திங்கள், 20 ஏப்ரல், 2015

வைக்கிங்குகள் வரலாறு

                                     ‘வைக்கிங்குகள்’ இது ஏதோ புதியதாக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். ஐரோப்பாவில் தரம் தாழ்ந்திருந்த மனித வாழ்வை சீர்படுத்திட இஸ்லாமிய மன்னர்களால் படையெடுப்பின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அழகிய மதமாக அறிமுகமான இஸ்லாமையும், இஸ்லாமிய ஆட்சியையும் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேலாக கருவறுக்க நினைப்பவர்கள். இவர்கள் தான் 11 க்கும் அதிகமான சிலுவைப்போர்களில் முஸ்லீம்களின் இரத்தத்தில் குளித்தவர்கள், இன்றும் அமெரிக்கா, இஸ்ரேலுடன் கை கோர்த்துக் கொண்டு முஸ்லீம்களை தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் என்று கொல்பவர்கள். கடற்கொள்ளையையும், கொலைகளையும், முறையற்ற காமக்களியாட்டங்களை காதலுடன் செய்த ஒரு காட்டுமிராண்டி கூட்டம். இதை நாம் சொல்லவில்லை. மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களே எழுதியது. அதனாலேயே இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது
                  793 ல் இங்கிலாந்தின் வடகிழக்கில் துறவிகளின் தீவான லிண்டிஸ்ஃபார்னியில் துறவிகள் தியானத்திலும், இறைவணக்கத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும் சத்தம், அலைகளை மீறிய சத்தம் ஆவேசமாக, வெறித்தனமாக வந்திறங்கியது ஒரு மிருகக்கூட்டம். துறவிகளின் துரதிஷ்டம் அவர்களுக்கு முடிவாகவும், வந்திறங்கியவர்களுக்கு உலக சரித்திரத்தில் சாதிக்க இருப்பதற்கு முதல் நாளாகவும் ஆகியது. வந்திறங்கியவர்களின் சொந்த பூர்வீக இடம் கோத்ஸ் மற்றும் வண்டல்ஸ். ஸ்காண்டிநேவியாவிலிருந்து வந்த அந்தக் கூட்டம் “வைக்கிங்குகள்” ஆவார்கள்.
                                ஸ்காண்டிநேவிய மொழியில் “விகிங்க்ர்”(VIKINGR) என்றால் கடற்கொள்ளையர்கள் என்று அர்த்தம். இந்த வைக்கிங்குகள் பிரிட்டன் கரைகளையும், வடமேற்கு ஃப்ரான்சையும் சரியாக இரு நூற்றாண்டுகளாக தாக்கி இருக்கிறார்கள். இந்த ஸ்காண்டிநேவிய வைக்கிங்குகளில் சிலர்  வட அட்லாண்டிக்கிலும், பிரிட்டிஷ் தீவுகள் சிலவற்றிலும், நார்மண்டி, சிசிலி மற்றும் ரஷ்யாவின் இதயப்பகுதியிலும் குடியேறினர். எல்லா வைக்கிங்குகளும் அதே பூர்வீக இடத்திலிருந்து வந்தவர்கள் என்று மிகச்சரியாகச் சொல்லமுடியாது. ஆனால், வட இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து கரையிலிருந்து அயர்லாந்து வரை நார்வேயிலிருந்து வந்த கூட்டம்தான் தாக்கியது. ஸ்காண்டிநேவிய வைக்கிங்குகள் ஸ்காட்லாந்து தீவுகள்,ஐஸ்லாந்து மற்றும் அயர்லாந்தின் சில பகுதிகளிலும் குடியேறினார்கள்.
                                    டென்மார்க்கிலிருந்தும் வந்த சில வைக்கிங்குகள் சண்டையிட்டு பின் கிழக்கு பிரிட்டன், வடமேற்கு ஃப்ரான்ஸிலும் தங்கினார்கள். ஸ்வீடனிலிருந்து வந்தவர்கள் பால்டிக் வழியே தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் மையப்பகுதியில் வியாபாரிகளாக ஆனார்கள். பிரிட்டனின் கடலோரங்களில் அக்காலத்தில் சிறு சிறு ஆட்சியாளர்கள் சில பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தார்கள். மிகச்செழிப்பாக  இல்லாவிட்டாலும் வளமோடு இருந்தார்கள். இது கொள் ளைக்கார வைக்கிங்குகளை ஈர்த்தது. இதில் மிகவும் புகழ்பெற்ற லோனா என்ற தீவை தொடர்ந்து 795, 802, 805 ஆகிய ஆண்டுகளில் மூன்றுமுறை கொள்ளை அடித்தார்கள். பிரிட்டிஷ் தீவுகள் உள்ளுக்குள்ளேயே ஆறுகள் ஓடும்படியான பாதுகாப்போடு இருப்பது போல் தோன்றினாலும், வைக்கிங்குகளின் நீண்ட படகுகள் உள் நுழைந்து தாக்குவதற்கு வசதியாக இருந்தன. வழக்கமான தாக்குதலுக்குப் பிறகு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அங்கேயே தங்கிப்போனார்கள்.
                              வெகு விரைவில் ஸ்காட்லாந்தின் அனைத்து தீவுகளையும் கைப்பற்றினார்கள். பின் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் முக்கிய தரைப்பகுதிகளையும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். இவர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் உத்தி எதிரிகளைப் பயமுறுத்தி நிலைகுலையச் செய்தது. 838 ல் நார்வேனிய வைக்கிங்குகள் டப்ளின் நகரைக் கைப்பற்றி அயர்லாந்தில் நார்ஸ் மன்னராட்சியை அமைத்துக்கொண்டார்கள். டென்மார்க் வைக்கிங்குகள் முப்பது ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து கொள்ளை அடித்தும், போரிட்டும் 838 ல் கிழக்கு இங்கிலாந்தில் குடியேறினார்கள். மேலும், டென்மார்க் வைக்கிங்குகள் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பரப்புகளை சித்திரவதை செய்தும் துன்புறுத்தியும் வாங்கினார்கள். 866 ல் யோர்க், 867 ல் நாட்டிங்காம், 869 ல் தெட் ஃபோர்ட்டையும் வரிசையாகக் கைப்பற்றினார்கள். நார்தும்ப்ரியா, மெர்சியா மற்றும் கிழக்கு அங்கிலியா மன்னர்கள் வைக்கிங்குகளிடம் பயந்து ஒப்பந்தம் செய்ய சமாதானம் பேசினார்கள். 870 ல் டென்மார்க் வைக்கிங்குகள் வெஸ்ஸெக்ஸை நோக்கி முன்னேறினார்கள். படிக்கும் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் இறுதியில் எங்கே மோதவந்தார்கள் என்று ஆம் அதுதான் இங்கிலாந்து. கடுமையான ஒன்பது போர்களுக்குப் பிறகு 871 ல் ஆஷ்டவுனில் நடந்த போரில் வைக்கிங்குகளின் மன்னனும், ஒன்பது பிரபுக்களும் போர்களத்திலேயே கொல்லப்பட்டு வெல்லவே முடியாதவர்களாக இருந்த வைக்கிங்குகளை ஆங்கிலேயர்கள் முதல்முறையாக வென்றார்கள். இது வெஸ்ஸெக்ஸ் மட்டுமல்லாமல் எந்த ஆங்கில மன்னர்களையும் அவ்வளவு சுலபமாக வெல்ல முடியாது என்பதை உணர்த்தியது. டேனிஷ்கள் (வைக்கிங்குகள்/டென்மார்க்) அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு குளிர்காலத்தில் லண்டனை விட்டு வெளியேறினார்கள். ஆஷ் டவுன் வெற்றி ஆங்கிலேயர்கள் சரித்திரத்தில் புதியமுகமாக வெஸ்ஸெக்ஸ் மன்னனின் சகோதரன் ஆல்ஃப்ரடை அறிமுகப்படுத்தியது. இராணுவ வீரர்கள் இவனை வெஸ்ஸெக்ஸ் வீதியில் ஊர்வலமாக தூக்கி வந்தனர்.
                                இங்கிலாந்தில் மறுக்கப்பட்ட மிகவும் பாரம்பரியமான கதை இந்த ஆல்ஃபிரட் இடமிருந்து தான் ஆரம்பித்தது. அவனின் வீரத்திற்கு தகுதியானதாக அந்த வெற்றி அமைந்தது. ஆல்ஃபிரட் தான் முதல் ஆங்கிலோ-சாக்ஸன் ஆட்சியாளன். இவனை இங்கிலாந்தின் தேசிய தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அந்த பகுதிகளில் டேனிஷ்களை தடுக்க இவனேயே தகுதியானவனாக ஆங்கிலேயர்கள் கருதினார்கள். இவன் தான் முதல்முறையாக ‘தி கிரேட்’ என்னும் தகுதியை இங்கிலாந்தில் பெற்றான். மன்னனுக்குண்டான தகுதிகளை கற்றான். முப்பது ஆண்டு சிக்கல்களுக்குப் பிறகு, டேனிஷ்களை வென்று இந்த தகுதிகளை அவன் அடைந்தான். வெற்றிபெற்ற அதே 871 ம் ஆண்டு மூத்த சகோதரன் இறந்துவிட ஆல்ஃபிரட் வெஸ்ஸெக்ஸின் மன்னனாகப் பதவி ஏற்றான். முதல் காரியமாக ஆங்கிலேய கப்பல்படையை நிறுவினான். டேனிஷ்கள் தங்களை பலப்படுத்திக்கொண்டு சுழலும் நீண்ட வைக்கிங்க் கப்பல்களுடன் வந்தார்கள். ஆங்கிலோ-சாக்ஸன் தீவு இனமக்கள் பயத்திற்கு பதில் எதிர்க்க ஆரம்பித்தார்கள். 875 ல் ஆல்ஃபிரட் தன் கப்பல்படை மூலம் தானும் ஒரு கப்பலில் சென்று, முற்றுகை இட்ட ஏழு டேனிஷ் படகுகளில் ஒன்றை சிறைப்பிடித்தான். இந்த வெற்றி மேலும் அவன் புகழ்பெற உதவியது.
                                      தரையிலும் சில வெற்றிகள் பெற்றான். டேனிஷ்களை வெஸ்ஸெக்ஸை விட்டு விரட்டினான். எப்போது சமாதான உடன்படிக்கை ஏற்பட்டாலும், அதை ஒவ்வொரு முறையும் டேனிஷ்கள் மீறினார்கள். 878 ல் திடீரென்று டேனிஷ்கள் தாக்குதல் நடத்த, ஆல்ஃப்ரட் மேற்கு நோக்கி சோமர்செட் சதுப்பு நில பரப்புகள் உள்ள பகுதிக்கு தள்ளப்பட்டான். ஏதெல்னிய் என்ற கோட்டையில் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து டேனிஷ்களை எதிர்த்தான். ஆனால் மட்டரகமான முறையில் தோல்வியடைந்தான். இதன் மூலம் டேனிஷ்கள் வெஸ்ஸெக்ஸைக் கைப்பற்றி மொத்த இங்கிலாந்தையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுத்த சில மாதங்களில் சற்று பலத்துடன் மீண்டும் கிழக்கில் வில்ட் ஷயர் பகுதியில் எடிங்க்டன் என்ற இடத்தில் டேனிஷ்களை வென்றான். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த தாக்குதலில் ஈஸ்ட் ஏன்ஜிலியா என்ற இடத்தையும் ஆல்ஃப்ரட் கைப்பற்றினான். டேனிஷ் மன்னன் குத்ரும் அவன் கூடாரத்தில் சுற்றி வளைக்கப்பட்டான். தான் வெஸ்ஸெக்ஸை விட்டு விலகுவதாக மீண்டும் வழக்கம் போல் உறுதியளித்தான். மேலும் தான் கிறிஸ்துவ மதததைத் தழுவுவதாகவும் வாக்களித்தான். குத்ருமின் மதம் மாறும் விழா பார்ரேட் ஆற்றின்கரையில் ஆல்ஃப்ரடின் தலைமையில் 878 ல் நடந்தது. இரு கிறிஸ்தவ மன்னர்களும் வெட் மோர் என்ற இடத்தில் பனிரெண்டு நாட்கள் விருந்தும், கொண்டாட்டமுமாகக் கழித்தனர். இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தம் டேனிஷ்களை வெஸ்ஸெக்ஸை விட்டு  விலக்கியது.
                                885 ல் டேனிஷ் வைக்கிங்குகள் கெண்ட் பகுதியில் நுழைந்தனர். இது ஆல்ஃப்ரடுக்கு கிழக்கில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு 886 ல் டேனிஷ்களை விரட்டி லண்டன் நகரைக் கைப்பற்றினான். இந்த வெற்றிக்குப் பிறகு, மீண்டும் குத்ருமுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் ஆங்கிலோ-சாக்ஸன்களும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் டேனிஷ்களும் இருப்பதாக முடிவானது. டேனிஷ்களின் பகுதி டேன்லா என்று அழைக்கப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் நார்வே மன்னர்கள், அயர்லாந்து மன்னர்களுடன் போரிட்டார்கள். பல படையெடுப்புகளின் மூலம் பெரும் துயரத்தை இருவரும் சந்திக்க நேர்ந்தது. பத்தாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் சூழ்நிலை வைக்கிங்குகளுக்கு ஆதரவாக மாறியது. அவர்கள் அயர்லாந்தின் பலமான முக்கிய ஆறுகளைக் கைப்பற்றினார்கள். 914 ல் வாட்டர் ஃபோர்டும், 920 ல் லைம்ரிக் நகரையும் கைப்பற்றினார்கள். கார்க் பகுதி வைக்கிங்குகளால் பலமுறை கைப்பற்றப்பட்டது. வெக்ஸ்ஃபோர்டும் நார்வே வைக்கிங்குகள் வசமானது. அயர்லாந்தின் பெயர்பெற்ற மன்னன் பிரைன் போரு திருப்பி போரிட்டான்.
                              அயர்லாந்து மன்னன் பிரைன் போரு ஷன்னான் என்னும் ஆறு ஓடும் பகுதியில் பிறந்தவன். சிறிய பகுதியை ஆட்சி செய்த ஆட்சியாளர் ஒருவருக்கு மகனாகப்பிறந்த இவன் போரு என்றே அறியப்பட்டான். இவன் குடும்பத்தினர் ஒரு முறை வைக்கிங்குகளை எதிர்த்து வெற்றி பெற்றதால் ஆட்சி கிடைக்கப் பெற்றனர். 964 ல் போருவின் மூத்த சகோதரன் அயர்லாந்தின் மதிப்பும், சக்தியும் வாய்ந்த முன்ஸ்டர் பேரரசை எதிர்த்தான். அவர்களின் பலமான கேஷெல் என்ற பகுதியை வெற்றி கொண்டான். பின்னாளில் முன்ஸ்டர் பேரரசின் மன்னனாகி, தென் அயர்லாந்தில் வைக்கிங்குகளை அடக்கும் படைக்குத் தலைவனாகவும் ஆனான். 976 ல் போரு இரு பதவிகளையும் வெற்றிகரமாக அடைந்தான். போரு வைக்கிங்குகளை ஷன்னானிலிருந்து விரட்டினான். 1002 ல் போரு மொத்த அயர்லாந்துக்கும் மன்னன் ஆனான். 1013 ல் இவனின் போரால் நார்வே வைக்கிங்குகள் இடம் பெயர ஆரம்பித்தார்கள். 1013 ல் டப்ளினின் நார்வே வைக்கிங்க் மன்னன் ஓர்க்னிய்ஸ் என்ற நகரில் வேறொரு உள்ளூர் வைக்கிங்க் ஆட்சியாளருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடத்தில் இருந்தான். அப்போது இருவரும் ஒரு திட்டம் தீட்டினர். ஓர்க்னிய்ஸ் நகரின் ஆட்சியாளர் ஒரு கப்பலையும், இராணுவத்தினரையும் ஈஸ்டருக்கு முன் டப்ளினிக்கு அழைத்துவந்து அயர்லாந்து மன்னன் போருவை வெல்ல நார்வே வைக்கிங்க் மன்னனுக்கு உதவுவதாகத் திட்டம் இருந்தது.
                              குறிக்கப்பட்ட நாளில் ஏப்ரல் 23 1014 ல் டப்ளின் நகரின் கிழக்கிலிருந்து க்ளோண்டர்ஃப் என்ற இடத்தில் நார்வே வைக்கிங்குகளுடன் போரு போர்புரிந்தான். அவருக்கு அப்போது வயது 73 ஆனதால், படைகளுக்கு வெறும் உத்தரவு மட்டும் செய்துகொண்டிருந்தார். அவர் மகன் முர்சட் என்பவன் நேரடியாக களத்திலிருந்து போரிட்டு ஓர்க்னெய்ஸ் ஆட்சியாளனால் கொல்லப்பட்டான். இருந்தாலும் நார்வே வைக்கிங்குகள் தோல்வியுற்றனர். வைக்கிங்குகளின் தலைவன் போர்க்களத்தை விட்டு நழுவி, போருவின் கூடாரத்திற்குள் நுழைந்து அவரைக் கொன்றான். அயர்லாந்தின் க்ளோண்டர்ஃப் வெற்றி நார்வே வைக்கிங்குகளை மீண்டும் அயர்லாந்துக்குள் நுழையவிடாமல் செய்தது. ஆனால் வைக்கிங்குகள் டப்ளிங்கின் கடற்கரைப் பகுதிகளையும், வாட்டர்ஃபோர்டையும் விட்டுவிடவில்லை. மன்னர் போரு மற்றும் அவர் மகன் மரணங்களால் அயர்லாந்தும் சரியான ஆட்சியாளர் இல்லாமல் தடுமாறியது. இந்த தடுமாற்றத்துடனே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சக்திவாய்ந்த “நார்மன்கள்” அயர்லாந்தின் கரைப்பகுதிக்கு வரும் வரை ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
                                          சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கள் நீண்ட கப்பல்களில் ஐரோப்பிய வட கடலோரப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருந்த நார்வே வைக்கிங்குகள் நியோதிக் (ஓர்க்நெய்ஸ் மற்றும் ஷெட்லாந்து பகுதி) பகுதிகளை ஒட்டி உள்ள தீவுகளிலும், தங்களைச் சேர்ந்த சிலர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருக்கும் சிறு இடங்களிலும் தங்கியிருந்து தங்களுக்கான நிரந்தர இடத்தினைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில்பட்டது துறவிகளின் தீவான ஐஸ்லாந்து. துறவிகளை விரட்டி விட்டு ஐஸ்லாந்தைப் பிடித்த வைக்கிங்குகளுக்கு அங்கிருந்து மேலும் மேற்கு நோக்கி பரவ வசதியாக கிரீன்லாந்து அமைந்தது. ஆனால் இவர்களுக்கு முன் எஸ்கிமோக்கள் முந்திவிட்டார்கள்.
                                874 ல் வைக்கிங்குகளின் நீண்ட கப்பல்கள் ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் வந்து நங்கூரமிட்டது. நார்வே வைக்கிங்குகள் தங்கள் தலைவனாக இன்கூல்ஃபுர் அர்னர்சன் என்பவனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அவர்கள் குடும்பத்துடன், கால்நடைகளையும் கொண்டுவந்திருந்தனர். முதல் குழு புதிய இடத்தில் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித்தொழிலையும், ஆடு வளர்த்தலையும் அமைத்துக்கொண்டு வாழத்தொடங்கினார்கள். மற்ற குழுக்களும் பின்னால் வந்து அருகிலுள்ள தீவுகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். அவர்களின் மக்கள் தொகை 75,000 ஆக இருந்தது. இந்த ஐஸ்லாந்திலிருந்து சென்ற நார்வே வைக்கிங்குகள் தான் அமெரிக்க கண்டத்தில் முதல் ஐரோப்பிய குடியேற்ற நாடுகளாக கிரீன்லாந்து மற்றும் வின்லாந்தை ஆக்கிக்கொண்டார்கள்.
                                     ஐரோப்பாவின் வடமேற்கின் எல்லா பகுதிகளையும் கொள்ளையடித்தனர். ஃப்ரான்ஸின் கரையோரங்களிலும் கொள்ளையடித்து நாளடைவில் அந்தந்த இடங்களை குடியேற்ற பிரதேசங்களாக ஆக்கிக்கொண்டனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வட்டப்பகுதியாக சியானின் கீழ் புறத்தில் டேனிஷ்களின் ஒரு பகுதி இருந்தது. பத்தாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் ஸ்காட்லாந்திலும், அயர்லாந்திலும் பல சாதனைகளைப் புரிந்து தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு நார்வே நாட்டினன் அவர்களுடன் வந்து சேர்ந்தான். அவன் பெயர் ஹ்ர்ஊல்ஃப்ர் ஆகும். மேற்கத்திய சரித்திரத்தில் இவன் பெயர் ரோல்லோ தி கேங்கர். குறுகிய காலத்தில் ரோல்லோ சியானி வைக்கிங்குகளின் தலைவனாகி ஃப்ரான்சு நகரமாகிய சார்ட்ரெஸ் மீது போர் தொடுத்தான். ஃப்ராங்கிஷின் மன்னன் மூன்றாம் சார்லஸ் என்பவன் செயிண்ட் க்ளெய்ர் சுர் எப்டி என்ற இடத்தில் தனக்கு சேவையின் அடிப்படையில் உதவும் வகையில் (ஆங்கிலத்தில் FEUDEL SYSTEM) ரோவனைச் சுற்றியுள்ள பகுதிகளை ரோல்லோவுக்கு தருவதாக சமாதானம் செய்துகொள்ள போர் நின்றது.
                   வைக்கிங்கு என்ற வார்த்தைக்கு ஸ்காண்டிநேவியனில் நார்த்மேன் என்ற அர்த்தமாகும். புராதன ஃப்ரென்சுகள் நார்மண்ட் என்று அழைத்தனர். ரோல்லோவும், அவன் வழிவந்தவர்களும் ஒப்பந்தத்தை மீறி வேகமாக தங்கள் பகுதிகளை விரிவுபடுத்தி “நார்மன்”கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் ராஜ்ஜியம் எல்லைகளைத் தாண்டி விரிந்து கொண்டே போனது. ஆரம்பத்தில் கொலையிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வந்த சிறு குழு, இரக்கத்திற்கும், துரோகத்துக்கும் அடையாளமான அந்த கூட்டம் உலக சரித்திரத்தில் “நார்மண்டி” கள் என்ற அழியாத பெயரைப் பெற்றது. இந்த நார்மன்கள் தான் சிலுவைப்போரில் முஸ்லீம்களின் இரத்தத்தில் குளித்தது. இன்றுவரை இங்கிலாந்தில் ராஜவம்சமுமாய், மற்ற ஐரோப்பிய மன்னர்கள் பரம்பரையுமாய் இருப்பவர்கள் இவர்கள் தான். நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், ஆதியிலிருந்து கடற்கொள்ளையையே தொழிலாகக் கொண்டு, அதன் மூலம் ஐரோப்பாவில் பரவிய இவர்கள், இன்று கூட்டுப்படை அமைத்து ஆப்பிரிக்க கடற்கொள்ளையை அடக்குகிறார்களாம். இந்த ரோல்லோவின் ஆண் சந்ததி இரு நூற்றாண்டுகளாக முதலாம் ஹென்றி என்பவன் 1135 ல் இறக்கும் வரை ஆண்டது. இதற்கிடையில் ரோல்லோ கிறிஸ்தவனாக மதம் மாறி இருந்தான். அவன் மகன் முதலாம் வில்லியம் பிறப்பால் கிறிஸ்தவனான முதல் நார்மன் மன்னன் ஆவான்.
                                    வைக்கிங்குகளுக்கு மிகவும் பிடித்தமானது கொள்ளை அடிப்பது. இந்த கொள்ளை இவர்களை கடல்வழியே ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ரஷ்யா கொண்டு சேர்த்தது. அங்கு வியாபாரம் செய்ய துவங்கினார்கள். இயற்கையாகவே கிழக்கு ஐரோப்பாவின் ஆறுகள் வடக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் அமைப்பைக் கொண்டிருந்தது. இது பால்டிக் கடலுக்கும், கருங்கடலுக்கும் நடுவே வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. வினா, நெய்பெர் மற்றும் வோல்கா ஆறுகள் மிக அருகாமையில் இருந்தன. அவற்றின் அருகே இல்மென் என்ற ஏரி தான் பிரதானமான வியாபாரத்தலமாக இருந்தது. பால்டிக், கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடல் வந்து சேரும் கப்பல்களிலிருந்து, சிறிய படகுகளுக்கு மாற்றி வியாபாரப் பொருள்களை இங்கு கொண்டுவருவார்கள். ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இந்த பகுதி வியாபார வைக்கிங்குகள் நோவ்கோராட் என்ற இடத்தில் மையம் கொண்டு “ரஸ்” என்று அழைக்கப்பட்டனர். இந்த ரஸ்களின் பெயரில் தான் பின்னால் ரஷ்யா என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நெய்பெர் ஆற்றின் கீழ்ப்புறத்தில் தான் வியாபாரம் பரவலானது, இதுவே ரஷ்யா என்ற தேசம் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.
                                   882 ல் ஓலெக் என்ற ஒரு வைக்கிங்க் தலைவன் தன் வியாபாரத் தலைமையகத்தை நெய்பெர் ஆற்றின் கீழ் பகுதியில் மாற்றினான் பின் அருகிலிருந்த கீவ் என்ற நகரத்தைக் கைப்பற்றினான். 911 ல் இங்கு பைஸாந்திய பேரரசுடன் ஒரு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ரஷ்ய கீவ் நகரம் இரண்டு தலைமுறைக்குப் பின் தென்பகுதி மக்கள் பெருக்கமுள்ள பைஸாந்தியம், மத்தியில் பசுமையான ரஷ்ய பூமி, வடக்கில் இருண்ட காடுகள் என்ற அமைப்பில் இருந்தது. இங்கு கிரேக்கத்திலிருந்து தங்கம், துணிகள், மதுவகைகள் மற்றும் பழங்களும், செக்கோஸ்லாவேக்கியாவிலிருந்து வெள்ளி மற்றும் குதிரைகளும், மெல்லிய உரோமங்கள், மெழுகு, தேன் மற்றும் அடிமைகள் ரஷ்யாவிலிருந்தும் விற்பனைக்கு வந்தன. பத்தாம் நூற்றாண்டு வரை கீவ் நகரம் வைக்கிங்குகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 980 ல் வ்லாடிமிர் எதிரிகளிடமிருந்த கீவ் நகரத்தை வெற்றி கொண்டு மொத்த ரஷ்யாவின் இளவரசராக ஆனார். வைக்கிங்குகள் என்ன நினைத்தார்களோ அவர்களும் தங்களை ரஷ்யர்களாகவே மாற்றிக்கொண்டார்கள்.
                        வ்ளாடிமிரின் ஆரம்பகாலம் காட்டுமிராண்டிகளைப் போல் இருந்தது. எந்நேரமும் சண்டையும், பெண்வேட்கையுமாக இருந்தது. சரித்திர ஆதாரமாக சுமார் 800 பெண்களுடன் காம தொடர்பு வைத்திருந்தாராம். 988 ல் இவர் ரஷ்யாவுக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தார். தானும் துறவிபோல் மாறி, தூதுவர்களை நான்கு திசைகளிலும் அனுப்பி எது நல்ல மதம் என்று அறிந்து வரச்செய்தார். அறிந்து வந்தவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் கிரேக்க ஆர்தொடக்ஸை ரஷ்யாவுக்கான ஆட்சி மதமாகத் தேர்ந்தெடுத்தார். பழைய அரசர்கள், அவர்களின் வயதான இளவரசர்கள் என்று ரஷ்யா மிகவும் பழமை தோய்ந்திருந்தது. இடையில் வந்த ஸ்காண்டிநேவியா சாதனை (நாம் முன்பு பார்த்த) இளவரசனால் இடைவிடாமல் 600 ஆண்டுகள் ஆண்வாரிசுடன் ஆட்சி தொடர்ந்தது. ரஷ்யாவின் ராஜவம்சம் வைக்கிங்குகளுடன் நெருங்கிய தொடர்புடையது. நார்மன்களின் இங்கிலாந்து படையெடுப்பின் மூலமாகவோ அல்லது ஐஸ்லாந்து, கிரீன்லாந்து குடியேற்றத்தினாலோ இணைந்திருக்கலாம்.
                                           உயர்ந்த நிலப்பரப்பைக் கொண்ட ஐஸ்லாந்துக்கும், சிகரமுள்ள கிரீன்லாந்துக்கும் நடுவில் 175 மைல் மறைப்பில்லாத நீர் இருந்ததால் சில நேரங்களில் பார்க்கமுடியும். இது 981 ல் வைக்கிங்க் சாதனையாளன் எரிக் தோர்வல்ட் சன்னை (எரிக் தி ரெட்) கவர்ந்தது. இவன் ஒரு மனிதனை வெட்டிக் கொன்றதற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தான். எரிக் நீண்ட கப்பலில் தன் குடும்பத்தினர், அவர்களின் வேலைக்காரர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை ஏற்றிகொண்டு தூரத்தில் தெரிந்த அந்த சிகரத்தை நோக்கி பயணித்தான். அந்த தீவின் தென் பகுதியில் தற்போதைய ஜூலியன்ஹாப் பகுதியை அடைந்தான். அவர்கள் அங்கு மூன்று ஆண்டுகள் தங்க வேண்டிய கட்டாயமேற்பட்டது. பின் ஐஸ்லாந்து திரும்பி மேலும் குடியேற்றவாசிகளை தன்னுடன் அழைத்துக் கொண்டான். துல்லியமாக சிந்தித்து மக்களுடன் தொடர்பு ஏற்பட வேண்டும் என்று அந்த இடத்திற்கு கிரீன்லாந்து எனப் பெயரிட்டான். பின் மீண்டும் ஐஸ்லாந்து திரும்பி 25 நீண்ட கப்பல்களில் மக்களை அழைத்துவந்தான். அவர்களில் 12 கப்பல்கள் விருப்பமில்லாமல் பாதி வழியில் திரும்பிவிட 13 கப்பல்களில் 350 பேரும், கால்நடைகளும் வந்து சேர்ந்தன. அவர்கள் அங்கே நானூறு ஆண்டு களாக சிறந்த தட்பவெப்ப சூழ்நிலையில் வாழ்ந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, கிரீன்லாந்து முற்றிலும் மனிதர்களற்று கைவிடப்பட்டது. ஆனால் கிரீன்லாந்தை விட்டுத் தள்ளி வட அமெரிக்காவில் ஒரு குடியேற்ற பூமி நிறுவப் பட்டது.
                                    பதிமூன்றாம் நூற்றாண்டின் ஐஸ்லாந்து வாசிகளின்  சாதனைச் சரித்திரம் லீஃப் எரிக்சனைப் பற்றி பலவிதமாகக் குறிப்பிடுகிறது. எரிக்கின் மகன் லீஃப் என்பவன் வழக்கமாக குளிர் காலங்களைக் கழிக்க கிரீன் லாந்தின் மேற்குப் பகுதிக்குச் செல்வான். அப்படி வழக்கமாகச் சென்ற பகுதிக்கு வின்லாந்து என்று பெயரிட்டான். வின் என்ற சொல்லுக்கு வைன் என்னும் மதுவோ அல்லது சம அளவிலான பச்சைப்புல் நிரம்பிய பூமியோ காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இன்னொன்றில் ஒருமுறை லீஃப் நார்வேயி லிருந்து வரும் போது கடலில் வழி தவறிப் போனான். அவன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஜார்னிஹெர் ஜோல்ஃப்சன் சொன்ன பாதையில் சென்று விட்டதாகக் கூறுகிறது. அதன்படி 1000 ல் லீஃப் எரிக்சன் வட அமெரிக்காவில் மூன்று தீவுகளை இனம்கண்டு ஹெல்லுலாந்து, மார்க்லாந்து, வின்லாந்து என பெயரிட்டான். மற்றவர்களைப் பற்றி சரியான தகவல் இல்லை. அவர்கள் பஃப்ஃபின் தீவு, லேப்ரடார் அல்லது நியூஃபவுண்ட்லாந்து ஏதேனும் ஒன்றில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு என கருதப்படுகிறது. லீஃப் மீண்டும் தென்பகுதி நோக்கி பயணமானான்.
                           அடுத்த ஆண்டு லீஃப் கிரீன்லாந்து திரும்பினான். கொஞ்ச வருடங்கள் கழித்து போர் ஒன்று நடந்ததென்றும், அப்போது தோர்ஃபின் கர்ல்செஃப்னி என்பவனால் புதிய குடியேற்றம் நடந்ததென்றும், அவர்கள் வெறும் மூன்றாண்டு காலம்தான் அங்கு வாழ்ந்தார்கள் என்றும், சேவேஜெஸ் (SAVAGES) என்ற சொந்த அமெரிக்கர்கள் அவர்களை விரட்டி விட்டனர் என்றும் சாதனைப் புத்தகத்தில் உள்ளது. வடஅமெரிக்காவில் லான்ஸ் ஆக்ஸ் மேடோவ்ஸ் என்ற இடத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி, நியூஃபௌண்ட்லேண்டில் நீண்ட வீடுகள், மாபெரும் வராண்டா அமைப்புகள் வைக்கிங்குகள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரத்தைத் தெரியப்படுத்துகின்றன. ஆனால், வின்லாந்தின் வரைபடம் போலி என்பதை நிரூபிக்கிறது. நார்மன்களுக்கு பரவுவதற்கு ஃப்ரான்சின் ஃப்ராங்கிஷ் பேரரசு மிகவும் வலிமையாக இருந்தது. ஆனால், வைக்கிங்குகளுக்கு இயற்கையிலேயே உண்டான சாதிக்கும் ஆர்வம் அவர்களை விவசாயிகளாக அங்கே குடியேறச் செய்தது. சக்திவாய்ந்த கடல்கொள்ளையர்களாக இருந்த அவர்கள், ஃப்ராங்க்ஸ்களிடமிருந்து கற்ற மிகச்சிறந்த சக்திகொண்ட குதிரைப்படையை அமைத்துக்கொண்டு எதிர்த்தார்கள். பெயர்பெற்ற குடும்பத்திலிருந்து ஆர்வமுள்ள ஒரு இளைஞனை போர்பயிற்சி கொடுத்து இராணுவக் கூலியாக வைத்து கொண்டார்கள்.
                                1017 ல் நார்மன்கள் வட இத்தாலிக்கு வந்து போப்பின் எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டனர். மெடிட்டரேனியனில் ரோமன் கத்தோலிக்கத்தைச் தழுவியிருந்த நார்மன்களுக்கு இரண்டு விதமான எதிரிகள் இருந்தனர். ஒன்று இத்தாலியின் தென்பகுதியில் இருந்த பைஸாந்திய பிரதிநிதிகள் கிரேக்க வைதீக (GREEK ORTHODOX) கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவர்கள். சிசிலியில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முஸ்லீம்கள். 1059 லிருந்து போப் இரு பிரதேசத்திலும் நார்மன்கள் ஆள்வதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளில் நார்மன்களுக்கு ஆசையைத் தூண்டிய வாய்ப்பு அருகிலேயே கிடைத்தது. 1066 ல் ‘நார்மன் போர்’ என்ற ஒன்றை இங்கிலாந்தின் மீது திணித்தார்கள். இந்த 66 வது வருடம் உலக வரலாற்றில் ஐரோப்பாவைத் திருப்பிப் போட்டது. நீங்கள் இப்போதும் டட்டூஸ் என்னும் சனியனை உடலில் வரைவதிலும், ஆங்கில சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் இந்த 66 வது வருடத்தை சகுனித்தனமாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். டி-ஷர்டுகள், வாகனங்கள், ரெஸ்டாரண்டுகள், வாசனைப் பொருட்கள்(ரூட்66) என்று விடாமல் இன்றும் நினைவு படுத்துவார்கள். தங்களின் பூர்வீக ஸ்காண்டிநேவிய சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டி போரிட்டார்கள்.                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக