ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 6



பாகம் : 11
வெளிப்புற சூழ்ச்சிகளை முறியடித்தல்
ஸலாவுத்தீன் எகிப்தின் ஆட்சியை ஏற்ற பிறகு, ஃப்ராங்க்ஸ் இவரை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. மக்கள் ஸலாவுத்தீன் மீது வைத்திருக்கும் அன்பும், தங்கள் நாட்டின் மீது வைத்துள்ள பாசமும் ஃபராங்க்ஸுக்கு எப்படியாவதாவது ஸலாவுத்தீனை வெற்றி கொண்டு விரட்ட தயாராகி காத்திருந்தது.
ஃப்ராங்க்ஸ் முதல் காரியமாக, நமது ஜெருசலம் கை நழுவி போய் விடுமுன் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஸ்பெயினுக்கும், சிஸிலிக்கும் செய்தி அனுப்பியது. அவர்கள்  பாதிரியார்களையும், மதபோதகர் களையும் ஆள்பலம், ஆயுதங்கள் மற்றும் பெரும் பணத் துடன் ஒரு படையை அனுப்பினர். அந்த படை 564 A.H. ல் டமெய்ட்டாவை முற்றுகையிட்டனர். ஸலாவுத்தீன் வெடி மருந்துகள், ஆயுதங்கள் அடங்கிய படையொன்றை நைல் நதி வழியாக டமெய்ட்டாவுக்கு அனுப்பினார். மேலும் ஃப்ராங்க்ஸை விரட்ட நூருத்தீனிடம் உதவி கோரினார்.
நூருத்தீன் இசைந்து பெரும் படைப் பிரிவை எகிப்துக்கு அனுப்பி, தானும் சொந்த படையுடன் லீவண்ட் மற்றும் பாலஸ்தீனின் சிலுவைப் போராளிகளின் முக்கிய தளங்களை நோக்கி படை எடுத்தார். நூருத்தீனின் படை எகிப்து வருவதை அறிந்த ஃப்ராங்க்ஸ் ஏமாற்றத்துடன் தன் படைகளை பின் வாங்கி ஐம்பது நாட்களாக டமெய்ட்டா வில் தங்கியது. பின் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 569 A.H. ல் சிஸிலியிலிருந்து வந்த சிலுவைப் படைகளுடன் ஃப்ராங்க்ஸ் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியாவை தாக்கியது. அவர்களின் கடற்படை 15 ஆயிரம் குதிரைகள், 30 ஆயிரம் போர் வீரர்கள், எண்ணற்ற குதிரை மற்றும் காலாட்படை வீரர்கள், சக்தி வாய்ந்த ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், படகுகள், சிதைக்கும் இயந்திரங்கள் என்று வந்திரங்கியது. அவர்கள் கரை அடைந்தவுடன் 7 முஸ்லீம் வீரர்களைக் கொன்று, சில படகுகளை மூழ்கடித்து 300 கூடாரங்களைத் தீயிட்டு அலெக் ஸாண்டிரியாவில் கால் பதித்தனர்.
அப்போது ஸலாவுத்தீன் ஃபாகுஸ் என்னும் நகரத்தில் இருந்தார். அலெக்ஸாண்டிரியாவை எதிரிகள் சூழ்ந்துள்ள னர் என்பது மூன்று நாட்கள் கழிந்த பின்பு தான் அவருக்கு தெரிய வந்தது. உடனடியாக ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் நிறைந்த மாபெரும் படையொன்றை அனுப்பி ஏராளமான எதிரிகளைக் கொன்றும், அவர்களின் படகுகளை மூழ்கடித்தும், அவர்களின் ஆயுதங்கள், பொருட்களைக் கைப்பற்றி வெற்றி கொண்டார். தப்பிய சிலுவை வீரர்கள் ஏமாற்றத்துடன் தங்கள் நாடு திரும்பிச் சென்றனர்.
ஸலாவுத்தீன் சிலுவைப் போராளிகளிடமிருந்து இரண்டு முறை அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து எகிப்தை காப்பாற்றினார். இது சிலுவைப் போராளிகளுக்கு அவமானத்தையும், என்றிருந்தாலும்  சிலுவைப் போராளி களின் கழுத்துக்கு இவர் தான் கத்தி என்பதையும் தெளிவாக உணர்த்தியது. மேலும், இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களை எதிர்ப்பவர்களை சிங்கம் போல் சீறிட்டு தடுப்பவராகவும் உலகுக்கு காட்டியது.
பாகம் : 12
அப்பாஸிட் கலீஃபாவின் பேரில் மதபோதனை
உள் நாட்டு, வெளி நாட்டு சதி திட்டங்களை முறியடித்து நிலையான ஆட்சியை அமைத்த பின் அவர் அடுத்த நடவடிக்கையாக சுதந்திரத்திற்கான வழியை நாடினார். மிகைப் படுத்தி கூற வேண்டுமென்றால் எகிப்தியர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குடும்பத்தினரின் ஷியா வழி முறையை கடை பிடித்து வந்தனர். ஸலாவுத்தீன் அவர்களை உலகில் பெரும் பான்மையோரின் வழிமுறையான சுன்னி பிரிவு வழிமுறையில் அழைத்தார். மக்கள் நேர் வழியின் பால் வருவதற்காக அவர் புகழ் பெற்ற நஸரியா, கமிலியா என்று இரு மத கல்விக் கூடங்களை அமைத்தார். நூருத்தீன் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகளை ஃபாத்திமிட் கலீஃபாவின் பெயரை விடுத்து அப்பாசிட் கலீஃபாவின் பெயரில் நடத்த ஆலோசனை கூறினார். இதை நூருத்தீன் மட்டுமின்றி ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகமும் வரவேற்றது. ஆனால் ஸலாவுத்தீன் மேலும் சில காலங்கள் அம் மக்களுக்கு சுன்னி வழிமுறையை நன்றாக தெரியப் படுத்திய பிறகு போதனை முறையை மாற்றலாம் என்று நினைத்தார்.
கடைசி ஃபாத்திமிட் கலீஃபா அல் அதித் உடல் நலம் குன்றிய போது, நூருத்தீனின் வற்புறுத்தலின் பேரில் ஸலாவுத்தீன் தனது ஆலோசகர்களை கூட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார். ஆலோசகர்களில் அரபியரல்லாத மத போதகரான அல் அமீர் அல் ஆலிம் என்பவரிடம் பொறுப்பு விடப்பட்டது. முதல் முறையாக அவர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஃபாத்திமிட் கலீஃபாவுக்கு பதிலாக அப்பாசிட் கலீஃபாவின் பேரில் போதனை நிகழ்த்தினார். ஸலாவுத்தீன் தனது ஆதரவாளர்களிடம் இதை நோய்வாய்ப் பட்டுள்ள ஃபாத்திமிட் கலீஃபாவுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டார். மேலும், ஃபாத்திமிட் கலீஃபா உடல் நலம் தேறினால் அவர் தானாகவே புரிந்து கொள்ளட்டும் ஒரு வேளை இறந்து போனால் அது அவருக்கு தெரியாமலே போகட்டும்” என்று கூறினார். ஆம் இது ஸலாவுத்தீனின் நல்ல உள்ளம், நன்றாக வாழ்ந்த ஒரு மன்னன் தன் பெயர் போதனையில் நீக்கப்பட்டு விட்டது என்று மேலும் வேதனை அடைய வேண்டாம் என்ற அவரின் கருணை. அப்பாசிட் கலீஃபாவின் பேரில் துவங்கிய வெள்ளிக்கிழமை போதனை உரையை மக்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டனர். கடைசி ஃபாத்திமிட் கலீஃபா அல் அதீதி 567 A.H. (1171 C.E.) ல் காலமாக அத்துடன் ஃபாத்திமிட்களின் ஆட்சி முடிவுற்றது.
அல் அதீதின் இறப்பிற்கு பின்பு ஸலாவுத்தீன் எகிப்தின் சிறந்த தலைவரானார். மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவித்தார். அல் அதீதின் குடும்பத்தினரை நன்கு அக்கறையுடனும், கருணையுடனும் கவனித்துக் கொண்டார்.
நூருத்தீனுடனான செயல்பாடு
ஸலாவுத்தீன் நூருத்தீனுடனான உறவை மிகவும் விரும்பத்தக்க அளவில் வைத்துக் கொண்டார். ஏனென்றால் நூருத்தீனின் தந்தை இமாதத்தீன் சங்கி தான் ஸலாவுத்தீன் தந்தைக்கும், சித்தப்பா ஷிர்குஹுக்கும் புதிய வாழ்க்கையை தந்தவர். தன் மீதும், தனது தந்தையின் சகோதரர் ஷிர்குஹ் மீதும் சிறு வயதிலிருந்து  நூருத் தீன் அவர்கள் காட்டிய நட்பையும் நினைவு கூர்ந்து நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்டார். மிக விரைவில் தொடர்ந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் அப்பாசிட் கலீஃபாவுக்கு பதில் நூருத்தீனின் பெயரில் உரை துவங்க உத்தரவிட்டார். நூருத்தீனின் பெயர் தாங்கிய நாணயம் வெளியிட்டார். அரண்மனை பொக்கிஷத் திலிருந்து விலை மதிப்பில்லாத பரிசுகளை அளித்து தன் இராஜ விசுவாசத்தை வெளிப் படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் சில இராணுவ தளபதிகளும், நம்பிக்கை துரோகிகளும் ஸலாவுத்தீனின் கீழ்படியாமல் எகிப்தில் வாழ மறுத்தனர். அவர்கள் ஸலாவுத்தீனுக்கும், நூருத்தீனுக்கும் இடையே அபிப்பிராய பேதத்தை விதைத்து வெறுப்புத் தீயையும் பகையையும் வளர்த்தனர். சில காரியங்களில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி ஸலாமுத்தீனுக்கும், நூருத்தீனுக்கும் இடையே முரண்பாடு களினாலும், உத்தரவை மீறுவதாலும் கிடைத்தது. சில நேர்மை யாளர்கள் இருவருக்கும் இடையே வளரும் விரோதத்தை எச்சரித் தனர். இந்த பகையால் ஒளிந்திருக்கும் எதிரிக்கு தான் நன்மையை விளைவிக்கும் என அறிந்திருந்தனர். மிகக்குறிகிய கால இடை வெளியில் அவர்கள் இருவருக்குமிடையேயான நட்பு, நம்பிக்கை, உண்மை பாதுகாக்கப்பட்டது. நூருத்தீன் 569 A.H. (1173 C.E.) ல் இறக்கும் வரை ஸலாவுத்தீன் அவருடனான விசுவாசத்தில் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். அவரின் முன்னேற் றத்திற்கு ஏற்றவாறு எதிரிகளும் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக