வெள்ளி, 10 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 27

1674 ல் மொத்த மஹாராஷ்டிராவையும் பிடித்து, ராய்கரை தலைநகராக்கிக் கொண்டு தானே முடிசூட்டிக் கொண்டான். வேத சாஸ்திர நடைமுறைகளை தனது பிரதேசத்தில் கொண்டு வந்து பழைய இந்து ஆட்சியை நினைவு படுத்தி னான். ஆலம்கீர் வடமேற்கில் ஆஃப்கான் பழங்குடியினரின் பிரச்சினையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, 1676 லிருந்து 1680 வரை சிவாஜி தெற்கில் மேலும் சில பகுதிகளை வென்றான். ஜின்ஜி, வேலூர் மற்றும் விஜயநகர பேரரசின் சில பகுதிகளையும் வென்று இறுதியாக ஔரங்கஸேப்பை எதிர்க்கத் தயாரானான். ஆனால், 1680 ல் தன் ஐம்பத்தி மூன்றாவது வயதில் மரண மடைந்தான்.
பல மொகலாய தளபதிகளால் டெக்கானை வெல்ல முடியாத பட்சத்தில் ஔரங்கஸேப் தானே முன் வந்தார். ராஜபுத்திரர்களுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டு, தனது முன்னோர்கள் வழியில் போரிட்டார். வரிசையாக பாமனி பேரரசு, பிதார், அஹ்மத்நகர், பிரார் ஆகியவற்றை தந்தையின் ஷாஹ்ஜ ஹானி படைகளின் உதவியுடன் கைப்பற்றினார். எஞ்சியது பலகாலமாக போராடி வரும் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா மட்டுமே. அதற்கு காரணம் அந்த சுல்தான்கள் ஷியா பிரிவு இஸ்லாமிய கொள்கைகளை உடையவர்கள். பெரும் கப்பத்தொகையை மொகலாயர்களுக்கு செலுத்தாமல் வைத்திருந் தார்கள். மராட்டியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மொகலாயர்களை மிரட்டி வந்தார்கள். மொகலாயர்களை விட பெர்ஷியாவின் ஷா தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாய் காட்டிக் கொண்டார்கள். அவர்களின் பூமி மிகவும் வளம் கொழிப்பதாக இருந்தது. ஔரங்கஸேப் பெரும் படையை இரண்டாகப் பிரித்து ஒன்றை இளவரசர் முஃஅஸ்ஸிம் தலைமையில் மராட்டியர்களை எதிர்க்கவும், இன்னொன்றை இளவரசர் ஆஸம் தலைமையில் பிஜப்பூரை எதிர்க்கவும் அனுப்பினார். முஃஅஸ்ஸிம் கொங்கனின் உள்பகுதி வரை சென்று பலத்த இழப்புடன் திரும்பினார். இருந்தாலும் ஷோலாப்பூரை வென்றார். 1684 ல் முஃஅஸ்ஸிம் பிஜப்பூரின் படையெடுப்பில் தந்தையிடம் சுல்தானிடம் சமாதானமாகப் போக வேண்டி தொந்தரவு செய்தார். பல பிரச்சினைக்குப் பிறகு, ஔரங்கஸேப் தானே சென்று 1686 ல் பிஜப்பூரைக் கைப்பற்றினார். அப்போது அங்கு சுல்தானாக சிக்கந்தர் ஆதில் ஷா இருந்தார். 
அடுத்து கவனம் கொல்கொண்டாவின் மீது திரும்பியது. அங்கு பல இந்து மந்திரிகள் இருந்தார்கள். குறிப்பாக வைஸ்ராயர்கள் மடன்னா மற்றும் அகன்னா இவர்கள் இருவரும் முஸ்லீம்களிடத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள். மன்னரும் மொகலாயர்களுக்கு எதிராக சம்பூஜிக்கு ஆதரவளித்தார். மொகலாயப் போரில் பிஜப்பூருக்கும் உதவி செய்தார்கள். அதன் சுல்தான் அபுல் ஹசன் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார். மொகலாயர் களுக்கு கோல்கொண்டாவை வெல்வது கடுமையாக இருந்தது. அதன் தளபதி அப்துர் ரசாக் அரணாக நின்று சுல்தானைக் காத்தார். ஷியா பிரிவு அரசு களிலேயே தைரியமான தளபதி அப்துர் ரசாக். ஒற்றை வீரராக இருந்து நேருக்கு நேர் மோதினார். இறுதியில் அவர் வீழ்ந்த போது எழுபது இடங்க ளிலே காயமுற்றிருந்தார். முடிவில் அபுல் ஹசன் சிறைபிடிக்கப்பட்டு கோல்கொண்டா பேரரசுடன் இணைக்கப்பட்டது. தளபதி அப்துர் ரசாக்கின் குணநலன்களையும், வீரத்தையும் நன்கறிந்திருந்த ஔரங்கஸேப் தனது தனிப்பட்ட மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார். கோல்கொண்டா கோட்டையைக் காக்க அவர் காட்டிய வீரத்திற்காக ஔரங்கஸேப் கோட்டையை கைப்பற்றவில்லை. அடுத்து சிவாஜிக்குப் பிறகு மராட்டிய மன்னனான அவன் மகன் சம்பூஜி பெரும் குடிகாரனாக இருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தையும், செல்வங்களை பெண்களுக்கு செலவழிப்பதிலும் மூழ்கி இருந்தான். ஆட்சி நிர்வாகத்தை மராட்டியர்கள் அறிந்திடாத காவி குலேஷ் (காலூஷா) என்ற அமைச்சர் கவனித்து வந்தார். சம்பூஜியின் சரித்திரத்தை நாம் தவித்திடுவோம். இவனது வீரர்கள் வழக்கம் போல் கொள்ளையடித்து தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்தார்கள். இது மொகலாயர்களுக்கு சாதகமாக இருக்க 1689 ல் வெற்றி பெற்றார்கள். சம்பூஜி சங்காமேஷ்வரா என்ற இடத்தில் குடிபோதையில் பெண்களுடன் நீராடிக் கொண்டிருக்கும் போது மொகலாய தளபதி தகர்ரப் கானால் கைது செய்யப்பட்டான். மராட்டிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சம்பூஜியின் மகன் சாஹுவை ஔரங்கஸேப் நன்றாக நடத்தி ஹானஸ்ட் என்று கூறி கௌரவித்தார்.
மராட்டியர்கள் பலவீனமடைந்தார்கள். பேரரசர் ராஜபரிவட்டத்துடன் பூனா வருகை அவர்களிடத்திலே பயத்தை உண்டுபண்ணியது. மேலும் ஔரங்க ஸேப் இராணுவத்தை அனுப்பி தலைநகர் ராய்கரை கைப்பற்றினார். மராட்டிய தலைவர்கள் ஒன்றுகூடி இறந்து போயிருந்த ஐந்து வயதே ஆகி இருந்த சம்பூஜியின் மகன் இரண்டாவது சிவாஜியை ராஜாவாக தேர்ந்தெடுத்து, ராஜாராம் அவருக்கு மேலிருந்து ராஜ்ஜியத்தை கவனித்துக் கொள்வார் என்று முடிவு செய்திருந்தார்கள். ராய்கரை பிடித்த பின் மொகலாயர்கள் மிரிசி மற்றும் பன்ஹாலா கோட்டைகளைப் பிடித்தார்கள். இளம் சிவாஜியையும் சிறை பிடித்தார்கள். ராஜாராம் ஜின்ஜிக்கு ஓடிப்போய் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டார். ராஜாராமை எதிர்த்து ஸுல்ஃபிகர் கான் என்னும் தளபதியை ஔரங்கஸேப் அனுப்பினார். அவர் ஜின்ஜியை வெல்ல முடியாமல் திரும்பி னார். மொகலாயர்களும் பல பிரதேசங்களை வென்றிருந்ததால் அவைகளைக் காக்க படைகள் பல கூறாகப் பிரிந்தது. ஸுல்ஃபிகருக்கு ஜின்ஜியில் பல ஆண்டு ஆனதால், இந்த தருணத்தை பயன்படுத்தி மராட்டியர்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு உதவியதால் இளவரசர் காம் பக் ஷை ஔரங்கஸேப் சிறையிலடைத்தார். ஸுல்ஃபிகார் கானை திரும்ப அழைத்துக் கொண்டு, 1694 லிருந்து 1697 வரை பல தளபதிகளை மாற்றியும் ஜின்ஜியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஔரங்கஸேப் பிராஹமாபுரியில் தங்கி இருந்து மராட்டியர்களுக்கு எதிரான நடவடிக்கையை கவனித்து வந்தார். மராட்டிய தளபதிகளிடையே பிரச்சினை வர மொகலாயர்கள் சில பகுதிகளை வென்றார்கள். ஜின்ஜி வீழ்ந்து விட ராஜாராம் சதாராவில் அரசு அமைத்துக் கொண்டார். அங்கும் மொகலாய படை விரைய ராஜாராம் குடும்பத்துடன் கிலோனா தப்பிச் சென்றார். ஓடிக்கொண்டிருந்த ராஜாராம் சிங்காரில் இருந்த போது 1700 ல் மரணமடைந்தார்.
ராஜாராம் இற்ந்த பிறகு, அவர் மகன் கர்ணா ராஜாவானார். அவர் குறுகிய நாளில் சின்னம்மை நோய் கண்டு மரணமடைந்தார். சிவாஜியின் விதவை மனைவி தாரா பாய் மூன்றாவது குழந்தையை மூன்றாவது சிவாஜியாக தேர்ந்தெடுத்து தானே அவனுக்கு பின் நின்று ஆட்சி புரிந்தார்.  இவள் வீறு கொண்டு மொகலாய படைகளை எதிர்க்க கிளம்பினாள். பெண்ணாகக் கிளம்பியதால் மராட்டியர்களிடம் ஒரு வேகம் வந்தது. இது மொகலாய படைகளை சிதறடித்தது. ஔரங்கஸேபுக்கு எண்பத்து நான்கு வயதான போது பிரச்சைனைகள் நாற்புறமும் சூழ்ந்தது. பஞ்சாபில் சீக்கியர்கள் பலம் பெற ஆரம்பித்தார்கள். புர்ஹான்பூரில் ஜாட்கள் மொகலாயர்களுக்கு இணங்காமல் புரட்சியில் ஈடுபட்டார்கள். இச்சூழ்நிலையில் 1707 ல் ஔரங்கஸேப் மரண மடைந்தார். மராட்டியர்கள் காணும் இடமெல்லாம் மொகலாய வாகனங்களை கொள்ளையடித்தார்கள். சீக்கியர்கள் சுதந்திர பூமி வேண்டி விரைந்தார்கள். ஆங்கிலேயர்களும் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி பலமாகிக் கொண்டிருந்தார்கள். ஜஹாங்கீரின் காலத்தில் தர்பாருக்கு வந்த சர். தாமஸ் ரவ் பேரரசால் வாணிபம்செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் 1639 ல் சந்தேரி ராஜாவிடம் ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து மதராஸில் கோட்டையுடம் கூடிய தொழிற்சாலையைக் கட்டி டச்சுக்காரர்களை எதிர்த்தனர். அதுதான் இன்றைக்கும் இருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எல்லா மொகலாய மன்னர்களை விட ஷாஜஹான் ஆங்கிலேயர்களை 1650-51ல் ஹூக்லி, காசிம்பஜார் ஆகிய இடங்களில் பல தொழிற்சாலைகளை கட்டிக் கொள்ள அனுமதித்தார். எட்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் அனைத்து தொழிற்சாலைகளையும் சூரத் நகருக்கு மாற்றிக் கொண்டார்கள். 1666 ல் சிவாஜியுடனான போரில் இறக்குமதிக்கான வரியை மொகலாயர்களிடம் குறைத்ததற்காக ஔரங்கஸேப் பாராட்டினார். 1668 ல் மேற்குகரைப் பகுதிகளான பம்பாய், சால்செட்டில் பலமாக இருந்தார்கள். தற்போது சொந்த துறமுகம் இருந்த அந்த பகுதியில் மராட்டியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் பயந்தவர்களாக இருந்தார்கள்.
1685 ல் அப்போது பெங்காலின் கவர்னராக இருந்த ஷாயுஸ்தா கான் ஆங்கிலேயர்களுக்கு சில வரிகளை விதித்தார். அதை செலுத்த ஆங்கிலேயர் கள் மறுத்தனர். இதனால் ஆங்கிலேயர்களுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே நிர்வாகப் போர் இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்தின் மன்னர் இரண்டாம் ஜேம்ஸ் ஆதரவளித்தார். அவர்கள் பத்து கப்பல்களில் சென்று சிட்டகாங்கை பிடித்தனர். சர். ஜான் சைல்ட் என்பவன் மொகலாய கப்பல்களைத் தாக்கினான். இதனால் ஆலம்கீர் அவர்களை சிறைபிடித்து சூரத், மசூலிப்பட்டனம் மற்றும் ஹீக்லியில் இருந்த தொழிற்சாலைகளை மூட வைத்தார். அந்நிய வாணிபத்தை தடை செய்தார். சில நாட்கள் கழித்து அப்போது பெங்காலின் கவர்னராக இருந்த இப்ராஹீமிடம் ஆங்கிலேயர்கள் மீது கடுமை காட்ட வேண்டாம் என்றார். இதனால் இப்ராஹீம் ஜாப் சர்னாக் என்ற ஆங்கிலேயரை திரும்ப அழைத்து 1690 ல் ஹூக்ளி கரையில் அவர்களுக்காக தனி பகுதியை உருவாக்கிக் கொள்ள அனுமதித்தார். அப்படி அவர்கள் உருவாக்கிய நகரம் தான் தற்போதைய கல்கத்தா நகரம். ஹூக்ளி ஆற்றின் இருந்த சிறு கிராமமான காலீகதா என்ற பெயரையே இந்நகரம் பெற்றது. சிறியதாக துவங்கிய இந்த கல்கத்தா நகரம் பின்னாளில் விரிவாக்கப்பட்டு பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய நகரமானது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கால் பதிக்க சூரத்தின் தலைவராக இருந்த ஜான் சைல்ட் மொகலாயர்களுக்கு எதிராக போர் அறிவித்தான். ஆனால் அமைதி வேண்டி சமாதானம் ஆனான். பேரரசர் அவர்களை மன்னித்து 1,50,000 ரூபாய் செலுத்தி விட்டு மீண்டும் வாணிபம் செய்து கொள்ள அனுமதித்தார். 1690 ல் உச்சத்தில் இருந்த ஔரங்கஸேப் ஏறக்குறைய இந்தியாவை ஆண்டார். வடக்கில் காஷ்மீர், தெற்கில் கேப் கொமோரின், மேற்கில் காபூல், கிழக்கில் சிட்டகாங்க் வரை பரவி இருந்தார். 
ஆட்சி நிர்வாகத்தில் முன்னோர்களின் நடைமுறையையே கடை பிடித்தார். அதிக நிலப்பரப்புகளை வென்றெடுத்த பின் எல்லைகளை மாற்றி அமைத்தார். பெங்கால், முல்டான், காபூல் ஆகியவை பெரிய மாகாணங்களாக இருந்ததால் தனித்தனி கவர்னர்களை நியமித்தார். அரசியலையும், மதத்தையும் தனியாக்கினார். சட்டங்கள் திருக்குரானின் வழிகாட்டுதல் படி அமைத்தார். அக்பரின் தீனே இலாஹி நடைமுறைகளை புறந்தள்ளி இஸ்லாமிய நாட்காட்டியை பின் பற்றினார். மதத்திற்கு ஒத்துவராத அனைத்து வரிகளையும் நீக்கினார். இந்து புனிதஸ்தலங்களுக்கான வரியை நீக்கி ஜிஸ்யாவை கொண்டு வந்தார். ஆனால் அதில் கடுமையைக் காட்டவில்லை. விபச்சாரம், மது மற்றும் போதை பழக்கங்களை ஒழித்தார். விபச்சாரிகளை நகரை விட்டு வெளியேற்றி தனியாக ஒரு இடத்தில் சிவப்பாடை மட்டுமே உடுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் ‘லால் பீபி’ என்று அழைக்கப்படச் செய்தார். மக்களின் பணத்திற்கு மன்னர் பொறுப்பானவராக இருந்தார். ‘பெய்த் உல் மால்’ என்னும் இஸ்லாமிய முறைப்படி அமைத்திருந்தார். நீதி வழங்குவதற்கு ஒவ்வொரு புதன் கிழமையும் ‘தீவான் இ காஸ்’ என்ற மண்டபத்தில் காலை எட்டு மணி முதல் மதியம் வரை இருப்பார். (இதை இப்போதும் மத்திய அரசு பாஸ்போர்ட் போன்ற பலதுறைகளில் அதாலத் தின் (தீர்ப்பு நாள்)என்று பழக்கப்படுத்தி வருகிறது.) இதில் ஔரங்கஸேபுக்கு சிறப்பு வாய்ந்த ஒரு குழு உதவியாக இருந்தது. ஒவிங்க்டன் என்பவர், ஔரங்கஸேப் நீதியின் கடல், சமமான நீதியைத் தருவதில் குறியாக இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வமாக இருந்தார். எல்லா நகரங்களிலும் பல்கலைக் கழகங்களை நிறுவினார். சிறிய நகரங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். ஔரங்கஸேப் ஆட்சியில் டெல்லி, ஜொன்பூர், சியால்கோட் மற்றும் தட்டா ஆகியவை கல்வியில் முதல்நிலையில் இருந்தது. ஹாமில்டன் என்பவர், ‘தட்டா நகரம் நானூறு கல்லூரிகளை நிறுவி மதக் கல்வி, தத்துவம், அரசியல் போன்ற துறைகளை இளைஞர்களுக்கு போதித்து வந்தது’ என்று பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய இலக்கணம் நன்கு இருந்தது. குறிப்பாக ராஜவம்சத்தினர் கடந்த கால அரசியல், பொதுக் கல்வி, வெளிநாட்டு மொழிகள் கற்றுக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தார். ஆட்சிக்காலம் முழுதும் பிரச்சினைகள் சூழ்ந்திருந்ததால், கலையை இவர் முக்கியமாக கருதவில்லை. இவர் காலத்தில் டெல்லி கோட்டையில் பளிங்கு கல் மசூதியும், லாகூரில் பாதுஷாஹி மசூதியும் சிறப்பானது. மற்றபடி இசை, ஓவியங்களில் அவ்வள வாக ஆர்வமில்லாதவர். அக்பரின் காலத்தில் ஏறக்குறைய ஊக்குவிக்கப்பட்டு இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் எல்லா காலகட்டத்திலும், நிகழ்ச்சிகளிலும், புனித தலங்களிலும் தலைவிரித்து ஆடிய இசையை தடை செய்தார்.அக்பரின் காலத்தில் தான்சேன் போன்ற புகழ் பெற்ற இசைக் கலைஞர்களை கொண்டிருந்த மொகலாய சபையை அறவே இசை இல்லாமல் செய்தார். ஒரு வெள்ளிக்கிழமை ஔரங்கஸேப் அறியும் வண்ணம் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் அழுதவாறு கல்லறையை நோக்கி ஊர்வலமாகச் சென்று இசையைத் தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக்கேள்விப்பட்ட ஔரங்கஸேப் அவர்களின் உறவினர்கள் நல்லவிதமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறாரா என்று பார்க்கச்செல்லும் யாரையும் தடை செய்யவேண்டாம் என்று அமைதியாகக் கூறிவிட்டார். சில ஓவியர்கள் போர் நடவடிக்கை ஓவியங்களை வரைந்திருந்தனர். தோட்டங்களில் லாகூரில் பாதுஷாஹி மசூதியுடன் இணைந்த அழகிய தோட்டமும், டெல்லியில் ரோஷனாரா பேகம் தோட்டம், லாகூரில் சௌபுர்ஜி பாக், நவான்கல் பாக் மற்றும் பின்ஜார் தோட்டம் ஆகியவை இவர் உருவாக்கியவை. இவரின் தோற்றம் பேரரசருக்கு உரிய கம்பீரம் இருக்கும். சிறந்த மதப்பற்றுள்ளவர். பொது வாழ்க்கையில் ஆடம்பரமில்லாத மிக மிக சாதாரணமானவர். கடிதங்கள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். ஏழைகளின் பாதுகாவலானாக இருந்தார். இவரின் குணாதிசயங்களுக்காகவே ஒரு பெரும் கட்டுரை எழுதலாம். புகழ் பெற்ற நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, மிகவும் தூய்மையான ஒரு இஸ்லாமிய மன்னர் என்று உலகம் போற்றியது. 
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியைத் தோற்றுவித்தாலும் மாற்று மதத்தவருக்கு பெரும் மரியாதை செய்தார். இஸ்லாமியர்களாய் இருந்தாலும், மனம் போல் தன் முன்னோர்கள் ஆண்டதால் அப்போதைய இந்துக்கள் பல மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டினார்கள். அதற்கு அப்போதைய மொகலாய ஆட்சியின் இந்து அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்கள். அப்படிப்பட்ட கோவில்களைத் தான் இடிக்கச் சொன்னார். ஆனால், பாவிகள் இன்றுவரை உலகின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவரான ஔரங்கஸேப்பை அரசியல் ஆதாயத்திற்காக இந்துக்களுக்கு எதிரானவர் என்று சொல்லி வருகிறார்கள். இழிவான சில ஹிந்துக்களைத் தவிர பெர்னியர், நிக்கோலாவ் மனுச்சி, கீன், ஓர்மி போன்ற பல ஆசிரியர்கள் ஔரங்கஸேபை புகழ்ந்து எழுதியுள்ளனர்.   

வியாழன், 9 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 19

ஷஹாப் உத் தின் முஹம்மது ஷாஹ்ஜஹான்  
கூ.செ.செய்யது முஹமது
                            ஷாஜஹான் டெக்கானிலிருந்து திரும்பியதும் அதுவரை தற்காலிக ஆட்சியிலிருந்த குஸ்ருவின் மகன் தாவர் பக் ஷ் பெர்ஷியா வுக்கு தப்பிச் சென்றார். அவரின் ஆதரவாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டும், கொலையும் செய்யப்பட்டனர். 1628 பிப்ரவரியில் ஆக்ராவில் ஷாஜஹான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ‘அபுல் மஸஃப்ஃபர் ஷஹாப் உத் தின் முஹம்மத் சாஹிப் கிரானி இ சானீ ஷாஹ்ஜஹான் பாதுஷா காஸி’ என்ற சிறப்புப் பெயரை பெற்றார். இவர் பெயரில் புதிய நாணயங்கள் வெளியிடப் பட்டு, வெள்ளிக்கிழமை தொழுகையில் பெயரும் மொழியப்பட்டது. புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இஸ்லாமிய சட்டங்களை தீவிரமாக பின்பற்றினார். ஆக்ரா நகரை அக்பராபாத் என்று பெயர் மாற்றி னார். நன்றாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வையும், தரத்தை யும் அதிகப்படுத்தினார். தன் சகோதரி நூர்ஜஹானின் அனைத்து சூழ்ச்சி களையும் முறியடித்து தான் ஆட்சிக்கு வர முழு காரணமான அசஃப் கான் மீது ஷாஜஹான் பெரும் மதிப்பை வைத்திருந்தார்.
   பந்தேளா என்ற ஒரு கூட்டத்தினரின் தலைவன் பீர் சிங் என்பவர் தான் அல்லாமா அபுல் ஃபஸ்ல் என்பவரைக் கொன்றார். இந்த கூட்டத்தினர் அருகாமையில் வசிப்போர்களை மிரட்டி அதிகாரம் செய்து வந்தனர். ஜஹாங்கீரின் ஆட்சி இறுதியில் சற்று பலம் குறைந்த வேளையில் இவர்களின் அதிகாரம் மேலோங்கியது. 1628 ல் பீர்சிங் இறந்த பிறகு அவர் மகன் ஜோஹர்சிங் பிரச்சினை உண்டு பண்ணினார். இதற்காக அரசவை க்கு வந்து விளக்கம் சொல்ல அழைக்கப்பட்டார். தன் மக்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கினாலும், மலை சார்ந்த தங்கள் பகுதியில் யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற மமதையாலும் அரசவையில் மன்னரிடம் பகையை வளர்த்துக் கொண்டார். தனது இடம் ஓர்ச்சா (உண்ட்சா) வந்த ஜோஹர்சிங் படைகளை கூட்டி, சாலைகளை அடைத்து புரட்சியில் ஈடுபட்டார். ஷாஜஹானும் அதிகாரிகளுக்கு புரட்சியை அடக்க உத்தரவிட்டார். இஸ்லாம்கான், ஃபிரோஸ்கான் மற்றும் மஹபத்கான் ஆகியோர் மூன்று திசைகளில் பந்தேளா கோட்டையைத் தாக்கினார்கள். மூவாயிரம் பேர் மரணமடைய கடும் போருக்கு பிறகு, ஜோஹர்சிங் கைது செய்யப்பட்டார்.
    ஷாஜஹான் ஆட்சிக்கு வந்த முதல் நௌரோஸ் பண்டிகை வெகு சிறப்பாக அரச குடும்பத்தினர், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடும்ப உறவினர்களின் பரிசுகளுக் கென ஒரு கோடியே அறுபது லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது. மொக லாய இராணுவத்தில் கான் ஜஹான் லோதி (சலாபத் கான்) என்பவர் இருந்தார். ஜஹாங்கீர் இறந்த போது இவரும் இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தார். ஷாஜஹான் ஆட்சிக்கு வந்த பின் பணிவாக நடந்ததால் மன்னிக்கப்பட்டார். டெக்கான் பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். பின் இவர் அரசவை பணிக்கு அழைக்கபட்டு எட்டு மாதங்கள் இருந்தார். ஆனால் சில சமயம் மறுத்தும், வெறுப்பாகவே பணியைச் செய்தார். இது உளவாளிகள் மூலம் தெரியவர கான்ஜஹானும் அவர் மகனும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இராணுவ பின்புலம் இருந்ததால் பாதுகாப்பைக் கருதி, ஷாஜஹானும், அஸ்ஃப்கானும் அவரை தோல்பூரில் சிறை வைக்க அனுப்பினார்கள். 1630-32 ல் குஜராத், காந்தேஷ், டெக்கான் பகுதியில் கடும் பஞ்சம் நிலவியது. இதனால் பலர் உயிரிழந்த னர். எலும்புத் துகள்களை மாவில் கலந்தும், நாய் கறியை மாமிசத்தில் கலந்தும் சிலர் விற்று வந்தார்கள். பெருமளவு மக்களும் வேறு இடங்களு க்கு குடி பெயர்ந்தார்கள். ஷாஜஹான் எழுபது லட்ச ரூபாய் அளவுக்கு மூன்றிலொரு பங்கு நிலங்களுக்கு வரியை தள்ளுபடி செய்தார். பாதிக்கப்பட்ட இடங்களில் அரசு உணவகங்களைத் திறந்து இலவசமாக சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கச் செய்தார். அதிகம் பாதிக்கப்பட்ட குஜராத்தின் அஹமதாபாதுக்கு நிறைய செலவிடப்பட்டது. அக்கால கட்டத்தில் இது போன்ற பெரும் பஞ்சத்தை திறமையாக சமாளித்தது ஷாஜஹானின் ஆட்சியில் தான். இதை ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
    அக்பர் மற்றும் ஜஹாங்கீரால் அனுமதிக்கப்பட்டிருந்த போர்ச்சுகீசியர்கள் ஹூக்ளியின் இருபுறமும் பல தொழிற்சாலைகளை கட்டி இருந்தார்கள். லஞ்சத்தின் மூலம் சுங்கவரி ஏய்பு செய்து வந்தார்கள். மேலும், ஹுப்ளியின் பகுதிகளில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஏழை களை ஏமாற்றி வந்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் அளித்திருந்த சலுகைகளை தவறாக பயன்படுத்தி அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பைச் செய்தார்கள். கொடூரமான முறையில் முஸ்லீம், ஹிந்து மக்களை கப்பலில் மேல்நாடுகளுக்கு கடத்தி அடிமை வியாபாரம் செய் தார்கள். கிறிஸ்தவ மதபோதகர்கள் கடுமையான முறையில் பலரை மதமாற்றம் செய்ய முயன்றார்கள். மும்தாஜின் இரண்டு பணிப்பெண்கள் காணாமல் போனதைப்பற்றி விசாரிக்கும் போது மேற்படி அடிமை கடத்தல் வியாபாரம் தெரியவந்தது. 1631 ல் ஷாஜஹான் காசிம்கான் என்பவரை பெங்காலுக்கு கவர்னராக்கி, அவர்களை மேற்படி போர்ச்சுகீசியர்களின் விசாரித்து நடவடிக்கை எடுக்கச் செய்தார். மேற் கூறியவைகளை கண்டறிந்து மூன்று மாதகாலம் காசிம்கான் அவர்களின் கோட்டயைத் தாக்கினார். இதுவரை நடந்த இழப்புகளுக்கு ஈடாக ஒரு லட்ச ரூபாய் தருவதாகக் கூறி, பேரரசருக்கு சமாதானம் அனுப்பினார்கள். ஆனால் மறைமுகமாக பெரிய தாக்குதலுக்குத் தயாரானார்கள். ஏழாயிரம் துப்பாக்கி ஏந்திய வீரர்களை மொகலாயப்படைகளுக்கு எதிராக தயார் செய்தார்கள். வாணிபத்திற்கென வந்தவர்களின் இந்த செயலினால் பெரும் கோபம் கொண்ட மொகலாயர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். போர்ச்சுகீசியர்களின் தொழிற்சாலைகள், கோட்டைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டு தாங்கள் இஸ்லாமிய ராக (எந்த கொடுஞ்செயலுக்குப் பிறகு ஒருவர் இஸ்லாமியராக மதம் மாற ஒப்புக்கொண்டால் மன்னித்து விடும் பழக்கம் உலகமெங்கும் அனைத்து ஆட்சியாளர்களிடமும் இருந்தது.) மதம் மாற ஒப்புக் கொண்டவர்களை மன்னித்தனர்.  மொகலாயப் படையில் ஆயிரம் வீரர்கள் வரை இறந்தார்கள். பத்தாயிரம் பேர் வரை போர்ச்சுகீசியர்கள் சிறை பிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். இதனால் போர்ச்சுகீசியர்களின் வாணிபம் முடிவுக்கு வந்தது.
           அர்ஜுமண்ட் பானு பேகம் என்ற மும்தாஜ் மஹல் மிகவும் பேரழகும், புத்திகூர்மை வாய்ந்தவராக இருந்தார். அசஃப்கானின் மகளாக இருந்த இவர் மொகலாயப் பேரரசில் புகழ் வாய்ந்த பெண்மனியாக இருந்தார். 1594 ல் பிறந்த மும்தாஜ் மஹல் 1612 ல் ஷாஜஹானை மணந்தார். மும்தாஜ் மஹலின் பேரழகாலும், புத்திசாலித் தனத்திற்காகவும் ஷாஜஹான் இவரை பெரிதும் விரும்பினார். தந்தையிடம் பகையாகி ஊர்ஊராக சுற்றிக் கொண்டிருந்த போது ஷாஜானுக்கு சிறந்த நண்பன் போலவும், ஆலோசனை கூறியவராகவும் இருந்தார். ஷாஜஹான் பதவியேற்றவுடன் ‘மலிகா இ ஸமான்’ என்ற சிறப்புப் பட்டமளிக்கப்பட்டார். எந்த ஒரு விஷயமானாலும் ஷாஜஹான் இவரிடம் கலந்தாலோசனை செய்யாமல் இருந்ததில்லை. அரசின் ராஜமுத்திரையே இவரிடம் பொறுப்பாக கொடுத்து வைக்கப்பட்டிருந்தது. மிகவும் கருணை உள்ளம் கொண்ட இவரால் நம்பிக்கை இழந்த எத்தனையோ குற்றவாளிகளை மொகலாய சிறையிலிருந்து மன்னித்து விடச் செய்தார். சமூக சேவையில் ஆர்வம் கொண்டிருந்த மும்தாஜ் மஹலிடம் உதவி என்று வந்தவர்கள் யாரும் பெறாமல் திரும்பியதில்லை. தனக்கு அரசு அளித்த மாத வருமானத் திலிருந்து பல அநாதை, விதவைகளுக்கு உதவி இருக்கிறார். வசதியற்ற பல பெண்களுக்கு திருமணம் செய்ய உதவினார். 
   இவர் காலத்தில் அந்தப்புர பணிப்பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.  பதினான்கு குழந்தைகளைப் பெற்ற மும்தாஜ் மஹல், ஷாஜஹானின் உறவு மிகவும் புகழ் வாய்ந்தது. கான் ஜஹான் லோதியுடன் புர்ஹான்பூர் என்ற இடத்தில் ஷாஜஹான் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, கடுமையான ஒரு பிரசவத்தின் காரணமாக மும்தாஜ் மஹல் மரண மடைந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அக்பராபாத்தில் (ஆக்ரா) யமுனா நதிக்கரையில் ‘தாஜ்’ (தாஜ்மஹல்) என்ற நினைவு மண்டபம் கட்டப்பட்டு, இவரின் உடல் அங்கு மாற்றப்பட்டது. உலகிலேயே மனைவியின் அன்பை மற்றவர்களுக்கு பறைசாற்ற பிரமாண்டமான பெரும் நினைவு மண்டபம் கட்டியவர் ஷாஜஹான் ஒருவர் தான். புகழ் பெற்ற காதல் காவியங்களான ரோமியோ ஜூலியட், சலீம் அனார்கலி, லைலா மஜ்னு மற்றும் இன்னபிற காதல் கதைகள் தோல்வியில் தான் முடிந்து புகழடைந்தன. ஆனால், மணமுடித்து பல்லாண்டு வாழ்ந்து காதலித்தவர்கள் ஷாஜஹான், மும்தாஜ். அந்த காதலின் நினைவுச் சின்னம் உலகப்புகழ் வாய்ந்து இன்றும் பறைசாற்றுகிறது. 
                1600 லிருந்து 1605 வரை அக்பர் டெக்கான் பகுதியைக் கைப்பற்றியதி லிருந்து அங்கிருந்த ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கு மொகலாயர்கள் மீது எரிச்சலாக இருந்தது. அக்பர் காந்தேஷ், அஹ்மத் நகர் மற்றும் பிராரை இணைத்து பெரிய மொகலாயப் பேரரசை நிறுவ ஆசைப்பட்டார். அவரின் மரணத்தால் அது முடியாமல் போனது. பிறகு வந்த அவர் மகன் ஜஹாங்கீரால் மலிக் அம்பரின் இடைவிடாத தொந்தரவால் முடியாமல் போனது. இவைகளை ஷாஜஹான் திறமையாக கையாண்டார். கான் ஜஹான் லோதியின் புரட்சியை வெற்றிகரமாக அடக்கிய ஷாஜஹான் அஹ்மத்நகர் மீது போர் தொடுத்தார். புரட்சியாளர் கான் ஜஹான் லோதிக்கு நிஜாம் ஷாஹி கிங்கின் உதவியும் இருந்தது. 1630 ல் மொகலாயப் படைகள் பரெண்டா கோட்டையின் மீது முற்றுகையிட, எதிரிகளின் பதில் தாக்குதலால் கைவிடப்பட்டது. சுல்தான் முர்தஸா நிஜாமால் போர் திறமையற்ற காரணத்தால் மலிக் அம்பரின் மகன் ஃபத் கான் மலிக் சிறையிலடைக்கப்பட்டார். இவர் விடுவிக்கப்பட்டு சுதந்திரமானவுடன் அஹ்மத்நகரை அழிக்க எண்ணினார். இவர் ஷாஜஹானின் தொடர்பின் மூலம் அறிவுறுத்தப்பட்டு, சுல்தான் முர்தஸா நிஜாமின் முக்கிய நபரை சிறை பிடித்து கொலை செய்தார். பிறகு இளவயது ஹுசைன் ஷா ஆட்சியில் அமர்த்தப்பட்டு, ஃபத் கான் மலிக் தானும் சிறந்த பொறுப்புக்கு வந்தார். ஆனால், வெகு விரைவில் ஃபத் கான் மலிக் ஷாஜஹானுக்கு துரோகம் செய்தார். மஹபத் கானின் தலைமையில் தௌலதாபாத் கோட்டையில் மொகலாயப் படைகளை எதிர்த்தார். கடுமையான எதிர்ப்பாலும், சாதகமான சமரசத்தாலும் மொகலாயப் படைகளிடம் சரணடைந்தார். இதன் பிறகு அஹமத்நகர் கைப்பற்றப்பட்டு, சுல்தான் ஹுசைன் ஷா நிஜாம் கைது செய்து க்வாலியர் சிறையில் பார்வை பறிக்கப்பட்டு அடைக்கப்பட்டார். கௌரவ ஊதியம் வழங்கப்பட்டு மரியாதையாக நட்த்தப்பட்டார். நிஜாம் ஷாஹியின் இருளில் மூழ்கியிருந்த தௌலதாபாத் கோட்டையில் ஒளிமயமாக மொகலாய கொடி பறக்கவிடப்பட்டது. அப்போதைய மொகலாய ஆட்சியாளர்களை எதிர்த்த சிவாஜியின் தந்தையும், தீவிரவாதியுமான ஷாஜி என்பவர் ராஜகுடும்பத்தின் ஆதரவுடன் அஹ்மத்நகரைக் கைப்பற்ற ஒர் முயற்சி எடுக்கப்பட்டு, மொகலாயர்களால் முறியடிக்கப்பட்டது. சுதந்திரபிரதேசமாக இருந்த அஹ்மத்நகர் 1636 ல் ஆதில் ஷா மற்றும் ஷாஜஹானுக்கும் இடையே பிறிக்கப்பட்டது. டெக்கானைச் சேர்ந்தவர் களால் பலமுறை வெல்லப்பட்ட அஹ்மத்நகர் ஔரங்கஸேபுக்கும் தென் பகுதி இந்துக்களால் குழப்பமான இடமாக இருந்தது. மொகலாயர்களின் மானியத்தில் மராட்டியர்களாலும் சில காலம் மூன்றாவது சக்தியாக இது ஆளப்பட்டது.        
  ஐந்து கிளைகளாக இருந்த பாமினி பேரரசின் இரு இடங்கள் மொகலாயப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவைகள் அக்பரால் இணைக்கப் பட்ட இமாத் ஷாஹியின் பிரார் மற்றும் ஷாஜஹானால் இணைக்கப்பட்ட அஹ்மத்நகராகும். இன்னொரு பிரதேசம் மேற்கூறியவைகளால் தானா கவே சிறியதான, பிதார் என்ற இடம் பரித் ஷாஹியின் வசம் இருந்தது. மீதமுள்ள இரண்டு பிரதேசங்கள் பிஜப்பூர் ஆதில் ஷாஹி வசமும், கோல் கொண்டா குத்ப் ஷாஹியின் வசமும் இருந்தது. வளமான இடங்களாக இருந்த பிஜப்பூர், கோல்கொண்டா இரண்டும் அஹ்மத்நகர் கைப்பற்றப்       பட்ட பின் மொகலாயர்கள் கவனத்துக்கு வந்தது. அஹ்மத்நகர் வீழ்ந்த தற்குப் பிறகு, பிஜப்பூரின் ஆதில் ஷா மொகலாயர்களுக்கு சரணடைய மறுத்து, அருகிலுள்ள முர்தஸா நிஜாமுடன் கூட்டு சேர்ந்து கொண்டார். ஷாஜஹான் அசஃப் கான் மூலம் பிஜப்பூரின் மீது படையெடுக்கச் சொன்னார். மொகலாயர்கள் பிஜப்பூரைக் கைப்பற்றினார்கள். ஆனால் நகரவாசிகள் மராட்டியர்களின் சிறிய குதிரைப்படை உதவியுடன் பலமாக எதிர்த்து மொகலாயர்களுக்குச் செல்லும் தளவாடம், உணவுப் பொருள் களை தடை செய்து அவர்களைத் தோற்கடித்தனர். பெரும் பொருளுதவி விரயமான பின் மனைவி மும்தாஜ் மஹலின் மறைவும், நினவுக் கட்டிடம் கட்டுவதிலும் கவனம் செலுத்திய ஷாஜஹான் பிஜப்பூரைப் பற்றி சிலகாலம் சிந்திக்கவில்லை. 

மொகலாய வரலாறு 20

1636 ல் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தானுக்கு மொகலாயர்களுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தவும், அஹ்மத்நகர் மீது காட்டும் ஷாஜி போன்ஸ்லா (சிவாஜியின் தந்தை) வின் தலையீட்டை தடை செய்யவும் அரசாணை அனுப்பப்பட்டது. இதற்கு கோல்கொண்டா வின் ஆட்சியாளர் மொகலாயர்களின் அனைத்து ஷரத்துகளுக்கும் உட்பட்டு ஒப்புக்கொண்டனர். ஆனால் பிஜப்பூர் சுல்தான் முழுவதுமாக உடன்பட மறுத்தார். அதனால் பிஜப்பூரின் மீது தாமதமின்றி படையெடுக்க ஷாஜஹான் உத்தரவிட்டார். ஒருபுறம் கான் ஜஹான் ஷோலாபூர் மீதும், கான் இ ஸமான் இந்தாபூர் மீதும், கான் இ தௌரான் வடகிழக்கில் பிதார் மீதுமாக முப்புறத் தாக்குதலாக படை நடத்தப்பட்டது. அப்படியும் ஆதில் ஷாவிடமிருந்து மொகலாய தளபதிகளால் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. பிஜப்பூரின் சுற்றுவட்டாரங்களைக் கைப்பற்றி ஆதில் ஷாவை சமாதானத்திற்கு உடன்பட முயன்றனர். ஆதில் ஷா ஷாஜஹானின் கீழ்பணிந்து இருக்கவும், இருபது லட்சம் ரூபாய் பரிசாக மொகலாயர்களுக்கு கொடுக்க வேண்டியும், நிஜாம்ஷாவின் பிரதேசம் இருவருக்கும் பிரிக்கப்பட்டு, பிஜப்பூர் ஐம்பது பர்கானாக்களாகவும் (வருவாய் வரும் இடமாக), எட்டிலிருந்து, இருபது லட்ச ரூபாய் செலுத்த வும், ஏற்கனவே மொகலாயர்களிடம் கீழ்பணிந்து விட்ட கோல் கொண்டாவின் குத்ப் ஷாஹிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றும், இனி ஷாஹ்ஜி போன்ஸ்லேவிடமிருந்து எந்த உதவியும் பெறப்பட மாட்டாது என்று சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. சுல்தானின் வேண்டுகோளுக்கிணங்க விலையுயர்ந்த உலோகத்தால் செய்யப்பட்ட ஷாஜஹானின் உருவப்படம் ஒன்று அனுப்பி வைக்கப் பட்டது. சுல்தானும் தங்கங்களை ஷாஜஹானுக்கு பரிசாக அனுப்பினார். இதன் பிறகு டெக்கான் பகுதி இருபது வருடங்களுக்கு வளமாக இருந்தது. ஷாஜஹான் ஆக்ரா திரும்பியவுடன் டெக்கான் பகுதியின் பதினெட்டு வயதான தனது மூன்றாவது மகன் ஔரங்கஸேப் பொறுப்பில் ஒப்படைத் தார். இது ஔரங்கஸேப்பின் எதிர்கால ஆட்சிக்கு உருதுணையாக இருந்தது.
                        இதன் பிறகு ஷாஜஹான் மத்திய ஆசியாவின் ஆட்சியில் கவனம் செலுத்தினார். பல்க் மற்றும் பதக் ஷானும் இணைந்து தைமூர் களின் வம்சத்தினர் புகழின் உச்சியிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஷாஜஹானின் புகழ் வெளியுலகத்திலும் பரவியது. ஆரம்பத்தில்  ஷாஜஹான் ஆட்சி செய்ய துவங்கிய கந்தார் பேரரசின் அரசியல் களத்திற்கும், தலையாய வாணிபத்திற்கும், இந்திய, பெர்ஷியா வின் இடையே வியாபார எல்லையாகவும் இருந்தது. மேலும் அப்பிரதேசங்கள் பலமான இராணுவ தளமாகவும் இருந்தது. ஆனாலும், மத்திய ஆசியாவை கொள்வதில் ஷாஜஹானுக்கு சிரமமாகத்தான் இருந்தது.  நான்கு கோடி ரூபாய் செலவு செய்தும் பல்கின் ஒரு அங்குல நிலம் கூட பிடிக்க முடியவில்லை. மூன்று முறை கந்தாரின் மீதான படையெடுப்புக்கு பனிரெண்டு கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பெர்ஷியாவின் மீதான இளவரசர்  தாராவின் தலைமையிலான கௌரவப்போர் மொகலாயர்களின் பலவீனத்தை தான் காட்டியது.
         ஒரு போரின் வெற்றிவிழாவில் கலந்து கொள்ளாததால், ஷாஜஹான் இறந்து விட்டதாக தவறான செய்தி நிலவியது. ஆனால் அவருக்கு நோய்வாய்பட்டிருந்த காரணத்தாலேயே அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஷாஜஹானுக்கு எட்டு மகன்கள், ஆறு மகள்கள். அதில் மூத்த மகன் தாரா ஷிகோ, நான்காவது மகன் முஹம்மது ஷா ஷுஜா, ஆறாவது மகன் முஹம்மது ஔரங்கஸேப், பத்தாவது மகனாக முராத் பக் ஷும் இருந்தனர். தாரா, ஷுஜா, ஔரங்கஸெப் மற்றும் முராத் ஆகியோர். நால்வரும் வித்தியாசமான குணங்களைக் கொண்டிருந்த தால் ஷாஜஹானுக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தமானவராகவும் இல்லை அதே நேரத்தில் வெறுக்கப்பட்டவராகவும் இல்லை. அவருக்குப் பிறகு நால்வருமே ஆட்சிக்கு வர ஆசைப்பட்டார்கள். அதிகார தோரணையுள்ள தாராவே பதவிக்கு உரியவராகக் கருதப்பட்டார். ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு அருகில் இல்லை. அவருக்குள்ள அற்பமான பழக்கங்களும், இயற்கையான தயக்க குணமும், எளிதில் கோபம் கொள்ளும் தன்மையும் இவருக்கு அரசவையில் பல எதிரிகளை உருவாக்கி இருந்தது. அதிக இந்துக்களுடனான நட்பும், நெருங்கிய கிறிஸ்தவர்களின் தொடர்பும், விருப்பமான ஷியா பிரிவு கொள்கைகளும் இவருக்கு ஆட்சிக்கு வர எதிர்ப்பாக இருந்தது.
                        தாரா ஷிகோ எப்போதும் பிராமணர்கள், இந்து துறவிகளுடனேயே இருந்தார். அவர்களின் வேதங்களும், போதனை களும் தான் கடவுளை அடைய சிறந்த வழி என்று எண்ணிக் கொண்டிருந் தார். தொழுகைகளை கடைபிடிக்காமல், ரமதான் நோன்பையும் புறக் கணித்து தான் தான் இறைவனைப்பற்றி அதிக அறிவுள்ளவராகக் காட்டிக் கொள்வார். ஷாஜஹானின் மற்ற மகன்களை விட போர்திறமை கொஞ்சம் கூட இல்லாதவர். இவருக்கு இருந்த ஒரே தகுதி ஷாஜஹானின் விருப்பமானவராக இருந்தது தான்.
                            ஷுஜாவுக்கு புத்திசாலித்தனமும், தனிப்பட்ட விருப்பமும் இருந்தும் மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தது. மேலும் வெளிப்படை யாகவே ஷியா கொள்கையைக் கடைபிடித்தார். முராத் பக் ஷ் முரட்டுத் தனத்துடன் புத்திசாலித்தனம் இல்லாமல் இருந்தார். இளயவராகவும் ஆட்சிப் பொறுப்புக்கு ஏற்றவராக இல்லாமல் இருந்தார். மூன்றாவது மகன் ஔரங்கஸேப் எல்லா சகோதரர்களை விட ஆட்சிக்கு பொருந்தி தகுதியானவராக இருந்தார். எதையும் கூர்ந்து நோக்குபவராகவும், தைரியமாக எதிர்கொள்ளும் திறனும் பெற்றிருந்தார். நிர்வாகத் திறமையை நன்கறிந்த அதேவேளையில் முழுக்க முழுக்க சுன்னிப் பிரிவுக் கொள்கைகளை கடைபிடிப்பவராக இருந்தார். இருவேறு கொள்கைகளை பலமாக சார்ந்தவர்களாக இருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் எதிரியாகவே கருதினர். ஷாஜஹான் உடல்நலம் குன்றி இருந்தபோது நால்வரும் தனித்தனி பிரதேசங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
                                     தாரா பஞ்சாப் மற்றும் வடமேற்கு பிரதேசங்களுக்கு வைஸ்ராயாகவும், ஷுஜா பெங்கால் மற்றும் ஒரிஸ்ஸாவுக்கு கவர்னராக வும், ஔரங்கஸேப் டெக்கான் பகுதிக்கு பொறுப்பாளராகவும், குஜராத் தின் கட்டுப்பாடு முராத் வசமும் இருந்தது. ஒவ்வொருவரிடமும் மற்ற சகோதரனை எதிர்க்க தேவையான பணமும், பலமான போர் படையும், தனிப்பட்ட அதிகாரமும் இருந்தது. திறமையும், வீரமும் உள்ளவர் யாரும் ஆட்சிக்கு வரலாம் என்பது மொகலாய ஆட்சியில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. பாபர், ஹுமாயுன், அக்பர், ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் ஆகியோர் அப்படித்தான் நெருங்கிய உறவுகளை எதிர்த்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தோல்வி அடைந்தால் விளைவு என்ன என்பதையும் நன்கறிந்திருந்தார்கள். 1658 செப்டம்பரில் ஷாஜஹானின் உடல்நலம் முன்னேற்றமடையும் வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போது டெல்லியில் தாரா தந்தைக்கு அருகிலிருந்து கவனித்துக் கொண்டார். இடையே உடல்நலம் சற்று சீரானபோது அரசவை மந்திரிகளையும், பொறுப்பான வர்களையும் அழைத்து தனக்குப் பிறகு, தாரா தான் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று சாசனம் எழுதினார். ஆனால் இதில் சந்தேகம் கொண்ட மற்ற மூன்று சகோதரர்களும் யாரும் தடுத்து சமாதானம் கூறும் நிலையில் இல்லாத வகையில் போருக்குத் தயாரானார்கள். இந்தியா வின் மொகலாய இஸ்லாமிய ஆட்சியில் முதல் மகனுக்கு ஆட்சியில் உரிமை கொண்டாட முதல் தகுதி உண்டு. மேலும் சகோதரர்கள் இருந்து விருப்பப்பட்டால் அவர்களும் உரிமை கோரலாம். அப்படியாரும் இல்லாவிட்டால் கவர்னர்களோ அல்லது பலரின் சிபாரிசு பெற்ற சிறந்த தலைவரோ உரிமை கோரலாம். ஆனால் மொகலாயர்களிடம் எப்போதும் இல்லாத முதல்முறையாக ஷாஜஹான், இன்னார்தான் அடுத்த ஆட்சி யாளர் என்று சாசனம் எழுதியதால் மற்ற சகோதரர்கள் வெகுண்டன        ஷாஜஹான் அருகிலிருந்த தாரா தனக்கு ஆட்சிப் பொறுப்பு வழங்கப் பட்டுவிட்டது என்பதையோ, மேலும் அரண்மனையில் நடப்பது எதையும் சகோதரர்களுக்கு தெரியப்படுத்தக்கூடாது என்று மற்றவர்களுக்கு உத்தரவிட்டார். பயணிகள் யாரும் டெல்லியில் நடப்பதை தெரியப்படுத்தி விடுவார்கள் என்று எண்ணியதால், பெங்கால், குஜராத் மற்றும் டெக்கான் செல்லும் சாலைகளை அடைத்தார். அரசவையில் இருந்த ஔரங்க ஸேப்பின் அலுவலகத்தை பறிமுதல் செய்து கொண்டு, அவரின் அதிகாரி களையும் அழைத்துக் கொண்டார். சகோதரர்களை சிறை பிடிக்க எதிர் பாராத விதமாக படைகளை அனுப்பினார். இதற்குள் ஷாஜஹான் சற்று உடல்நலம் தேறி பொறுப்பில் இருந்ததால் சகோதரர்களின் மீது படையெடுப்பது நிறுத்தப்பட்டது அல்லது தாமதப்படுத்தப்பட்டது. ஷாஜஹானும் தான் உயிரோடிருக்கும் போது தனது மகன்கள் ஆட்சிக்கு சண்டையிடுவதை விரும்பவில்லை. தாராவின் நடவடிக்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஷாஜஹானும் மற்ற மகன்களின் வலிமை தெரியாமல் தாராவையே ஆதரித்தவராக இருந்தார்.
                        ஆனால் தன் அன்புக்கு பாத்திரமாக விளங்கும் மூத்த சகோதரி ரோஷனாரா பேகத்தின் மூலம் அரண்மனையில் நடக்கும் அத்தனையை யும் ஔரங்கஸேப் தெரிந்து கொண்டார். மற்ற சகோதரர்களான ஷுஜா, முராதுடன் எந்த நிபந்தனையுமற்ற ஒரு கூட்டுடன் ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று தாராவை எதிர்க்கத் தயாரானார்கள். இதை தெரிந்து கொண்ட ஷாஜஹானும், தாராவும் எப்படியும் இதை முறியடிக்க திட்டமிட்டார்கள். அதன்படி ஷாஜஹான் க்வாஜா சராஸ் என்ற அரவாணி யின் மூலம் மூன்று சகோதரர்களுக்கும் தந்தை என்ற முறையில் உதவுவதாக ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு கடிதம் அனுப்பினார். இது மூவருக்குமிடையில் குழப்பம் எற்படுத்தும் என்பதை உணர்ந்த ஔரங்கஸேப், ஷாஜஹானுக்கு இனி க்வாஜா சராசின் மூலம் கடிதம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஷுஜாவும், முராதும் தங்கள் பொறுப்பிலிருந்த பெங்கால் மற்றும் குஜராத் பிரதேசங்களுக்கு தாங்களே மன்னர்களென்று அறிவித்து நாணயங்களும் அச்சடித்துக் கொண்டார்கள். இதற்கு நேர்மாறாக ஔரங்கஸேப் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் அமைதி காத்தார். நர்மதா ஆற்றின் கரையிலிருந்த அனைத்து படகுகளையும் கைப்பற்றி சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.
                           

மொகலாய வரலாறு 21

 யாருக்காகவும் காத்திருக்காமல் முதலில் 1658 ஜனவரியில் இளவரசர் ஷுஜா பெங்காலிலிருந்து தன் படைகளை முன்னேற்றி பீஹார் வழியாக பனாரஸை அடைந்தார். தான் ஆளவிருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தாராவும், மிர்சா ராஜா ஜெய்சிங் கஸ்வாஹா என்பவரின் உதவியுடன் தனது மூத்த மகன் சுலைமான் ஷிகோவின் தலைமையில் ஷுஜாவை எதிர்க்க படையை முன்னேற்றினார். 1658 பிப்ரவரியில் இருபடைகளும் பஹாதுர்கர் என்ற இடத்தில் மோதிக்கொள்ள ஷுஜா தோல்வியுற்று பெங்காலுக்கே பின் வாங்கினார். இதற்கிடையில் ‘முரவ்வஜுத்தின்’ என்ற பெயரில் நாணயம் வெளியிட்டு குஜராத்தில் ஆட்சியிலிருந்த முராத் ஆறாயிரம் குதிரைகள் அடங்கிய பெரும் படையுடன் சென்று சூரத் துறைமுகத்தைக் கொள்ளையடித்தார். ஔரங்கஸேப், முராதின் சூரத் வெற்றிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். முராதும் பதிலுக்கு தான் மறுபுறம் நர்மதாவில் தாக்க இருப்பதற்கு தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு ஔரங்கஸேப்பைக் கேட்டுக் கொண்டார். இதனால் இரு சகோதரர்களும் இணைந்து கொண்டார்கள். தாராவும், காசிம் கான் மற்றும் ராஜா ஜஸ்வந்த் சிங் தலைமையில் அவர்களை எதிர்க்க படை அனுப்பினார். 1658 ஏப்ரலில் உஜ்ஜெயினுக்கு அருகில் தர்மத் என்ற இடத்தில் நடந்த போரில் தாராவின் மொகலாயப்படை தோற்க, ராஜா ஜஸ்வந்த் சிங் தன் ராஜபுத்திர வீரர்களுடன் தப்பித்து ஓடினார். வெற்றிபெற்ற சகோதரர்கள் சம்பல் பகுதியின் பாதையை வசப்படுத்தி, பிரபலமான சாமூகர் பகுதியைக் கைப்பற்றினார்கள். இராணுவத்திறமையற்ற முஸ்லீம் தளபதிகள் மற்றும் ஹிந்து ராஜாவால் தோல்வியடைந்ததால், முராத் தானே முன்னின்று இம்முறை போர் நடத்தத் தயாரானார். பொறுமை இல்லாத தாரா, மகன் சுலைமான் ஷிகோ மூலம் பஹாதுர்கர் பகுதியில் ஷுஜாவை வென்றார். தந்தையின் ஆலோசனையையும் ஒதுக்கி ஆக்ராவை விட்டு, வெளியே வந்து ஔரங்கஸேப், முராத் கூட்டணியை எதிர்கொண்டார். தாரா, 1658 மே மாதத்தில் சகோதரர்களை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் எண்ணத்தில் ஐம்பதினாயிரம் விரர்களுடன் சாமூகர் பகுதிக்கு வந்தார். ஒருபுறம் தங்கள் குலப்பெருமையைக் காக்க ராஜபுத்திரர்களும், உயிரை துச்சமாக மதித்து எப்படியேனும் சகோதரர் தாராவிடமிருந்து ஆட்சியைப் பிடித்து விடவேண்டுமென்று ஔரங்கஸேப், முராதும் கடுமையாகப் போரிட்டனர். ஆரம்பத்தில் மொகலாயர்கள் கை ஓங்கியது போல் இருந்தது. தாராவின் போர் யானை பலத்த காயமடைந்ததால், அவர் குதிரைக்கு மாறினார். இது போரின் போக்கை மாற்றியது. மொகலாயப்படைகள் யானையின் ஹௌதாவில் (கால்நடைகளில் அமர பயன்படுத்தும் படுக்கை) தாராவைக் காணாததால் படையை விட்டு விலகினார்கள். ஔரங்கஸேப் பெரு வெற்றி அடைந்தார். வெற்றிக்காக முராதைப் பாராட்டினார். தோல்விக்குப் பின் தாராவும், மகன் சிபெர் ஷிகோவும் ஆக்ரா திரும்பினார்கள்.
                               வெற்றி பெற்ற ஔரங்கஸேப் எந்த எதிர்ப்புமின்றி ஆக்ராவில் நுழைந்தார். பாக் இ நூர் என்ற இடத்தில் தங்கி, தந்தை ஷாஜஹானுக்கு தன்னால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். எக்காரணத்தைக் கொண்டும் ஷாஜஹான் தாராவைத் தவிர எந்த மகன்களையும் ஆட்சிக்கு ஆதரிக்க மாட்டார் என்பதை ஔரங்கஸேப் நங்கு உணர்ந்திருந்தார். தன் மகன் முஹம்மது சுல்தானை அனுப்பி அரண்மனையைக் கைப்பற்றச் செய்தார். ஷாஜஹானை அரண்மனையிலேயே அடுத்த எட்டு ஆண்டுகள் சிறை வைத்தார். ஷாஜஹான் தன்னிடமிருந்த “ஆலம்கீர்” என்ற போர்வாளை ஔரங்கஸேப்புக்கு அளித்தார். இறுதிக் காலத்தில் மனைவியின் நினைவிடத்தை ஓய்வுநேரம் பார்க்கும் வண்ணம் ஆக்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1666 ல் ஷாஜஹான் மரணமடைந்தார்.
                             ஔரங்கஸேப், ஷுஜா மற்றும் முராதுக்கும் இடையே  ஒருவருக்கொருவர் தாராவுக்கு எதிராக யார் போர் தொடுத்தாலும் உதவி செய்து கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தம் இருந்ததே தவிர, வெற்றி பெறுவது, ஆட்சியைப் பிடிப்பது போன்றவற்றில் எந்த உடன்பாடும் செய்து கொள்ளவில்லை. சாமூத்கரின் வெற்றிக்குப் பிறகு, ஔரங்கஸேப்பின் செல்வாக்கு உயர்ந்ததால் முராத் பொறாமை கொண்டார். அதனால் தந்தை ஷாஜஹானுக்கு மன்னிக்க வேண்டி இரகசியமாக கடிதம் எழுதி, அவரின் ஒத்துழைப்புடன் ஔரங்கஸேப்புக்கு எதிராக திட்டம் தீட்டினார். ஷாஜஹானும் முராதுக்கு உதவுவதாக கூறி, முராதையும் வெற்றி விருந்து தருவதாகச் சொல்லி  ஔரங்கஸேப்பையும், அவர் மகன்கள் அனைவரையும் அழைத்து தீர்த்துக்கட்டுமாறு ஆலோசனை சொல்லி நம்பிக்கையான ஒருவன் மூலம் கடிதம் அனுப்பினார். செய்தி அறிந்த பின் முராத் தவறுதலாக அக் கடிதத்தை ஒரு புத்தகத்தின் உள் வைத்துவிட்டார். சுத்தம் செய்யும் போது அதைக் கண்டுவிட்ட முராதின் பணியாள், அதை ஔரங்கஸேப்புக்கு அனுப்பினான். ஔரங்கஸேப் இரகசியமாக ஒரு திட்டமிட்டு முராதை தந்தை சொன்ன ஆலோசனையின் பேரில் விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்தார். விருந்தின் போது, அளவுக்கு அதிகமாக மது அருந்திய முராத், ஔரங்கஸேப் ஆட்சியாள தகுதி அற்றவரென்று உளறினார். இதற்காகவே காத்திருந்தாற் போல் ஔரங்கஸேப் அவரை சங்கிலியால் சிறைப்பிடித்து குவாலியர் சிறைக்கு அனுப்பப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
                        ஏற்கனவே பஹாதுர்கர் போரில் தோல்வியுற்று தப்பியோடிய ஷுஜா என்ற அடுத்த சகோதரர் மீண்டும் ஒருமுறை ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்தார். 1659 ஜனவரியில் ஔரங்கஸேப் காஜ்வாஹ் என்ற இடத்தில் தோற்கடித்தார். தப்பியோடிய ஷுஜாவை மீர் ஜும்லா என்பவர் விடாமல் துரத்தினார். பல இடங்களுக்கு ஓடிய ஷுஜா இறுதியில் 1660 ல் அராகான் என்ற இடத்தில் இருந்த போது மாக்ஸ்களால் (அராகான் பிரதேச மக்கள் மாக்ஸ்கள் என்றழைக்கப்பட்டனர்) கொல்லப்பட்டார். இதற்கிடையில் ஔரங்கஸேப்பின் அதிகாரிகள் தாராவை ஒவ்வொரு இடமாகத் தேடினார்கள். காத்தியாரிலிருந்து விரட்டி வரப்பட்ட தாரா அஜ்மீர் வந்து முடிந்தமட்டிலும் துணிவாக எதிர்த்து நின்றார். நான்கு நாட்களாக ஔரங்கஸேப்பால் தாராவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஐந்தாம் நாள் ஏமாற்றும் விதமாக, ஔரங்கஸேப்பை விட்டு தன்னுடன் வந்து சேர்ந்து கொள்வதாக தலேர் கான் என்பவர் சொன்னதை நம்பி, பெரும்பான்மையானவர்களை தாரா அனுப்பினார். நம்பிக்கையான ஃபிரோஸ் மேவாதி என்பவருடன், தன் மகள், மகன் சிபேர் ஷிகோ மற்றும் சிலருடன் அஹ்மதாபாத் நோக்கி சென்றார். வழியில் சிலர் அவரின் உடமைகளைப் பிடுங்கிக் கொள்ள, சில நகைகள் மற்றும் பணத்துடன் அஹ்மதாபாத்தை அடைந்தார். ஆனால், அதன் கவர்னர் அரண்மனைக் கதவிகளை அடைத்து விட, பிரபலமான கொள்ளைக்காரன் கான்ஜி கோலியின் உதவியுடன் கட்ச் பகுதிக்கு வந்தார். ஏற்கனவே கட்ச் பகுதியின் ஜமீன்தார் ஒருவர் தன் மகனுக்கு தாராவின் மகளை மணமுடிக்க ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அவர் மறுத்து விட்டார். இந்த இக் கட்டான சூழ்நிலையில் சிந்துவுக்கு சென்று விட தீர்மானித்து, சிந்துவை நெருங்கும் வேளையில் ஃபிரோஸ் மேவாதியும் மற்றவர்களும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். துயரத்தின் உச்சமாக தாராவுக்கு பெரும் ஆதரவாக இருந்த அவர் மனைவி நாதிரா பேகம் இடைவிடாத மலப்போக்கால் இறந்து போனார். இறுதியாக தாரா, மலிக் ஜிவான் கான் என்பவரிடம் அடைக்கலமாக அவர் ஔரங்கஸேப்பிடம் ஒப்படைத்தார். சிறைபிடிக்கப்பட்ட தாரா லாகூர் வழியாக டெல்லி வரவழைக்கப்பட்டு, தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
                        தந்தை தாராவுக்கு துணையாக நின்று, அவர் மறைந்தோடிய காலங்களில் உதவி செய்த மூத்த மகன் சுலைமான் ஷிகோ, ஔரங்கஸேப்புடனான அஜ்மீர் போரில் ஒத்துழைக்காமல் ஓடிப்போனார். அவரை விரட்டிப் போன ஔரங்கஸேப்பின் உறவினரான ஷாயிஸ்தா கான் என்பவர் கார்வாலில் சிறை பிடித்து அழைத்து வந்தார். க்வாலியர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 1662 ல் இறந்து போனார். மற்ற சகோதரர்களின் அனைத்து மகன்களையும் ஔரங்கஸேப் சிறையில் அடைத்தார். சிபேர் ஷிகோ மற்றும் ஆஸாத் பக் ஷ் என்ற சகோதரர்களின் இருமகன்கள் ஔரங்கஸேப்பின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது மகள்களை முறையே மணந்ததால் பிழைத்துக் கொண்டார்கள். சகோதரர் ஷுஜாவின் மகளை மணந்து இடையே ஷுஜாவுக்கு ஆதரவாக இருந்த சொந்த மகனையே ஔரங்கஸேப் சிறையில் அடைத்தார்.
                            மேற்படி உறவுகளிடையே ஔரங்கஸேப் கடுமையாக நடவடிக்கை எடுக்க காராணங்களாக பின் வருபவை கூறப்படுகின்றன. ஆரம்பத்திலேயே ஷுஜாவும், முராதும் தன்னிச்சையாக தாங்கள் பொறுப்பாக இருந்த பகுதிகளை ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார்கள். இதனால் தான் தற்போது மொகலாய ஆட்சிக்கு வந்ததால், எப்போதுமே அவர்களால் ஆபத்து தான். அடுத்து டெக்கானின் பொறுப்பில் ஔரங்கஸேப் இருந்த போது, தாராவின் தலையீடு பெரும்பாலும் இருந்தது. இந்த ஆரம்ப வெறுப்பு நாளாக ஆக தந்தையின் மூலம் தாரா ஆட்சிக்கு வந்ததால் மேலும் பலமாகியது. ஷாஜஹான் உடல் நலமில்லாமல் இருந்த செய்தி முதல் கூடுமானவரை எந்த ராஜாங்க செய்தியும் மற்ற சகோதரர்கள் தெறிந்து கொள்ளாதவரை பாதுகாத்தார். ஔரங்கஸேப் மிகச்சிறந்த நெறியான முஸ்லீமாக இருந்தார். ஒருவேளை தாரா ஷிகோ ஆட்சி செய்தால் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி மிகச் சீர்கேடான நிலையை அடையும் என்று எண்ணினார் என்று முஹம்மது காசீம் கூறினார்.
                        அலி மர்தான் கான் என்பவரின் பொறியியல் மேற்பார்வையில் கட்டப்பட்ட ராவியிலிருந்து லாகூருக்கு கட்டப்பட்ட கால்வாயும், ஷலாமார் தோட்டமும் மிகச் சிறப்பானது. அசஃப்கான் என்ற அப்துல் ஹசனாகிய ஷாஜஹானின் மாமனார் மொகலாய ஆட்சியில் பெரிய பொறுப்பு வகித்தார். இறுதிக்காலம் வரை ஷாஜஹானுக்குத் துணையாக இருந்தார். அவர் 1641 ல் லாகூரில் மரணமடைந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து, அதிகமான படிப்பறிவினால் மொகலாய ஆட்சியில் சிறப்பான இடத்திற்கு அல்லாமா சாஃதுல்லாஹ் கான் என்பவர் வந்தார். இந்திய மந்திரிகளிலேயே மிகவும் நேர்மையானவர் என்ற பெயரைப் பெற்றார். ஷாஜஹானின் நிர்வாகத்திறமை மிகவும் நன்றாக இருந்தது.  ஷாஜஹானின் நிர்வாகம் முன்னவர்களைப் போலவே இருந்தது. ஆனாலும் நல்ல முன்னேற்றம் கண்டது. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி கண்டு, வருவாயைப் பெருக்கியது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். நல்ல நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று கவர்னர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் பெர்னியர், தவேனியர், நிக்கோலாவ் மனுச்சி மற்றும் பீட்டர் முண்டி போன்றோர் ஷாஜஹானின் ஆட்சியை வெகுவாகப் புகழ்ந்தனர்.
                        ஆரம்பத்தில் பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டிருந்தாலும் போரின் விளைவை எண்ணி தவிர்க்க விரும்புவார். கட்டிடக்கலை, ஓவியம், கவிதை மற்றும் இசைக்கலைகளில் சிறந்து விளங்கியது. தாஜ்மஹலும், டெல்லி கோட்டையும், டெல்லி ஜும்மா மசூதியும் கட்டிடக் கலையின் சிறப்பாகும். சிறந்த பாடகர்களான ராம் தாஸ் மற்றும் மஹாபட்டர் ஆகியோரை அரசவையில் வைத்திருந்த ஷாஜஹான் தானும் ஒருசிறந்த பாடகராக இருந்தார். தான் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் தோட்டங்கள் உள்ளதாக கட்டினார். நபிமார்கள் வரலாறு மற்றும் சிறந்த பெர்ஷிய இலக்கணங்களை யாரையாவது படிக்க வைத்து கேட்பது ஷாஜஹானுக்கு மிகவும் பிடித்தது. வாழ்க்கை வரலாறுகளில் தைமூரியர், பாபரின் வரலாறுகள் மிகவும் பிடித்தமானவை. இரவுகளில் திரைகளுக்குப் பின் ஒருவரை படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டே உறங்குவது ஷாஜஹானுக்கு பிடித்தமான ஒன்று. மொகலாய மன்னர்களிலேயே மிகவும் கனிவானவர் ஷாஜஹான் என்று சரித்திர ஆய்வாளர் ஸ்டான்லி லேன் பூல் தெரிவிக்கிறார். மனைவி மும்தாஜ் மஹலின் மீதிருந்த அதீத பிரியத்தால் வேறு மணம் கொள்ளாதவராக இருந்தார்.

புதன், 8 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 16

நூர் உத் தீன் முஹம்மது ஜஹாங்கீர்
கூ.செ.செய்யது முஹமது
1605 அக்டோபர் மாதம் 10 ந் தேதி அக்பர் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின், சலீம் என்று அழைக்கப்பட்ட நூர் உத் தீன் முஹம்மது ஜஹாங்கீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆட்சிக்கு வரும் போது ஜஹாங்கீருக்கு முப்பத்தி எட்டு வயது. ஜஹாங்கீர் பாதுஷா என்றும் அழைக்கப்பட்டார். தான் வெளியிட்ட நாணயத்தில் பேரரசர் அக்பரின் மகனும், உலகப் பாதுகாவலருமான ஜஹாங்கீர் என்று பொறித்துக் கொண்டார். ஆட்சிக்கு வரும் போது 150 கோடி ரூபாயும், 4,000 கிலோ தங்கமும் அரசு பொக்கிஷத்திலிருந்ததாகவும், தனது கிரீடம் ஒரே வடிவம் கொண்ட பனிரெண்டு அமைப்புகளில் பெரிய வைரமும், நடுவில் நான்கு முத்துக்களும் பதிக்கப்பட்டு அன்றைய மதிப்பில் ஒரு கோடியே எட்டு லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்பில் இருந்ததாகவும் தனது சுயசரிதையில் சொல்லி இருக்கிறார். ஜஹாங்கீரின் பதவியேற்பு நாற்பது நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டது. மது மற்றும் ஓப்பியம் பழக்கத்திற்கு அடிமையாய் இருந்து ஆடம்பரமாக வாழ்ந்தாலும், கல்வியறிவாலும், புத்திசாலித்தனத்தாலும் மொகலாயப் பேரரசின் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இருபது கோப்பைக்கு மேல் மது குடித்த இவர் பின் ஐந்து கோப்பைகளாகக் குறைத்துக் கொண்டார். தான் பிறந்த மாதத்தில் நாட்டில் இறைச்சியையும், கால்நடைகளை அறுப்பதையும் தடை செய்தார். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்தார். பயத்திலிருந்த தந்தையின் நெருங்கிய நண்பர்களுக்கும், நம்பிக்கையான அதிகாரிகளுக்கும் அவர்களின் பொறுப்புகளுக்கும் உத்திரவாதம் அளித்தார். ஹிந்துக்களிடமும் நம்பிக்கை பெற்று, இளவரசர் குஸ்ருவுக்கு ஆதரவளித்த ராஜா மான் சிங் போன்றோரை மன்னித்தார். பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1606 மார்ச்சில் முதல் நௌரோஸ் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடச் செய்தார்.
  1605 ல் சில தலைவர்கள், ராஜா ராம் தாஸ், முர்தஸா கான், சைய்யத் கான், கூலிச் முஹமது மற்றும் மிர்சா அஜீஸ் கோகா ஆகியோர் ராஜா மான் சிங் தலைமையில் ஜஹாங்கீரின் மகன் குஸ்ருவை பதவிக்கு கொண்டுவர திட்டமிட்டார்கள். அக்பரின் மரணத்தின் போது சற்று ஒத்துப்போன தந்தை ஜஹாங்கீர் மற்றும் மகன் குஸ்ரு உறவு அதன் பின் பாசமற்றுப் போனது. ஆக்ராவிலிருந்து தப்பித்துப் போன குஸ்ரு 350 குதிரை வீரர்களுடன் லாகூருக்கு சென்றார். வழியில் மதுராவின் ஆட்சியாளர் ஹுசெய்ன் பேக் பதக் ஷானின் உதவியுடன் மேலும் மூவாயிரம் குதிரை வீரர்களை சேர்த்துக் கொண்டு, லாகூரின் திவான் அப்துர் ரஹாமனின் உதவி, குரு அர்ஜன் (க்ரன்த் சாஹிப் எழுதிய ஆசிரியர்) உதவி ஆகியவற்றுடன் லாகூர் சென்றார். லாகூரின் கவர்னர் திலாவர் கான் நகரின் கதவுகளை அடைத்து குஸ்ருவை தடுத்தார். குஸ்ரு எதிர்தாக்குதல் நடத்தி நகரின் ஒரு கதவை தீயிட்டுக் கொளுத்தினார். குஸ்ரு ஒரு வாரமாக தாக்குதல் நடத்தினார். தந்தை ஜஹாங்கீர் தன்னை நோக்கி வருவதை அறிந்த குஸ்ரு வடமேற்காக ஓடினார். ஜஹாங்கீர் குஸ்ருவை தீவிரமாக எதிர்த்தார். ஜஹாங்கீரின் கோபத்தைக் கண்டு, உஸ்பெக்குகளும், பெர்ஷியர்களும் பயந்தனர். ஜஹாங்கீருக்கும், குஸ்ருவுக்கும் இடையே முயற்சித்த சமாதானங்கள் தோல்வியில் முடிய, பைரோவால் என்ற இடத்தில் மோதிக் கொண்டனர். இறுதியில் குஸ்ரு தப்பித்து ஓடினார். குஸ்ருவின் நகைப் பெட்டகத்தையும், விலைமதிப்பில்லாத சில பொருட்களையும் ஜஹாங்கீர் கைப்பற்றினார். இடைவிடாத ஜஹாங்கீரின் படைகளையின் தேடுதலுக்குப் பிறகு, குஸ்ரு கைது செய்யப்பட்டு, பலமான சங்கிலியில் பிணைக்கப்பட்டு ஜாங்கீரின் முன் நிறுத்தப்பட்டார். குஸ்ருவின் கண்கள் பிடுங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். 
குரு அர்ஜன் சபைக்கு வரவழைக்கப்பட்டு, தன் மகளை மருமகளாக ஏற்க மறுத்த சந்து ஷா என்பவருக்கு இழைத்த அநீதிக்காக குரு அர்ஜனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இதனால் சீக்கியர்கள் ஜஹாங்கீருக்கு எதிராக இருந்தார்கள். அப்போதைய ஆசியாவின் சிறந்த மன்னராக இருந்த பெர்ஷியாவின் ஷா அப்பாஸ் என்பவர் 1595 ல் அக்பரால் வென்றெடுக்கப்பட்ட கந்தாரை கைப்பற்ற படையெடுத்தார். ஷா பேக் கானால் பலமாக எதிர்க்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டார். சுமுகமான ராஜதொடர்புகள் இருப்பது போல் இருந்து கந்தார் சற்று பாதுகாப்பு தளர்த்தப்பட்டவுடன், 1662 ல் திடீரென்று எதிர்ப்பின்றி ஷா அப்பாஸ் கந்தாரை கைப்பற்றிக் கொண்டார். தூரப்பிரதேசமாக இருந்த கந்தாரை மீண்டும் கைப்பற்ற ஜஹாங்கீர் தன் மகன் குர்ரமை படையுடன் செல்லச் சொன்னார். ஆனால், ஜஹாங்கீருக்கு அடுத்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக கருதிய குர்ரம் போரிடச் செல்ல மறுத்து விட்டார். இது தன் மருமகன் ஷஹ்ர்யாரை ஆட்சிக்கு கொண்டு வர எண்ணும் நூர்ஜஹானுக்கு சாதகமாக இருந்தது. அவர் கணவரிடத்திலே சமயம் பார்த்து குர்ரமின் ராஜதுரோகத்திற்கு தூபம் போட்டார். ஜஹாங்கீர் குர்ரம் வசமுள்ள படைகளை திரும்பப் பெற்று அவரை தலைநகர் திரும்பச் சொன்னார். இதற்கு மறுப்பு தெரிவித்த குர்ரமுக்கு எதிராக மீண்டும் ஜஹாங்கீரிடம் எதிர்கருத்துகளை சொல்லி குர்ரமை எதிரியாக்கினார் நூர்ஜஹான். நீண்டகாலமாக குர்ரமின் கனவாய் இருந்த தோல்பூரை நிர்வகிக்கும் ஆசையைத் தகர்த்து அதை ஷஹ்ர்யாருக்குப் பெற்றுத் தந்தார். நூர்ஜஹான் மேலும் ஷஹ்ர்யாரை முன்னேற்றும் வண்ணம் கணவரிடம் பரிந்துரைத்து மன்சாபாக (மன்சாப் என்பது இராணுவத்திலும், குடிமக்களிடத்திலும் உண்டான ஒரு தகுதி-RANK / ஐந்தாயிரம் மன்சாப்களுக்கு மேலுள்ளவர்கள் அமீர் அல் உமரா என்னும் உயர் தகுதிக்குண்டானவர்கள்) பனிரெண்டாயிரம் ஸாட்டுகளையும், எட்டாயிரம் சவார்களையும் (சவார் என்பது தனது கட்டுப்பாட்டுக்கு கீழுள்ள குதிரைப் படையின் எண்ணிக்கையின் தகுதி) பெற்றுத்தந்தார். மேலும் கந்தார் படைக்கு தலைமை ஏற்கும் பொறுப்பையும் ஷஹ்ர்யாருக்குப் பெற்றுத் தந்தார்.
இதனால் முற்றிலும் நிலைகுலைந்த இளவரசர் குர்ரம் தந்தையின் கோபம் தணிக்க ஜஹாங்கீரிடம் மன்னிப்பு கோர தயாரானார். ஆனால் நூர்ஜஹான் அதற்கு பெரும் இடையூறாக இருந்தார். குர்ரமுக்கு மன்னரை எதிர்த்து புரட்சி செய்வதை தவிர வேறு வழியில்லாமல் போனது. கந்தார் முற்றுகையும் தோல்வியில் முடிந்தது. ஹிந்துக்களின் புனித இடமாக இருந்த பஞ்சாபின் காங்க்ராவை வெல்ல ஜஹாங்கீர் முடிவு செய்தார். இதற்கு குர்ரம் தளபதியாக நியமிக்கப்பட்டார். காங்க்ராவைச் சுற்றியுள்ள மலைப்பகுதி தலைவர்களை வெற்றி கொண்டு பிரதான கோட்டையின் தொடர்புகளை மொகலாயப் படைகள் துண்டித்தார்கள். ஏறக்குறைய ஓராண்டுக்கு மேலாக நீடித்தது தாக்குதல்கள். காங்க்ராவின் கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு உணவுக்கு வேறு வழியில்லாமல் காய்ந்த புற்களை கொதிக்க வைத்து உண்டார்கள். வேறு வழியில்லாமல் 1620 நவம்பரில் காங்க்ரா ஜஹாங்கீரிடம் சரண்டைந்தது. அடுத்து ராஜபுத்திரர்களின் பெருமையான பகுதியான மேவாரின் மீது ஜாங்கீரின் கவனம் திரும்பியது. போற்றத்தக்க ராஜாவாக இருந்த ராணா பிரதாபின் மகன் அமர்சிங் உதைபூரில் ஆட்சியில் இருந்தார். அமர்சிங்கும் தந்தையைப் போல் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். மொகலாயர்களிடம் அடிபணிய மறுத்தார். ஜஹாங்கீர் தன் மகன் இளவரசர் பர்வேஸின் தலைமையில் தகுந்த போர்க்கருவிகளுடன் மேவாரின் மீது படையெடுக்கச் செய்தார். ராஜபுத்திரர்கள் கடுமையாக எதிர்த்தனர். இடையில் இரு படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரண்டாண்டுக்கு பிறகு மீண்டும் மேவாரின் மீது ஜஹாங்கீர் படை நடத்தினார். இம்முறை மொகலாயப் படைக்கு மஹபத் கான் தலைமை தாங்கினார். மஹபத் கான் ராஜபுத்திரர்களை வென்றபோதும் பொருளாதார ரீதியாக பலன் தரவில்லை. 1614 ல் இளவரசர் குர்ரம் தலைமையில் மீண்டும் மேவாரின் மீது புது உத்வேகத்துடன் படையெடுக்கப்பட்டது. திறமையான இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையின் படி ராஜபுத்திரர்களின் வெளியுலக உணவு மற்றும் தகவல் பரிமாற்றங்கள் தடுக்கப்பட்டது. இதனால் ராஜபுத்திரர்கள் சரணடைந்தனர். இதனால் சமாதானத்திற்கு ராஜபுத்திரர்கள் ஒப்புக் கொண்டனர். அதன் விளைவாக ராணா மொகலாயர்களின் கீழ் ஆட்சி செய்வதாக பணிந்து ராஜபுத்திரர்களின் இளவரசர் கரண் தலைநகருக்கு சென்று பேரரசரை சந்திக்க அனுப்பப்பட்டார். 
மேலும் ஆயிரம் குதிரைகளை மொகலாயர்களுக்கு அளிப்பதின் பேரில், சித்தூர் கோட்டை ராஜபுத்திரர்கள் வசமே இருக்கும் என்றும், ராணாவும், அவர் மகனும் ஐந்தாயிரம் குதிரைகளை நிர்வகிக்கும் பொறுப்பும் ஏற்பர் என்றும் முடிவானது. ஜஹாங்கீர் ராணாவின் வயதை கருதி மொகலாய அரண்மனை கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் தந்து நன்கு மரியாதை செய்தார். ராணா மற்றும் அவர் மகனின் ஆளுயர உருவங்களை சலவைக்கல்லில் குடைந்து ஆக்ராவின் தோட்டத்தின் (ஜரூகா) பார்வையாளர்கள் வரிசையில் வைத்து கௌரவம் செய்தார். மேவார் பல ஆண்டாக மொகலாயர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் ஜஹாங்கீர் கூடுமானவரை ராணாவிற்கு மரியாதை செய்ததாக ஒரு கருத்துண்டு. மேவாரின் வெற்றிக்குப் பிறகு முப்பதாயிரம் மன்சாபிற்கு மதிப்பளிக்கப்பட்டு, இளவரசர் குர்ரம் “ஷா குர்ரம்” என்று கௌரவமளிக்கப் பட்டார். அக்பர் அஹ்மத் நகர், பிரார் மற்றும் காந்தேஷ் ஆகியவற்றை வெற்றி கொண்டு மேலும் தெற்கு நோக்கி பரவ திட்டமிட்டிருந்தார். ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக டெக்கான் பகுதியிலிருந்து கவனத்தை திருப்பினார். 

மொகலாய வரலாறு 17

தற்போது அக்பரின் ஆசையின்படி ஜஹாங்கீர் டெக்கான் மீது கவனம் செலுத்தினார். முதலில் அஹ்மத்நகர் மீது படையெடுத்த போது நிஜாம்ஷாஹி மன்னராட்சியாக இருந்த அஹ்மத் நகரின் அபிசீனிய மந்திரி மலிக் அம்பரின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அவரின் வயதும் இராணுவ அநுபவமும் மொகலாயர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மலிக் அம்பர் மிகச் சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுனராகவும் இருந்தார். நாட்டின் வருவாயை மறுசீரமைப்பு செய்து வெற்றி கண்டிருந்தார். இவரின் இந்த வெற்றி அணுகுமுறையையே அக்பர் தொடர்ந்திருந்தார். இராணுவத்தினரை ஒழுங்கு படுத்தி கொரில்லா பயிற்சியும் அளித்திருந்தார். மொகலாயப் படைகளுக்கு அப்துர் ரஹீம் தலைமை தளபதியாக பொறுப்பேற்று அஹ்மத்நகரில் மலிக் அம்பரிடம் படுதோல்வி அடைந்தார். 1611ல் அப்துர் ரஹீம் தங்கத்தை கையூட்டாகப் பெற்று தோல்வி அடையச் செய்தார் என்று அவரின் எதிரிகளால் சொல்லப்பட்டது. ஜஹாங்கீர் கான் ஜஹான் லோதி என்பவரை தளபதியாக நியமித்து இளவரசர் பர்வேசுடன் காந்தேஷிலிருந்து அஹ்மத்நகர் மீது தொடர் தாக்குதல் நடத்தச் செய்தார். குஜராத்தின் கவர்னர் அப்துல்லாஹ்வும் கலந்து கொண்டார். ஆனாலும் தோல்வியிலேயே முடிந்தது. மொகலாயர்களுக்கு பெரும் சவாலாக இருந்த அஹ்மத்நகர் மீது 1617 ல் இளவரசர் குர்ரம் தலைமையில் சிறந்த இராணுவ அதிகாரிகள் துணையுடன் அனுப்பப்பட்டார். ஜஹாங்கீரின் ஆலோசனைப்படி ஆதில் ஷாவிடம் அமைதிக்கு பேச்சு வார்த்தை நடத்தினர். ஆதில் ஷா இளவரசருக்கு பதினைந்து லட்சம் ரூபாய் பெருமான பரிசுகளை அளித்து மலிக் அம்பரால் கைப்பற்றப் பட்டிருந்த மொகலாய பிரதேசங்களை திருப்பித் தர ஒப்புக் கொண்டார். இதில் இளவரசர் குர்ரமின் நடவடிக்கையும் பாராட்டப்பட்டு “ஷா ஜஹான்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். பேரரசர் ஜாங்கீரால் தட்டு நிறைய தங்கத்தை தலையில் கொட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார். சிறப்பான விருந்தளிக்கப்பட்டு மேலும் விலைமதிப்பில்லாத பரிசுகள் வழங்கப்பட்டன. 1629 ல் ஜஹாங்கீரின் மறைவிற்குப் பிறகு, அஹ்மத்நகர் வெல்லப்பட்டது. 
குஸ்ரு என்ற இன்னொரு இளவரசர் தந்தை ஜாங்கீருக்கு எதிராக சதி செய்து ஆட்சியைப் பிடிக்க முயற்ச்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்து இளவரசர் கண்கள் பறிக்கப்பட்டார். ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, நான்கு பேர் தூக்கிலிடப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு, குஸ்ருவின் துரோகம் மறக்கப்பட்டு, தந்தையின் பாசத்தால் கை தேர்ந்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குஸ்ருவிற்கு சிறிது பார்வை தெரியுமாறு செய்யப்பட்டது. அதனால் குஸ்ரு தந்தையின் கீழ் மரியாதையாக இருந்தார். இது சகோதரர் ஷாஜஹானுக்கு சற்று பிடித்தமானதாக இல்லை. இதனிடையில் தான் நூர்ஜஹான் தனது மருமகன் ஷஹ்ர்யாரை அடுத்து ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டார். அவரும் குஸ்ருவை விரும்பவில்லை. 1616 ல் பரம எதிரியான ஆசஃப் கானால் இளவரசர் குஸ்ரு சிறை பிடிக்கப்பட்டார். பின் ஷாஜஹான் வசம் 1622 ல் ஒப்படைக்கப்பட்டு புர்ஹான்பூர் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார். ஆனால் கடுமையான குடல் வலியால் இறந்து போனதாக சொல்லப்பட்டது. குஸ்ருவின் மீது பாசமாயிருந்த ஜஹாங்கீரால் இவரது அடக்கவிடம் தோண்டப்பட்டு, அலஹாபாத்தில் குஸ்ரு பாக் என்ற தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டார். இளவரசர் குஸ்ரு நாட்டு மக்களால் மதிக்கப்பட்ட அழகான தோற்றம் கொண்டவராய் இருந்தார். முப்பத்தைந்து வயது வரை ஒரே மனைவியுடன் அன்பாக இருந்தார். 
அவ்வளவாக கவனம் செலுத்த முடியாத தூரத்தில் அக்பர் ஆட்சியிலிருந்து பெங்கால் மொகலாயர்கள் வசம் இருந்தது. மொகலாயர்களுக்கு அடிபணிந்தவராக ராஜா மான் சிங் ஆண்டு வந்தார். அவர் பெயருக்கு தான் மொகலாயர்களுக்கு கீழிருப்பது போல் நடித்தாரே தவிர அவர் எண்ணமெல்லாம் ஆப்கானியர்களை இந்தியாவில் ஆளச் செய்யவேண்டும் என்ற ஆசையில் இருந்தார். எப்படியாவது மொகலாயர்களை அழிக்க எண்ணி தானே பெங்கால் முழுதும் சுற்றி புரட்சி குழுக்களையும், ஜமீந்தார்களையும் சந்தித்தார். அதற்கேற்றவாறு பல பகுதிகளின் கவர்னர்களை மாற்றி வைத்தார். உஸ்மான் என்பவரின் மூலம் 1612 ல் புரட்சியில் இறங்கி மொகலாயர்களுக்கெதிராக போரிட்டார். இதில் பலமான காயம் அடைந்த நிலையிலும் உஸ்மான் ஆறு மணி நேரம் படைகளை நடத்தினார். இறுதியில் தோல்வியுற்று பெங்கால் மொகலாயர்கள் வசமானது. ஜஹாங்கீர் இஸ்லாம் கான் என்பவரை தரம் உயர்த்தி அதன் கவர்னராக்கினார். ஆப்கானியர்களை கனிவாக நடத்தி அவர்களுக்கும் பதவிகளை ஜஹாங்கீர் கொடுத்தார். இதனால் பெங்கால் பலமானதாக இருந்தது. 1616 ல் இந்தியாவில் அக்குள் பகுதியை கடுமையாக தாக்கிய ப்ளேக் நோய் பரவியது. முதலில் எலிகளிடம் ஆரம்பித்த இது வேகமாக மனிதர்களிடம் பரவியது. பஞ்சாபில் துவங்கிய நோய் மொத்த வட இந்தியாவையும் தாக்கியது. அடுத்தடுத்து பலர் இறந்தனர். பெரும் தொற்றாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு காடுகளுக்கு ஓடினர். லாகூர், காஷ்மீர் மற்றும் ஆக்ராவில் பலர் உயிரிழந்தனர். 
       ஜஹாங்கீரின் ஆட்சியில் அவரின் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. டெஹ்ரானைச் சேர்ந்த கியாஸ் பேக் என்பவரின் அழகிய மகள் மெஹ்ர் உன் நிசா என்பவருடன் ஜஹாங்கீருக்கு திருமணம் நடந்தது. மணமகள் உச்ச அழகியாக இருந்தார். கியாஸ் பேக் தன் சொந்த ஊரை விட்டு நல்ல வாழ்க்கையை நாடி இந்தியா வந்தார். அவர் கந்தாரில் இருந்த போது அவர் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. வறுமையின் காரணமாக கியாஸ் பேக்கால் தாயையும், குழந்தையையும் சரியாக கவனிக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நல்ல மனம் படைத்த மலிக் மசாவூத் என்ற வியாபாரியின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்தார். அந்த வியாபாரிக்கு மொகலாய அரண்மனையில் சில தொடர்புகள் இருந்தது. மலிக் மசாவூத் மன்னர் அக்பருடன் பணியில் இருந்த போது சரியான சந்தர்ப்பத்தில் கியாஸ் பேக்கை அறிமுகப் படுத்தினார். உடனே அக்பரால் பணி கிடைக்கப்பட்டு அரண்மனையில் சேர்ந்தார். கியாஸின் குணத்தாலும், வேலைத்திறனாலும் பாராட்டைப் பெற்று முன்னூறு (RANK) தரத்திற்கு தகுதி பெற்றார். கியாஸின் மனைவியும், இளைய மெஹ்ர் உன் நிசாவும் தாராளமாக அந்தப்புரத்திற்கு நடமாடும் அனுமதி பெற்று ராஜகுடும்பத்திற்கு உதவியாக இருந்தார்கள். மெஹ்ர் உன் நிசா பருவம் எய்தி பதினேழு வயதான போது, பெர்ஷியாவின் இரண்டாம் ஷா இஸ்மாயிலிடம் மேஜைப் பணியாளராக இருந்த அலி குலி இஸ்தஜ்லூ (இன்னொரு பெயர் ஷேர் ஆப்கான்) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அலி குலி பேரரசர் அக்பரிடம் பணிக்கு சேர ஆவல் கொண்டார். அக்பர் அலி குலியை இளவரசர் சலீமுக்கு (ஜஹாங்கீர்) பணி செய்ய உத்தரவிட அதன் மூலம் மேவார் சென்றார். அலி குலியின் கனிவான சேவையில் மனம் குளிர்ந்த சலீம் ‘ஷேர் ஆப்கான்’ என்ற சிறப்புப் பெயரை அளித்தார். சலீம் தந்தைக்கு எதிராக புரட்சி செய்த போது அனைத்து ஆதரவாளர்களும் சலீமை விட்டு ஓடிவிட, அதில் ஷேர் ஆப்கானும் ஒருவர். தான் ஆட்சிக்கு வந்த பின் ஷேர் ஆப்கானை மன்னித்து பதவி உயர்வாக பெங்காலின் புர்த்வான் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார். 
ஷேர் ஆப்கான் ஜஹாங்கீருக்கு எதிராக புரட்சி செய்ய தயாராவதாக பெங்காலிலிருந்து தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அரண்மனைக்கு வந்து விளக்கம் கொடுக்க ஜஹாங்கீர் உத்தரவிட்டார். அதற்கு ஷேர் ஆப்கான் பணியவில்லை. இதை அப்பகுதியின் கவர்னரான குத்புதீன் கோகாவிடமும் ஜஹாங்கீர் தெரியப்படுத்தினார். குத்புதீன் கோகா முட்டாள்தனமாக ஷேர் ஆப்கானை கைது செய்ய உத்தரவிட்டார். குத்புதீன் கோகா பெரும் ஆட்களுடன் சென்று ஷேர் ஆப்கானை சூழ்ந்து கொள்ள, அதிர்ச்சியுற்ற ஷேர் ஆப்கான் ‘இது என்ன நடைமுறை? என்று வினவ, ஜஹாங்கீரின் உத்தரவை தெரிவிக்க குத்புதீன் அவரை நெருங்க, ஷேர் ஆப்கான் கவர்னரின் பணியாளை வாளினால் காயப்படுத்தினார். இந்த செயலினால் அருகிலிருந்த கவர்னரின் இன்னொரு பணியாள் ஷேர் ஆப்கானை எதிர்பாராத விதமாக வாளால் வெட்டிக் கொலை செய்தார். கணவர் இறந்த பிறகு மெஹ்ர் உன் நிசாவும், அவரின் சிறிய மகளும் அந்தப்புரத்திற்கு வரவழைக்கப்பட்டு, விதவையான ராணி சலீமா சுல்தானுக்கு பணிவிடை செய்ய நியமிக்கப்பட்டார். 1611 மே மாதம் ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசாவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசா மீது காதல் கொண்ட காரணத்தால் திட்டமிட்டே ஷேர் ஆப்கான் கொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல் நடமாடியது. ஆனால், ஷேர் ஆப்கானின் ஜஹாங்கீருடனான காலகட்டங்களை நன்கு ஆராய்ந்த பின்னும், கவர்னர் குத்புதீன் கோகாவின் கொலைக்கான விளக்கமும், அது தற்செயலாக நடந்தது தான் என்றும் ஜஹாங்கீருக்கு துளியும் சம்பந்தமில்லை என்று தெளிவானது. ஷேர்கான் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக ராணியை சந்திக்கச் சென்ற ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசாவின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொண்டார். அவரை மிகவும் விரும்பிய ஜஹாங்கீர் நூர் மஹால் ( அரண்மனையின் ஒளி) என்றும், நூர்ஜஹான் (உலகின் ஒளி) என்றும் புகழ்ந்தார். பதினாறு ஆண்டுகள் ஷேர் ஆப்கானுடன் வாழ்ந்த நூர்ஜஹான் ஜஹாங்கீருடனான நான்காண்டுகால வாழ்க்கையிலேயே பேரரசி ஆனார். இவர் மீது ஜஹாங்கீர் கொண்டிருந்த அன்பின் அடையாளமாக இஸ்லாமிய மன்னர்களிலேயே முதல்முறையாக நாணயத்தில் மனைவியைப் பொறித்தார்.
நூர்ஜஹான் விரைவில் பேரரசியாக புகழின் உச்சத்திற்கு வந்தார். உயர் கலாச்சாரத்தின் வடிவமாக திகழ்ந்த இவர் அரபு மற்றும் பெர்ஷிய மொழியில் புலமை வாய்ந்திருந்தார். கவிதைகளைப் புனைவதிலும் திறமை வாய்ந்த இவர் அரண்மனையின் மதிய வேளைகளை சிறப்பாக்கினார். இந்தியாவில் அதுவரை இல்லாத வகையில் புதுமையாக ஆபரணங்களையும், சில்க் மற்றும் காட்டன் உடைகளுக்கு அலங்காரங்கள் வடிவமைத்தார். இன்றைக்கும் இருக்கும் ரோஜா வாசம் கொண்ட அத்தர் என்னும் நறுமணம் இவர் கண்டுபிடித்தது தான். நூர்ஜஹானின் உருவ அமைப்பும் அவரின் பேரரசி தோற்றத்திற்கு கம்பீரமாக இருந்தது. கணவருடன் வேட்டைக்குச் சென்று புலிகளை வேட்டை ஆடியிருக்கிறார். ஒரு சமயம் இவர் திறமை கண்டு ஜஹாங்கீர் வியந்து வைரங்கள் பதிக்கப்பட்ட இரண்டு கை வளயங்களை பரிசளித்தார். மேலும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆயிரம் தங்க வில்லைகளையும் அளித்தார். தனது அதிபுத்திசாலி தனத்தால் எந்த சிக்கலும், ஆபத்துகளும் விளையாவண்ணம் பார்த்துக் கொண்டார். போரின் போது யானையின் மீது அமர்ந்து அம்புகளை எதிரியின் மீது எரிவதைப் பார்த்து இராணுவ அதிகாரிகளும், திறமையான போர் வீரர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
     

மொகலாய வரலாறு 18

ஜஹாங்கீரின் அரசியல் அதிகாரத்திற்கு பின் பலமாக நூஜஹான் திகழ்ந்தார். இவரின் உடன் புரிந்து கொள்ளும் ஆற்றலும், நுண்ணறிவும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஜஹாங்கீருக்கு பக்கபலமாக விளங்கினார். மந்திரிகளும், அறிவாளிகளும் இவரின் ஆலோசனைகளை ஏற்றார்கள். நிர்வாகத்தின் எந்த விஷயமும் இவரின் கவனத்திலிருந்து தப்பாது. அதே நேரத்தில் எல்லாமே நல்லதாக செய்தார் என்று கொள்ள முடியாது. தன் சொந்த குடும்பத்தினரின் நன்மையையே கருதினார். அவர்களை நல்ல பதவிகளில் அமர்த்தி தன்னைச் சுற்றி அவர்களையே வைத்துக் கொண்டார். ஷேர் ஆப்கான் மூலம் தனக்குப் பிறந்த மகளை ஷஹ்ர்யாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மேலும் தான் அதிகாரம் பெற ஷஹ்ர்யாரை ஆட்சிக்கு கொண்டுவர முயற்ச்சித்தார். ஜஹாங்கீருக்குப் பிறகு இளவரசர் குர்ரம் தான் ஆட்சிக்கு வருவார் என்று தெரிந்தும் தன் மருமகனை பதவிக்கு கொண்டுவர முயற்சி செய்தார். இதனால் அரண்மனையும், அந்தப்புரமும் அரசியலின் மத்திய களமானது. மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்த இளவரசர் குஸ்ருவை இடைவிடாத சதி செய்து கணவரிடமிருந்து தூரமாக்கினார். மேவாரின் வெற்றிக்குப் பிறகு ஷா குர்ரம் என்றும், டெக்கானின் வெற்றிக்குப் பிறகு ஷாஜஹான் என்றும் ஜஹாங்கீரால் புகழப்பட்ட குர்ரமின் புகழைக் குறைக்க பெரும் முயற்சி செய்தார். இளவரசர் குஸ்ருவின் மரணம், கந்தாரின் இழப்பு மற்றும் குர்ரம், மஹபத் கானின் புரட்சி ஆகியவற்றை தனக்கு சாதகமாக திட்டமிட்டார். அதேநேரத்தில் அநாதைப் பெண்களுக்கும், ஏழைப் பெண்களுக்கும் ஆதரவளித்தார். தனது சொந்த வருவாயிலிருந்து பலருக்கு உதவி செய்து நற்பெயரைப் பெற்றிருந்தார். கலப்படமில்லாத அன்பை கணவர் மீது வைத்திருந்தார். ஜஹாங்கீரின் போதை பழக்கங்களைக் குறைத்தார். அரசின் அநாவசியமான செலவுகளையும் தடை செய்தார். 
ஷாஜஹான் தந்தை நூர்ஜஹான் மீது வைத்திருந்த அன்பை அளவிட முடியாமல் இருந்தார். தன் ஆட்சியை காத்துக் கொள்ள புரட்சியில் இறங்கினார். பெரும் படையுடன் ஆக்ராவை நோக்கி முன்னேறிய ஷாஜஹான் தந்தையின் படையுடன் பலோச்பூர் என்ற இடத்தில் மோதினார். இதில் ஷாஜஹான் தொல்வி அடைய, மொகலாய தளபதி ஷாஜஹான் போகுமிடமெல்லாம் விரட்டி வந்து அசீர் என்ற இடத்தை எதிர்ப்பின்றி கைப்பற்றினார். ஆதரவாளர்கள் அனைவரும் ஷாஜஹானைக் கைவிட மலிக் அம்பரிடம் ஆதரவை வேண்டினார். அவர் மறுத்துவிட, கோல்கொண்டாவின் ஆட்சியாளரிடம் சென்றார். அவரும் மறுத்துவிட பெங்காலுக்கு வந்தார்.  பெங்காலின் ஆதரவுடன் அலஹாபாதில் மொகலாயப் படைகளுடன் மோதினார். மீண்டும் தோல்வியைத் தழுவ தப்பி ஓடி, ரோஹ்டாஸ் கோட்டையில் சில காலம் ஓய்வெடுத்தார். மீண்டும் டெக்கான் திரும்பி மொகலாயர்களின் பழைய எதிரியாக இருந்த மலிக் அம்பரிடமே வந்தார். இம்முறை மலிக் அம்பர் அரவணைக்க, புர்ஹான்பூர் மீது தாக்குதல் நடத்தினார். மீண்டும் மொகலாய படைகளிடம் தோல்வியுற்றார். ஷாஜஹானின் அதிகாரிகளும், வீரர்களும் இவரை விட்டு மொகலாயப் படைகளுடன் சேர்ந்து கொண்டனர். மீண்டும் ரோஹ்டாஸ் கோட்டையில் தஞ்சமடைந்த ஷாஜஹானால் பெரும் மொகலாய படைகளை சமாளிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் தான் இதுவரை புரிந்த எதிர்ப்புகளுக்காக மன்னிக்க வேண்டி கடிதம் எழுதினார். அதேநேரத்தில் மொகலாய அரசில் அதிவேகமாக வளர்ந்து வரும் மஹபத்கான் மற்றும் இன்னொரு இளவரசர் பர்வேசின்வளர்ச்சியை விரும்பாத நூர்ஜஹான், கணவர் ஜஹாங்கீரிடம் ஷாஜஹானை மன்னித்துவிட ஆலோசனை சொல்கிறார். ஷாஜஹான் தன் வசமிருந்த ரோஹ்டாஸ் கோட்டை மற்றும் அசீர் பகுதிகளை தந்தையிடம் ஒப்படைத்தார். மேலும் உத்தரவாதமாக பத்து வயதுள்ள தாரா மற்றும் எட்டு வயதுள்ள ஒளரங்கஸேப் ஆகிய தனது மகன்களையும் ஜஹாங்கீரின் அரண்மனைக்கு அனுப்பினார். ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளையும் பேரரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது மனைவி மற்றும் இன்னொரு மகன் முராதுடன் நாசிக் சென்றார். 
ஷாஜஹானின் இந்த சமாதானம் நூர்ஜஹானிடம் சற்று அமைதியை ஏற்படுத்தியது. இளவரசர் குஸ்ருவின் மரணம், ஷாஜஹானின் அமைதியைப் பயன்படுத்தி அவ்வப்போது புரட்சியில் ஈடுபடும் மஹபத்கானின் பக்கம் நூர்ஜஹான் கவனம் செலுத்தினார். அடுத்து தன் மருமகனுக்கு ஆட்சியைப் பிடிப்பதில் எதிராக இருப்பது இளவரசர் பர்வேஸ் மட்டுமே என்பதையும் கவனம் கொண்டார். நூர்ஜஹானின் திட்டப்படி, இராணுவ தலைமையில் இருந்து மஹபத் கானை ராஜினாமா செய்துவிட்டு பெங்காலின் நிர்வாகத்தைக் கவனிக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்த பர்வேஸ் பின் அடங்கிப் போனார். மஹபத்கான் உத்தரவை ஏற்காவிட்டால் ஊழல் செய்ததாக விசாரிக்கப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டு, இதுவரை அவர் வசம் இருந்த முக்கிய துறைகளின் கணக்குகளை ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும் அரசின் ஆலோசனை இன்றி தன் மகளுக்கு க்வாஜாஹ் உமர் நக் ஷ்பந்தியின் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்தது பற்றியும் விசாரிக்கப்பட்டார். மஹபத்கானின் மருமகனாக வர இருப்பவரையும் விசாரணை என்ற பேரில் தொந்திரவு செய்யப்பட்டார். மேற்கூறிய மொத்த புகாருக்கும் அரண்மனைக்கு வந்து விளக்கம் கூற உத்தரவிடப்பட்டார்.
ராஜாங்கத்தின் இந்த அணுகுமுறையால் பெரிதும் அவமானம் கொண்ட மஹபத்கான், ஜஹாங்கீர் தன் குடும்பத்துடன் ஐந்தாயிரம் ராஜபுத்திர வீரர்களுடன் ஜீலம் நதியைக் கடக்க இருந்த போது சென்று சிறை பிடிக்கச் சென்றார். நூர்ஜஹான் தன் மருமகனுடன் தப்பித்துக் கொண்டார். மொகலாய தளபதி ஃபிதாய்கான் எதிர் தாக்குதல் நடத்தி ஜஹாங்கீரைக் காப்பாற்ற முயன்று தோல்வி கண்டார். நூர்ஜஹான் ஆற்றைக் கடந்து யானை மீது அமர்ந்து மொகலாய வீரர்களுக்கு உத்தரவிட முயன்றார். ஆனால் அதிகாரிகள் ஓடிவிட்டனர். அசஃப்கான் தன் மூவாயிரம் வீரர்களுடன் ஓடி அட்டாக் கோட்டையில் ஒளிந்து கொண்டார். நூர்ஜஹான் ஒரு திட்டத்தை மனதில் கொண்டு மன்னருடன் சேர்ந்து கொண்டார். மிச்சமிருந்த வீரர்களின் உதவியுடன் மஹபத்கானை எதிர்கொண்டு, அவரின் செல்வங்களைக் கைப்பற்றினார். தப்பி மேவார் ஓடிய மஹபத்கான் பின் டெக்கான் சென்று ஷாஜஹானுடன் சேர்ந்து கொண்டார்.
1626 ல் இளவரசர் பர்வேஸும், 1627 ல் காஷ்மீரிலிருந்து திரும்பும் போது ஜஹாங்கீரும் மரணமடைந்தார்கள். இப்போது பட்டத்துக்கு உரியவரான ஷாஜஹான் ஷஹ்ர்யாரை எதிர்க்க முழுவீச்சில் தயாரானார். பேரரசர் ஜஹாங்கீரின் உடல் லாகூரில் ஷஹ்தாரா என்ற இடத்தில் உள்ள நூர்ஜஹானின் தில்குஷா தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது டெக்கானிலிருந்த ஷாஜஹானுக்கு தந்தை இறந்த செய்தியை மாமனார் அசஃப் கான் தான் தெரியப்படுத்தினார். லாகூரில் ஜஹாங்கீரின் அடக்கப் பணியிலிருந்த நூர்ஜஹானும், ஷஹ்ர்யாரும் எல்லாம் முடிந்த பிறகு, ஷஹ்ர்யார் மொகலாய மன்னராக அறிவித்து அரசு பெட்டகத்தைக் கைப்பற்றிக் கொண்டார். தன் மருமகன் ஆட்சிக்கு வரவேண்டியவர் என்று நம்பிய அசஃப்கான், ஷாஜஹான் வரும் வரை இறந்து போன குஸ்ருவின் மகன் தாவர் பக் ஷை தற்காலிக மன்னராக ஆக்ராவில் அறிவித்தார். நூர்ஜஹான், தனது சகோதரன் அசஃப்கானுக்கு தன் புறம் சாதகமாக இருக்க வேண்டுகோள் விடுத்தார். அசஃப்கான் பலத்த இராணுவத்துடன் லாகூரிலிருந்த ஷஹ்ர்யாருடன் மோதி, அவரை வென்று சிறையிலடைத்து கண்களைப் பிடுங்கினார். இதற்கிடையில் டெக்கானிலிருந்து திரும்பிய ஷாஜஹான் 1628 பிப்ரவரியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். காலமெல்லாம் ஷாஜஹானுக்கு எதிராகவே இருந்து சதி செய்த நூர்ஜஹான் மன்னிக்கப்பட்டு கௌரவமாக நடத்தப்பட்டார். ஷாஜஹான் அவருக்கு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினார். தனது ஆடம்பரங்களை எல்லாம் துறந்த நூர்ஜஹான் தனது விதவை மகளுடன் (ஷஹ்ர்யாரின் மனைவி) லாகூரில் வாழ்ந்தார். 1645 டிசம்பரில் இறந்த நூர்ஜஹானின் உடல் லாகூரில் கணவர் ஜஹாங்கீருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜஹாங்கீரின் ஆட்சியின் போது தான் மூன்று ஐரோப்பிய நாட்டினர் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்தினர் வருகை தந்தனர். அவர்கள் மொகலாயர்களுடன் நல்லுறவைப் பேணினர். ஜஹாங்கீரும் போர்ச்சுகீசியர்களுடன் சுமுகமான உறவை வைத்திருந்தார். ஆக்ராவிலும் லாகூரிலும் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டி சுதந்திரமாக வழிபடும், விரும்பியவர்கள் கிறிஸ்தவ மதம் மாறவும் அனுமதித்தார். தானும் ஏசு மற்றும் கன்னி மாதா உருவப்படங்களை வைத்திருந்தும், கிறிஸ்தவ மடங்களுக்கு பொருளுதவியும் செய்தார். போர்ச்சுகீசியர்களும் ஜஹாங்கீருக்கு மேற்கத்திய ஆயுதங்களை வரவழைத்து தந்தார்கள். 1613 ல் போர்ச்சுகீசியர்கள் மொகலாயர்களின் நான்கு கப்பல்களை சிறைப்பிடித்து கொள்ளையடித்தார்கள். இதன் எதிர் விளைவாக தாமன் பகுதியில் சர்ச்கள் மூடப்பட்டு அவர்களின் கிறிஸ்தவ கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதன் முழு விளைவுக்கும் போர்ச்சுகீசியர்களே காரணம்.
அப்போது பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் வாணிகம் செய்ய ஆவல் கொண்டன. 1600 ல் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்டது. 1600 லிருந்து 1608 வரை ஆங்கிலேயர்கள் மூன்று குழுக்களை ஜஹாங்கீரிடம் அனுப்பி வாணிபத்திற்கு பேச்ஸ்ர் வார்த்தை நடத்தினார்கள். அவைகள் தோல்வியில் முடிந்தது. காரணம் ஆங்கிலேயர்களின் வரவை போர்ச்சுகீசியர்கள் போட்டியாகக் கருதினார்கள். 1608 ல் வில்லியம் ஹாக்கின்ஸ் என்ற கடற்தளபதி, இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மொகலாயர்களுக்கு எழுதிய கடிதத்துடன் ஆக்ரா வந்தார். சூரத் நகரத்தில் ஒரு தொழிற்சாலைக் கட்டி தொழில் செய்ய உத்தரவு வேண்டினார். வில்லியம் ஹாக்கின்ஸை பேரரசர் நன்றாக வரவேற்று ஒரு மன்சாப் தகுதியும், 30,000 ஊதியமும் கொடுத்து கௌரவித்தார். ஆங்கிலேயர்களின் தொழிற்சாலைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உடனே போர்ச்சுகீசியர்களின் வற்புறுத்தலால் மறுக்கப்பட்டது. ஹாக்கின்ஸ் போன பிறகு, வில்லியம் எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் அதே கோரிக்கையுடன் வந்தார். அவருக்கும் அனுமதியளிக்கப்பட்டு, உடனே மறுக்கப்பட்டது. ஹாக்கின்ஸ் மற்றும் எட்வர்டுக்குப் பிறகு, இங்கிலாந்தின் தூதர் சர். தாமஸ் ரோய் இந்தியாவிற்கு வருகை தந்தார். வந்தவர் தூதுவர் ஆனதால் சிறப்பான முறையில் அரசியல் ரீதியான அணுகுமுறையாலும், வாணிபக் கண்ணோட்டத்திலும் பேச்சு வார்த்தை நடத்தினார். நூர்ஜஹான், அசஃப்கான், ஷஹ்ர்யார் மற்றும் ஷாஜஹானுக்கு மதிப்பான பரிசுகளைக் கொடுத்தார். இறுதியில் சூரத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலை கட்டிக் கொள்ள ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார். ஆங்கிலேய கப்பல்களும் சுதந்திரமாக துறைமுகம் வர அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வரவை விரும்பாத போர்ச்சுகீசியர்கள் அவர்களின் கப்பல்களை தாக்கினார்கள். ஆங்கிலேயர்களின் வருகை இந்தியாவில் ஒரு புதிய உறவை ஏற்படுத்தியதின் விளைவாக நினைவு கல்வெட்டை பதித்தார்கள். 
  

 

 

திங்கள், 6 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 11

ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர்
கூ.செ.செய்யது முஹமது
                                                 அக்பரின் முழுப்பெயர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் மொகலாயப் பேரரசின் அதிமுக்கிய மன்னரானவர். தன் குடிமக்களின் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாக ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். சிறுவய தில் சிறிய தந்தை கம்ரானின் பாதுகாப்பில் இருந்த போது, ஹுமாயுன் கம்ரா னைச் சுட கம்ரான் குழந்தை அக்பரை துப்பாக்கிக்கு முன் நீட்டினார். அதிர்ஷ்ட வசமாக அன்று அக்பர் தப்பித்தார். பனிரெண்டு வயதான போதே ஒட்டகம், யானை, குதிரைகளை கையாளும் திறமையைப் பெற்றார். போர்க்கருவிகளை யும் சிறப்பாகப் பயன்படுத்த அறிந்துகொண்டார். தந்தை ஹுமாயுன் இறந்த போது பதிமூன்று வயதான அக்பர் 1556 ல் பிப்ரவரி மாதம் 14 ல் பதவியேற்றார். சிறு வயதாய் இருந்ததால், தந்தையின் நண்பரான பைரம் கான் அதிகாரத்தில் உதவி புரிந்தார். அக்பரின் இளைய சகோதரர் முஹம்மது ஹகீம் காபூலின் தலைமையை ஏற்றார்.
                                        அக்பர் பதவியேற்ற வேளையில் இந்தியாவில் கடுமையான ப்ளேக் நோய் பரவி எண்ணற்றவர்கள் மரணமடைந்தனர். பூகோ ள அமைப்பின்படி பிரதேசம் மிகவும் சிறியதாக இருந்தது. அரசியல் ரீதியாக வடமேற்கு இந்தியாவை சிக்கந்தர்சூரும், முஹம்மது ஆதிலும் பிரித்து ஆண்டு கொண்டிருந்தார்கள். ஆப்கானுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே டெல்லி மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது. காபூலை சுதந்திரமாக முஹம்மது ஹக்கீம் ஆண்டு கொண்டிருந்தார். பதக் ஷானின் சுலைமான் இவருக்கு மிரட்ட லாக இருந்தார். பெங்காலும் சுதந்திரமாக ஆப்கான் ஆட்சியாளரின் அதிகாரத் தில் இருந்தது. ராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள் பாபரிடம் கண்ட தோல்வியிலி ருந்து இன்னும் மீளாமல் கோட்டையில் முடங்கி இருந்தனர். மால்வாவும், குஜராத்தும் அதன் மத்தியஅரசுடன் இணைந்து முஹம்மது துக்ளக் ஆண்டு வந்தார். கோண்ட்வானா உள்ளூர் தலைவனால் ஆளப்பட்டும், ஒரிசா சுதந்திரப் பிரதேசமாகவும், காஷ்மீர், சிந்த் மற்றும் பலுசிஸ்தான் யாருடைய கட்டுப்பாட் டிலும் இல்லாமல் இருந்தது. அஹமதாபாத், பிஜப்பூர், கோல்கொண்டா, காந் தேஷ் மற்றும் பிரார் போன்றவற்றை தனித்தனி சுல்தான்கள் ஆண்டு வந்தார் கள். இந்து பேரரசு விஜயநகரம் பலம் வாய்ந்தும், செல்வச் செழிப்பாகவும் இருந்தது. போர்ச்சுகீசியர்கள் அரபிக்கடல், பெர்ஷிய கடல்பகுதிகளில் பலமாக இருந்து இந்தியாவின் மேற்குக் கடலோர துறைமுகங்களிலும், கோவா, டையூ போன்ற இடங்களிலும் வாணிபம் செய்து கொண்டிருந்தார்கள். இதுதான் அக் பர் பதவியேற்றபோது இருந்த இந்தியாவின் அரசியல் அமைப்பு.                        
                                                      இராணுவத்தலைமை அதிகாரி ஹேமு, ஏற்கனவே இருபத்தி இரண்டு போர்களை முன்னின்று நடத்தி அனுபவம் பெற்றவர். இவர் பெரும்படைகளுடன் தலைநகர் சுனாரிலிருந்து ஆக்ரா நோக்கி மொகலாயர் களை எதிர்க்க வந்து கொண்டிருந்தார். பைராம்கான் தயாராகி வருவதற்குள், டெல்லியின் கவர்னர் தர்தி பெக் ஆக்ராவில் தோற்கடிக்கப்பட்டு தப்பி ஓடிவிட் டார். அக்பர் குறிப்பிட்ட வயதை எட்டும் வரை பைராம் கான் கண்ணும் கருத்து மாக வளர்த்து வந்தார். பைராம்கானின் தலையாய காரியம் ஹேமுவை வெற்றி கொள்வதாக இருந்தது. இராணுவ அதிகாரிகளும் அதையே கூறினார் கள். பைராம்கான் தவறுதலாக படை நடத்தி தோல்விகண்டு தப்பி யோடிய தர்திபெக்கை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு தானே ஹேமுவை எதிர்க்க தயாரானார். மொகலாய முன்னனிப்படைகள் ஹேமுவைத்தாக்கி கண்ணை ஊனமாக்கியது. அவன் யானையின் மீதிருந்து கீழே விழுந்தான். வீரர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இரு படைகளும் இரக்கமில்லாமல் மோதி க்கொண் டன. இறுதியில் மொகலாயப் படை வெற்றிபெற்றது. ஹேமு சிறைப் பிடிக்கப்பட்டு பேரரசர் முன் நிறுத்தப்பட்டான். பைராம்கான் இளம்மன்னன் அக்பர் ஹேமுவைக் கொல்வதைப்பார்க்க ஆர்வமாய் இருந்தார். ஆனால், அக் பர் தோல்வியுற்று கைதியாகிய ஒருவனைக் கொல்ல தான் விரும்ப வில்லை என்று கூறுகிறார். உடனே பைராம் கான் தனது வாளை உருவி ஹேமுவைக் கொன்றுவிடுகிறார்.
                                             அக்பரின் பலமான எதிரி பானிபட்டில் நடந்த இந்தப் போரினால் தோற்கடிக்கப்பட்டது. போரில் பெருவாரியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பொன்பொருட்களும், 1500 யானைகளும் கைப்பற்றப்பட் டன. டெல்லி, ஆக்ரா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் மொகலாய வசமா யின. ஹேமுவின் மூலம் இந்து சாம்ராஜ் ஜியத்தை நிறுவதற்கு போட்ட திட் டம் சரிந்தது. அக்பர் இந்தியாவின் பேரரசர் ஆனார். இரண்டாம் பானிபட் போரையும் மொகலாயர்களே வென்றார்கள். இப்போது பைராம்கானும், அக்ப ரும் சூர் பிரதேசத்தின் மீது கவனம் கொண்டார்கள். பைராம்கான் சிக்கந்தர்சூரு க்கு எதிராக ஒரு படையை அனுப்பினார். சிக்கந்தர்சூர் தப்பித்து சிவாலிக் மலையின் மன்காட் பகுதியிலிருந்து எதிர்கொண்டார். அங்கிருந்து எதிர்ப்பின் பலம்குன்றி சரணடைந்தார். சிக்கந்தர்சூர் கிழக்கில் ஒரு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டு 1569 ல் மரணமடைந்தார். 1557 ல் முஹம்மது ஷா ஆதில் பெங்காலில் போரிட்டு மரணமடைந்தார். 1558 ல் அஜ்மீர், குவாலியர், ஜான்பூர் அகியவை மொகலாயப் பேரரசுடன் இணைந் தன. பைராம்கான் தற்போது உள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
பைராம்கானின் தனி வரலாறு  
                                                    பைராம்கான் பிறப்பால் ஒரு துருக்கியர். ஷியா பிரிவு முஸ்லீமைச் சேர்ந்தவர். தனது எஜமானர் ஹுமாயுனின் வீழ்ச்சியிலும், குடு ம்ப விவகாரத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். இவரின் ஆலோசனையால் தான் ஹுமாயுன் மீண்டும் இந்தியாவை வெல்ல முடிந்தது. ஒரு மன்னனுக்கு நன்றி விசுவாசத்துடன் கூடிய சிறந்த அறிவாளி அமைவது மிகவும் அபூர்வம், அதற்கு பைராம்கான் சிறந்த உதாரணம். துரோகத்தனமே மிஞ்சி இருக்கும் மன்னர்களின் வாழ்க்கையில் அக்பர் போன்ற சிறிய மன்ன னை பக்குவப்படுத்தி பேரரசராக உயர்த்தியதிலிருந்து இவர் தனிப்பெருமை யுடன் விளங்குகிறார். இவரின் கீழ்தான் ஒரு பேரரசுக் குண்டான பரந்த பிரதே சங்கள் அக்பருக்கு வென்று கொடுக்கப்பட்டது. ஒழுக்கத்துடன் கூடிய அரசியல் வாதியான இவரின் ஆற்றலும், அறிவும் மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரி தும் பயன்பட்டது.
                                                                  அக்பர் மற்றும் பைராம்கானின் நட்பு மிகவும் உணர்ச்சிகரமானது. ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம், மாற்றாந் தாய் மஹாம் அன்காஹ், மாற்றான் சகோதரர் ஆதம்கான், டெல்லி கவர்னர் ஷஹாபுத்தீன் ஆகியோர் சொந்த விருப்பின் காரணமாக பைராம்கானை வெறு த்தனர். குழந்தையிலேயே அக்பரிடம் நன்கு பரிச்சயமாக இருந்தாலும், தனக் காகவும், தன் பணியாட்களுக்காகவும் எந்த சிபாரிசுக்கும் அக்பரிடம் சென்ற தில்லை.  ஆனால் இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒருமுறை அக்பர் யானைகளுடன் போர்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது, அதில் இரண்டு யானைகள் தடுப்பைத் தாண்டி அருகிலிருந்த பைராம்கானின் கூடாரத்தை பிடுங்கி பைராம்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவி க்க இருந்தன. உடனே அக்பர் தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் பாய்ந்து யானைகளைக் கட்டுப்படுத்தினார். இதனால் பைராம்கான் கடும்கோபம் கொண்டு உடனிருந்த இரு பணியாட்களைக் கொன்று விடுமாறு உத்தரவிட் டார்.
                                          

மொகலாய வரலாறு 12

                                                               ஒரு சமயம் அக்பரின் ஆசிரியர் ஹுமாயுனின் உறவுப்பெண் சலீமா சுல்தானாவுக்கு தவறுதலாக கை குலுக்க முயல, அக்பர் பெரிதாக நினைக்காமல் அவரை மன்னிக்க இருந்தார். ஆனால், பைராம்கான் கோபத்துடன் அவரை சிறையில் அடைக்கச் செய்தார். இன்னொருமுறை அர ண்மனைப் பணியாள் பீர்முஹம்மது என்பவனை செய்த தவறுக்காக கொல்ல சொன்னார். மேலும் நம்பிக்கைக்காக தன் ஷியா பிரிவைச் சேர்ந்த உறவுக்கார ர்களை பணியில் அமர்த்தி இருந்தார். மேலும் ஹுமாயுனின் சகோதரர் கம்ரா னின் மகன் அபுல் யாஸிமை மன்னராக்க திட்டமிட்டிருப்பதாகவும் அக்பருக் குத் தகவல் போகிறது. இதனால் அக்பருக்கும், பைராம்கானுக்கும் இடையே ஆன உறவில் விரிசல் பலமாகிக் கொண்டு போனது. போதாக்குறைக்கு, ஒரு குழப்பம் உருவாக்கும் வகையில் ஹமீதாபானுபேகம், மஹம் அன்காஹ், ஆத ம்கான், ஷஹாபுதீன் மற்றும் அக்பர் ஆகியோர் வேட்டைக்காக பைனாஹ் போனபோது, அனைவரும் அக்பரை வற்புறுத்தி உடல் நலம் குன்றி இருக்கும் தாயாரைப் பார்க்க டெல்லி செல்ல வற்புறுத்தி அக்பரை அனுப்பிவிடுகிறார் கள்.
                                                    உடன்சென்ற மஹம் அன்காஹ் அக்பருக்கு திரும்பிச் சென்றவுடன் ஒரு உத்தரவை வெளியிட அறிவுரைக்கிறார். அதன்படி, அக்பர் டெல்லியிலிருந்து திரும்பியவுடன், நமது அரசின் நலனில் அக்கறையுள்ள அர சாங்கப் பணியாளர்கள் எல்லா பணிகளிலிருந்தும் முற்றிலுமாக விலக்கப் பட்டு புனித மக்கா பயணம் சென்று இறுதிகாலத்தை இறைவனை வணங்குவ தில் கழிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று அரசு உத்தரவொன் றைப் பிரப்பிக்கிறார். பைராம்கான் அந்த உத்தரவு தன்னைத்தான் பதவியிலி ருந்து விலக்குகிறது என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, இரண்டு நம்பிக்கை யான அதிகாரிகளை அக்பரிடம் அனுப்பி, தான் என்றைக்கும் ஆட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்றும் கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தன்னை அந்த உத்தரவிலிருந்து நீக்கவும் கோருகிறார். அக்பர் வந்த தூதுவர் களை சிறையில் அடைத்து, பீர்முஹம்மது என்ற அரசு ஊழியனிடம் செய்தி அனுப்பி பைராம்கானை மக்கா செல்ல பயணமாகும்படி கூறுகிறார். பைராம் கான் உணர்ச்சி வசப்பட்டு கலவரத்தில் இறங்குகிறார். ஆனால், விரைவில் கைது செய்யப்பட்டு அக்பரின் முன் நிறுத்தப்பட அக்பர் அவர் தனக்கு முன்பு செய்த நல்லவைகளை நினைத்து மன்னித்து விடுகிறார். அக்பரை அரண்ம னையில் கண்டதும் பைராம்கான் விழுந்து அழுதுவிடுகிறார். அக்பர் அவரை கைப் பிடித்து தூக்கி தன்னருகே வலப்பக்க இருக்கையில் அமர வைக்கிறார். அக்பர் அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் அழகிய அங்கியை அணிவித் து மூன்று மாற்று வாய்ப்புகளை அறிவித்து ஒன்றை  தேர்ந்தெடுத்துக் கொள்ள செய்கிறார்.
                                                    ஒன்று, அவர் பழைய பணியிலேயே இருப்பதானால் அரசு அவருக்கு உகந்த மரியாதை கொடுத்து அங்கீகரிக்கும். இரண்டு, அவர் விருப்பப்பட்டால் பெரிய மாகாணம் ஒன்றுக்கு கவர்னராக பதவி அளிக்கப் படும். மூன்று, புனித மக்கா பயணம் செல்வதாக இருந்தால் உரிய அரசு மரியா தையுடன் அனுப்பி வைக்கப்படுவார். பைராம்கான் ‘இந்த மூன்றை விட தாங் கள் என்னை மன்னித்து நான் முன்பு செய்த பணிகளுக்கு நன்றி செலுத்தி விட் டீர்கள் இதுவே போதும்’ என்றார். ஆனாலும், அக்பர் அவரை உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் புனித மக்காவுக்கு பயணம் அனுப்பி, அவர் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற வழிசெய்தார். ஆனால், மக்கா செல்லும் வழி யில் பைராம் கானால் பாதிக்கப்பட்ட எதிரி ஒருவனால், பதான் என்ற இடத்தில் கொல்லப்பட்டு இறந்து போனார். இது ஜனவரி மாதம் 1561 ல் நடந்தது. பைராம் கானின் மொகலாய அரசின் வெற்றிடம் பாவாடை அரசியலுக்கு (PETTY COAT POLITICS) சாதகமாகிப் போனது. டாக்டர் ஸ்மித் என்பவரின் கூற்றுப்படி, மஹம் அன்காஹ் அரசின் முக்கியமான உயர் பதவிக்கு வந்தார். ஒரு பெரிய பேரரசு க்கு தகுதியில்லாத மனசாட்சியற்ற பெண்மனி மஹம் அன்காஹ் யோக்கியம ற்றவர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தினார். டாக்டர் ஸ்மித் உண்மை யின் அடிப்படையிலேயே மதிப்பிட்டிருக்கிறார்.
                                                               எல்லா விஷயத்திலும் அவளாள் அக்பரை மீற முடியவில்லை.  பைராம்கானின் விதி முடிந்த பிறகு, ராஜ்ஜியத்தில் மஹம் அன்காஹ்வே அக்பருக்கு பிரதான எதிரியாக இருந்தாள். இவள் தூண்டுதலின் பேரிலேயே ஒருவேளை அக்பர் முழுமையாக செயல்பட்டிருந்தால், தனக்கெ திராக புரட்சியில் ஈடுபட்ட பைராம்கானை கனிவாக நடத்தி இருக்க மாட்டாள். இவள் தன் மகன் ஆதம்கானை எந்த உயர்பதவியிலும் அமர்த்த முடியவில் லை. ஒரு முறை ஆதம்கானை படைக்கு தலைமையாக்கி மால்வா பகுதிக்கு அனுப்பினார். அவன் அந்தப் போரையே நாசப்படுத்தினான். உடனே அக்பர் நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். அடுத்த முறை ஆதம்கான் ஷம்சுத்தீன் அத்கா கானை கொலை செய்து விட, அக்பர் நீதிபதிகளிடமும், வழக்கறிஞர் களிடம் அவன் தாயாரின் போக்கில் செயல்பட வேண்டாம் என்று கூறி, நேர் மையான முறையில் தீர்ப்பளிக்கச் சொன்னார். அதன்படி, ஆதம்கானை கோட்டையின் மதில் சுவரிலிருந்து இரண்டுமுறை தலைகீழாக வீசப்பட்டு தலை சிதறி சாகடிக்கப்பட்டான். ஒருவேளை அக்பர் முழுக்க மஹம் அன்கா ஹ்வின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது.
                                                  அக்பர் டெல்லி தலைநகரின் அரியணையில் இருந்து தானே நேரடியாக விவகாரங்களை கவனித்து ஆட்சி நடத்தினார். ஆட்சியில் அவ்வப்போது தோன்றிய கலவரங்கள், புரட்சியை அடக்கினார். 1560 ல் பெங்கா லில் இருந்து முஹம்மது ஷா ஆதிலின் மகன் இரண்டாம் ஷேர்ஷா டெல்லி யைக் கைப்பற்ற போரிட்டான். அக்பரின் தளபதி கான்ஸமான் என்பவரால் படுதோல்வி அடைந்து, யானைகள் மற்றும் போர்தளவாடங்களை ஒப்படைக்க மறுத்தான். அக்பர் நேரடியாக ஜான்பூர் சென்றார். அக்பர் வருவதைக் கேள்விப் பட்ட அவன் அவருக்குத் தலைவணங்கி எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத் தான். அக்பரின் வழக்கமான தாராள மனம் ஜான்பூரை இரண்டாம் ஷேர்ஷாவி டமே திரும்ப கொடுத்துவிட்டார். உஸ்பெஸ்கிஸ்தான்களை அடக்கினார்.
                                                             அக்பர் பரந்த மொகலாயப்பேரரசு இந்தியாவில் அமைய வேண்டுமானால், ராஜபுத்திரர்கள் போன்ற தாய்நாட்டு வீரர்களின் அரவணைப்பு வேண்டும் என்பதை உணர்ந்தார். அதனால் அவர்களுடன் இரத்த உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார். அதன்படி முதலில் அம்ப ரைச் சேர்ந்த பார்மல் கஸ்வாஹா என்ற ராஜபுத்திரரின் மகளை திருமணம் செய்து கொண்டார். தொடந்து ஜெய்சல்மார், பிகானிர் இளவரசிகளையும், இள வரசர் சலீமுக்கு ராஜா பக்வாந்தாசின் மகளையும் திருமணம் செய்து வைத் தார். திறமையான ராஜபுத்திரர்களை சமூக மற்றும் இராணுவத்துறைகளில் உயர்பதவியில் அமர்த்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். ராஜா தோடர் மால், ராஜா பர்மால், ராஜா பக்வான்தாஸ் மற்றும் ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் இராணு வத்தில் உயர்பதவியில் இருந்து அனுபவித்தார்கள். மேலும், பாதிக்கும் மேற்பட்ட படை வீரரகளும் இந்துக்களாகவே இருந்தனர். இந்துக்கள் சுதந்திரமாக கோவில்களில் வழிபடச் செய்தார். குழந்தை திருமணங்களை தடை செய்து, சதி ஏறுதல், விதவைத் திருமணங்களை ஆதரித்தார். முஸ்லீம் அல்லாதவர்களுக்கான ஜிஸ்யா வரியை நீக்கினார். இதனாலேயே மொகலாய பேரரசு நான்கு தலைமுறையாக ஆட்சி செய்ய ஏதுவாய் இருந்ததாக டாக்டர் பேனி பிரசாத் கூறுகிறார்.
                                                           அக்பர் ஃபதேபூர் சிக்ரியில் ‘இபாதத் கானா’ என்ற அறிவுஜீவிகளுக்கான அமைப்பொன்றை ஏற்படுத்தினார். கோவாவிலிருந்த போர்ச்சுகீசியர்களுக்கு அவர்களின் மதத்தில் இருந்த சிறந்த கிறிஸ்தவமத ஞானம் உள்ளவர்களை கலந்து கொண்டு கருத்துக்களை தெரியபடுத்த வேண் டினார். அவர்களும் இந்தியப் பேரரசின் மன்னரை கிறிஸ்துவராக மாற்ற அரு மையான சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதென்று ஃபாதர் ருடோல்ஃப் அக்வாவி வா மற்றும் ஃபாதர் மான்செர்ரட் தலைமையில் ஒரு குழுவை ஆர்வமுடன் அனுப்பி வைத்தனர். அக்பர் அவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்தி, ஆக் ராவில் அவர்களை தேவாலயம் கட்டிக்கொள்ள அனுமதித்தார். ஏசுநாதர் மற் றும் அன்னை மேரியின் படங்களின் மீது ஆர்வமாய் இருந்தார். தன் மகன் சலீமை அவர்களின் சபைக்கு அனுப்பி கிறிஸ்தவ போதனைகளைக் கேட்கச் செய்தார். ஆனால், சலீமுக்கு இஸ்லாமைத் தவிர வேறுமதத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. மூன்று ஆண்டுகள் அரண்மனையில் தங்கியிருந்த கிறிஸ்தவகுழு அக்பரை மதமாற்றம் செய்ய முடியாமல் திரும்பியது. 1590 ல் இரண்டாவது குழு வந்து மூன்று ஆண்டுகள் முயன்றது அதுவும் அக்பரை மதம் மாற்றம் செய்ய முடியாமல் திரும்பியது.
                                            மூன்றாவது கிறிஸ்தவகுழு லாஹூருக்கு வந்தது. அது முடிந்தமட்டும் மக்களில் சிலரை மதம் மாற்றம் செய்து, லாஹூரிலும், ஆக்ரா விலும் தேவாலயங்களைக் கட்டியது. மேலும் போர்ச்சுகீசியர்களுக்கு சாதகமா க வாணிப ஒப்பந்தம் ஒன்றை மொகலாயப்பேரரசுடன் ஏற்படுத்திக் கொண்டது. அக்பர் சிறு பிரதேசங்களையும் இணைத்து நிலையான அதிகாரமிக்க மத்திய ஆட்சியைக் கொண்டு வர ஆர்வம் கொண்டார். சிறு பிரதேசங்களின் ஆட்சியா ளர்களால் அவ்வப்போது எழும் பிரச்சினை இதனால் அடங்கிப் போகலாம் என்று எண்ணினார். 1564 ல் கோந்த் வானா என்ற ராஜபுத்திர இடத்திற்கு அசாஃப் கான தலைமையில் படையனுப்பினார். கோந்த்வானாவை சிறுவயது மகனின் சார்பாக துர்காவதி என்பவள் ஆண்டுவந்தாள். அவள் முடிந்த மட்டும் போராடி, போர்களத்திலேயே தற்கொலை செய்துகொண்டாள். பெருவாரியான போர் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இடையில் உஸ்பெஸ்கிஸ்தானின் கலவரத் தால் சற்று பாதிப்படைந்த ராஜபுத்திர பிரதேசங்களை சரி செய்ய எண்ணினார்.
                                                ராஜஸ்தானை ராணாசிங்கின் மகன் உதய்சிங் ஆண்டு வந்தான். இவன் தந்தையின் தரத்திற்கு தகுதி இல்லாதவனாக இருந்தான். சித் தூர் ராணாவும் அக்பரிடம் திருமண உறவு ஏற்படுத்திக்கொள்ள மறுத்தார். அக் பர் என்றுமே நிலையான இந்தியாவை ஆளவே ஆசைப்பட்டார். அக்பர் உதய்சி ங்குடன் போரிட்டார். உதய்சிங் 8000 வீரர்களை ஜெயமால் மற்றும் பட்டா என்ப வர்கள் தலைமையில் போரிட விட்டு விட்டு தப்பித்து மலைப்பிரதேசத்திற்கு ஒடினான். ராஜபுத்திர வீரர்கள் கோட்டைக்குள் பதுங்கி இருந்தபடி போரிட்ட னர். 1567 ல் கோட்டையை கைப்பற்றிய மொகலாயப் படைகள் சுரங்கம் இருப்ப தை கண்டுபிடித்தனர். அக்பர் பொறியாளர்களை வைத்து சுரங்கங்களை ஆய்வு செய்தார். வெடிவைத்து சுரங்கத்தை தகர்த்ததில் 500 வீரர்கள் இறந்து போயினா ர்கள். சித்தூருடன் ரன்தம்போர் மற்றும் கலிஞ்சர் என்ற இரண்டு கோட்டைக ளும் கைப்பற்றப்பட்டன. இன்னொரு ராஜபுத்திர மன்னர் ராஜா ராம் சந்திரா ராஜஸ்தானின் பலம்வாய்ந்த இரு கோட்டைகள் மொகலாயர்கள் வசம் வீழ்ந்த தைக் கேள்விப்பட்டவுடன் அக்பரிடம் சரணடைந்தார். இவரைத் தொடர்ந்து அனைத்து சிறு ராஜபுத்திர மன்னர்களும் அக்பரிடம் சரணடைந்தனர்.
                                                         தப்பிச் சென்ற உதய்சிங் உதய்பூர் என்ற நகரத்தை தனியாக உருவாக்கி ஆண்டுவந்தான். 1527 ல் அவன் மரணமடைந்தவுடன், அவன் மகன் ராணா பிரதாப் சிங் மன்னனாகி, பேரரசுக்கு எதிரானதைவிட, இஸ்லாமுக்கு எதிரானான். இந்துக்களிடம் மத உணர்வைத் தூண்டிவிட்டான். தான் முஸ்லீம்களை இந்த பூமியை விட்டு விரட்டுவேன் என்று சபதமிட்டான். மொகலாயப்படையுடன் ஒப்பிடும்போது இவனின் படைகள் பலமற்று இருந்த து. இவன் முறையற்ற போரின் மூலம் மேவாரை வென்றான். இரண்டாம் அசாஃப்கான் தலைமையில் பெரும் படையுடன் கோல்கொண்டா கோட்டை யை முற்றுகையிட்டான். கடுமையான போருக்குப் பிறகு, காயமடைந்து மலைப்பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டான். அக்பர் லாஹூரில் தூரன் என்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்ய தவிர்க்க முடியாத காரணத் தால் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மீண்டும் ராணா பிரதாப் சிங் 1578 ல் வெளியில் வந்து கோந்த்வானா, உதய்பூர் மட்டும் முன்பு இழந்திருந்தவன் சித்தூர், அஜ்மீர், மண்டல்கர் தவிர மொத்த மேவாரை யும் வென்றெடுத்தான்.  1597 ல் ராணா பிரதாப் சிங் இறந்துபோனான்.
                                     ,

மொகலாய வரலாறு 13

                                             இவனுக்குப் பிறகு, மகன் அமர்சிங் ஆட்சியிக்கு வந்தான். அக்பர் தன் மகன் சலீம் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். சலீம் ஃப தேபூர், அலஹாபாத், புகழ்பெற்ற கோட்டைகள் சித்தூர், ரன்தம்போர், கலிஞ்சர், அஜ்மீர் அனைத்தையும் கைப்பற்றினார். ராஜ்புதனா தனிப் பிரதேசமாக ஆக்கப் பட்டது. பெரும்பான்மை ராஜபுத்திரர்கள் அக்பரின் கீழ் வந்தனர். தன் தந்தை வசம் இருந்த குஜராத்தின் மீது அக்பர் இப்போது பார்வையைத் திருப்பினார். அச்சமயம் குஜராத் மிகவும் செழிப்பாக இருந்தது. குஜராத் முஸஃப்ஃபர் ஷா என்ற பொம்மை மன்னனின் ஆட்சியில் இருந்தது. உள்நாட்டு கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன. குஜராத்தின் மந்திரி இதிமத் கான் அக்பருக்கு தூது அனுப்பி குஜராத்தைக் கைப்பற்றி காப்பாற்றும்படி வேண்டினார். அக்பர் தலை நகர் அஹமதாபாத் வந்து விட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் முஸஃப்ஃபர் ஷா சோளக்காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். குஜராத் அக்பர் வசமானது தனது மாற்றாந்தாய் மகன் கான் இ அஸாம் மிர்ஸா அஸிஸ் கோகா என்பவ ரை அதற்கு கவர்னராக்கினார்.
                                                   பின் சூரத் நகரமும் மொகலாயர் வசம் சரணடைந்தது. அக்பர் அதுவரை கடலைப் பார்த்தது இல்லை. ஆர்வத்துடன் கடற்கரையில் சுற்றுலா சென்று, கடலிலும் சற்று தூரம் பயணித்தார். மிர்ஸாக்களால் குஜராத் தில் கலவரம் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அக்கால அதிசயமாக உடனே 600 மைல் தூரத்தை ஓன்பது நாட்களில் கடந்து அஹமதாபாத் வந்தார். இதை சற்றும் எதிர்பாராத மிர்ஸாக்களின் கலவரம் அடக்கப்பட்டு குஜராத் அமைதி யானது. ராஜாதோடர்மால் என்பவர் தான் அமைதி ஏற்பட பெரிதும் பாடுபட் டார். குஜராத் பேரரசுடன் இணைக்கப்பட்டவுடன் போர்ச்சுக்கீசியர்களின் வாணி பமும் நடந்தது. அந்தகால பணத்தில் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு வரு வாய் ஈட்டியது. குஜராத் வெற்றி மேலும் பெங்காலை வெல்வதற்கு உந்துத லாக இருந்தது. பெங்காலை சுலைமான் கரீம் என்பவர் சுதந்திரமாக ஆண்டு கொண்டிருந்தார். 1572 ல் அவர் மரணமடைந்த பின் அவர் மகன் தாவூத் என்பவ ன் ஆட்சிக்கு வந்து தன் பெயரிட்ட நாணயத்தை பதவியேற்கும் தினத்தன்றெ வெளியிட்டான். தாவூது வெளிப்படையாக பேரரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தான். ஸமானியா என்ற கோட்டையை பேரரசிடமிருந்து கைப்பற்றினான் அக்பர் நேர டியாக தானே படையெடுத்து அவனை பாட்னாவிலிருந்து ஓடச் செய்தார். தாவூதை துகராய் என்ற இடத்தில் வெற்றி பெற்று சரணடையச் செய்து பேரரசு க்கு ஆண்டு கப்பம் செலுத்தச் செய்தார். பெங்காலில் முனிம்கான் என்பவரை கவர்னராக அக்பர் நியமித்தார். 1575 ல் முனிம்கான் இறந்துவிட மீண்டும் தாவூ த் தன் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அக்பர் திறமையான தளபதியை அனுப்பி அவனை வெற்றி கொண்டு சிறைப்பிடித்து 1576 ல் ராஜ்மஹாலில் அடைத்தார்.
                                               1571 ல் அக்பர் ஃபதேபூர் சிக்ரியில் ஒரு அரண்மனையை கட்ட விரும்பினார். அது அக்பருக்கு மூன்று பிள்ளைகள் பிறக்கும் என்று முன் பே கூறிய அவரின் ஆஸ்தான சூஃபி மதபோதகர் ஒருவரின் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தது. முதல் இரு பிள்ளைகள் பிறந்தபோது அரண்மனைக்கு அடிக்கல் நாட்டினார். அதற்கு ஃபதேபூர் (வெற்றி) சிக்ரி என்று பெயரிட்டார். பிறகு தான் மூன்றாவது மகன் பிறந்தார். இந்த அரண்மனை சரித்திரத்தில் மிக வும் புகழப்பட்டது. மிக உயர்ந்த சிகப்புக்கல்லால் அலங்கரித்தார். உள்ளேயே மசூதியும் அமைத்திருந்தார். போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தா ல் அப்போது இந்த அரண்மனை 14 வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படுகிறது. அரண்மனை மலையின் முகப்பில் அமைக்கப்பட்டு, கீழே நகரம் நிர்மாணிக்கப்பட்டது. திவான் இ கஸ் என்னும் பொதுமக்கள் அரங்கமும் கட்டப்பட்டிருந்தது. இது ஒரே ஒரு மையத்தூணில் அமைக்கப்பட்டிருந்தது.
                                                         பெரும்பாலான தீவிர மதப்பற்றுள்ள முஸ்லீம்கள் அக்பரை அவரின் கொள்கைகளுக்காக எதிர்த்தார்கள். முஸ்லீம்கள் அக்பரின் சகோதரர் மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தலைமையில் கலவரம் உண்டாக்கி புரட்சியில் ஈடுபட்டனர். மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தளபதி ஒருவரின் தலை மையில் படையனுப்பி பஞ்சாபை தாக்கச் சொன்னார். அது தோல்வியில் முடி ந்தது. மிர்ஸா முஹம்மது ஹக்கீம் மீண்டும் ஷத்மான் என்ற தளபதி தலைமை யில் ஒரு படை அனுப்பினார். அப்போது பஞ்சாபின் பொறுப்பில் இருந்த ராஜா மன்சிங் அடக்கி விரட்டினார். இப்போது மிர்ஸா முஹம்மது ஹக்கீம் தானே 15,000 வீரர்களுடன் படையெடுத்து வந்தார். அக்பர் அவரை வென்று, காபூலிலே யே இறக்கும் வரை ஆட்சி செய்ய அனுப்பி வைத்தார். 1585 ல் மிர்ஸா முஹம் மது ஹக்கீம் இறந்த பின் காபூல் மொகலாயப் பேரரசில் இணைந்தது. ராஜா மான்சிங் காபூலின் அதிகாரம் கொடுக்கப்பட்டு, அந்த மக்களின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை அவருக்கு சரிவராமல் திரும்ப அழைக்கப்பட்டார். அவருக்கு பதில் ராஜா பீர் பால் அனுப்பப்பட்டு, அவரும் யூஸுஃப் அஃப்சலுக்கு எதிராக காபூலில் ஒரு போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் மங்கோலியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்தார்கள். பலமான இராணுவ எல்லைகளை அமைத்தும், திறமை யான உயரதிகாரிகளை பாதுகாப்புக்கு நிறுத்தியும் கண்காணித்தனர். பால்பன், காஸி மாலிக் மற்றும் அலாவுதீன் கில்ஜி போன்றவர்களின் நடவடிக்கைகள் சிறந்த உதாரணம்.
                                                           அக்பரும் வடமேற்கு எல்லையை பாதுகாப்பதில் தீவிரமாய் இருந்தார். காபூலை வென்றபின் பழங்குடி பகுதிகளை குறைத்தார். லாஹூரிலும் ஒரு அரண்மனையை 1585 லிருந்து 1598 வரை வைத்திருந்தார். அந்த காலங்களில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானியர்களை தடுத்துக் கொண்டிரு ந்தார். உஸ்பெகிஸ்தான் தலைவர் அப்துல்லாஹ், மிர்ஸா சுல்தான் மற்றும் பதக் ஷானுடன் சேர்ந்து கொண்டு காபூலைப் பிடிக்க சமயம் பார்த்துக் கொண்டி ருந்தார் அப்துல்லாவுக்கு காபூலின் தீவிர முஸ்லீம்கள் ஆதரவளித்தனர். மொகலாயப் படையிலிருந்து ராஜா பீர்பால், ஹகீம் அப்துல் பத் மற்றும் ஸைன் கான் ஆகியோர் அனுப்பப்பட் டனர். மூன்று ஜெனரல்களும் போர் அனுபவம் இல்லாதவர்கள் எட்டாயிரம் மொகலாய வீரர்களும், ராஜா பீர்பா லும் கொல்லப்பட்டு, ஸைன் கான் மயிரிழையில் உயிர் தப்பினார். அக்பர் ராஜா தோடர் மாலையும், அவர் மகன் முராதையும் பெரும் படையுடன் அனுப் பினார். அவர்கள் காபூலின் புரட்சிப் படையை அடக்கி எண்ணற்றவர்களை கொன்றார்கள். அப்துல்லாஹ் புரட்சியில் இருந்து விலகிக் கொண்டார்.                    
                                              1586 ல் காஷ்மீரை ஆண்ட முஸ்லீம் மன்னர் அங்குள்ள இந்து மக்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக அக்பருக்கு செய்தி வந்தது. இதனாலும், காஷ்மீரின் தட்பவெப்பநிலை, பள்ளத்தாக்கின் அழகு போன்றவற் றைக் கேள்விப்பட்டதாலும் காஷ்மீரை வெல்ல அக்பர் ஆர்வமானார். மிர்ஸா ஷாருக் மற்றும் ராஜா பக்வான் தாஸ் ஆகியோரை காஷ்மீர் ஆட்சியாளர் யூஸுஃப் ஷாவிடம் அனுப்பினார். யூஸுப் ஷா ஒரு சமாதான உடன்படிக்கை க்கு விரும்பினார். ஆனால், அக்பர் அதை விரும்பாமல் காஸிம் கான் என்ற தளபதியின் தலைமையில் ஒரு படையை அனுப்பி தனக்கு நேரடியாக சரண டைய வேண்டும் என்று உத்தரவிட்டார். யூஸுஃப் ஷா பணிந்து போக, அவர் மகன் யாகூப் தப்பித்து தலைமறைவானார். ஆனால், விரைவில் பிடிபட்டு அவ ரும் சரணடைந்தார். காஷ்மீர் மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப் பட்டு, அவ்வப்போது அக்பர் கோடையில் ஓய்வெடுக்கும் விடுமுறைத் தலமாக மாறியது. இதேபோல் முல்தானும், பலுசிஸ்தானும். கந்தாரும் வெற் றிகொள்ளப்பட்டது
                                           அக்பரின் ராஜ்ஜியம் டெல்லி, ஆக்ரா, ஔத், அலஹாபாத், அஜ்மீர், குஜராத், பெங்கால், பிஹார், ஒரிஸ்ஸா, மால்வா, சிந்த், முல்தான், லாஹூர், காபூல், காஷ்மீர், பந்தேஷ், அஹ்மத்நகர் மற்றும் பிரார் என்று பதி னெட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இறுதியாக அலிகாரை கைப்பற்றிய வுடன் அக்பர் மிகவும் குன்றிப்போனார். அவரின் பிள்ளைகளால் மிகவும் கவலை அடைந்தார். ஏற்கனவே மகன்கள் முராதும், தனியாலும் குடிப்பழக்க த்தால் முறையே 1599 லும், 1604 லும் இறந்து போனார்கள். அடுத்த மகன் சலீம் (ஜஹாங்கீர்) இவரும் நீண்ட குடி மற்றும் போதை பழக்கமுள்ளவர். இவரின் நலனுக்காக ராஜகுடும்பத்தினர் அதிகம் இறைவனை வேண்டியதாகவும், பல புனித பயணங்கள் மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர் உடல்ரீதி யாக பலமாக இருந்தவர்.
                                                      1600 ல் வயதான அக்பர் டெக்கான் பகுதியில் போரில் இருந்தபோது, சலீம் புரட்சியில் ஈடுபட்டு அலஹாபாத்தைக் கைப்பற்றினார். 1602 ல் மேலும் வயதான அக்பருக்கு அதிர்ச்சிதரும் வகையில் பிரபல கொள் ளைக்கூட்டத் தலைவன் பீர்சிங் பந்தேலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். இறுதி நாட்களில் அக்பர் கொஞ்சம் கூட நிம்மதியில் இருந்ததில்லை. அபுல் ஃபஸல் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டிருந்தார். நம்பிக்கையான சிலரை பதவியில் நியமித்திருந்தாலும், மக்களிடையே நம்பிக்கையற்று போனார் அக்பரின் மகன் சலீம். ராஜா மான்சிங் தலைமையில் ஒரு குழு அமைத்து சலீ மின் மகன் குஸ்ரு (பேரர்) தலைமையில் ஆட்சியை ஒப்படைத்தார். ஆனால், அது நிலையில்லாமல் போனது. 1605 ல் அக்பர் மிகவும் உடல்நலம்குன்றி போனார். அதிகமான வயிற்றுப்போக்கும், மூச்சுத்திணறலும் மருத்துவர்களா ல் காப்பாற்ற முடியாமல் போனது. அவர் கட்டிக்கொண்டிருந்த சிகந்தரா கோபு ர நினைவிடத்திலேயே அக்பரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
                                          இஸ்லாமிய ஆட்சி என்பது நபிகள் (ஸல்), நேர்மையான நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, முதலாம் வலீத் என்பவர் கிறிஸ்தவர்களும் இருந்த ஆட்சியில் இஸ்லாமிய ஆட்சியை நிலைப்படுத்தினார். இதில் அப்பா ஸிட்களுக்கு முக்கிய பங்குண்டு. பாக்தாதை இஸ்லாமிய மையமாக்கி தாரு ஸ் ஸலாம் ஏற்படுத்தினார்கள். ஒரு நாட்டை வென்றெடுத்த மன்னரின் விரு ப்பமே நாட்டின் மதமாக இருந்தது. ஆரம்பத்தில் அக்பர் இஸ்லாமிய ஆட்சியா க இந்தியாவில் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவே தெரிகிறது. அக்பரு ம் சிறுவயதிலேயே ஆட்சிக்கு வந்து அரசியலில் தீவிரமாக இருந்ததால் வெளி யுலக இஸ்லாமிய ஆட்சியை அறிந்திருக்கவில்லை. ஆனால், தீவிரமான இஸ்லாமிய மதபோதகர்கள் அக்பரை இஸ்லாமிய ஆட்சியே இந்தியாவில் ஆள வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அக்பரின் ஆளுகையின் கீழ் பெருவாரியான ராஜபுத்திர இந்துக்களின் பிரதேசங்களும் இருந்தன. அக்பரின் நெருங்கிய நண்பரும், ஆலோசகருமான அபுல் ஃபஸல் இந்த விவகாரத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய கடமைக்காளானார். இவரின் ஆலோசனையில் அக்பர் சுன்னி பிரிவு முஸ்லீமாய் இருந்தார். அக்பர் சிறந்த தொழுகையாளி யாக இருந்தார். சில சமயங்களில் மு அத்தீன் (தொழுகைக்கு அழைப்பு விடுப் பவர்) ஆகவும் இருந்திருக்கிறார். 

மொகலாய வரலாறு 14

                                           ஒவ்வொரு ஆண்டும் அஜ்மீரின் ஷெய்க் சலீம் சிஷ்டியின் நினைவிடத்திற்கு செல்பவராக இருந்தார். அந்த ஞானியின் பெயரையே தன் மகன் சலீமுக்கு சூட்டினார். நாடெங்கும் இமாம்களை அமர்த்தினார். ஒருமு றை அக்பரின் பிறந்த நாளுக்கு அரண்மனைக்கு இஸ்லாமிய ஞானி ஒருவர் வருகை தந்தார். அவர் அக்பருக்கு இந்துக்களின் முறைப்படி வண்ணமயமான உடையலங்காரம் செய்திருப்பதைக் கண்டு, கூடாது என்பதுபோல் கைத்தடி யை அசைத்தார். அது தவறுதலாக அக்பரின் மீது பட்டுவிட்டது என்பதற்காக கடுமையாக அரண்மனை பெண்மணிகளால் தண்டிக்கப்பட்டார். மெஹ்தி என்ற ஒரு அமைப்பும் அக்பரின் காலத்தில் இருந்தது. அதன் தலைவர்களை கைது செய்தார். பின் பெரும் இஸ்லாமிய அறிஞர்களை வரவழைத்து பல தர ப்பு ஆலோசனைக்குப் பிறகு, இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவித் தார். இதனால் பலமான எதிர்ப்பு கிளம்பியது. சில இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதனால் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுடன் இந்தியாவின் மற்ற மதக் கொள்கைகளையும் இணைத்து ‘தீனே இலாஹீ’ என்ற புதிய மதத்தை அறிமுக ப்படுத்தினார். இதில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, இஸ்லாமை ப்போல் ஸலாம் அலைக்கும் என்பதற்கு பதிலாக, அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொ ள்ள வேண்டும். அப்போதைய இஸ்லாமிய உலகின் அப்பாஸிட்களும், உமய் யாத்களும் அக்பரை மிகவும் கடுமையாக கண்டித்தனர். இது ஒரு முட்டாளின் கண்டுபிடிப்பு என்று இகழப்பட்டார். தீனே இலாஹீ ஒரு நபியின் வழியாக தோன்றிய மதமல்ல அரசியல் ஆதாயத்திற்காக ஒரு மன்னரால் தோற்றுவிக் கப்பட்டது என்று கூறப்பட்டது. உண்மைதான் ராஜபுத்திரர்கள் தங்கள் உறவுக ளை அக்பரின் குடும்பத்திற்கு மணமுடித்துக் கொடுத்தனர்.
                                                           பதாயோனி என்பவர் தனது புத்தகத்தில் கீழ் கண்ட நடைமுறைகள் அக்பரின் ஆட்சியில் இருந்ததாக குறிப்பிடுகிறார் :
தலையை தரையில் வைத்து (சஜ்தா) மன்னரை வணங்கும் முறை இருந்தது. தீ வழிபாடும், சூரிய வழிபாடும் அக்பரின் ஆட்சியில் இருந்தது. அக்பர் மணந்து கொண்ட இந்து பெண்களின் திருப்திக்காக ஆண் காட்டுப்பன்றி அரண்மனை யில் கட்டி வைக்கப்பட்டு சகுனம் பார்க்கப்பட்டது. தன் மனைவிகளுக்காக நெற்றியில் பொட்டிடும் பழக்கமும் அக்பரிடம் இருந்தது. மாட்டிறைச்சி, பூண் டு, வெங்காயம் உபயோகப்படுத்தப்பட்டு, தாடி வைப்பது தடை செய்யப்பட்டிரு ந்தது. தாடி வைத்திருந்த முல்லாக்கள் தண்டிக்கப்பட்டனர். மிருகங்களை பலி யிடுவதும், உண்பதும் இஸ்லாமில் ஆகுமானதாக இருக்க, அக்பர் இந்துக்களுக் காக பசுக்களைக் கொல்வதையும், உண்பதையும் தடை செய்தார். ஆண்களுக் கு பனிரெண்டு வயதிற்கு முன் விருத்தசேதனம் செய்வதும், பூப்பெய்தாத பெண்கள் மண முடிக்கவும் தடை செய்யப்பட்டது. அரபுமொழி பயில்வது ஆர் வமூட்டப்படாமல் இருந்தது. பகிரங்கமாக தொழுகைக்கு அழைப்பதும், பொது இடத்தில் தொழுவதும் தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய பெயர்களான முஹமது, அஹமது, முஸ்தபா போன்ற பெயர்கள் மன்னருக்கு எதிராக (அவர் அக்பர் அல்லவா) இருப்பதாக கூறி வேறு பெயர்கள் வைக்கப்பட்டனர். புனித மக்கா பயணம், ரமதான் மாத நோன்புகள் ஆதரிக்கப்படவில்லை. குர்ஆன், ஹதீஸ்கள் புழக்கத்திலிருந்து மறைக்கப்பட்டன. மசூதிகளும், வணக்கவிடங் களும் வீரர்களின் ஓய்வறையாகவும், பொருள் சேகரிக்கும் இடமாகவும் ஆக்க ப்பட்டன. தனது தீனே இலாஹிக்காக ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இஸ்லா மின் வாடையே இந்தியாவில் இல்லாமல் செய்தார். பிரிட்டிஷாரின் கூற்றுப் படி அக்பர் தங்களை விட பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டார். அவரின் ஆட்சிக்கு தீனே இலாஹீ போன்ற பொதுவான மதம்தான் இந்தியா போன்ற பல மதமுள் ள நாட்டுக்குத் தேவை என்று வாதிட்டாலும். இஸ்லாம் இதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது அல்லது அவர் இஸ்லாமியரே அல்ல. ஜஹாங்கீர் தன் தந் தை ஒரு சிறந்த தொழுகையாளி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதை யாரும் அங்கீகரிக்கவில்லை. நண்பர் அல்லாமா அபுல் ஃபஸல் மூலம் “அக்பர் நாமா” என்ற நூலை எழுதச்செய்தார்.
       கலைகளிலும், இலக்கியத்திலும் மிகவும் புலமை வாய்ந்திருந்தார். உலகளவில் ‘தி க்ரேட்’ என்று போற்றப்பட்ட மிகச்சிலரில் அக்பரும் ஒருவர். பிரபல்யமான புத்தகங்களான கான் இ கானான், ஜாமா இ ரஷீதி, மு அஜம் உல் புல்தான், ஷாஹ்னாமா, ஹயாத் உல் ஹைவான் ஆகிய வற்றை பெர்ஷிய மொழியில் மொழி பெயர்க்க வைத்தார். தன்னைச் சுற்றிலும் எப்போதும் தத்துவவாதிகள், போதகர்கள், கவிஞர்கள், சரித்திர ஆய்வாளர்கள் இருப்பது போல் வைத்துக் கொண்டார். அக்பரின் நெருங்கிய நண்பராகவும், ரகசிய ஆலோசகராகவும் அபுல் ஃபஸ்ல் என்பவர் இருந்தார். அபுல் ஃபஸ்ல் தலையாய பெர்ஷிய போதகராகவும், பரந்த கலாச்சார மற்றும் மத அடையாள மாகவும் திகழ்ந்தார். இவரின் மூத்த சகோதரர் ஃபைஸி என்ற அபுல் ஃபைஸ் அரண்மனை நூலகக் காப்பாளராகவும், பெர்ஷிய கவிஞராகவும் இருந்தார். எண்ணற்ற சமஸ்கிருத, ஹிந்தி மொழி கணிதம், விஞ்ஞானம் மற்றும் பலது றை புத்தகங்களை பெர்ஷிய மொழியில் மொழி பெயர்த்தார். தலைசிறந்த அப் துல் காதிர், பைரம்கான், பீர் முஹம்மது, அமீர் மீர் தகி ஷரீஃபி, மௌலானா கீருத்தீன் ரூமி, ஷெய்க் அபுன்நபி தெஹ்லாவி, மிர்சா முஃப்லிஸ், ஹாஃபிஸ் தாஷ்கண்டி மற்றும் முல்லாஹ் சாதிக் ஹால்வி போன்ற இஸ்லாமிய மதபோ தகர்களும் அக்பரின் சபையில் இருந்தார்கள்.
   தனக்கு ஆலோசனை வழங்கவும், அதிகாரிகளாக இருப்பவர்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அக்பர் பார்ப்பதில் லை. மற்ற முஸ்லீம் ஆட்சியாளர்களை விட அக்பரின் அரண்மனையில் இந்து க்கள் தான் பெருவாரியாக இருந்தார்கள். சூஃபி சகோதரர்களான அபுல் ஃபஸ்ல் மற்றும் அபுல் ஃபைஸ் தவிர, ராஜா தோடர்மால், பீர் பால், ராஜா பக்வான் தாஸ், ராஜா மான் சிங், ராஜா பிஹாரி மல், ஹரி நாத், சூர் தாஸ், துளசி தாஸ் மற்றும் பல் ஹிந்துக்கள் சிறப்பான அந்தஸ்தில் இருந்தார்கள். ஓவியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அக்பர் அதற்காக ஓவியப்பள்ளிகளை அமைத் தார். ஃபதேபூர் சிக்ரியில் அக்பர் அமைத்த ஓவியங்களுடன் கூடிய கலை மண் டபம் பிரசித்திப் பெற்றது. நல்ல ஓவியக் கலைஞர்களுக்கு பெரிய ஊதியமும், ஊக்கத் தொகைகளும் கொடுத்தார். சையத் அலி தப்ரீஸ், கவாஜா அப்துல் சமத் மற்றும் கேசு போன்ற சிறந்த ஓவியர்கள் இருந்தார்கள். தன் காலத்தில் இந்தியாவில் இசைக்கலையை மிக உச்சத்தில் அக்பர் வைத்திருந்தார். தானே ஒரு இசைக்கலைஞராக இருந்தார். சுபான் கான், சருத் கான், ஸ்ரீ கியான் கான், மியான் கான், மியான் லால், தாவூத் தாரி, முஹம்மத் கான் தாரி, முல்லாஹ் இஸ் ஹாக் தாரி, நானக் ஜர்ஜு, பிலாஸ் கான், தன்தரங்க் கான், ரங்க் சென், ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பீர் ஸாதாஹ் போன்ற இசைக்கலைஞர்கள் இருந் தார்கள். இவர்களுக்கெல்லாம் மேல் காலத்தால் அழிய முடியாத இசை மேதை மியான் தான்சேன் இருந்தார். தனது இசைத்திறமையால் யமுனா நதியையே தீயால் எரியச் செய்ததாக வரலாறு உள்ளது. இன்றும் இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்கள் குவாலியரில் உள்ள இவரின் கல்லறையில் அமர்ந் து பாடுவதுண்டு. மியான் தான்சேனைப் போலவே அக்பரின் அவையில் ராம் தாஸ் மற்றும் ஹரி தாஸ் என்ற இருவர் ‘பாடும் குயில்கள்’ என்ற சிறப்பில் அழைக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். பீன், புல்லாங்குழல், கிசக், கரானா, கபுஸ், சர்மண்டல், சுர்னா, தம்புரா, ரபப் மற்றும் கானூன் போன்ற இசைக்கரு விகள் பிரபல்யமாக இருந்தன. இந்த கருவிகளை இசைக்கும் வல்லுனர்களாக ஷெய்க் தவான் தாரி, ஷிஹாப் கான், புர்பின் கான், உஸ்தாத் தோஸ்த், மீர் செய்யத் அலி, பஹ்ராம் குலி, தாஷ் பேக், பீர் மண்டல் கான், உஸ்தாத் யூசுஃப், சுல்தான் ஹாஷிம், உஸ்தாத் முஹம்மத் ஹுசெய்ன், உஸ்தாத் முஹம்மத் அமீன், உஸ்தாத் ஷா முஹம்மத், மீர் அப்துல்லாஹ் மற்றும் காஸிம் ஆகியோ ர் இருந்தனர். அக்பரின் அவையில் ‘தர்பாரி’ என்ற ராகம் மிகவும் பிரபல்யமாக இருந்தது.
அக்பர் கட்டிடக் கலையில் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் கால கட்டிடக் கலை இன்றும் ஃபதேபூர் சிக்ரியில் பறைசாற்று கின்றது. பாரசீக கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் ஹுமாயுன் கல்லறை, அத ன் அருகிலுள்ள பிரமாண்ட வாயில் கொண்ட மசூதி உலகில் எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆக்ரா கோட்டையிலுள்ள ஜஹாங்கிரி மஹால், ஷெய்க் சலீம் சிஷ்தி கல்லறை, ஃபதேபூர் சிக்ரியின் அழகிய மசூதி, ஜோதாபா ய் அரண்மனை, அக்பர் அரண்மனையின் மத்திய அரங்கம், தி க்ரேட் மாஸ்க் என்னும் மசூதி, ராஜபுதனாவின் மிர்தாவில் உள்ள அழகிய மசூதி, குவாலியரி ல் உள்ள துறவி முஹம்மது கௌஸ் கல்லறை, ராஜா பிஹாரி மாலின் மனை வியின் சதி புர்ஜ், அலஹாபாத்தில் உள்ள நாற்பது தூண்கள் மண்டபம், பீர் பால் இல்லம், கோபிந்த் தேவ், கோபி நாத், மதன் மோஹன், ஜுகல் கிஷோர் ஆகி யோரின் நாற்கோவில் மற்றும் சிக்கந்தராவில் உள்ள அக்பர் ஸ்தூபி ஆகிய வை அக்பரின் கட்டிடக் கலையின் சிறப்புகள் ஆகும். தோட்டக்கலையிலும் ஃபதேபூர் சிக்ரி பூங்கா மற்றும் காஷ்மீரின் நசீம் பாக் ஆகியவை சிறப்பானவை. இவைகளை எல்லாம் மொகலாயர்களுக்குப் பின்னால் ஆளவந்த பிரிட்டிஷார் கண்டு வியந்து போயினர். உலக மன்னர்களெல்லாம் வாளெடுத்து ரத்தம் சிந்தி, கொள்ளையடித்து பூமிகளைத் தான் பிடிப்பார்கள் என்று அறிந்திருந்த பிரிட்டிஷாருக்கு மொகலாயர்களைப் போல் வென்ற இடங்களில் கலை வளர் க்க முடியுமா என்று திகைத்துப் போனார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பனி ரெண்டாம் நூற்றாண்டு வரை சீனாவிலிருந்து மேற்கில் ஸ்பெயின் வரை இஸ் லாமிய மன்னர்கள் இந்த உலகுக்கு காட்டிய கட்டிடம் மற்றும் கலைகளை யாரும் காட்டியதில்லை, இனி காட்டவும் முடியாது. தேம்ஸ் நதி பாலம், பிக் பென் கடிகாரம், சுதந்திரதேவி சிலை மற்றும் குதிரைகளில் அமர்ந்து வாள் காட் டும் நான்காம் ஹென்றி, இரண்டான் சார்லஸ் என்று இவர்களாகவே ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியது தான். உலகிலேயே வருடாவருடம் அதிகமா ன மக்கள் இஸ்லாத்தில் இணைவது ஸ்பெயினில் மட்டும் தான் காரணம் அங்கு இஸ்லாம் விட்டு வந்த உண்மையான ஆட்சி, கட்டிடக் கலை மற்றும் கலை, கலாச்சாரங்களும் தான். தோல் உரிக்கப்பட்ட சப்போட்டா பழத்தின் உள்ளே அதிசயமாக மாம்பழம் வந்தாலும் வருமே தவிர, மேற்கத்தியர்களால் உலகில் அமைதியை நிலை நாட்ட முடியாது.
           அக்பரால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இந்து கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறி, பின்னால் ஆட்சிக்கு வந்த அக்பரின் பேரர் ஷாஜஹான் இடித்தார்.