வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அப்பாஸிட்கள் வரலாறு 4

இன்னுமொரு அரபுக் காதல் கவிதைக்களஞ்சியம் ‘லைலா, மஜ்னூன்’ ஆகும். இறுதியில் சோகம் ததும்பும் இது ஈரானிய, பெர்ஷிய, அஜர்பை ஜான், துருக்கிய மொழிகளில் மேன்மைப் படுத்தப்பட்டது. இது ஏழாம் நூற்றாண்டில் உமய்யாத்களின் ஆட்சியின்போதே எழுதப்பட்டது. இதன் தழுவல் தான் மேற்கத்தியரின் ‘ரோமியோ ஜூலியட்’ ஆனது. ஒன்பதாம் நூற்றாண்டின் அரபுக் கவிஞர்கள் அல் முதன்னபி, அபு தம்மாம் மற்றும் அபு நுவாஸ் ஆகியோர் பாக்தாதில் கலீஃபாக்களின் அரண்மனைக்கு சென்று வருபவர்களாக இருந்தார்கள். அப்பாஸிட் காலத்தில் தத்துவம் இஸ்லாத்துடன் இணைந்து கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. சிந்தனையாளர்களான அல் கிண்டி, அல ஃபராபி, அல் ஜாஹிஸ், இப்ன் அல் ஹைதம் மற்றும் அவிசின்னா ஆகியவர்களின் தத்துவங்கள் புகழ்வாய்ந்தவை. எட்டாம் நூற்றாண்டுகளின் இறுதியில் சீனாவின் காகித உற்பத்தி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு அறிமுகமானது. அதை பெரிதும் வரவேற்று காகித ஆலையை உருவாக்கி இஸ்லாமிய ஆட்சிதான் பத்தாம் நூற்றாண்டுகளில் அதை ஸ்பெயின் வழியாக ஐரோப்பா கொண்டுசென்று இன்று உலகம் முழுவதும் இன்றியமையாத நிலைக்கு இட்டுச் சென்றது. அதேபோன்று வெடி மருந்து தயாரிப்பு நுட்பமும் சீனாவின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு வந்து பொட்டாசியம் நைட்ரேட்டுடன் இணைத்து வெடிமருந்து துகள்களை தயாரித்து உலகம் முழுவதும் பரவலாக்கினார்கள். 
அப்போது புதிய முறையாக இயந்திரத்தறியில் நூல் உற்பத்தி செய்யப்பட்டும், ஐரோப்பியர்களுடன் இணைந்து அல் அண்டலூஸ் வழியாக பாதாம், சிட்ரஸ் கனிவகைகளை வரவழைத்து சர்க்கரை தயாரிக்கப்பட்டதும் இஸ்லாமிய ஆட்சியில் தான். கடற்பயணத்திற்கென வழிகாட்டும் வரை படம் தயாரித்தது. முதன்முதலில் வியாபாரக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. பதினாறாம் நூற் றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வரும் வரை இந்தியப் பெருங்கடலில் இஸ்லாமியர்களின் கப்பல்களே கோலோச்சின. இதற்காக மெடிட்டரேனியன் கடலில் இணைக்கும் வகையில் கடல்வழிகளை அமைத்து வெனிஸ், ஜினோவா மற்றும் கேடலோனியா போன்ற ஐரோப்பிய நகரங்களுடன் வாணிபம் செய்தார்கள். இந்த கடல் வாணிபத்திற்கு ஹோர்முஸ் துறைமுகம் தளமாக இருந்தது. கடல்வழியில் சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே மத்திய ஆசியாவைக் கடக்க பயன்பட்ட ‘சில்க் ரோட்’ என்னும் கடல்வழி முஸ்லீம் பேரரசில் தான் இருந்தது. 
இன்றைய உலகத்தின் தொழிற்சாலைப் பயன் பாட்டுக்கான பலவற்றை அன்றே இஸ்லாமிய பொறியாளர்கள் உருவாக்கி இருந்தார்கள். விண்ட் பவுடர், டைடல் பவுடர், ஹைட்ரோ பவுடர் போன்றவற்றை கண்டுபிடித்தார்கள். முக்கியமாக பெட்ரோலிலிருந்து மண்னெண்ணை வடிகட்டும் நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். ஏழாம் நூற்றாண்டிலேயே நாட்டின் தொழிற்கூடங்களில் வாட்டர் மில்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஹரிஸாண்டல் வீல், வர்டி கல் வீல் போன்றவற்றையும் பயன்படுத்தி முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். சிலுவைப்போரின் போதே அல் அண்டலூஸ், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பல ஆலைகளை நிர்வகித்திருந்தார்கள். அவைகளில் விவசாயத்திற்கும், தொழிற் கூடங்களுக்கும் தேவையானவற்றைத் தயாரித்தார்கள். மேலும் பழங்காலத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட வேலைகளுக்கு இஸ்லாமிய பொறியாளர்கள் பல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்று கண்டுபிடித்து அணைகளுக்கு பயன்படுத்தி இருந்தார்கள். பல தொழிற் சாலைக்கு பயன்படும் கண்டுபிடிப்புகளை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியதும் இஸ்லாமியர்கள் தான். துணி, காப்பி, சர்க்கரை, கயிறு தயாரித்தல், தரைவிரிப்பு, சில்க் மற்றும் காகித ஆலைகளை முதல் முதலில் பயன்படுத்தினார்கள். வேதியி யல் மற்றும் தொழிற்சாலைக்கான ஆயுதங்கள் செய்யும் நுட்பத்தை பனிரெண் டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப் படுத்தினார்கள். 
அப்பாஸிட்கள் தங்கள் பேரரசில் வசித்த முஸ்லீம் அல்லாதவர்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். தினசரி வாழ்க்கையில் அனைவரும் அரபி மொழி பேசும் அளவுக்கு சுமூக உறவு இருந்தது. இது ஒருவருக்கொருவர் அறிவாற்றலைப் பறிமாறிக்கொள்ள பயன்பட்டது. பெரும்பான்மையான அறிவுத் திறமையும், தொழில்நுட்பமும் சிலுவைப்போரின் போது ஐரோப்பாவில் கொள் ளையடித்துச் செல்லப்பட்டது. அப்பாஸிட்களின் ஆட்சி 1258 ல் மங்கோலியர்களின் பாக்தாத் படையெடுப்பால் முடிவுக்கு வந்தது.    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக