செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 1



                   சலாவுத்தீன் அல் அய்யூபி
                ஹத்தீன் போரின் மாவீரரும்
சிலுவைப் போரில் ஜெருசலத்தை மீட்ட விடுதலை வீரரும்
                 532 – 589 ஹிஜ்ரி/1137 – 1193 கி.பி.
                          -------------------------
             தமிழாக்கம்: கூ. செ. சையத் முஹமது.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்துப் புகழும், சாந்தியும், சமாதானமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், சஹாபாக்கள், தாபியீன்கள், தபா அத்தாபியீன்கள் கலீஃபாக்கள், உத்தமர்கள் மற்றும் தீன் வழியில் போரிட்ட மாவீரர்களூக்கும் உரித்தாகுக.
தீன், ஜிஹாத் வழியில் இஸ்லாத்தில் போரிட்டு பெரும் மாற்றங்களை அரசியல் உலகில் வகுத்த மாபெரும் வீரர்களை நினைவு கூறும் போது அது நம்மை பெருமையடைய செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் நன்கு படித்த நம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு கூட நம் மார்க்க வரலாறு தெரியவில்லை. ஏனென்றால், மற்ற மதத்தினரைப் போல இஸ்லாத்தில் தனி மனித புகழ் பாடப் படுவதில்லை, சிலைகளோ, விழாக்களோ எடுத்து நினைவு படுத்தப்படுவதில்லை. ஆனாலும் தினசரி செய்திகள் போலவோ, சினிமா, விளையாட்டு, சமூகத்தை அறிந்து கொள்ள காட்டும் சாதாரண ஆர்வம் கூட இஸ்லாமிய சரித்திரத்தை தெரிந்து கொள்ள காட்டுவதில்லை என்பது வேதனையான விஷயம். இஸ்லாமிய நாடுகளில் உள்ளோர் இந்த சரித்திரங்களை அறிந்திருக்கிறார்கள். நாமும் அறிந்து நம் குழந்தைகளுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டிய வரலாறு இது. உலகில் ஒரு புள்ளியாக இருந்து, எவருமே அவ்வளவாக அறியாத, நாகரீகமறியாத, கல்வியறிவு அற்ற அரேபிய சமுதாயத்திலிருந்து  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலமாக வேகம் பெற்ற (இஸ்லாம் ஆதம் அலைஹி வஸல்லம் காலத்திலிருந்தே இருக்கிறது.) ஒரு மார்க்கம் இஸ்லாம். இதை விட உறுதியான ஒரு உலோகமோ, சக்தியோ ஒன்று உலகில் இல்லை எனும் அளவில் பரந்து இன்னும் (ஸுப்ஹானல்லாஹ்) விரிந்து சென்ற வண்ணம் எதிரிகளுக்கு மாபெரும் ஆச்சரியத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.
இதை தீன், ஜிஹாத் மற்றும் தன்னிகரற்ற வீரத்தின் வழியில் ஆரம்பத்திலிருந்து துவக்கியவர்கள் வரிசையில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் உடன் வாழ்ந்த உம்ர் பின் கத்தாப் (ரலி), அலி பின் அபுதாலிப் (ரலி), அப்பாஸ் (ரலி), ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) , காலித் பின் வாலித் (ரலி) போன்ற மாவீரர்களை யும், போர்களில் உயிர் நீத்த சில சஹாபாக்களையும் சமுதாயம் நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்களால் ஒரு முஸ்லீமின் உயரிய பதவி, நேரடி சொர்க்கத்தின் திறவுகோல் ஜிஹாத் மட்டுமே என்று வழிகாட்டப்பட்டிருக்கிறது. இது சாதாரண மக்களான நமக்கு சாத்தியமில்லாவிட்டாலும், நாடாளும் முஸ்லீம் மன்னர்களுக்கு இது மாற்றுக் கருத்து இல்லாத கடமை யாகும். இந்த ஜிஹாதை அடியோடு மறந்துவிட்டு தானும், தங்களது வாரிசுகளும் மட்டுமே ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டு மேற்கத்தியவர்களின் கைப்பாவை ஆகிப் போன முஸ்லீம் ஆட்சியாளர்களைத் தான் இன்று உலகம் முழுவதும் காண நேரிடுகிறது.
எகிப்து நாசர்களும், சதாம்களும், கடாஃபிகளும், பின் லேடன்களும், நல்லவர்களா என்பது நமக்கு தெரியாது அது நமக்கு தேவையுமில்லை. ஆனால் மேற்கத்தியவர் களை எதிர்த்தவர்கள். அதனாலேயே ஆட்சியையும், உயிரையும் இழந்தவர்கள். இன்றைக்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முஸ்லீம் நாடுகளின் அதிபர்களைக் கூட உள்நாட்டு கலவரத்தைத் தூண்டி மேற்கத்தியவர்கள் விரட்டி அடிப்பதை நாம் காண்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரை ஷியாக்கள் ஆட்சி செய்யும் ஒரே நாடு ஈரான். இன்று ஏதோ உலகில் மேற்கத்தியவர்களை எதிர்க்கும் ஒரே நாடு ஈரான் ஒன்று தான் என்பது போல் விளம்பரம் செய்யப்படுவதையும் பார்க்கிறோம். யாரை அழிப்பதற்கு யாரை உயர்த்துகிறார் கள் என்பது உண்மை சரித்திரம் அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த 21 ம் நூற்றாண்டிலும் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஷியாக்களுக்கும் வெளிப்படையான தேவாலயங்களும், மசூதிகளும் ஈரானில் உண்டு. ஆனால், உலகின் பெரும்பான்மையான சுன்னி முஸ்லீம்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள அனுமதி இல்லை. சரித்திரத்தில் வழிதவறிய ஷியா கூட்டத்தார்களின் ஆட்சியாளர்களை யும், அவர்களின் அருவருக்கத்தக்க துரோகச் செயலையும், இஸ்லாத்தை வேரோடு அறுத்தெரிய மேற்கிலிருந்து தொடர்ந்து 900 வருடங்களுக்கும் மேலாக வந்து (உலக வரலாற்றில் பல்லாண்டுகளாக நடந்த சிலுவைப் போர்) லட்சக்கணக்கில் முஸ்லீம்களை கொன்று குவித்த (முழங்கால் அளவு இரத்த வெள்ளத்தில் என்று மாற்று மத சரித்திர ஆய்வாளர்களே எழுதிய) ஐரோப்பிய மத மற்றும் அரசுப் போராளிகளை சரித்திரத்தின் இடையே நெஞ்சு நிமிர்த்தி எதிர்த்த சில இஸ்லாமிய மன்னர்களையும், வீரர்களையும் நாம் தெரிந்து கொள்ளவில்லை. இதை நம் சமுதாயம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.    
இஸ்லாம் எங்கே ஜிஹாதை இழந்தது என்றால் நேர்மையான கலீஃபாக்களின் (சரித்திரம் இவர்களை RIGHTLY KHALIFAS என்றே குறிப்பிடுகிறது) ஆட்சிக்குப் பிறகு வந்து உலகம் வியக்கும் வண்ணம் பரந்த பூமியை பின்னாளில் ஆண்ட பிரிட்டிஷாருக்கு முன்பே ஆண்ட இஸ்லாமியர்கள் தவறான வழியில் இறை அச்சம் இன்றி போனதினால் தான். அதே நேரத்தில் இன்று உலகின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாமியர் களின் ஆட்சி தான் அடிப்படை ஆராய்ச்சி அமைத்துக் கொடுத்தது. கட்டிடக்கலை இலக்கியம், கல்வி, இன்றிருக்கும் அலுவலக நிர்வாகம், மருத்துவ துறை என்று அனைத்துத் துறைகளிலும் வானளாவ உயர்ந்து இருந்தார்கள். இதற்கு சிறந்த ஆதாரம் இன்றைய எல்லா நவீன கண்டு பிடிப்புகளுமே அதிகபட்சம் இரு நூற்றாண்டுகளின் இடைவெளியில் கண்டு பிடிக்கப்பட்டது தான். ஆனால் ஆச்சரியம் இஸ்லாமியர்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை இவைகளை மின்சாரமில்லாமலும், ஆரம்ப நிலையிலும் பயன்படுத்தி இருந்தனர். இவைகள் இஸ்லாமியர்களின் ஆட்சியின் போது ஸ்பெயின், ஃப்ரான்ஸ் மூலமாக ஐரோப்பா கண்டத்தில் பரவியது. இதைத் தனிக் கட்டுரையாக இன்ஷா அல்லாஹ் வேறொரு முறை பார்ப்போம். அதே சமயம் தன் இனம், குடும்பம், சந்ததியே ஆளவேண்டும் என்று பார்த்தார்கள். அதனால் தங்களுக் குள்ளேயே கொலைகளையும், துரோகங்களையும் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டார்கள். எளிமையை மறந்து ஆடம்பரமான அரண்மனைகள், தங்கள் உயிர் இறைவனின் நாட்டப்படிதான் போகும் என்பதை மறந்து மிகுந்த பொருட்செலவில் தங்களுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஐம்பது மைல்களுக்கு ஒரு சுல்தான் இருந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இது இறைவனுக்கு கோபம் ஏற்படுத்தாதா? ஆல இம்ரானில் அல்லாஹ் தான் விரும்புபவர்களுக்கு தான் ஆட்சி அதிகாரம் தருவேன் என்று சொல்லி இருக்கிறான். அப்படித்தந்த அல்லாஹ் அல்லவா அந்தந்த சுல்தானுக்கும், மன்னருக்கும், சக்கரவர்த்திக்குமான உயிருக்கும், ஆட்சிக்கும் பொறுப்பு ஆளுமையின் போதையில் அதை மறந்து போனார்கள்.
அந்த வரிசையில் எகிப்தில் மாவீரர் சுல்தான் யூஸுஃப் ஸலாவுதீன் அல் அய்யூபி சரியான வழியில் மக்களை வழி நடத்தி இஸ்லாமிய உலகில் கொடியை உயர்த்திப் பிடித்தவர். சிறு வயதிலிருந்து தீனையும், ஜிஹாதையும் நன்கு உணர்ந்து கற்று தேர்ந்தவர். பகுதி பகுதியாக அலைந்து திரிந்து சிறு சிறு முஸ்லீம் ஆட்சியாளர்களை கெஞ்சி புரியவைத்து சிலுவைப் போராளிகளுக்கு எதிராக ஜிஹாதின் வழியிலே ஒன்று திரட்டியவர். சில முஸ்லீம் ஆட்சியாளர்களே எதிரியுடன் சேர்ந்து இவருக்குத் தான் எப்படி எல்லாம் துரோகம் செய்திருக்கிறார்கள் தெரியமா?. இன்றைக்கும் நம்மிடையே கமாலுத்தீன், ஷரீஃபுத்தீன், ஜியாவுத்தீன், மொய்தீன் என்று தீன்களில் முடியும் பல பெயர்களை சுமர்ந்திருப்பவர்களே உங்கள் பெயர்களுக் கான காரணகர்த்தா இவர். உங்களுக்கு பெயரிட்ட மூதாதையர்கள் கூட காரணமறியாமல் தெரிந்து கொள்ள மறந்தவரின் சரித்திரம் இது. இது எகிப்திய அரேபிய வரலாற்று ஆசிரியரால் அரபியில் எழுதப்பட்டு பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வரலாறு. அதை நான் என்னால் முடிந்த தமிழில் மொழி பெயர்த்து நம் தமிழ் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியிருக்கிறேன். இதில் ஏதேனும் சரித்திரப்பிழை இருந்தால் நான் பொறுப்பல்ல. சொற்பிழையோ, இலக்கணப் பிழையோ இருப்பின் தெரியப்படுத்தினால் இந்த சகோதரன் திருத்திக் கொள்ள தயாராய் இருக்கிறேன். வாருங்குள் நுழைவோம்.
பாகம்: 2  
“பூமியில் பலவீனப்பட்டவருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களை தலைவர்களாக்கவும், நாட்டுக்கு வாரிசு களாக்கவும் நாம் நாடினோம்” – அல் கஸஸ் 28-5.
நூற்றாண்டுகளுக்கும் மேலாக எதிரிகளின் பிடியிலிருத்த அல் அக்ஸா மஸ்ஜித், ஜெருசலம் மற்றும் இன்ன பிற முஸ்லீம் நாடுகளை மீண்டும் முஸ்லீம்கள் வெல்வார்கள் என்று யாராவது நம்பியிருப்பார்களா? ஸலாவுத்தீன் போன்ற இறையச்சம், இஸ்லாத்தின் மீது பற்றும் கொண்ட மன்னர் ஹத்தீன் என்னும் போரில் அவைகளை மீட்டெடுப் பார் என்று யாராலாவது சொல்லி இருக்க முடியுமா? அதுவும் எண்ணிப்பார்க்க முடியாத இழப்புகள், கற்பழிப்பு கள், கொலைகள், சித்திரவதைகள் ஆண்டாண்டாக நடந்த பின்னர், டர்டார் என்னும் செயற்கை மலையை (எதிரி ஹுலக்கு என்பவன் முஸ்லீம்களின் மண்டை ஓடுகளால் எழுப்பிய மலை) இரக்கமில்லாமல் அமைத்த பின்னரும் முஸ்லீம்களுக்கு வெற்றி சாத்தியமாகும் என்று யாரா லாவது கணித்திருக்க முடியுமா? ஆம். அது நடந்தது. அல்லாஹ்வின் நாட்டப்படி இறைஅச்சமும், வீரமும், கண்ணியமும், கருணையும் வாய்ந்த சுல்தான் ஸலாவுத்தீன் அவர்களின் மூலம். அரபி அல்லாத குர்திஷ் இனத்தை சேர்ந்த ஒருவரால் எப்படி ஒட்டு மொத்த முஸ்லீம்களை தன் வழிகாட்டலின் கீழ் கொண்டு வர முடிந்தது. இவரின் சரித்திரத்தை இந்த நேரத்தில் தெரியப் படுத்துவதின் காரணம். தற்போது போட்டி போட்டு யூத இஸ்ரேலும், கிறிஸ்தவ நாடுகளும் இணைந்து இஸ்லாத்தை அழித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ஸலாவுத்தீன் போல் ஜிஹாத் வழியில் போராடக்கூடிய ஒரு தலைவர் தேவை. யாருடைய நலனுக்கு யார் பஞ்சாயத்து செய்வது. மேற்கத்திய, யூதர்களின் திட்டப்படி கூடிக்கூடி பாலஸ்தீனுக்காகவும், சூடானுக்காகவும், பர்மா, கொஸோவாவுக்காகவும், தாலிபான்களுக்காகவும் முஸ்லீம் தலைவர்கள் மாநாடுகளும் கூட்டங்கள் நடத்துவது எதற்கு?. நாளுக்கு நாள் ஜெருசலம் தேய்ந்து கொண்டே போகிறது. முஸ்லீம்கள் நம் முன்னோர்கள் எப்படி போரிட்டு ஜெருசலத்தை வென்றார்கள் என்று தெரிந்து கொண்டு, அதன் சுவட்டை தொடர வேண்டும். இன்று முஸ்லீம் நாடுகள் பலவாறாக சிதைந்து விட்டனர். திருக்குர்ஆன் கூறும் ஜிஹாத் வழிமுறையை மறந்து விட்டார்கள் அல்லது வழிமுறையில் செல்ல மறுக்கிறார் கள். அன்றைய அகன்ற சிரியா என்பது தற்போதைய சிரியா, பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான் உள்ளடங்கி யது. மேலும், எகிப்தையும் ஒருங்கிணைத்து இருந்த இஸ்லாமிய நாட்டை தான் சிலுவைப் போராளிகள் போர் தொடுத்து வந்தனர். இன்றைக்கு அதே போன்று ஒருங்கிணைந்து முஸ்லீம் நாடுகள் இஸ்லாத்துக்காக ஸலாவுத்தீன் போன்ற ஒரு மாவீரரின் தலைமையில் ஒன்று சேர்ந்து ஜெருசலத்துக்காக போரிட வேண்டும். ஆனால், ஒவ்வொரு முஸ்லீம் நாட்டு ஆட்சியாளர்களும் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தனித்தனி திசையில் பயணிக்கிறார்கள். இது போலவே முன்பிருந்த மன்னர்களை ஸலாவுத்தீன் எப்படி இஸ்லாத்தின் பால் ஒன்று சேர்த்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
திட்டமிட்டு எதிரிகளை வெல்லலாம். ஆனால் உடன் இருந்து கழுத்தறுக்கும் துரோகிகளையும் வைத்துக் கொண்டு அதை செய்வதற்கு சாமர்த்தியமான திறன் வேண்டும். அன்னாந்து பார்த்து எச்சில் துப்பலாமா? முஸ்லீம் உலகம் அதை செய்தது. தன் இனத்தை அழிக்க நினைப்பவனுடன் துணை போகலாமா? முஸ்லீம் உலகம் அதை செய்தது. ஈஸா நபி (அலைஹி வஸ்ஸலாம்) அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் மாபெரும் கொடுமை செய்தவர்கள் யூதர்கள். உண்மையில் கிறிஸ்தவர்களுக்கு யூதர்கள் தான் நேரடிப் பகை. ஆனால், இஸ்லாமை அழிக்க இருவரும் கூட்டு சேர்ந்ததின் ரகசியம் என்ன? ஒரு வேளை ஈஸா நபி அவர்களும் (யஃகூப் நபிக்கு பிறகு) இஸ்ரவேலர்கள் இனத்தைச் சேர்ந்தவர் தான் என்று எல்லாவற்றையும் மறந்து இருவரும் தோழர்களாகி விட்டார்களா? ஸலாவுத்தீன் அவர்களின் வீரம் ஆங்கில, ஐரோப்பிய கட்டுக் கதைகளால் நிரம்பிய ஹெர்குலஸ் (ஹிராக்கிளிஸ்), நெப்போலியன் போன பார்ட், அலெக் ஸாண்டர் போன்றவர்களை விட கண்மூடித்தனமான, தன்னிகரற்ற, தன் மார்க்கத்தை காக்க எழுந்த மாபெரும் வீரம். அவர் பிறந்த, வளர்ந்த, கல்வி, இஸ்லாமிய தீன் கல்வி, போர்திறன், அறிவு, வீரம் போன்ற வரலாற்றை அறியும் போது, இவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவரோ என்று தோன்றும். ஆம் உண்மை அது தான்.
“ அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான் அவன் அவர்களை நேசிப்பான். அவனை அவர்களும் நேசிப்பார்கள். அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள். இது அல்லாஹ்வின் அருட் கொடையாகும்.” (அல் மாயிதா 5:54)

துவக்கம்

                                                        உங்களுக்கு இந்த சரித்திரங்களில் ஒரு ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக முதலில் ஈடினையற்ற இஸ்லாமிய மன்னர் சலாவுதீன் அவர்களின் வரலாறை வெளியிடுகிறேன். இதுவரை ஜெருசலத்தை இரு முஸ்லீம்கள் தான் கைப்பற்றி இருக்கிறார்கள். இரத்தமே இல்லாமல் உமர்(ரலி) அவர்களும், அதிகப்படியான இரத்தத்துடன் சலாவுதீன் அவர்களும்.. இந்த வரலாறுகளை உங்கள் குழந்தைகளையும் படிக்கத் தூண்டுங்கள். நம் இந்திய நாட்டின் கல்வியமைப்பில் நிச்சயமாக இந்த சரித்திரங்களை அறிய முடியாது.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

நுழையும் முன்



                                            இந்த சரித்திரங்களில் நுழையும் முன் அறிந்து கொள்ள சில விஷயங்கள் உள்ளன.  ஆறாம் நூற்றாண்டில் உலக வரலாற்றுக்குள் மெதுவாக நுழைந்த இஸ்லாமியர்கள் இன்றைய கண்டுபிடிப்புகள் மற்றும் நடைமுறைகள் பலவற்றுக்கும் முந்தியவர்களாக இருக்கிறார்கள். கணிதம், விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம், சமூகவியல் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். புவியியல் அமைப்பு, வரைபடம், நீர் எது, நிலம் எது என்று தெரியாத காலத்திலேயே துல்கருனைன் என்ற நல்லடியார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் உலகைச்சுற்றி வந்திருக்கிறார்கள். குடும்ப அட்டை(RATION CARD), கழிப்பறை பீங்கான் (சிறுநீர், மலக்கழிவுகள் உடலில் படக்கூடாது என இஸ்லாம் வலியுறுத்துவதால் அமைக்கப்பட்டது), காப்பி அருந்தலின் பயன்பாடு, உலகின் முக்கிய உபயோகமாகிப் போன காகிதத்திற்கு முதல் ஆலை, அலுவலக நிர்வாகம் (OFFICE ADMINIS TRATION), இராணுவ அமைப்பு, முதல் நீர்மூழ்கி கப்பல், வானில் பறக்கும் அமைப்பு, முதல் அறுவை சிகிச்சை இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். வரலாறுகளைப் படிக்கும் போது நீங்களே அறிந்து கொள்வீர்கள். பிற்காலத்தில் மேற்குலகம் நவீனமாக்கியது. பனூ மூஸா சகோதரர்களையும், இப்ன் சினா, அல் ஜஸரி, அல் ஜஹரவி, மன்சூர் இப்ன் இல்யாஸ், இப்ன் அல் பதூதா மற்றும் இன்னும் சரித்திர வெளிச்சம் படாத இஸ்லாமிய கண்டுபிடிப்பாளர்களைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும். அந்தக்கால மக்களின் அறிவு முதிர்ச்சியை தற்போதைய மக்களுடன் ஒப்பிட முடியாது. இன்றைய நவீன உலகின் கண்டுபிடிப்புகள் எல்லாம் 200 ஆண்டுகால இடைவெளியில் வந்ததுதான். இடையில் சில நூற்றாண்டுகள் மேற்கத்திய யூத இனத்தினர் இஸ்லாமியர்களை மேற்குலகத்திலிருந்து விரட்டவே செலவிட்டார்கள். பின் கிறிஸ்துவத்தையும், தங்கள் ஆட்சியை ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் பரப்பவும் செலவிட்டு, பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழுள்ள நாடுகளில் சூரிய அஸ்தமனமே இல்லை என்று பெருமை பீற்றிக்கொண்டார்கள். இஸ்லாமிய ஆட்சியின் ஆரம்பம் ஏழாம் நூற்றாண்டிலிருந்து, பதினேழாம் நூற்றாண்டுவரை மேற்கில் ஃப்ரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிழக்கில் பாகிஸ்தான், இந்தியா என்று இஸ்லாமிய ஆட்சியின் விரிவுக்கு ஏற்றவாறு பரவியது தான். (நான் எல்லாக் கண்டுபிடிப்புகளும் முஸ்லீம்கள் தான் கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல வரவில்லை) யார் எந்த கதை அளந்தாலும் முதலில் வருடங்களை கவனியுங்கள் அப்போது அந்த காலகட்டத்தில் யார் எந்த ஆண்டு எந்த நாட்டை ஆண்டார்கள் பின் அது அல்லது அவை எப்படி ஆனது என்று விளங்கும். எல்லா சரித்திரங்களையும் படித்தபின் உங்களுக்கே சொந்தஅறிவின் மூலம் விளங்கிவிடும்.
                                    ஏதோ போரிட்டார்கள் என்றால், இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பிய நாடுகளும் நடுக்கடலில் போர் கப்பலை வைத்துகொண்டு வீடியோகேம் விளையாடுவது போல் ஏதோ நடமாட்டம் தெரிகின்றதென்று, சர்ரென்று விமானத்தை எடுத்துக்கொண்டு அப்பாவி பள்ளிகள், கல்யாணகோஷ்டிகள் மீது பத்து நிமிடத்தில் குண்டு வீசிவிட்டு சாம்பெய்ன் என்னும் மதுபாட்டிலைப் பீய்ச்சி மகிழ்ச்சியைத் தெரிவிப்பதல்ல. அவர்களே போட்ட சர்வதேச போர் சட்டப்படி அது முறையும் அல்ல. அதேநேரத்தில் அந்த காலங்களில் போர் என்றால் ஏதோ வாசலில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு அழைக்கும் நண்பனிடம் இரு இதோ வருகிறேன் என்று சட்டையை மாட்டிக்கொண்டு போவது போலவும் அல்ல. போர் என்றால் எதிரியின் பலம், பயணிக்கும் தூரம், போர் நடக்கப்போகும் இடம், தட்பவெப்ப நிலை இவைகளை தேர்ந்த தளபதிகளுடன் ஆலோசிக்க வேண்டும். அதேநேரத்தில் போர்கருவிகள், குதிரை, ஓட்டகம், யானை போன்ற போர் மிருகங்களின் தகுதி, வீரர்களுக்கான உணவு, உடை, கூடாரங்கள் இப்படி கொஞ்சமல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சாதாரண ஒரு போருக்காக ஆறு மாதங்கள் இருநூறு பேர் கொண்ட ஒரு குழு கத்தி, அம்பு, வாள், ஈட்டி போன்ற வெறும் ஆயுதங்களை கூர்செய்யவே பயன்படுத்தப்பட்ட வரலாறுகள் உள்ளன. ஒரு போருக்குத் தயாராக அதன் தகுதிக்கேற்ப குறைந்தது ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் ஆகும்.    
                            இந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜிய வரலாறுகளைப் படித்து விட்டு இப்படித்தான் ஒருத்தரை ஒருத்தர் கொன்று பதவிக்கு வந்தார்களா என்று அதிர்ச்சியோ, அருவருப்போ அடையாதீர்கள். அந்த காலங்களில் ஏன் இந்த காலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். இது இன்னும் 200 ஆண்டுகள் போனால் அப்போதுள்ளவர்களுக்கு இன்றைய ஆட்சி சரித்திரமாகும். சில விஷயங்களில் இஸ்லாமியர்களை உலகம் மிகைப்படுத்தி வைத்திருக்கிறது, ஏதோ மற்றவர்கள் தூய்மையாக இருந்தவர்கள் போல். கிரேக்க பிரென்சு, ஐரோப்பிய, இந்திய மன்னர்களின் சரித்திரங்களைப் புரட்டிப்பார்த்தால் காமத்திற்கும், இரத்தத்திற்கும், அருவருப்புக்கும் பஞ்சமே இருக்காது. ஆனால், அவர்களின் வீரத்தையும், காமத்தைக் கூட ஏதோ உலக மகாகாவியமாக சித்தரித்திருப்பார்கள். அப்போதைய ஆட்சியாளருக்கு எதிராக தீவிரவாதம் செய்தவர்களுக்கும், அருவருப்பானவர்களுக்கெல்லாம் சில நாடுகளில் சிலைகள் வைத்தும், பேருந்து, இரயில், பாலத்திற்கெல்லாம் அவர்களின் பெயர்கள் வைத்தும், இன்னும் சில நாடுகளில் பண, நாணயங்களில் அவர்களின் உருவம் பதித்திருப்பார்கள். ஈத் அமீன் என்னும் சிறப்புமிகும் பெயர் தாங்கி இருந்த உகாண்டா நாட்டு அதிபரை இடி அமின் என்று ஆக்கி அவர் இதுவரை உலகில் யாருக்குமில்லாத கை,கால் உறுப்புகளுடன் படைக்கப்பட்டு காமத்திலும், கொடூரத்திலும் உலகின் முதலிடத்தில் இருப்பதாக சித்தறித்து விட்டார்கள். எதற்காக, மேற்குலகுக்கு தலைவணங்காமல் போனதற்கும், உகாண்டா என்னும் நாட்டின் இயற்கையான காட்டு வளங்களை கொள்ளை அடிக்கவும் தான். அப்போதைய காலத்தில் நவீன தொடர்புகள் இல்லாததால் மேற்கத்தியர்கள் சொன்னதை எல்லாருமே அப்படியே நம்பிவிட்டார்கள். ஈத் அமீனும் கடாஃபியும் தங்கள் ஆப்பிரிக்கா கண்டத்தை முன்னேற்ற பாடுபட்டார்கள். நான் ஈத் அமீனுக்கோ, கடாஃபிக்கோ, சதாம் ஹுசேனின் பிள்ளைகளுக்கோ வக்காலத்து வாங்கவரவில்லை. காம வன்முறை எங்கு இல்லை. கட்டிடம் கட்டும் மேஸ்திரி சித்தாள் என்னும் பெண்ணிடமும், அலுவலகத்தில் கீழ் பணியாற்றும் பெண்களிடம் அதிகாரிகளும், விளம்பரத்துறை மற்றும் எல்லா நிலைகளிலும் காமம் விருப்பத்தின் பேரிலும், வன்முறையின் வடிவிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவே ஒட்டுமொத்த நாட்டின் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உச்சபதவியில் இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும். தவறு யார் செய்தாலும் தவறுதான் ஆனால் அதை இவர்கள் மட்டுமே செய்தார்கள் என்று உலகஅரங்கில் அதுவும் நேற்று வரை ஐக்கிய நாட்டு சபைகளிலும், உலக மாநாடுகளிலும் தங்களுடன் கை குலுக்கிய ஒரு நாட்டு அதிபரை எப்படி கேவலப்படுத்துவது. இங்கிலாந்து நாட்டு ராணியின் பேரன் திருமணமாகாத பெண்ணுடன் இரவுவிடுதிக்குப் போனாலும், அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மகள் திருமணமாகாத ஆணுடன் மது அருந்தப்போனாலும் அது சமூக செய்தி. அட வாந்தியில் புரளும் வக்கிரங்களே மேலும் இந்த சரித்திரங்களைப் படிக்கும் போது இப்போது உலக அரசியல் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்றும் உங்களுக்கு விளங்கும்.  
                                     இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்கள் எப்படி வீழ்ந்தன? சுற்றிலும் பல நூற்றாண்டுகளாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கு நடுவே எப்படி இருபதாம் நூற்றாண்டில் ஒரு யூத இஸ்ரேல் நாடு வந்தது, யார் எதற்காக கொண்டுவந்து வைத்தார்கள். (உலக வரலாற்றில் சொத்து வாங்குவது போல் உருவான ஒரே நாடு இஸ்ரேல் தான்). மிகச்சரியாக திட்டமிட்டு ஆப்கானிஸ்தான், போஸ்னியா, ஈராக், எகிப்து, லிபியா, சிரியா என்று குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் மட்டும் சீர்குலைக்கப்பட்டு தினசரி வெடிகுண்டில் பலி ஆவது எப்படி? நக்கி சாப்பிடும் ஒரு குழந்தையின் கையிலிருந்து ஐஸ் கீழே உருகி விழுந்தாலே பரிதாபப்படும் நாம். சகட்டுமேனிக்கு இஸ்ரேல் பாலஸ்தீனைத்தாக்கி உயிர்களையும், நிலப்பரப்பையும் அபகரித்துக்கொண்டிருக்க சுற்றிலும் உள்ள முஸ்லீம் நாடுகள் எப்படி வேடிக்கைப் பார்க்கின்றன. அப்படியானால் உலகின் இஸ்லாமல்லாத அனைத்து நாடுகளும் தினசரி நிம்மதியாக உணவுண்டு பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? திடீரென்று இஸ்லாமிய நாடுகளில் ஈரான் மட்டுமே தைரியமான நாடு என்பது போல் ஒரு மாயையை யார் எதற்காக உருவாக்குகிறார்கள்? தலைக்கு மேலே சீனா, காலுக்கு கீழே இலங்கை என இரண்டு புத்த நாடுகளை வைத்துக்கொண்டு நம்மிலிருந்து பிரிந்துபோன சகோதரநாடு பாகிஸ்தானை மட்டும் தீவிரவாத நாடாக தினசரி சித்தரிப்பதில் யாருக்கு என்ன ஆதாயம்? நீங்கள் பிறருக்கு கொடுத்த கடன்களில் பழைய கடன் முதலில் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்களா அல்லது புதிய கடன் முதலில் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்களா? சிந்தியுங்கள்.
                                        சிந்தியுங்கள். சாதாரண உபயோகப் பொருள்களுக்கே எந்த நாட்டில், எந்த கம்பெனி, எந்த இறக்குமதியாளர், எந்த கொள்முதலாளர் என்று அறிந்துகொள்ள (BAR CODE) பார்கோட் முறை கொண்டு வந்தவர்களுக்கு ஏன் ஆயுதங்களுக்கு பார்கோட் முறை கொண்டு வரும் எண்ணம் இல்லை. இருந்தாலும் எப்படி தீவிரவாதிகளின் கைகளில் கிடைக்கிறது. ஏனென்றால், அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் உலகின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளர்கள். உலகம் அமைதியாக இருந்தால், அவர்களின் பொருளாதாரம் பாதிக்கும். ஒருபுறம் ஐ. நா வில் சமாதானம் பேசிக்கொண்டே மறுபுறம் இவர்களே தீவிரவாதம் வளர்க்கிறார்கள். நம்புங்கள் இன்றைக்கு உலகம் முழுவதுமுள்ள அனைத்து தீவிரவாத குழுக்களும் இவர்களின் ஆயுதம் தான் பயன்படுத்துகிறார்கள். எந்த இஸ்லாமிய போராளி குழுக்களையும் கூட நம்பி ஆதரவளித்து விடாதீர்கள். (ஹமாஸ் தவிர, இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்) தற்போதைய ஆய்வுத்தகவலின் படி உலகில் எல்லாவகையான குற்றங்களின் சராசரி இஸ்லாமிய நாடுகளில் வெகு குறைவு, இந்த எரிச்சலால் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறீர்களா? இஸ்லாமிய நாட்டு அதிபர்கள், மன்னர்கள், சுல்தான்கள் மட்டும் யோக்கியர்கள் அல்ல. திருடனைவிட திருடனுக்காக சகலத்தையும் திறந்து வைத்திருப்பவன் எப்படி யோக்கியனாவான். இஸ்லாமிய நாட்டு ஆட்சியாளர்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் உள்ள வித்தியாசம் மக்கள் இன்றும், என்றும் தொழுகை, இறையச்சம், தானதர்மம், மதக்கட மைகள் என்று இறைவனை மட்டுமே சார்ந்திருப்பது தான். நாம் ஆயிரம் பேர்களுக்கு மத்தியில் அழகாக ஆடை உடுத்திவர நினைப்போமா அல்லது நான் ஒருவன் நிர்வாணமாகத்தான் இருப்பேன் நீங்கள் ஆயிரம் பேரும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் என நினைப்போமா? இப்போது இஸ்லாம் அல்லாத உலக நாடுகள் இஸ்லாம் நாடுகளுக்கு சொல்வது பின்னால் உள்ளதைத்தான். இருவருக்குமே சேர்த்துதான் இறைவன் திருமறையில், “அல்லாஹ்வின் விளக்கை இவர்கள் வாயினால் ஊதி அணைத்து விட எண்ணுகிறார்களா” என்று கேட்கிறான். இந்த ப்ளாகில் சில ஐரோப்பிய வரலாறுகளும் உள்ளன. அது இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லை என்று எண்ணிவிடாதீர்கள். அவர்கள்தான் அன்றும், இன்றும், என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கருதி வேட்டையாடுபவர்கள். அடுத்த வீட்டுக்காரருடன் கூட பகைமையை வளர்த்துக்கொள்ளாதே என்று அறிவுரை கூறப்பட்ட முஸ்லீம்களுக்கு முன், பின் மரணிக்கப்போகும் இந்த சாதாரண மனிதர்களோ, ஆட்சியாளர்களோ நிச்சயமாக எதிரியல்ல. நமக்கெல்லாம் இறுதிநாள் வரை ஷைத்தான் ஒருவன்தான் எதிரி. நம்மை எதிரியாகக்கருதும் அவர்கள் யார், எங்கிருந்து அவர்கள் வம்சாவழி தோன்றியது, எதற்காக நம்மை எதிரியாக  கருதுகிறார்கள். தற்போது அவர்கள் எந்தமாதிரி நிறம்மாறி இருக்கிறார்கள், யார்யாருடன் கூட்டு என்பதைத் தெரிந்து கொள்ள உதவும்.  
                                                                                          இப்பொழுது வாருங்கள் உள்ளே நுழைவோம். உங்களுக்குப் பிடித்திருந்தால், எனக்கு வைரமோதிரம் தேவையில்லை. ஒரு வரி பாராட்டுபோதும். ஒரு எழுத்தாளனுக்கோ, கவிஞனுக்கோ, கலைஞனுக்கோ மிக மிக பிடித்தது பாராட்டு ஒன்றுதான் ஆம் அவன் வறுமையில் இருந்தாலும் கூட. பாராட்டு மேன்மேலும் ஊக்கப்படுத்தும் அதனால் சமுதாயம் பயன்பெறும். உங்களுடைய லைக்கிங்க்ஸ்களை அதிகப்படுத்தி உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள். இது உங்களைக் கவரும் நிச்சயம். வஸ்ஸலாம்.     


                                 
                   

அறிமுகம்



         அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு
என் பெயர் கூ. செ. செய்யது முஹமது. நான் ஏற்றுமதி இறக்குமதி துறையில் மேலதிகரியாக இருபதாண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றிக் கொண்டி ருக்கிறேன். நாம் உலகளவில் இஸ்லாமிய மதத்தில் கொள்கைகள், ஐம்பெரும் கடமைகள், ஷரியா சட்டங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இது இந்த பூமிப்பந்தின் எந்த மூலைக்குப் போனாலும் நம்மை மாற்றிவிடாது. அதே சமயம் நாம் உலகளாவிய இஸ்லாமிய வரலாற்றை அறிந்து வைத்திருக்கிறோமா என்று பார்த்தால், மிக மிக சொற்ப அறிவே மிஞ்சிக் கிடக்கிறது.  இஸ்லாமிய ஆட்சி என்பது நபி (ஸல்) அவர்களால் மதீனாவிலிருந்து துவங்கப்பட்டது. உலகில் முதல்முறையாக தனது சொந்த பணத்தில் வழிபாட்டுத்தலம், கல்விக்கூடம் மற்றும் பாராளுமன்றம் அமைத்தது நமது நபிகள் நாயகம் தான்.
                                       நம் இந்திய நாட்டில் நாம் சரித்திரப்பாடம் எப்படி படிக்கிறோம் என்பது நீங்கள் அறிந்ததே. வாழும் நாட்டின் சரித்திரம் அறிவது கடமையே. அதே நேரத்தில் மதரீதியாக நபி (ஸல்) அவர்களால் துவக்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சியின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் சுருங்கிப்போன வரலாறுகளை நாமும், நமது வருங்கால சந்ததியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த சரித்திரங்களை அரபு தேச குழந்தைகள் பள்ளியிலும், கல்லூரிகளிலும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அதனாலேயே நாமும் அந்த இஸ்லாமிய ஆட்சி யார் யார் மூலம் எப்படியெல்லாம் ஆளப்பட்டது எப்படிப்பட்ட பேரரசுகளானது, எப்படி சுருங்கியது, தற்போதைக்கு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று உணருகிறேன். அதிகம்பேர், நபிகள் (ஸல்) அவர்கள், நான்கு நேர்மையான கலீஃபாக்கள், அலி (ரலி), காலித் பின் வலீத், அப்பாஸ் (ரலி) இன்னும் சிலரது சரித்திரம் மட்டும் அறிந்து வைத்திருக்கிறார்கள். நாம் வாழும் நாட்டிலோ சொல்லவே வேண்டியதில்லை. ஔரங்கஸேப் கலீஃபாக்களுக்கு இணையாக (அவர்களைப் போலல்ல இவர் இந்துக்களையும் இந்துக்களாகவே ஆளவேண்டிய கட்டாயத்திலிருந்தார்) ஆட்சி செய்தார் என்று அடுத்து வந்த ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்கள் சான்றளித்திருக்க இந்த மேதாவிகள் அவர் துரோகி போலவும், அக்பர் மாவீரன் நல்லவர் போலவும் (அக்பர் ராஜ புத்திர இந்து பெண்களை மணந்தார். அதனால், இந்துக்களுக்கான ‘ஜிஸ்யா’ வரியை நீக்கினார். இஸ்லாத்தையும், இந்து மதத்தையும் இணைத்து ‘தீனே இலாஹி’ என்ற புதிய மதத்தை தோற்றுவித்த காரணங்களால்) சரித்திரம் எழுதி தங்கள் புழு பூத்த மேனியை சொறிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு கல்வி அமைச்சர் மாறும் போது இங்கு இஸ்லாமிய சரித்திரம் மட்டும் மாறுகிறது. இம்மைக்காக மட்டுமே வாழ்பவர்கள். நம் சமுதாயம் உலக இஸ்லாமிய சரித்திரம் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளையும் அறிந்திடச் செய்யுங்கள். அதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சிறு புள்ளியாக மதீனாவில் நபி (ஸல்) அவர்களால் இஸ்லாமிய மத ஆட்சி ஆரம்பித்து, கலீஃபாக்கள், உமய்யாக்கள், அப்பாஸிட்கள், செல்ஜுக்குகள், மம்லுக்குகள், அய்யுபிட்டுகள், ஓட்டோமான்கள், மங்கோலியர்கள், தைமூரியர்கள், மொகலாயர்கள் மற்றும் இப்போது இருக்கும் அமெரிக்க, மேற்கத்தியர்களின் விசுவாசிகளாகிப்போன இஸ்லாமிய நாடுகளாக எப்படி மாறிப்போனார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குள்ளேயே எத்தனை துரோகம், எத்தனை கொலைகள் இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டே இதை எழுதுகிறேன்.
                                       திருக்குர்ஆனின் இறைவனின் சொல்லாலும், நபி(ஸல்)அவர்கள் மற்றும் நான்கு நேர்மையான (சரித்திரம் இவர்களை RIGHTFUL KHALIFAS) கலிஃபாக்களின் வழிகாட்டுதலாலும், உண்மையான ஈமான், ஜிஹாத் மற்றும் இறையச்சம் (தக்வா) மட்டுமே தாங்கி, காலில் செருப்புகூட அணியாமல், பல நாட்டு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடைகள், வரைபடம் கூட இல்லாமல் இஸ்லாமிய படைகள் நிலம், நீர் என்று கடந்து ஸ்பெயின் வரை வென்று காட்டிய வீரம் அறிந்து கொள்வோம். ஒரு கட்டத்தில் ஐரோப்பியர்கள் முஸ்லீம்களுக்கு கடற்போர் தெரியாது என்று ஏளனப்படுத்தி, அவமானப்பட்ட சரித்திரத்தை தெரிந்து கொள்வோம். இன்று ஆயிரம் மைல்தாக்கக்கூடிய ஏவுகணைகள், சீறிப்பாயும் போர்விமானங்கள், வேவு பார்க்கும் சாட்டிலைட் வசதிகள், நவீன ஆயுதங்கள் இருந்தும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் தங்கள் சொந்த நாட்டையே காப்பாற்றிக்கொள்ள முடியாத கேவலமான நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். காரணம் உண்மையான ஜிஹாத், இறையச்சத்தை மறந்து போனார்கள். வேதனை வேதனை சொல்லமுடியாத வேதனை.
                                          இந்த சரித்திரங்களில் வருடம் மற்றும் பெயர்குழப்பங்கள் இருந்தால் நான் பொறுப்பல்ல. ஒவ்வொரு நாட்டின் வரலாற்றுக்கேற்றவாறு ஒருவேளை மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் நிச்சயமாக சொல்லமுடியாது. இவைகள் ஆங்கிலத்திலிருந்து விக்கி, எகிப்து, துருக்கி, சிரியா மற்றும் பல வெப் ஸைட்டுகளிலிருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். இஸ்லாமிய கடமை மட்டும் போதும் இதெல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணுபவர்கள் மாற்று சிந்தனைக்கு வழி கொடுக்காமல் சட்டென்று இதிலிருந்து விலகிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முதலில் நீங்கள் படியுங்கள் உங்களுக்குப் பிடித்தால் மற்றவர்களுக்கு பரிந்துரையுங்கள்.
வஸ்ஸலாம்
கூ. செ. செய்யது முஹமது.