செவ்வாய், 30 ஜூன், 2015

மொகலாய வரலாறு 8

நசீர் உத் தீன் முஹம்மது ஹுமாயுன்
கூ.செ.செய்யது முஹமது
                     பாபரின் முதல் மனைவி மாஹம் பேகமுக்கு பிறந்தவர்கள் ஹுமாயுன், பார்பூல் மிர்சா, மிஹ்ர்ஜான் பேகம், இஷான் தௌ லத் பேகம் மற்றும் ஃபாரூக் மிர்சா. இரண்டாவது மனைவி மசூமா சுல்தான் பேகம் பிரசவத்தில் இறந்து போனதால், அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. மூன்றாவது குல்ருக் பேகம் என்ற மனைவிக்கு காம்ரான் மிர்சா, அஸ்கரி மிர்சா, ஷாருக் மிர்சா, சுல்தான் அஹ்மது மிர்சா மற்றும் குல் இஸார் பேகம் ஆகியோர் பிறந்தனர். நான்காவது மனைவிக்கு குல்ரங்க் பேகம், குல்சிஹ்ரா பேகம், ஹிண்டால் மிர்சா, குல்பதன் பேகம் மற் றும் அல்வார் மிர்சா ஆகியோர் பிறந்தனர். நசீருத்தீன் முஹம்மது ஹுமாயுன் 1508 மார்ச் 6 ல் (துல்கதா 4, 913) காபூல் அரண்மனையில் பிறந்தார். இவர் பிறந்த தற்குப் பிறகு தான் எல்லா மகன்களுக்கும் “மிர்சா” என்று வருமாறு பாபர் பெய ரிட்டார். தன்னையும் பாபர் பாதுஷா என்று அழைத்துக் கொண்டார்.
           ஒருமுறை ஹுமாயுன் கடுமையாக நோய் வாய்ப்பட்டு, மிகவும் பலவீனமாக போன போது பாபர் தொடர்ந்து தொழுகை யில் ஈடுபட்டு, இறைவனே உன்னுடைய அதிகாரத்தில் உயிர்களை பறிமாறிக் கொள்ளும்படி இருந்தால், என் மகன் ஹுமாயுனுக்குப் பதில் என்னுடைய உயிரை எடுத்துக் கொள் என்று வேண்டினார். பாபர் 1530 டிசம்பர் 26 ல் (ஜுமாதா 5, 937) இறந்தார். இறப்பதற்கு முன்பிருந்தே தனக்குப் பிறகு ஹுமாயுன் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். ஹுமாயுன் அழகாக திருக்கு ரானை ஓதக்கூடிய 60 நபர்களை சில தினங்கள் பாபரின் மறுமைக்காக ஓதச் செய்தார்.
                                                                           1530 ஆம் ஆண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஹுமாயுன் ஆட்சிக்கு வந்தார். இவரால் அமைதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. எதிரியான ஷேர்ஷாவினால் பல தொல்லைகளுக்கு ஆளா னார். ஹுமாயுனின் சகோதரர்கள் பல மாகாணங்களை கவர்னர்களாக நிர்வகி த்தனர். காபூல் மற்றும் கந்தஹாரை காம்ரானும், ஆள்வார் மற்றும் மெவாத் தை மிர்சா ஹிண்டாலும், சம்பலை மிர்சா அஸ்கரியும், பதக் ஷானை உறவி னர் மிர்சா சுலைமானும் நிர்வகித்தார்கள். இந்த சகோதரர்களின் சதியாலும், ராஜதுரோகத்தாலும் மொகலாயப் பேரரசு ஆரம்பத்திலேயே நிலை குலைந் தது.  பாபரை விட திறமை குறையவராக இருந்தார். ஹுமாயுனின் தாராள குணமும், தாட்சன்யமும் அவரின் மிகப்பெரிய குறையாக இருந்தது. அரசியல் சூழ்நிலை ஸ்திரமற்று இருந்தது. கிழக்கில் ஆஃப்கானில் ஷேர்கானும், மேற் கில் பஹதூர்ஷாவும் மொகலாய ஆட்சியை அப்புறப்படுத்த திட்டமிட்டனர். ஹுமாயுனின் சகோதரர்களோ தாங்கள் இருந்த பகுதிகளை சொந்தம் கொண் டாடுவதில் மும்முரமாய் இருந்தார்கள். சில தலைவர்களும், ஹுமாயுனால் பதவி அளிக்கப்பட்ட சில இராணுவ அதிகாரிகளும் ஹுமாயுனுக்கு எதிராகவே இருந்தார்கள்.
                     முஹம்மது ஸமான் என்பவனால் ஒரு குழப்பம் ஹுமாயுனுக்கு எதிராக உண்டானது. அதில் அவன் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். திட்டம் செயல்படு த்துவதற்கு முன்பாகவே வெளிப்பட்டு விட்ட்தால் அவன் தப்பியோடி குஜராத் தில் பஹதூர்ஷாவிடம் சேர்ந்து கொண்டான். அடுத்து சுல்தான் இப்ராஹிம் லோடியின் சகோதரன் அலாவுத்தீன் என்பவன் தன் மகன் டாடார்கானின் தலைமையில் 40,000 வீரர்களை ஹுமாயுனுக்கு எதிராக அனுப்பினான். பியா னாஹ் என்ற இடத்தில் சண்டை இடப்பட்டு தோற்கடிக்கப்பட்டு டாடார்கான் கொல்லப்பட்டான். காபூல், கந்தஹாரிலிருந்து ஹுமாயுனின் சகோதரர்கள் அஸ்கரியும், காம்ரானும் பெரும் படையுடன் திரண்டு வந்து ஹுமாயுனுக்கு ராஜ விருது வழங்க இருப்பதாக நாடகம் ஆடினர். ஆனால் ஹுமாயுன் முன் கூட்டியே ஒரு படையை அனுப்பி தான் காபூலுக்கு பதிலாக லம்கானையும், பெஷாவரையும் தன் பிரதேசத்தில் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கிறார். கம்ரான் அதைப் பொருட்படுத்தாமல் பஞ்சாபைக் கைப்பற்றி தனது காபூல் மற்றும் கந்தஹாருடன் இணத்துக் கொண்டார். சகோதரனுடன் போர் செய்ய விரும்பாத ஹுமாயுன் அமைதியாக இருந்தார். இது ஹுமாயுனின் மிகப் பெரிய தவறாகப் போனது. வடமேற்கில் மொகலாயப் படைகளுக்கு எதிராக ஒரு தடுப்புப்படையை உருவாக்க ஏதுவானது. டெல்லியில் இருந்து படை கந்தஹார் வந்தால் வழியிலேயே தடுக்கப்பட்டுவிடும்.
                 இதற்கிடையில் வளமானதும், பலமானதுமான குஜராத்திலிருந்து பஹதூர் ஷா, ஹுமாயுன் மீது படையெடுத்து வந்தார். பஹ தூர் ஷா ஹுமாயுனை சற்று குறைவாக மதிப்பிட்டார். ஹுமாயுன் பலமான பீரங்கித் தாக்குதல் கொடுக்க பஹதூர் ஷா தப்பித்து போர்ச்சுகீசியர்களிடம் ஓடி டையூ என்ற இடத்தில் அடைக்கலம் ஆனார். ஹுமாயுன் குஜராத் மற்றும் மால்வாவின் பெரும் பகுதியை தன் பிரதேசத்துடன் இணைத்துக் கொண்டார். வெற்றிபெற்ற பகுதிகளை நிரந்தரமாக தன்னுடன் வைத்துக் கொள்ள திட்டமிட தவறினார். பஹதூர் ஷா நம்பகமான இமாத் உல் முல்க் என்னும் தளபதியின் கீழ், போர்ச்சுகீசியர்களின் உதவியுடன் ஒரு படையை ஏற்பாடு செய்தார். இதை அறிந்த ஹுமாயுன் முன்னேறிச் சென்று இமாத் உல் முல்கை விரட்டினார். தன் சகோதரர் அஸ்கரியின் அதிகாரத்தில் குஜராத்தை விட்டார். அஸ்கரியின் நடவடிக்கைகள் அவரின் அதிகாரிகளுக்கே பிடிக்காது. சரியான சந்தர்பத்திற் காக காத்திருந்த பஹதூர் ஷா அஹமதாபாத்தின் மீது படையெடுத்து தான் இழந்த பகுதிகளை மீட்டார். ஹுமாயுன் மாண்டுவுக்கு சென்றதால் மால்வா வும் இழக்கப்பட்டது. ஆனால், பஹதூர் ஷாவால் ஆளமுடியாமல் துரதிஷ்ட வசமாக கடலில் தவறி விழுந்து இறந்து போனார். இதற்கிடையில் ஷேர்கான் சௌஸா என்ற் இடத்தை வென்று தன்னை “ஷேர் ஷா” என்று அழைத்துக் கொண்டார். ஹுமாயுனை கனாஜ் என்ற இடத்திலும் படுதோல்வி அடையச் செய்தார். இந்த தோல்விகள் ஹுமாயுனை இந்தியாவை விட்டு விரட்டியது. சர் ஹிந்த் பகுதிக்குச் சென்ற ஹுமாயுனை, இவரால் பாசமாகக் கவனிக்கப் பட்ட அவரது சகோதரர்களே பாதுகாப்பளிக்க மறுத்துவிட்டனர்.
          இந்த சூழ்நிலையில் ஷெய்க் அலி அக்பர் ஜாமி என்பவரின் மகள் ஹமீதா பானு பேகம் என்பவரை திருமணம் செய்து கொண் டார். ஜோத்பூரின் ராஜா இருபத்தைந்தாயிரம் ராஜ்புத் இராணுவ வீரர்களை தந்து உதவுவதாக வாக்களித்ததின் பேரில் ஹுமாயுன் அவரிடம் சென்றார். ஆனால் ராஜாவும் ஏமாற்றினார். இறுதியாக அமர்கோட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ராணா பிரசாத் ஹுமாயுனுக்கு நம்பிக்கை அளித்து தட்டா மற்றும் பக்கரை தாக்குவதற்கு உதவுவதாகக் கூறினார். இது மீண்டும் ஹுமா யுன் இந்தியாவின் பேரரசர் ஆவதற்கு சந்தர்பத்தைத் தந்தது. இந்த தருணத்தில் ஹுமாயுனுக்கு அக்பர் என்ற மகன் பிறந்தார். ராணா பிரசாதின் உதவியுடன் பக்கரை தாக்கினார். இடையில் ராஜ்புத் வீரர்களுக்கும், ஹுமாயுனின் வீரர்களு க்கும் இணக்கமில்லாமல் போக, ஹுமாயுனின் வீரர்கள் தனிமைப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பக்கரின் ஆட்சியாளர் போரினால் தளர்ந்து சமாதானத்திற்கு உடன்பட்டார். சமாதானத்தின் அடையாளமாக ஹுமாயுனுக்கு முப்பது படகு களும், பத்தாயிரம் மிஷ்கால்களும், ஆயிரம் மூட்டை தானியங்களும், முன் னூறு ஒட்டகங்களும் கிடைத்தன. அத்தனையும் எடுத்துக் கொண்டு கந்தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த பகுதி முழுவதும் சகோதரர்கள் காம்ரான், அஸ்கர் மற்றும் ஹிந்தால் வசமிருந்தால் பாதுகாப்பிருக்காது என கருதி பெர் ஷியா செல்ல முடிவெடுத்து ஷாவுக்கு தெரியப்படுத்தினார். தனது ஒரு வயது மகன் அக்பரை பிரிந்து பெர்ஷியா செல்ல ஹுமாயுன் முடிவெடுத்தார். பெர் ஷியாவின் ஷா ஹுமாயுனுக்கு ராஜ வரவேற்பு கொடுக்க வேண்டி தன் அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். பெர்ஷியாவின் ஷா ஷியா பிரிவு கொள்கை கொண்டவராக இருந்ததால், சுன்னிப் பிரிவு ஹுமாயுனையும் ஷியாவுக்கு மாறும்படி வற்புறுத்தினார். ஹுமாயுனின் உடனிருந்தவர்களும் ஆலோசனை கூறியதால் ஷியா பிரிவுக்கு மாற ஒப்புக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷா காபூல், கந்தார் மற்றும் பொகாரா ஆகியவற்றை வெல்ல ஹுமா யுனுக்கு இராணுவ உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இடைப்பட்ட ஷேர் ஷா சூரியின் ஆட்சி                              
                                                    வெற்றிபெற்ற ஷேர் ஷா சூர் டெல்லியைக் கைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டார். ஷேர் ஷாவின் உண்மைபெயர் ஃபரீத். இவர் 1486 ல் ஹிசார்ஃபிரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் ஹசன். ஹசனுக்கு நான்கு மனைவிகள். ஷேர் ஷா சிறுவயதில் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவித்தார். தந்தை ஹசன் மகன்களிடம் பாசமற்று இருந் தார். ஃபரீத் என்ற ஷேர்ஷா வீட்டைவிட்டு விலகி, ஜான்பூர் என்ற இடத்தில் தந்தையின் நண்பர் பீஹாரின் கவர்னராய் இருந்த ஜமால் கான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளைக் கற்றார். ஷேர்ஷாவின் திறமைகளை அறிந்த கவர்னர் ஜமால்கான் ஹசனிடம் பிள்ளை யிடம் கனிவாக இருக்க கேட்டுக்கொண்டார். திரும்ப வந்த மகன் ஃபரீதுக்கு ஹசன் நிர்வாகத்தில் வேலை கொடுத்தார். இவரின்நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்தது. 1519 ல் மாற்றாந் தாய்களின் பிரச்சினையால் அந்த வேலையிலிரு ந்து திரும்பிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பீஹார் சென்று தரியா கான் லோஹானியின் மகன் கவர்னர் பஹார்கானிடம் வேலைக்குச் சேர்ந்தார். 1522 லிருந்து 1526 வரை ஃபரீத் பஹார்கானிடம் மிகவும் சிறப்பாக சமூக மற்றும் வருவாய்துறையில் பணியாற்றினார். இயற்கையாக இவருக்கிருந்த வேட்டை யாடும் திறமையால் ஒரு முறை புலி ஒன்றைக் கொன்றதால் “ஷேர்கான்” என்ற சிறப்புப்பெயர் பெற்றார். தனது எஜமானரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் ராஜினாமா செய்துவிட்டு, பாபர் அவர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்.

மொகலாய வரலாறு 9

                                                                   இந்த சூழ்நிலையில் ஷெய்க் அலி அக்பர் ஜாமி என்பவரின் மகள் ஹமீதா பானு பேகம் என்பவரை திருமணம் செய்து கொண் டார். ஜோத்பூரின் ராஜா இருபத்தைந்தாயிரம் ராஜ்புத் இராணுவ வீரர்களை தந்து உதவுவதாக வாக்களித்ததின் பேரில் ஹுமாயுன் அவரிடம் சென்றார். ஆனால் ராஜாவும் ஏமாற்றினார். இறுதியாக அமர்கோட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ராணா பிரசாத் ஹுமாயுனுக்கு நம்பிக்கை அளித்து தட்டா மற்றும் பக்கரை தாக்குவதற்கு உதவுவதாகக் கூறினார். இது மீண்டும் ஹுமா யுன் இந்தியாவின் பேரரசர் ஆவதற்கு சந்தர்பத்தைத் தந்தது. இந்த தருணத்தில் ஹுமாயுனுக்கு அக்பர் என்ற மகன் பிறந்தார். ராணா பிரசாதின் உதவியுடன் பக்கரை தாக்கினார். இடையில் ராஜ்புத் வீரர்களுக்கும், ஹுமாயுனின் வீரர் களுக்கும் இணக்கமில்லாமல் போக, ஹுமாயுனின் வீரர்கள் தனிமைப்பட்ட னர். அதிர்ஷ்டவசமாக பக்கரின் ஆட்சியாளர் போரினால் தளர்ந்து சமாதானத் திற்கு உடன்பட்டார். சமாதானத்தின் அடையாளமாக ஹுமாயுனுக்கு முப்பது படகுகளும், பத்தாயிரம் மிஷ்கால்களும், ஆயிரம் மூட்டை தானியங்களும், முன்னூறு ஒட்டகங்களும் கிடைத்தன. அத்தனையும் எடுத்துக் கொண்டு கந் தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த பகுதி முழுவதும் சகோதரர்கள் காம்ரான், அஸ்கர் மற்றும் ஹிந்தால் வசமிருந்தால் பாதுகாப்பிருக்காது என கருதி பெர்ஷியா செல்ல முடிவெடுத்து ஷாவுக்கு தெரியப்படுத்தினார். தனது ஒரு வயது மகன் அக்பரை பிரிந்து பெர்ஷியா செல்ல ஹுமாயுன் முடிவெடுத் தார். பெர்ஷியாவின் ஷா ஹுமாயுனுக்கு ராஜ வரவேற்பு கொடுக்க வேண்டி தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பெர்ஷியாவின் ஷா ஷியா பிரிவு கொள்கை கொண்டவராக இருந்ததால், சுன்னிப் பிரிவு ஹுமாயுனையும் ஷியாவுக்கு மாறும்படி வற்புறுத்தினார். ஹுமாயுனின் உடனிருந்தவர்களும் ஆலோசனை கூறியதால் ஷியா பிரிவுக்கு மாற ஒப்புக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷா காபூல், கந்தார் மற்றும் பொகாரா ஆகியவற்றை வெல்ல ஹுமாயுனுக்கு இராணுவ உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இடைப்பட்ட ஷேர் ஷா சூரியின் ஆட்சி                              
                                                  வெற்றிபெற்ற ஷேர் ஷா சூர் டெல்லியைக் கைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டார். ஷேர் ஷாவின் உண்மைபெயர் ஃபரீத். இவர் 1486 ல் ஹிசார்ஃபிரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் ஹசன். ஹசனுக்கு நான்கு மனைவிகள். ஷேர் ஷா சிறுவயதில் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவித்தார். தந்தை ஹசன் மகன்களிடம் பாசமற்று இருந் தார். ஃபரீத் என்ற ஷேர்ஷா வீட்டைவிட்டு விலகி, ஜான்பூர் என்ற இடத்தில் தந்தையின் நண்பர் பீஹாரின் கவர்னராய் இருந்த ஜமால் கான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளைக் கற்றார். ஷேர்ஷாவின் திறமைகளை அறிந்த கவர்னர் ஜமால்கான் ஹசனிடம் பிள்ளை யிடம் கனிவாக இருக்க கேட்டுக்கொண்டார். திரும்ப வந்த மகன் ஃபரீதுக்கு ஹசன் நிர்வாகத்தில் வேலை கொடுத்தார். இவரின்நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்தது. 1519 ல் மாற்றாந் தாய்களின் பிரச்சினையால் அந்த வேலையிலிரு ந்து திரும்பிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பீஹார் சென்று தரியா கான் லோஹானியின் மகன் கவர்னர் பஹார்கானிடம் வேலைக்குச் சேர்ந்தார். 1522 லிருந்து 1526 வரை ஃபரீத் பஹார்கானிடம் மிகவும் சிறப்பாக சமூக மற்றும் வருவாய்துறையில் பணியாற்றினார். இயற்கையாக இவருக்கிருந்த வேட்டை யாடும் திறமையால் ஒரு முறை புலி ஒன்றைக் கொன்றதால் “ஷேர்கான்” என்ற சிறப்புப்பெயர் பெற்றார். தனது எஜமானரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் ராஜினாமா செய்துவிட்டு, பாபர் அவர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்.
                                                             இவரின் திறமைகளைக்கண்ட பாபர் இவரை பல மாகாணங்களுக்கு கவர்னராக்கினார். அதில் ஷெர்கானின் தந்தையார் இருந்த மாகாணமும் அடங்கும். இதற்கிடையில் பஹார்கான் மரணமடைய அவர் மகன் ஜலால்கான் பதவிக்கு வருகிறார். ஜலால்கான் வயதில் சிறியவராக இருந்ததால், ஷேர்கான் அதிகாரத்தில் துணைக்கு இருந்து நிர்வகித்தார். ஜலால்கான் பெரியவராக வளர்ந்ததும், ஷேர்கானின் உதவியின்றி தானே தனியாக நிர்வகிக்கவும், மொத்த ஆப்கானையும் ஆள்வதற்கும் விருப்பம் கொண்டார். ஜலால்கான் பெங்காலின் ஆட்சியாளரைத் துணைக்கு அழைத்துக் கொண்டார். ஆனால், இவர்களின் கூட்டணி சூரஜ்கர் என்ற இடத்தில் ஷேர் கானிடம் தோற்க அவர் பீஹாரின் ஆட்சியாளர் ஆனார். இதிலிருந்து ஷேர்கான் சோர்வடையாமல் ஆட்சியின் அடுத்த முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். பீஹா ருக்குப் பிறகு, பெங்கால் இவரை ஈர்த்தது 1536 ன் ஆரம்பத்தில் கௌர் நகரை நெருங்கினார். பெங்காலின் ஆட்சியாளர் ஷேர் கானுடன் போரிடுவதற்கு பதில், பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து காப்பாற்றிக்கொண்டார். அடுத்த வருடம் ஷேர்கான் மீண்டும் படையெடுத்து கௌர் மற்றும் பலமான ரோஹ்டாஸ் பகுதியை வென்று பெங்காலைக் கைப்பற்றினார்.  ஷேர்கானின் கிழக்குப்புற வெற்றிகளைக் கேள்விப்பட்ட ஹுமாயுன் தாமதிக்காமல் பெங்கா லைக் கைப்பற்ற படையெடுத்தார்.
                                    மொகலாயப் படைகள் கௌர் மற்றும் ஜன்னத்பாத் நகரங்களைக் கைப்பற்றியது. ஷேர்கானும் பீஹாரின் ஜான்பூரைக் கைப்பற்றி கன்னாஜ் வரை வந்தார். ஷேர்கானின் நடவடிக்கையை அறிந்த ஹுமாயுன் தனது தலைமையிலேயே சவ்ஸா என்ற இடத்தில் போருக்குத் தயாரானார். கங்கை நதி யைக் கடந்து முங்கீர் என்ற இடத்தை அடைந்தவுடன், நிலைமை வேறாக இருக்க  ஷேர்கானுடன் சமாதானத்திற்கு முயன்றார். ஆனால், முடி யாமல் போக சவ்ஸா போரில் ஹுமாயுன் தோல்வியுற்றார். பேரரசர் ஹுமா யுன் தப்பிக்கும்போது ஆற்றில் தவறிவிழ, நிஜாம் என்னும் பணியாள் அரசரை காப்பாற்றினான். நிஜாம் இரண்டு நாட்கள் ஹுமாயுனுடன் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டான். வெற்றி பெற்ற ஷேர்கான் தன்னை மன்னன் தகுதிக்கு ஆளாக்கிக் கொண்டார். ஆட்சியில் தனது சகோதரர்களை உதவிக்கு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டார். ஆனால், அவர் சகோதரர்கள் இவரை ஒதுக்கிவிட்டு, பாபரின் பிள்ளைகளுடன் நேசமாக இருந்தனர். ஷேர்கான் கங் கையைக் கடந்து கன்னாஜ் சென்று விடாமல் ஹுமாயுனுடன் போரிட்டார். இந்த முறையும் ஹுமாயுன் தோல்வியுற்று தப்பிச் சென்றார்.
                                             ஷேர்கான் இப்போது பெங்கால், பீஹார், ஜான்பூர் மற்றும் டெல்லிக்கு ஆட்சியாளரானார். பஞ்சாபையும், ஆக்ராவையும் வென்று முழு மையாக மொகலாயர்களை இந்தியாவை விட்டு விரட்ட எண்ணி புதிய போரைத் துவங்கினார். முதலில் பஞ்சாப் அவர் வசமானது. ஹுமாயுனின் சகோதரர் கம்ரான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒப்படைத்து விட்டார். இருந்தா லும் கம்ரான் காஷ்மீரின் அதிகாரத்தில் இருந்த ஹுமாயுனின் இன்னொரு சகோதரர் மிர்ஸா ஹிண்டாலுடன் சேர்ந்து வடமேற்கில் எதிர்க்கலாம் என்று எச்சரிக்கை அடைந்தார். இதனால், ஜீலம் நதிக்கரையில் பலமான கோட்டை ஒன்றை நிர்மாணித்து 50,000 வீரர்களையும், நம்பிக்கையான இராணுவ அதிகா ரியையும் காவலுக்கு வைத்தார். இப்போது ஷேர்கான் பெங்காலின் இன்னொரு பகுதியான மால்வாவின் மீது பார்வையைத் திருப்பினார். மால்வாவை பலமற்ற இரண்டாம் முஹமது என்பவர் ஆண்டு வந்தார். மல்லூகான் என்ற உள்ளூர் தலைவன் ஒருவன் இரண்டாம் முஹமதின் நிர்வாகம் சரியில்லாத தால், மாண்டு, உஜ்ஜைனி, சாரங்க்பூர் மற்றும் சில பகுதிகளை இணைத்து தனி சுதந்திரப்பிரதேசமாக ஆண்டுவந்தான்.
                                                          மல்லூகான் இல்லாமல் மேலும் இரண்டு உள்ளூர் தலைவர்கள் அருகில் இரு பிரதேசங்களை ஆண்டு வந்தார்கள். இந்த அருகா மை குழப்பங்களை கவனித்த ஷேர்கான் அந்த பிரதேசங்களை வெற்றிகொள்ள    எண்ணினார். 1542 ல் குவாலியர், சாரங்க்பூர், உஜ் ஜைனி மற்றும் மால்வா பகுதிகளை வென்றார். 1543 ல் ராஜபுதனா மற்றும் மார்வாரின் தலைநகர் ஜோத் பூரையும் வென்றார். மால் தேவாவில் ஷேர்கானுக்கு ராஜபுத்திரர்களிடமிரு ந்து பலத்த எதிர்ப்பு இருந்தது. ராஜபுத்திரர்கள் சதித்திட்டம் வைத்திருந்தனர். போரில் அதிகமான வன்முறையைக் கையாண்டனர். ஆனால், இறுதியில் ஷேர்கான் வெற்றி பெற்றார். வெற்றியின் உற்சாகத்தால், மவுண்ட் அபுவை வென்று, சித்தூரை நோக்கி முன்னேறினார். சாதாரண வாழ்க்கையிலிருந்து துவங்கிய ஷேர்கான் பல துறைகளிலும் சிறப்பான அனுபவம் பெற்றிருந்தார். இவரின் கீழிருந்த ராஜ்ஜியம் சூர் பேரரசு என்று அழைக்கப்பட்டது. இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த அறிவாளியாக இருந்தார். கீன் என்பவரின் கருத்து ஷேர்கானை மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது. பின்னால் வந்த மொகலாய மன் னர்கள் இவரின் நிர்வாக வழிமுறையையே தொடர்ந்தனர். ஆக்ராவிலிருந்து புர்ஹான்பூர், ஆக்ராவிலிருந்து பைனாஹ் வழியாக மார்வார், லாஹூரிலிரு ந்து முல்தான் பகுதிகளுக்கு சாலைகளை அமைத்திருந்தார். சாலைகளின் வழியில் மசூதிகளைக்கட்டி, பூந்தோட்டங்களை அமைத்து அதிகாரிகளின் மேற்பார்வையில் நீர்விட்டு பாதுகாக்கச் செய்தார்.  

மொகலாய வரலாறு 10

                       இந்துக்களையும், குறிப்பாக பிராமணர்களையும் பணியில் அமர்த்தி இருந்ததாக கனுங்கோ என்பவர் கூறுகிறார். தபால்துறையில் குதிரைகளை யும் மற்ற கால்நடைகளையும் பட்டுவாடாக்கள் செய்ய அமைத்தார். மக்தப், மதரஸாக்களை அமைத்து இலவச உணவு, கல்வி கிடைக்கச் செய்தார். பஞ்சா பில் ரோடாஸ் கோட்டை, ஆக்ராவின் அரண்மனைக் கோட்டை ஆகியவற்றை கட்டினார். இந்திய வரலாற்றில் தனி இடம் பிடித்த ஷேர்கான் ஹுமாயுனுக்கு எதிராக திறமையாக போர்திட்டம் வகுத்திருந்தார். இராணுவத்தில் 150,000 குதி ரை வீரர்கள், 250,000 போர் வீரர்கள், 5,000 யானைப்படைகள் என்று பிரம்மாண்ட மாக்கினார். இராணுவத்தில் ஊழல்களுக்கு இடம் தராமல் தன்நேரடி கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். நிலங்களின் பரப்பளவுக் கேற்றவாறு வருவாய் செலுத்தும் வழிமுறையைக் கொண்டு வந்தார். சாதாரண குடிமகனுக்கும் நியாயமான நீதி கிடைக்கச் செய்தார். மதிப்புக்கேற்றவாறு தங்கம், செம்பு, வெள்ளியில் உருக்கிய நாணயத்தை வெளியிட்டார். தன் வாழ்நாளிலேயே தனக்கும், தன் தந்தை ஹசன் கான் சூரிக்கும் நினைவு கோபுரங்களைக் கட்டி னார். இவர் மகன் இஸ்லாமுக்கும் நினைவுகோபுரம் கட்டியபோது, பாதியிலே யே ஆட்சியை இழந்தார். குழந்தைப்பருவத்திலிருந்து மாற்றாந்தாய்களினால் வேதனையைச் சுமந்து, பின் சமூக, வருவாய் துறையில் சிறப்பான பயிற்சி பெற்று கவர்னராய் மாறி, பலமான மொகலாய, ராஜபுத்திரர்களை வென்று மன் னனாகவே ஆகிப்போன ஷேர்கான் 1545 மே மாதம் 22 ல் வெடிமருந்தை  கையா ளும்போது தவறுதலாக வெடித்து இறந்துபோனார். இவருக்குப் பிறகு, இளைய மகன் ஜலால்கான், சலீம்ஷா என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார். இவர் தனக்கெ திராக இருந்த அமீர்களை சிறையிலிட்டும், கொன்றும் கடுமையாக நடந்து கொண்டார். ஒருமுறை அஸீம் ஹுமாயுன் என்ற பஞ்சாபின் கவர்னரை தன் னை வந்து சந்திக்கும்படி கூறினார். அஸீம் ஏதோ காரணத்தால் தன் உதவியா ளரை அனுப்பினார். இதை அவமானமாகக் கருதிய சலீம் ஷா அஸீமைக் கொன்றுவிட உத்தரவிட்டார். இதை அறிந்த அஸீம் புரட்சியில் ஈடுபட அம்பா லா என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டு, காஷ்மீருக்கு தப்பி ஓடினார். அங்கே ஒரு பழங்குடி மனிதனால் அஸீம் சுடப்பட்டு இறந்து போனார். எட்டாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு சலீம்ஷா இறந்துபோனார். அடுத்து சலீம்ஷாவின் மகன் ஃபிரோஸ்ஷா ஆட்சிக்கு வந்தார் . இவர் மகன்களாலும், பேரப் பிள்ளைகளா லும் ஆட்சி ஆளும் திறமை இல்லாததாலும்,எதிரிகளை கையாள முடியாத தால் ஷேர்கானின் சூர் பேரரசு ஆட்சி குறிகிய காலத்தில் முடிவுற்றது. பல குழப்பங்களுக்கிடையில் சிலர் ஹுமாயுனை மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டினர்.
மீண்டும் ஹுமாயுன்
14,000 வீரர்களுடன் சென்று கந்தஹாரில் சகோதரர் கம்ரானை வென்று, காபூல் நோக்கி முன்னேறி  அதையும் வென்றார். இரவு நேரத் தாக்குதலில் எதேச்சையாக மிர்சா ஹிண்டால் கொல்லப்பட்டார். காபூ லை விட்டு தப்பி ஓடிய கம்ரான் சுல்தான் சலீம் ஷாவிடம் அடைக்கலம் தேடி னார். சலீம் ஷா கம்ரானை அவமரியாதை செய்ய, ககார் என்ற பகுதிக்குச் சென் றார். அதன் ஆட்சியாளரும் கம்ரானை அவமரியாதை செய்து, ஹுமாயுனிடம் ஒப்படைத்தார். சகோதரர்களை நல்ல விதமாக பார்த்துக் கொள்ளச் சொன்ன தந்தை பாபரின் உபதேசம் நினைவுக்கு வர, கம்ரானைக் கொல்லாமல் கண்க ளை மட்டும் பிடுங்கி இனி தமக்கெதிராக சதிகள் புரியாவண்ணம் செய்தார். கம் ரானின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மனைவியுடன் புனித மக்கா நகருக்கு அனுப்பப்பட்டு, இறுதி காலம் வரை அங்கேயே இருந்தார். அதே போல் இன் னொரு சகோதரர் மிர்சா அஸ்கரியும் பிடிக்கப்பட்டு மக்காவுக்கு அனுப்பி வைக் கப்பட்டார். தனது எதிரிகளை விலக்கிய பின் மீண்டும் ஹிந்துஸ்தான் மீது படையெடுத்தார்.
    இந்தியாவின் சில பகுதிகளிலிருந்தும் ஹுமாயுனுக்கு ஆதரவு வந்தது. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். உன்னிப்பாக இந் தியாவை கவனித்து வந்த ஹுமாயுன் 1555 ல் தகுந்த இராணுவ பலத்துடன் லாகூரைக் கைப்பற்றினார். அரசு கஜானாவில் பல ஊழல்களைச் செய்த சுல் தான் சிக்கந்தர் சூர் சர்ஹிந்தில் எதிர்த்து வர அவரை ஹுமாயுன் விரட்டி அடித் தார். பழைய இந்திய தலைநகரைக் கைப்பற்றிய ஹுமாயுன் ஒரு வருட காலம் ஆட்சி செய்தார். . இவர் ஆட்சி செய்த காலத்தில் விஞ்ஞானத்திலும், கலைகளிலும் ஆர்வம் காட்டினார். கவிதையிலும், ஓவியத்திலும் மிகச்சிறந்த புலமை பெற்றிருந்தார்.இவரது கவிதைகள் அர்த்தம் வாய்ந்ததாக இருந்தது. பூகோளவியலிலும் சிறந்து விளங்கினார். வானின் ஏழு கோள்களை நினை வில் கொண்டு ஏழு பெரிய மண்டபங்களுடன் கூடிய மாளிகையைக் கட்டினார். சந்திரன் என்னும் மண்டபத்தில் நீதிபதிகள், தூதர்கள், கவிஞர்கள் மற்றும் பய ணிகள் கூடுவதற்கும், செவ்வாய் மண்டபத்தில் தளபதிகள் மற்றும் இராணுவ தலைவர்களுக்காகவும், புதன் மண்டபத்தில் பொறியாளர்களுக்காகவும், சனி மற்றும் வியாழன் மண்டபங்கள் அரசு நிர்வாகங்களுக்காகவும், வெள்ளி மண்ட பத்தில் கவிஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கூடவும் நிர்மாணித்திருந் தார்.
      மிகச்சிறந்த தச்சுத்தொழிலாளிகளை தருவித்து கலைநயத்துடன் கூடிய நான்கு படகுகளைத் தயாரித்து ஜமுனா ஆற்றில் பய ணிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். படகுகளில் சிலவற்றை சிறுவணிகத் திற்கும் பயன்படுத்தினார்.  அவைகள் டெல்லி ஃபரிதாபாத்திலிருந்து ஆக்ரா வரை சென்றன. ஒரு படகில் தோட்டம் அமைத்து நகரும் தோட்டம் ஆக்கி னார். இவரின் மிகப் பிரமாண்டமான பணியாவது ஒரு படகை மூன்று தளங்க ளடங்கிய அரண்மனை ஆக்கி இருந்தார். எப்போது வேண்டுமானாலும் அந்த மரப்படகை தனிமைப்படுத்தி பிரித்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது சேர்த்துக்கொள்ளலாம். சேர்க்கும்போது இணைத்ததற்கான அடையாளமே தெரியாது. படகின் மேல்தளத்திற்கு செல்லும் படிகள் தேவைப்படாத போது மடித்து வைத்துக் கொள்ளலாம். ஹுமாயுனின் ஆட்சி அமைப்பு, அதிகாரிகள், கலைகளைப்பற்றி பக்கம் பக்கமாக குறிப்புகள் ஆதாரங்களுடன் இருக்கின்றன. தஸ்கிரத் உல் வகியதி ஹுமாயுன் என்ற நூலில் ஆசிரியர்  ஜவஹர் என்பவர் பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறார். ஹுமாயுன் நிறைய படிப்பவராக இருந்தார். இந்தியாவை விட்டு தப்பி ஓடும்போது கூட பிடித்தமான புத்தகங்க ளையும், நூலகக் காப்பாளர் லாலா பெக் (தெரிந்த பெயர்-பாஸ் பஹதூர்)        கையும் அழைத்துக்கொண்டு போனார். மதப்பற்று மிக்க முஸ்லீமாக சுன்னி பிரிவைச் சார்ந்து இருந்தார். அரசு நிர்வாகத்தையும் நான்கு பிரிவாக பிரித்து க்வாஜாஹ் அப்துல் மலிக், க்வாஜாஹ் லுத்ஃப் உல்லாஹ், க்வாஜாஹ் ஹசன் மற்றும் க்வாஜாஹ் ஜலாலுத்தீன் மிர்சா பேக் ஆகிய தகுதியான அமைச்சர்கள் வசம் கொடுத்திருந்தார். டெல்லியில் சிறந்த கல்லூரியை நிறுவினார். ஹுமா யுன் கோபுரம் என்ற அந்த கட்டிடம் இன்றும் இருக்கிறது. ஆரம்பத்தில் ஷியா பிரிவுக்கு மாறியிருந்ததாலும், அதிகமான ஷியா பிரிவினரை பதவிகளில் வைத்திருந்ததாலும் ஹுமாயுன் ஷியா பிரிவைச் சேர்ந்தவராக அதிகமானோர் கருதினர். ஆனால் இவர் ஒரு சிறந்த சுன்னிப்பிரிவு முஸ்லீமாகவே இருந்தார். அதிகாரிகளிடமும், சாதாரண சிப்பாய்களிடம் கூட நண்பர் போல் பழகக் கூடிய வராக இருந்தார். சிறந்த மகனாகவும், தந்தையாகவும், சகோதரராகவும் இருந் தார். தந்தையைப் போலவே வெகு சீக்கிரத்தில் புகழ்பெற்ற தீன் பனாஹ் என்ற நூலக கட்டிடத்திலிருந்து 1556 ல் ஜனவரி மாதம் 24ல் தவறி விழுந்து மரணம டைந்தார்.