வியாழன், 2 ஏப்ரல், 2015

இஸ்மாயிலிக்கள் வரலாறு



                                                 இஸ்மாயிலிக்கள் என்பவர்கள் “ஷியா” பிரிவிலிருந்து இமாம்களின் வரிசைப்போட்டியால் பிரிந்து போனவர்கள். எட்டாம் நூற்றாண்டில் ஏழாவது இமாமைத் தொடர்வதில் ஷியாக்களுக்கும், இஸ்மாயிலி களுக்கும் பிரிவு வந்தது. ஷியாக்கள் ஏழாவது இமாம் அந்தஸ்தை மூஸா என்பவ ருக்கு அளித்தார்கள். ஆனால், இஸ்மாயிலிக்கள் அவரின் மூத்த சகோதரர் இஸ் மாயில் இப்ன் ஜாஃபர் என்பவரை ஆதரித்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் இவர்கள் பிரபல்யமாகி சிரியாவில் பலமாக தளம் அமைத்து அப்பாஸிட் ஆட்சியாளர்களை எதிர்த்தார்கள். பத்தாம் நூற்றாண்டில் அப்பாஸிட் ஆட்சியின் ஒரு பகுதியான வட அப்பிரிக்காவின் கடற்கரை நகரங்கள் அத்தனையும் ஆண்டார்கள். இஸ்மாயிலிக்களின் தலைவர் உபைதுல்லா என்பவர் 909 ல் வட ஆப்பிரிக்காவின் கடற்கரைப் பகுதி மற்றும் அக்லாபித்கள் ஆண்ட கைரொவன் ஆகிய பகுதிகளை வென்றார். இவர் தனது பகுதிகளை “ஃபாத்திமிட்” பேரரசு என்று அழைத்து தான் ஷியாக்களின் கலீஃபாவும், அலி (ரலி) மற்றும் ஃபாத்திமா(ரஅ) அவர்களின் வழியில் வந்தவர் என்றும் அறிவித்துக்கொண்டார்.
                                          அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபாத்திமிட் இராணுவம் எகிப்தை வென்று தளமாக்கி வட ஆப்பிரிக்க கரைப் பகுதிகளை வென்றது. நைல் நதியின் கரையில் முஸ்லீம்களின் ஒற்றர்கள் நகரத்தை ஒட்டி “அல் கஹிரா” (கெய்ரோ) என்ற நகரை புதிய தலைநகராக ஆக்கிக்கொண்டனர். 970 ல் கெய்ரோவில் அல் அஸார் பல்கலைக்கழக மசூதியைக் கட்டி இஸ்லாமிய மதக்கல்வி பயிலும் கல்லூரி ஆக்கினார்கள். இவர்களின் ஆட்சியின் உச்சத்தில் பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவைத் தலைநகரமாக்கி சிஸிலி, மேற்கு அரேபியா(மக்கா, மதீனா உள்ளடக்கியது) மற்றும் மெடிட்டரேனியன் கரையைத் தொடந்து சிரியா வரை ஃபாத்திமிட் பேரரசாக ஆண்டார்கள். 1171 ல் இஸ்மாயி லிய பேரரசு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற சுல்தானாக ஸலாவுத் தீன் அவர்கள் கிளர்ந்தெழுந்து சிலுவைப்போராளிகளை எதிர்த்தபோது, இவர் களின் பேரரசும் நொறுங்கியது. ஸலாவுத்தீன் பெயர் பாக்தாதிலும், வெள்ளிக் கிழமை தொழுகை உரையில் கலீஃபாவின் பெயராகக் கூறும் போதும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனது. இஸ்மாயிலிக்கள் குறுக்கிடும் போது எகிப்து மீண்டும் இஸ்லாமிய சுன்னி பிரிவுக்கு மாறியிருந்தது.
                                         நிஸாரி இஸ்மாயிலிக்கள் என்ற ஒன்று தனி அமைப்பாக முன்னேறியது. அவர்கள் அலி(ரலி) மற்றும் ஃபாத்திம(ரஅ) அவர்களின் வழியில் வந்த நிஸார் என்பவரின் தொடர்ச்சியாளர்கள் என்றார்கள். பதினொன் றாம் நூற்றாண்டின் இறுதியில் வட பெர்ஷியாவைக் கைப்பற்றினர். அவர்கள் சரித்திரத்தில் தீவிரவாததிற்கும், இரகசிய கொலைகளுக்கும் பெயர் போனவர்கள். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் பலமாக இவர்கள் இருந்தபோது தகர்க்க முடியாத அலமுத் கோட்டையை பிடிக்கும்போது இவர்களின் இரகசியக் கொலைத்திட்டம் வெளியே தெரியவந்தது. இந்த கொலைகளுக்காக முகாம்கள் அமைத்து பயிற்சி கொடுத்தார்கள். உளவாளிகளை எதிரிகளின் நகரத்திலும் நடமாடவிட்டு கண்காணித்தார்கள். இவர்களின் எதிரிகள் பெரிய சாம்ராஜ்ஜி யத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். செல்ஜுக் துருக்கி மற்றும் பாக்தாத் கலீஃபாக்களை இந்த இரகசிய கொலையாளிகள் கொன்றார்கள். பயிற்சி பெற் றவர்கள் எப்படியாவது ஒரு பிரபலமானவரைக் கொன்றுவிடுவார்கள். சில சம யங்களில் கெய்ரோவில் இஸ்மாயிலைச் சேர்ந்தவர்களையே கொன்றார்கள். இருமுறை இந்த கொலையாளிகள் சுல்தான் ஸலாவுத்தீன் அவர்களைக் கொல்ல திட்டமிட்டு தவறினார்கள். இந்த கொலைகார நிஸாமி இஸ்மாயிலிகளை அழிக்க முடியாமல் திணறியபோது பனிரெண்டாம் நூற்றாண்டில் எகிப்து மம்லுக் சுல்தா னாலும், மங்கோலிய மன்னர் ஹுலகு வாலும் அழிக்கப்பட்டனர். இவர்களில் 1818 ல் பெர்ஷியாவின் ஷா ஒருவர் அகா கான் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
                                        இவரை இமாமாக ஏற்றவர்கள் இன்றும் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானில் பெருவாரியாகவும், பங்களாதேஷ், சிரியா, ஏமன், சௌதி அரேபியா, ஜோர்டான், கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா, லெபனான் ஆகிய நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள். தற்போது இவர்கள் சாதகமான கனடா, ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, டிரினிடாட் டொபாகோ (மேற்கு இந்தியத் தீவுகள்) ஆகிய நாடுகளில் குடியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபாத்திமா (ரஅ), அலி (ரலி) அவர்களின் மகளான ஸைனப் என்பவரின் கர்பலா பற்றிய தஃவாவே (ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரின் மரணம் குறித்த உரை) இஸ்மாயிலிக்களின் முதல் உரையாகக் கருதப்படுகிறது. இன்றளவும் பெருவாரியான சுன்னிப்பிரிவு முஸ்லீம்கள் இவர்களை உண்மை முஸ்லீம்களாகக் கருத்தில் கொள்ளாததால் இவர்களைப் பற்றிய சரித்திரம் முழுதாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலோட்டமாகத் தான் நானும் சொல்கிறேன்.
                                      மஹ்தியாகவும், பெர்ஷிய மன்னர் பரம்பரையில் வந்தவரென்றும் தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொண்ட அபுல் ஃபத்ல் அல் இஸ்ஃபஹானி என்பவரின் வழியில் வந்தவர்கள் பத்தாம் நூற்றாண்டுகளில் பஹ்ரைனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டனர். அபு தாஹிர் அல் ஜன்னபி என்பவன் தலைமையில் 930 ல் மக்காவின் கஃபாவின் கருங்கல்லை திருடினார்கள். இந்த இஸ்ஃபஹானியின் வருகைக்குப் பிறகு, தாங்கள் வணங்கும் திசையை கஃபாவிலிருந்து “ஸோரோஸ்டிரியன்கள்” (இவர்களைப் பற்றித் தனி கட்டுரை பின்னால் உண்டு) என்னும் பிரிவினரின் தீயின் திசையில் ஆக்கிக் கொண்டார்கள். 1056 ல் ஹசன் அல் ஸப்பாஹ் ( அரபியில் இவர்களை எழுவர் என்பார்கள். சபா என்றால் ஏழு என்று அர்த்தம்) என்பவரின் அலாமுத் தாக்குதல் மிகவும் புகழ் பெற்றது. இரண்டாண்டுகளில் அலாமுத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களை இஸ்மாயிலிக்குள் இணைய வைத்தார். இன்றும் அமெரிக்க, சியோனிச, மேற்கத்திய நாடுகள் உலகத் தீவிரவாத்திற்கு தேர்ந்தெடுக்கும் முஸ்லீம்கள் இந்த இஸ்மாயிலீக்களைத்தான். இவர்கள் தங்கள் கொள்கையில் வெல்ல யாருடனும் கூடி எதுவும் செய்வார்கள். அமெரிக்கர்களின் ரகசியத் தகவலை வெளியிட்ட அசான்கே (பெயர் சரியா?) என்பவரை நாடு நாடாகத் துரத்தி வேட்டையாடியவர்களுக்கு, 15 ஆண்டுக்கு முன்பே இறந்து போன பின் லாடனின் பெயரை வைத்து இன்றுவரை அல் காயிதே மிரட்டுகிறது என்று சொல்லி உலக அரசியல் நடத்துகிறார்களே, எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்றா தெரியவில்லை. தனக்கு என்றால் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதுவே உலக அரசியலுக்கு என்றால் மூன்று பெரிய போர்கப்பல்கள், 12 சிறிய போர்கப்பல்களை மத்திய ஆசியாவின் இஸ்லாமிய கடற்பகுதிகளிலும், இஸ்லாமிய நாட்டு துறைமுகங்களிலும் நிறுத்தி பல ஆண்டாக நேட்டொ என்னும் பல நாட்டு கூட்டுப்படைகளையும் சேர்த்துக் கொண்டு சுன்னி முஸ்லீம்களை வேட்டையாடுகிறார்கள். 20 ஆண்டுக்கும் மேலாக நடக்கும் இந்த வேட்டையின் துயரங்களை அறிந்தால் கத்தியின்றி எந்த கல் நெஞ்சமும் பிளந்து விடும். இதில் ஷியா பிரிவினரின் கூட்டு பெரும் பங்கு வகிக்கிறது.
      
                                       தய்யிபின் முஸ்தாலியன் இஸ்மாயிலி, இத்ரிஸ் இமாதத்தீன் எழுதிய ஏழு பகுதிகளைக் கொண்ட “உயூன் அல் அக்பர்” என்பது இவர்களின் வேத புத்தகமாகும். இஸ்மாயிலிகள் ஏழு என்ற எண்ணை பிரதானமாகக் கருதுவார்கள். ஏழு சொர்க்கம், ஏழு கண்டங்கள், மண்டையோட்டின் ஏழு பகுதி, ஏழு நாட்களைக் கொண்ட வாரம் இப்படியாக. திருக்குரானின் உண்மையான விளக்கம் இவர்களின் இமாம்கள் ‘பதின்’ என்ற பெயரில் உரைப்பது மட்டுமே நம்பத் தகுந்ததாகக் கருதுவார்கள். இவர்களின் இமாம் ஜகாத்தாக இஸ்மாயிலிகளிடம் 12.5% வசூலிப்பார். அதில் 2% ஏழைகளுக்கும், 10.5% இமாமுக்கும் ஆகும். ரசீதுகள் கொடுக்கப்படாது. திருக்குரானில் சொல்லப்பட்டுள்ள புனித பயணம் என்பது மக்காவின் கஃபா அல்ல. தங்களின் இமாமைத் தரிசித்தாலே போதும் என்று எண்ணுபவர்கள். இதை துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் வசிக்கும் நம் சகோதரர்கள் நன்கு அறிவார்கள். ஏனென்றால் அவர்களின் இமாம் இந்நாடுகளுக்கு வருகை தந்து தரிசனம் தருவதை அறிந்திருப்பார்கள். ‘சத் பந்தி’ என்னும் ஒரு பிரிவு உண்டு அவர்களும் இஸ்மாயிலிக்களின் ஒரு பிரிவு தான். இன்னுமொரு பிரிவு முஹம்மது புர்கானுத்தீன் தலைமையை ஏற்ற இந்தியா மற்றும் ஏமனிலுள்ள      ‘தாவூதி போரா முஸ்லீம்கள்’. இதிலும் அலபி போரா, குத்திபி போரா, சுலைமானிய போரா என்று பல பிரிவுகள் உண்டு.   
                                               1840 ல் அடுத்த ஷாவால் பிரச்சினை வர முதல் ஷா அகா கான் இந்தியாவுக்குச் சென்று விட்டார். அப்போது இந்தியாவில் ஆட்சியிலிருந்த பிரிட்டிஷார் முஸ்லீம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த அகா கானை பொருட்செலவும், ஆதரவும் தந்து புகழ் பெற வைத்தனர். அங்கிருந்து அவரும் அவர் வழிவந்தவர்களும் இஸ்மாயிலி சமுதாயத்தின் தலைவர்களாக இருந்து இந்தியா, சிரியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் உலகமெங்கும் லட்சக்கணக்கில் பரவினர். தற்போதைய அகா கான் 1936 ல் பிறந்த நான்கு வரிசையைச் சேர்ந்தவ ராவார். பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டில் பெர்பெர் பேரரசு சிதைந்து கொண்டிருந்தபோது மதிப்பு வாய்ந்த கடற்கரைப் பகுதியான வட ஆப்பிரிக்கா சக்திவாய்ந்த இரு நகரங்களை மேற்கில் ஸ்பெயினையும், கிழக்கில் துருக்கியை யும் ஈர்த்தன. ஸ்பெயின் துருக்கியின் பகை உணர்வு பதினாறாம் நூற்றாண்டில் ஒரு முடிவுக்கு வந்து வட ஆப்பிரிக்கா கடற்கரைப் பகுதியை துருக்கி கைப்பற்றி யது. துருக்கி கடற்கொள்ளையர்கள் அந்த கடற்கரைப் பகுதியை கையாண்டார் கள். பின் அந்தப் பகுதிகள் ஓட்டோமான் பேரரசால் அவர்களுக்கு பாதுகாப்பளிக் கப்பட்டது. 1512 ல் அல்ஜீரியாவின் கடற்கரைப் பகுதியில் தான் முதல் கடற்கொள் ளையர்கள் பரவினார்கள். 1551 ல் லிபியாவில் இரண்டு கடற்கொள்ளைக் கூட்டங் கள் பரவின. 1534 ல் துனீஷியாவில் புகழ்பெற்ற கடற்கொள்ளையராக கைர் அத் தீன் என்பவர் இருந்தார். ஐரோப்பியர்கள் இவரை பார்பரொஸ்ஸா என்று அழைத் தனர். இறுதியில் 1574 ல் துனீஷியா ஓட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் வந் தது.
                                        ஆனாலும், துருக்கியின் பகுதிகளுக்கு கடற் கொள்ளை நல்ல வருமானத்தைத் தந்ததால் தொடர்ந்து கடற்கொள்ளையர்கள் வட ஆப்பிரிக்க கரையோரங்களில் இருந்தார்கள். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பிரான்சின் அல்ஜீரிய படையெடுப்பின் மூலம் கடற்கொள்ளை முடிவுக்கு வந்தது. ஐரோப்பியர்கள் அந்த பகுதிகளைக் காவல் காத்ததால் துருக்கிய கடற் கொள்ளையர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 1881 ல் துனீஷியாவும், 1912 ல் மொரோக்கோவும் பிரான்சின் வசம் போனது. துருக்கிகளிடமிருந்து லிபி யாவை இத்தாலி கைப்பற்றியது. சுதந்திரம் அடையும் வரை கடற்கரைப் பகுதிகள் கொள்ளையர்கள் பகுதியாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத போதகரான அல் செனுஸ்ஸி அல் கபீரின் கட்டாய மதக்கோட்பாடுகளும் சாதா ரண இஸ்லாமிய சுன்னிப் பிரிவு வாழ்க்கையும் பிதோயின் பழங்குடியினரிடம்  பிரபல்யமானது. இவரின் வழிதொடர்ந்த இன்னொரு செனுஸ்ஸி என்பவரிடம் கிழக்கு மாகாணமான சைரினைகா முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.
                                     துருக்கிகளை வெளியேற்றியதால் மட்டும் அந்த பிராந்தியங்களில் பிரச்சினை தீர்ந்து விடவில்லை. பின்னால் வந்த இத்தாலியர் கள் அந்த வட ஆப்பிரிக்கா பகுதியில் குறிவைத்திருந்தார்கள். இருபதாம் நூற்றா ண்டின் முதல் பத்தாண்டுகளில் அல்ஜீரியாவும், துனீஷியாவும் பிரான்சின் வசமும்  எகிப்து பிரிட்டன் வசமும் இருந்தது. லிபியா பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் மத்தி யில் இருந்தது. இத்தாலி வட ஆப்பிரிக்காவில் வாணிபத்தை அபிவிருத்தி செய்வ தில் ஆர்வமாக இருந்தது. 1900 ல் பிரான்சும், இத்தாலியும் தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு பிரான்ஸ் மொரோக்கோவையும், இத்தாலி லிபியாவை யும் எடுத்துக்கொண்டு இருவரும் ஒருவர் பகுதியில் மற்றொருவர் சுலபமாகக் கையாள முடிவு செய்து கொண்டனர்.            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக