வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 4

அந்நகரை போரிட்டுப் பிடிக்க படைகளால் முடியவில்லை அதனால் நகருக்குள் யாராவது காட்டிக் கொடுக்கும் ராஜதுரோகி கிடைப்பானா என்று ஆராய்ந்தார்கள். ஃபைருஸ் என்ற முஸ்லீம் அர்மேனியன் அரசுக்குத் தெரியாமல் கள்ளக்கடத்தலில் ஈடுபட்டதால், ஆண் டியாக்கின் அதிகாரிகளால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தான். அவன் இப்போது நகரின் ஒரு கதவில் காவலில் இருந்தான். அதிகாரிகளைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, எதிரிகளிடம் கையூட்டுப் பெற்று சரித்திரத்தில் செய்யக்கூடாத மாபாவச்செயலை செய்தான். நகரில் அவனிருந்த கதவை சிலுவைப்படைகளுக்கு அதிகாலை 4 மணிக்கு திறந்து விட்டான். பெரும் அலையென உள்ளே புகுந்த சிலுவைப்படைகள் ஏதோ தொழில் செய்வது போல் கொலைகளை வெகுவேகமாக சரியான கண் விழிப்பில் இல்லாத மக்களைக் கொன்றும் தீயிட்டும் கொளுத்தினார்கள். ஆம் அது எந்தமாதிரியான மன்னிப்புக்கும் தகுதியில்லாத பாவச்செயல். நகர முஸ்லீம் பெண்களின் அனைவரின் பிள்ளை சுமக்கும் அடிவயிறையும் வாள்களால் அறுத்தார்கள். கொட்டும் மழையில் தப்பித்துப் போகும் குடும்பங்களை சில நூறு வீரர்கள் நகர கதவின் வெளிப்புறத்திலிருந்து சேற்றிலும், சகதியிலும் வைத்து வெட்டி வீழ்த்தினார்கள். மலம் தின்னும் மேற்கத்தியர்கள் இதை சில ஆங்கிலப்படங்களில் மாற்றி முஸ்லீம்கள் அவர்களை வெட்டுவது போல் காட்டினார்கள். முஸ்லீம்கள் கொட்டும் மழையில் சாவின் பயத்திலும், காயத்தின் காரணமாகவும் இன்னும் பல சொல்லொனா துயரங்களின் காரணமாக அழுது கொண்டிருக்க, சிலுவைப்படைகள் மது அருந்தி நடனமாடிக் கொண்டு ஆண்டியாக் நகரை கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக அந்நகரம் தீயால் புகைந்து கொண்டிருந்தது. பல மாதங்களுக்கு அந்நகரில் பிணவாடை வீசிக்கொண்டிருந்தது. இதன் முழு விவரமும் அறிந்தால் எப்படிப்பட்ட நெஞ்சும் உருகிவிடும். இதை அவர்கள் கால்வைத்த எல்லா முஸ்லீம் நகரங்களிலும் தொடர்ந்தார்கள். செய்தி அறிந்து மோசூலிலிருந்து கெர்போகா என்பவர் தலைமையில் முஸ்லீம் இராணுவம் ஆண்டியாக் வந்தது. தாமதமாக வந்து நகரத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அக்காட்சி கண்கள் வற்றும் வரை அவர்களை அழச் செய்தது. கெர்போகா சிலுவைப்படைகளுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் போட சமாதானம் பேசினார். கொஞ்சம் கூட தாமதிக்காத சிலுவைப் போராளிகள் தயாராய் இல்லாத அவர் படைகளை சின்னா பின்னப்படுத்தி அவர்களைக் கொன்றது. சிலுவைப் படைகளை வென்றால் எங்கே கெர்போகா அதிகாரமிக்கவராக ஆகிவிடுவாரோ என்று எண்ணி   உதவிக்கு வர இருந்த ஃபாத்திமிட் பகுதி படைகள், துருக்கிய படைகளை தனியாக விட்டுச் சென்றன.
ஒரு சிலுவைப்படையின் தலைவன் ப்லோயிசின் ஸ்டீபன் என்பவன் அலெக்சியஸிடம் முஸ்லீம்களை வெல்ல முடியாது என்று சொல்லி ஃப்ரான்சுக்கு திரும் பியதாக ஒரு தகவல் உண்டு. ஆண்டியாக்கில் அலெக்சியஸ், பொஹிமாண்ட், ரெய்மாண்ட் ஆகியோ ரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. சில சரித்திர ஆசிரியர்கள் வட ஃப்ரான்சைச் சேர்ந்த ஃப்ராங்கு களும், தென் ஃப்ரான்சைச் சேர்ந்த ப்ரோவின்கல்ஸ்களும், தென் இத்தாலி நார்மன்களும் தங்களுக் கென தனி நாடு உருவாக்குவதைப் பற்றி திட்டமிட்டார்கள் என்று சொல்கிறார்கள். கொலைகார முத லாம் பொஹிமாண்ட் ஆண்டியாக்கின் மன்னன் ஆனான். ஆண்டியாக்குக்குப் பிறகு, கிறிஸ்தவ படைகள் தெற்கு நோக்கி ஜெருசலம் நகர்ந்தனர். 1098 டிசம்பர் மாதம் சிரியாவின் மஃஅர்ரா (மாஃஅர்ரத் அல் நுமான்) என்ற அரபு நகரத்தை சிலுவைப் படைகள் அடைந்தன. அங்கு அரபுலகின் புகழ் பெற்ற தத்துவவாதியும், கவிஞருமான அபு அல் அல அல் மஃர்ரி இருந்தார். இங்கு தான் போராளிகள் மனிதர்களைக் கொன்று உண்ண ஆரம்பித்தார்கள். முழுக்க விவசாயத்தைச் சார்ந்திருந்த அல் மஃர்ராவில் எந்த இராணுவமும் இல்லை. மிகவும் அமைதியான நகரம். நகரத்தின் பொருளாதாரம் அங்கு விளையும் திராட்சை, ஆலீவ் மற்றும் ஃபிக் பழங்களின் உற்பத்தியைச் சார்ந்திருந்தது. ஆயுதமே இல்லாத அந்த மக்கள் இரண்டு வாரம் சிலுவைப் படைகளை சமாளித்தார்கள். பொஹிமாண்ட் அவ்வூர் தலைவர்களிடம் சரணடைந்தால் அனைவரையும் உயிருடன் விட்டு விடுகிறேன் என்று உறுதி மொழி கொடுத்தான். ஆனால் தான் ஒரு மேற்கத்திய மிருகம் என்பதை உறுதிபடுத்தினான். உடனிருந்த காயனைச் சேர்ந்த ருடால்ஃப் என்பவன் பின்னாளில் எழுதியதாவது: ‘எங்கள் படை பெரியவர்களை அறுத்து பானைகளில் வேக வைத்தது. சிறுவர்களை துண்டு துண்டாக வெட்டி சுட்டுத் தின்றது’ என்றான். சிறிய மன்னர்களும், சில வீரர்களும் விடாமல் ஜெருசலம் போக வேண்டும் என்று தொந்திரவு செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டியாக்கின் முதல் இளவரசர் பொஹிமாண்ட் தலைமையில் 1099 படை கிளம்பியது. மெடிட்டரேனி யன் கரைப்பகுதியைக் கடக்கும் போது சில தடங்கல்கள் வந்தன. அங்கிருந்த நகரங்கள் சண்டையை தவிர்க்க சிலுவைப் படைகளுக்கு தேவையானவற்றைக் கொடுத்து உதவின. சில ஊர்வாசிகள் காடுகளுக்குள் போய் ஒளிந்து மிருகங்களிடம் சாவதே மேல் என்று போய்விட்டார்கள். போப் இரண்டாம் அர்பனின் வெறிபிடித்த கிறிஸ்தவக்கூட்டம் 1099 ஜூனில் ஜெருசலத்தை அடைந்தது. ஜெருசலம் ஓராண்டுக்கு முன்புதான் செல்ஜுக் பேரரசிடமிருந்து, ஃபாத்திமிட்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. சில சிலுவைப்படை வீரர்கள் வெகு நீண்ட பயணம் செய்து வந்ததிற்குப் பிறகு, அந்த புனித நகரத்தைப் பார்த்ததால் அழுதார்கள். மூன்று நாட்கள் பாவம் தீர நோன்பிருந்தார்கள். வெற்றுக்காலுடன் புகழ்பெற்ற ஜெருசலம் சுவரை (இந்த சுவற்றின் பின்னால் தான் நாயகம்(ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது புராக் என்னும் சிறகுடைய வாகனத்தைக் கட்டினார்கள்) சிலுவை ஏந்திய கைகளுடன் சுற்றி வந்து தாவூத் (அலை) நபிகளின் ஸபூர் வேதத்தைப் பாடினார்கள் அந்த மனிதர்களைத் தின்ற கூட்டத்தினர்.
ஜெருசலம் நகரத்தின் வெளிப்புறத்தில் முகாமிட்ட அவர்கள் உணவுக்கும், குடிநீருக்கும் அவதிப்பட்டார்கள். எங்கே திடீரென்று ஃபாத்திமிட் படைகள் வந்து தாக்குமோ என்று வேறு அச்சப்பட்டார்கள். ஆண்டியாக்கைப் போல முற்றுகையிடவும் சந்தர்ப்பமில்லை. ஜெருசலத்தை அடைந்த போது படையில் 12,000 வீரர்களும், 1,500 குதிரை வீரர்களும் இருந்தனர். அதில் ஐரோப்பாவின் பலதரப்பட்ட மக்களாய் இருந்ததால் தனித்தனியாக காக்ஃப்ரே மற்றும் டான்க்ரீடும் வடக்குப்புறமும், ரெய்மாண்ட் தெற்குப் புறமும் இருந்தார்கள். ஜூன் 13 ல் நடந்த தாக்குதலில் ப்ரோ வென்கால்கள் கலந்து கொள்ளவில்லை. ஜெருசலம் நகரத்தின் மீதான முதல் தாக்குதல் தோல்வியடைந்தது. பின் அனைவரும் கூடிப் பேசி, அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்டார்கள். லார்ட் டாங்க்ரெட் (இவன் பொஹிமாண்டின் உறவினன்) சரணடைந்தால் அனைத்து முஸ்லீம்களையும் உயிரோடு விட்டு விடுவதாகவும், மேலும் அல் அக்ஸா மஸ்ஜிதில் முஸ்லீம்கள் தடையில்லாமல் வழிபடவும், மற்ற இஸ்லாமிய புனித இடங்களை ஒன்றும் செய்யாமல் இருப்பதாகவும் உறுதி அளித்தான். அதன்படி ஜூலை 15 வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த முஸ்லீம்கள் சரணடைய ஒப்புக் கொண்டு நகர வாசல்களைத் திறந்தார்கள். ஆனால் நன்றிகெட்ட அந்த கிறிஸ்தவ வெறிபிடித்த கூட்டம் அல் மஃஅர்ராவில் செய்த துரோகம் போல் வடக்கு, தெற்கு வாசல்களைத் தாக்கத் துவங்கினார்கள். இரு வாசல் வழியாகவும் சிலுவைப் படைகள் நகரத்தின் உள்ளே ஊடுருவினார்கள். கண்ணில் தென்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அனைவரையும் சரமாரியாகக் கொன்று குவித்தார்கள். டான்க்ரிட் தலைமையில் வடக்கில் நுழைந்த வீரர்கள் மலைக்கோவிலுக்குச் சென்றார்கள். தடுத்தவர்களை வெட்டிக் கொன்றார்கள். தப்பித்தவர்கள் அல் அக்ஸா மசூதிக்குள் ஓடினார்கள். தெற்குப் பகுதியில் நுழைந்த ரெய்மாண்டின் ஆட்கள் நகருக்குள் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள். ஃபாத்திமிட்களின் படைத்தளபதி இஃப்தி நகார் அல் தௌலா கொலைகளைப் பார்த்து, அரண்மனையை ஒப்படைத்து விடுவதாகவும், எஞ்சியவர்களை பத்திரமாக அஸ்கலான் செல்ல அனுமதிக்க வேண்டினார். நாள் முழுவதும் முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அடைக்கலம் தேடி மடத்துக்குள் ஓடிய யூதர்கள் மடத் தோடு கொளுத்தப்பட்டார்கள். தெற்கில் அல் அக்ஸாவில் அடைக்கலம் புகுந்த முஸ்லீம்களும்    கொல்லப்பட்டார்கள்.
ஜெருசலத்தின் கிழக்குப் பகுதி கிறிஸ்தவ மக்கள் தப்பித்து ஓடினார்கள். தொடர்ந்து ஒரு வாரம் கொன்று நகரத்தில் ஒருவர் கூட உயிரோடில்லாமல் செய்தார்கள். அந் நகரில் ஓடிய ரத்தம் முழங்காலளவு இருந்ததாக மாற்று மத சரித்திர ஆசிரியர்களே எழுதி இருக்கிறார்கள். அவர்கள் கொன்றது 70,000 பேர் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அல் அக்ஸா மஸ் ஜித் அருகிலிருந்த டோம் ஆஃப் ராக்கை தேவாலயமாக மாற்றினார்கள். சரித்திர ஆசிரியர் ரொனால்ட் பைண்டன் கீழ் வருமாறு சொல்கிறார்: சிலுவைப் படைகளில் சில பேர் கொல்லப்பட்டவர்களின் மூக்குகள், பெருவிரல்களை அறுத்து பாதுகாத்துக் கொண்டார்களாம். அதை போப் இரண்டாம் அர்பனிடம் காட்டி ஆசி பெறுவதற்கு. இதன்பிறகு, போப் அர்பன், டயரின் ஆர்ச் பிஷப் ஆகியோர் வெளியிட்ட அறிக் கைகள் கேவலத்தின் உச்சங்கள். இஸ்ரவேலர்களிடத்திலே சமாதானத்தைக் கொண்டு வந்த ஈஸா (அலை) நபி அவர்களின் பெயரைச் சொல்லி புனித நகரத்தை உலகம் அழியும் மறக்காமல் இருக்கும் வண்ணம் பாழ்படுத்தி விட்டார்கள். இப்ராஹீம் (அலை) நபி மற்றும் சில ஞானிகளின் சமாதிகளைச் சேதப்படுத்தினார்கள். சுலைமான்(அலை) நபி தேவாலயத்தில் 10,000 யூதர்களைக் கொன்றார்கள். மேற்கத்திய கிறிஸ்தவ சிலுவைப் படைகள் தங்களின் ஆழமான இனவெறியாலும், கொடூரத்தனத் தாலும் யூதர்களை யும், சக கிறிஸ்தவர்களையும் கொன்றார்கள். புராதன கிறிஸ்தவர்களான ஜெரு சலம் பாதிரியாரை ஈஸா(அலை) நபி அவர்களை அறைந்த சிலுவையை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு சித்திரவதை செய்து கொன்றார்கள். ஜெருசலமும் ஐரோப்பிய காலனியாக இரத்த வெறி பிடித்த காட்ஃபிரே தலைமையில் ஆக்கப்பட்டது. அவன் அல் அக்ஸா மஸ்ஜிதை தன் அரண்மனையாக ஆக்கிக் கொண்டான்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக