சனி, 23 ஆகஸ்ட், 2014

அடிமைகள் வரலாறு 3சில இடைவெளியில் யூதர்கள் ஸ்லோவேனியா, வட ஆப்பிரிக்கா, பால்டிக் மாகாணங்கள், மத்திய, கிழக்கு ஐரோப்பா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் அடிமை வியாபாரத்தில் இருந்தார்கள். 10 ம் நூற்றாண்டிலிருந்து 15 ம் நூற்றாண்டு வரை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் பலமாக இருந்தார்கள். பொதுவாக யூதர்கள் 5 ம் நூற்றாண்டிலிருந்தே அடிமைகள் வியாபாரத்தில் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளன. போப் கிலாஷியஸ் கிறிஸ்தவரல்லாதவர்களை யூதர்கள் வியாபாரம் செய்யலாம் என அனுமதியளித்தார். 8 ம் நூற்றாண்டில் அரசர் சார்லிமாக்னி யூதர்களை அடிமைகள் வியாபாரத்தில் இடைத் தரகர்களாக இருக்க அனுமதித்தார். 10 ம் நூற்றாண்டில் ஸ்லேவேனிய அடிமைகளை அண்டலூசியா கலீஃபாவுக்கு பாதுகாப்பளிப்பதற்கு யூதர்கள் விற்றிருக்கிறார்கள். மன்னன் வில்லியம் யூத வியாபாரிகளை 1066 ல் இங்கிலாந்தின் ரோவன் பகுதிக்கு அழைத்து வந்தார். யூதர்கள் லத்தீன் அமெரிக்கா, கரீபியன், பிரேசில், பார்படாஸ், ஜமைக்கா மற்றும் சுரிநாமிலிருந்து ஏராளமான அடிமைகளை சொந்தமாக வைத்திருந்தார்கள்.
                               17 ம் நூற்றாண்டில் அல்ஜீரிய யூதர்கள் கடற்கொள்ளையர்களிடமிருந்து அதிகமான கிறிஸ்தவ அடிமைகளை கொள்முதல் செய்பவர்களாக இருந்தார்கள்.                                        வட ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலும், அரசபைகளிலும் அடிமைகளை உரிமை கொண்டாடுவதைப் பற்றி விவாதங்கள் நடந்தன. ஆனால் மேற்கு ஐரோப்பாவில் அடிமைகள் மெதுவாக குறைந்து போய் சுய பொறுப்பாளிகளாய் ஆகிப் போனார்கள்.
                                    அடிமைகள் எஜமானர்களின் விலைமதிப்பில்லாத சொத்தாவார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் பாபிலான் அரசு ஹம்முராபி என்ற (CODE OF HAMMURABI) சட்டத்தையே இயற்றி இருந்தது. மனிதவரலாற்றில் முதன்முதலாக புராதன கிரேக்கர்கள் தான் அடிமைகளை வைத்திருந்ததாக சரித்திரம் பதிவு செய்து வைத்திருக்கிறது. கிரேக்கர்கள் தங்கள் அடிமைகளை போரில் வென்றெடு த்தவர்கள் என்றும், சுயமாக சிந்தித்து வேலை செய்பவர்கள் என்றும், அதேசமயத் தில் தங்கள் எஜமானனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றும் சட்டமியற்றி வைத்திருந் தார்கள். ஏதென்ஸில் அடிமைகள் மதம் மாறக்கூடாது. ஆனால் அவர்களின் நிலைமை வேலைகளைப் பொறுத்து மாற்றப்படும். எதிர்பாராமல் ஏதென்ஸின் அடிமைகள் பெரும்பாலும் சுரங்கங்களில் பணிபுரிவதால், நிறைய அடிமைகள் இறந்து போய் விடுவார்கள். ஏதென்ஸ் அரசே 300 வில்லெறியக்கூடிய ஸைத்திய அடிமைகளை காவலர் படையில் வைத்திருந்தனர். அவர்கள் அடிமைகளாய் இருந்தாலும் கொஞ்சம் கௌரவமாக இருந்தனர்.
                                       வீடுகளில் பணிபுரியும் ஏதென்ஸ் அடிமைகளின் எதிர்காலம் அவர்களின் எஜமானர்களுடனான உறவைப் பொறுத்தது. பெண் அடி மைகள் எஜமானர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதால் அவர்களுக்கு சற்று நெருக்கம் கிடைக்கப் பெறுவார்கள். ஆண்கள் வீட்டு நிர்வாகம் மற்றும் எடுபிடி வேலைகளைச் செய்வார்கள். அப்படியே அவர்களின் எஜமானர்கள் விடுதலை அளித்தாலும் மாற்று எஜமானிடம் வேலைசெய்த காரணத்தால், கௌரவக் குறைச்சலாக கருதி வேறுயாரும் அவர்களை வேலைக்குச் சேர்ப்பதில்லை. அதனால் ஏதென்ஸின் ஆண் அடிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டார்கள். ரோம் நாட்டின் அடிமைகளும் பல வேலைகளைக்கற்று அரசு அலுவலகங்களில் பணியிடம் பெற்றார்கள். சுரங் கங்களிலும், வயல்களிலும் சங்கிலிக் கூட்டமாக வேலை செய்தனர். பொழுது போக்கில் கிளாடியேட்டர் என்னும் வீர விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டனர். ரோம அடிமைகளில் ஸ்பார்டகஸ் (SPARTACUS) என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றார்கள்.
                                   பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் முதல் முறையாக துணை சஹாரா ஆப்பிரிக்காவில் அடிமைகள் கப்பலைக் கொண்டு வந்தார்கள். இந்தப்பகுதி கடலில் சஹாராவிலிருந்து மெடிட்டரேனிய னுக்கு அடிமை வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. இதனால் போர்ச்சுகீசியர் கள் புதிய அடிமை வியாபார சந்தையைத் துவக்கினார்கள். இந்த புதிய அடிமை சரக்கு வியாபாரத்திற்கு இயற்கையும் பெரிதும் உதவியது. வால்கானிக் வெர்டி தீவுகள் பெரிய பாறைகளுடன் கப்பல் போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தாக இருந் தது. இதனால் போர்ச்சுகீசியர்கள் இந்த சூடு மிகுந்த தீவை அடிமைச்சந்தைக்குத் தேர்ந்தெடுத்தனர். மேற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு சஹாரா கடல் வழியைப் பயன்படுத்தினர். போர்ச்சுகீசியர்கள் 1460 ல் வால்கானிக் வெர்டி தீவுக்கு வந்தார்கள். 1466 ல் குறுகிய காலத்தில் அடிமை வியாபாரத்தில் புதிய உலகசந்தையைத் துவங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண் டார்கள். கினியா நாட்டின் கரையோரத்திலும் போர்ச்சுகீசியர்கள் அடிமைச்சந்தை யைத் துவங்கி அடிமை வியாபாரத்தில் தனி இடத்தைப் பெற்றனர். கினியாவில் துணிகளைக் கொடுத்துவிட்டு அடிமைகளைப் பெற்றுச்செல்வார்கள்.
                              பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த அபாயகரமான அடிமைக் கடத்தலில் பிரிட்டிஷ் கப்பல்கள் பெரிதும் ஈடுபட்டன. அவர்கள் கடல் பயணத்தை வீணாக்குவதில்லை. இதைப்பல காரணங்களுக்காக பயணிக்கும் கப்பலில் அடிமைகளைக் கடத்திச் செல்வதை ‘முக்கோண வியாபாரம்’ (TRIANGULAR TRADE) என்று அழைத்தனர். இந்த முக்கோண வியாபாரம் கப்பல் உரிமையாளருக்கு பொருளாதார ரீதியில் லாபம் அளித்ததால் அட்லாண்டிக்கின் கடல் வழி அடிமை கடத்தலுக்கு மிகவும் பயன்பட்டது. லிவர்பூல் மற்றும் பிரிஸ்டால் துறைமுகத்தி லிருந்து மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வெடிப்பொருள்கள், மதுவகைகள், பருத்தி துணிகள், உலோகங்கள் மற்றும் மணிகளை ஏற்றிச்செல்லும். கினியாவில் இந்த பொருட்களுக்காக வியாபாரிகள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர்கள் ஆப்பிரிக் காவின் உட்பகுதியில் பிடிக்கப்பட்ட அடிமைகளை பொருட்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். வியாபாரப் பொருட்கள் கைமாறியவுடன் அடிமைகள் ஆபத்தான மற்றும் பரிதாபமான முறையில் கப்பலில் ஏற்றப் (அடைக்க) படுவார்கள். இந்த அபாயகரமான பயணத்தில் ஆறு அடிமைகளில் ஒரு அடிமை மேற்கிந்திய தீவு களை கப்பல் அடையும் முன் இறந்துவிடுவார். இறுதியாக கப்பல் அமெரிக்க அடிமைச் சந்தையை வந்து அடையும்.
                                        ஆச்சரியப்படாதீர்கள் இப்படியாக ஏறக்குறைய 1.5 கோடி அடிமைகள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறார்கள். அரேபியர்கள் அடிமைகளை எதற்காக எப்படி உபயோகப்படுத் தினார்கள் என்பதையும் இஸ்லாம் அதை எதிர்த்ததும் அனைவரும் அறிந்தது. ஆனால், இன்று மனித உரிமைகளைப்பற்றியும், நேட்டோ என்ற கூட்டுப்படை அமைத்து உலக சமாதானம் என்று ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, துருக்கி என இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து ரத்தத்தில் குளிக்க வைக்கும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் எப்படி அடிமைகளைப் பயன்படுத்தினார்கள் என் பதை அறிந்தால் நெஞ்சம் பதைக்கும். நீங்கள் சோகத்தைத் தாங்கக் கூடியவராக வும், கண்ணீரை அடக்கக்கூடியவராகவும் இருந்தால் எனக்கு கமெண்ட் கொடுங் கள். அதைப்பற்றி விரிவான ஒரு பதிவை வெளியிடுகிறேன்.
                                      இந்த அடிமை வியாபாரம் முதன்முதலில் வெளி உலகத்திற்கு அஃப்ரா பெஹ்ன் என்பவர் “ஓரூனோகோ”(OROONOKO) என்ற நாவலில், ஒரு ஆப்பிரிக்க இளவரசனும்,அவன் காதலியும் ஆங்கிலேயர்களால் அடிமை     களாக சுரினாமுக்கு கடத்தப்படுகிறார்கள். அவர்கள் படும் வேதனையில் இந்த கப்பலில் கடத்தும் முறையையும் எழுதி இருந்தார். இதன் பிறகு உலகம் முழுவ தும் வழக்கம் போல் கண்டனக்குரல்கள் எழுந்தன. பிரிட்டனில் புகழ்பெற்ற “பாஸ் டன் மஸ்ஸாக்கர்” நிகழ்ந்தது. இதற்கு பிரிட்டிஷாரின் குண்டுக்கு பலியான முதல் அடிமை ‘க்ரிஸ்பஸ் அட்டுக்ஸ்’ என்பவராவார். தங்கள் நாடுகளை வளப்படுத்திக் கொண்டு வழக்கப்போல் ஐரோப்பாவும், அமெரிக்காவும் அடிமைத்தனம் ஒழிய வேண்டி அமைதிக்குழு அமைத்தும், மாநாடுகள் நடத்தியும்  ஒரு நூற்றாண்டு களுக்கும் மேலாகப் பேசிப்பேசி அடிமைத்தனத்தை அழித்தார்கள். எந்தெந்த நாடுகளில் கூடி என்னென்ன பேசினார்கள் என்பதெல்லாம் தூக்கம் வர வழைக் கும் சமாசாரங்கள். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது சுமார் 40 லட்சம் அடி மைகள் விடுதலை செய்யப்பட் டார்கள். சில ஆயிரம் பேர் தங்கள் அடிமைக் கதைகளை பின்வரும் சந்ததிக்கு நாட்குறிப்பு, கடிதங்கள், ஒலிப்பதிவு மற்றும் வாய்மூலம் பதிவு செய்து வைத்தார்கள்.

அடிமைகள் வரலாறு 2பதினைந்தாம் நூற்றாண்டுகளில் போலந்தில் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டிருந்தது. 1588 ல் லிதுவேனியாவிலும் தடை செய்யப்பட்டு மறுபரிசீலனையாக அடிமைகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தனர். 1679 ல் ரஷ்யாவில் விவசாய அடிமைகளாய் இருந்தவர்கள் பணியாட்களாக மாற்றப்பட்டனர். 1723 வரை ரஷ்யாவில் சிறு அளவிலிருந்த அடிமைகள் பீட்டரால் வீட்டு வேலைக்கு மாற்றப்பட்டனர். போலந்து, ரஷ்யாவிலிருந்து தப்பிய அடிமைகள் ஒன்றாக இணைந்து எவருக்கும் கட்டுப்படாத “கொஸாக்கு” (COSACK) களாக மாறினர். போரில் பிடிபட்ட, கடன் செலுத்த முடியாத, தானாகவே முன்வந்த அடிமைகள் பிரிட்டனில் இருந்தார்கள். அயர்லாந்தும், டென்மார்க்கும் கைது செய்யப்பட்ட ஆங்கிலோ சாக்ஸன் மற்றும் செல்டிக் அடிமைகளை விற்றுவந்தனர். அடிமைகளுக்கும் இஸ்லாமிய உலகுக் கும் நிறைய தொடர்புகள் இருந்தன. வட ஆப்பிரிக்கா மற்றும் ஐபீரிய தீபகற்பத் தின் மீது படையெடுத்த போது மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெருவாரியான அடிமைகளை இறக்குமதி செய்தார்கள். இஸ்லாமிய சட்டமும், கிறிஸ்துவ, யூத, சபிய, மாஜிய சட்டங்களும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்து வதை தடை செய்தன. ஆனால், அடிமைகள் போரில் கைப்பற்றப்பட்டால் சட்டம் அவர்களை ஒரு பொருளாக கருதி விலக்கி விடுகிறது. முஸ்லீம்களாக மதம் மாறிவிட்ட அடிமைகளை முஸ்லீம்கள் விடுதலை செய்து வந்தார்கள். மாறவி ல்லை என்றாலும் உரிமையாளர்கள் நல்லுபதேசம் செய்தார்கள். ஆனால், பொதுவாக இஸ்லாமியர்கள் அடிமைகளை மதம் சொன்ன அடிப்படையில் நடத்தவில்லை.
                            அடிமைகள் வியாபாரம் யூதர்களிடத்தில் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே இருந்தது. யூத வியாபாரிகள் அடிமைகளை கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும், கிறிஸ்துவ ஸ்பெயினிலிருந்தும் அல் அண்டலூஸ் அடிமைச்சந்தைக்கு கொண்டு வந்து மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு விற்று வந்தனர். ஆங்கிலத்தில் ஸ்லேவ் என்று சொல்லப்படும் அடிமைகளைக் குறிக்கும் சொல் ஸ்க்லபோஸ் (SKLABOS) என்ற பதத்திலிருந்து வருகிறது. 1100 லிருந்து 1500 வரை ஐரோப்பிய அடிமைகள் வியாபாரம் மேற்கத்திய மெடிட்டரேனியன் இஸ்லாமிய நாடுகளையும், கிழக்கு கிறிஸ்துவ, முஸ்லீம் நாடுகளையும் சார்ந்திருந்தது. பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் வெனிஸ் மற்றும் ஜினோவா நகரங்கள் கிழக்கு மெடிட்டரேனியனையும், பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் கருங்கடலையும் சார்ந்து வியாபாரம் செய்தன. அவர்கள் ஸ்லாவிக், பால்டிக், ஜியார்ஜிய, துருக்கிய அடிமைகளை இஸ்லாமிய நாடுகளுக்கு விற்று வந்தனர். 1440 லிருந்து பதினெட் டாம் நூற்றாண்டு வரை லட்சக்கணக்கான உக்ரைன் நாட்டு அடிமைகள் துருக்கி நாட்டுக்கு விற்கப்பட்டனர். டடார் (TATOR) எனப்படுபவர்கள் 1575 ல் 35,000 பேரையும், 1676 ல் 40,000 பேரையும், 1688 ல் 60,000 பேரையுமான உக்ரைனிய அடிமைகளை பிடித்து சந்தைகளில் விற்றனர். 1864 ல் தடை செய்யும் வரை ஐந்நூறு ஆண்டுக ளாக ரோமில் சில அடிமைகள் இருந்தனர். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய கடற்கொள்ளையர்கள் குறிப்பாக அல்ஜீரியன்கள் ஓட்டோமான் பேரரசின் ஆதரவுடன் ஐரோப்பிய கடலோரங்களில் ஆயிரக்கணக்கான அடிமைகளைப் பிடித்து சந்தையில் விற்றுவந்தனர். சில ஐரோப்பிய நாடுகள் பணவசூல் செய்து தங்கள் அடிமைகளை விலை கொடுத்து மீட்டனர்.
                                   பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் மங்கோலியர்கள் படையெடுப்பின் போது ஏராளமான அடிமைகளை கையகப்படுத்தி திறமையான பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பிரித்து கரகோரம் அல்லது சராய் பகுதிகளு க்கு அனுப்பினர். பெரும்பான்மையானவர்களை நோவ்கோராட் சந்தைக்கு ஏற்று மதி செய்தனர். அமெரிக்க காலனிய நாடுகளில் புகையிலை, பருத்தித் தோட்டங்க ளில் அடிமைகள் வேலை செய்திருக்கிறார்கள். உலகில் மெடிட்டரேனியன் பகுதி தான் அடிமைச்சந்தைக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி அளவுக்கதிகமாக “ஸ்லாவ்” இன அடிமைகளை பிடித்து வைத்திருந்தது. அவர்களின் இனப்பெயரே ஸ்லேவாக ஆங்கிலத்தில் ஆகியது. ஒரு கட்டத்தில் அடிமைகளை கருங்கடல் ஒர நாடுகளில் இறக்குமதி செய்வதே ரஷ்யாவின் வருமானமாக இருந்தது. மெடிட்டரேனியனின் தென்பகுதியில் அரபுகளின் பேரரசுகள் இருந்ததால் சஹாராவில் ஸ்வீலா என்ற நகரில் 700 அடிமை வியாபாரிகள் இருந்தனர்.         
                             பழங்காலத்தில் மனிதசமுதாயத்தில் இன்றியமையாமல் போனவர்கள் அடிமைகள். புராதன காலத்தில் எல்லா இனமக்களும் அடிமைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் கிடைப்பது மிக சுலபமாக இருந்தது. போர்கள் இன்றியமையாததாக இருந்த காலங்களில் தோற்றவர்களிடம் இரு ந்து பிடிபட்ட மனிதர்களில் பலசாலிகளை அடிமைகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டு மீதியுள்ளவர்களை கொன்றுவிடுவார்கள். கடற்கொள்ளையர்கள் ஒரு பொருள் போல அடிமைகளையும் கொள்ளையடித்தனர். கடும் குற்றம் செய்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கடனைத் திருப்பி செலுத்த முடியாதவர்களும் அடிமைகளாக்கப்பட்டனர். வறுமையில் இருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அடிமைகளாக விற்றுவிட்டனர். சில எஜமானர்கள் அடிமைகளை குடும்பமாக இருக்க விடமாட்டார்கள். அடிமைகளுக்கென்றே சட்டங்கள் இயற்றிய அரசாங்கங்கள் இருந்தன.
                             அரேபியாவில் அடிமைத்தனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே  இருக்கிறது. ஆனால் திருக்குரானும், நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகளும் அடிமைத்தனத்தைத் தடுத்து அடிமைகளை விடுதலை செய்யும் ஆர்வத்தை தூண்டின. அடிமைகளை விடுதலை செய்து விட மனிதனுக்கு பரிந்துரைக்கிறது. அரேபியாவில் குறிப்பாக பெண் அடிமைகள் மதிப்புடன் நடத்தப்பட்டனர். ஒரு காலத்தில் நாடோடிகளாகவும், அடிமைகளாகவும் இருந்த “மம்லுக்” இனத்தவர்கள் இஸ்லாமிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் சரியான சந்தர்ப்பத் தில் தனது எஜமான கலீஃபாக்களை மதிக்காமல் தாங்களே கைப்பற்றிய பகுதிக்கு ஆட்சியாளர்கள் ஆனார்கள். இதனால் அரேபியப் பகுதியில் அடிமைகளை இராணுவத்தில் சேர்ப்பது குறைந்தது. இஸ்லாமில் அடிமைத்தனம் எப்போது நபி(ஸல்) நாயகம் ஒரு எத்தியோப்பிய் அடிமை பிலால் இப்ன் ரிபாஹ் அவர்களை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இறைவனை தொழ பாங்கு என்ற அழைப்பு விடுக்கச் சொன்னார்களோ அப்போதே தெளிவாகிவிட்டது. குர்ஆனும், ஹதீஸ்களும் அடிமைகள் பற்றி நிறைய கூறி இருக்கின்றன. குறிப்பாக அடிமைகளை விடுதலை செய்வதின் நன்மையை எடுத்துறைக்கிறது. நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகன் ஸைதும் ஒரு அடிமைதான். நபிகளாரும், அவர் மனைவி, தோழர்கள் 39,237 அடிமைகளை விடுதலை செய்ததாக பதிவு இருக்கிறது. 
                                   அரபுகளின் அடிமை வியாபாரம் 20 ம் நூற்றாண்டு வரை மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் பரவலாக இருந்தது. மேற்கத்திய நாடுகளும், பிரிட்டனும் கொடுத்த அழுத்தத்தால் சௌதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகள் 1962 ல் அடிமைகள் வியாபாரத்தை தடை செய்தன. இதைத்தொடர்ந்து அனைத்து நாடுகளும் வரிசையாகத் தடை செய்தன. பழங்காலத்திலிருந்தே அரபு நாடுகளில் அடிமைகள் வியாபாரம் பரவலாக இருந்தது. பெரும்பாலும் போர் சமயங்களின் போதும், பயணங்களின் போதும் கைப்பற்றப்பட்டார்கள்.
                                                                     ஆனால் கிறிஸ்தவ நாடுகளில் ஆண், பெண் அடிமைகள் மிகவும் மோசமாக கையாளப்பட்டனர். அடிமைகள் பற்றிய கிறிஸ்தவர்களின் நிலை சொல்லும் தரத்தில் இல்லை. சிலவற்றை நீங்களே பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளில் பார்த்துக்கொள்ளுங்கள்.
                                                                                யூதர்களின் வேத புத்தகத்தில் அடிமைகளைப் பற்றி சட்டமே உள்ளது. தனக், தால்முத் 12 ம் நூற்றாண்டின் மைமோனிடிசின் என்னும் ரப்பியின்(யூத குரு) மிஷ்னே தோராஹ் மற்றும் 16 ம் நூற்றாண்டின் யோசெஃப் கரோ என்னும் ரப்பியின் ஷுல்சன் ஆருச் போன்ற புத்தகங்களில் அடிமைகளைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சரித்திரப்பூர்வமாக சில யூதர்கள் சொந்தமாக அடிமை வியாபாரம் செய்து வந்தனர். அட்லாண்டிக் அடிமை வியாபாரத்திலும், சில ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அடிமை வியாபாரத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. தென் அமெரிக்காவில் பல யூதர்கள் அடிமை வியாபாரியாக இருந்ததாக ஜேசன் எச். சில்வர்மேன் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
                               எக்சோடஸ் ஆஃப் எகிப்து என்ற கதை யூத வேத புத்தகம் தோராஹ்வை மையப்படுத்தி யூதர்களை பற்றி வெளிபடுத்தியது. எகிப்தில் அடிமைப்பட்டிருந்த யூதர்களை கடவுள் வந்து காப்பாற்றுவது பற்றியது. ஹீப்ரோக்களின் குடும்பத்தில் அடிமைகள் இன்றியமையாமல் இருந்தார்கள். வேத புத்தகத்தின் அடிமைச் சட்டப்படி, அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்ளப் பட்டார்கள். வேத புத்தகப்படி(லெவ்.25:39-43) யூத அடிமைகளுக்கும்,(லெவ்:25:45-46) யூதரல்லாத அடிமைகளுக்கும் சட்டங்கள் இருந்தன. ஹீப்ரு அடிமைகள் வறுமையின் வாயிலாக வந்தவர்கள் என்றும், அவர்கள் தங்களை எந்த யூத குடுப்பத்திலும் தானே விற்றுக்கொள்ளலாம். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களை விடுதலை செய்து விடவேண்டும். ஹீப்ரு அல்லாத அடிமைகள் போரில் கைப்பற்றபட்டவர்கள் என்றும் அவர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கூட அடிமையாகவே வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஓடிப்போய் விட்டு திரும்ப வரும் ஹீப்ரு அல்லாத அடிமைகளை மீண்டும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று தோராஹ் கூறுகிறது. தால்முத்தில் யூத அடிமைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் எஜமானர்களே கொடுக்கவேண்டும. சில ரப்பிகள் யூத ஆண்கள் எந்த பெண் அடிமையையும், யூத பெண்கள் எந்த ஆண் அடிமையையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சட்டமிட்டனர். சில அடிமைச்சட்டங்கள் உறவு சம்பந்தமாக இருப்பதால் அது நமக்குத் தேவையில்லை.