புதன், 13 மே, 2015

விதைத்தவர்கள் 2

முதல் கிறிஸ்தவ ஆயிராமாண்டு (1000C.E.) வரை பிரிட்டிஷ் தீவுகள் வடமேற்கு ஐரோப்பாவின் ஒதுங்கிய நீர்ப்பரப்பாகத்தான் இருந்தது. பலரால் பலமுறை கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறது. முதலில்  55 B.C.ல் ரோமர்களாலும், பின் 367 C.E. லிருந்து 793 C.E. வரை ஏஞ்சல்கள், ஸாக்சன்கள் மற்றும் ஜூட்களால் தாக்கப்பட்டிருக்கிறது. மேலும் பலரால் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. 1027 C.E.ல் கேனூட் என்னும் டச்சுக்காரர் இங்கிலாந்து, டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடனின் சில பகுதிகளுக்கு மன்னராக இருந்திருக்கிறார். பிரிட்டிஷ் தீவுகள் மிகவும் பலவீனமாகவும், பின் தங்கிய காலனியாகவும் இருந்திருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பாவிலேயே வளமான நாடாக மாறியது. இதன் வளம் சிலுவைப் போரின் பொருளாதாரத்திற்கு அவசியம் என்பதாலும், வேறு பல காரணங்களுக்காகவும் ஃப்ரான்ஸ் இங்கிலாந்து மீது படையெடுத்தது. 1066 C.E. ல் சக கிறிஸ்தவர்களான வடமேற்கு நார்மண்டிகளின் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு கொஞ்சகாலம் பிரிட்டிஷ் தீவுகள் அமைதியாகத்தான் இருந்தது. நார்மண்டிகளின் ஆளுமைக்குப் பிறகு தான் பிரிட்டிஷ் தீவுகள் ஐரோப்பாவுடனும், முஸ்லீம்களுடனும் தொடர்புக்கு வந்தது. பிரிட்டிஷின் வளமை மட்டும் சிலுவைப் போருக்குப் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு முஸ்லீம்கள் மீது எப்படி வெறுப்பைக் காட்டித்தாக்க வேண்டும் என்று தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் பாலஸ்தீனைத் தாக்க இராணுவம் அனுப்பும் அளவுக்கு தயார் செய்யப்பட்டது. ஒன்றும் அறியாத இங்கிலாந்தின் மக்கள் போருக்கு அனுப்பி கொல்லப்பட்டனர். முஸ்லீம்களின் பக்கத்து நாடுகளான ஸ்பெயின், ஃப்ரான்சை விட முஸ்லீம்கள் மீது பெரும் வன்மையை இங்கிலாந்து வளர்த்துக் கொண்டது. முஸ்லீம்களை எதிர்க்கும் முதல் சாம்ராஜ்ய நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. உலகில் நிறைய முஸ்லீம் நாடுகளை கைப்பற்றிய பெருமையும் பிரிட்டிஷுக்கு உண்டு.
                                பிரிட்டிஷ்கள் மீதான நார்மன்களின் போர் இருவருக்கும் இணைபிரியா நட்பை உருவாக்கியது. இஸ்லாமுக்கு எதிராக “ஆங்கிலோ ஃப்ரென்ச் அலையன்ஸ்” என்று ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு சிலுவைப் போர்கள், காலனியிஸப் போர்கள், முதலாம் உலகப் போர், சூயஸ் போர் போன்றவற்றில் பங்கெடுத்துக் கொண்டன. அரபுக்கள், யூதர்கள், துருக்கிகள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் அயர் லாந்துக்களுடன் இனவெறியையும் வளர்த்துக் கொண்டனர். உலக சதுரங்க விளையாட்டு என்று அழைக்கப் பட்ட முதல் உலகப் போரில் ஆங்கிலோ ஃப்ரென்ச் அலையன்ஸ் கிழக்கில் ஓட்டோமான் கலிஃபாவுடன் சண்டையிட்டனர். பிரிட்டனும், ஜெர்மனியும் மதம், இராணுவம், அரசியல் மற்றும் பாரம்பரிய ராஜவம்சம் போன்றவற்றில் மார்டின் லூதர் காலத்திலிருந்து கூட்டாக செயல்பட்டன. பிரிட்டனின் ராஜவம்சத்தினர் ஜெர்மனியின் ஸாக்ஸே கோபர்க் கோதா மற்றும் மவுண்ட்பேட்டன்பர்க் வழிமுறையில் வந்தவர்கள். (முதல் உலகப்போரிலிருந்து விண்ட்சர் என்று பெயர் மாற்றப்பட்டது) ராணி விக்டோரியா ஜெர்மனியைச் சேர்ந்த தன் உறவுக்காரர் ஆல்பர்டை மணந்து கொண்டார். ராணியின் புகழ்பெற்ற பேரப்பிள்ளை ஜெர்மனியின் எம்பரர் இரண்டாம் கைசர் வில்ஹெம் ஆவார். போர் துவங்கும்வரை கைசர் பிரிட்டிஷ் இராணுவத்தில் உயர் பதவியில் இருந்தார். ஃப்ரென்ச்காரர்களால் மதம், இராணுவமும், மற்றும் ஜெர்மனியின் ராஜ குடும்பத்தின் உறவால் ஐரோப்பாவில் கூட்டுக் கலவையாக இங்கிலாந்து மாற்றப்பட்டது. மாபெரும் போர் ஐரோப்பாவில் துவங்கி முஸ்லீம்களின் பூமியை நோக்கி பரவியது. நார்மன்களின் 1066 ன் தென் பிரிட்டன் மீதான புரட்சி சாதாரணமானது அல்ல, அது ஒட்டு மொத்த பிரட்டனை இஸ்லாமின் மீதான வெறியை அடுத்த ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு உலக சரித்திரத்தில் நீரூற்றி வளர்த்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் மட்டுமே உலகில் அதிகமான முஸ்லீம் நாடுகளை கைப்பற்றியது.
                                                      1917 போரின் முடிவில் பிரிட்டன் பாலஸ்தீனை இரண்டாம் தர காலனியாக்கி “ஜுவல் இன் கிரவுன்” என்று புகழ் பாடிக்கொண்டது. தொடர்ந்து ஜெனரல் ஆல்லன்பி, “இன்று சிலுவைப் போர் முடிவுக்கு வந்து விட்டது”, என்று கூறினார். (இங்கிருந்து தான் இஸ்ரேலுக்கான தனி நாடுக்குண்டான திட்டம் தீட்டப்பட்டது.) உலகில் எல்லா இனங்களுக்கும், நாடுகளுக்கும் சொந்த பூமியின் பாரம்பரிய வரலாறு உண்டு. ஆனால் யூதர்களுக்கு மட்டும் தான் சரித்திரத்தில் ஏதொ சொத்து வாங்குவதைப் போல் சூழ்ச்சிகரமாக சுற்றி முஸ்லீம்கள் இருக்கும் பகுதியில் பாலஸ்தீனுக்குள் ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுத்தார்கள். டமாஸ்கஸ் நகரத்தின் சுல்தான் ஸலாவுத்தீன் அல் அய்யூபின் கல்லறையின் மீது ஏறிக்கொண்டு, ஃப்ரான்சின் ஜெனரல் ஹென்றி கௌராட், “ஸலாவுத்தீன் நாங்கள் திரும்பி வந்து விட்டோம்” என்று வெளிப்படையாக கொக்கரித்தார். போரின் முடிவில் பிரிட்டனும், ஃப்ரான்சும் கிழக்கு மெடிட்டரேனியனிலிருந்து இந்தியா வரை அனைத்து முஸ்லீம் நாடுகளையும் கைப்பற்றி இருந்தது. மேற்கத்தியர்களால் தேவையில்லாமல் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இறுதியில் போர் சமாதானமாக முடிவுக்கு வந்தது.
                                               ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவில் இறைவனின் இறுதி தூதராக முகம்மது நபி அவர்கள் தோன்றி மனிதகுலம் அத்தனைக்கும் இறைச்செய்தியை பரப்பினார். அதன் பயனாக மதம், இராணுவம், கலாச்சார வலிமைமிக்க இஸ்லாம் வெகு வேகமாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் பரவியது. முதலில் இரான், சிரியா, எகிப்து, துருக்கி மற்றும் வட ஆப்பிரிக்கா என்று வேகம் பிடித்தது. முதலில் சிரியாவிலும், ஆசிய மைனரிலும் இஸ்லாம் ஆட்சி அமைந்தபோது அங்குள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் தாங்கமுடியாத தொல்லை காரணமாக புதிய இஸ்லாமிய ஆட்சியை வெகுவாக வரவேற்றனர். உலக வரலாற்றில் தன் மத ஆட்சியாளர்களை வெறுத்த மக்கள் கிறிஸ்தவர்கள் தான். சமகாலத்திலேயே முஸ்லீம்கள் கொடுமையாளர்களான பைஸாந்தியர்களையும் (கிழக்கு ரோமர்கள்), பாரசீக சாம்ராஜ்ஜியத்தையும் வென்றனர். பத்தாண்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் நாற்பதினாயிரம் ஊர்களை சுதந்திரமாக்கி, இரண்டாயிரம் மசூதிகளை கட்டினார். முஸ்லீம்கள் ஐந்து பரம்பரை ஆட்சிகளில் அலக்ஸாண்டிரியா, ஜெருசலம், ஆண்டியாக் ஆகிய மூன்றை வென்று நான்காவதாக காண்ஸ்டாண்டிநோபிலை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தார்கள். 638 ல் ஜெருசலம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் முஸ்லீம்கள் வசம் வந்தபோது ஒரு சொட்டு இரத்தம் கூட இரு தரப்பிலும் சிந்தப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலமாகிய நூறாண்டுகளுக்குள் முஸ்லீம்கள் கிரேக்கர்களை விட மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உலகில் நிறுவியிருந்தனர். உலகின் பல சரித்திர ஆசிரியர்களின் பதிவின்படி முஸ்லீம்கள் எந்த நாட்டின் மீதும் இன, மதவெறியால் போர் செய்யவில்லை, சாதாரணமாக தன் ஆட்சியைப் பரப்ப ஒவ்வொரு நாடும் நடத்தும் போர் போல்தான் முஸ்லீம்கள் படையெடுத்தனர். வென்ற எந்தநாட்டு மக்களையும் கட்டாயப்படுத்தி முஸ்லீம்களாக்கவில்லை. அப்படிச்செய்வது இறை மற்றும் நபி(ஸல்)அவர்களின் வழிமுறையும் அல்ல. முஸ்லீம்கள் ஆப்பிரிகாவிலிருந்து மெடிட்டரேனியன் தீவான சைப்ரஸ்(649 CE), கிரீட்(654 CE), ரோட்ஸ்(654 CE), ஐபீரிய தீபகற்பம்(711 CE), டௌலூஸ்-தென் ஃப்ரான்ஸ்(715 CE), ஸர்தீனியா(750 CE, கோர்சிகா(809 CE), மால்டா(824 CE), சிஸிலி(827 CE) மற்றும் (840 மற்றும் தென் இத்தாலி (840 CE) என்று வானமே எல்லையாக பரவிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் முஸ்லீம்கள் அமெரிக்காவுடன் வாணிபத் தொடர்பை ஏற்படுத்தினர். அதாவது கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு (அமெரிக்காவை கண்டு பிடித்ததாக சொல்லப் படுகிறவர்)  ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே இது நடந்தது. முதல் ஆயிராமாண்டின் போது, யூசுஃப் பின் டச்ஃபின் என்னும்     சுல்தான் அல்மொராவிட்ஸ் என்ற சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்தார். அது தெற்கில் செனகலையும், வடக்கில் தென் ஐபீரியாவையும், மேற்கில் அட்லாண்டிக்கையும் மற்றும் அல்ஜீரியா, துனிஷியாவை உள்ளடக்கிய மேற்கு ஐரோப்பாவை விட பெரிய பகுதியாகும்.
                                   எட்டாவது, ஒன்பதாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பாவை மதபோதகர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். உதாரணமாக தேவாலயங்கள், வாடிகன், மத மாஃபியாவாக கருதப்பட்ட ஃப்ராங்கிஷ் (ஃப்ரென்ச்/ஆங்கில கூட்டுப்படை), ஹோலி ரோமன் எம்பயர் போன்றவற்றின் பிடியில் ஐரோப்பா இருந்தது. மேலும், சட்டத்திற்கு புறம்பான விபசாரி ஒருத்தியின் மகனான சார்லஸ் மார்டெல் (688-741 C.E.) என்பவனும், அவனின் படிப்பறிவில்லாத பேரன் சார்ல்மாக்னியும் (742-814 C.E.) ஐரோப்பாவில் இஸ்லாம் வளராமல் தடுத்தனர். அதிலும் முதலில் ‘தி ஹாம்மர்’ என்றழைக்கப்பட்ட சார்லஸ் மார்டெல் 732  C.E.ல் மத்திய ஃப்ரான்சில் புகழ்பெற்ற பாய்டியர்ஸ் போரில், ஃப்ராங்கிஷ் படைகளின் துணையுடன் முஸ்லீம்களை (உம்மய்யாத்களை) வென்றான். அப்போது ஐபீரியாவின் முஸ்லீம் எமிராக இருந்தவரை நயவஞ்சகன் ஒருவன் கொலை செய்து விடுகிறான். இந்த வெற்றியின் மூலம் ஃப்ராங்க்ஸ் படை கிறிஸ்துவத்தை காக்க வந்த சக்தியாக ஐரோப்பா முழுவதும் பரவலாக அறியப்பட்டது அல்லது பரப்பப்பட்டது.
                                           சார்ல்மாக்னி (சார்லஸ் தி கிரேட்/CHARLEMAGNE) என்பவன் முப்பது ஆண்டுகளில் வாள்முனையில் 12 நாடுகளில் (அவார்ஸ், ஸ்லாவ்ஸ், ப்ரீடன்ஸ், லம்பார்ட்ஸ், ஸாக்சன்ஸ் ....) 53 முறை போர் புரிந்தான். ஐபீரியாவில் பலமுறை முஸ்லீம்களை எதிர்த்துப் போரிட்டான், 778 C.E. ல் வட பாம்பலோனாவில் 30,000 மூர்கள் இவன் படையை சுற்றி வளைத்துத் தாக்கியதில் படுதோல்வி அடைந்தான். 1095 ல் இரண்டாம் போப் அர்பன் முதல் சிலுவைப் போருக்கு அழைப்பு விடுத்தபோது முன்னின்று கலந்து கொண்டான். ஜுன் 2000 மாவது ஆண்டில் போஸ்னியா, கொஸோவாவில் பால்கன் சிலுவைப் போராளிகளின் சார்பில் முதல் வடஅமெரிக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாதிபதி பில் கிளிண்டன் கலந்து கொண்டபோது, அவருக்கு ‘சார்ல்மாக்னி பரிசு’ ஆஷன் நகரில் (சார்ல்மானி பிறந்த ஊர்) வழங்கப்பட்டது. சார்ல்மாக்னி இறந்த பிறகு, ஹோலி ரோமன் எம்பயர் அவரின் பிள்ளை, பேரப்பிள்ளைகளால் நிரவாகத் திறமையற்று பலமிழந்தது. முஸ்லீம்கள் தென்பகுதி வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய ஆரம்பித்தார்கள். தானாகவே ஹோலி ரோமன் எம்பயர் வலுவிழந்து ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி என்று மூன்றும் மன்னராட்சி பிரதேசமாகப் பிரிந்தது. ஹோலி ரோமன் எம்பயர் பல பகுதிகளாக சிதறியதும், ஃப்ராங்கிஷ் மன்னர்கள் இஸ்லாமை எதிர்க்கக்கூடிய நம்பிக்கையை இழந்தார்கள். இஸ்லாமை எதிர்க்கும் சக்தி வடபுறமாக ஸ்காண்டிநேவியாவை நோக்கி நகர்ந்தது.
                                           “வடக்கின் சீடன்” என்று பலராலும் அறியப்பட்ட ஃப்ரான்சின் ஆமியன் நகரில் பிறந்த அன்ஸ்கர் (801-865 C.E.) என்ற துறவி ஜெர்மனிக்கும் 826 C.E. ல் டென்மார்க்குக்கும் சென்றான். அங்கு அவன் மன்னரையும் மேலும் 400 பேரையும் கிறிஸ்துவத்துக்கு மதம் மாற்றினான். பிறகு, ஸ்வீடன் சென்று முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை ஸ்காண்டிநேவியாவில் நவீன ஸ்டாக்ஹோம்சில் பிர்காவின் வைகிங்க் மையப்பகுதியில் கட்டினான். 832 C.E. ல் அன்ஸ்கர் ஜெர்மனி திரும்பியதும் ஹாம்பர்க் நகரின் பிஷப்பாகி மொத்த ஸ்காண்டிநேவியாவின் பொறுப்பாளராக ஆனான். 848 C.E. ல் போப் இவனை ப்ரீமெனின் ஆர்ச் பிஷப்பாக ஆக்கினார். 854 C.E. ல் டென்மார்க் திரும்பி ஜூட்லாண்டின் மன்னன் எரிக்கை கிறிஸ்துவத்துக்கு மதம் மாற்றினான். இந்த அன்ஸ்கர் தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்துவத்தின் பால் மதம் மாற்றிவன். அன்ஸ்கரின் மறைவிற்குப் பிறகு, டென்மார்க்கும், ஸ்வீடனும் மீண்டும் பாகனியசுத்துக்கு (PAGAN-காட்டுமிராண்டித்தனம்) மாறியது. வைக்கிங் பகுதிவாசிகள் ஸ்கேண்டிநேவியாவிலிருந்து பல பகுதிகளிலும் பரவி முஸ்லீம்களுக்கு எதிராக சோதனைகள், காலனிகள் அமைத்தல் போன்றவற்றை பிரிட்டனிலும், வட ஃப்ரான்சிலும், வட ஜெர்மனியிலும் மேற்க்கொண்டார்கள். மேலும் தெற்கில் ஐபீரியாவில் நுழைந்து ஜிப்ரால்டர் ஸ்ட்ரெய்ட் வழியாக மெடிட்டரேனியனில் பலீயரிக் தீவில் முஸ்லீம்களை உள்ளுர் காலனிவாசிகளின் துணையுடன் அடாவடியாக வெளியேற்றினார்கள். வைக்கிங்குகள் வட ஆப்பிரிக்காவில் கார்டோபாவின் உமய்யத் எமிரேட்டை தாக்கினார்கள். ஐந்து வாரங்களுக்குப் பிறகு, முஸ்லீம் படைகளால் பலமாகத் தாக்கப்பட்டனர். முஸ்லீம்கள் 30 கப்பல்களையும், 1000 வீரர்களைக் கொன்றும், 400 வீரர்களை கைது செய்து விரட்டினர். முஸ்லீம்களின் திட்டமிட்ட எதிர்த்தாக்குதலால் வைக்கிங்குகளால் ஈடு கொடுக்க முடியவில்லை. வைக்கிங்குகள் ரஷ்யாவின் ஆற்றைக் கடந்து கருங்கடல், காஸ்பியன் கடல் வழியாக அப்பாஸிட் கலீஃபாவைத் தாக்கினர்.
                                     முதல் கிறிஸ்தவ ஆயிராமாண்டு ஐரோப்பா ஏறக்குறைய ஸ்கேண்டிநேவியா, வட ஸ்பெயின், ரஷ்யா, பால்கன் என அனைத்துப் பகுதிகளும் கிறிஸ்துவத்துக்கு மாறியது. பாதிக்கும் மேற்பட்ட மேற்கு ஐரோப்பா கிறிஸ்தவ தேவாலயங்ககளின் ஆதிக்கத்தில் வந்தன. தேவாலயங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக சிலுவைப் போரைத் துவங்கத் திட்டமிட்டது. அதற்கு மிகுந்த பொருட்செலவு, வீரர்கள் தேவைப்பட்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்து வளமை மிகுந்த நாடாக இருந்தது. அதன் மன்னர்கள் கம்பளி வியாபாரத்தின் மூலம் வரியாக நிறைய வெள்ளி உலோகத்தை சேர்த்து வைத்திருந்தனர். வெள்ளி சேமிப்பு இங்கிலாந்தை வடமேற்கு ஐரோப்பாவில் வரம் பெற்ற நாடாகவே கருதச்செய்தது. மெரிக்காவின் மன்னன் ஓஃப்ஃபா முதல் முறையாக வெள்ளியில் இங்கிலாந்தின் பென்னி (PENNY) நாணயத்தை வெளியிட் டான். தேவாலயங்கள் நார்மண்டிகளின் மூலமாக இங்கிலாந்தின் வளமையை முஸ்லீம்களுக்கெதிரான சிலுவைப் போருக்கு பயன்படுத்திக் கொண்டது. 911 C.E. ல் நார்வேயின் வைகிங்க் ரோல்லோ என்பவன் வட ஃப்ரான்சில் தனியாக (முஸ்லீம்களிடமிருந்து பாதுகாப்பாக) ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அங்கு தான் ‘லயன் ஹார்ட்’ என்று அழைக்கப்பட்ட ரிச்சர்டின் கோட்டை இருக்கிறது. அந்த பகுதியே உள்நாட்டு சண்டைக்கு புகழ் பெற்ற நார்மண்டி என்று அழைக்கப்பட்டது. ரோல்லோ ஆர்ச்பிஷப் ரோவனின் கரங்களால் கிறிஸ்துவத்தை தழுவி ஃப்ராங்க்சின் பாதுகாவலன் போல் செயல்பட்டான். நார்மண்டிகளின் பிரபுக்கள்       ( DUKES OF NORMANDY) என்னும் பாரம்பரிய வழிமுறையை ஏற்படுத்தினான். நார்மண்டிகள் ஃப்ரான்சின் மதவெறி குணநலன்களுடனும் ரோம், கரோலின், ஃப்ராங்க்ஸ், ஸ்கேண்டிநேவியன், இத்தாலி வழிமுறைகளுடனும், துணையுடனும் இருந்தனர். மேலும் பதினோராம் நூற்றாண்டில் கலாச்சார கலவையாகவும், சக்தி வாய்ந்த மத, அரசியல், இராணுவம் சார்ந்ததாகவும் நார்மண்டி விளங்கியது. தேவாலயங்கள் நார்மண்டிகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின. ஐரோப்பாவில் கிறிஸ்துவத்துக்கு மிகப்பெரிய இராணுவ பலமாக நார்மண்டி உருப்பெற்றது. இவர்கள் நிர்வாகத்தாலும், ஒரு மாதிரியான தலை மழித்த கோலத்துடன் இராணுவ நடவடிக்கைகளைத் தயார் படுத்துவதிலும், நேரம், பயிற்சிக்காக பண முதலீடு செய்வதிலும் ஈடுபட்டனர். கடந்த பல நூற்றாண்டுகளாக நார்மண்டிகள் கடற்கொள்ளையர்களாக இருந்தவர்கள். காலத்தில் அவர்கள் 980 C.E. லிருந்து 1030 C.E. வரை வட ஐரோப்பாவில் அரண்மனைகள் கட்டுவதிலும், அகழிகள் தோண்டுவதிலும் சிறந்து விளங்கினர். நார்மன்கள் போர் இல்லாமல் இருப்பதை விரும்புவதில்லை போரில் தோற்பது போலிருந்தால், சூது செய்தும், லஞ்சம் கொடுத்தும் வெற்றி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
                                            முஸ்லீம்களிடமிருந்து 1000 மைல்களுக்கப்பால் மெடிட்டரேனியனில் நார்மன்கள் முதல் காலனியை அமைத்தனர். 827 C.E. லிருந்து முஸ்லீம் கள் வசமிருந்த சிஸிலி தீவை 1060 C.E. ல் திரும்பக் கைப்பற்றினர். நான்மண்டியில் தேவாலயங்கள் தான் கல்வியறிவு பெற்ற மன்னர்களையும், இளவரசர்களையும், பிரபுக்களையும் அரசாங்கங்கள் அமைக்கத் தேர்ந்தெடுத்தன. அவர்கள் லத்தீன் மொழியின் இலக்கணத்தையும், பேச்சுத்தன்மையும், கணிதத்தையும், இசையையும், புவியியலையும், ஜோதிடத்தையும், பௌதிகத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் கற்றுத் தேர்ந்தனர். போப் இரண்டாம் சில்வெஸ்டர் (945 C.E.-1003 C.E.) என்ற முதல் ஃப்ரென்ச் போப் மதபோதகராக பல சாதனைகள் புரிந்தார். கணிதம், தத்துவம், பௌதிகத்தில் பல கட்டுரைகள் எழுதினார். அரேபிய எண் முறைகளை அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத ரோமன் எண் முறைக்கு மாற்றினார். பூஜ்ஜியத்திற்கு ரோமன் எண் முறைகளில் வடிவம் இல்லை. பதினோராம் நூற்றாண்டின் முதல் பாதியில் நார்மண்டிகள் எல்லாத் துறைகளிலும் ஐரோப்பாவில் பலம் வாய்ந்த சக்தியாக மாறி முஸ்லீம்களை அழிக்க சிலுவைப் போருக்கு தயாராக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலான சிறந்த தகுதியாக இத்தாலியின் மதகுரு லான்ஃப்ரான்க் (சிர்கா 1005 C.E.-1089 C.E.) என்ற பெனடிக்ட் துறவி அறிவுக் கூர்மையுடன் இருந்தார். மிகச்சிறந்த குடும்பத்தில் பிறந்த இவர் மன்னர்களுக்கெல்லாம் மேலாக கருதப்பட்டார். அரசியலிலும், நிர்வாகத்திலும், கற்பிப்பதிலும் ஐரோப்பாவிலேயே சிறந்த மதகுருவாக கருதப்பட்டார்.

விதைத்தவர்கள் 1

இந்தக் கட்டுரைக்காக மூலஆசிரியர் கையாண்ட புத்தகங்கள் வருமாறு :
தி நார்மன் கிங்க்ஸ்
தி க்ராஸ் அண்ட் தி க்ரெசெண்ட் எ ஹிஸ்டரி ஆஃப் க்ருஸேட்
தி லைஃப் அண்ட் டைம் ஆஃப் வில்லியம் 1
தி ப்ளடி ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டன்
தி முஸ்லிம் நியூஸ்
ஓரியண்டலிசம்
டைம் அட்லாஸ் ஆஃப் வேல்ட் ஹிஸ்டரி
ஹிஸ்டரி ஆஃப் ஈரோப் அண்ட் தி சர்ச்
க்ருஸேட்ஸ்
டூம்ஸ் டே
ஹாரிபிள் ஹிஸ்டரி
இன்னும் பல புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள்.
                
                                     இந்தக் கட்டுரைப்பகுதி படிப்பவர்களுக்கு முஸ்லீம்களை அழிக்க வந்தவர்கள் யார்? அவர்களின் பூர்வீகம் என்ன? ஆங்கிலேயர்கள் யார்? இங்கிலாந்தில் ஊடூரியவர்கள் யார்? யூதர்கள் எப்படி இங்கிலாந்தில் குடியேறினர் போன்ற சரித்திரச்சுவடுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். மேற்கத்தியர்கள் எப்படி சுலபமாக தங்களின் இரத்தவெறியை சாதாரணப் பொய்கள் மூலம் மறைத்துக் கொண்டனர் என்று தெரியவரும். நான் எதையும் கூட்டி சொல்லவில்லை. அப்படியே மொழி பெயர்த்து எழுதி இருக்கிறேன். இது நிச்சயம் வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும். எதிரியின் உண்மை அடையாளத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மதம் எப்படி இந்த ஐரோப்பிய மடையர்களின் வெறியாட்டத்திற்குப் பயனளித்தது என்பது புரியும். சரித்திரம் என்பதே அடுத்தவர்களுக்கு எழுதப்படுத்தப்பட்ட மரண சாஸ்திரமாகும். முஸ்லீம்களை அவமானப்படுத்த, அழிக்க ஐரோப்பாவிலிருந்து எப்படி ஒரு கூட்டம் புறப்பட்டது என்று இன்றைய காலகட்டத்தில் தெரிந்து கொள்வது கடமையாகும். இந்த இன அழிப்புப் (சிலுவைப்) போர் என்பது முடிவுபெறாது. நாம் இறைவனை சந்திக்கும் இறுதிநாள் வரை தொடரும். இதற்கு ஆதாரமாக பலவற்றைக் கூறலாம். உதாரணமாக போஸ்னியா, கொஸோவா, இந்தோனேஷியா, நைஜீரியா, ஸோமாலியா, சிரியா, ஏமன் மற்றும் பாலஸ்தீன் பிரச்சினைகள். இந்த  முஸ்லீம்கள் நாடுகள் மீதான தாக்குதல் உலகில் முஸ்லீம்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் மேற்கத்தியர்களாலும், அவர்களின் நட்பு, கூட்டு நாடுகளாலும், யூதர்கள், கிறிஸ்தவர்களாலும், கழுத்தறுக்கும் சில முஸ்லீம் நாடுகளாலும் நடத்தப்படுகின்றன.
                                             இவையெல்லாம் குர் ஆன், பைபிளுக்குப் பிறகு மூன்றாவது பெரிய புத்தகமாகக் கருதப்படும் சதிவலைகளால் பின்னப்பட்டு பனிரெண்டாம் நூற்றாண்டில் கூட்டாக வடிவமைக்கப்பட்ட ‘டூம்ஸ் டே’ (THE DOOMS DAY) என்ற புத்தகம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஒருவகையில் பிரிட்டிஷ் தீவுகளின் வரலாறு போலவே தோன்றினாலும், இவர்களுக்குள் யார் எங்கிருந்து ஊடுருவினார்கள் எப்படி இவர்களை முஸ்லீம்களை அழிக்கும் வெறியேற்றினார்கள் என்ற வரலாறைச் சொல்லும் கட்டுரை இது. இதன் ஆங்கில வடிவத்தில் ஃப்ரென்ச், இங்கிலாந்து மன்னர்களின் அருவருக்கத்தக்க, ஆபாசமான காமக்களியாட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசியமானவற்றைத் தவிர நான் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துவிட்டேன். இறைவனிடம் தன் மக்களுக்கு சாந்தியும், சமாதானமும் அருளுமாறு வேண்டிய ஈஸா நபியின் மதமாக எண்ணி வழிபடும் கிறிஸ்தவர்கள் தான் உலகின் மிகப்பெரிய அயோக்கியர்கள், இரத்தவெறி பிடித்தவர்கள், நன்றி கெட்டவர்கள், எத்தனை முறைவேண்டுமானாலும் செய்த சத்தியத்தை மீறுபவர்கள், காமத்தை பல வழிகளிலும் தீர்த்துக்கொள்பவர்கள், இதுவரை இவர்களால் உலகில் பலவழிகளிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பில்லியனை தொடும். ராஜ குடும்பத்தினர் யார்? யார்யாருக்கு எப்படி உறவினர்கள் ஆனார்கள். பூலோகத்தின் அதிகப்படியான மண்னை ஆளும் அளவுக்கு எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்திருப்பார்கள் என்பது இந்த கட்டுரையைப் படிக்கும் போது புரியும். ஒருவகையில் இந்தக்கட்டுரை வேறு கண்டத்தின் வரலாறு போல் தோன்றினாலும், விஷத்தைப் பற்றி ஏற்கனவே ஓரளவு தெரிந்திருக்கும் நாம் அதே நேரத்தில் விஷம் கடித்த பாம்பைப்பற்றி தெரிந்து கொள்வது போல் இருக்கும்.
     ரோமக் கிறிஸ்தவர்களின் நாட்குறிப்புப்படி 15 ஜூலை 1999 அவர்கள் 70,000 முஸ்லீம்களைக் கொன்று ஜெருசலத்தைக் கைப்பற்றிய 900 ஆண்டின் நினைவாண்டு விழா. முன்னர் இதே ஜெருசலத்தை நான்கரை நூற்றாண்டுகளுக்குப் பின் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் முஸ்லீம்கள் வென்றார்கள். உலகில் கிறிஸ்தவர்கள் போல் இரத்தக்கறை படிந்த சமூகம் வேறெதுவும் இல்லை. பெரும்பான்மையான சிலுவைப் போராளிகள் நார்மன் என்று அழைக்கப்படும் வட ஃப்ரான்ஸைச் சேர்ந்த நார்மண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் வில்லியம் என்பவனின் மூத்த மகன் ராபர்ட் கர்ட்ஹோஸ் என்னும் நார்மன் தான் பிரத்தியேக பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து ஆண்டியாக்கையும், ஜெருசலத்தையும் தாக்கினான். 1099 C.E. ல் ஜெருசலத்தை வென்ற பின் ராபர்ட்டை மன்னராக இருக்க கேட்டுக்கொண்டனர். ஆனால், அவன் நிராகரித்து இங்கிலாந்துக்கே திரும்பிச் சென்றுவிட்டான். வில்லியமின் மருமகன் ஸ்டீஃபன் என்பவன் போரில் கொல்லப்பட்டு விட்டான். நார்மன் மற்றும் கிறிஸ்துவ தீவிரவாதிகளுக்கு முஸ்லீம்கள் முதல் இலக்கு அல்ல. அவர்களின் முதல் இலக்கு முதலாம் சிலுவைப் போருக்கு 29 ஆண்டுகளுக்கு முன் 1066 C.E. ல் ஆங்கில பிரிட்டிஷாரின் மீது தான். அப்போது இங்கிலாந்து செல்வச் செழிப்பான நாடாக இருந்தது. இரண்டாம் போப் அலக்ஸாண்டர், இங்கிலாந்து மன்னர் ஹரால்டை பொருட்படுத்தாமல் ஃப்ரான்ஸின் நார்மண்டியான ட்யூக் வில்லியம் பிரபுவுக்கு ஆதரவளித்து இங்கிலாந்தைக் கைப்பற்றி அங்குள்ள மக்களை உலக இறுதிநாள் வரை வரி செலுத்த சொன்னார். நார்மன்களின் 1066 ன் தீவிரவாதம் தான் பிரிட்டிஷ் தீவுகளின் சரித்திரத்தை மாற்றியது. அதன் பிறகு தான் அவர்களின் செங்கோல் இஸ்லாமியர்களின் பக்கம் மதவெறியாக திரும்பியது அல்லது திருப்பிவிடப்பட்டது.
தெரிந்து கொள்ளுங்கள் இதுவரை கோடிக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெரும்பான்மையானோர் தான் ஏன் கொல்லப்படுகிறோம் என்று காரணம் கூட அறியவில்லை. சொத்துக்களும், வாழ்ந்த வீடுகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் உறவுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன, ஏராளமான முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கே கேள்வி என்னவென்றால், முஸ்லீம் தாய்மார்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டுமா? இது தான்  இறைவனும், தூதரும் முஸ்லீம்களுக்குச் சொல்லித் தந்ததா? அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:                                                                     “அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்” –அல் பகரா:217                                        இந்த வரிகள் மிகத் தெளிவாக சொல்கின்றன. அதாவது முஸ்லீம்களை வழிகெடுத்து இஸ்லாமை நிராகரிக்கும் வரை அவர்கள் முஸ்லீம்கள் மீது ஏதேனும் ஒருவகையில், ஏதேனும் ஒரு நாட்டில் கொன்று கொண்டிருப்பார்கள். இது அல்லாஹுத் தாலா சொல்வது. ஜிஹாத் என்பதை உலக அரங்கில் அமெரிக்காவாலும், ஐரோப்பியர்களாலும், பெண்கள் எப்படி பட்டுப்புடவையையும், நகைகளையும் திருமணத்தின் போது மட்டும் பயன்படுத்துவார்களோ அதேபோல் அறிவையும் பயன்படுத்தும் சில நாடுகளும் தவறாக சித்தறிக்கின்றன. அட அழுகிய புண்ணை உண்ணும் அருவருப்பானவர்களே அரபியில் ஜிஹாதிற்கு தூய விளக்கம் என்ன என்று உலகின் அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்த்துப் பாருங்கள். நீங்கள் முஸ்லீமாய் இல்லாவிட்டாலும், ஜிஹாதை விரும்ப ஆரம்பித்துவிடுவீர்கள். எப்படி இஸ்லாமிய வங்கி, இஸ்லாமிய சட்டங்களைக் காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்களோ அதேபோல் ஜிஹாதையும் ஏற்றுக்கொள்வீர்கள். ஜிஹாதின் வழியில் போராடாத வரை இந்த எதிரிகளின் தாக்குதல்கள் நிற்கப் போவதில்லை.                                                           “தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்து விட பார்க்கிறார்கள், அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். இணை வைப்பவர்கள் இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே தன் தூதரை அனுப்பினான். – அத் தவ்பா 32-33                                                           சத்தியம்! சத்தியம்!! எவ்வளவு சத்தியமானது அல்லாஹ்வின் வார்த்தைகள்.

ஞாயிறு, 3 மே, 2015

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 2

சார்ல்மாக்னியின் முதல் சில போர் நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. இஸ்லாமியர்களை எதிர்த்து வட ஸ்பெயினில் நடத்திய போரில் தோல்வியடைந்தான். அப்போதைய கார்டோபாவின் கலீஃபா சார்ல்மாக்னியின் வரவை எதிர்பார்த்துப் போரிட காத்திருந்தார். மேலும் இவன் பாட்டனாரின் டூர்ஸ் வெற்றியின் வெளிப்பாடு இவனிடம் இல்லாமல் போனது. 778 ல் தெற்கு நோக்கி பாம்ப்லோனா நகரைக் கைப்பற்றி, சரகோஸ்ஸாவை வெல்லத் திட்டமிட்டு எதுவும் சாதிக்காமல் ஏமாற்றமடைந்தார். இதற்காக அவனின் படை பாரம்பரிய வழியான ரான்செஸ்வல்லீசைக் கடக்கும் போது, பஸ்க்வெஸ் அல்லது காஸ்கன் குழுக்களால் முன்னால் சென்ற படை தாக்கப்பட்டது. சார்ல்மாக்னியின் பெரிய மாவீரரென்ற கற்பனை இந்த தோல்விகளால் இவன் ஆட்சியில் கரைபடிந்த புள்ளிகளாய் போனது. 799 ன் மத்தியில் மூன்றாம் முறையாக ஃப்ராங்கிஷ் மன்னனுக்கு போப்பின் எண்ணெய் ஸ்நானம் தேவைப்பட்டது. ரோமின் சாலையில் எதிரிகளால் தாக்கப்பட்டான். (எதிரிகள் இவனைக் குருடாக்கி, நாக்கை அறுத்து ஆளத்தகுதி இல்லாமல் ஆக்கத் திட்டம் தீட்டியிருந்தனர்.) மூன்றாம் லியோ ஆல்ப்ஸ் வழியாகச் சென்று சார்ல்மாக்னியை பாடெர்பார்னில் சந்தித்தார்.
                                       இருவரும் என்ன ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், 800 ல் சார்ல்மாக்னி ரோம் சென்று போப்புக்கு ஆதரவு தெரிவித்தார். செயிண்ட் பீட்டர்ஸில் கிறிஸ்துமஸ் தினத்தில் லியோ சார்ல்மாக்னியின் மகனை அடுத்த மன்னனாக தேர்ந்தெடுக்க இருந்தார். ஆனால், பிரார்தனை முடிந்து தலை உயர்த்திய சார்ல்மாக்னியின் தலையிலேயே போப் மீண்டும் கிரீடத்தைச் சூட்டினார். சார்ல்மாக்னி மகிழ்ச்சியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டான். சட்டப்படி மன்னனாகத் தகுதிவாய்ந்தவர் கான்ஸ்டாண்டிநோபிளைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். மன்னன், போப் மற்றும் மக்களின் விருப்பங்கள் இணைந்து ஜெர்மனிய பழங்குடி வாரிசுதான் மேற்கில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று முடிவாகியது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தின் இந்த புதிய முடிவுதான் அன்றிலிருந்து இன்றுவரை போப்களைத் தேர்ந்தெடுப்பதிலும், சிலுவைப்போர் அமைத்து இரக்கமின்றிக் கொல்வதிலும், நேட்டோ படையுடன் சேர்ந்து இஸ்லாமிய நாடுகளை சூறையாடுவதிலும் பங்கு வகிக்கிறது. இந்த இரத்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் தான் இங்கிலாந்தில் அரச குடுப்பத்திலும், மற்ற ஐரோப்பிய நாடுகளின் வாரிசு வரிசையில் இடம்பிடிக்க முடியும்.  800 ல் சார்ல்மாக்னியின் பதவியேற்பில் முதன்முறையாக பிரமாண உறுதி மொழியில் படிக்கப்பட்ட வாசகம் அப்படி. அதாவது, “சார்லஸ் மிகவும் சாந்தமான அகஸ்டஸ், கடவுளின் பெயரால் பதவி ஏற்கப்படுகிறார். இவர் பசிபிக்கின் மாபெரும் சக்கரவர்த்தி, ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யும் சக்கரவர்த்தி ஆவார்”. என்று முன்மொழிந்தனர்.
                          அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாம் லியோ சார்ல்மாக்னியை மதச்சடங்கு ஒன்றில் ஜெர்மனியில் சந்தித்தார். 796 ல் ஆசென் நகரில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுற்ற சார்ல்மாக்னியின் புதிய தேவாலயத்தின் திறப்புவிழாவில் சந்திக்க நேர்ந்தது. சார்ல்மாக்னியின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசென் நகரம் அர்த்தமுள்ளதாகவும், அவசியமாகவும் இருந்தது. அசென் சாம்ராஜ்ஜியத்தின் வடக்கிலும், ரோமின் எதிர்திசையிலும் இருந்தது. சார்ல்மாக்னி தன் ஒரே மகன் லூயிஸை ஆட்சி அதிகாரத்தில் இணைக்க ஆசைப்பட்டான். 805 ல் வடக்கில் பயணம் செய்த போப் இதனை ஆதரிக்கவில்லை. இதனால் போப் இல்லாமலேயே 813 ல் ஆசென் நகர தேவாலத்தில் மகனுக்கு துணைச் சக்கரவர்த்தியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தான். இந்த ஆசென் நகரம் சார்ல் மாக்னியின் ஒன்றிணைந்த ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தள்ளியிருந்தது. மிகச்சரியாக ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மேற்குக்கும், கிழக்குக்கும் நடுவில் இருந்தது. மேலும், நவீன அமைப்பை வெளிப்படுத்தும் விதமாக பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியின் எல்லைகளின் மத்தியில் இருந்தது.                 
                              சார்ல்மாக்னி ஆட்சியைப் பரப்பும் எண்ணம் வந்தவுடன் தன் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணினான். கிறிஸ்தவ அறிவு ஜீவிகள் ஆசென் நகரிலிருந்து சார்ல் மாக்னிக்குக்கு வேலையாட்களைத் தேர்ந்தெடுத்தனர். சார்ல்மாக்னி ஆசெனில் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கென நிகழ்ச்சிகளை நடத்தினான். வடக்கின் பார்பேரிய பகுதியில் மட்டுமே கல்வி கற்றவர்கள் அதிகம் பேர் இருந்தனர். 780 ல் ஆசென் அரண்மனையில் ஒரு பள்ளியை ஆரம்பித்து யோர்க் நகரத்திலிருந்து அல்சியன் என்ற சிறந்த ஆசிரியரை அழைத்து வந்தான். தானும் சமயங்களில் தன் குடும்பத்துடன் பாடம் கற்க செல்வான். சிறந்த ஏடுகள் அங்கு அழகாக நகல் எடுக்கப்பட்டன. அவைகளே பிற்காலத்தில் ரோமன் மாதிரி எழுத்துக்கள் ஆகின. மேலும் தனிச்சிறப்பு உண்டாக்குவதற்காக கரோலின்ஜியன்களின் புத்திசாலித்தனமான கலையம்சமுள்ள வாழ்க்கை முறைகளைக் கொண்டுவந்தான்.
                              சார்ல்மாக்னி தனக்குப்பிறகு, தன் பாரம்பரிய ஆட்சியை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக்கொடுக்க விரும்பினான். ஆனால், அவனின் முதல் இரண்டு பிள்ளைகளும் முறையே 810,811 ம் ஆண்டுகளில் இறந்து போயினர். அதனால் எஞ்சிய கடைசி மகன் லூயிஸ் 814 ம் ஆண்டு மொத்த பகுதிகளுக்கும் ஒரே சக்கரவர்த்தி ஆனான். லூயிஸ் தந்தையைவிட குணத்தில் வித்தியாசமாக இருந்தான். தெயவபக்தி உள்ள லூயிஸ் என்று பொருள்படும் வகையில் லூயிஸ் தி பியஸ் (LOUIS THE PIOUS) என்று அழைக்கப்பட்டான். தேவாலயத்தின் ஆதரவுடனே இருக்க விரும்பினான். சார்ல் மாக்னியின் சாம்ராஜ்ஜியம் யாரும் நெருங்க முடியாத வண்ணம் இருந்தது. ஆனால், 840 ல் லூயிஸ் மரணமடைந்தவுடன் எல்லாம் மாறியது. சார்ல்மாக்னியின் லெஜெண்ட் (LEGEND) என்ற அவன் புகழும், கலைப்படைப்புகளும் இன்று வரை பெயர் பெற்றவை. சார்ல் மாக்னியின் சாம்ராஜ்ஜியம் வடகிழக்கு ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனியின் சில பகுதிகள், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் வட இத்தாலி இணைந்து இருந்தது. 840 ல் சார்ல்மாக்னியின் மகன் லூயிஸ் இறந்தவுடன் பாரம்பரிய பிரதேசத்தைப் பிரிப்பதில் லூயிஸின் மூன்று மகன்களுக்கு இடையில் சண்டை வந்தது. 843 ல் ஒரு குழுவால் சமாதானம் ஏற்பட்டு வெர்டுன் என்ற இடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், பிரிக்கப்பட்ட அந்த எல்லைகளில் எதிர்கால ஐரோப்பாவின் இருண்ட சரித்திரங்கள் ஆரம்பிக்க இருந்தன.
                              ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பூகோள அமைப்பில் ஒருபுறம் அட்லாண்டிக்கரையும், மற்றொரு புறம் ரினியும் உள்ளது. லத்தீன்களுக்கு தெரியும் செங்குத்தான பாகம்தான் பிரான்ஸ் என்று. ஆனால், பிரிக்கப்பட்டது  மேற்குபிரான்ஸ், மத்திய பிரான்ஸ் மற்றும் கிழக்குபிரான்ஸ் ஆகும். மேற்குபிரான்ஸில் மேலும் சில பிரான்ஸ் பகுதிகள் இணைக்கப்படவேண்டும். கிழக்கு பிரான்ஸில் சராசரி ஜெர்மன் மொழிபேசும் ரினியின் கிழக்குப்பகுதி இணைக்கப்பட வேண்டும். மத்தியபிரான்ஸ் சந்தேகத்திற்கிடமாக இருந்தது, ஏனென்றால் அது மொத்த பிரான்ஸிலும் செல்வம் கொழிக்கும் பகுதி. இது லூயிஸின் மூத்த மகன் முதலாம் லோதயிருக்கு வழங்கப்பட்டிருந்தது. மத்தியபிரான்ஸ் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலிருந்து நீண்டு கீழ்பகுதியில் ரினியின் இருபுறமும் ஸ்விட்சர்லாந்தும் இத்தாலியும் இருந்தன. அந்த தவறான பங்கீடின் படியே நூற்றாண்டாக இருந்தது. வடக்குப்பகுதி லோதாரின்ஜியா (லோதர் இன பழங்குடியினர் இருந்ததால்) என்று மாறியது. பிரான்சு லோரியன், ஸ்விட்சர்லாந்து அல்ஸாசி என்று மாறியது. ஆட்சி வலுவடைந்தாலும், வலுவடையாவிட்டாலும், மேற்கோ கிழக்கோ மெதுவாக ஃப்ரான்சும், ஜெர்மனியும் இணைந்தன. ரினிலாந்து பிறகு, ஆட்சி மாறியது. சில நூற்றாண்டுகள் பர்கண்டியும், வட இத்தாலியும் கவனிப்பு இல்லாமல் போயின.
                               புராதன கரோலின்ஜியன்களின் பரம்பரை ஒன்பதாம் நூற்றாண்டில் ரினியின் இருபக்கமும் ஆதிக்க சக்தியில் பேரரசை ஆண்டது. ஆனால் 911 ல் ஜெர்மனியையும், 987 ல் ஃப்ரான் சையும் இழந்தார்கள். 919 களில் ஜெர்மனியை ஆட்சி செய்தவர்கள் சாக்ஸனின் வம்சாவழிகள். ஆனால், 987 ல் ஃப்ரான்சில் ஆட்சிக்கு வந்த ஹியூக் கேபெட் ஒரு ஃப்ராங்க். இவரின் வம்சாவழியினர் தங்கள் குலப்பெயரான ஃப்ராங்க் என்பதை மறக்காதிருக்க “ஃப்ரான்ஸ்” என மாற்றி நான்கு நூற்றாண்டுகளாக பாரிசிலிருந்து ஆண்டார்கள்.                   

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 1

 ஃப்ராங்ஸ்கள் ஏதோ இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்று எண்ணவேண்டாம். இஸ்லாத்தை யூதர்களுக்கு அடுத்து ஆதியிலிருந்து எதிர்த்து வரும் இரத்தவெறி பிடித்த ராஜவம்சக்கூட்டம். ஐரோப்பிய நாடுகளில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள். பலம் வாய்ந்த அமெரிக்க டாலரை வீழ்த்தி ஈரோ என்ற நாணயத்தை பல எதிர்ப்புகளுக்கிடையில் வெளியிட்ட அறிவாளிகள். டயானா, டோடி படுகொலையின் மூலக் குற்றவாளிகள். இன்றைய நேட்டோ படையின் கூட்டாளிகள். ஸ்பெயின், ஃப்ரான்சிலிருந்து இஸ்லாத்தை விரட்டியவர்கள். நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவதூறாகப் பிரசாரம் செய்வதற்கும், ஹிஜாப் அணியக்கூடாது போன்ற இஸ்லாத்துக்கு எதிரான சட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் யார், இவர்களின் உறவுமுறை என்ன எப்படி ஆட்சிகு வந்தார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளவே இந்த தொடர்.                                   

                        ஃப்ராங்க்ஸ்கள் எனப்படுபவர்கள் பிரான்ஸும், பிரிட்டிஷும் இணைந்த கூட்டுப்படையினராவர். ஃப்ராங்க்ஸ்கள் தான் முதலில் பிரான்சில் ராஜவம்ச வழியை கொண்டுவந்தவர்கள். அடிப் படையில் ஜெர்மனியின் பழங்குடிப் பிரிவின் ஒன்றிலிருந்து தான் ஃப்ரான்ஸ் என்ற வார்த்தை வந்தது.   ஐந்தாம் நூற்றாண்டில் மெரோ வின்ஜியன் பேரரசில் மெரோவிச் என்ற தலைவர் இருந்தார். ஃப்ராங்க்ஸ்களின் எதிர்காலம் இவரின் பேரன் க்ளோவிஸ் என்பவனில் இருந்து துவங்கியது. 481 ல் க்ளோவிஸ் முடிசூட்டிக்கொள்ளும் போது 15 வயது. அப்போது இந்த மெரோவின்ஜியன் பேரரசின் தலைநகரம் தூர்னை (தற்போதைய தெற்கு பெல்ஜியம்). க்ளோவிஸின் இரண்டு செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் சரித்திரத்தை மாற்றியது. ஒன்று, தன் பார்பேரிய (பார்பரியம் என்றால் நாகரீகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள் என்று பொருள்) மன்னராட்சியை ஆல்ப்ஸ் மலையின் வடபகுதி வரை பரப்பினான். இரண்டு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவனாக மதம் மாறினான். மற்ற பார்பரிய ஆட்சியாளர்கள் அரியனிஸம் என்ற மதக்கொள்கையில் இருந்தார்கள். க்ளோவிஸ் சோம்மி என்ற பகுதியில் இருந்து லொய்ரி என்ற பகுதி வரை மனசாட்சியற்ற வகையில், பல சதித்திட்டங்கள் தீட்டி சக பழங்குடியின பகுதிகளைக் கைப்பற்றினார். தென் கிழக்கிலிருந்த பர்கண்டியர்களை தனக்கு மரியாதை செய்ய வற்புறுத்தினான். தென் மேற்கில் விசிகோத் என்பவர்களையும் வென்று 507 ல் மெடிட்டரேனியன் கரை தவிர்த்து மொத்த பிரான்சையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
                           இந்த வெற்றிக்கு அவன் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியதும், காவுல் பகுதி மற்றும் ரோமுக்கு மரியாதை செலுத்தும் மற்ற அரிய இன விசிகோத்களும் பெரிதும் உதவியது தான் காரணம். மேலும்,  கிறிஸ்தவ வம்சத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டான். கான்ஸ்டண்டைன் பகுதியை வென்றதின் மூலம் (KENT) கெண்டைச் சேர்ந்த பக்திமிகுந்த ஈதெல்பெர்ட் என்பவளை திருமணம் செய்திருந்தான். மீண்டும் பர்கண்டிய இளவரசி  களோடில்டா என்பவளை மணந்தான். எதிரியான மற்றொரு ஜெர்மனிய பழங்குடியான அலமன்னியை தோற்கடிக்க தன் கணவனின் கிறிஸ்தவ மதமாற்றமே காரணம் என்று கூறினாள். அலமன்னியை வென்றதின் பிறகு, அவனின் இராணுவத்தினர் 3000 பேரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். க்ளோவிஸ் பாரிஸை தலைநகராக மாற்றிக் கொண்டு கிறிஸ்தவத்திற்கு முன்பிருந்த புராதன ‘சாலியன் ஃப்ராங்க்ஸ்’ சட்டங்களை இயற்றினான். இவனின் தலைநகர் மாற்றத்திற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பி கலவரமாகியது. இவனின் சாலியன் சட்டத்தை மட்டும் சில நாள் கழித்து ஏற்றுக்கொண்டனர். வட ஐரோப்பாவிலும், பிரான்சிலும் இவன் மன்னராட்சி புதிய எழுச்சியாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் மாறியது.
                               511 ல் க்ளோவிஸ் இறந்த பிறகு இவனது பகுதிகள் இவனின் நான்கு மகன்களால் பிரிக்கப்பட்டது. அவன் நீண்டகாலமாக உருவாக்கிய பேரரசு சமபாகமாக பிரிக்கப்பட்டு வலுவி ழந்தது. சில நாட்களில் மீண்டும் விரிவாக்கப்பட்டு முற்காலங்களில் மரியாதை செலுத்திய பர்கண்டி இணைக்கப்பட்டு 534 ல் ஃப்ரங்கிஷ் மன்னராட்சியானது. ஃப்ரங்கிஷ் மூன்று தனி மன்னராட்சியாக மாறியது. பழைய இடங்களும், நவீன பெல்ஜியம் மற்றும் வட கிழக்கு பிரான்சும் இணைந்து ஆஸ்ட்ரேஷியா ஆனது. க்ளோவிஸால் வெற்றி கொள்ளப்பட்ட மத்திய பிரான்சு பகுதி நியூஸ்ட்ரியா என்று அழைக்கப்பட்டு, பர்கண்டி அதன் சொந்த பெயரிலேயே இருந்தது. இரு ஆண்டுகளுக்கும் மேலாக க்ளோவிஸின் வழிவந்த வாரிசுகள் ஆண்டுவந்தார்கள். இடையில் நியூஸ்ட்ரியாவும், பர்கண்டியும் இணைக்கப்பட்டன. பின்னாளில் எல்லா பகுதிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே அதிகாரத்திற்கு வந்தது. 613 லிருந்து 639 வரை இரண்டாம் க்ளோடயர் மற்றும் அவன் மகன் முதலாம் டகோபெர்ட் ஆகியோரின் ஆட்சி உதாரணமாக அமைந்தது. டகோபெர்ட் இறந்ததும் ஃப்ரங்கிஷ் மன்னர்கள் மெதுவாக தங்கள் சொந்த அதிகாரத் தை இழக்க ஆரம்பித்து, ஜப்பானின் ஷோகுன் போல் அரண்மனை மேயர் மன்னரின் சமஅந்தஸ்துக்கு வந்தார்.
                               ரோமர்கள் சாம்ராஜ்ஜியத்தில் ‘மஜோர் டோமஸ்’ என்ற பதவியில் ஒருவர் இருந்து கொண்டு அரசு நிர்வாக த்தைக் கவனித்துக் கொள்வார். ஃப்ரங்கிஷ் மன்னர்களும் அதே போன்று பதவி உருவாக்கி தங்கள் ஆட்சியில் தலைமை நிர்வாக அதிகாரியை ‘மேஜர் பலாட்டி’ என்று அழைத்தனர். மேஜர் பின்னாளில் மேயர் என்று ஆகியது. இந்த மேஜர் பலாட்டிகள் மன்னருக்கும், இளவரசருக்குமான தொடர்புகள், ஆட்சியில் மன்னருக்கான ஆலோசனைகள், இராணுவ உத்தரவுகள் ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டனர். ஏழாம் நூற்றாண்டின் இடையில் ஆஸ்ட்ரேஷியா, நியூ ஸ்ட்ரியா மற்றும் பர்கண்டிக்கான மேயர்களுக்கிடையே அதிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. 679 ல் இரண்டாம் பெபின் என்ற ஆஸ்ட்ரேஷியாவின் மேயர் ஒரு மேயரின் கட்டுப்பாட்டில் தான் அனைவரும் செயல்படவேண்டும் என்று விடாமல் போராடி மூன்று அரசுக்கும் தானே முதல்முறையாக மேயரானார். இவரின் அதிகாரத்தில் புதிய கம்பீரமான பேரரசு உதயமானது. 714 ல் இரண்டாம் பெபின் மரணமடைந்தவுடன் கலவரம் வெடித்தது. இரண்டாம் பெபினுக்கு முறையான குழந்தைகள் இல்லை. தவறான உறவுகளின் மூலம் பிறந்த மகனும், பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள். உள்நாட்டு கலவரத்தில் இரண்டாம் பெபினின் முறையற்ற மகன் சார்லஸ் வென்று நாட்டை கைப்பற்றினான். இவனின் இராணுவத்திறமையால் சார்லஸ் மார்டெல் “தி ஹாம்மர்” என்று ஐரோப்பியர்களால் பின்னாளில் புகழப்பட்டான். இவனின் கிறிஸ்தவப் பெயர் கரோலஸ் (CARO LUS) என்பதால் இவனின் கீழ் வந்தவர்கள் கரோலின்ஜியன்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
                                   ஃப்ராங்கிஷின் பாரம்பரிய பூமியை ஆண்டு வந்த சார்லஸ் மார்டெல் தனது வட மற்றும் கிழக்கு எல்லைப் பகுதியில் தொல்லை கொடுத்து வந்த ஜெர்மனிய பழங்குடியினரான ஃப்ரிஷியன்கள், ஸாக்சன்கள் மற்றும் பவேரியன்களை எதிர்த்து நீண்ட போரை நடத்தினான். இதற்கு செயிண்ட் பானிஃபேஸ் என்ற கிறிஸ்தவ தொண்டுநிறுவனத்தின் ஆதரவும் இருந்தது. காவுல் பகுதியில் இருந்த அந்த பார்பேரியன் (நாகரீகமற்றவர்கள்) களால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொந்தரவு இருந்தது. ஆனால் தற்போது தென் பகுதியில் சக்திவாய்ந்த புதியவர்களால் தொந்திரவு வர ஆரம்பித்தது. அவர்கள் ஸ்பெயினில் காலூன்றியிருந்த அரபுக்கள். 711 ல் வந்த அரபுகள் ஸ்பெயினிலிருந்து வட பகுதி நோக்கி புயலைப் போல முன்னேறினார்கள். விரைவில் பைரெனீஸுக்கு அருகில் நெருங்கினார்கள். 720 ல் நார்போன்னையும், 725 ல் பர்கண்டியையும் வென்றார்கள். பிறகு, 732 வரை சற்று அமைதியாய் இருந்தனர். பின் மீண்டும் போர்டிவக்ஸ், பாயிஸ்டர்சை வென்று டூர்ஸ் நோக்கி முன்னேறினார்கள். டூர்ஸில் இஸ்லாமிய இராணுவம் சார்லஸ் மார்டெல் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
                              போர் நடந்தது பாயிஸ்டியர்சிலா அல்லது டூர்ஸிலா என்பது சரியாகத் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இரண்டு இடத்தையுமே குறிப்பிடுகிறார்கள். சார்லஸ் மார்டெல்லின் வெற்றி இஸ்லாமியப் படைகளின் முன்னேற்றத்தை மேற்கில் முற்றிலுமாகத் தடுத்து விடுகிறது. இது குறிப்பிடும் படியான திருப்புமுனையாக அமைந்தது. 741 ல் ஸ்பெயினிலிருந்து இதே போன்று பெர்பெர் கூலிப்படைகள் காவுலில் தோற்கடிக்கப்பட்டன. இஸ்லாமிய படைகளை ஐரோப்பாவிலிருந்து திருப்பி விரட்டியதால் சார்லஸ் மார்டெல்லுக்கு ஐரோப்பிய கிறிஸ்தவ சரித்திரத்தில் தனி இடம் கிடைத்தது. அவன் தங்கள் பூர்வீக மெரொவின்ஜியன் சக்தி தனக் கிருப்பதாக கற்பனை செய்து வைத்திருந்தான். அதேபோல் தான் அவன் மகன் மூன்றாம் பெபின். இவன் 743 ல் சைல்டெரிக் என்னும் ஒரு பொம்மை மன்னனை ஆட்சியில் வைத்திருந்தான். பின் என்ன நினைத்தானோ போப் ஆண்டவரின் ஒப்புதலைப் பெற்று 751 ல் அந்த மன்னனை நாட்டை விட்டே துறத்தினான். ஃப்ராங்க்ஸ்கள் ராஜ்ஜியத்தில் எது செய்தாலும் போப்பின் தேவஆசி பெற்றே செய்தார்கள். மூன்றாம் பெபின் 768 ல் இறந்தான்.
                           எட்டாம் நூற்றாண்டில் சார்லஸ் மார்டெல்லின் பேரனும் மூன்றாம் பெபினின் மகனுமான சார்ல்மாக்னி மன்னனாக பதவியேற்றான். ஆரம்பத்தில் வெறும் சார்லஸ் ஆக இருந்த இவன் பெயர் லத்தீன் மொழியின் வரிசையில் “சார்ல்மாக்னி” (CHARLEMAGNE- சார்லஸ் தி கிரேட்) என்று அழைக்கப்பட்டது. இவனின்  ஃப்ராங்க்ஸ் பேரரசு மட்டுமே பிரான்சையும், ஜெர்மனியையும் இணைத்து (சில ஆண்டுகள் மட்டும் நெப்போலியன் ஆண்டான்) ஒன்றாக ஆட்சி செய்தது. தந்தையின் பாரம்பரிய தேசமான மேற்குப்பகுதி, தென் மேற்கு பிரான்சிலிருந்து கடற்கரைப் பகுதியை ஒட்டி நெதர்லாந்தும், வட ஜெர்மனி பகுதியும் சார்ல்மாக்னிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, சார்ல்மாக்னியின் சகோதரன் கார்லோமான் இறந்த பிறகு, அவனின் பூர்வீக தேசமான மத்திய பிரான்ஸ் மற்றும் தென்மேற்கு ஜெர்மனியும் இவன் வசமே வந்தது. இவன் 814 ல் இறக்கும் போது மீதி இருந்த ஜெர்மனி பகுதியும், வட இத்தாலியும் இவன் ஆட்சியின் கீழேயே இருந்தது. சார்ல்மாக்னி பதவிக்கு வந்த முதல் ஆண்டு போப்பின் ஆசி பெற்று வட இத்தாலி மீது படையெடுத்தான். இவன் குழந்தையாய் இருந்த போதிலிருந்து இவன் குடும்பம் ரோமின் போப்பிடம் பலமான உறவை வைத்திருந்தது. செயிண்ட் டெனிஸில் 754 ல் போப் இரண்டாம் ஸ்டீபனிடம் பன்னிரண்டாவது வயதில் தந்தை, சகோதரர்கள் உடனிருக்க சார்ல்மாக்னிக்கு  எண்ணெய் ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லம்பார்ட்களை எதிர்த்து இத்தாலியின் மீது இருமுறை படையெடுத்தார். 772 ல் வேறொரு போப் முதலாம் அட்ரியன் என்பவர் மீண்டும் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்ய கேட்டுக்கொண்டார். அதன்படியே செய்து தந்தையைப் போலவே இத்தாலி மீது 773 மற்றும் 774 ல் படையெடுத்தார். இது ஆட்சியின் பரப்பளவை பெரிய அளவில் அதிகரிக்கவும், “கிங் ஆஃப் தி லம்பார்ட்ஸ்” என்ற பட்டம் கிடைக்கவும் வழி செய்தது.
                                     சார்ல்மாக்னி தன் பகுதியை ஆல்ப்ஸ் மலையின் வடக்கே இருந்து கிழக்குபக்கமாக பவேரியாவையும் சேர்த்து விரிவுபடுத்தினான். ஆனால் ஜெர்மனி சாக்ஸன்களுக்கு எதிராக மாறியது. சாக்ஸன்களும், ஜெர்மனி பழங்குடியினரும் ஃப்ராங்கிஷ் பகுதிகளுக்காக அடிக்கடி தங்கள் காடுகளிலிருந்து வந்து சண்டையிட்டனர். சார்ல்மாக்னி சாக்ஸன்களை அழித்து, அவர்களின் சிலை வழிபாட்டுப் பழக்கத்தை மாற்றினான். 772 ல் சார்ல்மாக்னி கொடுமையான முறையில் அவர்கள் மீது படையெடுத்து, உலகை தாங்கிக் கொண்டிருப்பதாக அவர்களால் நம்பப்பட்டு வந்த “இர்மின்சுல்” (IRMINSUL)  என்ற மிகப்பெரிய மரத்தூணை உடைத்து எறிந்து புனிதக் கோயிலைத் தரைமட்டமாக்கினான். சார்ல்மாக்னிக்கு அவர்களை வெல்ல 30 ஆண்டுகளாயின. 804 க்குப் பிறகு, முடிவாக அவர்கள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி இவனின் பேரரசில் குடியேறினர். இது ஒரு கொடூரமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இராணுவ நடவடிக்கை மூலம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். அவனின் சட்டப்புத்தகத்தில் கிறிஸ்தவமதம் மாற மறுத்தால் மரணதண்டனை என்று குறிப்பிட்டிருந்தான். நம்பத்தகுந்த தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் ஒரே நாளில் மதம்மாற மறுத்த 4500 சாக்ஸன்களைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திங்கள், 20 ஏப்ரல், 2015

வைக்கிங்குகள் வரலாறு

                                     ‘வைக்கிங்குகள்’ இது ஏதோ புதியதாக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். ஐரோப்பாவில் தரம் தாழ்ந்திருந்த மனித வாழ்வை சீர்படுத்திட இஸ்லாமிய மன்னர்களால் படையெடுப்பின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அழகிய மதமாக அறிமுகமான இஸ்லாமையும், இஸ்லாமிய ஆட்சியையும் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேலாக கருவறுக்க நினைப்பவர்கள். இவர்கள் தான் 11 க்கும் அதிகமான சிலுவைப்போர்களில் முஸ்லீம்களின் இரத்தத்தில் குளித்தவர்கள், இன்றும் அமெரிக்கா, இஸ்ரேலுடன் கை கோர்த்துக் கொண்டு முஸ்லீம்களை தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் என்று கொல்பவர்கள். கடற்கொள்ளையையும், கொலைகளையும், முறையற்ற காமக்களியாட்டங்களை காதலுடன் செய்த ஒரு காட்டுமிராண்டி கூட்டம். இதை நாம் சொல்லவில்லை. மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களே எழுதியது. அதனாலேயே இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது
                  793 ல் இங்கிலாந்தின் வடகிழக்கில் துறவிகளின் தீவான லிண்டிஸ்ஃபார்னியில் துறவிகள் தியானத்திலும், இறைவணக்கத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும் சத்தம், அலைகளை மீறிய சத்தம் ஆவேசமாக, வெறித்தனமாக வந்திறங்கியது ஒரு மிருகக்கூட்டம். துறவிகளின் துரதிஷ்டம் அவர்களுக்கு முடிவாகவும், வந்திறங்கியவர்களுக்கு உலக சரித்திரத்தில் சாதிக்க இருப்பதற்கு முதல் நாளாகவும் ஆகியது. வந்திறங்கியவர்களின் சொந்த பூர்வீக இடம் கோத்ஸ் மற்றும் வண்டல்ஸ். ஸ்காண்டிநேவியாவிலிருந்து வந்த அந்தக் கூட்டம் “வைக்கிங்குகள்” ஆவார்கள்.
                                ஸ்காண்டிநேவிய மொழியில் “விகிங்க்ர்”(VIKINGR) என்றால் கடற்கொள்ளையர்கள் என்று அர்த்தம். இந்த வைக்கிங்குகள் பிரிட்டன் கரைகளையும், வடமேற்கு ஃப்ரான்சையும் சரியாக இரு நூற்றாண்டுகளாக தாக்கி இருக்கிறார்கள். இந்த ஸ்காண்டிநேவிய வைக்கிங்குகளில் சிலர்  வட அட்லாண்டிக்கிலும், பிரிட்டிஷ் தீவுகள் சிலவற்றிலும், நார்மண்டி, சிசிலி மற்றும் ரஷ்யாவின் இதயப்பகுதியிலும் குடியேறினர். எல்லா வைக்கிங்குகளும் அதே பூர்வீக இடத்திலிருந்து வந்தவர்கள் என்று மிகச்சரியாகச் சொல்லமுடியாது. ஆனால், வட இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து கரையிலிருந்து அயர்லாந்து வரை நார்வேயிலிருந்து வந்த கூட்டம்தான் தாக்கியது. ஸ்காண்டிநேவிய வைக்கிங்குகள் ஸ்காட்லாந்து தீவுகள்,ஐஸ்லாந்து மற்றும் அயர்லாந்தின் சில பகுதிகளிலும் குடியேறினார்கள்.
                                    டென்மார்க்கிலிருந்தும் வந்த சில வைக்கிங்குகள் சண்டையிட்டு பின் கிழக்கு பிரிட்டன், வடமேற்கு ஃப்ரான்ஸிலும் தங்கினார்கள். ஸ்வீடனிலிருந்து வந்தவர்கள் பால்டிக் வழியே தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் மையப்பகுதியில் வியாபாரிகளாக ஆனார்கள். பிரிட்டனின் கடலோரங்களில் அக்காலத்தில் சிறு சிறு ஆட்சியாளர்கள் சில பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தார்கள். மிகச்செழிப்பாக  இல்லாவிட்டாலும் வளமோடு இருந்தார்கள். இது கொள் ளைக்கார வைக்கிங்குகளை ஈர்த்தது. இதில் மிகவும் புகழ்பெற்ற லோனா என்ற தீவை தொடர்ந்து 795, 802, 805 ஆகிய ஆண்டுகளில் மூன்றுமுறை கொள்ளை அடித்தார்கள். பிரிட்டிஷ் தீவுகள் உள்ளுக்குள்ளேயே ஆறுகள் ஓடும்படியான பாதுகாப்போடு இருப்பது போல் தோன்றினாலும், வைக்கிங்குகளின் நீண்ட படகுகள் உள் நுழைந்து தாக்குவதற்கு வசதியாக இருந்தன. வழக்கமான தாக்குதலுக்குப் பிறகு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அங்கேயே தங்கிப்போனார்கள்.
                              வெகு விரைவில் ஸ்காட்லாந்தின் அனைத்து தீவுகளையும் கைப்பற்றினார்கள். பின் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் முக்கிய தரைப்பகுதிகளையும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். இவர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் உத்தி எதிரிகளைப் பயமுறுத்தி நிலைகுலையச் செய்தது. 838 ல் நார்வேனிய வைக்கிங்குகள் டப்ளின் நகரைக் கைப்பற்றி அயர்லாந்தில் நார்ஸ் மன்னராட்சியை அமைத்துக்கொண்டார்கள். டென்மார்க் வைக்கிங்குகள் முப்பது ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து கொள்ளை அடித்தும், போரிட்டும் 838 ல் கிழக்கு இங்கிலாந்தில் குடியேறினார்கள். மேலும், டென்மார்க் வைக்கிங்குகள் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பரப்புகளை சித்திரவதை செய்தும் துன்புறுத்தியும் வாங்கினார்கள். 866 ல் யோர்க், 867 ல் நாட்டிங்காம், 869 ல் தெட் ஃபோர்ட்டையும் வரிசையாகக் கைப்பற்றினார்கள். நார்தும்ப்ரியா, மெர்சியா மற்றும் கிழக்கு அங்கிலியா மன்னர்கள் வைக்கிங்குகளிடம் பயந்து ஒப்பந்தம் செய்ய சமாதானம் பேசினார்கள். 870 ல் டென்மார்க் வைக்கிங்குகள் வெஸ்ஸெக்ஸை நோக்கி முன்னேறினார்கள். படிக்கும் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் இறுதியில் எங்கே மோதவந்தார்கள் என்று ஆம் அதுதான் இங்கிலாந்து. கடுமையான ஒன்பது போர்களுக்குப் பிறகு 871 ல் ஆஷ்டவுனில் நடந்த போரில் வைக்கிங்குகளின் மன்னனும், ஒன்பது பிரபுக்களும் போர்களத்திலேயே கொல்லப்பட்டு வெல்லவே முடியாதவர்களாக இருந்த வைக்கிங்குகளை ஆங்கிலேயர்கள் முதல்முறையாக வென்றார்கள். இது வெஸ்ஸெக்ஸ் மட்டுமல்லாமல் எந்த ஆங்கில மன்னர்களையும் அவ்வளவு சுலபமாக வெல்ல முடியாது என்பதை உணர்த்தியது. டேனிஷ்கள் (வைக்கிங்குகள்/டென்மார்க்) அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு குளிர்காலத்தில் லண்டனை விட்டு வெளியேறினார்கள். ஆஷ் டவுன் வெற்றி ஆங்கிலேயர்கள் சரித்திரத்தில் புதியமுகமாக வெஸ்ஸெக்ஸ் மன்னனின் சகோதரன் ஆல்ஃப்ரடை அறிமுகப்படுத்தியது. இராணுவ வீரர்கள் இவனை வெஸ்ஸெக்ஸ் வீதியில் ஊர்வலமாக தூக்கி வந்தனர்.
                                இங்கிலாந்தில் மறுக்கப்பட்ட மிகவும் பாரம்பரியமான கதை இந்த ஆல்ஃபிரட் இடமிருந்து தான் ஆரம்பித்தது. அவனின் வீரத்திற்கு தகுதியானதாக அந்த வெற்றி அமைந்தது. ஆல்ஃபிரட் தான் முதல் ஆங்கிலோ-சாக்ஸன் ஆட்சியாளன். இவனை இங்கிலாந்தின் தேசிய தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அந்த பகுதிகளில் டேனிஷ்களை தடுக்க இவனேயே தகுதியானவனாக ஆங்கிலேயர்கள் கருதினார்கள். இவன் தான் முதல்முறையாக ‘தி கிரேட்’ என்னும் தகுதியை இங்கிலாந்தில் பெற்றான். மன்னனுக்குண்டான தகுதிகளை கற்றான். முப்பது ஆண்டு சிக்கல்களுக்குப் பிறகு, டேனிஷ்களை வென்று இந்த தகுதிகளை அவன் அடைந்தான். வெற்றிபெற்ற அதே 871 ம் ஆண்டு மூத்த சகோதரன் இறந்துவிட ஆல்ஃபிரட் வெஸ்ஸெக்ஸின் மன்னனாகப் பதவி ஏற்றான். முதல் காரியமாக ஆங்கிலேய கப்பல்படையை நிறுவினான். டேனிஷ்கள் தங்களை பலப்படுத்திக்கொண்டு சுழலும் நீண்ட வைக்கிங்க் கப்பல்களுடன் வந்தார்கள். ஆங்கிலோ-சாக்ஸன் தீவு இனமக்கள் பயத்திற்கு பதில் எதிர்க்க ஆரம்பித்தார்கள். 875 ல் ஆல்ஃபிரட் தன் கப்பல்படை மூலம் தானும் ஒரு கப்பலில் சென்று, முற்றுகை இட்ட ஏழு டேனிஷ் படகுகளில் ஒன்றை சிறைப்பிடித்தான். இந்த வெற்றி மேலும் அவன் புகழ்பெற உதவியது.
                                      தரையிலும் சில வெற்றிகள் பெற்றான். டேனிஷ்களை வெஸ்ஸெக்ஸை விட்டு விரட்டினான். எப்போது சமாதான உடன்படிக்கை ஏற்பட்டாலும், அதை ஒவ்வொரு முறையும் டேனிஷ்கள் மீறினார்கள். 878 ல் திடீரென்று டேனிஷ்கள் தாக்குதல் நடத்த, ஆல்ஃப்ரட் மேற்கு நோக்கி சோமர்செட் சதுப்பு நில பரப்புகள் உள்ள பகுதிக்கு தள்ளப்பட்டான். ஏதெல்னிய் என்ற கோட்டையில் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து டேனிஷ்களை எதிர்த்தான். ஆனால் மட்டரகமான முறையில் தோல்வியடைந்தான். இதன் மூலம் டேனிஷ்கள் வெஸ்ஸெக்ஸைக் கைப்பற்றி மொத்த இங்கிலாந்தையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுத்த சில மாதங்களில் சற்று பலத்துடன் மீண்டும் கிழக்கில் வில்ட் ஷயர் பகுதியில் எடிங்க்டன் என்ற இடத்தில் டேனிஷ்களை வென்றான். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த தாக்குதலில் ஈஸ்ட் ஏன்ஜிலியா என்ற இடத்தையும் ஆல்ஃப்ரட் கைப்பற்றினான். டேனிஷ் மன்னன் குத்ரும் அவன் கூடாரத்தில் சுற்றி வளைக்கப்பட்டான். தான் வெஸ்ஸெக்ஸை விட்டு விலகுவதாக மீண்டும் வழக்கம் போல் உறுதியளித்தான். மேலும் தான் கிறிஸ்துவ மதததைத் தழுவுவதாகவும் வாக்களித்தான். குத்ருமின் மதம் மாறும் விழா பார்ரேட் ஆற்றின்கரையில் ஆல்ஃப்ரடின் தலைமையில் 878 ல் நடந்தது. இரு கிறிஸ்தவ மன்னர்களும் வெட் மோர் என்ற இடத்தில் பனிரெண்டு நாட்கள் விருந்தும், கொண்டாட்டமுமாகக் கழித்தனர். இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தம் டேனிஷ்களை வெஸ்ஸெக்ஸை விட்டு  விலக்கியது.
                                885 ல் டேனிஷ் வைக்கிங்குகள் கெண்ட் பகுதியில் நுழைந்தனர். இது ஆல்ஃப்ரடுக்கு கிழக்கில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு 886 ல் டேனிஷ்களை விரட்டி லண்டன் நகரைக் கைப்பற்றினான். இந்த வெற்றிக்குப் பிறகு, மீண்டும் குத்ருமுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் ஆங்கிலோ-சாக்ஸன்களும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் டேனிஷ்களும் இருப்பதாக முடிவானது. டேனிஷ்களின் பகுதி டேன்லா என்று அழைக்கப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் நார்வே மன்னர்கள், அயர்லாந்து மன்னர்களுடன் போரிட்டார்கள். பல படையெடுப்புகளின் மூலம் பெரும் துயரத்தை இருவரும் சந்திக்க நேர்ந்தது. பத்தாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் சூழ்நிலை வைக்கிங்குகளுக்கு ஆதரவாக மாறியது. அவர்கள் அயர்லாந்தின் பலமான முக்கிய ஆறுகளைக் கைப்பற்றினார்கள். 914 ல் வாட்டர் ஃபோர்டும், 920 ல் லைம்ரிக் நகரையும் கைப்பற்றினார்கள். கார்க் பகுதி வைக்கிங்குகளால் பலமுறை கைப்பற்றப்பட்டது. வெக்ஸ்ஃபோர்டும் நார்வே வைக்கிங்குகள் வசமானது. அயர்லாந்தின் பெயர்பெற்ற மன்னன் பிரைன் போரு திருப்பி போரிட்டான்.
                              அயர்லாந்து மன்னன் பிரைன் போரு ஷன்னான் என்னும் ஆறு ஓடும் பகுதியில் பிறந்தவன். சிறிய பகுதியை ஆட்சி செய்த ஆட்சியாளர் ஒருவருக்கு மகனாகப்பிறந்த இவன் போரு என்றே அறியப்பட்டான். இவன் குடும்பத்தினர் ஒரு முறை வைக்கிங்குகளை எதிர்த்து வெற்றி பெற்றதால் ஆட்சி கிடைக்கப் பெற்றனர். 964 ல் போருவின் மூத்த சகோதரன் அயர்லாந்தின் மதிப்பும், சக்தியும் வாய்ந்த முன்ஸ்டர் பேரரசை எதிர்த்தான். அவர்களின் பலமான கேஷெல் என்ற பகுதியை வெற்றி கொண்டான். பின்னாளில் முன்ஸ்டர் பேரரசின் மன்னனாகி, தென் அயர்லாந்தில் வைக்கிங்குகளை அடக்கும் படைக்குத் தலைவனாகவும் ஆனான். 976 ல் போரு இரு பதவிகளையும் வெற்றிகரமாக அடைந்தான். போரு வைக்கிங்குகளை ஷன்னானிலிருந்து விரட்டினான். 1002 ல் போரு மொத்த அயர்லாந்துக்கும் மன்னன் ஆனான். 1013 ல் இவனின் போரால் நார்வே வைக்கிங்குகள் இடம் பெயர ஆரம்பித்தார்கள். 1013 ல் டப்ளினின் நார்வே வைக்கிங்க் மன்னன் ஓர்க்னிய்ஸ் என்ற நகரில் வேறொரு உள்ளூர் வைக்கிங்க் ஆட்சியாளருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடத்தில் இருந்தான். அப்போது இருவரும் ஒரு திட்டம் தீட்டினர். ஓர்க்னிய்ஸ் நகரின் ஆட்சியாளர் ஒரு கப்பலையும், இராணுவத்தினரையும் ஈஸ்டருக்கு முன் டப்ளினிக்கு அழைத்துவந்து அயர்லாந்து மன்னன் போருவை வெல்ல நார்வே வைக்கிங்க் மன்னனுக்கு உதவுவதாகத் திட்டம் இருந்தது.
                              குறிக்கப்பட்ட நாளில் ஏப்ரல் 23 1014 ல் டப்ளின் நகரின் கிழக்கிலிருந்து க்ளோண்டர்ஃப் என்ற இடத்தில் நார்வே வைக்கிங்குகளுடன் போரு போர்புரிந்தான். அவருக்கு அப்போது வயது 73 ஆனதால், படைகளுக்கு வெறும் உத்தரவு மட்டும் செய்துகொண்டிருந்தார். அவர் மகன் முர்சட் என்பவன் நேரடியாக களத்திலிருந்து போரிட்டு ஓர்க்னெய்ஸ் ஆட்சியாளனால் கொல்லப்பட்டான். இருந்தாலும் நார்வே வைக்கிங்குகள் தோல்வியுற்றனர். வைக்கிங்குகளின் தலைவன் போர்க்களத்தை விட்டு நழுவி, போருவின் கூடாரத்திற்குள் நுழைந்து அவரைக் கொன்றான். அயர்லாந்தின் க்ளோண்டர்ஃப் வெற்றி நார்வே வைக்கிங்குகளை மீண்டும் அயர்லாந்துக்குள் நுழையவிடாமல் செய்தது. ஆனால் வைக்கிங்குகள் டப்ளிங்கின் கடற்கரைப் பகுதிகளையும், வாட்டர்ஃபோர்டையும் விட்டுவிடவில்லை. மன்னர் போரு மற்றும் அவர் மகன் மரணங்களால் அயர்லாந்தும் சரியான ஆட்சியாளர் இல்லாமல் தடுமாறியது. இந்த தடுமாற்றத்துடனே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சக்திவாய்ந்த “நார்மன்கள்” அயர்லாந்தின் கரைப்பகுதிக்கு வரும் வரை ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
                                          சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கள் நீண்ட கப்பல்களில் ஐரோப்பிய வட கடலோரப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருந்த நார்வே வைக்கிங்குகள் நியோதிக் (ஓர்க்நெய்ஸ் மற்றும் ஷெட்லாந்து பகுதி) பகுதிகளை ஒட்டி உள்ள தீவுகளிலும், தங்களைச் சேர்ந்த சிலர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருக்கும் சிறு இடங்களிலும் தங்கியிருந்து தங்களுக்கான நிரந்தர இடத்தினைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில்பட்டது துறவிகளின் தீவான ஐஸ்லாந்து. துறவிகளை விரட்டி விட்டு ஐஸ்லாந்தைப் பிடித்த வைக்கிங்குகளுக்கு அங்கிருந்து மேலும் மேற்கு நோக்கி பரவ வசதியாக கிரீன்லாந்து அமைந்தது. ஆனால் இவர்களுக்கு முன் எஸ்கிமோக்கள் முந்திவிட்டார்கள்.
                                874 ல் வைக்கிங்குகளின் நீண்ட கப்பல்கள் ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் வந்து நங்கூரமிட்டது. நார்வே வைக்கிங்குகள் தங்கள் தலைவனாக இன்கூல்ஃபுர் அர்னர்சன் என்பவனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அவர்கள் குடும்பத்துடன், கால்நடைகளையும் கொண்டுவந்திருந்தனர். முதல் குழு புதிய இடத்தில் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித்தொழிலையும், ஆடு வளர்த்தலையும் அமைத்துக்கொண்டு வாழத்தொடங்கினார்கள். மற்ற குழுக்களும் பின்னால் வந்து அருகிலுள்ள தீவுகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். அவர்களின் மக்கள் தொகை 75,000 ஆக இருந்தது. இந்த ஐஸ்லாந்திலிருந்து சென்ற நார்வே வைக்கிங்குகள் தான் அமெரிக்க கண்டத்தில் முதல் ஐரோப்பிய குடியேற்ற நாடுகளாக கிரீன்லாந்து மற்றும் வின்லாந்தை ஆக்கிக்கொண்டார்கள்.
                                     ஐரோப்பாவின் வடமேற்கின் எல்லா பகுதிகளையும் கொள்ளையடித்தனர். ஃப்ரான்ஸின் கரையோரங்களிலும் கொள்ளையடித்து நாளடைவில் அந்தந்த இடங்களை குடியேற்ற பிரதேசங்களாக ஆக்கிக்கொண்டனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வட்டப்பகுதியாக சியானின் கீழ் புறத்தில் டேனிஷ்களின் ஒரு பகுதி இருந்தது. பத்தாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் ஸ்காட்லாந்திலும், அயர்லாந்திலும் பல சாதனைகளைப் புரிந்து தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு நார்வே நாட்டினன் அவர்களுடன் வந்து சேர்ந்தான். அவன் பெயர் ஹ்ர்ஊல்ஃப்ர் ஆகும். மேற்கத்திய சரித்திரத்தில் இவன் பெயர் ரோல்லோ தி கேங்கர். குறுகிய காலத்தில் ரோல்லோ சியானி வைக்கிங்குகளின் தலைவனாகி ஃப்ரான்சு நகரமாகிய சார்ட்ரெஸ் மீது போர் தொடுத்தான். ஃப்ராங்கிஷின் மன்னன் மூன்றாம் சார்லஸ் என்பவன் செயிண்ட் க்ளெய்ர் சுர் எப்டி என்ற இடத்தில் தனக்கு சேவையின் அடிப்படையில் உதவும் வகையில் (ஆங்கிலத்தில் FEUDEL SYSTEM) ரோவனைச் சுற்றியுள்ள பகுதிகளை ரோல்லோவுக்கு தருவதாக சமாதானம் செய்துகொள்ள போர் நின்றது.
                   வைக்கிங்கு என்ற வார்த்தைக்கு ஸ்காண்டிநேவியனில் நார்த்மேன் என்ற அர்த்தமாகும். புராதன ஃப்ரென்சுகள் நார்மண்ட் என்று அழைத்தனர். ரோல்லோவும், அவன் வழிவந்தவர்களும் ஒப்பந்தத்தை மீறி வேகமாக தங்கள் பகுதிகளை விரிவுபடுத்தி “நார்மன்”கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் ராஜ்ஜியம் எல்லைகளைத் தாண்டி விரிந்து கொண்டே போனது. ஆரம்பத்தில் கொலையிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வந்த சிறு குழு, இரக்கத்திற்கும், துரோகத்துக்கும் அடையாளமான அந்த கூட்டம் உலக சரித்திரத்தில் “நார்மண்டி” கள் என்ற அழியாத பெயரைப் பெற்றது. இந்த நார்மன்கள் தான் சிலுவைப்போரில் முஸ்லீம்களின் இரத்தத்தில் குளித்தது. இன்றுவரை இங்கிலாந்தில் ராஜவம்சமுமாய், மற்ற ஐரோப்பிய மன்னர்கள் பரம்பரையுமாய் இருப்பவர்கள் இவர்கள் தான். நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், ஆதியிலிருந்து கடற்கொள்ளையையே தொழிலாகக் கொண்டு, அதன் மூலம் ஐரோப்பாவில் பரவிய இவர்கள், இன்று கூட்டுப்படை அமைத்து ஆப்பிரிக்க கடற்கொள்ளையை அடக்குகிறார்களாம். இந்த ரோல்லோவின் ஆண் சந்ததி இரு நூற்றாண்டுகளாக முதலாம் ஹென்றி என்பவன் 1135 ல் இறக்கும் வரை ஆண்டது. இதற்கிடையில் ரோல்லோ கிறிஸ்தவனாக மதம் மாறி இருந்தான். அவன் மகன் முதலாம் வில்லியம் பிறப்பால் கிறிஸ்தவனான முதல் நார்மன் மன்னன் ஆவான்.
                                    வைக்கிங்குகளுக்கு மிகவும் பிடித்தமானது கொள்ளை அடிப்பது. இந்த கொள்ளை இவர்களை கடல்வழியே ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ரஷ்யா கொண்டு சேர்த்தது. அங்கு வியாபாரம் செய்ய துவங்கினார்கள். இயற்கையாகவே கிழக்கு ஐரோப்பாவின் ஆறுகள் வடக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் அமைப்பைக் கொண்டிருந்தது. இது பால்டிக் கடலுக்கும், கருங்கடலுக்கும் நடுவே வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. வினா, நெய்பெர் மற்றும் வோல்கா ஆறுகள் மிக அருகாமையில் இருந்தன. அவற்றின் அருகே இல்மென் என்ற ஏரி தான் பிரதானமான வியாபாரத்தலமாக இருந்தது. பால்டிக், கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடல் வந்து சேரும் கப்பல்களிலிருந்து, சிறிய படகுகளுக்கு மாற்றி வியாபாரப் பொருள்களை இங்கு கொண்டுவருவார்கள். ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இந்த பகுதி வியாபார வைக்கிங்குகள் நோவ்கோராட் என்ற இடத்தில் மையம் கொண்டு “ரஸ்” என்று அழைக்கப்பட்டனர். இந்த ரஸ்களின் பெயரில் தான் பின்னால் ரஷ்யா என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நெய்பெர் ஆற்றின் கீழ்ப்புறத்தில் தான் வியாபாரம் பரவலானது, இதுவே ரஷ்யா என்ற தேசம் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.
                                   882 ல் ஓலெக் என்ற ஒரு வைக்கிங்க் தலைவன் தன் வியாபாரத் தலைமையகத்தை நெய்பெர் ஆற்றின் கீழ் பகுதியில் மாற்றினான் பின் அருகிலிருந்த கீவ் என்ற நகரத்தைக் கைப்பற்றினான். 911 ல் இங்கு பைஸாந்திய பேரரசுடன் ஒரு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ரஷ்ய கீவ் நகரம் இரண்டு தலைமுறைக்குப் பின் தென்பகுதி மக்கள் பெருக்கமுள்ள பைஸாந்தியம், மத்தியில் பசுமையான ரஷ்ய பூமி, வடக்கில் இருண்ட காடுகள் என்ற அமைப்பில் இருந்தது. இங்கு கிரேக்கத்திலிருந்து தங்கம், துணிகள், மதுவகைகள் மற்றும் பழங்களும், செக்கோஸ்லாவேக்கியாவிலிருந்து வெள்ளி மற்றும் குதிரைகளும், மெல்லிய உரோமங்கள், மெழுகு, தேன் மற்றும் அடிமைகள் ரஷ்யாவிலிருந்தும் விற்பனைக்கு வந்தன. பத்தாம் நூற்றாண்டு வரை கீவ் நகரம் வைக்கிங்குகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 980 ல் வ்லாடிமிர் எதிரிகளிடமிருந்த கீவ் நகரத்தை வெற்றி கொண்டு மொத்த ரஷ்யாவின் இளவரசராக ஆனார். வைக்கிங்குகள் என்ன நினைத்தார்களோ அவர்களும் தங்களை ரஷ்யர்களாகவே மாற்றிக்கொண்டார்கள்.
                        வ்ளாடிமிரின் ஆரம்பகாலம் காட்டுமிராண்டிகளைப் போல் இருந்தது. எந்நேரமும் சண்டையும், பெண்வேட்கையுமாக இருந்தது. சரித்திர ஆதாரமாக சுமார் 800 பெண்களுடன் காம தொடர்பு வைத்திருந்தாராம். 988 ல் இவர் ரஷ்யாவுக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தார். தானும் துறவிபோல் மாறி, தூதுவர்களை நான்கு திசைகளிலும் அனுப்பி எது நல்ல மதம் என்று அறிந்து வரச்செய்தார். அறிந்து வந்தவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் கிரேக்க ஆர்தொடக்ஸை ரஷ்யாவுக்கான ஆட்சி மதமாகத் தேர்ந்தெடுத்தார். பழைய அரசர்கள், அவர்களின் வயதான இளவரசர்கள் என்று ரஷ்யா மிகவும் பழமை தோய்ந்திருந்தது. இடையில் வந்த ஸ்காண்டிநேவியா சாதனை (நாம் முன்பு பார்த்த) இளவரசனால் இடைவிடாமல் 600 ஆண்டுகள் ஆண்வாரிசுடன் ஆட்சி தொடர்ந்தது. ரஷ்யாவின் ராஜவம்சம் வைக்கிங்குகளுடன் நெருங்கிய தொடர்புடையது. நார்மன்களின் இங்கிலாந்து படையெடுப்பின் மூலமாகவோ அல்லது ஐஸ்லாந்து, கிரீன்லாந்து குடியேற்றத்தினாலோ இணைந்திருக்கலாம்.
                                           உயர்ந்த நிலப்பரப்பைக் கொண்ட ஐஸ்லாந்துக்கும், சிகரமுள்ள கிரீன்லாந்துக்கும் நடுவில் 175 மைல் மறைப்பில்லாத நீர் இருந்ததால் சில நேரங்களில் பார்க்கமுடியும். இது 981 ல் வைக்கிங்க் சாதனையாளன் எரிக் தோர்வல்ட் சன்னை (எரிக் தி ரெட்) கவர்ந்தது. இவன் ஒரு மனிதனை வெட்டிக் கொன்றதற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தான். எரிக் நீண்ட கப்பலில் தன் குடும்பத்தினர், அவர்களின் வேலைக்காரர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை ஏற்றிகொண்டு தூரத்தில் தெரிந்த அந்த சிகரத்தை நோக்கி பயணித்தான். அந்த தீவின் தென் பகுதியில் தற்போதைய ஜூலியன்ஹாப் பகுதியை அடைந்தான். அவர்கள் அங்கு மூன்று ஆண்டுகள் தங்க வேண்டிய கட்டாயமேற்பட்டது. பின் ஐஸ்லாந்து திரும்பி மேலும் குடியேற்றவாசிகளை தன்னுடன் அழைத்துக் கொண்டான். துல்லியமாக சிந்தித்து மக்களுடன் தொடர்பு ஏற்பட வேண்டும் என்று அந்த இடத்திற்கு கிரீன்லாந்து எனப் பெயரிட்டான். பின் மீண்டும் ஐஸ்லாந்து திரும்பி 25 நீண்ட கப்பல்களில் மக்களை அழைத்துவந்தான். அவர்களில் 12 கப்பல்கள் விருப்பமில்லாமல் பாதி வழியில் திரும்பிவிட 13 கப்பல்களில் 350 பேரும், கால்நடைகளும் வந்து சேர்ந்தன. அவர்கள் அங்கே நானூறு ஆண்டு களாக சிறந்த தட்பவெப்ப சூழ்நிலையில் வாழ்ந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, கிரீன்லாந்து முற்றிலும் மனிதர்களற்று கைவிடப்பட்டது. ஆனால் கிரீன்லாந்தை விட்டுத் தள்ளி வட அமெரிக்காவில் ஒரு குடியேற்ற பூமி நிறுவப் பட்டது.
                                    பதிமூன்றாம் நூற்றாண்டின் ஐஸ்லாந்து வாசிகளின்  சாதனைச் சரித்திரம் லீஃப் எரிக்சனைப் பற்றி பலவிதமாகக் குறிப்பிடுகிறது. எரிக்கின் மகன் லீஃப் என்பவன் வழக்கமாக குளிர் காலங்களைக் கழிக்க கிரீன் லாந்தின் மேற்குப் பகுதிக்குச் செல்வான். அப்படி வழக்கமாகச் சென்ற பகுதிக்கு வின்லாந்து என்று பெயரிட்டான். வின் என்ற சொல்லுக்கு வைன் என்னும் மதுவோ அல்லது சம அளவிலான பச்சைப்புல் நிரம்பிய பூமியோ காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இன்னொன்றில் ஒருமுறை லீஃப் நார்வேயி லிருந்து வரும் போது கடலில் வழி தவறிப் போனான். அவன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஜார்னிஹெர் ஜோல்ஃப்சன் சொன்ன பாதையில் சென்று விட்டதாகக் கூறுகிறது. அதன்படி 1000 ல் லீஃப் எரிக்சன் வட அமெரிக்காவில் மூன்று தீவுகளை இனம்கண்டு ஹெல்லுலாந்து, மார்க்லாந்து, வின்லாந்து என பெயரிட்டான். மற்றவர்களைப் பற்றி சரியான தகவல் இல்லை. அவர்கள் பஃப்ஃபின் தீவு, லேப்ரடார் அல்லது நியூஃபவுண்ட்லாந்து ஏதேனும் ஒன்றில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு என கருதப்படுகிறது. லீஃப் மீண்டும் தென்பகுதி நோக்கி பயணமானான்.
                           அடுத்த ஆண்டு லீஃப் கிரீன்லாந்து திரும்பினான். கொஞ்ச வருடங்கள் கழித்து போர் ஒன்று நடந்ததென்றும், அப்போது தோர்ஃபின் கர்ல்செஃப்னி என்பவனால் புதிய குடியேற்றம் நடந்ததென்றும், அவர்கள் வெறும் மூன்றாண்டு காலம்தான் அங்கு வாழ்ந்தார்கள் என்றும், சேவேஜெஸ் (SAVAGES) என்ற சொந்த அமெரிக்கர்கள் அவர்களை விரட்டி விட்டனர் என்றும் சாதனைப் புத்தகத்தில் உள்ளது. வடஅமெரிக்காவில் லான்ஸ் ஆக்ஸ் மேடோவ்ஸ் என்ற இடத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி, நியூஃபௌண்ட்லேண்டில் நீண்ட வீடுகள், மாபெரும் வராண்டா அமைப்புகள் வைக்கிங்குகள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரத்தைத் தெரியப்படுத்துகின்றன. ஆனால், வின்லாந்தின் வரைபடம் போலி என்பதை நிரூபிக்கிறது. நார்மன்களுக்கு பரவுவதற்கு ஃப்ரான்சின் ஃப்ராங்கிஷ் பேரரசு மிகவும் வலிமையாக இருந்தது. ஆனால், வைக்கிங்குகளுக்கு இயற்கையிலேயே உண்டான சாதிக்கும் ஆர்வம் அவர்களை விவசாயிகளாக அங்கே குடியேறச் செய்தது. சக்திவாய்ந்த கடல்கொள்ளையர்களாக இருந்த அவர்கள், ஃப்ராங்க்ஸ்களிடமிருந்து கற்ற மிகச்சிறந்த சக்திகொண்ட குதிரைப்படையை அமைத்துக்கொண்டு எதிர்த்தார்கள். பெயர்பெற்ற குடும்பத்திலிருந்து ஆர்வமுள்ள ஒரு இளைஞனை போர்பயிற்சி கொடுத்து இராணுவக் கூலியாக வைத்து கொண்டார்கள்.
                                1017 ல் நார்மன்கள் வட இத்தாலிக்கு வந்து போப்பின் எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டனர். மெடிட்டரேனியனில் ரோமன் கத்தோலிக்கத்தைச் தழுவியிருந்த நார்மன்களுக்கு இரண்டு விதமான எதிரிகள் இருந்தனர். ஒன்று இத்தாலியின் தென்பகுதியில் இருந்த பைஸாந்திய பிரதிநிதிகள் கிரேக்க வைதீக (GREEK ORTHODOX) கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவர்கள். சிசிலியில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முஸ்லீம்கள். 1059 லிருந்து போப் இரு பிரதேசத்திலும் நார்மன்கள் ஆள்வதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளில் நார்மன்களுக்கு ஆசையைத் தூண்டிய வாய்ப்பு அருகிலேயே கிடைத்தது. 1066 ல் ‘நார்மன் போர்’ என்ற ஒன்றை இங்கிலாந்தின் மீது திணித்தார்கள். இந்த 66 வது வருடம் உலக வரலாற்றில் ஐரோப்பாவைத் திருப்பிப் போட்டது. நீங்கள் இப்போதும் டட்டூஸ் என்னும் சனியனை உடலில் வரைவதிலும், ஆங்கில சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் இந்த 66 வது வருடத்தை சகுனித்தனமாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். டி-ஷர்டுகள், வாகனங்கள், ரெஸ்டாரண்டுகள், வாசனைப் பொருட்கள்(ரூட்66) என்று விடாமல் இன்றும் நினைவு படுத்துவார்கள். தங்களின் பூர்வீக ஸ்காண்டிநேவிய சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டி போரிட்டார்கள்.                      

புதன், 15 ஏப்ரல், 2015

மருத்துவத்தின் வரலாறு

                                   இந்த கட்டுரை இறுதியில் எழுதப்பட்டுள்ள ஆதாரமான புத்தகங்களின் வாயிலாகவே எழுதப்படுகிறது. எதுவும் கூட்டப்படவில்லை, குறைக்கப்படவில்லை. சில முஸ்லீம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் புத்தகங்கள் கூட பயன்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் லூயிஸ்வில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் பி. சையத் பி.எச்.டி என்பவரின் ஆதார பூர்வமான திரட்டலின் பகுதியாகும். இந்த அளப்பறிய வரலாற்றுப் பணிக்காக அவருக்கு எனது சலாமையும், நன்றிகளையும் உங்களின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
                                  நபி (ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பிறகு, இஸ்லாமியர்கள் வெறும் நிலப்பரப்புகளை மட்டும் வெல்லவில்லை. விஞ்சானத் துறையில் ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளை கண்டுபிடித்து உலக சமுதாயத்திற்கு மாபெரும் சேவையை செய்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் மருத்துவஞானம் மேற்குலகை வியப்படைய வைத்தது. பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும் சகதியுமாக இருக்க ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளில் மருத்துவ மனைகள், மருத்துவர்கள், ஆராய்ச்சிகள் என்று பிரபலமாக இருந்தது. குறிப்பாக பாக்தாதின் பொது மருத்துவமனை நவீனமயமாக இருந்தது. நோயாளிகளின் அறையைச் சுற்றி நீரூற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன. மனநோயாளிகள் அக்கரையுடன் சிகிச்சை பெற்றும், வலி நோயாளிகள் இரவுகளில் கதையுடன் கூடிய மெல்லிய இசை முழங்கப்பட்டு கவனிக்கப்பட்டனர்.
                                   இளவரசர்களும், ஆண்டிகளும் சமமான சிகிச்சை பெற்றனர். தங்கள் உடலை யாரோ மூன்றாவது மனிதனிடத்திலே காட்டுவதா? என்று தயக்கத்தில் இருந்தவர்களையும், மருத்துவத்துறையை பிரபல்யமாக்கவும் சிகிச்சை முடிந்து செல்பவர்களுக்கு ஐந்து தங்க துண்டுகள் வழங்கப்பட்டன. பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும்சகதியுமாக இருக்க பாக்தாத், கெய்ரோ நகரங்களில் ஆண், பெண்களுக்கென தனித்தனியாக மருத்துவமனைகள் இருந்தன. மருத்துவமனைகள் மருந்தகம், நூலகம் இணைந்திருந்தன. உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவும் இருந்தது. புறநகர் பகுதிகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நடமாடும் மருத்துவமனைகள் கூட இருந்தன. மருந்தகங்கள் பதிவு செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
                                   நபி (ஸல்) கள் நாயகம் அவர்களை மைக்கேல் ஹார்ட் என்னும் யூத ஆசிரியர் (THE MOST INFLUENTIAL PERSONS IN HISTORY) உலகம் போற்றும் முதல் நூறு நபர்களில் முதல் நபராக தேர்வு செய்திருக்கிறார். உலகின் கடுமையான மக்களான அரபுக்களை பழுவாங்குதல், உள்நாட்டுக் குழப்பம், போர் போன்ற பல பிண்ணனியில் இருந்து நாயகம் அவர்கள் வென்றார்கள். அப்போது இருபுறமும் பெர்ஷியா, பைஸாந்தியர்கள் என்ற இரு பிரமாண்டமான சாம்ராஜ்ஜியம் இருந்தது. இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் அட்லாண்டிக் கடலிலிருந்து மேற்கிலும், சீனாவின் எல்லை வரை கிழக்கிலும் பரவிக்கொண்டிருந்தது. நபி(ஸல்)கள் நாயகம் இறப்பிற்கு 80 ஆண்டுகளுக்குப் பின் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் நுழைந்து 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். தாங்கள் வென்ற இடத்தில் எல்லாம் உலகின் மிகச்சிறந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை விதைத்தார்கள்.
                                          இஸ்லாமிய பேரரசு வீழ்ச்சியுறத் துவங்கியதும் கலாச்சாரத்தை சார்ந்த ஈடற்ற மருத்துவமும் எதிரிகளால் அழிக்கப்பட்டன. 1258 ல் மங்கோலியர்கள் பாக்தாதை தீயிட்டு அழித்தனர். அது சரித்திரத்தில் இன்றுவரை ஈடு செய்யமுடியாத இழப்பு. ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பல ஆராய்ச்சிக் குறிப்புகள், வரலாற்றுபதிவுகள் தீக்கிரையாகின. அதன்பிறகு, இஸ்லாமின் மீதுள்ள வெறுப்பால் ஸ்பானியார்டுகள் ஸ்பெயினில் மிகப்பெரிய அறிவுக் களஞ்சியங்களை அழித்தனர். இஸ்லாமிய பேரரசு 1000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தையும், அதிகப்படியான மக்களையும் ஆட்சி செய்த ஒரே பேரரசு. இந்த ஒன்றே மற்ற மதங்கள் இஸ்லாமின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குர் ஆனும், அதன் ஆராய்ச்சிகளும் இஸ்லாமியர்களுக்கு அளப்பறிய அறிவாற்றலை தந்தது. அதற்கு குர்ஆனே சாட்சியாகவும் இருக்கிறது. தானே மனிதனுக்கு அறிவூட்டுவதற்கு இறைவன் உத்திரவாதம் அளிக்கிறான்.
                              ஏன் எடுத்த எடுப்பிலேயே முஹம்மது நபிகளை அனுப்பி இருக்கலாமே என்று கேள்வி எழலாம். படைத்தவனுக்கு தான் தெரியும். தான் படைத்த மனிதன் அறிவில் சிறந்து முழுமை பெற எத்தனை ஆண்டுகள் ஆகுமென்று. ஒரு மோட்டார் வாகனம் செய்ய வேண்டுமானால் இயந்திரம் சீர் செய்ய, வடிவமைக்க, வர்ணம் பூச என்று எத்தனை காலம் பிடிக்கிறது. ஒருமோட்டார் வாகனம் தானே இன்னொரு மோட்டார் வாகனம் செய்து கொள்ள முடியாது. மனிதன் அப்படியல்ல தனக்கான உணவு, இருப்பிடம், தன் சந்ததி, தன் தேவைகள் என்று தானே செய்து கொள்ள வேண்டிய ஆற்றல் உள்ளவன். படைத்தவனுக்கு தான் தெரியும், தன் படைப்பின் சக்தி பற்றி. அவன் கோபம், கொலை, நன்றி, மகிழ்ச்சி, வெறுப்பு, போட்டி, பொறாமை என்று பலவற்றை அறிந்து, அதன் நல்லது கெட்டது தெரிந்து கொள்ள அவர்களிலிருந்தே ஒரு நபியையோ, ஒரு நல்லடியாரையோ அவ்வப்போது சில நூற்றாண்டுகள் இடைவெளியிட்டு அனுப்பி முழுமை பெற்ற பின் இறுதியாக ஈடுஇணையற்ற நம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான். எந்த கண்டுபிடிப்பானாலும் அதன் பூர்வீகம் ஆராய்ந்தால், முட்டுச்சந்து போல் இஸ்லாமியர்களிடம் தான் முடியும். ஆம். அல்லாஹுத்தாலா மறையில் இன்றோடு நான் இஸ்லாத்தை முழுமை ஆக்கிவிட்டேன் என்று எப்போது சொன்னானோ, அறிவை அள்ளி வழங்கிவிட்டான். இன்று குறிப்பாக மருத்துவத்தில் எந்த ஒரு கண்டுபிடிப்பும் மேற்கத்தியர்களாலும், யூதர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது போல் தான் சொல்லப்படுகிறது. அது உண்மையாகவே இருந்தாலும், இதற்கு ஆரம்ப அடி பிடித்துக் கொடுத்தவர்கள் முஸ்லீம்கள். இது அவர்களுக்கும் தெரியும். உதாரணத்திற்கு பலர் தங்கள் திறமைக்கேற்ப ஆடைகளை வடிவமைத்து பெயர் பெற்றாலும், ஊசியும், நூலையும் ஆரம்பத்தில் கொடுத்தவரை மறக்க முடியாது. அப்படிதான் முஸ்லீம்கள் இந்த மனித இனத்திற்கு மருத்துவத்தைக் கொடுத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்து கற்காத வரை உலகில் யாராலும் மருத்துவம் படிக்க முடியாது. இது மிகைப்படுத்திச் சொல்லப்படுவதல்ல. அப்பழுக்கற்ற உண்மை. யூத, கிறிஸ்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். முஸ்லீம்கள் அறிவுத்தாகம் எடுத்து தேடினார்கள். மங்கோலியர்களாலும், ஸ்பானியார்டுகளாலும் அழிக்கப்பட்டது போக, பத்தாம் நூற்றாண்டில் கிரேக்க மருத்துவ குறிப்புகள் டமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் பாக்தாத் நகரங்களுக்கு கொண்டு வரப்பட்டு அரபு மொழியில் ஆராய்ச்சிக்காக மொழி பெயர்க்கப்பட்டன.
                       அப்போதைய உலகின் மருத்துவத்துறையில் பாக்தாத் தான் தலைமையகமாகத் திகழ்ந்தது. முஸ்லீம்கள் உலக மருத்துவத் துறையில் ஒளியைப் பரப்பினார்கள். மருத்துவத்தைப் பற்றி கேம்ப்பெல் என்பவர், ”ஐரோப்பிய மருத்துவம் அரபுகளின் மூலம் மட்டுமல்ல அதன் கட்டமைப்பின் மீது தான் இருக்கிறது. அரபியர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் ஐரோப்பியர்களுக்கு முன்னோடிகள்” என்று புகழ்ந்துள்ளார். இஸ்லாமிய மருத்துவம் மருத்துவமனை, நுண்ணணு, மருந்து, மயக்கமேற்றுதல், அறுவை சிகிச்சை, மருந்தகம், கண் மருத்துவம், மனநோய் போன்று அனைத்திலும் சிறந்து விளங்கி இருந்தது. மருத்துவமனை நிர்வாகமாகிய உள்நோயாளி, புறநோயாளி, அவர்களுக்கான நோயாளி மற்றும் நோயின் குறிப்புகள் போன்றவைகள் பிரமிக்கத்தக்க வகையில் பாக்தாத் மருத்துவமனையில் பத்தாம் நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
                                    636 ல் பெர்ஷிய நகரமான ஜுண்டி ஷபூர் (தமிழில்- அழகிய பூங்கா) முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவம் பயில பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் கட்டினார்கள். இது அப்போதைய அப்பாஸிட் மன்னர் அலி இப்ன் உல் அப் பாஸ் அவர்களின் உத்தரவுப்படி கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு தொழிலைப்போல மருத்துவம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. 850 க்குப் பிறகு இருந்த ராஸி என்பவர் மாணவர்களுக்கு நோயாளியின் நோய் அறிந்து அதன் கிருமித்தன்மைக்கு ஏற்றவாறு எப்படி மருத்துவம் பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தார். புகழ்பெற்ற மருத்துவர்களாக அப்போதிருந்த அல் ராஸியும், இப்ன் சினா (அவி சென்னா) வும் மருத்துவ மனையின் இயக்குனர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருந்தனர். ஜுண்டி ஷாபூர் மற்றும் பாக்தாத் கல்லூரிகள் அடிப்படை மருத்துவத்தை போதித்தன. மனித தலை மற்றும் எலும்புகள் சம்பந்தமாகக் கற்க பாக்தாதில் தனி கல்லூரி இருந்தது. அப்போது பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும் சகதியுமாக இருந்தன.
                                  அடிப்படை மருத்துவம் பயின்ற மாணவர்கள் மருத்துவமனைகளில் தொழிலாளியாக பணியில் அமர்த்தப்பட்டனர். அங்கு மேலும் அவர்களுக்கு கலந்துரையாடல், விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. தேர்வுகளில் நோயாளிகளின் நடவடிக்கை, வலி உணரப்படும் பகுதிகள், வீக்கங்கள் மற்றும் அளிக்கப்பட்ட மருந்துகள் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்னும் எலும்பு சம்பந்தமான மருத்துவம் பத்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளில் இருக்க, மேற்கத்தியர்கள் புதுமை போல் 1852 ல் தான் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கண் மருத்துவம் சர்வ சாதாரணமாக இருந்தது. இப்ன் சினாவும், ஹாஸி என்பவரும் மனநோய் பற்றி வகுப்பெடுத்தார்கள்.
                                     931 ல் பாக்தாத் மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறால் ஒரு நோயாளி இறந்துவிட, அப்போதைய மன்னர் அல் முக் ததிர் மூத்த மருத்துவர் சினன் இப்ன் தபித் பின் குர்ராஹ் என்பவரை அழைத்து மருத்துவர்களின் தரத்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கச் சொல்லி உத்தரவிட்டார். முதல் மருத்துவ மாணவர்கள் குழு 860 பேர் பாக்தாதில் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது அமெரிக்காவில் ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதை அப்போதே பாக்தாதில் செய்தார்கள். மருத்துவர்களின் தரம் அறிந்து அவர்கள் தொழில் செய்யவும், மருந்தகம் வைக்கவும் உத்தரவு அளித்தனர். ஐரோப்பிய மருத்துவ கல்லூரிகள் இஸ்லாமிய மருத்துவக் கல்லூரியின் நடைமுறைகளையே தொடர்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் கூட சார்பன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இப்ன் சினாவின் கானுன் (கேனன்) என்னும் பாடத்தைப் படிக்காமல் மருத்துவப்பட்டம் பெற முடியாது.
                              ராஸி அவர்களின் மருத்துவத்தின் ஆரம்ப காலத்தையும், நவீனத்தையும் தெரிந்து கொள்ளாமலும், மருத்துவமனையில் துவக்கப்பணியில் அமராமலும் ஒருவரால் சிறந்த மருத்துவராக ஆக முடியாது என்று கூறுகிறார். இஸ்லாமிய ஆட்சியில் மருத்துவம் வசதி, நிறம், வயது, மதம் என்ற எந்தவித வித்தியாசம் காணாமலும் பார்க்கப்பட்டது. மருத்துவமனைகள் ஆண், பெண் இரு வருக்கும் தனிப் பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது. 872 ல் அமைக்கப்பட்ட கெய்ரோவின் துலூம் மருத்துவமனையின் ஹத்தாத் என்பவர், மருத்துவமனையின் நூலகத்தில் 100,000 மருத்துவ புத்தகங்கள் இருந்ததாகக் கூறுகிறார். மேலும், பாக்தாதின் முஸ்தான்சிர்ரிய்யா பல்கலைக்கழகத்தில் 80,000 புத்தகங்களும், கார்டோபாவில் 600.000 புத்தகங்களும், கெய்ரோவில் 2,000,000 புத்தகங்களும், திரிபோலியில் 3,000,000 புத்தகங்களும் இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பதிப்புத்துறையில் நவீனம் இல்லாத அந்தக்காலத்தில் இவ்வளவு புத்தகங்களை கையாண்டது பெரிய சாதனையாகும், தற்போது அமெரிக்கா பாக்தாதைத் தாக்கியபோது கூட முதலில் நூலகங்களில் நுழைந்து பெருவாரியான அறிவுக்களஞ்சியங்களை கொள்ளையடித்ததாக சமீபத்தில் கூட செய்திகளில் அறிந்திருப்பீர்கள். அப்போதே துலூன் மருத்துவமனையில் நோயாளிக்கென பிரத்தியேக ஆடை வழங்கப்பட்டது. டமாஸ்கசில் தொழுநோயாளிகளுக்கென தனியாக மருத்துவமனை இருந்தது. அந்த மருத்துவமனை இருக்கும்போதே ஐரோப்பாவில் அடுத்த ஆறு நூற்றாண்டுகளாக தொழுநோயாளிகளை நோய் பிறருக்கு தொற்றாமல் இருக்க அரசு சட்டமாக தீயிலிட்டு கொளுத்தினார்கள்.
                          துனிஷியாவில் 830 ல் கைரவான் மருத்துவமனை பெரிய சிகிச்சை அறைகளும், காத்திருப்பு அறைகள், பார்வையாளர் அறைகளும் உள்ளடங்கிய வண்ணம் கட்டப்பட்டது. முதல்முதலில் மருத்துவத்துறையில் செவிலிகள் (நர்சுகள்) சூடான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு பயிற்சி கொடுத்து பயன்படுத்தப்பட்டனர். 981 ல் பாக்தாதில் அல் அதுதி மருத்துவமனை அப்போதைய நவீன கருவி களுடன் திறக்கப்பட்டது. அப்பாஸிய மந்திரி அலி இப்ன் இசா அரசு மரு த்துவர் சினன் இப்ன் தாபித்தை சிறந்த நிர்வாகம் அளிக்க வேண்டினார். முதல்முறையாக சிறை கைதிகளுக்கும் மருத்துவ வசதி தரப்பட்டது. இராணுவ வீரர்களைக் கொண்டு அனைத்து வசதிகளும் கொண்ட நடமாடும் மருத்துவமனைகள் நடத்தி வந்தார்கள்.
                                   ஒருமுறை அல் ராஸி பாக்தாத் வருகைதந்த போது அரசால் புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்கக் கேட்டுக்கொண்டார். அவர் முற்றிலும் சுகாதாரமான இடத்தைத் தேர்வுசெய்ய புதிய இறைச்சித் துண்டை நகரின் பல பகுதிகளில் கட்டித்தொங்கவிட்டு அதன் கெடும் தன்மைக்கு  ஏற்றவாறு இடத்தைத் தேர்வு செய்தார்.
                            இப்ன் சினா மற்றும் இப்ன் காதிமா ஆகியோரின் மருத்துவசேவை மனிதகுலத்துக்கு ஈடுஇணையற்ற பங்களிப்பாகும். இப்ன் காதிமா தான் நோயின் தொற்றை முதலில் கண்டுபிடித்தார். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் “கருப்பு மரணம்” என்ற வடிவில் புதிய நோய் பல உயிர்களைத் தாக்கியது. கிறிஸ்தவ உலகம் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கிரானாடாவில் இப்ன் அல் காதிப் அவர்கள். “நோய் தொற்று உள்ளவர்களை மதம் தடுக்கும்போது எப்படி நாம் அனுமதிக்க முடியும் என்று கேட்கிறார்கள்? நோயின் தொற்று ஆராய்ச்சிகளின் மூலமும், அனுபவங்களின் மூலமும், ஆதாரங்களின் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டப்பிறகு, அதற்கு மதத்தின் சாயம் பூசுவது எப்படி சரியாகும். உங்களின் பாத்திரங்கள், நகைகள், உடைகள் மூலமாகவே பரவுகிறது” என்று அறிவுபூர்வமான பதிலளித்தார்.
                                   அல் ராஸிதான் முதல்முறையாக சிற்றம்மைக்கான நோயின் குறிப்பு எழுதினார். இப்ன் சினா மார்பகசளி நோயின் இயற்கைத் தொடர்பை பற்றி எழுதினார். சல்ஃபூரிக் அமிலத்தின் தயாரிப்பையும், தன்மையையும் பற்றியும் எழுதினார். கல்வியறிவு இல்லாத அந்தகாலத்தில் இப்ன் சினாவின் காயத்திற்கு வைன் (மது வகை) மிகச்சிறந்த நிவாரணி என்ற கண்டுபிடிப்பு மிகவும் புகழ் பெற்றது. அல் ராஸியும் ஆல்கஹால் ஒரு சிறந்த நோய்கிருமியின் எதிர்ப்பு என்பதைக் கண்டறிந்து கூறினார். இப்ன் சினா ஓப்பியம் ஒரு அருந்தத்தக்க மறுத்துப்போகச் செய்யும் ஒரு மருந்து என்பதைக் கண்டறிந்தார். மேலும், மிதமாக மறுத்துப்போவதற்கு மன்ட்ரகோரா, கஞ்சா விதை, ஹெம்லாக், ஹிஸ்சயாமுஸ், லெட்டூஸ் விதை, பனி மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவையும் ஏதுவானது என்பதையும் கண்டறிந்து கூறினார். அன்றைய காலங்களில் மறுத்துப்போவதற்கு அரபு நாடுகளில் நார்கோடிக் மற்றும் நறுமணங்களில் ஊறவைத்த பஞ்சுகளைப் பயன் படுத்தினார்கள். அப்போது ஐரோப்பாவில் அறுவை சிகிச்சைகளை செய்யும் போது மறுத்துப் போகச்செய்யாமல் காட்டுமிராண்டித்தனமாக நாவிதர்களை வைத்தும், முறையற்ற முறையிலும் செய்தார்கள்.
                                 அல் ராஸி அவர்கள் தான் முதல்முதலில் மிருகங்களை வைத்து அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்தார். இஸ்லாமிய மருத்துவத்தில் அபு அல் காசிம் கலாஃப் இப்ன் அப்பாஸ் அல் ஸஹ்ராவி (மேற்கத்தியர்களுக்கு அபுல் காசிஸ்) மற்றும் அல் ஸஹ்ரவியஸ் ஆகியோர் மிகவும் பிரபலமான அறுவைசிகிச்சை நிபுணர்களாக இருந்தனர். அல் ஸஹ்ரவியஸ் ஹீமோஃபீலியா சம்பந்தமாக முதலில் அல் தஸ்ரிஃப் என்ற புத்தகத்தை எழுதி மருத்துவ உலகத்துக்கு அர்ப்பணித்தார். அதில் 200 வகையான அறுவை சிகிச்சை ஆயுதங்களை வடிவமைத்திருந்தார். அல் ஸஹ்ராவி உடற்கூறு பற்றி ஆராய்ந்து மட்டுமல்லாமல், பசுவின் எலும்பிலிருந்து மனிதனின் விழுந்து போன பற்களுக்கு மாற்றுப்பல் கண்டுபிடித்து வியப்பில் ஆழ்த்தினார். இதற்கு ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பல் பொருத்தப்பட்டது. முதல்முதலில் அறுவை சிகிச்சைக்கு பஞ்சை பயன்படுத்தியவரும் அல் ஸஹ்ராவிதான். இவர்தான் கிட்னியில் ஏற்படும் கல்லை நீக்க சிறுநீர் பையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நரம்பை வெட்டும் முறையை கண்டுபிடித்தார். இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த மனிதஎலும்பின் தோள்பட்டை மாற்று சம்பந்தமான சிகிச்சையை 1937 ல் ப்ரூக்கும், கோச்சாரும் கண்டுபிடித்தனர்.
                            இப்ன் சினாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான புற்றுநோய் சம்பந்தமான விளக்கங்கள் இன்றும் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அல் ஸஹ்ராவியால் கடை பிடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை முறைகளை இன்றளவும் அறியப்படாமலே உலகமெங்கும் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இப்ன் ஸுஹ்ர் அவர்களால் அரிப்பு நோய், தூக்கவியாதி நோய்க்கு கல்கஷண்டி ஆகியோர் குறிப்புகள் தந்துள்ளனர். அல் அஷ் அத், அபு ஷல் அல் மசிஹி, இப்ன் அல் நஃபிஸ் ஆகியோரின் மருத்துவத்துறையின் பங்கும் சிறப்பானது. இப்ன் சினா வின் அல் கானுன் (CANON) என்ற புத்தகம் மருத்துவ உலகின் ஒரு மைல் கல்.
                                  கண் நோயில் ரெடீனா, கேடராக்ட் போன்ற வார்த்தைகள் அரபுச்சொல்லின் மூல வார்த்தைகள். பத்தாம் நூற்றாண்டில் இப்ன் அல் ஹைதம் அவர்களின் (மேற்கில்- அல் ஹாஸென்) “ஆப்டிகல் தெசாரஸ்”  (OPTICAL THESAURUS) என்ற புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இதிலிருந்து ரோஜர் பேகன், லியனார்டோ டா வின்சி மற்றும் ஜோஹன்னஸ் கெப்லர் போன்றோர் சில பகுதிகளை எடுத்து கையாண்டிருக்கிறார்கள். இந்த புத்தகம் அதுவரை இருந்த ஒளிக்கற்றை, கண் பார்வை சம்பந்தமான கிரேக்கர்களின் கருத்தை உடைத்தது. இதை அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு இத்தாலி ஒப்புக்கொண்டது. அல் ராஸி ஒளியைக் கண்டவுடன் கண்ணில் ஏற்படும் மாற்றங்களையும், இப்ன் சினா கண்விழியின் மொத்த நரம்புகளின் எண்ணிக்கையையும் முதல் முதலில் தெரியப்படுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கண் சிகிச்சைக்கென ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹாலோ மெட்டாலிக் ஊசியை ஈராக்கின் மோசூலைச் சேர்ந்த அம்மார் பின் அலி பத்தாம் நூற்றாண்டுகளில் கண்டுபிடித்து விட்டார். 
                               நோய்களுக்கான மருந்து கண்டுபிடிப்புகளில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் யூஹன்னா பின் மசவய்யும் அவர் மாணவர் ஹுனைன் பின் இஷாக் அல் இபாதியும் பல நோய்களுக்கான மருந்துகளை அப்பாஸிட்கள் காலத்தில் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். மசாயில் ஹுனைன் என்ற புத்தகத்தில் ஹுனைன் பின் இஷாக் அல் இபாதி அவர்கள் விவரமாக மருந்துகளை பற்றி குறிப்புகள் தந்திருக்கிறார். மருந்தகங்கள் அப்போதைய ஆட்சியாளர்களால் தரம் சோதிக்கப்பட்டன. அரபு நாடுகளில் பணிபுரிபவர்களைக் கேட்டுப்பாருங்கள் இன்றும் மருத்துவத்துறையில் மிகவும் கவனமாக இருப்பார்கள். பெரும்பாலான மருந்தக சொற்கள் அரபுமொழியின் மூலமே. உதாரணத்திற்கு, ட்ரக், அல்கலி, அல்கஹால், அல் டிஹைட்ரேட், அல் எம்பிக் மற்றும் எலிக்ஸிர் போன்றவை அரபுச் சொற்கள்.
                 அப்போதைய மக்களின் அறியாமைத்தன்மைக்கு ஏற்ப கசப்பான மருந்துகளில் பன்னீர், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றின் சுவையை மருந்துகளில் ஏற்றினார்கள். மருந்தகத் துறையில் அல் ராஸி, அல் ஸஹ் ராவி, பிரூனி, இப்ன் புட்லான் மற்றும் தமிமி ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானது. மருத்துவத் துறையில் இன்னும் அதிகமாக சொல்லிக்கொள்ள இருக்கிறது. இது துறை சம்பந்தமான சொற்களுடன் கூடியதால், உண்மையில் எனக்கும் விளங்காது உங்களுக்கும் விளங்காது. மனோதத்துவத் துறையிலும் பல புதுமைகளை அல் ராஸி அறிமுகப்படுத்தினார். ஒருமுறை கலிஃபா ஒருவருக்கு மனநோய் ஏற்பட்டது. அல் ராஸி அவரை குளிக்கச் சொன்னார். கலீஃபா குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அல் ராஸி கத்தியை எடுத்து கலீஃபாவைக் குத்துவது போல் முன்னேறினார். இதனால் கலீஃபா பயந்து போய் எழுந்து ஓட அவரின் இதய இயக்கம் அதிகமாகி நோயின் தன்மை உடனே குறைந்தது. ஒருமுறை ஒரு பெண்மனி குனியமுடியாமல் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். மருத்துவர் உடனே குனிந்து அந்த பெண்மனியின் கால்களிலிருந்து உடையை விலக்க அந்த பெண்மனி பதறியடித்து குனிய அவள் வலி குணமானது. அப்போதைய இஸ்லாமிய ஆட்சியில் இரு செயல்களுமே குற்றமாகக் கருதப்பட்டாலும், நவீன வசதியில்லாத அந்த காலத்தில் இந்த சிகிச்சைமுறை நல்ல பலனை தந்ததற்குப் பாராட்டப்பட்டது. மனநோய்க்கு நஜபுத்தீன் முஹம்மது என்பவரின் நஃப்காயி மலிகோலியா, குத்ரிப் மற்றும் துவால் குல்ப் ஆகிய படைப்புகள் சிறப்பானது.
                             மனநோய் காப்பகங்கள் மொரோக்கோ நகரின் ஃபெஸ் பகுதியிலும், 705 ல் பாக்தாதிலும், 800 ல் கெய்ரோவிலும், டமாஸ்கஸ் மற்றும் அலிப்போவில் 1270 லும் துவங்கப்பட்டன. உலகின் அப்போதைய மருத்துவ மாணவர்கள் இஸ்லாமிய நாடுகளில் மருத்துவம் படிப்பதை தங்கள் லட்சியமாகக் கருதினார்கள். இந்த நிலையை இந்த 21 ம் நூற்றாண்டில் தான் அமெரிக்காவில் மருத்துவத்துறையில் அடைய முடிந்தது. ஆறாம் நூற்றாண்டுகளிலிருந்தே படிப்படியாக முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிலப்பரப்புகளை வென்று ஐரோப்பா நோக்கி முன்னேறினார்கள். இது பனிரெண்டாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. போகுமிடமெல்லாம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கலாச்சாரத்தையும், அறிவுக்களஞ்சியங்களையும் கொண்டு சென்றார்கள். இதற்கு பல ஆதாரங் கள் வரலாற்றில் உள்ளன. அடுத்து 400 ஆண்டுகளுக்கும் மேலாக கிறி ஸ்தவர்கள் சிலுவைப்போர் நடத்தி முஸ்லீம்களை ஸ்பெயின் மற்றும் வட பிரான்சை விட்டு விரட்டினார்கள். கொண்டுபோன ஆவணங்கள் அழிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் மேற்கத்திய நாடுகளிலேயே இருந்தது. காரியங்கள் முடிந்த பிறகு, ஐரோப்பிய நாடுகள் வளமை அடைந்தவுடன் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த ஆவணங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு ஒவ்வொரு கண்டுபிடிப்பும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள் பெயரால் வெளியிடப்பட்டன அல்லது முஸ்லீம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் ஏதோ அவர்களுக்கு உச்சரிக்க வராததுபோல் திட்டமிட்டு யூத, கிறிஸ்தவ பெயர்கள் தோற்றமளிப்பது போல் குறிக்கப்பட்டன. மருத்துவம் மட்டுமல்ல பல துறைகளில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் இதை நாம் சிறுகச்சிறுக ஐரோப்பிய, கிறிஸ்தவ ஆசிரியர்கள் எழுதிய ஆதாரபூர்வமான புத்தகங்களின் வாயிலாகவே வெளியிடுவோம். இன்றைய நாட்களில் இறைவன் தன் அருட்கொடையை அரபு நாடுகளில் திறந்துள்ளான். ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அளவுக்கு செல்வத்தை வழங்கியுள்ளான். கடிகாரத்தின் சுழற்சி போல் நிச்சயமாக மீண்டும் முட்கள் கடந்த எண்ணை மீண்டும் தொடும். மறுபடியும் இஸ்லாமியர்கள் எல்லாத்துறைகளிலும் முதல் இடத்தில் வருவார்கள்.
இந்த கட்டுரை எழுத ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் : 
க்ரேட் மோமெண்ட்ஸ் இன் மெடிசன் – ஜி.எ. பெண்டர்- பக்கம் 68-74
யூரோலஜி  – இ. டி. வைட்ஹெட் மற்றும் ஆர்.பி. புஷ்- பக்கம் 5
இருபத்தொன்பதாவது இண்டர்நேஷனல் காங்கிரஸ் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – எஃப். எஸ். ஹத்தாத்- பக்கம் 1600- 1607
எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – சி. சிங்கர் மற்றும் எ. எ. அண்டர்வுட்- பக்கம் 76
எ ஹிஸ்டர் அஃப் மெடிசன் – எ. காஸ்டிக்லியானி- பக்கம் 268
தி அராப் ஷார்ட் ஹிஸ்டரி – பி. ஹிட்டி – பக்கம் 143
1001 நைட்ஸ் (ஆறாம் பகுதி) – எல். பர்டன் – பக்கம்- 1886
மேன் கைண்ட் – பி. மில்லர்- பக்கம் 8- 40
தி அராப் கன்ட்ரிபுயூஷன் டு மெடிசன் – ஒய். எ. ஷாஹின்- பக்கம் 10
முஸ்லீம் கன்ட்ரிபுயூஷன் டு மெடிசன் – எச். என். வாஸ்டி – பக்கம் 5-16
எ மெடிகல் ஹிஸ்டரி ஆஃப் பெர்ஷியா – ஜி. எல்குட்- பக்கம் 278-301
ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – எஃப். எச். காரிசன் – பக்கம் 134
அரேபியன் மெடிசன் – இ. ஜி. ப்ரௌனி – பக்கம் 5-16
இன்னும் பல புத்தகங்கள் உள்ளது.
          


                                
                   

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஸோரோஸ்ட்ரியன்கள்

                                                                                   கற்களும், அசிங்கங்களையும் தெரிந்து கொண்டால் சாலையைக் கடக்க ஏதுவாக இருக்குமல்லவா?. அதைப் போன்ற ஒரு அருவருப்பான கூட்டம் தான் இந்த ‘ஸோரோஸ்ட்ரியன்கள்’. குறிப்பாக தெரிந்து வைத்துக் கொண்டால் இந்தக் கூட்டத்தாரிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக வட இந்தியாவில் இவர்கள் பரவலாக இருக்கிறார்கள். அதற்காகவே இந்த பதிவு.                                    
                                      ஈரானியர்களால் ஸோரோஸ்டர் (ஸரதுஸ்த்ரா) என்ற கிரேக்க பெயரைத் தாங்கிய தூதர் ஒருவர் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தார். அவர் கிழக்குப் பகுதியில் கஸ்பியன் கடற்கரைப் பகுதி யில் வசித்ததாகக் கூறப்படுகிறது. இவரின் போதனைகளைப் பின்பற்றியவர்கள் “ஸோரோஸ்டரியன்கள்” எனப்பட்டனர். ஸோரோஸ்டரின் போதனையாவது, புராதன இந்திய ஈரானிய மதத்திலுள்ள பல கடவுளை மறுத்து ஒரே கடவுள் “அஹுரா மஸ்தா” என்பது தான். ஸோரோஸ்டரின் அஹுரா மஸ்தாவின் கருத்து களடங்கிய கதாஸின் ஆரம்ப பகுதியான “அவிஸ்டா” ஸோரோஸ்டர்களின் புனித நூலாகும்.
                                        அஹுரா மஸ்தா இரு ஆவிகளை உருவாக்கி தன் இரு மகன்களைப் படைத்தார். ஒன்று ஸ்பெண்டா மயின்யூ உண்மை, வெளிச் சம் மற்றும் உயிரானது. இன்னொன்று அங்க்ரா மயின்யூ சூது, இருட்டு மற்றும் மர ணமானது. ஸோரோஸ்டரின் மரணத்திற்குப் பிறகு, ஸோரோஸ்டரியனிஸம் ஒரு மதமாக மாறியது. அஹுரா மஸ்தா (இது பின்னாளில் “ஓர்மஸ்த்” என்றானது) தானே தன் நல்ல மகனைக் கைப்பற்றி, தீய மகனான அங்க்ரா மயின்யூவை அழிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். மனித சரித்திரத்தில் ஸோரோஸ் டரியன்களின் நம்பிக்கையானது எதிரெதிராக உள்ள ஸ்பெண்டா மயின்யூ மற்றும் அங்க்ரா மயின்யூவின் நல்லது கெட்டது, வெளிச்சம் இருட்டு, உயிர் மரணம் இவைகளின் சிக்கல்களை நீக்கி வாழ்வது. ஸோரோஸ்டரின் தத்துவம் இவை களை எல்லாம் விட்டு இந்தோ ஈரானியர்கள் தீயினால் தியாகம் செய்து வாழ வேண்டும். ஆகவே நெருப்பு மட்டுமே ஸோரோஸ்டரியன்களின் தியாகத்தின் அடையாளம்.
                                     இந்த ஸோரோஸ்டரியனிஸம் ஈரான் முழுவதும் எப்படிப் பரவி “அக்கேமேனிய” பேரரசின் ஆட்சி மதமானது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், முதலாம் தரியஸ் என்பவர் தனது பதவியேற்பின் போது “ கடவுள் அஹுரா மஸ்தாவின் அருளாள் நான் மன்னனாக இருக்கிறேன். இதை அவரே எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி இருக்கிறார். பக்திமிகுந்த மகி (மாஜிக் என்றும் இருக்கிறது) என்னும் பகுதி ஸோரோஸ்டரியத்துடன் இணைந்து ஆரம்பகால ஈரானிய மதத்தில் ஒத்துழைத்திருக்கிறது. பெர்ஷியர்கள் மகிக்கு உயரிய அந்தஸ்தைக் கொடுத்தனர். மகி கிழக்குப் பகுதியியை ஆளப் பிறந்தவர்கள் என்றனர். அடுத்த ஐந்நூறு ஆண்டுகள் கழித்து மகிக்கள் கிறிஸ்து வத்திற்கு பலமும், அதிகாரமும் கொடுத்தனர் என்றனர். மேலும், கிறிஸ்துவ கதை யில் வரும் மகி பெர்ஷியாவை ஆண்ட நாடோடி பேரரசான பார்தியனிலிருந்து குழந்தை ஏசுவுக்கு பரிசு கொண்டு தந்தது. ஆனால், ஸோரோஸ்டரியனிஸம் கிரிஸின் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் கிரீஸை வெற்றி கொண்ட சமயத்தில் ஸோரோஸ்டரியனிஸம் கிரீஸில் இருந்ததாக ஒரு வரலாறு உள்ளது.        
                                      சமீப காலங்களில் இந்த ஸோரோஸ்ட்ரியன்கள் பெரும் பணம் முதலீடு செய்து தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக நிறைய ஹாலிவுட் திரைப்படங்களை எடுத்தார்கள். அதில் பெரும் கூலி கொடுத்து முன்னணி நட்சத்திரங்களை ( அலெக்ஸாண்டிரியா பாண்டரிஸ், ஸிடா காத்தரின் ஜோன்ஸ் போன்றவர்களை) நடிக்க வைத்தார்கள். அதில் மிகவும் புகழ் பெற்றது ஸோரோ தொடர் வரிசையில் ‘தி மஸ்க் ஆஃப் ஸோரோஸ்’. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் ஷியா கொள்கை உள்ளவர்களின் செயல்பாடுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த ஸோரோஸ்ட்ரியன்கள் இன்றும் இந்தியாவில் பொருளாதாரம், பொழுதுபோக்கு, வாணிபம் போன்ற துறைகளில் பரவலாக உள்ளனர். ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், நஸ்ருத்தீன ஷா இன்னும் பல கான் நடிகர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருத்து இருக்கிறது. 1000 BCE யிலிருந்து 600 BCE வரை சசானியர்கள் ஆட்சியில் குஜராத்தில் பரவியது. இந்த ஸோரோஸ்ட்ரியனிசம் முழுக்க முழுக்க இந்திய பிராமண பாரம்பத்தைச் சேர்ந்தது. 34 ஆண்டுகளுக்கு முன், 1981 ன் இந்தியக் கணக்கெடுப்பின் படி 100,000 ஸோரோஸ்ட்ரியன்கள் இந்தியாவில் உள்ளதாக தெரிந்தது.
                                 ஸோரோஸ்ட்ரியன்களின் நாட்குறிப்பு 12 மாதங்களை அஹுரா மஸ்டா, அமிஷா ஸ்பெண்டா அல்லது யஸ்டா ஆகியவற்றின் பெயர் தாங்கியதாக இருக்கும். முழுக்க முழுக்க கொண்டாட்டமும், கேளிக்கை நிறைந்த பண்டிகைகளைக் கொண்டதாக இருக்கும். அவைகளில் ஆறு ‘கஹன்பர்கள்’ என்று சொல்லக்கூடிய மைத்யோஸாரம், மைத்யோஷாஹெம், பைத்திஷாஹெம், அயத்ரிம், மைத்யரிம், ஹமஸ்பெத்மைத்யம் முக்கியமானவை ஆகும். இவர்களின் முக்கியமான பண்டிகை “நௌரோஸ்” என்பதாகும். மதுவுக்கும், அருவருப்பான நடனத்துக்கும் பெயர் போனது. சுல்தான் ஸலாவுத்தீன் ஆட்சி காலத்தில் இதை தடை செய்தார். இவர்களின் திருமணவிழா 3 லிருந்து 7 நாட்களுக்கு நடக்கும். மணமக்கள் வெள்ளை உடை தான் அணிய வேண்டும். இவர்கள் அடக்கஸ்தலங்களின் மீது கோபுரம் எழுப்புவார்கள். ஸோரோஸ்ட்ரியன்களின் அடக்கஸ்தலங்களில் மும்பையிலுள்ள “டவர் ஆஃப் சைலன்ஸ்” மிகவும் பெயர் பெற்றது. மும்பையில் 57 ஏக்கர் பரப்பளவில் இதற்காவே பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கிறார்கள்.
                        இந்த ஸோரோஸ்ட்ரியன்களை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து ஆராதிப்பவர்கள் யூதர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள். காரணம் உண்மை முஸ்லீம்களை ஆத்திரமூட்டுகிறார்களாம். நௌரோஸ் பண்டிகை தினத்தில் உலக பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

புதன், 8 ஏப்ரல், 2015

தைமூரியர்கள் வரலாறு

 இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் ஜெங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டுவந்தனர். நாளடைவில் அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார் கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே அழைத்தார்கள்.
                                     1336 ல் இவர்களில் பிரபலமாக ஒருவர் பிறந்தார் அவர் பெயர் தைமூர். மேற்கத்தியர்களால் டாமெர்லேன் என்று அழைக்கப்பட்டார். துருக்கிகள் டிமுர் இ லெங்க் என்று அழைத்தனர். இவர் எப்படியேனும் ஒரு பேர ரசை மீண்டும் நிலைநாட்டிட முயற்சி செய்தார். துருக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவே கருதப்பட்டார். இவருக்கு சொந்தமாக பெரிய நிலப்பரப்பு இருந் தது. இவர் தனிச்செல்வாக்காக அவரின் கூட்டத்தினருள் திகழ்ந்தார். சிறந்த கலை ஞராகவும், கட்டிடக்கலை நிபுணராகவும் இருந்தார். மாபெரும் இஸ்லாமிய மார் க்க அறிஞர் இப்ன் கல்தூன் என்பவரின் மாணாக்கராக இருந்தார். 1383 ல் இவரு க்கு அப்போதே 50 வயதாகி இருந்தது. இருபது ஆண்டுகள் விடாது போரிட்டு மேற் கில் பாதி பகுதிகளை வென்றார். முதலில் ஹிராத் என்ற ஆஃப்கானிஸ்தான் மற் றும் ஈரானிய எல்லைப்பகுதியை வென்றார். ஹிராத் பின்னாளில் பெர்ஷிய கலாச்சாரத்தில் சிறந்து விளங்கியது. பின் தைமூர் கிழக்கு பெர்ஷியாவையும் வென்றார். 1394 ல் மொத்த பெர்ஷியா, மெஸோபொடாமியா, கருங்கடல், கஸ்பி யன் கடல், அர்மேனியா, அஸெர்பைஜான் மற்றும் ஜியார்ஜியாவை வென்றெடுத் தார். 1396 ல் புயலைப்போல் ரஷ்யாவை வெற்றி கொண்டு ஒரு ஆண்டு கையகப் படுத்தி வைத்திருந்தார்.
                                                                        தைமூரின் ஆட்சி மிகவும் மிருகத்தனமாக இருந்தது. பெர்ஷியாவில் தன்னை எதிர்த்தவர்களை ஜெங்கிஸ்கானைவிட கொடுமையாகத் தண்டித்தார். மக்களை கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கினார். கொல்லப்பட் டவர்களின் மண்டை ஓடுகளால் பெரிய கோபுரம் அமைத்து மற்றவர்களுக்கு அதை எச்சரிக்கை ஆக்கினார். ஜெங்கிஸ்கான் தவறிய ஒன்றை 1398 ல் தைமூர் செய்தார். ஆம் அதுதான் இந்தியாவின் மீதான படையெடுப்பு. டெல்லி நகரில் நுழைந்து அதை சூறையாடி, பல மாதங்கள் தங்கி கொள்ளையடித்து, கைது செய்தவர்களை கொன்று, 120 யானைகளையும் கைப்பற்றி திரும்பினார். தனது நகரமான சமர்கண்டை இஸ்லாமிய கலைவடிவத்தில் அமைத்தார். இந்தியாவில் இருந்து கொண்டு வந்த யானைக ளையும், கலை விற்பன்னர்களை வைத்தும் நகரை அழகுபடுத்தினார். 1399 ல் 60 வது வயதிலும் ஆக்ரோஷத்தோடு மேற்கு நோக்கி படையெடுத்தார்.
                                    1401 ல் தைமூர் எகிப்தின் மம்லூக் இராணுவத்தை சிரியாவில் வென்றார். டமாஸ்கஸ் நகரத்தை சேதப்படுத்தினார். அதே ஆண்டு பாக்தாத் மீது தாக்குதல் நடத்தி 20,000 பேரை கொன்று குவித்தார். 1402 ல் அனுப வம் வாய்ந்த வீரர்களுடன் அனடோலியாவை நோக்கி முன்னேறினார். ஓட்டோ மான் பேரரசர் பயேஸெட் என்பவரை அங்காரா என்ற இடத்தில் தோற்கடித்து சுல்தானைக் கொன்றார். மேலும் மேற்காக நகர்ந்து ஏஜியன் மற்றும் ரோட்ஸ் மன்னனை வென்று இஸ்மிர் நகரத்தையும் கைப்பற்றினார். பின் தைமூர் 1404 ல் சமர்கண்ட் திரும்பினார். அப்போது அவருக்கு 68 வயதாகி இருந்தது. அப்போதும் அவர் ஓய்வெடுக்க விரும்பவில்லை. 1404 ல் தைமூர் சீனாவின் மீது ஆக்கிரமித்தார். சிம்கெண்ட் என்ற இடத்தில் இருக்கும் போது 1405 ல் நோயில் விழுந்து இறந்துபோனார். தைமூரின் பிடியிலிருந்து சீனா தப்பித்ததாகவே கருதப்பட்டது. இவருக்குப் பின் இவரது பிரதேசம் தைமூரின் இராணுவ கமாண்டர்களாலும், எதிரிகளாலும் பிரிக்கப்பட்டது.            

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஜானிஸ்ஸரீஸ் என்னும் இஸ்லாமிய படை


                                                             ஜானிஸ்ஸரீஸ் என்பது ஓட்டோமான் பேரரசின் சிறப்பு போர் படையாகும். ஜானிஸ்ஸரீஸ் என்றால் துருக்கியில் புதிய வீரர்கள் என்று அர்த்தம். இந்த ஜானிஸ்ஸரீஸ் படைக்கு ஆறு வயதிலிருந்தே தேர்வு செய்து பயிற்சி அளிப்பார்கள். இந்தப் பயிற்சி உடல்தகுதி, உயர்கல்வியுடன் எதிர்காலத்தில் பொறியியலாளராகவோ, கட்டிடக்கலை நிபுணராகவோ, மருத்துவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ அல்லது அதிகபட்சம் வைசிராயராகவும் உயரும் தகுதியுடன் கூடியது. இவர்கள் சுல்தானின் தனிப்பாதுகாவலராகவும் இருப்பார்கள். பால்கன் தீபகற்பம், வட கிரீஸ், செர்பியா, அனடோலியாவில் இருந்த கிறிஸ்தவர்களும் இந்தப்படையில் இருந்தார்கள். போரில் காலாட்படைகளாக இது 1363 லிருந்து 1826 வரை ஓட்டோமான் பேரரசில் இருந்தது. ஆரம்பத்தில் 1000 வீரர்களாக இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைவீரர்களின் எண்ணிக்கை 1680 ல் 135,000 வரை உயர்ந்தது. இதன் தலைமையகங்கள் அட்ரியனோபிள்(எடிர்னி) மற்றும் கான்ஸ்டாண்டி நோபிளில்(இஸ்தான்புல்) இருந்தது. இந்த படைவீரர்கள் பெயர் பெற்ற கொஸோவா போர், நிகோபாலிஸ் போர், அங்காரா போர், வர்னா போர், சால்டிரன் போர், மொஹாக்ஸ் போர், வியன்னா போர் இன்னும் பல போர்களில் ஓட்டோமான் பேரரசுக்காக போரிட்டிருக்கிறார்கள்.           
                                ஜானிஸ்ஸரீஸுக்கு முதல் கமாண்டராக சுல்தான் முதலாம் முராதும், கடைசி கமாண்டராக சுல்தான் இரண்டாம் மஹ்மூதும் இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த ஜானிஸ்ஸரீஸ் ஊழல்களும், தவறுகளும் நிறைந்து, விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட 6000 பேர் தூக்கிலிடப்பட்டு சுல்தான் இரண்டாம் மஹ்மூதால் கலைக்கப்பட்டது. பெரும்பான்மையான வீரர்கள் நாடோடிகளிடமிருந்து வந்ததால் முரட்டுத்தனத்துடன் இருந்த இவர்களிடம் மற்றவற்றை எதிர்பார்ப்பது மிகவும் கடினம். இராணுவக் கட்டுப்பாடு, சிறந்த கல்வி, நேர்மையுடன் இருந்த ஜானிஸ்ஸரீஸ்கள் சுல்தான்களின் அவ்வப்போதைய சலுகைகளால் பொதுமக்களோடு சாதாரணமாக வாழலாம், நகரில் நிலங்கள் வாங்கிக்கொள்ளலாம், வியாபாரங்கள் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் நாட்டு மக்களுடன் கலந்தனர். போட்டி, பொறாமைகள் எழுந்தன, அவர்களின் அடிப்படை இராணுவ ஒழுக்கம், கட்டுப்பாடுகள் சீர்குலைந்தன. பயிற்சிகளுக்கு முறையாக செல்வதைத் தவிர்த்தனர். தங்களின் சொந்த ஆதாயத்துக்கே முதலிடம் கொடுத்தார்கள். முதலில் ஒழுக்கத்துடன் இவர்கள் தான் உலகில் முதல்முதலில் சீருடையணிந்த இராணுவத்தினர். ஜானிஸ்ஸரீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம், பணி ஓய்வு மற்றும் தனிசமூக அந்தஸ்து ஆகியவை உண்டு. சிறப்பான தகுதியில் இருந்தார்கள். தேர்ந்தெடுத்த சிலரை ‘எண்டெருன்’ என்னும் அரண்மனைப் பள்ளியில் தங்கவைத்து சிறப்புப்பயிற்சி கொடுப்பார்கள். இதனால் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய மன்னர் பரம்பரையில் உயர்பணிகளை புரியும் வாய்ப்பு கிடைத்தது. எண்டெருனில் படிப்பது பெரிய கௌரவமாக இருந்தது ஏனென்றால் பல கலாச்சாரத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் இருந்தார்கள், தரமான கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. உலகிலேயே மிகச்சிறந்த கல்வி அங்கு வழங்கப்பட்டது. முதலாம் முராதுக்குப் பின் வந்த இரண்டாம் முராத் எண்டெரூனை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தினார்.
                       பால்கன் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் 6 லிருந்து 14 வயதான பிள்ளைகளைத் தானே முன் வந்து எண்டெரூன் பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். ஜானிஸ்ஸரீஸ்கள் ஓட்டோமான் பேரரசில் ‘அஸ்கெரி’ என்னும் உயர்தரகுடிமக்களாகக் கருதப்பட்டனர். 16 ம் நூற்றாண்டின் சுல்தான் ஜானிஸ்ஸரீஸ் வீரர்களின் பிள்ளைகளும் ஜானிஸ்ஸரீஸ் படையில் சேரலாம் என்றும், தாடி வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு, 300 ஆண்டுகளாக அதற்கெல்லாம் இருந்த தடையை நீக்கினார். ஜானிஸ்ஸரீஸ் வீரர்களாய் இருந்து புகழ் பெற்றவர்கள் அல்பேனியாவைச் சேர்ந்த ஜார்ஜ் கஸ்ட்ரியோடி 20 ஆண்டுகளாக நடந்த அல்பேனிய கலவரத்தை அடக்கினார். போஸ்னியாவைச் சேர்ந்த சொகொல்லு மெஹ்மெத் பாஷா என்பவர் 14 ஆண்டுகாலம் ஓட்டோமானின் தலைமை வைசிராயராக இருந்து மூன்று சுல்தான்களிடம் பணிபுரிந்தார்.
                                போர் இல்லாத காலங்களில் ஜானிஸ்ஸரீஸ்கள் தீயணைப்பு பணிகள், காவலர் மற்றும் அரண்மனைக்காவல் ஆகியவற்றை கவனிப்பார்கள். அவர்களுக்குத் தேவையான சாலைகளைப் போடுவது, கூடாரங்களைப் போடுவது, ரொட்டி தயாரிப்பது என்று சகல பணிகளையும் செய்து கொள்வார்கள். ஜானிஸ்ஸரீஸ் படையிலிருந்து பணி ஓய்வு பெற்றிருந்து ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளை பேரரசு கவனித்துக் கொண்டது. ஓட்டோமான் பேரரசின் எல்லைகள் விரிவான பின் பல்கேரியா, க்ரோட்ஸ், செர்ப்ஸ், ரோம், ஜியாரியா, போல்ஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருப்பவர்களையும் ஜானிஸ்ஸரீஸ் படையில் சேர்த்தார்கள். ஊழல்களும், சீர்கேடும் ஜானிஸ்ஸரீஸ் படையில் தலைவிரித்து ஆடியதால் சுல்தான் நான்காம் மெஹ்மெத் துருக்கிய முஸ்லீம்களை மட்டும் படையில் சேர்த்தார். சுல்தான் முதலாம் அஹ்மெத் காலத்தில் ஒருநாளைக்கு 3 அக்சிஸாக இருந்த ஜானிஸ்ஸரீஸ்களின் சம்பளம். பதவி உயர்வு பெற்றால் 10 அக்சிஸாக உயர்த்தப்பட்டது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை 12 அக்சிஸ்கள் சீருடை சீரமைக்கவும், 30 அக்சிஸ்கள் ஆயுதங்கள் கையாள்வதற்கும் மேலும் ஒரு தொகை வெடிமருந்து கையாள்வதற்கும் வழங்கப்பட்டது. படைக்கு தேர்ந்தெடுத்தவர்களை முதலில் துருக்கிய குடும்பங்களுக்கு அனுப்பி எப்படி துருக்கி மொழி பேசுவது இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை ஆரம்ப பாடமாக பயில வைத்தனர்.
                                ஜானிஸ்ஸரீஸ்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டார்கள். துருக்கியில் ஜிமாத் என்று அழைக்கப்பட்ட 101 வீர்ர்கள் வீதம் கொண்ட முண்னணிப்படை. பெய்லிக் என்று அழைக்கப்பட்ட 61 வீரர்கள் வீதம் கொண்ட சுல்தானின் பாதுகாப்புப்படை. செக்பான் என்று அழைக்கப்பட்ட 34 வீரர்கள் வீதம் அடங்கிய காலாட்படை என்று இருந்தது. யெர்லிய்யஸ் என்ற படைகள் நிரந்திரமாக ஏதாவது ஒரு ஊரிலோ அல்லது நகரத்திலோ நிற்க வைக்கப்படும். ஆரம்பத்தில் ஜானிஸ்ஸரீஸ் படைகள் ஈட்டி எறிவதில் வல்லவராக இருந்தார்கள். பின் 15 ம் நூற்றாண்டில் பரவலாகக் கிடைத்த வெடிமருந்துகளைப் பயன்படுத்தினார்கள். மிலீ போரில் கோடாரிகளைப் பயன்படுத்தினார்கள். சீருடையுடன் கூடிய ‘யடகன்’  எனப்பட்ட வாள் ஜானிஸ்ஸரீஸ்களின் அடையாளமாகத் திகழ்ந்தது.
                           16 ம் நூற்றாண்டுகளில் ஓட்டோமானின் எதிரிகளை அஞ்சவைத்த 80 மில்லிமீட்டர் தோட்டாக்கள் பொருத்தப்பட்ட ‘ட்ரென்ச் கன்’ பயன்படுத்தப்பட்டது. மேலும் கையெறி குண்டு, கை பீரங்கி ஆகியவற்றையும். 1645 க்குப் பிறகு க்ரீடன் போரில் கைத்துப்பாக்கியும் பயன்படுத்தினார்கள்.
                                    சமூகத்தில் கலந்திருந்ததனாலும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததனாலும் இவர்கள் எப்போதும் சற்று தயக்கத்துடனே வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு உயர்குடிமக்கள் அந்தஸ்து கொடுக்கப் பட்டிருந்ததால் 17 ம் நூற்றாண்டில் இவர்கள் சமூகத்திலும், இராணுவத்திலும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் எதிர்பார்த்து அரசாங்கத்திற்கு எதிராக மெதுவாக செயல்பட ஆரம்பித்தார்கள். ஜானிஸ்ஸரீஸ் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு மைதானம் சார்ந்த கடுமையான பயிற்சிகள் தேவையில்லை என்றார்கள். ஒரு கலகத்தை ஏற்படுத்தி அதனால் தங்களுக்கான ஆதாயத்தைப் பெற துணிந்தார்கள். அரண்மனைக் காவலில் இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைகள் மூலம் சுல்தானையே சிறைபிடிக்க முடியும் என்றும் நம்பினார்கள். சில சர்ச்சைகளால் ஓட்டோமானின் வடக்குப் பகுதியில் பிரச்சினை ஆரம்பித்தது.
                           ஜானிஸ்ஸரீஸ்கள் சம்பள உயர்வு வேண்டும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு சுல்தான் மாறும் போதும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. சுல்தான் இரண்டாம் செலிம் தான் ஜானிஸ்ஸரீஸ் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதித்தார். இப்படி பல சலுகைகளை அனுபவித்த பிறகும், ஐரோப்பாவுக்கு எதிரான ஓட்டோமான்களின் போரில் சரியான ஒத்துழைப்பைத் தராமல் இருந்தார்கள். சுல்தான் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது போன்ற வதந்தியைக் கேள்விப்பட்டு சுல்தான் மூன்றாம் செலிமைக் கைது செய்து பெயர் பெற்ற ஏழு கோபுரங்கள் என்ற இடத்தில் வைத்துக் கொன்றார்கள்.
                           வடக்குப் பகுதியில் ஸ்மெடெரெவோ என்ற பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜானிஸ்ஸரீஸ்கள், எங்கே சுல்தான் செர்பியர்களின் கூட்டுடன் சேர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து விடுவாரோ என்று அஞ்சி மத்திய செர்பியாவிலிருந்த அனைத்து தலைவர்களையும் கொன்றார்கள். இது ஸ்லாட்டர் ஆஃப் தி நிஸெஸ் (SLAUGHTER OF THE KNEZES) என்று எல்லோராலும் அறியப்பட்டது. இரண்டாம் மெஹ்முத் ஒரு ஆண்டுகாலம் தன்னைச் சுற்றி முதலில் பலப்படுத்திக் கொண்டார். முதலில் ஓட்டோமான் இராணுவத்தை தற்போதைய ஐரோப்பிய முறையில் நவீனப்படுத்தப் போவதாக அறிவித்தார். ஆத்திரமடைந்த ஜானிஸ்ஸரீஸ்கள் அனைவரும் தங்குமிடங்களை விட்டு கலவரம் செய்த வண்ணம் சுல்தானின் கோட்டையை நோக்கி வந்தனர். முதலில் அவர்களின் தங்குமிடங்களை சுல்தான் அழித்தார். அட்டூழியம் செய்த 4000 ஜானிஸ்ஸரீஸ் படையினரைக் கொன்றார். மேலும், அனைத்துக்கும் காரணமான 1000 வீரர்களை விசாரணைக்குப் பிறகு கொன்றார். இந்த சம்பவம் சரித்திரத்தில் ‘தி ஆஸ்பிஷியஸ் இன்ஸிடண்ட்’ என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.