செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 8


இந்த அமைதியான சூழ்நிலையை பேரரசு மிக அற்புதமாக பயன்படுத்திக் கொண்டது. உயர்கல்வியிலும், தொழிற்துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. புகழ் பெற்ற இஸ்தான்புல் தொழிற் பல்கலைக்கழகத்தை நிறுவியது. விஞ்ஞா னம், இஸ்லாமிய மதக்கல்வி, கணிதம் போன்றவற்றிலும் வளர்ச்சிகண்டது. சீனர் களின் உதவியுடன் வெடிமருந்து தயாரிப்பதிலும், கந்தக திசைகாட்டியும் கண்டு பிடித்தது. பிரான்சு பயிற்சியாளர்களை வைத்து பீரங்கி போர்முறைகளை வீரர் களுக்கு கற்றுக்கொடுத்தது. அச்சக இயந்திரத்தை பிசாசுகளின் கண்டுபிடிப்பு என்று மேற்கத்திய எழுத்தாளர்கள் சம்மேளனம் ஏளனம் செய்து விலக்கியது. அச்சு இயந்திரத்தைக கண்டுபிடித்த ஜோஹன்னஸ் கூடென்பெர்கை ஓட்டோமான் பேரரசுக்கு வரவழைத்து, ஸ்பெயினின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பித்து பேரரசில் அடைக்கலமாகி இருந்த செபார்டிக் யூதர்களின் உதவியுடன் 1449 ல் உலகின் முதல் கூடென்பெர்க் அச்சகத்தை உருவாக்கியது. பதினெட்டாம் நூற் றாண்டு வரை அச்சகம் முஸ்லீம் அல்லாதவர்கள் தான் பெரும்பாலும் பயன் படுத்தினார்கள். கைகளால் எழுதி வந்த மதத்தலைவர்களிடமிருந்து வந்த எதிர் ப்பால் சுல்தான் மூன்றாம் அஹமது, முதெஃபெர்ரிகா என்பவரை மதம் தவிர்த்த புத்தகங்களை அச்சிடக் கேட்டுக்கொண்டார். முதெஃ பெர்ரிகா 1729 ல் முதல் புத்தகத்தை வெளியிட்டு, பின் 17 புத்தகங்களை 23 பகுதிகளாக வெளியிட்டார்.
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஓட்டோமான் பேரரசும், ரஷ்யாவும் நிறைய போர்களை சந்தித்தன. மேலும் வெளிநாட்டு அரசுகள் ஓட்டோமான் பிர தேசங்களைக் கைப்பற்ற ஆவல்கொண்டன. இதனால், பேரரசு ஐரோப்பிய நாடுக ளுடன் இராணுவக்கூட்டு ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயமானது. இடை யில் போனபார்ட் எகிப்திலிருந்து மம்லுக்குகளை வென்று அங்கு எகிப்தியர்களின் ஆட்சியை கொண்டு வர விரும்பினார். அதற்காக கெய்ரோவில் தாக்குதல் நடத்தி கொள்ளையடித்தார். மம்லுக்குகளை 1798 ல் பைரமிட் என்ற இடத்தில் வெற்றி பெற்றார். இராணுவ ஜெனரல்கள் இப்ராஹிமும், முராதும் எகிப்தின் சினாய் தீப கற்பத்திற்கு தப்பி ஓடினார்கள். போனபார்ட் கெய்ரோவைக் கைப்பற்றினார். அங்கி ருந்து நைல் நதியின் பகுதிகளைக் கட்டுப்படுத்த எண்ணினார். ஆனால், தொடர் ந்து மம்லுக்குகள் பிதூயின் பழங்குடியினரின் உதவியுடன் எதிர்த்து வந்தார்கள். 1799 ல் போனபார்ட் மாஸிடோனியாவைச் சேர்ந்த மெஹ்மெத் அலி என்ற ஓட்டோமான் அதிகாரியிடம் எகிப்தை மம்லுக்குகளிடமிருந்து முற்றுலும் கைப்பற்றக் கூறிவிட்டு பிரான்சுக்கு திரும்பிச் சென்றார்.
பேரரசில் முதல் தபால் நிலையம் 1840 ல் துவங்கப்பட்டது. 1876 ல் முதல் சர்வதேச தபால் பட்டுவாடா செய்யப்பட்டது. 1901 ல் முதல் பணபட்டுவாடா தபால் நிலையம் மூலம் செய்யப்பட்டது. ஓட்டோமான் பேரரசின் பிரதேசங்களைப் பிடிப்பதற்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆர்வமாய் இருந்தன. பிரிட்டனும், ஃப்ரான்சும் ஓட்டோமான் பேரரசுக்கு ரஷ்யாவை எதிர்ப்பதற்கு ஆதரவு அளித்தன. கருங்கடலின் கட்டுப்பாட்டைப்பிடிக்க ரஷ்யாவின் க்ரிமியன் தீபகற்பத்தில் போர் நடந்தது. அதல்லாமல் பல சிறிய தாக்குதல்கள் மேற்கு அனடோலியா, காகசஸ், பால்டிக் கடல், பசி ஃபிக் கடல் மற்றும் வெள்ளை கடல் ஆகிய பகுதிகளில் நடந்தன. இந்த போர்கள் முற்றிலும் நவீன முறையில் நடந்தன. அதாவது முதல் முறையாக போரில் இரயில்வே துறை மற்றும் தபால் துறைகள் பயன்படுத்தப்பட்டன.  1856 ல் பாரிஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட பின் பால்கன் தீபகற்பம் மற்றும் கருங் கடல் பகுதிகள் ஓட்டோமான்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. க்ரிமியன் போரினால், க்ரிமியன் டடார் பிரிவினர் 300,000 மக்கள்தொகையில் 200,000 பேர் டாரைட் மாகாணத்திலிருந்து ஓட்டோமான் பேரரசின் பகுதிக்கு அகதிகளாக ஓடினார்கள். அதேபோல் காகசஸ் போரிலும் 90% சதவிகித சிர்காஸியன் பிரிவு மக்கள் சொந்த இடங்களைவிட்டு ஓட்டோமான் பேரரசின் பகுதிக்கு குடியேறினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பால்கன், காகசஸ், க்ரிமியா மற்றும் க்ரீட் தீவுகள் போன்றவற்றிலிருந்து வந்து குடியேறிய பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் தான் தற்போதைய துருக்கியில் அடிப்படை மாற்றத்தை உண்டாக்கினார்கள். பொதுவாக இவர்களை “முஹாசிர்” என்று அழைத்தார்கள். 1922 ல் ஓட்டோமான் ஆட்சி முடிவுறும் போது பாதிக்கும் துருக்கிய மக்கள் ரஷ்யாவிலிருந்து வந்த முஸ்லீம் அகதிகள் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி யில் க்ரிமியன் டடார்கள் துருக்கியில் நவீன கல்விக்கு பாடுபட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக