1979 ல் ஈரானில் ஷா முஹம்மது ரேஸா பஹ்லவி இஸ்லாமிய புரட்சியின் மூலம் துரத்தப்பட்டு, அயாதுல்லாஹ் ரூஹல்லாஹ் கொமெய்னி ஆட்சிக்கு வந்தார். இவர் தீவிர ஷியா பிரிவானதால், தன் பகுதி ஈராகில் குர்திஷ்கள் பலம் பெருவார்களோ என்று சதாம் ஹுசெய்ன் அச்சப்பட்டார். காரணம் 1964 ல் ஈரானை விட்டு ஓடிய கொமெய்னி ஈராக்கில் ஷியாக்கள் நிறைந்த அந்நஜஃப் பகுதியில் தான் தங்கி இருந்தார். அங்கிருந்தபடி சதாம் ஹுசெய்னுக்கும் தொல்லை கொடுத்திருந்தார். 1980 ல் ஃப்ரென்சின் உதவியுடன் ஈராக்கில் நியூக்ளியர் அணுஉலை ‘ஓசிரக்’ துவங்கப்பட்டது. 1981 ல் இஸ்ரேல் அதை குண்டுவீசி தகர்த்தது. 1980 ல் ஈராக் ஈரானின் தெஹ்ரான் மெஹ்ராபாத் விமான நிலையத்தைத் தாக்கி, எண்ணெய் வளமிக்க குஸெஸ்தான் பகுதியில் நுழைந்தது. அப்பகுதியை ஈராக்குடன் இணைத்து விட்டதாக செய்தி சொல்லியது. ஈரானை எதிர்த்து அரபு மாகாணங்கள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில நாடுகளின் பொருளாதார உதவியாலும் ஈராக் மத்திய ஆசியாவிலேயே பலம் பொருந்திய நாடாகக் கருதப்பட்டது. ஈரானுடனான போரின்போது ஆரம்பத்தில் ஈராக்குக்கு ஆதரவாய் இருப்பதாக அறிவித்த சோவியத் யூனியனின் மிக்காயில் கோர்பசேவ் பிறகு, பொதுவாக இருப்பதாக அறிவித்தார். முதல்நாள் போரில் பலனடைந்தது போலிருந்த ஈராக் அடுத்த நாட்களில் ஈரானின் தற்கொலைப்படை தாக்குதல்களால் பலம் இழந்தது. 1982 ல் ஈராக் போரை நிறுத்திக்கொள்ள தயாராய் இருந்தது. போரில் ஈராக் ஜெர்மனி நிறுவனம் கொடுத்த இரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது. அமெரிக்காவின் அதிபர் ரீகன் ஈரானின் செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தந்து, தெஹ்ரானில் மக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீச ஆலோசனை தந்தது. ஃப்ரான்ஸ் 25 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஈராக்குக்கு ஆயுதங்கள் விற்றது. அதேநேரத்தில் ஈராக்கின் எண்ணெய் வளங்கள் ஈரானின் கடற்படையால் பெர்ஷியா வளைகுடாவில் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஈராக்குக்கு தொடர்ந்து சோவியத் யூனியன் (மறைமுகமாக), சீனா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்தன. ஈரானும் விடாமல் போரிட்டு ஈராக்கை போரின் இழப்புகளுக்கு நஷ்டஈடு கொடுக்கச் சொன்னது. 1988 வரை ஐ.நா. சபை போரை நிறுத்தச் சொல்லி பேசி வந்தது. 1988 ல் ஈராக்கில் குர்துக்கள் அதிகம் வாழும் ஹலப்ஜா பகுதியில் இரசாய குண்டு வீசப்பட்டு, 10,000 பேர் வரை இறந்து போனார்கள். ஈராக் இதற்கு ஈரானைக் குற்றம் சாட்டியது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருநாடுகளிடையேயும் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏறக்குறைய இரு தரப்பிலும் 10 லட்சம் பேர் இறந்திருக்க, லட்சக்கணக்கானோர் காயமுற்றிருந்தனர். எண்ணெய் வளமிக்க குஸெஸ்தான் மற்றும் பஸ்ரா பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தன. ஈரானுக்கு சிறிதளவு வட குர்திஷ்கள் பகுதியில் நிலப்பரப்பு கிடைத்தது. பொதுவில் இருநாடுகளும் பெரிதும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டிருந்தன. 1986 ல் திருக்குரானின் அல் அன்ஃபால் சூராவின் பேரில் ‘அல் அன்ஃபால் பிரச்சாரம்’ என்று வட குர்திஷ்கள், ஷபக்குகள், யஸிதிஸ்கள், அஸ்ஸைரியன்கள், மண்டீயன்கள், துருக்கிகள் ஆகியோரை எதிர்த்து நடத்தப்பட்டது. மனித உரிமை கழகம் இதில் சதாம் ஹுசெய்னின் தரப்பில் 50,000 லிருந்து 100,000 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கணக்கிட்டது. ஆனால் குர்திஷ்கள் 182,000 பேர் என்றார்கள்.
ஈராக், குவைத் விவகாரம், ஈராக் மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, சதாம் ஹுசெய்னை கைது செய்து தூக்கிலிட்ட வரலாறுகள் நீங்கள் நன்கு அறியப்பட்டதே அதனால் மேலே செல்வோம். சதாம் ஹுசெய்ன் சரித்திரப் பூர்வமாக குவைத் ஈராக்கைச் சேர்ந்ததே என்றும், பிரிட்டிஷார் தான் அதைப்பிரித்து குவைத்தை தனியாக்கினார்கள் என்று பலகாலமாக சொல்லி வந்தார். தான் ஈரானுடன் போரில் ஈடுபட்டிருந்த எட்டாண்டு காலத்தில் குவைத் தனது பகுதியின் எண்ணெய் வளத்தைத் திருடிக் கொண்டதாக அமெரிக்காவிடம் குற்றம் சாட்டினார். அவ்வப்போது எடுத்து சேமித்து வைத்த தனது 27 லிட்டர் ரத்தத்தில் திருக்குரானை எழுதச் சொன்னார். அல்லாஹ் தன்னை பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியதற்காக தான் இதைச் செய்வதாகச் சொன்னார். எந்த ஓரு நாட்டின் தலைவர்களின் வழக்குகளும் சர்வதேச நீதிமன்றத்தில் தான் நடத்தப்படும். ஆனால், சதாம் ஹுசெய்னின் வழக்கு மட்டும் ஒருதலைப்பட்சமாக அவர் நாட்டில் அவரின் எதிரிகளின் முன்பு நடத்தப்பட்டு தூக்குதண்டனை கொடுக்கப்பட்டது. ஏனென்றால் எந்த ஒரு நாட்டு அதிபர் மீதும் கொலைத்தாக்குதல் நடந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதைத்தான் சதாம் ஹுசெய்ன் குர்திஷ்கள் மீது எடுத்தார். குர்திஷ்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தார். குர்திஷ்கள் பகுதியில் ஒரு கூட்டத்திற்கு சதாம் ஹுசெய்ன் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து அவர் வாகனம் அவ்வூர் எல்லையைக் கடக்கும் முன் சரமாரியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக சதாம் ஹுசெய்ன் வேறு ஒரு காரில் சென்று விட்டார். இது முழுக்க முழுக்க குர்திஷ்கள் செய்த தவறு. தலைநகர் திரும்பிய சதாம் ஹுசெய்ன் பாதுகாப்பு அதிகாரியை அழைத்து ஏவுகணைகள் விடப்பட்ட அந்த குறிப்பிட்ட குர்திஷ் கிராமத்தில் நடவடிக்கை எடுக்கச் சொன்னார். மொத்த கிராமமக்களும் வாயைத் திறக்காமல் மௌனமாகி விட்டார்கள். பாதுகாப்பு அதிகாரி பொறுமையைக் கைவிட்டு, 1800 பேருக்கு மேல் இருந்த அந்த கிராமத்தில் இரசாயன குண்டை வீசி அனைவரையும் கொன்று போட்டார். சதாம் ஹுசெய்னை தூக்கிலிட்டதற்கு இந்த வழக்குதான் காரணம். இவர் சிறையிலிருந்தபோது, தலைநிறைய முடியுடன் சீர்செய்யப்படாத தாடியுடன் தன் உடைகளை தானே துவைப்பது போன்றும், உறங்குவது போன்றுமான புகைப்படங்களை ‘தி சன்’ என்னும் பத்திரிக்கை வெளியிட்டது. சிறைக்குப் பக்கத்தில் தானே ஒரு சிறு தோட்டத்தை நிர்மாணிக்க அனுமதிக்கப்பட்டார். வழக்குக்கு முன்பே தீர்ப்பை திட்டமிட்டபடி 2006 டிசம்பர் 30 ல் சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்டார். சமாதியில் அடைக்கம் செய்தவர் தூக்குக்குப் பிறகு, சதாம் ஹுசெய்னின் உடலை ஆறு இடத்தில் குத்தி இருந்தார்களாம். அது நிச்சயமாக அவர் இறக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக என்று சொன்னார். அன்று அவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை, அவரால் வளம் கண்ட ஈராக்கும், அதன் மக்களும் தான் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று அமெரிக்க கைப்பாவையாக ஈராக்கை ஆளும் ஆட்சியினரால் வீணாக வளரும் ஒரு புல்லைக்கூட ஒரு நூற்றாண்டானாலும் வளர்க்க முடியாது.
சதாம் ஹுசெய்ன் தன்னை வளர்த்த மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாவின் மகள் சஜிதா துல்ஃபாவை முதல் மனைவியாக மணந்து கொண்டார். அப்போது சதாம் ஹுசெய்னுக்கு ஐந்து வயது, மனைவி சஜிதாவுக்கு ஏழு வயது. திருமணம் எகிப்தில் நடந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். முதல் மகன் உதைய் ஹுசெய்ன். இவர் ஈராக் கால்பந்து சங்கத்தின் தலைவராக இருந்தார். ஈராக் தொலைக்காட்சி, பாபெல் பத்திரிக்கை ஆகியவற்றை நடத்தினார். இவரை உலக பத்திரிக்கைகள் பெரிய காமக்கொடூரனாக சித்தறித்தார்கள். ஏனென்றால் அமெரிக்கா இவரையும் குண்டுவீசிக் கொன்றுவிட்டது. சரித்திரமும், பூகோளமும் தெரியாத தமிழ் பத்திரிக்கைகள் தினத்தந்தி, தினமலர் கூட இவர் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு தன் மேனியை சொறிந்து கொண்டார்கள். ஒரு சாதாரண தனியார் நிர்வாகத்தில் பணிபுரிபவன் கூட வாரத்திற்கு மூன்று பெண்களுடன் சுற்றுகிறான். உதைய் ஒரு நாட்டு அதிபரின் மகன். இஸ்லாமைப் பொறுத்தவரை தவறுதான் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதன் தண்டனை அவனின் தனிப்பட்ட கணக்கு. இங்கிலாந்து ராணியின் பேரன் ஹாரி மட்டுமென்ன பாதிரியார் உடையணிந்து அப்பமும், தீர்த்தக் கூஜாவுடனுமா அலைகிறார்? அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகள், இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேரின் மகன் ஆகியோர் இரவுவிடுதியில் போதைமருந்துடன் கும்மாளமிட்டார்கள் அது கூட செய்தியாக வந்தது. ஆனால், அது புகாராக வரவில்லை, நாகரீகத்தின் அடையாளமாக வந்தது. உதைய் ஹுசெய்னைப் பற்றி மேலைநாட்டினர் சொல்லும் கதைகள் 1000 பக்கத்திற்கு ஒரு பெரிய புத்தகமாகப் போடலாம். விடுங்கள். அடுத்த மகன் குஸாய் ஹுசெய்ன். இவரும் அமெரிக்காவால் கொல்லப்பட்டார். சதாம் ஹுசெய்னுக்கு அடுத்து இவர்தான் ஆட்சிக்கு வருவதாக இருந்தார். அடுத்ததாக மகள் ராகத் ஹுசெய்ன். இவரை ஜோர்டானின் அரசகுடும்பம் ஆதரவாக அழைத்துக் கொண்டது. தற்போதைய ஈராக் அரசு இவர் பாத் கட்சிக்கு பொருளுதவி கொடுத்து ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி ஒப்படைக்கக் கேட்டது. ஆனால், ஜோர்டான் அரசு மறுத்துவிட்டது. அடுத்து இரண்டாவது மகள் ரணா ஹுசெய்ன் இவரையும் ஜோர்டான் அரசு ஆதரவில் வைத்துக் கொண்டது. இவர் சதாம் கமெல் என்பவரை மணந்து நான்கு குழந்தைகளைப் பெற்றார். மூன்றாவது மகள் ஹாலா ஹுசெய்ன் இவரும் குழந்தைகளுடன் ஜோர்டானில் இருக்கிறார். சதாம் ஹுசெய்ன் இரண்டாவதாக சமீரா ஷாஹ்பந்தர் என்ற பெண்மனியை மணந்தார். இவர் ஈராக் ஏர்வேஸ் தலைவரின் முன்னாள் மனைவி ஆவார். போரின் சமயம் சமீரா லெபனானின் பெய்ரூட்டுக்கு போய்விட்டார். இவருக்கு சதாம் ஹுசெய்னுடன் ஆறு குழந்தைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சதாமின் முதல் குடும்பம் இதை மறுக்கிறது. மூன்றாவது மனைவியாக சோலார் எனர்ஜி ரிசர்ச் செண்டரின் ஜெனரல் மேனேஜராக இருந்த நிடால் அல் ஹம்தானியை மணந்தார். நான்காவதாக வஃபா எல் முல்லாஹ் அல் ஹொவெய்ஷ் என்பவரை மணந்ததாக புரளி நிலவுகிறது.
மகள்கள் ராகதும், ரணாவும் அன்ணன், தம்பிகளான ஹுசெய்ன் காமெல் அல் மஜீதையும், சதாம் காமெல் அல் மஜீதையும் மணந்திருந்தார்கள். ஒரு விவகாரத்தில் சதாம் ஹுசெய்னால் ஆபத்து ஏற்படும் என்று கருதி, மருமகன்கள் இருவரும் ஜோர்டானுக்கு சென்றுவிட்டார்கள். 1996 ல் சதாம் ஹுசெய்னால் ஆபத்து இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின் ஈராக் திரும்பிய இவர்களை, இவர்களால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பழங்குடியினரால் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்கள். சகோதரிகள் இருவரும் ஜோர்டானில் CNN என்ற தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும்போது தந்தையைப்பற்றி மிக உயர்வாகச் சொன்னார்கள். சதாம் ஹுசெய்னைத் தூக்கில் போட்டவுடன் குவைத் மக்கள் தெருவில் வந்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாக தொலைக்காட்சியில் காட்டி அமெரிக்கா அகமகிழ்ந்தது. அதுவும் அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள் அளவுக்கதிகமாக இவரைப்பற்றி கதைகள், நடனங்கள் என்று ஆரவாரப்படுத்தின. ஆனால், உண்மையில் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் கவலை தெரிவித்தனர். இந்தியாவின் தென்பகுதி கேரளா மாநிலத்தில் பரப்பனங்காடி என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய மீன்பிடி கிராமத்திற்கு சதாம் கடற்கரை என்று பெயரிட்டார்கள். இதற்கு முன் இந்த கடற்கரை பிரிட்டிஷாரை எதிர்த்ததின் காரணமாக திப்பு சுல்தான் கடற்கரை என்று இருந்தது. சதாம் ஹுசெய்ன் அமெரிக்காவை எதிர்த்த காரணத்திற்காக தற்போது சதாம் கடற்கரை என்று மாற்றிக்கொண்டதாக அம்மக்கள் தெரிவித்தார்கள். அவரைத் தூக்கிலிட்ட ஆண்டில் உலகம் முழுவதும் பிறந்த 20 லட்சம் குழந்தைகளுக்கு மேல் சதாம் ஹுசெய்ன் பெயர் சூட்டப்பட்டது. சதாம் கடற்கரை மக்கள் தூக்குச் செய்தியைக் கேட்டவுடன் ஜார்ஜ்புஷ்ஷுக்கு எதிராக கோஷமிட்டு, குழந்தைகளும், பெண்களுமாக ஊர்வலம் சென்றார்கள். பாவம் எந்த தொலைக்காட்சிக்கும், பத்திரிக்கைகளுக்கும் கண் தெரியாமல் போனது. ஸ்ரீலங்காவில் பட்டிகோலா என்ற இடத்தில் இருந்த முஸ்லீம்கள் அதிகமுள்ள ஒல்ரு பகுதிக்கு சதாம் ஹுசெய்ன் டவுன் என்று பெயரிட்டார்கள். அவர் அதிபராய் இருந்த போது அந்த டவுனை வளர்ச்சி அடையவும், மஸ்ஜித் கட்டவும் உதவி புரிந்திருந்தார். 1978 ல் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியபோது ஈராக் தூதரகம் மூலம் அம்மக்களுக்கு பல உதவிகளைச் சதாம் ஹுசெய்ன் செய்திருந்தார். வெள்ளத்திற்குப் பிறகு, 100 வீடுகள், பள்ளிக்கூடங்கள், மஸ்ஜிதுகள் கட்டிக் கொடுத்தார். அமெரிக்க மக்களே சதாம் ஹுசெய்ன் ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், திருத்துவது அமெரிக்காவின் வேலையில்லை என்று ஆணித்தரமாக BBC யில் தெரிவித்தார்கள். ஆயிரம் அமெரிக்கா வந்தாலும் சூரியனை மறைத்துவிட முடியாது. நாம் சதாம் ஹுசெய்னுக்காக வாதாடவில்லை. சதாம் ஹுசெய்ன் சொந்தமாக நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ஸ்பீபாஹ் அண்ட் தி கிங், தி ஃபோர்டிஃபைய்ட் கேஸல், மென் அண்ட் தி சிட்டி, பிகோன் டெமென்ஸ் ஆகியவை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக