செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 3


பயேஸிட் கிழக்குப் பகுதியின் எல்லைகளை பலப்படுத்தினார். மன்னன் சிஜிமுண்ட் ஆட்சியிலிருந்த ஹங்கேரியுடன் போர் தொடுத்தார். ஹங்கேரிய இராணுவம் பலம் வாய்ந்ததாக, பிரென்சு மன்னரால் பகுதியாக பிரிக்கப்பட்டு கையாளப்பட் டது. 1396 ல் நிகோபோலிஸ் என்ற இடத்தில் பலமாகத் தோற்கடிக்கப்பட்டது. உண ர்ச்சிவசப்பட்ட பிரென்சு மன்னன் உடனே போரைத்துவக்கி, ’எங்கள் மண்ணில் துருக்கிகளின் முகத்தில் எச்சில் துப்ப முடியவில்லை என்றால், அந்த சொர்க்கம் இடிந்து விழுந்துவிடும்’ என்று கொக்கரித்தான். அதற்கு பயேஸிட் அமைதியாக, ‘நிறுத்து ஆடம்பரப் பேச்சுக்காரனே, விரைவில் தூய பீட்டரின் பலிபீடத்தில் எனது குதிரைக்கு நான் ஓட்ஸ் அருந்தக் கொடுப்பேன்’ என்றார். போரில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஹங்கேரிய வீரர்கள் ஓட்டோமான்களால் கைது செய்யப்பட்டார்கள்.
ஆரம்பத்தில் ஓட்டோமான் அரசு பலம்பெற சாதாரண அரசாக அமைந்து ‘மில்லத்’ என்னும் சட்டம் மூலம் யார் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அந்த மத கொள்கைகளையே கடைபிடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தது. உஸ்மான் இறந்த பிறகு ஓட்டோமான் ஆட்சி கிழக்கு மெடிட்டரேனியன் மற்றும் பால்கன் வரை பரவியது. ஏற்கனவே புஸ்ரா நகரை இழந்த தால் வடமேற்கு அனடோலியாவின் முழு கட்டுப்பாட்டையும் பைஸாந்திய சாம்ராஜ்ஜியம் இழந்தது. 1387 ல் வெனீஷியர்களிடமிருந்து முக்கியமான நகரமான தெஸ்சலோனிகியைக் கைப்பற்றியது. 1389 ல் கொஸோவோ நகரைக் கைப்பற்றி செர்பிய அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஐரோப்பிய கண்டத்தில் காலூன்றியது.
1396 ல் பெரிய படையுடன் சென்று நிகோபோலிஸ் என்ற இடத்தில் தோற்றுப் போனதில் ஓட்டோமானின் வளர்ச்சி தடைபட்டது. அந்த போரில் ஹங்கேரி, பல்கேரியா, வல்லாச்சியா, ஃப்ரான்ஸ், பர்கண்டி மற்றும் ஜெர்மனி படைகள் கூட்டு சேர்ந்து வெனீஷிய கடற்படையின் ஒத்துழைப்புடன் ஒருபுறமும், ஓட்டோமான்கள் படைகள் ஒருபுறமும் நின்றன. இந்த போரில் நிறைய அரசியல் சூழ்நிலைகள் இருந்தன. வெனிஷிய பகுதிகள் இணைந்த மோரியா மற்றும் டால்மாடியா சேர்ந்த பால்கன் ஓட்டோமான்கள் வசம் இருப்பது அட்ரியாடிக், ஐயோனியன் மற்றும் ஏஜியன் கடல் பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தைக் கட்டும் படுத்தும் என நினைத் தது. இன்னொருபுறம் ஜினோவா தனுப் ஆறும், துருக்கிய மலைப்பகுதிகளும் ஓட்டோமான் வசம் இருப்பது தனது ஐரோப்பிய, கருங்கடல் வாணிபத்தை சிதைக்கும் என எண்ணியது. மேலும், போப் போனிஃபேஸ் கிறிஸ்தவர்களை துருக்கிகளை எதுர்த்து சிலுவைப்போர் புரிய அறைகூவல் விடுத்திருந்தார். இதுபோல் இந்த போரில் கூட்டாகக் கலந்து கொண்டிருந்த நாடுகளுக்கு ஆளுக்கொரு கார ணம் இருந்தது.
இந்த நிகோபோலிஸ் போரில் இருபுறமும் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கை பற்றி அந்தந்த நாடுகளுக்கேற்றவாறு பல கருத்துகள் உண்டு. இறுதியாக, 1999 ன் படி ஓட்டோமான் வீரர்கள் 15,000 பேரும், எதிரணியினர் 16,000 வீரர்களும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இது 200,000 மேலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஓட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நிலப்பரப்புகள் பைஸாந்திய பேரரசிடமிருந்து கைப்பற்றியது. 1400 ல் ஓட்டோமான்களுக்கு பரிசு போல் கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றி கொள்ளப்பட்டது. ஆனால், மறுபுறம் பூதாகரமாக மத்தியஆசியாவிலிருந்து வந்த பழங்குடியின தைமூர் மன்னன் இந்தியா விலிருந்து ரஷ்யா வரை வெற்றிகளும், அழிப்புகளும் நடத்தி முன்னேறி வந்து கொண்டிருந்தான். 1402 ல் அவன் ஓட்டோமான் இராணுவத்தை அங்காரா என்ற இடத்தில் நாசப்படுத்தினான். பால்கனிலும், அனடோலியாவிலும் அவனின் ஆக்கிரமிப்பும், கொள்ளைகளும் ஏறக்குறைய பதினோரு ஆண்டுகள் இருந்தன. சுல்தான் பயேஸித்தை கைது செய்து கூண்டில் அடைத்து அவர் மரணமாகும் வரை வைத்திருந்து தனது வெற்றியின் அடையாளமாகக் காட்டிக்கொண்டான். தைமூரியர்களின் எண்ணம் நாட்டைப் பிடிக்க வேண்டும் என்பதல்ல அவர்கள் வந்தார்கள், கொன்றார்கள், கொள்ளையடித்தார்கள் சென்றார்கள். சுல்தான் இறந்துபோன பின்பு பேரரசு அழிந்து போனது.
பின்பு அடுத்து வந்த சுல்தான் முதலாம் மெஹ்மெத் என்பவர் தன் சகோதரர்க ளுடன் உள்நாட்டு குழப்பங்களை சமாளித்து பதவிக்கு வந்தார். 1402 ல் மங்கோலிய மன்னர் தைமூருடன் நடந்த அங்காரா போரில் தோற்க பயேஸிட்டையும், சகோதரர் முஸ்தஃபாவையும் சமர்கண்டுக்குப் பிடித்துச் சென்றார்கள். மற்ற சகோதரர்களை பயேஸிட் பாஷா என்பவர் காப்பாற்றி, முதலாம் மெஹ்மெத்தை  சொந்த ஊரான அம்ஸ்யாவில் வைத்துக் காப்பாற்றினார். இதனால் மெஹ்மூத் தான் ஆட்சிக்கு வந்தவுடன் பயேஸிட் பாஷாவை தலைமை வைஸிராயராக பதவி அளித்தார். நாட்டைப் பிரித்துக்கொடு என்று உள்நாட்டு சண்டையிட்ட சகோதரர்கள் சுலைமான், இஸா, மூஸா ஆகியோரை வெற்றி கொண்டு கொன்று போட்டார். முஸ்தபாவை பைசாந்திய மன்னன் இரண்டாம் மானுவேல் மூலம் சிறைபிடித்து லெம்னோஸ் தீவுக்கு அனுப்பினார். ஷெய்க் பத்ருத்தீன் என்ற சூஃபி ஒருவர் மிகவும் பிரபலமாகி, நாளடைவில் கலவரங்களை உண்டாக்கினார். அவரை செர்ராஸ் என்ற இடத்தில் கைது செய்து தூக்கிலிட்டார். நிலையான ஒட்டோமான் ஆட்சியைக் கொண்டுவர பெரும்பாடுபட்டார். ஓட்டோமான்களின் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக வித்திட்டார். புஸ்ராவில் பச்சை மசூதி ஒன் றைக் கட்டினார். பாட்டனார் முதலாம் முராதால் துவங்கப்பட்டிருந்த இன்னொரு மசூதியையும் கட்டி முடித்தார். பின்னாளில் இறந்த பிறகு, அதே பச்சை மசூதி யின் வளாகத்தில் நினவிடம் எழுப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் இரண்டாம் முராத் மூலம் மெதுவாக தலைதூக்கி ஆசிய மைனர் மற்றும் ஐரோப் பாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக