செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 5


சுலைமானின் மிகப்பெரிய தோல்வி என்றால், 1565 ல் 50,000 வீரர்களுடன் கோடை காலத்தில் சென்று நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜான் என்பவருடன் மெடிட்டரேனி யன் பகுதியில் மால்டா போரில் ஈடுபட்டார். வெறும் 6000 மால்டா வீரர்கள் கடுமையாக போரிட்டுத் தடுத்து அந்த வருட செப்டம்பர் மாதம் வரை போரை நீட்டித்தனர். கோஸோ தீவு, செயிண்ட் எல்மோ கோட்டையைக் கைப்பற்ற வாய்ப்பு கிட் டியும் இறுதியில் முடியாமல் தோல்வி அடைந்து திரும்பினார்கள். 1556 ல் சுலைமான் இறந்து போனார். இவரின் பெருமை என்னவென்றால், சிறப்பான இஸ்லாமிய நகரங்கள் மக்கா, மதினா, ஜெருசலம், டமாஸ்கஸ், கெய்ரோ, துனிஸ் மற்றும் பாக்தாத் ஆகிய நகரங்கள் இவர் ஆட்சியின் கீழ் இருந்தது. மிகச்சிறந்த இஸ்லா மிய ஆட்சியாளராக இருந்தார் என்று இவரைப் புகழ்கிறார்கள். குறிப்பாக சட்டத் துறை முழுமையாக ஷரியத் அடிப்படையில் பாரபட்சமின்றி நேர்மையாக இருந் தது. இவரது ஆட்சியின் போதுதான் ஐரோப்பியர்கள் முதல்முதலாக இஸ்லாமிய ஆட்சிக்கு பயந்தது. கலை கலாச்சாரங்களைப் பேணிப்பாதுகாத்தார்.
சுலைமான் அவர்கள் தன்னைத்தானே பணிவோடு, இறைவனின் அடிமை, சக்தி வாய்ந்த இறைவனின் சக்தியாளன், பூமியில் இறைவனின் பணியாள், குர்ஆனின் வழிநடப்பவனும் அதை உலகம் முழுவதும் எத்திவைப்பவனும், மொத்த பூமியின் ஆட்சியாளன், சீஸர், அலெக்ஸாண்டரின் பூமியின் வெற்றியாளன், அனைத்து இஸ்லாமிய நாடுகளில் என் பெயர் கூறப்படுகிறது, ஹங்கேரியர்களின் கிரீடத்தை வெற்றி கொண்டு எனது கடைசி அடிமைக்குப் பரிசளித்தேன் என்று கூறிக்கொள்வார். இவரைப் பார்த்து அந்த காலகட்டத்தில் பொறாமைபடாத மன்னர்களே உலகில் அப்போது இல்லை. ஆம் உண்மை அதுதான் இறைவன் அப்போது சுல்தான் சுலைமானை ஆள்வதற்கென தேர்ந்தெடுத்திருந்தான். இன்றும் கூட பல இஸ்லாமிய நாடுகளில் இவர் பெயரில் தெருக்கள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் உள்ளன. ரோமப் பேரரசை தன் காலத்திலேயே மீண்டும் வெற்றி கொள்ள வேண்டும் என்று மிக ஆர்வமாய் இருந்தார். அதில் வியன்னா, க்ரீஸ், ஹங்கேரி என்று பாதி வெற்றிதான் அடைந்தார். ஐரோப்பிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களி லிருந்து ப்ராட்டெஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் பிரிந்தபோது, சுல்தான் சுலைமான் அவர்கள் ப்ராட்டெஸ்டண்ட்களின் ஆதரவைப் பெறவேண்டி நிறைய நிதியுதவிகள் செய்தார். இன்றும் கத்தோலிக்கர்கள் சொல்வார்கள் சுலைமானின் உதவி இல்லாவிட்டால்,  ப்ராட்டெஸ்டண்டை நாங்கள் வளரவிட்டிருக்க மாட்டோம் என்று. போர்ச்சுகல் கிழக்கு ஆப்பிரிக்காவில் நிறைய முஸ்லீம் நாடுகள் மீது படையெ டுத்த போது, துணிந்து அந்நாடுகளுக்கு ஆதரவாக நின்றார். உண்மையாகவே இணைவைப்பாளர்களுக்கு எதிராக திரண்டு நின்று நேர்மையான இஸ்லாமிய மன்னராக வாழ்ந்தார். சுலைமான் ஐரோப்பியர்களுக்கு எதிராக போரிடும் போது, சுலைமானால் கைப்பற்றப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகள் போதிய ஆதரவைத்தரவில்லை. ஏனென்றால், அவர் தீவிர இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்திய காரணத்தால்.
சுல்தான் சுலைமான் அவர்கள் இஸ்தான்புல்லை இஸ்லாமிய தலைமையகமாக மாற்றத் தீர்மானித்தவுடன், அங்கு கட்டிடங்கள், பாலங்கள், மசூதிகள், அரண்மனைகள் மற்றும் உலகின் மாபெரும் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தார். இவரின் ஒப்பற்ற பணியாள் ‘சினான்’ என்பவர் மிக அற்புதமாக வடிவமைத்த மசூதியைக் கண்டு உலக வரலாற்றில் ஒரு மனிதனின் அதிகபட்ச கலைத்திறமை இதுதான் என்று உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. இவரின் பணி உலகின் சிறந்த பொறியாளர்களைத் திணறடித்தது. 1550 ல்சுலைமான் அவர்கள் இஸ்தான் புல்லில் ஒரு மசூதியைக் கட்ட உத்தரவிட்டார். அது 1558 ல் முடிவுற்றது. மிக அற் புதமான கட்டிடக் கலையைக் கொண்ட அந்த மசூதி 1660 ல் தீயால் பாதிக்கப்பட நான்காம் மெஹ்மெத் அதை சீர்படுத்தினார். மீண்டும் 1766 ல் ஏற்பட்ட பூகம்பத் தால் சேதமடைந்த பள்ளி மீண்டும் சரி செய்யப்பட்டது. மிக பிரமாண்டமான அந்த மசூதியின் வளாகத்தில் முதல் உலகப்போரின் போது ஆயுதங்கள் வைக்கப் பயன்படுத்தினார்கள். அப்போது தவறுதலாக வெடி விபத்து ஏற்பட்டு, சேதமடைந்தது. மீண்டும் பழுது பார்க்கப்பட்டது. நடு கோபுரம் 53 மீட்டர் உயரத்திலும், 27.5 மீட்டர் அகல விட்டத்திலும் இருக்கும். நான்கு மினாராக்கள் உடையது. தொழுகை நடத் தும் இடம் 59 மீட்டர் நீளத்திலும், 58 மீட்டர் அகலத்திலும் அமைந்திருக்கும். அது போல் 10 தொழுகை இடங்கள் (சுலைமான் 10 வது சுல்தான் என்பதைக் குறிக்கும் வகையில்) கட்டப்பட்டது. இந்த மசூதியைப்பற்றிச் சொல்லிக் கொண்டே போக லாம். வலையில் சென்று மேல் விபரம் காணுங்கள். மேலும் இப்பள்ளியைக் காண வேண்டுமானால் ‘தூக்குடு’ என்ற ஆந்திர திரைப்படத்தில் (மகேஷ்பாபு என்ற நடிகர் நடித்தது) குருவாரம் என்று தொடங்கும் பாடலின் பின்புறத்தில் காட்டுவார்கள். அடுத்து ‘டேக்கன்2’ (TAKEN 2) என்ற ஆங்கிலப் படத்தில் அதிகமுறை இந்த மசூதியை பல நிலைகளில் காட்டுவார்கள். இதன் படப்பிடிப்பின் போது அதில் ஒலிக்கப்பட்ட பாங்கின் ஓசை கேட்டு பிரமித்துப் போன அப்படத்தின் கதாநாயகன் லியாம் நீசன் இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்டார். (தற்போது அவர் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.) மேற் சொன்னவை யூ டியூபில் கிடைக்கிறது காணுங்கள் அந்த மசூதியின் பிரமாண்டத்தைக் கண்டு அப்படியே பிரமித்துப் போய் விடுவீர்கள். அப்படங்களை நான் வேறு எதற்க்கும் பரிந்துரைக்கவில்லை.  சுலைமான் அவர்கள் கவிதையில் சிறந்து விளங்கினார். இஸ்தான்புல்லில் ஓவியங்கள், இசை, எழுத்து மற்றும் தத்துவம் போன்றவற்றை சிறந்தமுறையில் உருவாக்கி இஸ்லாமிய உலகத்திற்கு கிடைக்கச் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக