செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 9


எல்லா தேசங்களிலும் எழுந்த தேசியமயமாக்கல் எழுச்சி ஓட்டோமான் ஆளும் மாகாணங்களிலும் எழுந்தது. இவர்கள் வளரும் சூழ்நிலைக்கேற்ப கலாச்சாரம் சார்ந்த தேசியமாக்கல் வேண்டி, மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி (அதா வது கிறிஸ்தவ) செய்துகொண்டார்கள். எல்லை தாண்டி வந்த இந்த கலாச்சாரத் திற்காக பல உள்ளூர் அரசியல் கட்சிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை புரட்சி செய்தன. 1804 ல் செர்பியர்கள் பேரரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட ஓட்டோமான்கள் பால்கனை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே சமகாலத்தில் நெப்போலியன் படையெடுப்பும் நடந்தது. 1817 ல் செர்பிய புரட்சி முடி வுக்கு வர தனியாக ஆட்சி அமைத்து பெயரளவில் சுஸெரியண்டி ஓட்டோமான் இருந்தது. 1821 ல் ஓட்டோமான் பேரரசிலிருந்து முதல் முறையாக ஹெல்லெனிக் முழு சுதந்திரம் அடைந்தது.
தான்ஸிமட்களின் மாற்றம் தனூப் மற்றும் செர்பிய பிரிவினரின் தேசியமாக்கும் எண்ணத்தை தடுக்கவில்லை. அவர்கள் 60 ஆண்டுகளாகவே பாதி சுதந்திரமாகத்தான் இருந்தார்கள். 1875 ல் மோண்டினிக்ரோ, வல்லாச்சியா, மோல்டாவியா மற் றும் ஒருங்கிணைந்த மக்கள் பெயரளவில் பேரரசுக்கு கட்டுப்படுவது போன்ற சுதந்திரத்தை அறிவித்தார்கள். 1877 ல் ரஷ்யா துருக்கிப்போரின் போது ஓட்டோமான் பேரரசு மேற்சொன்ன  பிரதேசங்களுக்கும், பல்கேரியாவுக்கும் சுதந்திரம் அறிவித்தது. பல்கேரியா போரின் போது தேசிய புரட்சிக் குழுவுக்கு ஆதரவாக இருந்தது. 1878 ல் பெர்லின் காங்கிரசின் பெரியதலைவர் அதிகாரமிக்க ஐரோப்பியாவையும் ஓட்டோமான் பேரரசையும் சந்தித்தார். வெற்றி பெற்றிருந்த ரஷ்யா வையும் ஆர்தொடக்ஸ் கிறிஸ்தவர்களையும் பால்கனில் நிலையான ஒரு அரசை நிறுவ அவசரப்படுத்தினார். ஜெர்மனியின் அதிபர் ஓட்டோவான் பிஸ்மார்க், எதிர்காலத்தில் பெரியபோர் ஏற்படாமலும், அதேநேரத்தில் ஓட்டோமான் அதிகாரத்தைக் குறைத்து, மற்றவர்களின் அதிகாரம் அதிகம் இருப்பதுபோல் பல்கேரியாவை அமைத்தார். ஓட்டோமான் பேரரசுக்குள்ளேயே பல்கேரியா ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் நிலப்பரப்பு முழுமையாக கொடுக்கப் படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்கேரியா ருமேலியா பகுதியை இழந்தது. ருமேலியாவை ஓட்டோமான் பேரரசு தனி நிர்வாகம் அமைத்து பார்த்துக் கொண்டது. அதே போல் மாசிடோனியாவுக்கும் தனி நிர்வாகம் அமைப்பதாகக் கூறியது. ருமேனியாவும் சுதந்திரம் அடைந்தது. ஆனால், பெஸ்ஸராபியா என்ற பகுதி ரஷ்யாவிடம் சேர்ந்தது. செர்பியாவும், மோண்டினிக்ரோவும் குறைவான பகுதிகளுடன் முழுச் சுதந்திரம் பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக