஷியா பிரிவு கொள்கை கொண்டவராக இருந்ததால், சுன்னிப் பிரிவு ஹுமாயுனையும் ஷியாவுக்கு மாறும்படி வற்புறுத்தினார். ஹுமாயுனின் உடனிருந்தவர்களும் ஆலோசனை கூறியதால் ஷியா பிரிவுக்கு மாற ஒப்புக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷா காபூல், கந்தார் மற்றும் பொகாரா ஆகியவற்றை வெல்ல ஹுமாயுனுக்கு இராணுவ உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இடைப்பட்ட ஷேர் ஷா சூரியின் ஆட்சி                              
                                                  வெற்றிபெற்ற ஷேர் ஷா சூர் டெல்லியைக் கைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டார். ஷேர் ஷாவின் உண்மைபெயர் ஃபரீத். இவர் 1486 ல் ஹிசார்ஃபிரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் ஹசன். ஹசனுக்கு நான்கு மனைவிகள். ஷேர் ஷா சிறுவயதில் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவித்தார். தந்தை ஹசன் மகன்களிடம் பாசமற்று இருந் தார். ஃபரீத் என்ற ஷேர்ஷா வீட்டைவிட்டு விலகி, ஜான்பூர் என்ற இடத்தில் தந்தையின் நண்பர் பீஹாரின் கவர்னராய் இருந்த ஜமால் கான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளைக் கற்றார். ஷேர்ஷாவின் திறமைகளை அறிந்த கவர்னர் ஜமால்கான் ஹசனிடம் பிள்ளை யிடம் கனிவாக இருக்க கேட்டுக்கொண்டார். திரும்ப வந்த மகன் ஃபரீதுக்கு ஹசன் நிர்வாகத்தில் வேலை கொடுத்தார். இவரின்நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்தது. 1519 ல் மாற்றாந் தாய்களின் பிரச்சினையால் அந்த வேலையிலிரு ந்து திரும்பிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பீஹார் சென்று தரியா கான் லோஹானியின் மகன் கவர்னர் பஹார்கானிடம் வேலைக்குச் சேர்ந்தார். 1522 லிருந்து 1526 வரை ஃபரீத் பஹார்கானிடம் மிகவும் சிறப்பாக சமூக மற்றும் வருவாய்துறையில் பணியாற்றினார். இயற்கையாக இவருக்கிருந்த வேட்டை யாடும் திறமையால் ஒரு முறை புலி ஒன்றைக் கொன்றதால் “ஷேர்கான்” என்ற சிறப்புப்பெயர் பெற்றார். தனது எஜமானரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் ராஜினாமா செய்துவிட்டு, பாபர் அவர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்.
                                                             இவரின் திறமைகளைக்கண்ட பாபர் இவரை பல மாகாணங்களுக்கு கவர்னராக்கினார். அதில் ஷெர்கானின் தந்தையார் இருந்த மாகாணமும் அடங்கும். இதற்கிடையில் பஹார்கான் மரணமடைய அவர் மகன் ஜலால்கான் பதவிக்கு வருகிறார். ஜலால்கான் வயதில் சிறியவராக இருந்ததால், ஷேர்கான் அதிகாரத்தில் துணைக்கு இருந்து நிர்வகித்தார். ஜலால்கான் பெரியவராக வளர்ந்ததும், ஷேர்கானின் உதவியின்றி தானே தனியாக நிர்வகிக்கவும், மொத்த ஆப்கானையும் ஆள்வதற்கும் விருப்பம் கொண்டார். ஜலால்கான் பெங்காலின் ஆட்சியாளரைத் துணைக்கு அழைத்துக் கொண்டார். ஆனால், இவர்களின் கூட்டணி சூரஜ்கர் என்ற இடத்தில் ஷேர் கானிடம் தோற்க அவர் பீஹாரின் ஆட்சியாளர் ஆனார். இதிலிருந்து ஷேர்கான் சோர்வடையாமல் ஆட்சியின் அடுத்த முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். பீஹா ருக்குப் பிறகு, பெங்கால் இவரை ஈர்த்தது 1536 ன் ஆரம்பத்தில் கௌர் நகரை நெருங்கினார். பெங்காலின் ஆட்சியாளர் ஷேர் கானுடன் போரிடுவதற்கு பதில், பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து காப்பாற்றிக்கொண்டார். அடுத்த வருடம் ஷேர்கான் மீண்டும் படையெடுத்து கௌர் மற்றும் பலமான ரோஹ்டாஸ் பகுதியை வென்று பெங்காலைக் கைப்பற்றினார்.  ஷேர்கானின் கிழக்குப்புற வெற்றிகளைக் கேள்விப்பட்ட ஹுமாயுன் தாமதிக்காமல் பெங்கா லைக் கைப்பற்ற படையெடுத்தார்.
                                    மொகலாயப் படைகள் கௌர் மற்றும் ஜன்னத்பாத் நகரங்களைக் கைப்பற்றியது. ஷேர்கானும் பீஹாரின் ஜான்பூரைக் கைப்பற்றி கன்னாஜ் வரை வந்தார். ஷேர்கானின் நடவடிக்கையை அறிந்த ஹுமாயுன் தனது தலைமையிலேயே சவ்ஸா என்ற இடத்தில் போருக்குத் தயாரானார். கங்கை நதி யைக் கடந்து முங்கீர் என்ற இடத்தை அடைந்தவுடன், நிலைமை வேறாக இருக்க  ஷேர்கானுடன் சமாதானத்திற்கு முயன்றார். ஆனால், முடி யாமல் போக சவ்ஸா போரில் ஹுமாயுன் தோல்வியுற்றார். பேரரசர் ஹுமா யுன் தப்பிக்கும்போது ஆற்றில் தவறிவிழ, நிஜாம் என்னும் பணியாள் அரசரை காப்பாற்றினான். நிஜாம் இரண்டு நாட்கள் ஹுமாயுனுடன் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டான். வெற்றி பெற்ற ஷேர்கான் தன்னை மன்னன் தகுதிக்கு ஆளாக்கிக் கொண்டார். ஆட்சியில் தனது சகோதரர்களை உதவிக்கு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டார். ஆனால், அவர் சகோதரர்கள் இவரை ஒதுக்கிவிட்டு, பாபரின் பிள்ளைகளுடன் நேசமாக இருந்தனர். ஷேர்கான் கங் கையைக் கடந்து கன்னாஜ் சென்று விடாமல் ஹுமாயுனுடன் போரிட்டார். இந்த முறையும் ஹுமாயுன் தோல்வியுற்று தப்பிச் சென்றார்.
                                             ஷேர்கான் இப்போது பெங்கால், பீஹார், ஜான்பூர் மற்றும் டெல்லிக்கு ஆட்சியாளரானார். பஞ்சாபையும், ஆக்ராவையும் வென்று முழு மையாக மொகலாயர்களை இந்தியாவை விட்டு விரட்ட எண்ணி புதிய போரைத் துவங்கினார். முதலில் பஞ்சாப் அவர் வசமானது. ஹுமாயுனின் சகோதரர் கம்ரான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒப்படைத்து விட்டார். இருந்தா லும் கம்ரான் காஷ்மீரின் அதிகாரத்தில் இருந்த ஹுமாயுனின் இன்னொரு சகோதரர் மிர்ஸா ஹிண்டாலுடன் சேர்ந்து வடமேற்கில் எதிர்க்கலாம் என்று எச்சரிக்கை அடைந்தார். இதனால், ஜீலம் நதிக்கரையில் பலமான கோட்டை ஒன்றை நிர்மாணித்து 50,000 வீரர்களையும், நம்பிக்கையான இராணுவ அதிகா ரியையும் காவலுக்கு வைத்தார். இப்போது ஷேர்கான் பெங்காலின் இன்னொரு பகுதியான மால்வாவின் மீது பார்வையைத் திருப்பினார். மால்வாவை பலமற்ற இரண்டாம் முஹமது என்பவர் ஆண்டு வந்தார். மல்லூகான் என்ற உள்ளூர் தலைவன் ஒருவன் இரண்டாம் முஹமதின் நிர்வாகம் சரியில்லாத தால், மாண்டு, உஜ்ஜைனி, சாரங்க்பூர் மற்றும் சில பகுதிகளை இணைத்து தனி சுதந்திரப்பிரதேசமாக ஆண்டுவந்தான்.
                                                          மல்லூகான் இல்லாமல் மேலும் இரண்டு உள்ளூர் தலைவர்கள் அருகில் இரு பிரதேசங்களை ஆண்டு வந்தார்கள். இந்த அருகா மை குழப்பங்களை கவனித்த ஷேர்கான் அந்த பிரதேசங்களை வெற்றிகொள்ள    எண்ணினார். 1542 ல் குவாலியர், சாரங்க்பூர், உஜ் ஜைனி மற்றும் மால்வா பகுதிகளை வென்றார். 1543 ல் ராஜபுதனா மற்றும் மார்வாரின் தலைநகர் ஜோத் பூரையும் வென்றார். மால் தேவாவில் ஷேர்கானுக்கு ராஜபுத்திரர்களிடமிரு ந்து பலத்த எதிர்ப்பு இருந்தது. ராஜபுத்திரர்கள் சதித்திட்டம் வைத்திருந்தனர். போரில் அதிகமான வன்முறையைக் கையாண்டனர். ஆனால், இறுதியில் ஷேர்கான் வெற்றி பெற்றார். வெற்றியின் உற்சாகத்தால், மவுண்ட் அபுவை வென்று, சித்தூரை நோக்கி முன்னேறினார். சாதாரண வாழ்க்கையிலிருந்து துவங்கிய ஷேர்கான் பல துறைகளிலும் சிறப்பான அனுபவம் பெற்றிருந்தார். இவரின் கீழிருந்த ராஜ்ஜியம் சூர் பேரரசு என்று அழைக்கப்பட்டது. இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த அறிவாளியாக இருந்தார். கீன் என்பவரின் கருத்து ஷேர்கானை மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது. பின்னால் வந்த மொகலாய மன் னர்கள் இவரின் நிர்வாக வழிமுறையையே தொடர்ந்தனர். ஆக்ராவிலிருந்து புர்ஹான்பூர், ஆக்ராவிலிருந்து பைனாஹ் வழியாக மார்வார், லாஹூரிலிரு ந்து முல்தான் பகுதிகளுக்கு சாலைகளை அமைத்திருந்தார். சாலைகளின் வழியில் மசூதிகளைக்கட்டி, பூந்தோட்டங்களை அமைத்து அதிகாரிகளின் மேற்பார்வையில் நீர்விட்டு பாதுகாக்கச் செய்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக