புதன், 27 ஆகஸ்ட், 2014

உமய்யாத்கள் வரலாறு 4

திவான் அல் குதத் என்னும் அடுத்த துறையானது நீதியை சார்ந்தது. ஆரம்பத்தில் இஸ்லாமில் நீதித்துறை நபி(ஸல்) அவர்களையும் அவர்களுக்குப் பின்னால் அவர்களுடன் இருந்து இறைவன் திருக்குரானில் சுட்டிக் காட்டியுள்ள வழிமுறையில் சட்டங்களை பாகுபாடின்றி கற்று நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக இருந்தவர் களின் நேரடிப் பார்வையில் கவனித்து வரப்பட்டது. இஸ்லாமிய எல்லைகள் பெருக பெருக இரண்டாவது கலீஃபா உமர் இப்ன் கத்தாப் (ரலி) அவர்கள் 643 ல் எகிப்தில் நீதிக்கென ‘காதி’ என்பவர் தலைமையில் நிர்வாக துறையை உண்டாக்கினார்கள் இதையே உமய்யாத்களின் ஆட்சியில் அனைத்து கலீஃபாக்களும் தொடர்ந்தனர். திவான் அல் ஜுந்த் என்னும் அடுத்த துறையானது இராணுவம் சார்ந்தது. இராணுவத்தினரின் ஊதியம், விடுமுறைகள், ஓய்வூதியம், படைகளை நகர்த்துதல், இராணுவம் சம்பந்தமான செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்கள். ஹிஷாம் ஆட்சிகாலத்தில் இராணுவ ஊழியர்களுக்கு போரில் ஈடுபடும் காலங்களில் மட்டும் ஊதியம் பெறும் நடை முறையைக் கொண்டு வந்தார். உமய்யாத்கள் ஒரே நிர்வாகத்தின் கிழ் இயங்கும் ஐந்து படைப் பிரிவு களை அமைத்திருந்தனர். மத்தியப்படை, இரண்டு பாதுகாப்புப் படைகள், வாகனப்படை மற்றும் முண்ணனிப்படை அணிவகுப்பானாலும், போரில் ஈடுபட்டாலும் இதே போன்ற அமைப்பில் தான் படை நகரும். இராணுவம் மூன்று பிரிவுகளாக காலாட்படை, குதிரைப்படை மற்றும் ஆயுதப்படை எனப் பிரிக்கப் பட்டிருந்தது. வீரர்கள் கிரேக்கர்களைப் போல் சீருடை அணிந்திருந்தனர். போரின் போது பளு வான இயந்திரங்களையும், போர்தளவாடங்களையும் ஒட்டகங்களின் மீது வைத்து எடுத்துச் செல்வார்கள். இரண்டாம் மர்வான் குர்துஸ்களை அறிமுகப்படுத்தி சிறிய படை ஒன்றை அமைத்தார்.   
முதன்முதலில் மூ ஆவியா அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் தபால்துறை அறிமுகமானது. அப்த் அல் மாலிக் அவர்கள் இத்துறையை சாம்ராஜ்ஜியம் முழுக்க விரிவுபடுத்தி தபால்கள் பயன்பாட்டை அதிகப்படுத்தினார்கள். வலீத் அவர்களின் ஆட்சியில் இத்துறை பெரிதும் பயன்பட்டது. கலீஃபா உமர் பின் அப்துல் அஜீஸ் காலத்தில் இத்துறைக்கென பிரத்யேகமான வாகனங்களும், குதிரைகளும் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன. முக்கிய சாலைகள் 19 கி.மீ அளவுகளில் அடையாளமிடப்பட்டு குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகிய வற்றின் மீது தபால்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இத்துறை உமய்யாத்களின் ஆட்சியில் ஒரு வெற்றிகரமான துறையாக இருந்தது. யூஸுஃப் பின் உமர் ஈராக் கில் கவர்னராக இருந்தபோது ஆண்டுக்கு 4,000,000 திர்ஹாம்கள் வருவாய் ஈட்டி யது. உமய்யாத்களின் சாம்ராஜ்ஜியத்தில் சமூகம் முஸ்லீம் அரபுகள், அரபு அல் லாத முஸ்லீம்கள், முஸ்லீமல்லாதவர்கள் (கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் ஸோரோஸ்ட்ரியங்கள்) மற்றும் அடிமைகள் என நான்கு வகையாகப் பிரிக்கப் பட்டிருந்தது. முஸ்லீம் அரபுகள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்து கொண்டு வெற்றி பெற்ற பகுதிகளை நிர்வகித்தார்கள். ஆனால் இஸ்லாம் அரபு கள் மட்டும் உயர்ந்தவர்கள் அல்ல அனைவரையும் சமமாகக் கருதவேண்டும் என்று நபி (ஸல்) கள் நாயகம் சொல்லியிருக் கிறார்கள். அரபு முஸ்லீம்கள் யாருடனும் கலந்து கொள்ளாமல் உயர் அந்தஸ்திலேயே இருந்தார்கள். இது சமூகத்தில் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்தது. இஸ்லாமிய மதம் பெருக பெருக முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகமானது. அரபுக்களுக்கினையான அந்தஸ்து இல்லாவிட்டாலும் தாழ்வாக நடத்தப்பட்டார்கள். மேலும், முஸ்லீம் அல்லாத வர்களின் எண்ணிக்கை குறைய குறைய வரியும் குறைந்து வருவாய் கீழ் நோக்கி சென்றது. இது அப்பாஸிட்களின் வருகை வரை இருந்தது. 
உமய்யாத்கள் ஆட்சியில் முஸ்லீம் அல்லாதவர்கள் ‘திம்மிகள்’ என்று அழைக்கப் பட்டார்கள். அரசு அவர்களுக்கு இரண்டாம் தர குடிமக்களாக கருதி உரிய பாது காப்பும், அரசியலிலும் இடம் கொடுத்தது. அவர்கள் மத சட்டப்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு சுதந்திரமாக நடத்தப் பட்டனர். சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரப் பதவிகளில் இல்லாவிட்டாலும், உயர் பதவிகளில் இருந்தார்கள். அவர்களின் மத சம்பந்தமான போதனை கள், பேச்சுக்களை அனுமதித்தனர். ஆனால், அநேக சிந்தனையாளர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். உமய்யாத்கள் நிர்வாகம், கலை, ஆட்சி பரப்பு ஆகியவற்றை திறம்பட செய்தார்கள். ஆட்சியை இஸ்லாமிய வழியி லேயே ஆண்டார்கள். ராஷிதீன் என்னும் மத சார்புள்ள கல்விசாலை அமைத்தார் கள். அரபு மொழியை ஆட்சி மொழி ஆக்கினார்கள். தாங்கள் பூமியில் இறைவ னின் ஊழியர்கள் என்பதையும், ஒரு நாள் தாங்கள் அனைத்துக்கும் இறைவனிடம் பதிலளிக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார்கள்.        
பெரும்பான்மை சரித்திர ஆசிரியர்கள் உமய்யாக்கள் நேர்மையான கலீஃபாக் களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து விலகி தங்கள் உறவினர் களையே ஆட்சி பொறுப் புக்கு கொண்டு வந்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு ஆதாரமாக உமய்யாத்கள் தங்களை “அல்லாஹ் வின் தூதரின் வழியில் வந்தவர்கள்” (கலிஃபத் ரஸூலல்லாஹ்) என்று சொல்லாமல் அல்லாஹ்வின் உதவியாளர்கள் (கலிஃபத் அல்லாஹ்) என்று சொல்லிக் கொண்டதை காரணம் காட்டுகிறார்கள். இதனால் உமய்யாத்கள் அல்லாஹ்வின் நேரடி உதவியாளர்களாகி, எந்த விஷயத்திற்கும் மத சம்பந்தமான அதிகாரத்தை எந்த இமாம்களி டமிருந்தும், மதபோதகர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், ஈராக்கில் இருந்த உயர்ந்த இமாம்கள் மற்றும் மதபோதகர்களின் படைப்புகள் உமய்யாத்களின் ஆட்சியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அதில் தபரி, பலதூரி போன்ற அரிய படைப்புகள் ஆதாரமாக விளங்குகின்றன. உமய்யாத்களின் ஆட்சி அரபுலகின் பொற்கால ஆட்சியாக கரு தப்படுகிறது. சாம்ராஜ்ஜியத்திற்கு ஆரம்ப அஸ்திவாரமாக மூஆவியா அவர் களுக்கு ஆதரவளித்த டமாஸ்கஸ் நகரமும், சிரியா நாடும் இன்றளவும் சாட்சி யாக இருக்கிறது. இன்றும் பான் அராப் கலர் (PAN ARAB COLOR) என்னும் நான்கு வண்ணங்களில் பல இஸ்லாமிய நாடுகளில் நாட்டுக்கேற்ப அமைப்புகளிலுள்ள வெள்ளை நிறம் உமய்யாத்களின் ஆட்சியை பறை சாற்றுகிறது.             
இஸ்லாமிய சுன்னி பிரிவு மக்கள் மூஆவியா குடும்பத்தின் மூத்த தம்பதிகள் அபுசுஃப்யான் இப்ன் ஹர்பும், அவர் மனைவி ஹிந்த் பின்த் உத்பாஹ்வும் இஸ் லாம் மீதும் குறிப்பாக நபி(ஸல்) அவர்கள் மீதும் மக்கா நகரம் வெற்றி கொள் ளும் வரை பகையாக இருந்ததை ஒப்புக் கொள்கிறார்கள். அரபுக்களின் பழங்குடிப் பெருமையின் காரணமாகவே அலி(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, மூ ஆவியா ராஷிதீன் கலீஃபாக்களை தடுத்தார்கள் என்ற குற்றச்சொல் நிலவுகிறது. மேலும், மூஆவியாவுக்குப் பிறகு வந்த எல்லா உமய்யாத் கலீஃபாக்களும் பாவி கள் என்றும், முஸ்லீம் உம்மாக்களுக்கு துன்பங்களையே தந்தனர் என்றும் சுன்னி பிரிவு முஸ்லீம்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு திருக்குரானின் 17:60 வது வசனத்தையும், தார் அல் மன்தூர் என்ற நூலில் இமாம் அல் சுயூத்தி அவர்கள் உமய்யாத்களை சபிக்கப்பட்ட ஜக்கூம் மரமாக சித்தரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். இருந்தாலும் கலீஃபா உமர் இப்ன் அப்த் அல் அஜீஸ் என்பவர் நேர் வழி பெற்ற நான்கு கலிஃபாக்களுக்குப் பிறகு சிறந்த கலீஃபா என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இவர் ஆட்சி மிகவும் நேர்மை மிக்கதாகவும், இறையச்சத்துடன் ஆண்டதாகவும், முஸ்லீமாக மதம் மாறியவர்களுக்கு ஜிஸ்யா என்ற வரியை முழுமையாக நீக்கினாரென்றும் அதனாலேயே 720 ல் விஷம் வைத்துக் கொல்லப் பட்டதாகவும் கூறுகிறார்கள். 
ஷியா பிரிவு முஸ்லீம்கள் உமய்யாத்களின் ஆட்சி மீது மிகுந்த வெறுப்பையே வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் ‘சுல்ஹ் அல் ஹசன்’ புத்தகத்தில் அலி (ரலி) அவர்கள் உமய்யாக்களை மோசமான பித்னாக்கள் என்று கருத்து கூறியதாக சொல்கிறார்கள். ஆட்சியின் இறுதிகாலம் 750 வரை  உமய்யாத்களின் சக்தி வாய்ந்த தலைநகராக சிரியா விளங்கியது. அதன் பிறகு, இஸ்லாமிய ஆட்சி ஐபீரிய தீபகற்பம் வரை பரந்து தைஃபாஸ், பெர்பெர், க்ரனாடா என்று பல சிறிய குடியரசாகி பதினாறாம் நூற்றாண்டு வரை ஆண்டது.
712 ல் முஹம்மது பின் காசிம் என்னும் உமய்யாத் கலீஜிலிருந்து இந்து ஆற்றின் கரையோர பாகிஸ்தானின் சிந்து மற்றும் இந்தியாவின் சிந்து, பஞ்சாப் வரை வென்றார். இந்த வெற்றி உமய்யாத்களுக்கு விலை உயர்ந்த மாபெரும் வெற்றி யாக கருதப்பட்டது. அடுத்து இந்தியாவின் ராஜஸ்தானையும் வென்றார்கள். மேலும் உமய்யாத்களை இந்தியாவில் முன்னேற விடாமல் எட்டாம் நூற்றாண் டில் ப்ரதிஹரா பேரரசைச் சேர்ந்த மன்னன் நாகபத்தாவும், தென்னிந்திய பகுதி யைச் சேர்ந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்யனும் போரிட்டுத் தடுத்தனர். மேலும் இந்தியாவின் மீது கவனம் செலுத்தாமல் அப்போதைய கலீஃபா மஹ்தி படைகளை திரும்ப அழைத்துக் கொண்டார். உமய்யாத்கள் உலகம் கண்டிராத வகையில் 5.79 மில்லியன் சதுர மைல் பரப்பளவுள்ள நிலப்பரப்பை ஆண்டார்கள். இதன் பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ஐபீரிய தீபகற்பத்தில் வட கிறிஸ்தவ நாடுகளுக்கு ஆண்டு கப்பம் செலுத்தும் ஒப்பந் தத்துடன் இளவரசர்களின் ஆட்சி கொண்ட சிறிய குடியரசுகளாக தைஃபா, க்ரனாடா குடியரசுகளாக மாறின. ஐபீரியாவில் இறுதியாக முஸ்லீம்கள் 1492 வரை ஆண்டார்கள். நஸ்ரித் குடியரசின் ஏழாம் முஹம்மது (போப்தில் என்று அறியப்பட்டவர்) என்பவர் இறுதி ஆட்சியாளராக இருந்து அரகானின் இரண்டாம் ஃபெர்டினண்ட், காஸ்டிலின் முதலாம் இசபெல்லா, கத்தோலிக்க சக்கரவர்த்தி ரெயிஸ் கேடொலி கோஸ் ஆகியோரிடம் தனது குடியரசை ஒப்படைத்தார். 

1 கருத்து:

  1. ஐயா உங்கள் சரித்திரங்கள் நன்றாக உள்ளது
    ஜப்பார்

    பதிலளிநீக்கு