லிபியா வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் பெர்பெர் பேரரசினால் சிதைந்துபோன வட ஆப்பிரிக்காவின் (பார்பரி கோஸ்ட்) கடற்கரையோரப் பகுதிகள் இரண்டு மெடிட்டரேனியன் நகரங்களான மேற்கின் ஸ்பெயினையும், கிழக்கின் துருக்கியையும் கவர்ந்தது. பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் துருக்கியின் பகை துருக்கியின் மதப்பூர்வமான அணுகுமுறையால் கொஞ்சம் சமாதானமாகியது. அதனால் துருக்கியின் கடற்கொள்ளையர்கள் அந்த கடலோரப் பகுதியை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்பட்டு ஓட்டோமான் பேரரசின் பாதுகாப்பில் வந்தது. அப்படி முதலில் 1512 ல் அல்ஜீரியா கரையில் ஒரு கூட்ட மும், இரண்டாவது கூட்டம் 1551 லிபியா கரையிலும் குடியேறியது. அந்த கடற் கொள்ளைக் கூட்டங்களிலேயே மிகவும் புகழ்பெற்ற கைர் எத் தின் என்பவர் 1535 ல் துனீஷியாவில் குடியேறினான். ஐரோப்பியர்கள் இவரை பார்பரொஸ்ஸா என்று அழைத்தனர். 1535 ல் ஸ்பெயினையும், 1574 ல் துனீஷியாவையும் ஓட்டோமான் பேரரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
கடற்கொள்ளை அந்த பார்பேரிய பகுதிகளில் துருக்கிய குடியேற்றவாசிகளுக்கு முக்கிய தொழிலாகவும், வருமானம் பெற்றுத்தரக்கூடிய தாகவும் இருந்தது. முந்நூறு ஆண்டுகளாக நடந்துவந்த கடல்கொள்ளை 1830 ல் பிரான்சு அல்ஜீரியாவில் நுழைந்ததால் தடைப்பட்டது. ஆனால் பிரான்சு 1847 வரை முழுமையாக அல்ஜீரியாவைக் கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால், துருக்கி கடல்பகுதியிலிருந்து பெர்பெர்கள் எதிர்த்துக்கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் கள் தொல்லைமிகுந்த அந்த மொத்த பார்பேரிய கடல்பகுதிகளையும் காவல் புரிந்துவந்தார்கள். 1881 ல் துனீஷியா பிரான்சின் பாதுகாப்பில் வந்தது. மாரினிட் பேரரசின் உள்நாட்டு சுல்தானிடமிருந்து சுதந்திரம் அடைய போராடிக் கொண்டிரு ந்த மொரோக்கோவும் 1912 ல் பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதே 1912 ல் இத்தாலி துருக்கிகளிடமிருந்த லிபியாவை கைப்பற்றியது.
துருக்கிகளிடம் நவீன லிபியா இருந்தபோது ஓட்டோமான் பேரரசின் வசம் இருந்ததைவிட சற்று நன்றாக இருந்தது. மேற்கு மாகாணமான திரிபோலிடானியாவை ஓட்டோமான் பேரரசின் கவர்னரின் சந்ததியைச் சேர்ந்தவ ரான அஹ்மத் கரமான்லி பரம்பரைப் பிரதேசமாக 1711 லிருந்து 1832 வரை ஆண்டு கொண்டிருந்தார். கிழக்கு மாகாணமான சைரெனைக்கா பத்தொன்பதாம் நூற்றா ண்டுகளில் பிதோயின் பழங்குடியின மக்களிடையே புகழ்வாய்ந்த இஸ்லாமிய சுன்னி பிரிவு தலைவர் அல் செனுஸ்ஸி அல் கபிர் என்பவரின் சந்ததிகள் செனு ஸ்ஸிகளின் அதிகாரத்தில் இருந்தது. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் கைய கப்படுத்துவது உள்நாட்டு எதிர்ப்புகிளம்பும் என்று கருதிய இத்தாலி ஆப்பிரிக்கா வில் படர சற்று அவகாசம் எடுத்துக்கொண்டது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அல்ஜீரியா மற்றும் துனீஷியா பிரான்சின் வசமும், எகிப்து பிரிட்டன் வசமும் இருந்தது. பிரா ன்சு மற்றும் பிரிட்டன் பகுதிகளுக்கு மத்தியில் வட ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாக இருந்த லிபியாவில் இத்தாலி பெரிய வாணிப ஸ்தலமாக உருவாக்கி யது. 1900 ல் பிரான்சும், இத்தாலியும் சுமூகமாகவும், ரகசியமாகவும் ஒரு ஒப்பந் தம் செய்துகொண்டன. அதன்படி பிரான்சும் மொரோக்கோவை வடிவமைத்தது. லிபியாவிலும், மொரோக்கோவிலும் எல்லாவற்றிற்கும் சுலபமாக அனுமதித்துக் கொள்ளவேண்டும் என்பதே ஒப்பந்தமாகும். 1911 ல் திடீரென்று ஒருநாள் இத்தாலி தன் படைகளை திரிபோலியானாவுக்கும், சைரெனைக்காவுக்கும் அனுப்பி அங்கி ருக்கும் உள்நாட்டு இத்தாலியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனுமதி வேண்டி இஸ்தான் புல்லுக்கு மிரட்டல் விடுத்து இருபத்திநான்கு மணிநேர நிபந்தனை விடுத்தது. இதைத்தொடர்ந்து அடுத்த நாள் இத்தாலி வட ஆப்பிரிக்காவில் நுழை வதற்கு உடனடி போர் அறிவித்தது.
இத்தாலிக்கு செனுஸ்ஸியின் பழங்குடியினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. துருக்கியின் அனைத்துப்பகுதியிலும் தொல்லைவர ஆரம்பித் தது. ஏரிப்பகுதி மாகாணமான லாசன்னில் அவ்சி என்ற இடத்தில் ஒரு உடன்படிக் கை ஏற்க்கப்பட்டு, திரிபோலிடானியாவும், சைரெனைக்காவும் இத்தாலியின் கீழ் படிதலுக்கு ஆளானது. இதனால் இத்தாலி செனுஸ்ஸிகளின் அதிகாரத்திலிருந்த தென்மேற்கு பகுதியான ஃபெஸ்ஸானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந் தது. இணைக்கப்பட்ட ஃபெஸ்ஸான் மாகாணம் நவீன லிபியாவாக இத்தாலியால் மாற்றப்பட்டது.
உலகப் போர்
இத்தாலி லிபியாவில் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கும் போதே, இரண்டு உலகப்போர்களை லிபியா சந்தித்தது. மேலும், இத்தாலி அரசுக்கு எதிராக எதிர்ப்புக்குழுவும் உருவானது. முதல் உலகப்போரின் கோரிக்கைப்படி இத்தாலி லிபியாவின் கடற்கரை நகரங்களைத்தவிர, மற்ற இடங் களை விட்டு விடவேண்டும் என்று முடிவாகியது. இதனால், எங்கு பார்த்தாலும் செனுஸ்ஸிகளின் ஸவியா (ZAWIYA- மசூதிகளின் பிண்ணனியிலுள்ள பலமான அமைப்பு) வின் அதிகாரத்திற்கு மீண்டும் லிபியா நகரங்கள் வந்தன. முதல் உலக போருக்குப் பிறகு, செனுஸ்ஸிகளின் தலைவர் முஹம்மது இத்ரிஸ், இத்தாலி யுடன் வெற்றிகரமாக ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். அதாவது, இத்தாலியின் வசமுள்ள சைரெனைக்கா கடற்கரைப் பகுதிகளை தாங்கள் அங்கீ கரிப்பதாகவும், பதிலுக்கு தன்னை எமிராக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரி இருந்தார்.
ஆனால், இந்த சிரமமான உறவு நிறைய எதிர் விளைவுகளை உண்டாக்கியது. 1923 ல் முஹம்மது இத்ரிஸ் எகிப்து பயணம் போயிருந்த போது, மதப்பற்றுள்ள லிபியாவின் கவர்னர்கள் திரிபோலிடானியாவிலும், சைரெனைக்காவிலும் அதிகப்படியான அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள். (இந்த இரண்டு மாகாணங்களும் தான் 1934 ல் இணைக்கப்பட்டு லிபியா காலனி நாடாகியது). இரண்டாம் உலகப்போர் செனுஸ்ஸிகளுக்கு வெற்றியைத் தந்தது. அவர்கள் இத்தாலியின் எதிரிகளாக இருந்ததால், இயற்கையிலேயே பிரிட்டனுடனும், அமெரிக்காவுடனும் போரில் கூட்டு வைத்திருந்தார்கள். 1942-43 ல் செனுஸ்ஸிகள் எல்லா போர் நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துக்கொண்டு இத்தாலியையும், ஜெர்மனியையும் வட ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற்றினார்கள்.
போருக்குப் பிறகு. சில சிறிய சண்டைகளின் மூலம் திரிபோலிடானியா மற்றும் சைரெனைக்கா பகுதிகளின் நிர்வாகத்தை பிரிட்டனும், ஃபெஸ்ஸான் மாகாணத்தை பிரான்சும் எடுத்துக்கொண்டன. லிபியாவின் எதிர்காலத்தை ஐக்கியநாட்டுசபையில் வைத்து தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது. இது லிபியாவின் சுதந்திரத்திற்கான புரட்சியாகிப்போனது. 1950 ல் லிபியாவின் மூன்று பெரிய மாகாணங்களும் முஹம்மது இத்ரீஸ் அவர்களை லிபியாவின் மன்னராக தேர்வு செய்தது. 1951 டிசம்பர் 24 ல் இத்ரீஸ் அவர்கள் லிபியாவை சுதந்திரநாடாக அறிவித்தார்.
ராயல் லிபியா 1951-1969
முஹம்மது இத்ரீஸ் அவர்களின் ஆட்சி பழைய மன்னர்களின் நடைமுறை ஆட்சிபோல் இருந்து எந்த ஜனநாயக அறிகுறியும் தெரியவில்லை. முதல் எட்டாண்டுகள் இவரின் ஆட்சியின் கீழ் லிபியாவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் பின் தங்கிப்போனது. பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானப்படைதளத்துக்கு அனுமதி அளித்ததன் பேரின் கிடைத்த வருவாயிலும், சர்வதேச நாடுகளின் மூலம் கிடைத்த உதவியாலும் நிர்வாகம் தடுமாறிக்கொண்டு இருந்தது. இந்த நிலை அப்படியே 1959 ல் தலைகீழாக மாறியது. லிபியாவின் எண்ணேய் வளம் கண்டறியப்பட்டது. முஹம்மது இத்ரிஸ் அவர்கள் தன் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொண்டு, புதிய சுதந்திர லிபியாவின் தரத்தை மேம்படுத்த தயாரானார். வெளிநாட்டு சக்திகள் லிபியாவை விட்டு வெளியேற பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், மன்னரை ஓய்வுபெறச்சொல்லி எதிர்ப்பு வலுத்தது. 1969 ல் மன்னர் முஹம்மது இத்ரிஸ் துருக்கிக்கு சென்றிருந்த போது, 27 வயதான இராணுவ தளபதி மாம்மர் அல் கத்தாஃபி என்றவரால் இரத்தமின்றி மன்னராட்சி நீக்கப்பட்டது.
1969 லிருந்து மாம்மர் அல் கத்தாஃபியின் ஆட்சி
மாம்மர் அல் கத்தாஃபி உடனே ஆயுதப்படையின் கமாண்டர் இன் சீஃப் மற்றும் லிபியாவின் புரட்சிப்படை கவுன்சிலின் சேர்மனாகவும் இருந்து லிபியாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். 1979 லிருந்து இவர் சாதாரண புரட்சியாளராய் இருந்து பிடிப்புடன் ஆட்சிசெய்தார். இவருடைய சொந்த சட்டமே லிபியாவின் சட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மாம்மர் அல் கத் தாஃபி விரைவில் ஒரு சர்வாதிகாரியாக மாறினார். இவரது அரசியல் தத்துவம் இஸ்லாம், அரபு தேசியம் மற்றும் சோஷலிசம் உள்ளடங்கியதாக இருந்ததாக இவரைப்பற்றி தி க்ரீன் புக் தெரிவிக்கிறது. மேலும் தனிப்பொருள் சேரும் வண்ணம் 1977 ல் பீப்பிள்ஸ் சோஷியலிஸ்ட் லிபியன் அராப் ஜமஹிரியா என்று நாடு குறிக்கப்பட்டது. அதாவது கூட்டமாக ஆள்வது என்று பொருள். அதற்கேற்றார் போல் 1500 உள்நாட்டுக்குழுக்களை அமைத்தார். ஆனால், இதெல்லாம் வெளி உலகத்திற்கு மட்டும்தான் உண்மையில் அவர் ஒருவர்தான் ஆட்சிசெய்தார்.
அதிகமாக சர்வதேச உலகில் அறியப்படாத பெயராக இருந்த மாம்மர் அல் கத்தாஃபி லிபியாவின் எண்ணெய் வளத்தால் உலகம் அறிந்தவரானார். துருக்கிக்கும், சாட் நாட்டுக்கும் இடையே நல்ல உறவைப் பேணாதிருந்தார். வெளிநாட்டில் இருந்த லிபியா எதிர்ப்பாளர்களை உளவாளிகள் மூலம் கொன்றார். லிபியாவின் பொருளாதாரம் வெளிநாட்டு தீவிரவாதத்திற்குப் பயன் படுத்தப்பட்டது. 1972 ல் மாம்மர் அல் கத்தாஃபி வட அயர்லாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக செயல்படும் ஐ.ஆர்.ஏ என்ற அமைப்பை ஆதரிப்பதாகக் கூறினார். தீவிரவாதத்திற்கு எதிராக தங்கள் நடவடிக்கையை தெரிவிப்பதாகக் கூறி 1986 ல் அமெரிக்க ஜனாதிபதி ரீகன் பிரிட்டனிலிருந்து லிபியாவின் நகரங்களான திரிபோலி மற்றும் பென்காஸியின் மீது விமானத்தாக்குதல் நடத்தினார். அதில் மாம்மர் அல் கத்தாஃபியின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தனர். மாம்மர் அல் கத்தாஃபி மயிரிழையில் உயிர் தப்பினார். அதன் பிறகு, அழுகிய மூளையுள்ள அமெரிக்கா பலமுறை கடாஃபியைக் கொல்ல முயற்சி செய்து தோற்றுப்போனது.