வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 1

சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
ஆதாரனமான பதிவுகள்:                                                                                                          தி கன்னிபாலிசம் அண்ட் ப்ளட்பாத்ஸ் ஆஃப் தி க்ருசேடர்ஸ்

 இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம் என்ற இந்த தலைப்பு ஏதோ புதிது என்று நினைக்காதீர்கள். ஆராய்ந்து ஆராய்ந்து அலுத்துப் போய் சிலுவைப் போரினால் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளை அறிந்து மேற்கத்தியர்களே ஒப்புக் கொண்ட வாக்குமூலம் அது. முஸ்லீம்கள் மட்டுமல்லாமல், ஆண்டாண்டு காலமாய் மத்திய ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீதே, எங்கிருந்தோ கண்டம் தாண்டி வந்த கிறிஸ்தவர்களே நடத்திக் காட்டிய கொடுமை அது. 2001 ல் அமெரிக்காவை ஆண்ட ஜார்ஜ் புஷ் என்னும் காட்டுமிராண்டி, அரபு மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக மீண்டும் சிலுவைப் போரைத் தொடங்குவோம்’ என்றான். அட வல்லரசு நாட்டின் அறிவே வளராமல் போன மூடனே. நாகரீககாலத்தில் நாயைவிட கேவலமாக சிந்தித்த மடையனே. ஒரு பெண்ணிடம் நிர்வாணமாகு என்று சொன்னால் எந்தளவு பதறிப்போவாளோ, அந்தளவு உலக மக்களிடம் சிலுவைப்போர் என்று சொன்னால் பதறிப்போவார்கள். ஆம் அதன் பாதிப்புகள் அப்படி. பிறகு, மிகவும் கஷ்டப்பட்டு அமெரிக்க அரசு அந்த வார்த்தையை நீக்கிவிட்டு போர் என்று மாற்றியது. ஆனாலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்காவின் போர் சிலுவைப்போரின் கொடூரத்தைத்தான் காட்டியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பழங்கால அரபு மற்றும் முஸ்லீம் மக்கள் இன்னும் அவர்கள் மாறவில்லை என்று தான் உலகத்துக்குக் கூறினார்கள். உலக சரித்திரத்தில் இதுவரை நடந்த எந்த இனப்போர், மதப்போர்களிலும் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சிலுவைப் போர்களில் சிந்திய ரத்தம், கூட்டுக் கொலை, கற்பழிப்பு, காட்டுமிராண்டித்தனம் நடந்ததில்லை. அதைவிடக் கொடுமை இந்த கொடூரப்போருக்கு ‘புனிதப் போர்’ (HOLY WAR) என்று மாற்றமுடியாத பெயர் சூட்டி உலகம் முடியும் வரை அவமானத்தைத் தேடிக் கொண்டார்கள்.
மேற்கத்திய சிலுவைப் போராளிகள் ஆசிய மைனர், மத்திய ஆசியா, மெடிட்டரேனியன் கரை அரபுகளையும், யூதர்களையும் பிணங்களாக்கி ரத்தத்தில் ஊற வைத்தார்கள். சிலுவைப் போராளிகள் அனைவரையுமே அரபுகளாக கணக்கிட்டு (அரபு மண்ணில் வாழ்ந்த கிறிஸ்தவ, யூதர்களையும் சேர்த்து) ‘அரபுகளைக் கொல்லுங்கள் புனித மண்ணைக் கைப்பற்றுங்கள்’ என்று கோஷமிட்டுக் கொன்றார்கள். கிறிஸ்தவ போதகர் பால் ஜான்சன் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் கிறிஸ்டியானிட்டி’ என்ற புத்தகத்தில் பல தகவல்களை பதித்துள்ளார். பைஸாந்தியப் பேரரசர் முதலாம் அலெக்சியஸ் ஏதோ கிறிஸ்தவர்கள் அதிகப்படியான கொடுமையில் இருப்பதாக கற்பனை கலந்து போப் இரண்டாம் அர்பனை படை அனுப்ப வேண்டினான். முஸ்லீம் ஆட்சியாளர்கள் யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் வரி வசூலித்தார்கள். முஸ்லீம்கள் ஆட்சியில் முஸ்லீமல்லாதவர்கள் இராணுவப் பணிக்கு நிர்பந்தப் படுத்தப்படுவதில்லை. அதேநேரத்தில் முஸ்லீம் இராணுவம் அவர்களுக்கும் பாதுகாப்பைக் கொடுத்தது. அடுத்து முஸ்லீம் மக்கள் கண்டிப்பாக ஜக்காத் என்னும் வரியை செலுத்தி ஆகவேண்டும். மேலும் புனித தலங்களில் யூத, கிறிஸ்தவ மக்கள் வழிபட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகாலமாக இருந்து இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இது, முழுக்க முழுக்க உள்நாட்டுப் பிரச்சினை. அந்த மேதாவி போப் அர்பன் இத்தாலியின் பியாசென்ஸா நகரில் அவசர அவசரமாக அனைத்து மேற்கு ஐரோப்பிய நாட்டு மன்னர்களையும் அழைத்து பெரும் பணம் திரட்டி அழிவின் ஆரம்பத்தை சிலுவைப் போராக துவக்கினான். மேற்கத்திய மன்னர்கள், தலைவர்கள், வணிகர்கள் ஆகியோர் அரசியல், இராணுவ, வாணிபக் காரணங்களில் ஏதோ ஒன்றை கணக்கில் வைத்து வளமான புதிய மண்ணை நோக்கி புனிதப் போருக்கு கிளம்பினார்கள்.
இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போப் இரண்டாம் அர்பன் ஒன்று திரட்டி 1095 நவம்பரில் புகழ்பெற்ற மதவெறி உரையை நிகழ்த்தினான். எங்கோ இருக்கும் பாலஸ்தீனத்தில் தேனும், பாலும் ஓடுகிறது என்றான். பூமியில் கிறிஸ்தவர்களின் சொர்க்கம் என்றான். மொத்த கூட்டமும் “தியூ லெ வ்யூல்ட்” (DIEU LE VEULT) என்று வெறி பிடித்துக் கத்தியது. 476 ல் ரோமப் பேரரசு வீழ்ந்த பின் பாலஸ்தீனை நோக்கி மேற்கத்திய கிறிஸ்தவர்களின் மாபெரும் முதல் படையெடுப்பு இது. 200 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் போராக ஒன்பது முறையும், சிறு தாக்குதல்களாக பல முறையும் நடத்தப்பட்டது. முதல் சிலுவைப் போர் 1095-1099, இரண்டாவது 1147-1149, மூன்றாவது 1189-1192, நான்காவது 1198-1204, குழந்தைகள் சிலுவைப் போர் 1212, ஐந்தாவது 1217-1221, ஆறாவது 1228-1229, ஏழாவது 1248-1254, எட்டாவது 1270, ஒன்பதாவது 1290 லும் நடந்தது. உலகில் அரபு மற்றும் இஸ்லாமிய சக்திகளை வளர விடக்கூடாது என்று மிக அற்புதமாகத் திட்டமிட்ட இந்தப் போர்கள் பல பெயர்களில் 17 ம் நூற்றாண்டு வரை நடந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் 2001 பேச்சின் பிரகாரம் கணக்கிட்டால் 21 ம் நூற்றாண்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் மேற்கத்தியர்களும், அமெரிக்கர்களும் இன்னொரு சலாவுத்தீன் அய்யூபு உலகில் தோன்றுவதை விரும்பவில்லை. சரித்திரத்தை ஆழ்ந்து கவனித்தால் இதனால் தான் ஆப்பிரிக்காவை ஒன்றுபட நினைத்த உகாண்டாவின் ஈத் அமீன், லிபியாவின் மாம்மர் கடாஃபி, அரேபியாவை ஒன்றுபட நினைத்த ஈராக்கின் சதாம் ஹுசேன் ஆகியோர் ஏதோ ஒரு காரணம் கூறி கொல்லப்பட்டார்கள். பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகளைக் கொல்லும் ISIS அமைப்பு உண்மையான இஸ்லாமியர்கள் அல்ல என்பது உலகின் மூலை முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு முஸ்லீமுக்கும் தெரியும். இவைகளை ஒரு முஸ்லீம் தீவிரவாத கூட்டம் செய்வது போல் சித்தரிக்கப்படுகின்றன. எந்த மதத்தினராக இருந்தாலும் சக மனிதனை தீவிரவாதத்தின் பேரில் கொல்பவன் (போரல்லாமல்) முஸ்லீமல்ல என்பதை அறிந்தவன் எப்படி தீவிரவாதம் செய்வான். பின் லாடன் செய்தது கூட தீவிரவாதம் அல்ல. ரஷ்யாவுக்கு எதிராக பின் லாடனும், அமெரிக்காவும் நண்பர்களாக இருந் தார்கள். நண்பர்கள் பிரிந்து அடித்துக் கொண்டார்கள். அதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளுடன் சேர்ந்து தீவிரவாதம் என்று பெயர் சூட்டினால் சூட்டிக் கொள்ளட்டும். சிலரின் வாய்கள் என்ன சுத்தம் செய்தாலும் சுத்தமாகாது அது அவர்களின் பிறப்பின் சாபக்கேடு அல்லது உணவுமுறைப் பழக்கம்      நாற்றத்துடன் தான் இருக்கும்.
இந்த சிலுவைப்போருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டன. குறிப்பாக போப் இரண்டாம் அர்பனுடன் ஃப்ரான்ஸ் கலந்து கொண்டது. ஃப்ரான்ஸ் “கெஸ்ட டெய்பெர் ஃப்ராங்கோஸ்” (ஃப்ராங்குகள் இறைவனால் வழங்கப்பட்ட கருவி) என்று முழக்கமிட்டுக் கொண்டது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள், ஸ்காட்லாந்து, வெல்ஷ், ஐரிஷ், இத்தாலியர்கள், ஜெர்மனி, ஆஸ்ட்ரியங்கள், ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்கள், நார்மன்கள், பெல்ஜியம், டச்சுக்காரர்கள், ஸ்காண்டிநேவியன்கள் மற்றும் ஸ்விஸ்கள் கலந்து கொண்டார்கள். இந்த சிலுவைப் போரில் இராணுவத்தின் அனைத்துப் பிரிவினரும் கலந்து கொண்டார்கள். மேலும், ராஜாக்கள், சிறு மன்னர்கள், சிறப்பானவர்கள், நிலப்பிரபுக்கள், பாதிரியார்கள், துறவிகள், இராணுவத் தலைவர்கள், இராணுவ வீரர்கள், புத்திசுவாதீனமில்லாதவர்கள், பக்தர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், தீயவர்கள் என்று அனைத்துத் தரப்பும் கலந்து கொண்டன. மதவெறியூட்டப்பட்ட ஆண், பெண், குழந்தைகள் என்று யாவரும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக ஃப்ரான்சின் ஏமியன் நகரத்தைச் சேர்ந்த பியர்ரி லெர்மிட் (பீட்டர் தி ஹெர்மிட்) என்ற மதத்தலைவனும் கலந்து கொண்டான். இவன் ஒரு மனநோயாளி போல் தோற்றமளிப்பான். காலில் பாதணி கூட அணியாமல் குள்ளமாகவும், ஒல்லியாகவும் இருப்பான். தலை முடியால் கழுத்து, காதுகளை மறைத்திருப்பான். சிரைக்காத தாடியை மார்புக்கு கீழ்வரை வளர்த்திருந்தான். ஹெர்மிட் பேச்சுத்திறனில் மிகவும் வல்லவன். இவன் பேச்சைக் கேட்டவர்கள் இவனை “க்யோ க்யோ’ (லிட்டில் பீட்டர்) என்றார்கள். பேசிப்பேசி மக்களிடம் நன்றாக மதவெறியைத் தூண்டியிருந்தான்.
போப் இரண்டாம் அர்பன் இந்த புனித போரில் கலந்து கொள்ளும் அனைவரும் வரி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள பழைய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அவர்களின் பாவங்கள் துடைத்தெறியப்படும். சொர்க்கத்தில் அவர்களுக்கு தனி இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கவர்ச்சிகரமாகப் பேசி 160,000 பேரைத் திரட்டினான். ரோமர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஒட்டுமொத்த மேற்கு ஐரோப்பாவும் முதல்முறையாக கிழக்குப் பகுதியை நோக்கி கிளம்பின. இந்த ஐரோப்பிய கிறிஸ்தவ மதவெறியர்கள் நடத்திய கொடூரத்தைக் கண்டு சகிக்காமல் இயற்கையே பயங்கரமான பூகம்பத்தையும், குலை நடுங்கும் நிலநடுக்கத்தையும், ப்ளேக் நோயையும் அப்போது சிரியா மற்றும் அரபு தேசங்களில் நிகழ்த்தியதாக சொல்லப்பட்டது.

சிலுவைப்போர் 2

முதலாம் சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
கிறிஸ்தவ மதம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா பகுதிகளில் துவங்கிய காலத்திலிருந்து பரவிக் கொண்டிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் அனடோலியாவில் முஸ்லீம்கள் ஆட்சி பரவியவுடன் அதன் வேகம் குறைந்து போனது. உமைய்யாத் பேரரசு சிரியா, எகிப்து மற்றும் வட ஆப்பிரிக்காவை கிறிஸ்தவ பைஸாந்தியர்களிடமிருந்து வெற்றி பெற்றார்கள். விசிகோத் இராஜ்ஜியத்திலிருந்து ஹிஸ்பானியாவையும் வென்றிருந்தார்கள். நாளடைவில் நிலப்பரப்பு பெரிதானதால் நிர்வகிக்க முடியாமல் சிதைந்து பல சிறு இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. 9 ம் நூற்றாண்டில் அக்லாபித் என்பவர்கள் தன்னிச்சையாக இத்தாலியைத் தாக்கினார்கள். பிஸா, ஜினோவா, காடலோனியா போன்ற பல இஸ்லாமிய இராஜ்ஜியங்கள் மெடிட்டரேனியனில் தங்கள் அதிகாரத்தைப் பெற மஹ்தியா போர், மஜோர்கா போர் மற்றும் சர்தீனியா போர் அகியவற்றை நடத்தின.
1096 லிருந்து 1101 வரை கிரேக்க பைஸாந்தியர்கள், மேற்கு ஐரோப்பாவினருடன் மூன்று அலையாக கான்ஸ்டாண்டிநோபிள் நோக்கி வந்தார்கள். 1096 ல் முதல் பகுதி அதிகாரமற்றவர்களாக, போர் ஒழுங்கில்லாமல், முறையான ஆயுதங்களும் இல்லாமல் நகரின் வெளிப்புறத்தில் வந்து சேர்ந்தார்கள். சிலுவைப் போராளிகள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் பீட்டர் தி ஹெர்மிட் மற்றும் வால்டர் சான்ஸ் அவாயர் தலைமையில், பைஸாந்திய பேரரசர் அலெக்சியஸ் முதலாம் கம்னினசுக்கு மரியாதை அளிக்காமலும் தகவல் தெரிவிக்காமலும் வந்திருந்தார்கள். இரண்டாவது அலையாக இராணுவத்தினர் குழுக்களாக வந்திருந்தனர். இரண்டாவது குழுவுக்கு ஃப்ரான்சின் மன்னர் முதலாம் பிலிப்பின் சகோதரர் வெர்மாண்டோயிசைச் சேர்ந்த முதலாம் ஹூக் தலைவனாய் இருந்தான். இன்னொரு இரண்டாம் அலைக்கு டௌலூசைச் சேர்ந்த நான்காம் ரெய்மண்ட் தலைமை தாங்கினான். இவனது படை வழியில் 1098 ல் ஆண்டியாக்கைக் கைப்பற்றிக் கொண்டு, 1099 ஜூலையில் ஜெருசலம் வந்து சேர்ந்தது. முதலில் வந்தவர்கள், இரண்டாவது வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து 60,000 பேர் இருந்தார்கள். மூன்றாவது அலையாக லாம்பர்டி, ஃப்ரான்ஸ் மற்றும் பவேரியாவில் இருந்து மக்களைத் திரட்டி அவசரமாக உண்டாக்கிய குழுபோல் ஒன்று 1101 ல் ஜெருசலம் வந்தது.
ஐரோப்பாவின் ஐபீரிய தீபகற்பத்திலிருந்த கிறிஸ்தவர்களை போப் இரண்டாம் அர்பன் மீண்டும் டர்ரகானா பகுதியை இஸ்லாமியர்களிடமிருந்து வென்றெடுக்க வெறியேற்றினான். 10 ம் நூற்றாண்டில் ஸாக்சன், வைக்கிங்க் மற்றும் ஹங்கேரியன்களின் எழுச்சி யால் மேற்கு ஐரோப்பிய கிறிஸ்தவர்களிடையே ஒரு எழுச்சி இருந்தது. கரோலின்ஜியன் பேரரசின் வீழ்ச்சியால் அனைத்துத் தரப்பு வீரர்களும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந் தார்கள். ஐரோப்பாவின் சிறிய மன்னர்கள் அவ்வப்போது காட்டுமிராண்டித் தனமாய் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை தேவாலயம் கண்டித்தது. ரோமப் பேரரசுடனான அவர்களை பகையை போப் ஏழாம் கிரிகோரி களைந்து கிறிஸ்தவ மதத்திற்காக ஒருங்கிணைய வைத்தார். குறிப்பாக அல் அண்டலூசியா, செல்ஜுக் பேரரசை எதிர்த்து கிழக்குப் புறமாக போரிடச் செய்தார். கிழக்கு ஐரோப்பாவில் பைஸாந்தியப் பேரரசின் கிறிஸ்தவர்கள் புராதன வழக்கப்படி இருந்தார்கள். ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 1054 லிருந்து நவீன கருத்து கொண்ட கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். 1071 ல் மன்ஸிகார்ட் போரினால் செல்ஜுக் துருக்கிகள் மொத்த அனடோலியாவை வென்றிருந்தாலும், சில பகுதிகள் கப்பம் செலுத்தும் நடைமுறையில் அந்தந்த பகுதி தலைவர்களால் ஆளப்பட்டது. 1090 களின் மத்தியில் பைஸாந்தியப் பேரரசு பெருமளவு ஐரோப்பிய பால்கன் பகுதியிலும் வட மேற்கில் அனடோலியாவிலும், மேற்கில் நார்மன் எதிரிகளுடனும், கிழக்கில் துருக்கியர்களுடனும் மோதிக் கொண்டிருந்தது. மன்ஸிகார்ட் போர் தோல்விக்குப் பிறகு, போப் ஏழாம் கிரிகோரி கிறிஸ்தவர் களை ஒன்றாக சேர்ந்து பைஸாந்தியர்களுக்கு உதவுமாறு கூறினான். அப்போது அது முற்றிலும்   மறுக்கப் பட்டதுடன், எதிர்க்கவும் செய்யப்பட்டது. மன்ஸிகார்ட் தோல்வி தற்காலிகமானது தான் அதற்காக ஒன்றும் பைஸாந்தியர்களுக்கு ஆதரவாகப் போகத் தேவையில்லை என்று மறுத்து விட்டார்கள்.
சிலுவைப் போராளிகள் வரும் வரை பைஸாந்தியர்கள் அனடோலி யாவிலும், சிரியாவிலும் செல்ஜுக்குகளையும், துருக்கிய பேரரசை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். செல்ஜுக்குகள் புராதன இஸ்லாமியர்களாக சுன்னிப் பிரிவைச் சார்ந்திருந்தார்கள். மாபெரும் செல்ஜுக் பேரரசாய் இருந்த அவர்கள் 1092 ல் முதலாம் மலிக் ஷா இறந்த பிறகு சிதறி சிறு மாகாணங்களாக ஆகிப் போனார்கள். மலிக் ஷாவுக்குப் பிறகு, அனடோலியாவில் சுல்தானிய ரோம் பகுதிக்கு முதலாம் கிலிஜ் அர்சலன் ஆட்சியாளராகவும், அவர் சகோதரர் முதலாம் துடுஷ் சிரியாவின் ஆட்சியாளராகவும் இருந்தார்கள். துடுஷ் 1095 ல் இறந்து போக, அவர் மகன்கள் ஃபக்ர் அல் முல்க் ரத்வானும், டுகாக்கும் முறையே அலிப்போவையும், டமாஸ்கஸையும் ஆண்டார்கள். மேலும் சிரியாவின் சில பகுதிகளை இருவருக்குமான சில எமிர்கள் ஆண்டு வந்தார்கள். மோசூல் நகரமும் அடபெக்கால் (பொறுப்பாளர்) ஆளப்பட்டது. எகிப்தும், பாலஸ்தீனின் பெரும் பகுதியும் ஃபாத்திமிட் கலீஃபாவால் ஷியா பிரிவு கொள்கையுடன் ஆளப்பட்டது. செல்ஜுக்குகளின் எழுச்சியால் அவர்களின் பகுதி சுருங்கிப் போனது. ஃபாத்திமிட் மற்றும் செல்ஜுக்குகளுடனான போர்களால் கிறிஸ்தவர்களுக்கும், மேற்கத்திய யாத்ரீகர் களுக்கும் பெரும் தொந்திரவாக இருந்தது.
ஃபாத்திமிட் கலீஃபா அல் முஸ்தலியின் சார்பில் வைசிராயர் அஃப்தல் ஷாஹென்ஷாவின் அதிகாரத்திலிருந்த ஜெருசலம் 1073 ல் (1076 ஆகவும் இருக்கலாம்) செல்ஜுக்குகள் வசம் போனது. செல்ஜுக்குகளின் சிறிய பழங்குடியினரான அர்துகிட்களின் அதிகாரத்தி லிருந்த ஜெருசலத்தை மீண்டும் 1098 ல் சிலுவைப் போராளிகள் வரும் சமயத்தில் ஃபாத்திமிட்கள் கைப்பற்றினார்கள். சிலுவைப்போரின் காரணத்திற்கு ஜே ரூபென்ஸ்டீன், ஜெர்மனியின் கார்ல் எர்ட்மன், ஸ்பிராஸ் ரையோனிஸ், ஸ்டீவன் ருன்சிமன், மோஷி கில், தாமஸ் அஸ்ப்ரிட்ஜ், தாமஸ் மட்டன், கிறிஸ்டோபர் டயர்மேன், ஜோனாதன் ரிலெய் ஸ்மித், பீட்டர் ஃப்ரான்கோபன், வில்லியம் ஆகியோர் பல ஆவணங்களை ஆராய்ந்து பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். சிலுவைப் போர்கள் 11 ம் நூற்றாண் டில் ஐரோப்பாவில் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளை மாற்றியது. செல்ஜுக்குகள் கான்ஸ்டாண் டிநோபிளுக்கு அருகில் மேற்கில் நிகாயா வரை முன்னேறி இருந்தார்கள். இதனால் 1095 மார்சில் பைஸாந்தியப் பேரரசர் கோம்னினோஸ் முதலாம் அலெக்சியஸ் துருக்கியர்களுக்கு எதிராக உதவுமாறு போப் இரண்டாம் அர்பனை பியாசென்ஸா என்ற அமைப்பின் மூலம் அணுகினார். முதல் சிலுவைப் போர் பைஸாந்தியப் பேரரசர் கோம்னினோஸ் முதலாம் அலெக்சியசின் வேண்டுகோள்படி உதவுவதற்காக வந்தது.

சிலுவைப்போர் 3

1096 ல் பைஸாந்திய கப்பல்கள் அணிவகுக்க, பியர்ரி எர்மிட் (PIERRE L’ERMIT) என்பவன் தலைமையில் பாஸ்போரஸ் ஆற்றைக் கடந்து இஸ்லாமிய துருக்கிப் பகுதிக்கு வந்தது. கிரேக்க தேவாலயங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு, ‘முஸ்லீம்களை வெளியேற்று வோம்’ என்று வெறியோடு முன்னேறினார்கள். துருக்கிய விவசாய பூமிகளை தீயிட்டு கொளுத்தினார் கள். இரக்கமில்லாமல் அப்பாவி முஸ்லீம் பொதுமக்களைக் கொன்று, அவர்களின் குழந்தைகளை உயிரோடு தீயிட்டு கொளுத்தினார்கள். அணிந்திருக்கும் உடைகளை வைத்தே கொன்றார்கள். ஆனால் அதில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், யூதர்களும் அடங்குவார்கள். அவர்களின் குழந்தைகளை தீயின் மேலே கம்புகளில் வைத்து சுட்டுச் சாப்பிட்டார்கள். பியர்ரி எர்மிட்டின் படைகள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தில் இருந்தார்கள். பைஸாந்தியப் பேரரசர் அலெக்சியஸின் மகள் இளவரசி அன்னா கோம்னினா, இறந்த உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்ததாகவும். அவள் தந்தை கொடுமைகளை பார்த்து ஏன் சிலுவைப் படைகளை அழைத்தோம் என்று வருத்தப்பட்டதாகச் சொன்னாள். நிகாயாவில் (தற்போதைய இஸ்னிக் நகரம்) நடந்த முதல் போரில் துருக்கிய கிலிஜ் அர்சலன் வெற்றி பெற்றார். ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை.
சிலுவைப்போருக்காக கான்ஸ்டாண்டிநோபிள் வந்த படைகள் வரும் வழியெல்லாம் இருந்த நகரங்களில் கொடுமைகளை செய்து கொண்டு வந்தார்கள். 60,000 பேர் வரை இருந்த படையில் 5,000 குதிரைப்படையினர் இருந்தார்கள். இதில் ரெய்மண்டின் படை 8,500 வீரர் களும், 1,200 குதிரைப்படை வீரர்களும் ஆவார்கள். வந்த சிலுவைப் போராளிகளின் தலைவர்கள் உணவுக்காக அலெக்சியஸை நாடினார்கள். சிறிது நாளில் அவர்களின் நடவடிக்கைகளை அறிந்த அலெக் சியஸ் வெறுப்படைந்தார். மேலும் தந்தை ராபர்ட் கூயஸ்கார்டுடன் சேர்ந்து பலமுறை பைஸாந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமித்த நார்மன் எதிர் போஹிமாண்டும் அதில் இருந்தான். போருக்காக வந்த இளவரசர்கள் அலெக்சியஸை தலைமை தாங்க விரும்பினார்கள். ஆனால் அலெக்சியஸ் அதை விரும்பாமல் அவர்களை விரைவாக அவர்களை மைனர் ஆசியாவுக்குள் அனுப்ப முயற்சித்தான். அவர்களின் தலைவர்களை துருக்கிகளிடமிருந்து கைப்பற்றும் இடங்களை விசுவாசத்துடன் திருப்பித் தருமாறு கேட்டான். முதலில் காட்ஃபிரே உறுதியளிக்க மற்றவர்களும் ஒவ்வொருவராக அலெக்சியஸுக்கு உறுதிமொழி அளித்தனர். ரெய்மண்ட் மட்டும் உறுதிமொழி கூறாமல் பைஸாந்தியப் பேரரசுக்கு எந்த தொந்திரவும் செய்ய மாட்டேன் என்று கூறினான். அனைத்துப் படைகளையும் பாஸ்போரஸ் ஆற்றின் கரைக்கு அழைத்து வந்த அலெக்சியஸ், எப்படி செல்ஜுக் இராணுவத்தை கையாள்வது என்று அறிவுறுத்தினான்.
அலெக்சியஸ் தன் ஜெனரல்களான மானுவேல் பௌடூமிட்ஸ் மற்றும் டடிகியோஸ் ஆகியோரை உதவிக்கு அனுப்பினான். முதலாம் கிலிஜ் அர்சலனின் சுல்தானிய ரோம தலைநகராக இருந்த நிகாயாவை மீண்டும் சிலுவைப்படைகள் தாக்கினார்கள். அப்போது கிலிஜ் அர்சலன் தன் குடும்பம், செல்வங்களை விட்டுவிட்டு மத்திய அனடோலியாவில் ஒரு படையெடுப்பில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சிலுவைப் படைகளின் பலம் தெரியவில்லை. நிகாயாவில் நீண்ட போர் நடந்து கொண்டிருந்தது. இது கிலிஜ் அர்சலனை எட்ட அவர் விரைந்து வந்து மே மாதம் 16 ந் தேதி சிலுவைப் படைகளுடன் மோதினார். இரு தரப்பிலும் கடும் சேதம் விளைந்தது. கடுமையான போரில் சிலுவைப்படைகளின் கை ஓங்கியது. கிலிஜ் அர்சலன் சற்று பின் வாங்கினார். அலெக்சியஸ் பெரிய மரத்துண்டுகளை நிலத்தில் பரப்பி துருக்கிய பாதுகாப்புப் படையை முடக்கி ஜூன் 18 ல் சரணடைய வைத்தான். நிகாயா நகரம் பைஸாந்தியரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, சிலுவைப் போராளிகள் நகருக்குள் புகுந்து கொள்ளையடித்து அட்டூழியம் புரிந்ததால் பேரரசுடன் குழப்பம் நிலவியது. சிறைப் பிடிக்கப்பட்ட பல துருக்கிய வீரர்களை அடிமைச் சந்தையில் விற்றார்கள். துருக்கிய படைகள் தோற்ற செய்தி மொத்த அரபு நாடுகளுக்கும் பரவியது. வழியிலுள்ள மொத்த அரபு நாடுகள், நகரங்கள், கிராமங்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தன. சிலர் தங்கள் வீடுகள், சொத்துக்களை விட்டு தூரப்பகுதிகளுக்கு தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள ஓடினார்கள். உறுதி மொழியை மீறி சிலுவைப்போராளிகள் நடந்து கொண்டாலும், அலெக்சியஸ் அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்தார்.
ஜூன் மாத இறுதியில் சிலுவைப்படைகள் அனடோலியாவை நோக்கி நகர்ந்தன. சில பைஸாந்திய படைகளுடன் தளபதி டடிகியாஸும் உடன் சென்றான். மேலும் சில பைஸாந்திய படைகள் பின்னர் வரும் என நம்பப்பட்டது. அவர்கள் படையை நார்மன்கள் தலைமையில் ஒன்றும், ஃப்ரென்ச்கள் தலைமையில் ஒன்றுமாகப் பிரித்துக் கொண்டார்கள். இரண்டும் டோரிலாயம் நகரில் சந்திப்பதாக திட்டம். ஜுலை 1 ல் ஃப்ரென்ச் படைகளுக்கு முன்பாகச் சென்ற நார்மன்கள் படையை டோரிலாயம் நகரில் கிலிஜ் அர்சலன் எதிர் கொண்டார். இப்போது எதிரியின் பலம் அறிந்ததால் கிலிஜ் அர்சலன் வேகமாக அம்பெறியும் திறன்படைத்த வீரர்களுடன் பெரும் படையைத் திரட்டி நார்மன்களைச் சுற்றி வளைத்தார். சரியான தருணத்தில் ஃப்ரென்ச் படைகள் காட்ஃப்ரே தலைமையில் வர துருக்கிய படைகளின் திட்டம் நிறைவேறவில்லை. துருக்கிய படை இருபுறமும் சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சிலுவைப்படைகள் அனடோலியாவில் நுழைந்தது. அது சரியான கோடைகாலம், கிலிஜ் அர்சலன் நகரை விட்டு வெளியேறும் முன் சரியாகத் திட்டமிட்டு நகரின் அனைத்து வளங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். இதனால் சிலுவைப்படைகளுக்கு போதிய உணவு இல்லாமல் வீரர்களும், குதிரைகளும் இறந்தன. நகரின் சில கிறிஸ்தவர்கள் அவ்வப்போது உணவு கொடுத்தாலும், படைகள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கொள்ளையடித்தும் திருடியும் வந்தனர். சிலுவைப்படைகளை யாரும் தலைவராக இருந்து கட்டுப்படுத்த முடியவில்லை. அதேமர் என்பவர் மட்டும் மதத்தலைவராக மதிக்கப்பட்டார். இத்தாலி போலோனியாவைச் சேர்ந்த பால்ட்வின் சிலிசியன் கேட்ஸ் என்ற பகுதியைக் கடந்த பின் அர்மேனியாவில் தன் படையுடன் தங்கினார். போருக் குப் பிறகு, ஐரோப்பாவில் அவருக்கிருந்த ஒரே சொத்தான அவர் மனைவி இறந்து போனதால் திரும்பி ஐரோப்பா போகும் எண்ணம் அப்போதைக்கு அவருக்கு இல்லை. புனித பூமியை மீட்டெடுக்கும் பணி யில் தன்னை அற்பணித்துக் கொண்டார். புராதன கிறிஸ்தவராக இருந்ததால் அர்மேனியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எடிஸ்ஸாவின் ஆட்சியாளர் தோரஸ் 1098 ல் பால்ட்வினைத் தத்தெடுத்துக் கொண்டார். பின்னாளில் தோரஸ் கொல்லப்பட பால்ட்வின் எடிஸ்ஸாவின் ஆட்சியாளராக மாற முதல் சிலுவைப் போராளிகளின் மாகாணமாக எடிஸ்ஸா ஆகியது.
சிலுவைப்படைகள் அரபுகளால் அல் ருஹா என்று அறியப்பட்ட எடிஸ்ஸாவுக்கு (தற்போது இது துருக்கியில் உர்ஃபா என்ற பெயருடன் இருக்கிறது) முன்னேறியது. அங்கும் பெருவாரியான மக்களைக் கொன்று ஃப்ரான்சின் முதலாம் பால்ட்வின்னின் தலைமையில் முதல் லத்தீன் மன்னராட்சியை (ஐரோப்பிய காலனியாக) நிறுவினார்கள். கொடுமைக்குப் பெயர் போன பால்ட்வின் அர்மேனிய கிறிஸ்தவ இளவரசர், இளவரசியை எடிஸ்ஸாவின் அதிகாரத்தை கைவிடச் சொன்னான். அவர்கள் பயந்து இவனை வளர்ப்பு தந்தையாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தப் பின்னும் அவர்களைக் கொன்றான். பின் படைகள் தென் பகுதியில் அரபுகள் நிறைந்த சிரியாவின் பெரிய நகரமான ஆண்டியாக்கை நோக்கி நகர்ந்தது. (தற்போது இது துருக்கியின் அண்டாக்கியாவாக உள்ளது). இந்நகரம் பலமான கோட்டைகளுடன், பெரும் உணவு கிடங்குகளுடன் எப்படிப்பட்ட தாக்குதலையும் சமாளிக்கும் வண்ணம் இருந்தது. 12,000 மீட்டர் நீளத்தில் நகரம் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் 60 அடி நீளம் உயரத்தில் 400 பெரிய கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன. இரத்தவெறி பிடித்த 50,000 சிலுவைப்படை வீரர்கள் எட்டு மாதமாக (அக்டோபர் 1097 லிருந்து 1098 ஜூன் வரை) கடும் குளிரிலும், மழையிலும் நகரின் சுவரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களால் வெற்றி மீறி உள்ளே நுழைய முடியவில்லை. உணவில்லாமல் பஞ்சத்தில் வாடிப்போன சிலுவைப்படைகள் அருகாமை அரபு நகரங்கள், கிராமங்களில் நுழைந்து கால்நடைகள், தானியங்களைக் கொள்ளை அடித்தனர். ஆண்டியாக் நகரத்தில் நுழைய முடியாத ஆத்திரத்தில் அலிப்போ நகரவாசிகளின் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தலைகளை மட்டும் வெட்டி, நகரச் சுவற்றின் உள்ளே மழை போல் கொட்டினார்கள்.

சிலுவைப்போர் 4

அந்நகரை போரிட்டுப் பிடிக்க படைகளால் முடியவில்லை அதனால் நகருக்குள் யாராவது காட்டிக் கொடுக்கும் ராஜதுரோகி கிடைப்பானா என்று ஆராய்ந்தார்கள். ஃபைருஸ் என்ற முஸ்லீம் அர்மேனியன் அரசுக்குத் தெரியாமல் கள்ளக்கடத்தலில் ஈடுபட்டதால், ஆண் டியாக்கின் அதிகாரிகளால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தான். அவன் இப்போது நகரின் ஒரு கதவில் காவலில் இருந்தான். அதிகாரிகளைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, எதிரிகளிடம் கையூட்டுப் பெற்று சரித்திரத்தில் செய்யக்கூடாத மாபாவச்செயலை செய்தான். நகரில் அவனிருந்த கதவை சிலுவைப்படைகளுக்கு அதிகாலை 4 மணிக்கு திறந்து விட்டான். பெரும் அலையென உள்ளே புகுந்த சிலுவைப்படைகள் ஏதோ தொழில் செய்வது போல் கொலைகளை வெகுவேகமாக சரியான கண் விழிப்பில் இல்லாத மக்களைக் கொன்றும் தீயிட்டும் கொளுத்தினார்கள். ஆம் அது எந்தமாதிரியான மன்னிப்புக்கும் தகுதியில்லாத பாவச்செயல். நகர முஸ்லீம் பெண்களின் அனைவரின் பிள்ளை சுமக்கும் அடிவயிறையும் வாள்களால் அறுத்தார்கள். கொட்டும் மழையில் தப்பித்துப் போகும் குடும்பங்களை சில நூறு வீரர்கள் நகர கதவின் வெளிப்புறத்திலிருந்து சேற்றிலும், சகதியிலும் வைத்து வெட்டி வீழ்த்தினார்கள். மலம் தின்னும் மேற்கத்தியர்கள் இதை சில ஆங்கிலப்படங்களில் மாற்றி முஸ்லீம்கள் அவர்களை வெட்டுவது போல் காட்டினார்கள். முஸ்லீம்கள் கொட்டும் மழையில் சாவின் பயத்திலும், காயத்தின் காரணமாகவும் இன்னும் பல சொல்லொனா துயரங்களின் காரணமாக அழுது கொண்டிருக்க, சிலுவைப்படைகள் மது அருந்தி நடனமாடிக் கொண்டு ஆண்டியாக் நகரை கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அந்நகரம் தீயால் புகைந்து கொண்டிருந்தது. பல மாதங்களுக்கு அந்நகரில் பிணவாடை வீசிக்கொண்டிருந்தது. இதன் முழு விவரமும் அறிந்தால் எப்படிப்பட்ட நெஞ்சும் உருகிவிடும். இதை அவர்கள் கால்வைத்த எல்லா முஸ்லீம் நகரங்களிலும் தொடர்ந்தார்கள். செய்தி அறிந்து மோசூலிலிருந்து கெர்போகா என்பவர் தலைமையில் முஸ்லீம் இராணுவம் ஆண்டியாக் வந்தது. தாமதமாக வந்து நகரத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அக்காட்சி கண்கள் வற்றும் வரை அவர்களை அழச் செய்தது. கெர்போகா சிலுவைப்படைகளுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் போட சமாதானம் பேசினார். கொஞ்சம் கூட தாமதிக்காத சிலுவைப் போராளிகள் தயாராய் இல்லாத அவர் படைகளை சின்னா பின்னப்படுத்தி அவர்களைக் கொன்றது. சிலுவைப் படைகளை வென்றால் எங்கே கெர்போகா அதிகாரமிக்கவராக ஆகிவிடுவாரோ என்று எண்ணி   உதவிக்கு வர இருந்த ஃபாத்திமிட் பகுதி படைகள், துருக்கிய படைகளை தனியாக விட்டுச் சென்றன.
ஒரு சிலுவைப்படையின் தலைவன் ப்லோயிசின் ஸ்டீபன் என்பவன் அலெக்சியஸிடம் முஸ்லீம்களை வெல்ல முடியாது என்று சொல்லி ஃப்ரான்சுக்கு திரும் பியதாக ஒரு தகவல் உண்டு. ஆண்டியாக்கில் அலெக்சியஸ், பொஹிமாண்ட், ரெய்மாண்ட் ஆகியோ ரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. சில சரித்திர ஆசிரியர்கள் வட ஃப்ரான்சைச் சேர்ந்த ஃப்ராங்கு களும், தென் ஃப்ரான்சைச் சேர்ந்த ப்ரோவின்கல்ஸ்களும், தென் இத்தாலி நார்மன்களும் தங்களுக் கென தனி நாடு உருவாக்குவதைப் பற்றி திட்டமிட்டார்கள் என்று சொல்கிறார்கள். கொலைகார முத லாம் பொஹிமாண்ட் ஆண்டியாக்கின் மன்னன் ஆனான். ஆண்டியாக்குக்குப் பிறகு, கிறிஸ்தவ படைகள் தெற்கு நோக்கி ஜெருசலம் நகர்ந்தனர். 1098 டிசம்பர் மாதம் சிரியாவின் மஃஅர்ரா (மாஃஅர்ரத் அல் நுமான்) என்ற அரபு நகரத்தை சிலுவைப் படைகள் அடைந்தன. அங்கு அரபுலகின் புகழ் பெற்ற தத்துவவாதியும், கவிஞருமான அபு அல் அல அல் மஃர்ரி இருந்தார். இங்கு தான் போராளிகள் மனிதர்களைக் கொன்று உண்ண ஆரம்பித்தார்கள். முழுக்க விவசாயத்தைச் சார்ந்திருந்த அல் மஃர்ராவில் எந்த இராணுவமும் இல்லை. மிகவும் அமைதியான நகரம். நகரத்தின் பொருளாதாரம் அங்கு விளையும் திராட்சை, ஆலீவ் மற்றும் ஃபிக் பழங்களின் உற்பத்தியைச் சார்ந்திருந்தது. ஆயுதமே இல்லாத அந்த மக்கள் இரண்டு வாரம் சிலுவைப் படைகளை சமாளித்தார்கள். பொஹிமாண்ட் அவ்வூர் தலைவர்களிடம் சரணடைந்தால் அனைவரையும் உயிருடன் விட்டு விடுகிறேன் என்று உறுதி மொழி கொடுத்தான். ஆனால் தான் ஒரு மேற்கத்திய மிருகம் என்பதை உறுதிபடுத்தினான். உடனிருந்த காயனைச் சேர்ந்த ருடால்ஃப் என்பவன் பின்னாளில் எழுதியதாவது: ‘எங்கள் படை பெரியவர்களை அறுத்து பானைகளில் வேக வைத்தது. சிறுவர்களை துண்டு துண்டாக வெட்டி சுட்டுத் தின்றது’ என்றான். சிறிய மன்னர்களும், சில வீரர்களும் விடாமல் ஜெருசலம் போக வேண்டும் என்று தொந்திரவு செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டியாக்கின் முதல் இளவரசர் பொஹிமாண்ட் தலைமையில் 1099 படை கிளம்பியது. மெடிட்டரேனி யன் கரைப்பகுதியைக் கடக்கும் போது சில தடங்கல்கள் வந்தன. அங்கிருந்த நகரங்கள் சண்டையை தவிர்க்க சிலுவைப் படைகளுக்கு தேவையானவற்றைக் கொடுத்து உதவின. சில ஊர்வாசிகள் காடுகளுக்குள் போய் ஒளிந்து மிருகங்களிடம் சாவதே மேல் என்று போய்விட்டார்கள். போப் இரண்டாம் அர்பனின் வெறிபிடித்த கிறிஸ்தவக்கூட்டம் 1099 ஜூனில் ஜெருசலத்தை அடைந்தது. ஜெருசலம் ஓராண்டுக்கு முன்புதான் செல்ஜுக் பேரரசிடமிருந்து, ஃபாத்திமிட்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. சில சிலுவைப்படை வீரர்கள் வெகு நீண்ட பயணம் செய்து வந்ததிற்குப் பிறகு, அந்த புனித நகரத்தைப் பார்த்ததால் அழுதார்கள். மூன்று நாட்கள் பாவம் தீர நோன்பிருந்தார்கள். வெற்றுக்காலுடன் புகழ்பெற்ற ஜெருசலம் சுவரை (இந்த சுவற்றின் பின்னால் தான் நாயகம்(ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது புராக் என்னும் சிறகுடைய வாகனத்தைக் கட்டினார்கள்) சிலுவை ஏந்திய கைகளுடன் சுற்றி வந்து தாவூத் (அலை) நபிகளின் ஸபூர் வேதத்தைப் பாடினார்கள் அந்த மனிதர்களைத் தின்ற கூட்டத்தினர்.
ஜெருசலம் நகரத்தின் வெளிப்புறத்தில் முகாமிட்ட அவர்கள் உணவுக்கும், குடிநீருக்கும் அவதிப்பட்டார்கள். எங்கே திடீரென்று ஃபாத்திமிட் படைகள் வந்து தாக்குமோ என்று வேறு அச்சப்பட்டார்கள். ஆண்டியாக்கைப் போல முற்றுகையிடவும் சந்தர்ப்பமில்லை. ஜெருசலத்தை அடைந்த போது படையில் 12,000 வீரர்களும், 1,500 குதிரை வீரர்களும் இருந்தனர். அதில் ஐரோப்பாவின் பலதரப்பட்ட மக்களாய் இருந்ததால் தனித்தனியாக காக்ஃப்ரே மற்றும் டான்க்ரீடும் வடக்குப்புறமும், ரெய்மாண்ட் தெற்குப் புறமும் இருந்தார்கள். ஜூன் 13 ல் நடந்த தாக்குதலில் ப்ரோ வென்கால்கள் கலந்து கொள்ளவில்லை. ஜெருசலம் நகரத்தின் மீதான முதல் தாக்குதல் தோல்வியடைந்தது. பின் அனைவரும் கூடிப் பேசி, அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்டார்கள். லார்ட் டாங்க்ரெட் (இவன் பொஹிமாண்டின் உறவினன்) சரணடைந்தால் அனைத்து முஸ்லீம்களையும் உயிரோடு விட்டு விடுவதாகவும், மேலும் அல் அக்ஸா மஸ்ஜிதில் முஸ்லீம்கள் தடையில்லாமல் வழிபடவும், மற்ற இஸ்லாமிய புனித இடங்களை ஒன்றும் செய்யாமல் இருப்பதாகவும் உறுதி அளித்தான். அதன்படி ஜூலை 15 வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த முஸ்லீம்கள் சரணடைய ஒப்புக் கொண்டு நகர வாசல்களைத் திறந்தார்கள். ஆனால் நன்றிகெட்ட அந்த கிறிஸ்தவ வெறிபிடித்த கூட்டம் அல் மஃஅர்ராவில் செய்த துரோகம் போல் வடக்கு, தெற்கு வாசல்களைத் தாக்கத் துவங்கினார்கள். இரு வாசல் வழியாகவும் சிலுவைப் படைகள் நகரத்தின் உள்ளே ஊடுருவினார்கள். கண்ணில் தென்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அனைவரையும் சரமாரியாகக் கொன்று குவித்தார்கள். டான்க்ரிட் தலைமையில் வடக்கில் நுழைந்த வீரர்கள் மலைக்கோவிலுக்குச் சென்றார்கள். தடுத்தவர்களை வெட்டிக் கொன்றார்கள். தப்பித்தவர்கள் அல் அக்ஸா மசூதிக்குள் ஓடினார்கள். தெற்குப் பகுதியில் நுழைந்த ரெய்மாண்டின் ஆட்கள் நகருக்குள் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள். ஃபாத்திமிட்களின் படைத்தளபதி இஃப்தி நகார் அல் தௌலா கொலைகளைப் பார்த்து, அரண்மனையை ஒப்படைத்து விடுவதாகவும், எஞ்சியவர்களை பத்திரமாக அஸ்கலான் செல்ல அனுமதிக்க வேண்டினார். நாள் முழுவதும் முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அடைக்கலம் தேடி மடத்துக்குள் ஓடிய யூதர்கள் மடத் தோடு கொளுத்தப்பட்டார்கள். தெற்கில் அல் அக்ஸாவில் அடைக்கலம் புகுந்த முஸ்லீம்களும்    கொல்லப்பட்டார்கள்.
ஜெருசலத்தின் கிழக்குப் பகுதி கிறிஸ்தவ மக்கள் தப்பித்து ஓடினார்கள். தொடர்ந்து ஒரு வாரம் கொன்று நகரத்தில் ஒருவர் கூட உயிரோடில்லாமல் செய்தார்கள். அந் நகரில் ஓடிய ரத்தம் முழங்காலளவு இருந்ததாக மாற்று மத சரித்திர ஆசிரியர்களே எழுதி இருக்கிறார்கள். அவர்கள் கொன்றது 70,000 பேர் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அல் அக்ஸா மஸ் ஜித் அருகிலிருந்த டோம் ஆஃப் ராக்கை தேவாலயமாக மாற்றினார்கள். சரித்திர ஆசிரியர் ரொனால்ட் பைண்டன் கீழ் வருமாறு சொல்கிறார்: சிலுவைப் படைகளில் சில பேர் கொல்லப்பட்டவர்களின் மூக்குகள், பெருவிரல்களை அறுத்து பாதுகாத்துக் கொண்டார்களாம். அதை போப் இரண்டாம் அர்பனிடம் காட்டி ஆசி பெறுவதற்கு. இதன்பிறகு, போப் அர்பன், டயரின் ஆர்ச் பிஷப் ஆகியோர் வெளியிட்ட அறிக் கைகள் கேவலத்தின் உச்சங்கள். இஸ்ரவேலர்களிடத்திலே சமாதானத்தைக் கொண்டு வந்த ஈஸா (அலை) நபி அவர்களின் பெயரைச் சொல்லி புனித நகரத்தை உலகம் அழியும் மறக்காமல் இருக்கும் வண்ணம் பாழ்படுத்தி விட்டார்கள். இப்ராஹீம் (அலை) நபி மற்றும் சில ஞானிகளின் சமாதிகளைச் சேதப்படுத்தினார்கள். சுலைமான்(அலை) நபி தேவாலயத்தில் 10,000 யூதர்களைக் கொன்றார்கள். மேற்கத்திய கிறிஸ்தவ சிலுவைப் படைகள் தங்களின் ஆழமான இனவெறியாலும், கொடூரத்தனத் தாலும் யூதர்களை யும், சக கிறிஸ்தவர்களையும் கொன்றார்கள். புராதன கிறிஸ்தவர்களான ஜெரு சலம் பாதிரியாரை ஈஸா(அலை) நபி அவர்களை அறைந்த சிலுவையை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு சித்திரவதை செய்து கொன்றார்கள். ஜெருசலமும் ஐரோப்பிய காலனியாக இரத்த வெறி பிடித்த காட்ஃபிரே தலைமையில் ஆக்கப்பட்டது. அவன் அல் அக்ஸா மஸ்ஜிதை தன் அரண்மனையாக ஆக்கிக் கொண்டான்.




சிலுவைப்போர் 5

சில நாட்கள் கழித்து தப்பித்த சிலர் பாலஸ்தீன அகதிகளாக டமாஸ்கஸ் நகரம் வந்தார்கள். அவர்கள் நடந்த கொடூரங்களை மற்ற முஸ்லீம்களுக்கும், நகரங்களுக்கும் தெரியப்படுத்தி இஸ்லாமிய ஜிஹாத் நடத்தப்பட வேண்டும் என்றார்கள். ஆனால் அரபுகள் துருக்கி களாக, ஃபாத்திமிட்களாக, அப்பாஸிட்களாக, பெர்ஷியர்களாக, பல சிறிய ஆட்சியாளர்களாக பிரிந்து கிடந்தார்கள். எகிப்தின் ஆட்சியாளர் ஐரோப்பியர்களை பாலஸ்தீனத்திலிருந்து விரட்ட படையைத் தயார் செய்தார். சிலுவைப் படைகள் ஜெருசலம் முழுவதையும் கொள்ளையடித்து, எஞ்சிய நகரவாசிகளைக் கொன்றார்கள். 20 நாட்கள் கழித்து 1099 ஆகஸ்டில் எகிப்திய படைகள் ஜெருசலத்தை அடைந்தது. பாலஸ்தீனின் துறைமுக நகரமான அஸ்கலானில் முகாமிட்டிருந்த எகிப்திய படைகளுடன் சிலுவைப் படைகள் மோதி பத்தாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைக் கொன்று அவர்களின் கூடாரங்களை அழித்தது. சில நாட்களுக்குப் பிறகு அபு சாஃத் அல் ஹரவி என்ற டமாஸ்கஸின் நீதிபதி தலைமையில் ஒரு அகதிகள் குழு பாக்தாத் சென்று அப்பாஸிய கலீஃபா அல் முஸ்தஸீரைச் சந்தித்து அரபுகள் சிலுவைப் போராளிகளுக்கு எதிராக இணைய வேண்டியதின் அவசியத்தை உணர்த்தினார். 1099 ஆகஸ்டு 19 வெள்ளிக்கிழமை தொழுகையிலும் ஐரோப்பாவுக்கு எதிராக முஸ்லீம்கள் ஒன்று சேர வேண்டுமென்று அல் ஹரவி கேட்டுக்கொண்டார். 1011 ல் சிலுவைப் படைகள் பாலஸ்தீனின் துறைமுக நகரமான கெய்சரீயாவில் நுழைந்து கொள்ளையடித்தும், கொலைகளையும் செய்தார்கள். நகர மக்கள் அனைவரையும் பெரிய மஸ்ஜிதின் முன்பு கொண்டு வந்து நிறுத்திக் கொன்றார்கள். 1102 லும் ரெய்மா ண்ட் தலைமையில் திரிபோலி நகரத்தில் நுழைந்து 7,000 அரபு முஸ்லீம்களைக் கொன்றனர்.
1102 மே மாதம் முஸ்லீம்களுக்கு சிலுவைப் படைகளை ஒழிக்க அருமையான வாய்ப்பு வந்தது. ஆனால் நழுவ விட்டார்கள். எகிப்திய இராணுவம் திடீரென்று பாலஸ்தீனின் ரம்லாஹ் நகரில் சிலுவைப் படைகளை எதிர்த்தது. அதில் அதிகமான எதிரிகள் கொல்லப்பட்டு, சிறை பிடிக்கப்பட்டார்கள். ஜெருசலம் மன்னன் பால்ட்வின் பிடிபடாமல் தப்பிக்க ஒரு கூறையின் கீழே வயிறை சுருக்கிக் கொண்டு ஒளிந்து கொண்டான். அப்போது பாதுகாப்பு அதிகமில்லாத ஜெருசல த்தை அரபுகள் பிடித்திருக்கலாம். ஆனால் தீர்மானமாக இல்லாமலும், தயக்கத்துடனும் இருந்த அதன் தளபதியால் சந்தர்ப்பத்தை நழுவ விட்டார்கள். அதற்கடுத்த வருடம் புதிய இராணுவத்தை எகிப்து அனுப்பிய போது ஜெருசலத்தைப் பிடிக்க முடியாமல் போனது. ஒவ்வொரு தோல்வியின் போதும் உயிர் களுடன் நகரங்களையும் சிலுவைப் போராளிகளிடம் இழந்தார்கள். 1104 ல் சிலுவைப் படைகள் வரிசை யாக ஜஃப்ஃபா, ஹைஃபா மற்றும் அக்ரி ஆகிய அரபு நகரங்களைப் பிடித்தார்கள். 1109 ல் திரிபோலியின் மீது படையெடுத்து மிகக் கொடூரமான முறையில் கொன்று குவித்து அதைக் கைப்பற்றினார்கள். அரபு களின் கிழக்குப்பகுதி துறைமுக நகரமான திரிபோலி ‘ஜுவல் ஆஃப் அராப்’ என்று அழைக்கப்பட்டது. கனி வகைகளும், கரும்புத் தோட்டங்களும், ஆலீவ் மரங்களும் பூத்துக் குலுங்கும் நகரம் திரிபோலி. படித்த நீதிபதிகளும், தைரியமான கடலாடிகளும், மத போதகர்களும், புகழ் பெற்ற நூலகங்களும் கொண்ட நகரம் திரிபோலி. படிப்பறிவில்லாத காட்டுமிராண்டி கிறிஸ்தவ படைகள் திரிபோலியை நாசம் செய்தார்கள். முஸ்லீம்களின் பொக்கிஷமான தார் அல் இல்ம் என்றும் ஹவுஸ் ஆஃப் நாலட்ஜ் என்றும் அழைக்கப்பட்ட ‘பனூ அம்மார்’ நூலகத்தை சூறையாடினார்கள். ஒப்பற்ற களஞ்சியங்களான அதன் 100,000 புத்தகங்கள் இன்றுவரை வெளி உலகத்தினரால் படிக்க முடியாமல் போனது. பிடிக்கப்பட்ட திரிபோலி மக்கள் ஐரோப்பிய அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார்கள். செல்வந்தர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு நகரத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். திரிபோலியிலிருந்து வெளியேறிய சிலர் அருகா மை நகரமான டைரில் அகதிகளாக நுழைந்தார்கள். ஆண்டியாக், ஜெருசலத்தைத் தொடர்ந்து திரிபோ லியும் மேற்கத்தியர்களின் ஐரோப்பிய காலனியானது. மூன்றிலொரு பங்கு ஜினோயிசின் காலனியாக வும், மூன்றில் இரண்டு பங்கு காட்டுமிராண்டி ரெய்மாண்டும் பிரித்துக் கொண்டார்கள்.
1110 மே மாதம் சிலுவைப் படைகள் மற்றுமொரு கொடூரத் தாக்குதலுக்கு பெய்ரூட் நகரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதே ஆண்டு டிசம்பரில் புராதன சிடோன் நகரின் துறைமுகமான சைதாவைத் தாக்கி அதிகமான மக்களை டைருக்கும், டமாஸ்கஸுக்கும் அகதிகளாக துரத்தினார்கள். குறுகிய காலத்தில் ஜஃப்ஃபா, ஹைஃபா, அக்ரி, திரிபோலி, பெய்ரூட், சைதா ஆகிய ஆறு நகரங்களைப் பிடித்து அதிலிருந்த மசூதிகளை இடித்தார்கள். இவைகள் ஒட்டுமொத்த அரபு தேசங்களையும் உலுக்கியது. அடுத்த நகரங்களான டைர், அலிப்போ, மோசூல், டமாஸ்கஸ், கெய்ரோ, பாக்தாத் ஆகியவை மக்கா உட்பட பயத்துடன் இருந்தன. அலிப்போவின் நீதிபதி அப்துல் ஃபதல் இப்ன் அல் கஷாப், அப்பாஸிய கலீஃபா அல் முஸ்தஸிரின் கவனம் ஈர்க்கும் வண்ணம் தலைநகர் பாக்தாதில்  மக்களைத் திரட்டி ஜிஹாத் போர் செய்ய வேண்டுமென்று பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தினார். இது பெரிய கலவரமாக மாறியது. 1111 ஜூலையில் அஸ்கலோன் நகர மக்களும் தங்கள் கோழை தலைவர் ஷம்ஸ் அல் கலீஃபா 7,000 தீனார்களை கப்பமாக ஜெருசலம் மன்னன் பால்ட்வின்னுக்கு கொடுத்ததைக் கண்டித்து புரட்சி செய்தார்கள். புரட்சியை அறிந்த பால்ட்வின் கலீஃபாவுக்கு பாதுகாப்பாக 300 சிலுவைப்படை வீரர்களை அனுப்பினான். ஆனால் அஸ்கலோன் மக்கள் கலீஃபாவையும், 300 சிலுவைப்படை வீரர்களையும் கொன்று தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.
1119 ஜூனில் அலிப்போவின் ஆட்சியாளர் நஜ்ம் உத் தீன் இல் காஸி ஆண்டியாக்கில் சர்மதா என்ற இடத்தில் சிலுவைப் படைகளைத் தோற்கடித்தார். ஆண்டியாக் வழியாக மக்கா செல்லும் யாத்திரிகர்களிடம் வரி வசூலித்த இத்தாலியின் இளவரசர் ரிச்சர்டின் மகன் கொடுமைக்காரன் ஸர். ரோஜரை போரில் கொன்றார். இது பெரிய இழப்பாக கருதாத சிலுவைப் படைகள் வழக்கம் போல் அடுத்த நகரமாக டைரை 1124 ல் கைப்பற்றி மொத்த அரபு கிழக்கு மெடிட்டரேனியன் பகுதிகளையும் தங்கள் அதிகாரத்தில் கொண்டு வந்தார்கள். 1144 ல் மேற்கத்திய கிறிஸ்தவ வெறியாளர்களுக்கு இறங்கு முகம் ஆரம்பித்தது. ஈராக்கின் மோசூல் நகரின் கவர்னராக இருந்த இமாத் அத்தீன் ஸங்கி, பாக்தாதின் அப்பாஸிய கலீஃபாவின் ஆதரவில் இருந்தார். முதலில் எடிஸ்ஸாவை சுதந்திரமாக்கி, அடுத்தடுத்து நான்கு சிலுவைப் படைகளின் காலனிகளை வென்றெடுத்தார். அரபு உலகம் மொத்தமும் வெற்றிக் களிப்பில் மிதந்தது. பின்னர் ஆண்டியாக்கையும், திரிபோலியையும் சிலுவைப் படைகள் இழந்தது.
எடிஸ்ஸா நகரம் முஸ்லீம்கள் வசம் போனதை அறிந்த போப் மூன்றாம் ஈஜீனியஸ் ஐரோப்பாவில் இரண்டாம் சிலுவைப் போருக்கு கூக்குரலிட்டான். இதை செவியேற்ற ஐரோப்பா சக்திவாய்ந்த படையை தயார் செய்தது. அப்படைக்கு ஜெர்மனியின் பேரரசர் மூன்றாம் கொனார்டும், ஃப்ரான்சின் மன்னன் ஏழாம் லூயிஸும் தலைமை தாங்கினார்கள். ஐரோப்பாவின் முக்கிய மாகாணங்கள் கலந்து கொண்ட இரண்டாம் சிலுவைப் போர் அவர்களுக்கு பெரும் தோல்வியில் முடிந்தது. 1148 ல் ஸங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ்கஸில் சிலுவைப் படைகளை துவம்சம் செய்தார். அதுவும் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் மன்னர்களை சாதுரியமாக நூருத்தீன் எதிர்த்து வெற்றி பெற்ற செய்தி மொத்த அரபு உலகத்தையும் உற்சாகப்படுத்தியது. விரைவில் முஸ்லீம்கள் பிரதேசங்களான ஜெருசலம், ஆண்டியாக், திரிபோலியிலிருந்து அனைத்து ஐரோப்பியர்களும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள் என்று நம்பிக்கை கொண்டார்கள்.

சிலுவைப்போர் 6

இரண்டாம் சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது   
எடிஸ்ஸா நகரம் முஸ்லீம்கள் வசம் போனதை அறிந்த போப் மூன்றாம் ஈஜீனியஸ் ஐரோப்பாவில் இரண்டாம் சிலுவைப் போருக்கு கூக்குரலிட்டான். இதை செவியேற்ற ஐரோப்பா சக்திவாய்ந்த படையை தயார் செய்தது. அப்படைக்கு ஜெர்மனியின் பேரரசர் மூன்றாம் கொனார்டும், ஃப்ரான்சின் மன்னன் ஏழாம் லூயிஸும் தலைமை தாங்கினார்கள். ஐரோப்பாவின் முக்கிய மாகாணங்கள் கலந்து கொண்ட இரண்டாம் சிலுவைப்போர் அவர்களுக்கு பெரும் தோல்வியில் முடிந்தது. போப் ஐபீரிய தீபகற்பத்தையும், மூர்ஸ்களின் பிரதேசங்களையும் கைப்பற்ற சிலுவைப்படைகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். ஐரோப்பாவிலிருந்து வரும் வழியில் பல இடங்களை கொடுமையான முறையில் கொன்று வென்றார்கள். கொள்ளையடிக்கும் பொருள்கள் எங்களுக்குச் சேர வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் போர்ச்சுகீஸிய மன்னன் முதலாம் அஃபோன்ஸோவுடன் கூட்டு சேர்ந்து லிஸ்பனில் போரிட்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு, அதன் மூர்ஸ் ஆட்சியாளர் நகரில் உணவுத் தட்டுப்பாடு நிலவியதால் சரணடைவதாக ஒப்புக் கொண்டார். லிஸ்பனைப் பிடித்தார்கள். அங்கிருந்து கிளம்பிய சிலுவைப் படைகள் வழியில் சண்டாரீம், சின்ட்ரா, அல்மதா, பல்மேலா மற்றும் செதூபல் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள். பிடிக்கப்பட்ட இடங்களில் சில சிலுவைப்படை வீரர்கள் அங்கேயே தங்கிக் கொண்டார்கள். ஃப்ரான்ஸ், கடலான், ஜினோயிஸ் என்று கலப்படமாக இருந்த இன்னொரு சிலுவைப்படை வளமான நகரமான அல்மீரியாவைக் கைப்பற்றியது. பின் வாலன்ச்சியா பேரரசின் மாகாணமான அல்மொராவித், டோர்டோசா, ஃப்ராகா, ல்லீய்டா, மெக்வென்ஸா, சிக்ரி மற்றும் எப்ரோ ஆகியவற்றையும் வரிசையாகக் கைப்பற்றினார்கள்.
இந்த தருணத்தில் இஸ்லாமிய உலகில் பெரிய முழுநேர இராணுவமாக 10,000 வீர்ர்களைக் கொண்டு செல்ஜுக் பேரரசு மட்டுமே இருந்தது. அடுத்து சிறுவயது முதலே பயிற்சி பெற்ற தொழில் ரீதியான இராணுவம் மம்லுக்குகளிடம் இருந்தது. 15
1148 ல் ஸங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ்கஸில் சிலுவைப் படைகளை துவம்சம் செய்தார். அதுவும் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் மன்னர்களை சாதுரியமாக நூருத்தீன் எதிர்த்து வெற்றி பெற்ற செய்தி மொத்த அரபு உலகத்தையும் உற்சாகப்படுத்தியது. சிலுவைப் படைகள் போரில் தோல்வியுற்றிருந்தாலும் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதியில் மிச்சமிருக்கும் நகரங்களை வெல்வதிலும் அங்கிருக்கும் முஸ்லீம், கிறிஸ்தவ, யூதர்களைக் கொல்வதிலும் முனைப்பு காட்டினார்கள். 1156 ல் ஃப்ரான்ஸ் மன்னன் ரெய்னால்ட் சைப்ரஸ் மீது ஆக்கிரமித்து வளம் தரும் பயிர்களை நாசம் செய்து, கால்நடைகளை அழித்து, மக்களைக் கொன்றான். பெண்களைக் கற்பழித்து, தேவாலயங்களைக் கொள்ளையடித்து, கட்டிடங்களை இடித்தும் தீவைத்தும் கொளுத்தினான். கிரேக்க பாதிரியார் ஒருவரின் மூக்கை அறுத்தான். இதுபோல் அத்தனைக் கொடுமைகளுடனும் 1168 ல் எகிப்தின் அரபு நகரமான பில்பைய்ஸைப் பித்தார்கள். 1169 ல் அற்புதமான குணநலன்களையுடைய சலாவுத்தீன் அய்யூபி என்பவர் எகிப்தில் ஆட்சிக்கு வந்தார். 1180 ல் சலாவுத்தீனுக்கும், சிலுவைப் படைகளுக்கும் இடையே போடப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை மீறி, 1181 ல் ரெய்னால்ட் மக்கா புனிதப் பயணம் போய்க்கொண்டிருந்த யாத்திரிகர்கள் வாகனத்தைக் கொள்ளையடித்தன. ஐந்து சண்டைக்கப்பல்களை அரபு துறைமுகமான இலாத்தில் நிறுத்தி வைத்து வாணிபத்தடங்கள் செய்தான். ஹிஜாஸி, யான்பு துறைமுகங்களைக் கொள்ளை அடித்து புனித மக்கா நகரத்தையும் மிரட்டினான்.
சலாவுத்தீனின் சகோதரி பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்தையும் கொள்ளை அடித்தான். மீண்டும் 1187 ல் பெரிய மக்கா யாத்ரீகர்கள் கூட்டத்தைக் கொள்ளை அடித்தான். எதிர்த்த ஆண்கள் அனைவரையும் கொன்றான். ஒரு பயணி சலாவுத்தீனின் ஒப்பந்தத்தை நினைவூட்ட, அதற்கு அந்த ஃப்ரான்ஸ் மிருகம் ரெய்னால்ட், ‘உங்கள் முஹம்மது வந்து விடுதலை செய்வார் காத்திருங்கள்’ என்றான். இதைக் கேள்விப்பட்ட சலாவுத்தீன் தனது கைகளால் ரெய்னால்டைக் கொல்வேன் என்று திருக்குரான் மீது சத்தியம் செய்து கொண்டார். சலாவுத்தீன் எகிப்து அல்லாமல் சிரியா, வட ஈராக், லிபியாவின் ஒரு பகுதியான பர்காஹ், ஹிஜாஸ், ஏமன் ஆகியவற்றை வென்றபின் சிலுவைப் படைகளை வெல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார். 1187 ல் தாமதிக்காமல் சிலுவைப் படைகள் மீது போர் தொடுத்தார். சலாவுத்தீனின் அளப்பறிய போர் திறமை சிலுவைப் படைகளை ஹத்தீன் போரிலும், வட பாலஸ்தீனின் டைபீரியஸ் ஆற்றின் போரிலும் துவம்சம் செய்தது. இந்தப் போரின் முடிவில் சலாவுத்தீன் எதிரிகள் மீது காட்டிய கருணை இன்றளவும் (என்றைக்கும்) உலக சரித்திர ஆசிரியர்களால் போற்றப்படுகின்றது. ஜெருசலம் மன்னனை விடுதலை செய்து, மிருகம் ரெய்னால்டை சபதம் செய்தது போல் கொன்றார். அவனது உடலை மற்றொரு ஃப்ரென்சுக்காரனிடம் காட்டி இவன் நம்பிக்கை துரோகமும், கொடுமைகளும் செய்ததற்கான தண்டனை இதுதான் என்றார். சிலுவைப் படைகளின் தோல்வியினால் மீண்டும் ஜெருசலம் நகரம் முஸ்லீம்களின் சுதந்திரப் பிரதேசமானது. அடுத்த சில மாதங்களில் தொடர்ந்த படையெடுப்பால் அக்ரி, டோரான், பெய்ரூட், ஜுபைல் (பைப்லோஸ்), சைய்தா, நாஸரெத், கெய்சாரியா, நபுலுஸ், ஜஃப்ஃபா, ஹாஃபா, அஸ்கலான் ஆகியவை மேற்கத்திய கிறிஸ்தவ வெறியாளர்களிடமிருந்து விடுதலைப் பெற்றன. 88 ஆண்டு காட்டுமிராண்டி காலனி ஆட்சிக்குப் பிறகு ஜெருசலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மிஹ்ராஜ் பயணம் மேற்கொண்ட அதே நினைவு நாளில் 1187 அக்டோபர் 2, வெள்ளி கிழமை சலாவுத்தீன் வெற்றி வீரராக ஜெருசலத்தில் கால் பதித்தார். கொடுமையான வகையில் 88 ஆண்டு காலம் முஸ்லீம்களைக் கொன்றும், பெண்களைக் கற்பழித்தும், கொள்ளைகளும் புரிந்த சிலுவைப்படை வீரர்களை ஆயிரக்கணக்கில் மன்னித்து அவர்கள் திரும்பிப் போகச் செய்தார். கருணையே வடிவாக அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜெருசலத்திற்கு புனித பயணம் வரலாம் என்று அனுமதி கொடுத்தார். சிதறிப் போயிருந்த யூதர்களை அழைத்து பழைய இடங்களில் அவர்களைக் குடி அமர்த்தினார். டையர் என்னும் அரபு நகரமும், திரிபோலி, ஆண்டியாக் இன்னும் சிலுவைப்படைகள் வசமே இருந்தது.


சிலுவைப்போர் 7

மூன்றாவது மற்றும் பிற சிலுவைப் போர்கள்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
ஜெருசலம் முஸ்லீம்கள் போய்விட்டதை அறிந்த போப் எட்டாம் கிரிகோரி தன்னிலையை மறந்து போனான். உடனடியாக மூன்றாவது (1189-1192) சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தான். இம்முறை அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பலம் வாய்ந்தவர்களும் ஜெர்மனிய மன்னனும் ரோமப் பேரரசருமான  ஃப்ரெடெரிக் பார்பரொஸ்ஸா, இங்கிலாந்து மன்னனும், ‘லயன் ஹார்ட்’ என்ற பட்டப்பெயர் கொண்ட முதலாம் ரிச்சர்ட், ஃப்ரான்சின் மன்னன் பிலிப் இரண்டாம் அகஸ்டஸ் ஆகியோர் இணைந்தார்கள். இந்த மூன்றாவது சிலுவைப்போர் “மன்னர்களின் சிலுவைப்போர்” என்றும் அழைக்கப்பட்டது. இரண்டாம் சிலுவைப்போரில் கிறிஸ்தவ படைகளை தோல்வியடையச் செய்த பின், நூருத்தீன் ஸங்கி டமாஸ்கஸ் நகரைக் கட்டுப்படுத்தி சிரியாவை ஒன்று படுத்தினார். நம்பிக்கையான தளபதி ஷிர்குஹ் உடன் சலாவுத்தீனையும் எகிப்தை நோக்கி நைல் நதிக்கு ஒரு படையை அனுப்பினார். எகிப்தின் ஃபாத்திமிட் ஆட்சியாளர் சுல்தான் ஷவார், தன் உதவிக்கு ஜெருசலம் மன்னர் முதலாம் அமல்ரிக்கை அழைத்துக் கொண்டு, 1164 ல் பில்பெய்ஸ் என்ற இடத்தில் ஷிர்குஹ் படையை எதிர்கொண்டார். எகிப்திலிருந்து கிறிஸ்தவ சிலுவைப்படைகளின் கவனத்தை திசை திருப்ப நூருத்தீன் ஸங்கி தான் ஆண்டியாக்கைத் தாக்கினார். சிலுவைப்படைகளைத் தாக்கி பல தலைவர்களையும், ஆண்டியாக்கின் இளவரசர் மூன்றாம் பொஹிமாண்டையும் சிறைப்பிடித்தார். கொல்லப்பட்ட சிலுவைப்படை வீரர்களின் உடல்களை ஷிர்குஹ்ஹுக்கு அனுப்பி, பில்பெய்ஸில் அமல்ரிக் வீரர்களின் பார்வையில் படும்படி வைத்தார். இது அவருக்கு நல்ல பலனைத்தந்தது ஷவாரின் உதவிக்கு வந்த அமல்ரிக்கின் வீரர்கள் எகிப்தைவிட்டு ஓட்டம் பிடித்தார்கள்.
1167 ல் நூருத்தீன் ஸங்கி மீண்டும் ஷிர்குஹ்ஹை ஃபாத்திமிட்களின் எகிப்தைப் பிடிக்க அனுப்பினார். மீண்டும் ஷவார், ஜெருசலத்தின் அமல்ரிக்கின் உதவியை நாட ஷிர்குஹ் அலெக்ஸாண்டிரியாவை வென்றார். உதவவந்த அமல்ரிக் நன்றிகெட்டதனமாக எகிப்தின் பில்பெய்ஸ் நகரை பிடித்துக் கொண்டான். இம்முறை ஷவார், கிறிஸ்தவ அமல்ரிக்கை எதிர்க்க எதிரியான ஷிர்குஹ்ஹையே நாடினார். ஷிர்குஹ் ஷாவாருக்கு உதவிசெய்து அமல்ரிக்கை தோற்கடித்து, சிரியாவிலும், எகிப்திலும் வலுவான நிலையைப் பெற்றார். முஸ்லீம்கள் மீது மதவெறி கொண்டு வந்த சிலுவைப்படைகள் வந்த சமயத்தில் முஸ்லீம்களுக்கு துரோகம் செய்யும் விதமாக கிறிஸ்தவ அமல்ரிக்குடன் கூட்டு வைத்திருந்ததற்காக ஷவார் தூக்கிலிடப்பட்டார். 1169 ல் ஷிர்குஹ்கும் எதிர்பாராமல் மரணமடைந்தார். அவர் உறவினர் சலாவுத்தீன் அய்யூப் ஆட்சிக்கு வந்தார். நூருத்தீன் ஸங்கியும் மரணமடைந்து அவர் மகன் 11 வயது அஸ் ஸாலிஹ் ஆட்சியில் இருந்தார். முஸ்லீம் உலகம் வெறிபிடித்த கிறிஸ்தவ சிலுவைப்படைகளை எதிர்க்க சலாவூத்தீனையே நம்பினார்கள்.
ஜெருசலத்தின் அமல்ரிக்கும் 1174 ல் இறந்துபோக அவன் மகன் நான்காம் பால்ட்வின் ஆட்சியில் இருந்தான். வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டாலும், பால்ட்வின் சிறந்த தளபதியாய் இருந்து சாடில்லானைச் சேர்ந்த ரெய்னால்டுடன் இணைந்து சலாவுத்தீனை 1177 ல் மாண்ட்கிஸார்டு போரில் வென்றான். இவையெல்லாம் மூன்றாம் சிலுவைப்போருக்கு முன்பிருந்த நிலமைகள். 1189 ல் ரோமப்பேரரசர் ஃப்ரெட்ரிக் பார்பரொஸ்ஸாவுடன் 80,000 பேரும், 20,000 வீரர்களும் சேர்ந்தார்கள். மேலும், ஹங்கேரியின் மன்னன் மூன்றாம் பீலா 2,000 வீரர்களுடன் ஃப்ரெட்ரிக்குடன் இணைந்து கொண்டான். பைஸாந்திய பேரரசர் இசாக் இரண்டாம் ஆங்கிலஸ், ஃப்ரெட்ரிக்கிடமிருந்து தன் பிரதேசத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன் கூட்டியே சலாவுத்தீனிடம் ரகசிய உடன்பாடு செய்து கொண்டான். ரோம சுல்தான் ஃப்ரெட்ரிக்கின் படைகள் பாதுகாப்பாக அனடோலியாவைக் கடக்க உதவுவதாக வாக்களித்தான். ஆனால், பொறுமைகாக்காத ஃப்ரெட்ரிக் 1190 ல் சுல்தானிய தலைநகர் ஐகோனியத்தை நாசம் செய்தான். அங்கிருந்து சலீஃப் ஆற்றைக் கடக்கையில் ஆற்றின் உச்சியில் குதிரையிலிருந்து தவறி ஆற்றின் பாறையில் அடிபட்டு ஃப்ரெட்ரிக் இறந்து போனான். அவனின் படைகள் பெரும்பாலானவை அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜெர்மனி திரும்பியது. ஃப்ரெட்ரிக்கின் மகன் ஸ்வாபியாவைச் சேர்ந்த ஃப்ரெட்ரிக் என்பவன் எஞ்சிய 5,000 வீரர்களுடன் ஆண்டியாக் வந்தான். வரும்போது தந்தையின் உடலை சுடுநீரில் வேகவைத்து சதைகளையெல்லாம் பிய்த்து எறிந்துவிட்டு, எலும்புகளை ஒரு பையில் போட்டுக்கொண்டு வந்தான். ஆண்டியாக் வந்த அவன் படையில் சிலர் உடல்நலமில்லாமல் இறந்துபோய் எண்ணிக்கைக் குறைந்தது. ஃப்ரெட்ரிக் கூட்டாளி மாண்ட்ஃபெர்ரட்டைச் சேர்ந்த கான்ராடை பாதுகாப்பாக அக்ரியைக் கடக்க உதவுமாறு வேண்டினான். வரும்வழியில் தந்தையின் எலும்புகளைப் புதைத்தான். ரிச்சர்டும், இரண்டாம் பிலிப்பும் மார்செல்லியில் சந்திப்பதாக திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி மார்செல்லி வந்த ரிச்சர்ட் பிலிப் வராததால் காத்திருக்க விருப்பமின்றி படகுகளைப் பிடித்து இத்தாலியின் பல இடங்களைச் சுற்றிக் கொண்டு மெஸ்ஸினா வந்து சேர்ந்தான். இதற்கிடையில் மார்செல்லி வந்து சேர்ந்த பிலிப், ரிச்சர்டு சென்றுவிட்டதை அறிந்து ஜினோயிஸ்களின் படகுகளை அமர்த்தி 1,300 பேர்கள், 650 வீரர்கள், 1,300 குதிரைகள் என்று மெஸ்ஸினா கிளம்பினான்.
முன்னதாகவே மெஸ்ஸினா வந்த மன்னன் ரிச்சர்ட் அதைக் கைப்பற்றி அங்கு சிறையிலிருந்த ஜோன் என்பவனை விடுவித்தான். ரிச்சர்டின் திருமண விஷயமாக அவனுக்கும், பிலிப்புக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அதாவடு பிலிப்பின் ஒன்றுவிட்ட சகோதரி அலிஸை ரிச்சர்டு மணப்பதாக இருந்தது. ஆனால் அவன் நவர்ரியின் பெரிங்காரியா என்பவளை மணக்க முடிவு செய்திருந்தான். பிலிப் நேரடியாக டைர் நகரம் வந்து அக்ரியை வெற்றி கொள்ள இணைந்து கொண்டான். சிஸிலியை விட்டுக் 180 கப்பல்கள், 39 படகுகளுடன் கிளம்பிய ரிச்சர்ட் கடுமையான புயல்காற்றில் சிக்கிக் கொண்டான். அவனின் கப்பல்கள் சில மூழ்கின. அதில் அவன் உறவினன் ஜோனும், காதலி பெரிங்காரியாவும் இருந்த கப்பல் பெரும் செல்வத்துடன் மூழ்கியது. ஆனால் பின்னால் அக்கப்பல் சைப்ரஸின் இசாக் டுகாஸால் கைப்பற்றப்பட்டிருப்பது அறியப்பட்டது. அவன் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து சிலுவைப்போருக்கு 500 வீரர்களையும் கொடுத்தான். ரிச்சர்ட் லிமஸ்ஸோலில் தங்கி பெரிங்காரியாவை மணந்து கொண்டான். 1191 ல் ரிச்சர்ட் அக்ரியை இரண்டாண்டு காலமாகப் போராடி கைப்பற்றினான். இதில் 24,000 முஸ்லீம் வீரர்கள் கொல்லப்பட்டு, 6,000 வீரர்கள் காயமடைந்தார்கள். அக்ரி நகரத்தின் பெரும் செல்வங்களைக் கொள்ளையடித்தான். 2,700 முஸ்லீம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் சங்கிலியால் கட்டி, சவுக்கால் அடித்த வண்ணம் அய்யாதெய் மலைக்கு இழுத்துச் சென்றான். அங்கு சிலுவைப்படைகள் அனைவரையும் ஈவுஇரக்கமின்றி கொன்றார்கள். இச் செய்தி சலாவுத்தீனின் பேரரசு முழுதும் உலுக்கியது.
ஜாஃப்ஃபா நகருக்கருகில் அர்சூஃப் என்ற இடத்தில் சலாவுத்தீனின் படையை தோற்கடித்த ரிச்சர்ட், ‘லயன் ஹார்ட்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டான். முஸ்லீம்களைப் பொறுத்தவரை இவர் போர் வரம்புகளை மீறிய ஒரு இரக்கமற்ற கொலைகாரன். ஏற்கனவே ஆங்கிலமன்னன் சலாவுத்தீனிடம் போட்டிருந்த ஒப்பந்தம் பிரகாரம் அவர்களால் டைர் நகரம் தாண்டி ஜெருசலம் செல்ல முடியவில்லை. அக்ரி நகரத்தில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருந்த கொடூரத்தைக் கேட்டு சலாவுத்தீன் வாய்விட்டு அழுது கண்ணீர் சிந்தினாராம். அந்த துயரத்திலேயே அவர் இறந்தும் போனார். மூன்றாவது சிலுவைப்போரில் ஜெருசலத்தை மீட்க முடியாமல் போனதால், போப் மூன்றாம் இன்னோசெண்ட் நான்காவது சிலுவைப்போருக்கு அழைப்புவிடுத்தான். நேரடியாக எகிப்தை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தான். ஆனால், அது மூன்றாவது சிலுவைப்போரை விட படுதோல்வி அடைந்தது. நான்காவது சிலுவைப்போருக்கு வெனிஷிய வணிகர்கள் பொருளுதவி செய்தார்கள். சிலுவைப்படைகள் கிறிஸ்தவ டால்மேஷியன் துறைமுக நகரமான ஸராவை கொள்ளையடித்து அழித்து நாசம் செய்தது. ஆரம்ப சிலுவைப்போருக்கு அழைப்புவிடுத்த முதலாம் அலெக்சியஸின் காண்ஸ்டாண்டிநோபிளையே 1204 ல் சிலுவைப்படைகள் நாசம் செய்தன. வெனீஷியர்களும், சிலுவைப்படைகளும் கான்ஸ்டாண்டிநோபிளை லத்தீன் பேரரசாக 1261 வரை வைத்துக்கொண்டன. நகரின் முக்கிய தேவாலயத்தை நாசப்படுத்தி கொள்ளைகளும் நடத்தினர். கன்னியாஸ்திரிகளை கற்பழித்து அசிங்கமான ஃப்ரென்ச் பாடல்களுக்கு நடனமாட வைத்து, பாட்ரியார்ச்சிகளின் அரண்மனையில் விபச்சாரிகளாகவும் ஆக்கினார்கள். புனித பைபிள் புத்தகங்களை கால்களில் போட்டு மிதித்தனர். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவையல்ல. சரித்திரம் பதிவுசெய்து வைத்ததையே இங்கு குறிப்பிடுகிறோம். அடுத்து 1212 ல் குழந்தைகள் சிலுவைப்போர் என்று ஐரோப்பாவின் 100,000 குழந்தைகளை அழைத்து வந்தார்கள். இப்படி அழைத்து வரப்பட்ட ஃப்ரென்ச் மற்றும் ஜெர்மனிய வெள்ளை நிற குழந்தைகளை அழைத்துவந்த கிறிஸ்தவர்களே அடிமைச் சந்தையில் விற்றார்கள். 12 வயதான க்லோயசைச் சேர்ந்த ஸ்டீபன் என்னும் சிறுவன் பின்னாளில் சொன்னதாவது, புனித ஜெருசலத்தை மீட்க இவன் தலைமையில் மற்ற குழந்தைகளைத் திரட்டி பசியுடனும், நோயுடனும் ஃப்ரான்சின் மார்செய்லி துறைமுகத்திற்கு வரச்சொல்லி ஃப்ரென்ச் அடிமை வியாபாரி ஒருவனால் மெடிட்டரேனிய அடிமைச்சந்தையில் விற்கப்பட்டார்கள். இன்னொரு அபத்தமாக ஜெர்மனிய நிக்கோலஸ் என்பவனால் ஆயிரக்கணக்கான ஜெர்மனிய பெண்குழந்தைகள் ரோமப்பேரரசில் விபச்சாரத்திற்காக விற்கப்பட்டார்கள். உபயோகமில்லாத இந்த நான்காவது சிலுவைப்போர் எகிப்தைத் தாக்குவதற்கு பதில் கிறிஸ்தவ பைஸாந்திய பேரரசை தாக்கியது. மீண்டும் போப் மூன்றாவது இன்னொசெண்ட் (1217-1221) எகிப்தைத் தாக்குவதற்கு ஐந்தாவது சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தான். ஃப்ரான்ஸ், ஜெர்மன் தலைமையில் அமைந்த இந்த படையும் எகிப்தை வெற்றி கொள்ள தவறியது. 1218 ல் நைல் நதியில் டமெய்டாவை வென்றது. 1,500 அரபு முஸ்லீம்களை படகில் நதியில் மூழ்கடித்துக் கொன்றார்கள். எகிப்தின் ஆட்சியாளராக இருந்த சலாவுத்தீனின் உறவினர் அல் மாலிக் அல் காமில் ஐந்தாம் சிலுவைப் படை வீரர்களை 1221 ல் போரிட்டு விரட்டினார். ஏழு ஆண்டுகள் கழித்து 1228 ல் மீண்டும் போப் கிரிகோரியால் ஆறாவது சிலுவைப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்முறை ஜெர்மனியின் சக்திவாய்ந்த இரண்டாம் ஃப்ரெடெரிக் தலைமை வகித்தான். இரண்டாம் ஃப்ரெடெரிக் மற்றும் அல் காமிலுக்கும் இடையில் இரத்தமின்றி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜெருசலம், பெத்லஹேம் மற்றும் நாசரெத் நகரங்களை கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதற்கு முஸ்லீம்களிடத்தில் அல் காமிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். 1239 ல் ஒப்பந்தம் முடிந்து அந்நகரங்கள் மீண்டும் அல் காமில் வசம் வந்தது. 1248 ல் ஃப்ரான்சின் ஒன்பதாம் லூயிஸ் எகிப்தை எதிர்த்து ஏழாம் சிலுவைபோரைத் துவக்கினான். விரைவில் டமெய்டாவைக் கைப்பற்றி எகிப்தை நோக்கி முன்னேறிய லூயிஸை எகிப்து சுல்தான் தோற்கடித்தார். மன்னன் லூயிஸும் கைது செய்யப்பட்டான். பெரும் பணயத்தொகை பெற்றபின்னரே இவன் விடுவிக்கப்பட்டான்.

சிலுவைப்போர் 8

இத்தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஹுலகு (அக்காலத்திய ஜார்ஜ் டபிள்யூ. புஷ்) என்னும் மங்கோலிய மன்னனால் பாக்தாத் நகரம் அழிக்கப்பட்டது. 10 லட்சம் முஸ்லீம்களைக் கொன்று, மஸ்ஜிதுகள், நூலகங்கள், பள்ளிக்கூடங்கள், அரண்மனைகள் ஆகியவற்றைத் தரைமட்டமாக்கினான். அக்காலத்திலேயே கால்வாய் நீர்பாசனம் கொண்டிருந்த பாக்தாதின் நகர கால்வாய்களை சேதமாக்கி கலீஃபாவையும், அவர் குடும்பத்தினரையும் காட்டுமிராண்டித் தனமாக கொன்று குவித்தான். அதன்பின் ஓட்டோமான் ஆட்சியாளர்களால் தான் மீண்டும் இஸ்லாமியர்கள் தலைதூக்கினார்கள். திறமைவாய்ந்த பெய்பர்ஸ் அஸ் ஸாஹிர் என்பவர் மங்கோலியர்களை அய்ன் ஜாலூத் போரில் வென்று உருவெடுத்தார். கிறிஸ்தவ சிலுவைப்படைகளுடன் இணைந்திருந்த மங்கோலியர்களை போரிட்டு, சிலுவைப்படைகளிடமிருந்த அரபு நகரங்களான அர்சூஃப், அட்லிட், ஹைஃபா, சஃபிட், ஜஃப்ஃபா, ஆண்டியாக் ஆகியவற்றை தொடர்ச்சியாக வென்றார். ஃப்ரான்சின் மன்னன் ஒன்பதாம் லூயிஸ் மீண்டும் அரபுகளை வெல்ல 1270 ல் எட்டாவது சிலுவைப்போரை நடத்தினான். அரபு பிரதேசத்தை இடையில் துண்டித்துவிடும் நோக்கில் துனிஷியாவின் மீது படையெடுக்க இருந்தான். எதிர்பாராத விதமாக கொடும் கிருமி நோயால் தாக்கப்பட்டு, துனிஸ் நகரில் இறந்து போனான். அவன் உடல் பாரீஸ் நகரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு ‘ஞானி’ யாக புதைக்கப்பட்டான். அடுத்து பெய்பர்ஸ் சலாவுத்தீனால் வெற்றி கொள்ளமுடியாமல் போன சிலுவைப்படைகளின் சிரியாவிலுள்ள ஹிஸ்ன் அல் அக்ரத் (ஃப்ரென்சில் “க்ராக் டெஸ் செவாலியர்ஸ்”) கோட்டையைக் கைப்பற்றினார். 1289 ல் எகிப்திய சுல்தான் அல் மன்சூர் கலாவூன் என்பவர், முஸ்லீம்கள் சிலிர்ப்படையும் வகையில் சிலுவைப்படைகள் வசமிருந்த காலனிய பகுதியான திரிபோலியை வென்றார். இப்போது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஃப்ரான்சின் கொடுமைக்கார மன்னன் ஹென்றியின் கீழ் அக்ரி துறைமுக நகரம் மட்டும் இருந்தது. இந்நிலையில் ஹென்றியின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பாவில் போப் நான்காம் நிக்கோலஸ் ஒன்பதாம் சிலுவைப்போருக்கு ஆட்களைத் திரட்டினான். பெரும் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு அக்ரி நகரை நோக்கி வந்தார்கள். அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு அங்கிருந்த முஸ்லீம் வணிகர்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட அல் மன்சூர் கலாவூன் பெரும் கோபம் கொண்டு ஐரோப்பியர்களை அரபு மண்ணிலிருந்து விரட்டும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் செய்தார். ஆனால், அவர் இறந்துபோக, அவர் மகன் அல் அஷ்ரஃப் கலீல்அக்ரியை வென்று சபதத்தை நிறைவேற்றினார். மன்னன் ஹென்றியும், ஐரோப்பிய தலைவர்களும் தப்பித்து சைப்ரஸ் ஓடிச்சென்றார்கள். மீதியிருந்த ஐரோப்பியர்கள் கலீலின் படையால் பிடித்துக் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவ வெறியாளர்களிடமிருந்து அக்ரியைக் கைப்பற்ற முஸ்லீம்களுக்கு 100 ஆண்டுகள் ஆயிற்று. பெருமகிழ்ச்சி அடைந்த அரபுகள் இனி கிறிஸ்தவ சிலுவைப்படைகள் முஸ்லீம் பிரதேசத்தில் நுழைந்து கொடுமைகள் செய்யக்கூடாது என்று இறைவனைப் பிரார்த்தித்தார்கள். அது அடுத்த சில ஆண்டுகளுக்கு பதிலாய் அமைந்தது. 74 ஆண்டுகளுக்குப் பிறகு, சைப்ரஸின் மன்னன் பீட்டர் 1365 ல் பத்தாவது கடைசி சிலுவைப்போரை ஏற்பாடு செய்தான். இது கிறிஸ்தவ அரபு நகரமான அலெக்ஸாண்டிரியா நகரத்தை எதிர்த்து கிளம்பியது. நகரின் எண்ணற்ற பலர் கொல்லப்பட்டார்கள். லத்தீன் வியாபாரிகளின் கடைகளும், வீடுகளும் பீட்டரின் படைகளால் சூறையாடப்பட்டது. இவர்களை எதிர்த்து அரபுகளே புரட்சி செய்து மன்னன் பீட்டரைக் கொன்றார்கள். 1395 ல் துருக்கிய முஸ்லீம்கள் கான்ஸ்டாண்டிநோபிளை நோக்கி படையெடுத்தார்கள். அப்போது பைஸாந்திய மன்னன் மானுவேல் இரண்டாம் பலாயிவோலோகஸ் ஐரோப்பியர்களை உதவிக்கு அழைத்தான். உடனே ஹங்கேரியின் மன்னன் சிஜிமுண்ட் 1396 ல் பத்னோறாவது சிலுவைப்போராக அறிவித்து கான்ஸ்டாண்டிநோபிள் மட்டுமல்லாமல், ஜெருசலத்தையும் மீட்பேன் என்று சூளுரைத்தான். இந்தச் சிலுவைப்படையில் பால்கன், ஃப்ரான்ஸ், பர்கண்டி, ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகியவற்றின் வீரர்கள் இணைந்தார்கள். இந்த பதினோறாவது சிலுவைப்படை நிகோபோலிசில் துருக்கிய சுல்தான் முதலாம் பயாஸிட்டால் நொறுக்கப்பட்டது.
பிறகு 48 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய கிறிஸ்தவ தீவிரவாதிகள் பால்கனில் துருக்கியர்களை எதிர்த்து வந்தார்கள். சுல்தான் இரண்டாம் முராதால் வெற்றி கொள்ளப்பட்டார்கள். பலம் கொண்ட துருக்கிய முஸ்லிம் படைகள் பைஸாந்திய பேரரசை அழித்து பால்கனில் பலம் பெற்றது. அங்கிருந்து முன்னேறி கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பியாவில் நுழைந்து இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துச் சென்றது. 1481 ல் தென் இத்தாலியைக் கைப்பற்றியது. ஐரோப்பியர்களின் முஸ்லீம்கள் மீதான தீவிரவாதம் 15, 16, 17 ம் நூற்றாண்டுகளில் பல ரூபங்களில் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் காலனி ஆதிக்கத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பரப்பினார்கள். 19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில் பலம் வாய்ந்த ஓட்டோமான் பேரரசை வீழ்த்தும் வழியைக் கண்டுபிடித்தார்கள். பலநூறாண்டுகளாகப் போராடி பிடிக்க முடியாமல் போன ஜெருசலத்தை 1948 ல் யூத இஸ்ரேல் என்னும் நாடை பாலஸ்தீனத்தில் உருவாக்கி அதை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நீரூற்றி வளர்த்து, ஹாஷிமிட்கள், சௌத்கள், அல் தானிகள், அல் கலீஃபா, பனியாஸ்களாகவும் இன்னும் பல பிரிவுகளாக ஒவ்வொரு முஸ்லீம்களுக்குமான ஜிஹாதை மறந்து தங்கள் குடும்பப் பெருமைக்காக மட்டுமே வாழும் இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் வைத்து இஸ்லாமியர்கள் மீது தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்தி விடுகின்றன. ஆனாலும் துருக்கிய ஆட்சியாளர்கள் ரோமப்பேரரசின் கான்ஸ்டாண்டிநோபிளை ‘இஸ்தான்புல்’ லாக மாற்றி பல மஸ்ஜித்களை கட்டி ஆணித்தரமாக இஸ்லாமிய நகரமாக மாற்றி வெற்றிகொடி நாட்டினார்கள். மேற்கத்திய கிறிஸ்தவ தீவிரவாதிகளால் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என்று சொல்லப்படுகின்ற சமீபத்திய ISIS என்ற அமைப்பு பரம எதிரியான இஸ்ரேலை எதிர்த்து ஒரு ஊசிப்பட்டாசு கூட வெடிக்கவில்லை. மதுரையில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் திருச்சிக்காரர்கள் தான் காரணம் என்று எந்த ஆதாரமும் காட்டாமல், வெறும் கூப்பாடு மட்டுமே போட்டுக்கொண்டு திருச்சியில் ஒவ்வொரு வீட்டின் சமையல்கட்டு, கழிவறைகள், படுக்கை அறைகள் என்று மதுரைக்காரர்கள் பல ஆண்டாக நினைத்த போதெல்லாம் வந்தால் திருச்சிகாரர்கள் சும்மா இருப்பார்களா? ஆனால், என்ன ஆச்சரியம் அரபு நாடுகள் சும்மா இருக்கின்றன. இவர்கள் என்னதான் சர்வதேச அரசியலை காரணம்காட்டினாலும் நபி (ஸல்) கள் நாயகத்தின் உண்மையான இஸ்லாமிய ஆட்சி எங்கே என்பதற்கு இவர்களிடம் பதிலில்லை. நேட்டோ படைகளுக்கு விமானதளம், துறைமுகம், உணவு, பெட்ரோல் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோபடை கப்பல்களுக்கு ஜப்பான் அரசு வருடத்திற்கு 5000 விலைமாதர்களை அனுப்புகிறார்கள். 1570 ல் ஓட்டோமான் துருக்கிகள் சைப்ரஸை வென்ற பிறகு, கிறிஸ்தவ சிலுவைப்படை போராளிகளுக்கு, பெரும் பின்னடைவாகிவிட்டது. 1571 ல் ஓட்டோமானின் கடற்படையை சிலுவைப்படைகள் லெபாண்டோவில் அழித்தாலும், மீண்டும் ஓராண்டில் கடற்படையை சிறப்பாக ஓட்டோமான்கள் அமைத்துக் கொண்டார்கள். கடந்த காலங்களில் சிலுவைப்படைகள் செய்த அட்டூழியத்தால் புராதன கிறிஸ்தவர்களான அரபு கிறிஸ்தவர்களிடத்தில் மிகப்பெரிய இழிவான எண்ணத்தையே விதைத்திருந்தார்கள்.