சனி, 8 ஆகஸ்ட், 2015

ஃப்ரான்சின் வரலாறு

ஃப்ரான்சின் வரலாறுகூ.செ. செய்யது முஹமது
ஐரோப்பாவின் கிழக்கில் வாசனைமிகுந்த தீவுகளில் இருந்து வாணிபத்தின் மூலம் செல்வச்செழிப்புடன் விளங்கிய போர்சுகல் நாட்டின் மீது அதே ஐரோப்பாவின் வடஅட்லாண்டிக் பகுதியில் இருந்த இரு மன்னராட்சியின் பொறாமை கண்கள் விழுந்தன. கண்களுக்குச் சொந்தமான மன்னராட்சிகள் ஃபரான்சும், இங்கிலாந்தும் ஆகும். இதில் ஃப்ரான்சு முந்திக்கொண்டு ஒரு பானை குள்ளே விழுந்த தங்கத்தைத் தேடுவதைப் போல் மேற்குப்புறத்தில் வழி தேடியது. 1534 ல் ஃப்ரான்சு மன்னன் முதலாம் ஃப்ரான்சிஸ் என்பவன் ஜாக்வெஸ் கார்டையர் என்பவனுடன் அறுபத்தோரு ஆட்களையும் உடன் அனுப்பி, அமெரிக்காவின் மேல்புறம் வடமேற்கில் அட்லாண்டிக்கடலை இணைக்கும் வழி உண்டா என்று ஆராயச்சொன்னான். ஜாக்வெஸ் கார்டையர் தனது பயணத்தில் செயிண்ட் லாரன்ஸ் என்னும் ஆறு மகத்தான நுழைவாயிலாக கண்டத்தில் இணையும் என்ற அபாரமான நம்பிக்கையில் அடுத்த கோடைகாலத்தில் மீண்டும் பயணிக்கலாம் என்று திரும்பி வந்துவிட்டான். வந்தவன் மன்னன் முதலாம் ஃப்ரான் சிஸை மொத்த பகுதியையும் ‘நியு ஃபரான்ஸ்’ என்று பெயரிட வேண்டும் என்று வேண்டுகோள் விட்டான்.
1535 ல் ஜாக்வெஸ் கார்டையர் மீண்டும் பயணத்தைத் துவக்கி தனது நீண்ட படகை செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் வெகுதூரம் பயணிக்க விட்டு ஹுருன்இந்தியர்கள் வசப்படுத்தி வைத்திருந்த ஒரு தீவை அடைந்தான். அத்தீவு மக்கள் அவனை வரவேற்று தீவின் உச்ச பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். ஜாக்வெஸ் கார்டையர் அந்த தீவுக்கு மோண்ட்ரியல் அல்லது மவுண்ட் ராயல் என்ற பெயரைச் சூட்டினான். ஜாக்வெஸ் கார்டையர் மூன்றாம் முறையாக பயணித்து ஒரு காலனியைத் தேடினான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் அந்த ஆற்றின் பகுதியில் ஃப்ரென்சு இறகு வாணிபம் செய்பவர்களைக் கண்டுபிடித்தான். 1611 ல் சாமுவேல் டி சாம்ப்ளியன் என்பவன் ஹுருன் இந்தியர்கள் வாழும் தீவிலேயே குடியேற்றம் செய்தான். இதே சாம்ப்ளியன் மூன்று ஆண்டுகளுக்கு முன் க்யூபெக் என்னும் குடியேற்றப்பகுதியை நிர்மாணித்திருந்தான். அதற்கு ஜாக்வெஸ் கார்டையர் முன்னர் மேற்கொண்ட கிழக்கு நோக்கிய ஒரு பயணமே அடிப்படையாக இருந்தது. ஆனால், ஃப்ரான்சு பேரரசு மேற்கில் அமைந்திருந்தது.
க்யூபெக் நிறுவனர் சாமுவேல் டி சாம்ப்ளியன் 1608 ல் ஹுருன் இந்தியர்களின் உதவியுடன் ஃப்ரென்ச் இறகு வாணிபத்தை தொடங்கினான். ஆனால், வெகு தாமதமாகவே முன்னேற்றம் கண்டது. 1635 ல் சாமுவேல் டி சாம்ப்ளியன் மரணமடையும் காலத்தில் க்யூபெக்கின் மக்கள்தொகை நூறுக்குள் தான் இருந்தது. இது ரிசெலியூ என்பவருக்கு சுய ஈடுபாட்டை உண்டாக்கியது. 1627 ல் ரிசெலியூ நியு ஃப்ரான்சில் நூறுபேர் அடங்கிய குழு ஒன்றை ஏற்படுத்தினார். அதில் அப்போது சாம்ப்ளியனும் ஒருவராய் இருந்தார். இவர்கள் வருடத்திற்கு இருநூறு நபர்களை அந்த தீவில் குடியேற்றம் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் அவர்களால் திட்டமிட்டபடி செயல்படமுடியவில்லை. 1660 ல் நியுஃப்ரான்ஸில் 2300 ஐரோப்பியர்கள் மட்டுமே குடியமர்த்தப்பட்டனர். இடையில் ஹுருன் இந்தியர்கள் 1648-1650 களில் மேற்கு நோக்கி இரோக்கோயிஸ் என்ற இடத்திற்கு புலம் பெயர ஆரம்பித்ததால், ஃப்ரென்ச் இறகு வியாபாரிகளுக்கு மூலப்பொருள்களை செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 1660 ல் குடியேற்றவாசிகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் பதினைந்தாம் லூயிஸ் நியு ஃப்ரான்ஸை ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
அப்போதிருந்து நியுஃப்ரான்ஸுக்கு கவர்னரை நியமித்து இராணுவம், கல்வி, மதம், மருத்துவம் போன்ற அனைத்து வசதிகளும் ஃப்ரான்ஸ் பேரரசு மூலம் கிடைக்கச்செய்தார். இந்த புதிய தீர்மானத்தின் அதிவேக வளர்ச்சியினால் 1660 ல் மட்டும் 3000 க்கும் மேற்பட்டவர்கள் குடியேறினார்கள். இதில் திருமணப்பருவத்தில் உள்ள பெண்களும் சராசரியாக இருந்தனர். அடுத்த பத்தாவது ஆண்டில் நியுஃப்ரான்ஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் கிரேட் லேக் பகுதியின் தென் மற்றும் மேற்கு திசைகளின் மக்கள் குடியேற விரைந்தனர். 1668 ல் ஜிஷுட் சேவை மையம் மேற்கு கிரேட் ஏரியில் குடியேற்றவாசிகளுக்காக சால்ட் செயிண்ட் மேரீ என்ற மூன்று சேவை மையத்தைத் துவக்கியது. இந்த அறிவுபூர்வமான திட்டம் 1671 ல் மொத்த அமெரிக்க கண்டத்தின் உள்பகுதிக்கும் மன்னனாக ஃப்ரென்ச் மன்னன் விளங்கினான். 1660 ன் இறுதியிலும், 1670 லும் வட அமெரிக்காவின் மத்தியப் பள்ளத்தாக்கில் நீரால் சூழப்பட்ட ஒஹியோ, மிஸ்ஸிசிப்பி மற்றும் மிஸ்ஸௌரி ஆறுகளுள்ள பகுதிக்கு முதல்முதலாக ஐரோப்பியர்கள் தான் வருகை தந்தார்கள். இந்த முன்னேற்றம் நேரடியாக நியு ஃப்ரான்சின் வளர்ச்சிக்கு நல்ல பலனைத் தந்தது. மேலும் ஃப்ரென்சுக்காரர்கள் கிரேட் லேக்கின் நீர் பாயும் தென்புறம் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். கிழக்கில் அருகிலுள்ள பெரிய ஆறும், முதலில் கவனத்தைக் கவர்ந்ததும் ஒஹியோ தான்.
1669 ல் ராபர்ட் டி ல சல்லி என்பவர் ஒரு பயணத்தின் போது இதைக்கண்டுபிடித்தார். பின்னால் ஃப்ரான்ஸ் ஒஹியோவை உரிமை கொண்டாட அதுவே ஆதாரமாக இருந்தது. அடுத்த நான்காண்டுகள் கழித்து 1673 ல் சால்ட் செயிண்ட் மேரீயின் நிறுவனர் ஜாக்வெஸ் மார்க்வெட், ஜிசெட்டின் பாதிரியார், லூயிஸ் ஜுலியட், ஒரு வியாபாரி ஆக ஐந்து நபர்கள் ஒரு குழுவாக இரண்டு துடுப்பிடும் படகில் மிச்சிகன் ஏரியில் பயணித்தார்கள். பசுமைக்கரைப் பகுதியில் இருந்து ஃபாக்ஸ் ஏரி நோக்கி செல்கையில் விஸ்கான்சின் மற்றும் மிஸ்ஸிசிப்பி ஆகியவற்றை அடையாளம் கண்டனர். மிஸ்ஸிசிப்பியின் கீழ்புறத்திலிருந்து அர்கன்சாஸ் ஆறு சேருமிடம் வரை சென்ற அவர்கள் அந்த ஆறு பசிபிக் கடலில் இருந்து வரவில்லை மெக்சிகோ வளைகுடாவிலிருந்து பாய்கிறது என்று விளங்கி கொண்டு மிச்சிகன் ஆற்றை நோக்கி திரும்பிவிட்டார்கள். இவர்களின் தகவலால் ஈர்க்கப்பட்ட ல சல்லி என்பவர் மிஸ்ஸிசிப்பியின் நுழைவாயிலை கண்டுபிடிக்க மிகவும் ஆர்வம் கொண்டார். இரண்டுமுறைப் பயணித்து பெரும் தோல்வியைச் சந்தித்து மூன்றாம்முறை பல இழப்புகள், பொருளாதார சிரமங்களுக்கிடையில் 1682 ல் தன் காரியத்தில் வெற்றிபெற்று அந்த மாபெரும் ஆற்றின் நுழைவாயிலை ஃப்ரான்சுக்கான வழியாக கண்டுபிடித்தார். அந்த பகுதியை மன்னன் பதினைந்தாம் லூயிஸின் நினைவாக ‘லூஸியானா’ என்று பெயரிட்டார். பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஃப்ரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இடையே ஒஹியோ பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.
மேலும், வடக்கின் நீர்நிலைகளில் செயிண்ட் லாரன்ஸ் ஏரியின் வழியாக கடலை அடைவதில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஃப்ரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இடையே மோதல் இருந்தது. கௌரவத்திற்காகவும், வாணிபத்திற்காகவும் மட்டுமில்லாமல் இந்த பகுதியில் கிடைத்துக்கொண்டிருந்த காட் என்னும் மீன் வளத்திற்காகவும் போட்டி இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் தென்பகுதி நிலப்பரப்பு ஃப்ரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இடையே பலமுறை கை மாறியது. ஃப்ரான்ஸ் அந்தப் பகுதியை அகாடியா(அமெரிக்க இந்தியர்கள் பெயர்) என்றும், பிரிட்டன் நோவா ஸ்காடியா (நியு ஸ்காட்லாந்து) என்றும் அழைத்துக் கொண்டன. நியுஃபௌண்ட்லாந்தில் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சிறு சிறு சண்டைகள் இருநாடுகளுக்குமிடையே நடந்தன. 1713 ல் உட்ரெக்ட் உடன் படிக்கையில் (ஃப்ரான்சுக்கு மீன் பிடிக்கும் அதிகாரம் மட்டும் தந்துவிட்டு) அது பிரிட்டனுக்கு சாதகமாக ஆகியது. கேப் ப்ரீடன் என்ற இடத்தில் தனது கப்பல் படையை பாதுகாக்க ஃப்ரான்ஸ் லூயிஸ்பர்க் என்ற பலம்வாய்ந்த கோட்டையை கட்டி இருந்தது. இதை ஆஸ்டிரியன் போரில் இங்கிலாந்து கைப்பற்றி இருந்தது. இதை ஃப்ரான்சிடமே மீண்டும் ஒப்படைத்துவிட்டு, ஈடாக இந்தியாவின் மதராஸ் மாகாணத்தை பிரிட்டனுக்கு திருப்பித் தந்துவிட ஒப்பந்தமாகியது. 1754 ல் அமெரிக்க ஒஹியோ பள்ளத்தாக்கிற்காக ஃப்ரான்சும், பிரிட்டனும் சண்டைபோட ஆரம்பித்தன. இந்த சண்டை இந்தியாவில் பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனிக்கும், ஃப்ரான்சுக்கும் இடையில் நடந்தது. இது பெரிய வாணிபப்போட்டியாகவும் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக