பால்கன் பகுதியின் சில நகரங்களான தெஸ்சலோனிகி, மாஸிடோனியா மற்றும் கொஸோவா போன்றவற்றை ஓட்டோமான் பேரரசு 1402 ல் இழந்தது. 1430 லிருந்து 1450 க்குள் இரண்டாம் முராதால் மீண்டும் வெற்றி கொள்ளப்பட்டது. 1444 ல் இரண்டாம் முராத் ஆட்சிக்கு வந்து “அஸெப்” என்னும் புதிய இராணுவ அமைப்பை ஏற்படுத்தி, ஹங்கேரியன், பாலிஷ்கள் மற்றும் போலந்தின் மூன்றாம் வ்லாடிஸ்லாவ் (இவன் ஹங்கேரிக்கும் மன்னனாய் இருந்தான்) வின் வல்லாச்சியர்கள் ஆகியோ ரை வென்றார். வர்னாபோர் என்ற போரில் ஜானோஸ் ஹுன்யாதி என்பவனை யும் வென்றார். இந்த ஜானோஸ் ஹுன்யாதி அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து ஹங்கேரியர்கள் மற்றும் வல்லாச்சியர்களுடன் இணைந்து வந்து ஓட்டோமான்களை எதிர்த்தான். இரண்டாம் கொஸோவோ போரில் இரண்டாம் முராதின் மகன் இரண்டாம் மெஹ்மூத் 1448 ல் தோற்கடிக்கப்பட்டான். இருபத்தோரு வயதான வீரமிக்க இரண்டாம் மெஹ்மெத் 1453 மே 29 ல் கான்ஸ்டாண்டிநோபிளை வென்றார். வெனிஷிய வணிகர்கள் தரை மார்க்கமாக கான்ஸ்டாண்டிநோபிள் செல்லும் வழிகள் ஓட்டோமான்கள் வசம் இருந்ததால், கடல் வழியாக வாணிபம் செய்து வந்தார்கள். இரண்டாம் மெஹ்மெத் கடற்படைகளை அழைத்து கான்ஸ் டாண்டிநோபிள் துறைமுகம் செல்லும் கப்பல்களைத் தடுத்து 50 நாட்கள் தொடர் ந்து போரிட்டார். கான்ஸ்டாண்டிநோபிளை காக்க பைஸாந்தியர்கள் கடுமையாக போரிட்டு தோற்றது சரித்திரப்புகழ் வாய்ந்தது. இந்தப் போரில்தான் முதல் முதலாக வெடிமருந்து பொருட்கள் கையாளப்பட்டன. ஓட்டோமான்களின் ஆட்சியை இரண்டு காலகட்டமாகப் பிரிக்கலாம். ஒன்று 1566 க்கு முன்பு நிலப்பரப்பை விரிவாக்கியது, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம். இன்னொன்று இராணுவம், அரசியலமைப்பு ஆகும்.
இரண்டாம் மெஹ்மூதின் கான்ஸ்டாண்டிநோபிளின் வெற்றியால் பைஸாந்தியர் களின் சாம்ராஜ்ஜியம் முடிவுற்றது. அதுவரை சுன்னி பிரிவு முஸ்லீம்களின் தலைமை இடமாக இருந்த பாக்தாத் மாற்றப்பட்டு கான்ஸ்டாண்டிநோபிள் (இஸ்தான் புல்) தலைமை இடமானது. மேலும் அந்த வெற்றி தென் கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதிகளில் ஓட்டோமான்களின் நிரந்தர பேரரசுக்கு வித்திட்டது. கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றிக்குப் பிறகு, இரண்டாம் மெஹ்மூத் கிறிஸ்தவ போதகர் ஜென்னடியோசை சந்தித்து ஆர்தடக்ஸ் தேவாலயம் கட்டிக்கொள்ளவும் மத விஷயங்களில் சுயமாக செயல்படவும் ஒப்புதல் அளிப்பதாகவும், தங்கள் ஓட்டோமான் ஆட்சியை ஏற்றுக் கொள்ளுமாறும் கூறினார். பைஸாந்தியர்களாலும், மேற்கு ஐரோப்பியர்களாலும் (கிறிஸ்தவர்கள்) தரமற்று நடத்தப்பட்டதாலும், பெரும்பான்மையோர் ஆர்தடக்ஸ் கிறிஸ்தவர்களாக இருந்த தாலும், லூகஸ் நோடரஸ் என்பவர் ‘ரோம கிறிஸ்தவ தலைவர்களின் தொப்பிக்கு பதில் சுல்தான்களின் தலைப்பாகை எவ்வளவோ தேவலாம்’ என்று வெளிப் படையாக அறிவித்துவிட்டு ஆதரவு தெரிவித்தார்.
இரண்டாம் மெஹ்மூத் கான்ஸ்டாண்டிநோபிளை 1453 ல் ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாக்கினார். சுல்தான் ‘கெய்செர் இ ரூம்’ என்று (அதாவது ரோமின் சீஸர் போல்) புகழப்பட்டார். இந்த புகழ்ச்சியின் காரணமாக இரண்டாம் மெஹ்மூத் எப்படியாவது ரோமப்பேரரசின் மேற்குத் தலைநகர் ரோம் நகரத்தை வெல்ல முடிவெடுத்தார். அதற்கான ஆரம்ப பணியாக அட்ரியாடிக் கடல்பகுதியை பலப்படுத்தி ஒட்ரண்டோ, அபூலியா பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். ஒட்ரண் டோ பகுதியில் ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்தார்கள். இடையி ல் இரண்டாம் மெஹ்மூத் 1481 மே 3 ல் மரணமடைந்தார். புதிய திட்டத்துடன் பிறகு, இத்தாலிய தீபகற்பத்தை முற்றுகை இடலாம் என்று படைகள் கிழக்கு அட்ரியாடிக் கடலுக்கு திரும்ப அழைக்கப்பட்டன.
இரண்டாம் மெஹ்மெதுக்குப் பிறகு, சுல்தான் முதலாம் செலிம் என்பவர் பதவிக்கு வந்து ஆட்சியர்களில் சக்திமிகுந்தவரானார். எகிப்தில் ஓட்டோமான்கள் ஆட்சியை நிறுவினார். ஷியா பிரிவைச் சேர்ந்த ஈரானிய பெர்ஷிய சஃபாவித்கள் அருகாமை நகரங்களிலும், ஓட்டோமான் மாகாணங்களிலும் பலம் பெற்று வந்தார்கள். அவர் கள் புதிய ஆட்சி வேண்டுமென்று ஊர்வலங்கள் நடத்தி வந்தார்கள். சுல்தான் முத லாம் செலிம் ஷியா பிரிவு ஷா இஸ்மாயிலை 1514 ல் சால்திரன்போரில் வென்று அவர்களை அடக்கினார். கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் பேரரசை விரிவு படுத்தினார். அதாவது, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் அரேபியா பகுதிகளை வென்றார். 1516 ல் ஓட்டோமான்கள் அலிப் போ மற்றும் டமாஸ்கஸ் நகரங்களைக் கைப்பற்றி மம்லுக்குகளை இராணுவம், அரசியல் என்று எதுவுமில்லாமல் செய்தார்கள். 1520 ல் சுல்தான் முதலாம் செலிம் மரணமடையும் போது, பேரரசு செங் கடலிலிருந்து க்ரிமியா வரையும், குர்திஸ்தானிலிருந்து போஸ்னியா வரையிலும் பரவி சர்வதேச அரசியலில் குறிப்பிடப்படும் உச்சத்தை அடைந்தது. சுல்தான் முதலாம் செலிமை சரித்திரத்தில் ‘பயங்கரமானவர்’ (THE GRIM) என்று குறிப்பிடுகிறார் கள்.
முதலாம் செலிமுக்கு பிறகு, வந்த முதலாம் சுலைமான் என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த ஓட்டோமான் பேரரசராக திகழ்ந்தார். இவரை சட்டம் கொடுத்தவர் என்று புகழ்ந்தனர். இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் ஓட்டோமான் பேரரசு நீண்ட போர்களையும், பேரரசை ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் விரிவுபடுத்துவதிலும் ஆர்வம் காட்டியது. சுலைமான் 1521 ல் பெல்கிரேடை வெற்றி கொண்டார். ஹங்கேரியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி களையும் வென்றார். 1526 ல் மொஹாக் போரில் வெற்றி கண்டு மேற்குப்பகுதி அல்லாமல் தற்போதைய ஹங்கேரி முழுவதையும் ஓட்டோமான்கள் பேரரசின் கீழ் கொண்டு வந்தார். இந்த போரில் ஹங்கேரியர்கள் இறந்துபோன மன்னரையும், தளபதிகளையும் போர்களத்திலேயே விட்டு விட்டு ஓடினார்கள். 1526 ல் செயிண்ட் ஜான் மன்னனிடமிருந்து ரோட்ஸ் தீவுகளை வென்றார். 1529 ல் வியன் னாபோரில் ஈடுபட்டு கடுமையான குளிர்காலமானதால் சுல்தான் போரை நிறுத் திக் கொண்டார். மீண்டும் 1532 ல் வியன்னாவின் மீது படையெடுத்து கூன்ஸ் போரில் ஈடுபட, ஆகஸ்டு மாத கடுமையான மழையால் கூன்ஸ் கோட்டையிலி ருந்து 97 கி.மீ தெற்கில் பின்னோக்கி வந்து விட்டார். 1535 ல் கிழக்கில் பாக்தாத், மெஸோபொடாமியாவைக் கைப்பற்றி பெர்ஷிய கடல்பகுதியை கட்டுப்படுத்தின. 1547 ல் ஹாப் ஸ்பர்கின் ஆட்சியாளர் ஃபெர்னாண்ட் ஹங்கேரியில் ஓட்டோமான் ஆட்சியை ஒப்புக்கொண்டார். சுலைமானின் ஆட்சியில் டிரான்சில் வேனியா, வல்லாச்சியா மற்றும் மோல்டாவியா ஆகியவை ஓட்டோமான்களுக்கு கப்பம் செலுத்த ஒத்துக்கொண்டன. ஓட்டோமான் கடல்படை கருங்கடல், ஏஜியன் கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடல்பகுதிகளின் வழியாக இத்தாலிய நகரங்களில் வாணிபம் செய்து வந்தது. அதேநேரத்தில் போர்ச்சுகீசியர்கள் செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வாணிபம் செய்து வந்தனர். நிலப்பகுதி வழியாக நகரங்களிலும் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையே வாணிபம் செய்து நல்ல பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. சுலைமானின் ஆட்சியின்போது பேரரசின் மொத்த மக்கள் தொகை 15,000,000 ஆக இருந்தது.
செலிம் மற்றும் சுலைமான் ஆட்சியில் கடற்படை வலுவாக இருந்து மொத்த மெடிட்டரேனியன் கடல்பகுதியும் ஓட்டோமான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. சுலைமானின் ஆட்சியில் ‘பார்பரொஸ்ஸா ஹைரெத்தீன் (கைரத்தீன்) பாஷா’ என்பவர் ஓட்டோமான் கடற்படைத் தளபதியாக இருந்தார். பார்பரொஸ்ஸா என்றால் இத்தாலியில் சிகப்பு தாடி என்று பொருள். இவர் சகோதரர் பாபா ஓருக் சிகப்பு தாடி வைத்திருந்தார். இந்த பாபா ஓருக் கிறிஸ்தவர்களிடையே பிரபல மாக இவரை பார்பரொஸ்ஸா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். தனது தந்தை க்கு மண்பாண்ட வியாபாரத்தில் உறுதுணையாக இருந்தார். தந்தையார் மண்பாண்டங்களை விற்பதற்கு ஒரு படகை வாங்கினார். அதனால் கடலில் நல்ல தேர்ச்சிபெற்றார். இத்தாலி, ஸ்பானிஷ், ஃப்ரென்ச், க்ரீக் மற்றும் அரபு மொழிகளை நன்றாக அறிந்திருந்தார். ப்ரிவிஸா போர் மற்றும் லெபாண்டோ போர் போன்றவற்றை வென்று பல கிறிஸ்தவ கடற்படைக்கு சிம்மசொப்பனமாக இருந்து, அவர்களைப் பலமுறை வெற்றிப் பெற்றார். ஸ்பெயினிலிருந்து மொரிஸ்கோ முஸ்லீம்கள் 70,000 பேரை ஏழுமுறை கடல்பயணமாக காப்பாற்றி இருக்கிறார். இவர் தலைமையில் ஓட்டோமான் கடற்படைகளின் வெற்றிகளைக் குறிப் பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 1516 மற்றும் 1529 அல்ஜீரியா, 1534 மற்றும் 1574 ல் ஸ்பெயினிடமிருந்து துனீஷியா, 1522 மற்றும் 1551 நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜான் என்பவரிடமிருந்து ரோட்ஸ் தீவு மற்றும் திரிபோலி, 1538 ல் பிர்வேஸா போர், 1552 ல் பொன்ஸா போர், 1560 ல் ஜெர்பா போர், ரோமப்பேரரசிடமிருந்து 1543 ல் நைஸ், ஜினோவாவிடமிருந்து 1553 ல் கோர்சிகா, 1558 ல் ஸ்பெயினிடமிருந்து பலியாரிக் தீவுகள், இந்தியப் பெருங்கடலில் போர்ச்சுகீசியர்களிடமிருந்து 1548 ல் ஏடன், 1552 ல் மஸ்கட், 1565-67 ல் அசெ ஆகியவை ஆகும். ஓட்டோமான்கள் கடற்படை என்றால் அந்தகாலகட்டத்தில் அலற வைத்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக