முதலாம் சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
கிறிஸ்தவ மதம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா பகுதிகளில் துவங்கிய காலத்திலிருந்து பரவிக் கொண்டிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் அனடோலியாவில் முஸ்லீம்கள் ஆட்சி பரவியவுடன் அதன் வேகம் குறைந்து போனது. உமைய்யாத் பேரரசு சிரியா, எகிப்து மற்றும் வட ஆப்பிரிக்காவை கிறிஸ்தவ பைஸாந்தியர்களிடமிருந்து வெற்றி பெற்றார்கள். விசிகோத் இராஜ்ஜியத்திலிருந்து ஹிஸ்பானியாவையும் வென்றிருந்தார்கள். நாளடைவில் நிலப்பரப்பு பெரிதானதால் நிர்வகிக்க முடியாமல் சிதைந்து பல சிறு இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. 9 ம் நூற்றாண்டில் அக்லாபித் என்பவர்கள் தன்னிச்சையாக இத்தாலியைத் தாக்கினார்கள். பிஸா, ஜினோவா, காடலோனியா போன்ற பல இஸ்லாமிய இராஜ்ஜியங்கள் மெடிட்டரேனியனில் தங்கள் அதிகாரத்தைப் பெற மஹ்தியா போர், மஜோர்கா போர் மற்றும் சர்தீனியா போர் அகியவற்றை நடத்தின.
1096 லிருந்து 1101 வரை கிரேக்க பைஸாந்தியர்கள், மேற்கு ஐரோப்பாவினருடன் மூன்று அலையாக கான்ஸ்டாண்டிநோபிள் நோக்கி வந்தார்கள். 1096 ல் முதல் பகுதி அதிகாரமற்றவர்களாக, போர் ஒழுங்கில்லாமல், முறையான ஆயுதங்களும் இல்லாமல் நகரின் வெளிப்புறத்தில் வந்து சேர்ந்தார்கள். சிலுவைப் போராளிகள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் பீட்டர் தி ஹெர்மிட் மற்றும் வால்டர் சான்ஸ் அவாயர் தலைமையில், பைஸாந்திய பேரரசர் அலெக்சியஸ் முதலாம் கம்னினசுக்கு மரியாதை அளிக்காமலும் தகவல் தெரிவிக்காமலும் வந்திருந்தார்கள். இரண்டாவது அலையாக இராணுவத்தினர் குழுக்களாக வந்திருந்தனர். இரண்டாவது குழுவுக்கு ஃப்ரான்சின் மன்னர் முதலாம் பிலிப்பின் சகோதரர் வெர்மாண்டோயிசைச் சேர்ந்த முதலாம் ஹூக் தலைவனாய் இருந்தான். இன்னொரு இரண்டாம் அலைக்கு டௌலூசைச் சேர்ந்த நான்காம் ரெய்மண்ட் தலைமை தாங்கினான். இவனது படை வழியில் 1098 ல் ஆண்டியாக்கைக் கைப்பற்றிக் கொண்டு, 1099 ஜூலையில் ஜெருசலம் வந்து சேர்ந்தது. முதலில் வந்தவர்கள், இரண்டாவது வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து 60,000 பேர் இருந்தார்கள். மூன்றாவது அலையாக லாம்பர்டி, ஃப்ரான்ஸ் மற்றும் பவேரியாவில் இருந்து மக்களைத் திரட்டி அவசரமாக உண்டாக்கிய குழுபோல் ஒன்று 1101 ல் ஜெருசலம் வந்தது.
ஐரோப்பாவின் ஐபீரிய தீபகற்பத்திலிருந்த கிறிஸ்தவர்களை போப் இரண்டாம் அர்பன் மீண்டும் டர்ரகானா பகுதியை இஸ்லாமியர்களிடமிருந்து வென்றெடுக்க வெறியேற்றினான். 10 ம் நூற்றாண்டில் ஸாக்சன், வைக்கிங்க் மற்றும் ஹங்கேரியன்களின் எழுச்சி யால் மேற்கு ஐரோப்பிய கிறிஸ்தவர்களிடையே ஒரு எழுச்சி இருந்தது. கரோலின்ஜியன் பேரரசின் வீழ்ச்சியால் அனைத்துத் தரப்பு வீரர்களும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந் தார்கள். ஐரோப்பாவின் சிறிய மன்னர்கள் அவ்வப்போது காட்டுமிராண்டித் தனமாய் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை தேவாலயம் கண்டித்தது. ரோமப் பேரரசுடனான அவர்களை பகையை போப் ஏழாம் கிரிகோரி களைந்து கிறிஸ்தவ மதத்திற்காக ஒருங்கிணைய வைத்தார். குறிப்பாக அல் அண்டலூசியா, செல்ஜுக் பேரரசை எதிர்த்து கிழக்குப் புறமாக போரிடச் செய்தார். கிழக்கு ஐரோப்பாவில் பைஸாந்தியப் பேரரசின் கிறிஸ்தவர்கள் புராதன வழக்கப்படி இருந்தார்கள். ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 1054 லிருந்து நவீன கருத்து கொண்ட கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். 1071 ல் மன்ஸிகார்ட் போரினால் செல்ஜுக் துருக்கிகள் மொத்த அனடோலியாவை வென்றிருந்தாலும், சில பகுதிகள் கப்பம் செலுத்தும் நடைமுறையில் அந்தந்த பகுதி தலைவர்களால் ஆளப்பட்டது. 1090 களின் மத்தியில் பைஸாந்தியப் பேரரசு பெருமளவு ஐரோப்பிய பால்கன் பகுதியிலும் வட மேற்கில் அனடோலியாவிலும், மேற்கில் நார்மன் எதிரிகளுடனும், கிழக்கில் துருக்கியர்களுடனும் மோதிக் கொண்டிருந்தது. மன்ஸிகார்ட் போர் தோல்விக்குப் பிறகு, போப் ஏழாம் கிரிகோரி கிறிஸ்தவர் களை ஒன்றாக சேர்ந்து பைஸாந்தியர்களுக்கு உதவுமாறு கூறினான். அப்போது அது முற்றிலும் மறுக்கப் பட்டதுடன், எதிர்க்கவும் செய்யப்பட்டது. மன்ஸிகார்ட் தோல்வி தற்காலிகமானது தான் அதற்காக ஒன்றும் பைஸாந்தியர்களுக்கு ஆதரவாகப் போகத் தேவையில்லை என்று மறுத்து விட்டார்கள்.
சிலுவைப் போராளிகள் வரும் வரை பைஸாந்தியர்கள் அனடோலி யாவிலும், சிரியாவிலும் செல்ஜுக்குகளையும், துருக்கிய பேரரசை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். செல்ஜுக்குகள் புராதன இஸ்லாமியர்களாக சுன்னிப் பிரிவைச் சார்ந்திருந்தார்கள். மாபெரும் செல்ஜுக் பேரரசாய் இருந்த அவர்கள் 1092 ல் முதலாம் மலிக் ஷா இறந்த பிறகு சிதறி சிறு மாகாணங்களாக ஆகிப் போனார்கள். மலிக் ஷாவுக்குப் பிறகு, அனடோலியாவில் சுல்தானிய ரோம் பகுதிக்கு முதலாம் கிலிஜ் அர்சலன் ஆட்சியாளராகவும், அவர் சகோதரர் முதலாம் துடுஷ் சிரியாவின் ஆட்சியாளராகவும் இருந்தார்கள். துடுஷ் 1095 ல் இறந்து போக, அவர் மகன்கள் ஃபக்ர் அல் முல்க் ரத்வானும், டுகாக்கும் முறையே அலிப்போவையும், டமாஸ்கஸையும் ஆண்டார்கள். மேலும் சிரியாவின் சில பகுதிகளை இருவருக்குமான சில எமிர்கள் ஆண்டு வந்தார்கள். மோசூல் நகரமும் அடபெக்கால் (பொறுப்பாளர்) ஆளப்பட்டது. எகிப்தும், பாலஸ்தீனின் பெரும் பகுதியும் ஃபாத்திமிட் கலீஃபாவால் ஷியா பிரிவு கொள்கையுடன் ஆளப்பட்டது. செல்ஜுக்குகளின் எழுச்சியால் அவர்களின் பகுதி சுருங்கிப் போனது. ஃபாத்திமிட் மற்றும் செல்ஜுக்குகளுடனான போர்களால் கிறிஸ்தவர்களுக்கும், மேற்கத்திய யாத்ரீகர் களுக்கும் பெரும் தொந்திரவாக இருந்தது.
ஃபாத்திமிட் கலீஃபா அல் முஸ்தலியின் சார்பில் வைசிராயர் அஃப்தல் ஷாஹென்ஷாவின் அதிகாரத்திலிருந்த ஜெருசலம் 1073 ல் (1076 ஆகவும் இருக்கலாம்) செல்ஜுக்குகள் வசம் போனது. செல்ஜுக்குகளின் சிறிய பழங்குடியினரான அர்துகிட்களின் அதிகாரத்தி லிருந்த ஜெருசலத்தை மீண்டும் 1098 ல் சிலுவைப் போராளிகள் வரும் சமயத்தில் ஃபாத்திமிட்கள் கைப்பற்றினார்கள். சிலுவைப்போரின் காரணத்திற்கு ஜே ரூபென்ஸ்டீன், ஜெர்மனியின் கார்ல் எர்ட்மன், ஸ்பிராஸ் ரையோனிஸ், ஸ்டீவன் ருன்சிமன், மோஷி கில், தாமஸ் அஸ்ப்ரிட்ஜ், தாமஸ் மட்டன், கிறிஸ்டோபர் டயர்மேன், ஜோனாதன் ரிலெய் ஸ்மித், பீட்டர் ஃப்ரான்கோபன், வில்லியம் ஆகியோர் பல ஆவணங்களை ஆராய்ந்து பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். சிலுவைப் போர்கள் 11 ம் நூற்றாண் டில் ஐரோப்பாவில் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளை மாற்றியது. செல்ஜுக்குகள் கான்ஸ்டாண் டிநோபிளுக்கு அருகில் மேற்கில் நிகாயா வரை முன்னேறி இருந்தார்கள். இதனால் 1095 மார்சில் பைஸாந்தியப் பேரரசர் கோம்னினோஸ் முதலாம் அலெக்சியஸ் துருக்கியர்களுக்கு எதிராக உதவுமாறு போப் இரண்டாம் அர்பனை பியாசென்ஸா என்ற அமைப்பின் மூலம் அணுகினார். முதல் சிலுவைப் போர் பைஸாந்தியப் பேரரசர் கோம்னினோஸ் முதலாம் அலெக்சியசின் வேண்டுகோள்படி உதவுவதற்காக வந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக