செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 7


பதினாறாம் நூற்றாண்டில் ஓட்டோமானின் கடற்படைக்கு வளர்ந்து வரும் மேற்கத்திய ஐரோப்பாவின் கடற்படைகள் சவாலாக இருந்தன. குறிப்பாக, ஸ்பைஸ் தீவுகள், இந்தியப் பெருங்கடல் மற்றும் பெர்ஷியன் வளைகுடாவில் போர்சுகல் லின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஓட்டோமான்களால் தடைசெய்து வைக்கப்பட்ட தென் மற்றும் கிழக்கு கடல்பகுதிகள் அல்லாமல், ஐரோப்பியர்கள் பயன்படுத்திய புராதன கடல் வழியான சில்க் மற்றும் ஸ்பைஸ் கடல்பகுதிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நிலப்பரப்பில் ஆஸ்ட்ரியாவிலும், பெர்ஷியாவிலும் ஒரே சமயத்தில் போர் நடத்தி இராணுவ நடமாட்டத்தை வைத்திருந்தது. இந்த குழப்பங்களினால், நீண்டதூர வாணிபத்திற்கும், தொட ர்புகளுக்கும் உலக அரங்கில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதற்கு தெற்கிலும், கிழக்கிலும் கடல்பகுதியில் இராணுவ நடவடிக்கை எடுத்து ஓட்டோமான் கடற்படையை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜானிஸ்ஸரிஸ் இராணுவ ஆட்சியில் மிகச் சிறப்பான மந்திரியாக மெஹ்மெத் கொப்ருலு என்பவர் இருந்தார். திறமையாக செயல்பட்டு ஊழல்களைத்தடுத்து பழைய ஓட்டோமான் பேரரசின் ஆட்சியைக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். ஐரோப்பாவின் ஆக்கிரமிப்பிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு பாதுகாப்பு கொடுத்தார். நீதியும், நேர்மையுடன் ஆட்சி செய்தார். பதவிக்கு வந்த மிகக்குறிகிய காலத்தில் இவர் இறந்துவிட, இவரின் மைத்துனர் கரா முஸ்தபா என்பவர் இராணுவ ஆட்சியின் தலைமைக்கு வந்தார். கரா முஸ்தபா, கொப்ருலுவைப் போலவே திறமை வாய்ந்தவராக இருந்தார். இவர் மீண்டும் பேரரசை விரிவுபடுத்த விரும்பி ஆஸ்ட்ரியாவுடன் போரில் இறங்கினார். எப்படியேனும் ஆஸ்ட்ரியாவை வென்று விட வேண்டும் என்று 1683 ல் வியன்னா போரில் ஈடுபட்டார். ஆஸ்ட்ரியாவுக்கு ஐரோப்பிய படைகளின் ஆதரவு தந்ததாலும், பெருவாரியான வெடிமருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டதாலும் ஓட்டோமான்கள் தோல்வி அடைந்தார்கள். ஆனால், அதுவே மேற்படி ஓட்டோமான்கள் ஐரோப்பாவில் பரவ முடியாமல் போனதற்கு கடைசி போரானது.
கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையே வாணிபத்திற்கான ஓட்டோமான்களின் பாரம்பரிய நிலவழியின் ஆரம்பமாக மிக முக்கியமாக ‘சில்க் ரோடு’ இருந்தது. மேற்கத்திய ஐரோப்பிய மாகாணங்கள் அனைத்தும் ஒட்டுமொத் தமாக போர்ச்சிக்கீசியர்கள் கண்டுபிடித்த ஸ்பைஸ் ரூட் என்ற வழியைக் கண்டு பிடித்து, பாரம்பரிய ஓட்டோமான் கட்டுப்பாட்டில் இருந்த வழியைப் புறக்கணித்து ஆசியாவுக்கு புதிய கடல்வழியில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.  போர்ச்சுக்கீசியர்களின் புதிய கடல்வழியான அந்த ‘கேப் ஆஃப் குட்ஹோப்’ 1488 ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பதினாறாம் நூற்றாண்டு முழுவதும் இந்தியப் பெருங்கடலில் ஓட்டோமான், போர்ச்சுகீசிய கடற்படைகள் மோதிக்கொண்டன. ஓட்டோமான்களின் தனிப்பெருமை வாய்ந்த வாணிபம் போர்ச்சுக்கீசியர்களால் பாதிப்புக்குண்டானது. பொருளாதார ரீதியாக ஸ்பானிஷ் சில்வர் பெருவாரியாக புழக்கத்தில் விடப்பட்டு, ஓட்டோமான்களின் நாணயமதிப்பை சீர்குலைத்தது. ஓட்டோமான் பேரரசுக்கு இது பலத்த இழப்பாகிப் போனது.
நான்காம் இவான் என்பவரது ஆட்சியில் மஸ்கோவித் ரஷ்யா என்ற விரிவாக்கம் வோல்காவிலும், கஸ்பியன் பகுதியிலும் ததார்கானின் பொருளாதாரத்தில் நடந் தது. இதனால், ஓட்டோமான்களின் வடக்கு யாத்ரிகர்களுக்கும், வாணிபவழிக்கும் பெரும் சிரமமாக இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த சுல்தான் முதலாம் சுலைமானின் மகன் இரண்டாம் செலிம், சோகொல்லு மெஹ்மெத் பாஷா என்ற முக்கிய மந்திரி தலைமையில் டான்-வோல்கா என்ற கால்வாயை வெட்டிக் கொண்டே அஸ்ட்ரகான் என்ற இடத்தில் போரிட்டார். ஆனால், தோல்வியுற்று கால்வாய் பணியையும் நிறுத்திவிட்டார். இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் மீது படையெடுத்த க்ரிமியன்கான் தெவ்லெட் முதலாம் கிராய் என்பவரை தந்திரமாக ஓட்டோமான்கள் ஆதரித்தனர். க்ரிமியன்கான்கள் கிழக்கு ஐரோப்பாவில் தொடர்ந்து அடிமைத் தாக்குதல் என்ற பெயரில் தாக்கினார்கள். பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை மஸ்கோவிட் ரஷ்யாவுக்கு இந்த அச்சுறுத்தல் இருந்தது.
உதயமாகிக் கொண்டிருந்த பாரம்பரிய ஆஸ்ட்ரியன்கள் ஆட்சியும், வளர்ந்து வரும் ரஷ்ய பேரரசும் ஓட்டோமான் பேரரசுக்கு புதிய தலைவலியை உண்டாக்கியது. ரஷ்யாவில் பீட்டர் தி க்ரேட் புதிய நாட்டை உருவாக்கினார். 1689 ல் மாஸ்கோவில் பீட்டர் பால்டிக், பின்லாந்து வளைகுடா அதன் கரைகளில் ‘செயிண்ட் பீட்டர் ஸ்பர்க்’ என்ற நகரத்தை நிர்மாணித்து தலைநகரமாக்கினார். கடல்வழியை சுதந்திரமாக பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தார். பால்கனில் பெரும் நகரங் கள் ஓட்டோமான் வசம் இருந்தும் எகிப்து, அல்ஜீரியா போன்றவை பெயரளவில் சுதந்திரமாக இருந்தாலும் பிண்ணனியில் பிரிட்டனும், பிரான்சும் ஆதரவளித்துக் கொண்டிருந்தன. ரஷ்யாவின் அதிவேக வளர்ச்சி ஓட்டோமான் பேரரசுக்கு மிரட்ட லாக இருந்தது. 1709 ல் போல்டாவா போரில் ஸ்வீடனின் மன்னர் ஏழாம் சார்லஸ் ரஷ்யாவின் மீது போரிட்டு தோற்றார். கைதியாக பிடிபட விரும்பாமல் கமாண்டர் மாஸெப்பாவுடன் ஓட்டோமான் பேரரசில் அடைக்கலம் கோறினார். சுல்தான் மூன்றாம் அஹமது அடைக்கலம் கொடுக்க, ரஷ்யா அவர்களை ஒப்படைக்குமாறு கேட்டது. ஆனால், பேரரசு, உதவிகோரியவர்களுக்கு வரவேற்பு கொடுப்பது ஒவ்வொரு நாட்டின் உரிமை. அது இஸ்லாமிய வழிமுறையும் கூட’ என்று மறுத்து விட்டார். ஸ்வீடன் மன்னர் ஏழாம் சார்லஸ் ஓட்டோமான் சுல்தான் மூன்றாம் அஹ்மதுவை ரஷ்யாவுடன் போர் தொடுக்குமாறு வேண்டி, தானும் இணைந்து ரஷ்யாவை ப்ரூத் ஆறு போரில் வென்றனர். பின் பஸ்ஸரோவிட்ஸ் என்ற உடன் படிக்கை மூலம் போர் நிறுத்தப்பட்டது. சுல்தான் மூன்றாம் அஹமது துலிப் மலர் களைப் பெரிதும் விரும்பியதால் 1718 லிருந்து 1730 வரை துலிப் காலம் என்று பேரரசில் அழைக்கப்பட்டது. கலை, கலாச்சாரம், நுண்கலை ஆகியவை இவர் காலத்தில் வளர்ந்தன. டாப்காபி அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ‘அஹமது ஃபவுண்டன்’ என்ற நீர்தூவும் அமைப்பு மிகவும் புகழ்பெற்றது. துலிப் காலத்தில் புகழ் வாய்ந்த பிரான்சு ஓவியர் ஜீன் பாப்டிஸ்ட் வான் மோர் என்பவர் பேரரசுக்கு வருகைதந்து பல சிறப்பான ஓவியங்களை வரைந்திருந்தார். 1725 ல் ரஷ்யாவின் மன்னர் பீட்டர் இறந்தவுடன் அவர் மனைவி ஸரினா கேத்தரின் பதவிக்கு வந்தார். இவர் ஆஸ்ட்ரியாவுடன் இணைந்து 1735 லிருந்து 1739 வரை ஓட்டோமான் பேரரசு டன் போர் புரிந்தார். இறுதியில் ‘பெல்கிரேட் உடன்படிக்கை’ ஏற்பட்டு, செர்பியா மற்றும் லிட்டில் வலாச்சியாவை ஆஸ்ட்ரியாவிடவும், அஸோவ் என்ற துறைமுகத்தை ரஷ்யாவிடமும் இழந்தது. ஆனால், உடன்படிக்கை நீண்டகால அமைதிக்கு வித்திட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக