வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அப்பாஸிட்கள் வரலாறு 2

புவய்ஹித் கலீஃபா அல் கா இம்மால் வெளியுதவியின்றி அவரை அடக்க முடியாமல் போனது. செல்ஜுக் சுல்தான் டோக்ரில் பெக் பாக்தாதில் சுன்னி பிரிவு முஸ்லீம் ஆட்சியையே தக்க வைத்து ஈராக்கை தன் வசப்படுத்திக் கொண்டார். செல் ஜுக் சுல்தான்கள் அல்ப் அர்சலன், மலீக் ஷா மற்றும் மந்திர் நிஸாம் அல் முல்க் ஆகியோரின் இருப்பிடங்கள் பெர்ஷியாவில் அமைந்திருந்தாலும், பாக்தாதின் அதிகாரம் பனிரெண்டாம் நூற்றாண்டில் அவர்கள் வீழும்வரை அப்பாஸிட்களின் வசமே இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் கலீஃபா அல் மா மூன்  இப்ன் அப்துல்லாஹ் என்பவர் ஏழாவது ஆட்சியாளராக இருந்தார். கவர்னர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கிரேக்க அறிவியல், தத்துவம் சார்ந்த புத்தகங்களை மொழி பெயர்த்து “பெய்த் அல் ஹிக்மாஹ்” என்ற அறிவுக்கூடத்தை ஏற்படுத்தினார். மருத்துவத்தில் அதிக ஆர்வம் காட்டினார். மத விஷயங்களில் தீர்ப்பு சொல்ல காதிகளை உண்டாக்கினார். மம்லூக்குகளைக் கொண்ட இராணுவப் படையை அமைத்திருந்தார். அதை பிறகு வந்த அவர் சகோதரர் அல் முதசீம் மேலும் விரிவுபடுத்தினார். மம்லுக் இராணுவம் அப்பாஸிட்களுக்கு உதவியாக வும் இருந்தது, தொல்லையாகவும் இருந்தது. ஆரம்பத்தில் மம்லுக் இராணுவம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து நிலையான ஆட்சி அமைக்க உதவின. அல் முதசிம் தலைநகரை பாக்தாதில் இருந்து சமர்ராவுக்கு மாற்றியதிலிருந்து மம்லுக் இராணுவத்திற்கு கருத்து வேறுபாடு வந்து தனி மாகாணத்திற்கு உரிமை கோரினார்கள். எகிப்தில் மம்லுக்கள் ஆட்சிக்குவந்தனர். பாக்தாதில் மங்கோலியர்களின் வரவால் எகிப்தின் மம்லுக் ஆட்சி அப்பாஸிட்கள் வசம் வந்தது. கெய்ரோவின் முதல் அப்பாஸிட் கலீஃபாவாக அல் முஸ்தன்சிர் பதவியேற்றார். இவர் 6 வயதில் கலீஃபாவானதால் இவரது தாயார் அரசு விவகாரங்களைக் கவனித்துக் கொண்டார். இவரது காலத்தில் அல் ஜம் இ அல் ஜுயுஷி, பாப அல் ஃபுதூஹ், பாப் அல் நாஸ்ர், பாப் ஸுவெய்லா போன்ற பல கட்டிடங்களைக் கட்டினார். 
கெய்ரோவின் கடைசி கலீஃபா மூன்றாம் அல் முதவக்கில், ஓட்டோமான் சுல்தான் முதலாம் செலிம் என்பவரால் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு அவர் மதிப்பாக இருந்த கான்ஸ்டாண்டிநோபிளுக்கு கொண்டு செல்லப்பட்டார். சில காலம் கழித்து கெய்ரோ திரும்பி 1543 ல் மரணமடைந்தார். 1258 ல் மங்கோலியர்களின் தாக்குதலுக்குப் பிறகு, உயிர் தப்பிய சில அப்பாஸிட் குடும்பநபர்கள் இரண்டாம் இஸ்மாயில் என்பவர் தலைமையில் தென்பெர்ஷியாவில் கல்வித் தலைமையக மான கோஞ்ச் நகரத்தில் தஞ்சமடைந்தனர். இரண்டாம் இஸ்மாயில் ஹம்சா என் பவரின் மகனாவார். இரண்டாம் இஸ்மாயிலின் மகன் அப்பாஸுக்கு ஷெய்க் அப்துல்சலாம் கோஞ்ச் என்ற மகன் பாக்தாத் நகரம் வீழ்ந்ததற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து பிறந்தார். இவர் பின்னாளில் சிறந்த சூஃபி துறவியாகி மக்களிடம் நன்மதி ப்பைப் பெற்றிருந்தார். இன்றும் கோஞ்ச் நகரில் இவரின் அடக்கஸ்தலத்திற்கு தூர, அருகாமை மக்கள் பார்வையிட வருகிறார்கள். இவரின் சந்ததியினர் பெரும்பான்மையோர் மத போதகர்களாக மக்களிடம் செல்வாக்கை பெற்றவர்களாவார்கள். ஷெய்க் ஜாபரின் மகன் ஷெய்க் முஹம்மது பஸ்தக் நகரில் இருந்தார். இவ ரின் பேரர் இன்னொரு ஷெய்க் முஹம்மது கோஞ்ச் நகரில் இருந்து பின்னாளில் சூஃபியிசம் பிரபல்யமடைய பஸ்தக் நகரம் சென்றார். இவரின் பேரர் ஷெய்க் ஹசன் (முல்லா ஹசன்) எல்லா அப்பாஸிட் பஸ்தக் நகரவாசிகளுக்கும், சுற்றி யுள்ள பகுதிகளுக்கும் பொது மூதாதையராக இருந்தார். 
ஷெய்க் ஹசனின் பேரர்கள் ஷெய்க் முஹம்மது சயீத், ஷெய்க் முஹம்மது கான் இருவரும் மாகாணத்தின் முதல் இரு கலீஃபாக்களாக ஆனார்கள். ஷெய்க் முஹம் மது சயீத் ஆயுதபடையின் ஒத்துழைப்பை சேகரித்தார். பின் லார் என்ற நகரைக் கைப்பற்றி இறக்கும் வரை பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தார். சகோதரர் ஷெய்க் முஹம்மது கான், தான் ஆண்டுகொண்டிருந்த பஸ்தக் மற்றும் ஜஹாங்கிரியேஹ் பகுதிகளை தன் மூத்த மகன் ஷெய்க் முஹம்மது சாதிக் மற் றும் உறவினர் அகா ஹசன் கான் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு திதிஹ்பான் கோட்டைக்குச் சென்றுவிட்டார். இதனால் “திதிஹ்பான்” என்றே பெயர்பெற்றார். கோட்டையிலிருந்தே இருபது வருடங்களுக்கு மேலாக இரு நகரங்களையும் ஆட்சி செய்தார். மரணத்தருவாயில் மட்டும் திரும்பி பஸ்தக் வந்தார். இவர் மேலும் தனது ஆட்சி எல்லையை லார் மற்றும் பந்தர்அப்பாஸ் வரை அமைத்துக் கொண்டார். 
முதல் அப்பாஸிய ஷெய்க் முஹம்மது கான் தான் “கான்” என்ற பட்டப்பெயரை முதலில் சூட்டிக் கொண்டார். ‘கான்’ என்ற சொல்லுக்கு பெர்ஷிய மற்றும் அரேபிய மொழியில், முறையே ஆட்சியாளர் மற்றும் மன்னர் என்று பொருள். இதன் பிறகு பஸ்தக், ஜஹாங்கிரியாவை ஆண்ட அனைத்து அப்பாஸிய ஆட்சியாளர் களும் “கான்” என்ற பெயரையே தங்கள் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தினர். கடைசி அப்பாஸிய ஆட்சியாளராக பஸ்தக் மற்றும் ஜஹாங்கிரியெஹ்வில் முஹம்மது ரேஸா கான் சத்வத் அல் மமலிக் பனியப்பாஸி என்பவரின் மகன் முஹம்மது அஸாம் கான் பனியப்பாஸி ஆட்சி செய்தார். 1962 ல் இவர் எழுதிய மூதாதைய அப்பாஸிட்களின் ஆட்சி பற்றிய “தாரிக் இ ஜஹான் கிர்யெஹ் வ பனியப்பாஸி யன் இ பஸ்தக்” என்ற புத்தகத்தின் மூலம் அக்காலத்திய பல நிகழ்வுகள் தெரிகின்றன. முஹம்மது அஸாம் கான் பனியப்பாஸி 1967 ல் மரண மடைந்தார்.              
அப்பாஸிட் கலீஃபா அல் முஸ்தர்ஷித் தான் முதன்முதலில் இராணுவத்தை அமைத்து செல்ஜுக்குகளுடன் போரிட்டார். 1135 ல் படுகொலை செய்யப்பட்டு இறந்தார். கலீஃபா அல் முக்தஃபி அப்பாஸிட் கள் இழந்த அனைத்துப் பகுதிகளை யும் மந்திரி இப்ன் ஹுபைராவின் உதவியின் மூலம் கைப்பற்றினார். 1157 ல் செல்ஜுக்குகள் தொடுத்த பாக்தாத் போரில் எதிர்த்து வென்று ஈராக்கை தன் வசப்படுத்தினார். வீரமான மன்னராக அறியப்பட்ட இவர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். 1225 ல் கலீஃபா அல் முஸ்ததி என்பவரின் மகன் அல் நாசிர் கலீஃபா வானார். செல்ஜுக்குடன் போர் புரிந்து மூன்றாம் டோக்ரிலின் தலையை அரண் மனை வாசலில் தொங்க வைத்தார். கிழக்குப் பகுதியில் பலம் வாய்ந்தவராகி ஈராக்கின் மொத்த பகுதியையும் அப்பாஸிட் பேரரசில் இணைத்தார். எல்லையை மொஸோபொடாமியா மற்றும் பெர்ஷியா வரை விரிவுபடுத்தினார். கடைசி காலத்தில் உறுப்புகள் செயலிழந்து மரணமடைந்தார். 1206 ல் மத்திய ஆசியாவில் மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் புதிய பேரரசை உருவாக்கினார். பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் பெரும்பான்மையான ஈரோஷியன் பகுதி களையும், கிழக்கில் சீனா, மேற்கில் பழைய இஸ்லாமிய பிராந்தியங் களையும் வென்றது.  1258 ல் மங்கோலிய ஹுலகுகானின் பாக்தாத் அழிப்பு ஏறக்குறைய அப்பாஸிட்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு சென்றது. மங்கோலிய ஹுலகு கான் பாக்தாதைக் கைப்பற்றி பல உயிர்களைக் கொன்றான். பாக்தாதின் கடைசி கலீஃபா அல் முஸ்தஃசிம் ஆவார். மங்கோலியப் படைகள் பாக்தாதில் நுழைந்து கொடுஞ் செயல்களைப் புரிந்தன. ஹுலகுகான் மீது எந்த போர் நடவடிக்கையும் எடுக்காமல், குறைவாக மதிப்பிட்டு சாதாரணமாக சமாதானம் பேசிக் கொண்டி ருந்தார். ஹுலகுகான் கலீஃபா அல் முஸ்தஃசிமை தரை விரிப்பில் சுருட்டி, குதிரை களை அதன்மேலேற்றி கொடூரமான முறையில் கொலை செய்தான். இது போன்ற ஒரு கொடூரம் இமாம் ஹுசைன்(ரலி) அவர்கள் மரணத்தின்போது கூட நடக்கவில்லை என்று பெர்ஷிய ஷியாக்கள் கருத்து தெரிவித்தனர். அவரின் மகன் களையும் இரக்கமில்லாமல் கொன்றான். கலீஃபா அல் முஸ்தசிம் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரின் நேரடி வாரிசு அதனால் முஸ்லீம்கள் உறைந்து போயினர். கலீஃபாவின் உறவினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். கலீஃபாவின் மகள் ஹுலகுகானின் அரண்மனையில் அடிமையாக்கப்பட்டார் என்றும், சிறு வயதான மகன் மங்கோலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு திருமணமாகி, குழந்தைகளும் உள்ளதாக மங்கோலிய சரித்திரம் சொல்கிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமிய ஆட்சியே எங்கும் இல்லாமல் போனது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக