மம்லுக்குகள் என்பவர்கள் பிறப்பால் அரபியரல்லாத முஸ்லீம்கள். புராதன காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். இவர்கள் நேர்மை யான நான்கு கலீஃபாக்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்த உமய்யாத்களின் ஆட்சியின் போதே இருந்தார்கள். ஆனால், அன்றைய உயர் அரபின மக்களால் கீழ்தரமாக நடத்தப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் நாடோடிகளாய் இருந்தவர்கள். அப்போது இஸ்லாம் புதிய மதமாக எழுச்சியுற்றபோது தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள். உமய்யாத்களுக்கு எதிராக ஆட்சியைப்பிடிக்க அப்பாஸிட்களுக்கு மத்திய கிழக்கில் பெரும் ஆதரவு தேவைப் பட்டது. தங்களைப் பலப்படுத்த அப்பா ஸிட்கள் துருக்கிய நாடோடிகளின் இனமான “மம்லுக்” (தமிழில்- சொந்தமாக்கப் பட்டவர்கள்) குகளின் ஆதரவைப் பெற்றார்கள். இவர்கள் அரசாங்கப் பணிகளிலும் இராணுவத்திலும் பயன்படுத்தப்பட்டனர். நல்ல இடத்தில் பணியில் அமர்ந்த அவர் கள் தங்களின் சரியான அனுகுமுறையால் சந்தர்பம் வாய்க்கப் பெற்றனர்.
மம்லுக்குகளில் முதன்முதலில் அஹ்மத் இப்ன் துலுன் என்பவர் 870 ன் ஆரம்பத்தில் எகிப்தின் அதிகாரத்தைப் பெற்றார். 877 ல் மெடிட்டரேனியன் கடற்கரைப் பகுதியில் பாலஸ்தீனத்திலிருந்து சிரியா வரை வென்றார். முதல் மம்லுக்குகளின் ஆட்சி 905 வரை சில ஆண்டுகளில் வீழ்ச்சி நோக்கி சென்றது. ஆனால், மீண்டும் முக்கியமாக மத்திய கிழக்கில் அதிகாரத்தை பெற்றனர். அடிப்படையிலேயே இயற்கையான பலத்தையும், இராணுவத் திறமை யும் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் சொந்த துருக்கி மொழியுடன் அரபு மொழியும் பேசினர். தங்கள் ஆட்சியின் அதிகாரத்தைப் பூர்த்தி செய்துகொள்ள திறமையான புதிய தைரியமான பழங்குடியினரை மத்திய ஆசியாவிலும், காகசஸிலும் பணி யில் அமர்த்திக்கொண்டனர். மம்லுக்குகளின் உச்ச அதிகாரம் அவர்கள் மீண்டும் 1250 ல் எகிப்தைக் கைப்பற்றிய போது வெளிப்பட்டது. அடுத்த பத்தாண்டுகள் கழித்து மங்கோலியர்களை எதிர்கொண்டனர்.
பெய்பர்கள் எனப்படுபவர்கள் மம்லுக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இரக்கமற்ற காட்டுமிராண்டிகள். வட கஸ்பியன் கடலோரத் திலிருந்த கிப்சக் துருக்கிகளின் ஒரு சிறுவனைக் பெய்பர்கள் எகிப்துக்கு அடிமை யாகக் கடத்தி வந்தனர். அவன் தன் இணையற்ற திறமையால் மம்லுக்குகளின் இராணுவத்தில் தலைமைப் பதவிக்கு வந்தான். 1260 ல் ஐய்ன் ஜாலூத் என்ற பகுதியை வெற்றி கொண்டு சொந்த மம்லூக் இன சுல்தானையே கொன்று அந்த பகுதியை தனதாக அறிவித்துக் கொண்டான். அவனின் பதினேழு வருட ஆட்சி யில் சிரியாவில் பல படுகொலைத் தாக்குதல்களைச் செய்தும், சிலுவைப்போரா ளிகளைத் தூண்டிவிட்டும், எகிப்தில் செங்கடல் பகுதியில் இருந்து கொண்டு மதிப்புமிக்க புனிதநகரங்களான மக்கா மற்றும் மதீனாவை ஆதிக்கம் செலுத்தி னான். அவனின் இந்த நடவடிக்கைக்கு அவன் பாக்தாதின் அப்பாஸிய கலீஃபா வின் ஆதரவில் தான் இருப்பது போல் நாடகமாடினான். இவனின் வழிவந்த ஆட்சியாளர்களும் இதே நாடகத்தைத் தொடர்ந்தனர். மம்லுக் சுல்தான்கள் கலீஃபாக்களைப் போல் குடும்ப பாரம்பரிய வரிசையில் ஆட்சிக்கு வருவதில்லை. யாரிடம் இராணுவத்தின் பலம் இருக்கிறதோ அவர்கள் ஆள்பவர்களைக் கொன்று விட்டு சுல்தான் பதவிக்கு வந்துவிடுவார்கள். இதையே பிந்தைய காலத்தில் ரோம சாம்ராஜ்ஜியத்தினர் பின் பற்றினார்கள்.
மம்லுக்கள் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். ஆனால், அதிகமான வன்முறைகளும், கலவரங்களும் நடந் தன. கெய்ரோ நகரத்தில் பல அழகான மசூதிகளைக் கட்டினார்கள். இடையே 500 மைல்கள் தொலைவுள்ள கெய்ரோவையும், டமாஸ்கஸையும் இணைந்த (TWIN CITY) நகரங்களாக நிர்வகித்தனர். இடையே புறாக்களின் கடிதப்போக்குவரத்து பயன்படுத்தப்பட்டது. மேலும் பெய்பர்கள் ஒரே வாரத்தில் இரு நகரங்களிலும் போலோ என்னும் விளையாட்டை விளையாடுவதில் பெருமை அடைந்தார்கள். மம்லுக்குகளின் ஒழுங்கான நிர்வாகத்திறமையையும், இராணுவ வீரர்களையும் ஓட்டோமான் சுல்தான்கள் மத்திய கிழக்கு ஆட்சியில் பயன்படுத்திக்கொண்டார். பதினெட்டாம் நூற்றாண்டில் எகிப்தில் கவர்னர்களை விட மிகுந்த செல்வாக்கில் இருந்தார்கள். 1749 லிருந்து பாக்தாதை அலுவல் ரீதியாக நிர்வகிக்க ஆரம்பித்தார் கள். அவர்களின் துல்லியமான சக்தி வெளிப்படுத்தப்பட்டது. 1811 ல் ஓட்டோமான் படைகள் எகிப்தில் மம்லுக்குகளைத் தாக்கினார்கள். 1831 ல் மம்லுக்குகளின் முக்கிய நபர்களைத் தேடிக்கொன்றார்கள்.
ஆனாலும், ஓட்டோமான் பேரரசு வரும் வரை சுமுகமாகத் தங்கள் துருக்கியின சிறு ஆட்சியாளர்களுடன் பகுதிகளைப் பங்கு போட்டுக்கொண்டு ஆட்சி செய்தார்கள். ஓட்டோமான்கள் மம்லுக்குகளிடம் மிக வும் எச்சரிக்கையாக இருந்தார்கள். எகிப்தை எதிர்க்கும் போது அருகிலிருந்த பெர்ஷியர்களை திறமையாகக் கையாண்டார்கள். 1517 ல் முதலாம் செலிம் என்னும் ஓட்டோமான் சுல்தான் நைல் நதிவழியாக சென்று கெய்ரோவைக் கைப் பற்றி கடைசி மம்லுக் சுல்தானைக் கொன்றார்.