ஞாயிறு, 3 மே, 2015

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 1

 ஃப்ராங்ஸ்கள் ஏதோ இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்று எண்ணவேண்டாம். இஸ்லாத்தை யூதர்களுக்கு அடுத்து ஆதியிலிருந்து எதிர்த்து வரும் இரத்தவெறி பிடித்த ராஜவம்சக்கூட்டம். ஐரோப்பிய நாடுகளில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள். பலம் வாய்ந்த அமெரிக்க டாலரை வீழ்த்தி ஈரோ என்ற நாணயத்தை பல எதிர்ப்புகளுக்கிடையில் வெளியிட்ட அறிவாளிகள். டயானா, டோடி படுகொலையின் மூலக் குற்றவாளிகள். இன்றைய நேட்டோ படையின் கூட்டாளிகள். ஸ்பெயின், ஃப்ரான்சிலிருந்து இஸ்லாத்தை விரட்டியவர்கள். நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவதூறாகப் பிரசாரம் செய்வதற்கும், ஹிஜாப் அணியக்கூடாது போன்ற இஸ்லாத்துக்கு எதிரான சட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் யார், இவர்களின் உறவுமுறை என்ன எப்படி ஆட்சிகு வந்தார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளவே இந்த தொடர்.                                   

                        ஃப்ராங்க்ஸ்கள் எனப்படுபவர்கள் பிரான்ஸும், பிரிட்டிஷும் இணைந்த கூட்டுப்படையினராவர். ஃப்ராங்க்ஸ்கள் தான் முதலில் பிரான்சில் ராஜவம்ச வழியை கொண்டுவந்தவர்கள். அடிப் படையில் ஜெர்மனியின் பழங்குடிப் பிரிவின் ஒன்றிலிருந்து தான் ஃப்ரான்ஸ் என்ற வார்த்தை வந்தது.   ஐந்தாம் நூற்றாண்டில் மெரோ வின்ஜியன் பேரரசில் மெரோவிச் என்ற தலைவர் இருந்தார். ஃப்ராங்க்ஸ்களின் எதிர்காலம் இவரின் பேரன் க்ளோவிஸ் என்பவனில் இருந்து துவங்கியது. 481 ல் க்ளோவிஸ் முடிசூட்டிக்கொள்ளும் போது 15 வயது. அப்போது இந்த மெரோவின்ஜியன் பேரரசின் தலைநகரம் தூர்னை (தற்போதைய தெற்கு பெல்ஜியம்). க்ளோவிஸின் இரண்டு செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் சரித்திரத்தை மாற்றியது. ஒன்று, தன் பார்பேரிய (பார்பரியம் என்றால் நாகரீகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள் என்று பொருள்) மன்னராட்சியை ஆல்ப்ஸ் மலையின் வடபகுதி வரை பரப்பினான். இரண்டு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவனாக மதம் மாறினான். மற்ற பார்பரிய ஆட்சியாளர்கள் அரியனிஸம் என்ற மதக்கொள்கையில் இருந்தார்கள். க்ளோவிஸ் சோம்மி என்ற பகுதியில் இருந்து லொய்ரி என்ற பகுதி வரை மனசாட்சியற்ற வகையில், பல சதித்திட்டங்கள் தீட்டி சக பழங்குடியின பகுதிகளைக் கைப்பற்றினார். தென் கிழக்கிலிருந்த பர்கண்டியர்களை தனக்கு மரியாதை செய்ய வற்புறுத்தினான். தென் மேற்கில் விசிகோத் என்பவர்களையும் வென்று 507 ல் மெடிட்டரேனியன் கரை தவிர்த்து மொத்த பிரான்சையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
                           இந்த வெற்றிக்கு அவன் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியதும், காவுல் பகுதி மற்றும் ரோமுக்கு மரியாதை செலுத்தும் மற்ற அரிய இன விசிகோத்களும் பெரிதும் உதவியது தான் காரணம். மேலும்,  கிறிஸ்தவ வம்சத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டான். கான்ஸ்டண்டைன் பகுதியை வென்றதின் மூலம் (KENT) கெண்டைச் சேர்ந்த பக்திமிகுந்த ஈதெல்பெர்ட் என்பவளை திருமணம் செய்திருந்தான். மீண்டும் பர்கண்டிய இளவரசி  களோடில்டா என்பவளை மணந்தான். எதிரியான மற்றொரு ஜெர்மனிய பழங்குடியான அலமன்னியை தோற்கடிக்க தன் கணவனின் கிறிஸ்தவ மதமாற்றமே காரணம் என்று கூறினாள். அலமன்னியை வென்றதின் பிறகு, அவனின் இராணுவத்தினர் 3000 பேரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். க்ளோவிஸ் பாரிஸை தலைநகராக மாற்றிக் கொண்டு கிறிஸ்தவத்திற்கு முன்பிருந்த புராதன ‘சாலியன் ஃப்ராங்க்ஸ்’ சட்டங்களை இயற்றினான். இவனின் தலைநகர் மாற்றத்திற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பி கலவரமாகியது. இவனின் சாலியன் சட்டத்தை மட்டும் சில நாள் கழித்து ஏற்றுக்கொண்டனர். வட ஐரோப்பாவிலும், பிரான்சிலும் இவன் மன்னராட்சி புதிய எழுச்சியாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் மாறியது.
                               511 ல் க்ளோவிஸ் இறந்த பிறகு இவனது பகுதிகள் இவனின் நான்கு மகன்களால் பிரிக்கப்பட்டது. அவன் நீண்டகாலமாக உருவாக்கிய பேரரசு சமபாகமாக பிரிக்கப்பட்டு வலுவி ழந்தது. சில நாட்களில் மீண்டும் விரிவாக்கப்பட்டு முற்காலங்களில் மரியாதை செலுத்திய பர்கண்டி இணைக்கப்பட்டு 534 ல் ஃப்ரங்கிஷ் மன்னராட்சியானது. ஃப்ரங்கிஷ் மூன்று தனி மன்னராட்சியாக மாறியது. பழைய இடங்களும், நவீன பெல்ஜியம் மற்றும் வட கிழக்கு பிரான்சும் இணைந்து ஆஸ்ட்ரேஷியா ஆனது. க்ளோவிஸால் வெற்றி கொள்ளப்பட்ட மத்திய பிரான்சு பகுதி நியூஸ்ட்ரியா என்று அழைக்கப்பட்டு, பர்கண்டி அதன் சொந்த பெயரிலேயே இருந்தது. இரு ஆண்டுகளுக்கும் மேலாக க்ளோவிஸின் வழிவந்த வாரிசுகள் ஆண்டுவந்தார்கள். இடையில் நியூஸ்ட்ரியாவும், பர்கண்டியும் இணைக்கப்பட்டன. பின்னாளில் எல்லா பகுதிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே அதிகாரத்திற்கு வந்தது. 613 லிருந்து 639 வரை இரண்டாம் க்ளோடயர் மற்றும் அவன் மகன் முதலாம் டகோபெர்ட் ஆகியோரின் ஆட்சி உதாரணமாக அமைந்தது. டகோபெர்ட் இறந்ததும் ஃப்ரங்கிஷ் மன்னர்கள் மெதுவாக தங்கள் சொந்த அதிகாரத் தை இழக்க ஆரம்பித்து, ஜப்பானின் ஷோகுன் போல் அரண்மனை மேயர் மன்னரின் சமஅந்தஸ்துக்கு வந்தார்.
                               ரோமர்கள் சாம்ராஜ்ஜியத்தில் ‘மஜோர் டோமஸ்’ என்ற பதவியில் ஒருவர் இருந்து கொண்டு அரசு நிர்வாக த்தைக் கவனித்துக் கொள்வார். ஃப்ரங்கிஷ் மன்னர்களும் அதே போன்று பதவி உருவாக்கி தங்கள் ஆட்சியில் தலைமை நிர்வாக அதிகாரியை ‘மேஜர் பலாட்டி’ என்று அழைத்தனர். மேஜர் பின்னாளில் மேயர் என்று ஆகியது. இந்த மேஜர் பலாட்டிகள் மன்னருக்கும், இளவரசருக்குமான தொடர்புகள், ஆட்சியில் மன்னருக்கான ஆலோசனைகள், இராணுவ உத்தரவுகள் ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டனர். ஏழாம் நூற்றாண்டின் இடையில் ஆஸ்ட்ரேஷியா, நியூ ஸ்ட்ரியா மற்றும் பர்கண்டிக்கான மேயர்களுக்கிடையே அதிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. 679 ல் இரண்டாம் பெபின் என்ற ஆஸ்ட்ரேஷியாவின் மேயர் ஒரு மேயரின் கட்டுப்பாட்டில் தான் அனைவரும் செயல்படவேண்டும் என்று விடாமல் போராடி மூன்று அரசுக்கும் தானே முதல்முறையாக மேயரானார். இவரின் அதிகாரத்தில் புதிய கம்பீரமான பேரரசு உதயமானது. 714 ல் இரண்டாம் பெபின் மரணமடைந்தவுடன் கலவரம் வெடித்தது. இரண்டாம் பெபினுக்கு முறையான குழந்தைகள் இல்லை. தவறான உறவுகளின் மூலம் பிறந்த மகனும், பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள். உள்நாட்டு கலவரத்தில் இரண்டாம் பெபினின் முறையற்ற மகன் சார்லஸ் வென்று நாட்டை கைப்பற்றினான். இவனின் இராணுவத்திறமையால் சார்லஸ் மார்டெல் “தி ஹாம்மர்” என்று ஐரோப்பியர்களால் பின்னாளில் புகழப்பட்டான். இவனின் கிறிஸ்தவப் பெயர் கரோலஸ் (CARO LUS) என்பதால் இவனின் கீழ் வந்தவர்கள் கரோலின்ஜியன்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
                                   ஃப்ராங்கிஷின் பாரம்பரிய பூமியை ஆண்டு வந்த சார்லஸ் மார்டெல் தனது வட மற்றும் கிழக்கு எல்லைப் பகுதியில் தொல்லை கொடுத்து வந்த ஜெர்மனிய பழங்குடியினரான ஃப்ரிஷியன்கள், ஸாக்சன்கள் மற்றும் பவேரியன்களை எதிர்த்து நீண்ட போரை நடத்தினான். இதற்கு செயிண்ட் பானிஃபேஸ் என்ற கிறிஸ்தவ தொண்டுநிறுவனத்தின் ஆதரவும் இருந்தது. காவுல் பகுதியில் இருந்த அந்த பார்பேரியன் (நாகரீகமற்றவர்கள்) களால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொந்தரவு இருந்தது. ஆனால் தற்போது தென் பகுதியில் சக்திவாய்ந்த புதியவர்களால் தொந்திரவு வர ஆரம்பித்தது. அவர்கள் ஸ்பெயினில் காலூன்றியிருந்த அரபுக்கள். 711 ல் வந்த அரபுகள் ஸ்பெயினிலிருந்து வட பகுதி நோக்கி புயலைப் போல முன்னேறினார்கள். விரைவில் பைரெனீஸுக்கு அருகில் நெருங்கினார்கள். 720 ல் நார்போன்னையும், 725 ல் பர்கண்டியையும் வென்றார்கள். பிறகு, 732 வரை சற்று அமைதியாய் இருந்தனர். பின் மீண்டும் போர்டிவக்ஸ், பாயிஸ்டர்சை வென்று டூர்ஸ் நோக்கி முன்னேறினார்கள். டூர்ஸில் இஸ்லாமிய இராணுவம் சார்லஸ் மார்டெல் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
                              போர் நடந்தது பாயிஸ்டியர்சிலா அல்லது டூர்ஸிலா என்பது சரியாகத் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இரண்டு இடத்தையுமே குறிப்பிடுகிறார்கள். சார்லஸ் மார்டெல்லின் வெற்றி இஸ்லாமியப் படைகளின் முன்னேற்றத்தை மேற்கில் முற்றிலுமாகத் தடுத்து விடுகிறது. இது குறிப்பிடும் படியான திருப்புமுனையாக அமைந்தது. 741 ல் ஸ்பெயினிலிருந்து இதே போன்று பெர்பெர் கூலிப்படைகள் காவுலில் தோற்கடிக்கப்பட்டன. இஸ்லாமிய படைகளை ஐரோப்பாவிலிருந்து திருப்பி விரட்டியதால் சார்லஸ் மார்டெல்லுக்கு ஐரோப்பிய கிறிஸ்தவ சரித்திரத்தில் தனி இடம் கிடைத்தது. அவன் தங்கள் பூர்வீக மெரொவின்ஜியன் சக்தி தனக் கிருப்பதாக கற்பனை செய்து வைத்திருந்தான். அதேபோல் தான் அவன் மகன் மூன்றாம் பெபின். இவன் 743 ல் சைல்டெரிக் என்னும் ஒரு பொம்மை மன்னனை ஆட்சியில் வைத்திருந்தான். பின் என்ன நினைத்தானோ போப் ஆண்டவரின் ஒப்புதலைப் பெற்று 751 ல் அந்த மன்னனை நாட்டை விட்டே துறத்தினான். ஃப்ராங்க்ஸ்கள் ராஜ்ஜியத்தில் எது செய்தாலும் போப்பின் தேவஆசி பெற்றே செய்தார்கள். மூன்றாம் பெபின் 768 ல் இறந்தான்.
                           எட்டாம் நூற்றாண்டில் சார்லஸ் மார்டெல்லின் பேரனும் மூன்றாம் பெபினின் மகனுமான சார்ல்மாக்னி மன்னனாக பதவியேற்றான். ஆரம்பத்தில் வெறும் சார்லஸ் ஆக இருந்த இவன் பெயர் லத்தீன் மொழியின் வரிசையில் “சார்ல்மாக்னி” (CHARLEMAGNE- சார்லஸ் தி கிரேட்) என்று அழைக்கப்பட்டது. இவனின்  ஃப்ராங்க்ஸ் பேரரசு மட்டுமே பிரான்சையும், ஜெர்மனியையும் இணைத்து (சில ஆண்டுகள் மட்டும் நெப்போலியன் ஆண்டான்) ஒன்றாக ஆட்சி செய்தது. தந்தையின் பாரம்பரிய தேசமான மேற்குப்பகுதி, தென் மேற்கு பிரான்சிலிருந்து கடற்கரைப் பகுதியை ஒட்டி நெதர்லாந்தும், வட ஜெர்மனி பகுதியும் சார்ல்மாக்னிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, சார்ல்மாக்னியின் சகோதரன் கார்லோமான் இறந்த பிறகு, அவனின் பூர்வீக தேசமான மத்திய பிரான்ஸ் மற்றும் தென்மேற்கு ஜெர்மனியும் இவன் வசமே வந்தது. இவன் 814 ல் இறக்கும் போது மீதி இருந்த ஜெர்மனி பகுதியும், வட இத்தாலியும் இவன் ஆட்சியின் கீழேயே இருந்தது. சார்ல்மாக்னி பதவிக்கு வந்த முதல் ஆண்டு போப்பின் ஆசி பெற்று வட இத்தாலி மீது படையெடுத்தான். இவன் குழந்தையாய் இருந்த போதிலிருந்து இவன் குடும்பம் ரோமின் போப்பிடம் பலமான உறவை வைத்திருந்தது. செயிண்ட் டெனிஸில் 754 ல் போப் இரண்டாம் ஸ்டீபனிடம் பன்னிரண்டாவது வயதில் தந்தை, சகோதரர்கள் உடனிருக்க சார்ல்மாக்னிக்கு  எண்ணெய் ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லம்பார்ட்களை எதிர்த்து இத்தாலியின் மீது இருமுறை படையெடுத்தார். 772 ல் வேறொரு போப் முதலாம் அட்ரியன் என்பவர் மீண்டும் ஒருமுறை எண்ணெய் ஸ்நானம் செய்ய கேட்டுக்கொண்டார். அதன்படியே செய்து தந்தையைப் போலவே இத்தாலி மீது 773 மற்றும் 774 ல் படையெடுத்தார். இது ஆட்சியின் பரப்பளவை பெரிய அளவில் அதிகரிக்கவும், “கிங் ஆஃப் தி லம்பார்ட்ஸ்” என்ற பட்டம் கிடைக்கவும் வழி செய்தது.
                                     சார்ல்மாக்னி தன் பகுதியை ஆல்ப்ஸ் மலையின் வடக்கே இருந்து கிழக்குபக்கமாக பவேரியாவையும் சேர்த்து விரிவுபடுத்தினான். ஆனால் ஜெர்மனி சாக்ஸன்களுக்கு எதிராக மாறியது. சாக்ஸன்களும், ஜெர்மனி பழங்குடியினரும் ஃப்ராங்கிஷ் பகுதிகளுக்காக அடிக்கடி தங்கள் காடுகளிலிருந்து வந்து சண்டையிட்டனர். சார்ல்மாக்னி சாக்ஸன்களை அழித்து, அவர்களின் சிலை வழிபாட்டுப் பழக்கத்தை மாற்றினான். 772 ல் சார்ல்மாக்னி கொடுமையான முறையில் அவர்கள் மீது படையெடுத்து, உலகை தாங்கிக் கொண்டிருப்பதாக அவர்களால் நம்பப்பட்டு வந்த “இர்மின்சுல்” (IRMINSUL)  என்ற மிகப்பெரிய மரத்தூணை உடைத்து எறிந்து புனிதக் கோயிலைத் தரைமட்டமாக்கினான். சார்ல்மாக்னிக்கு அவர்களை வெல்ல 30 ஆண்டுகளாயின. 804 க்குப் பிறகு, முடிவாக அவர்கள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி இவனின் பேரரசில் குடியேறினர். இது ஒரு கொடூரமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இராணுவ நடவடிக்கை மூலம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். அவனின் சட்டப்புத்தகத்தில் கிறிஸ்தவமதம் மாற மறுத்தால் மரணதண்டனை என்று குறிப்பிட்டிருந்தான். நம்பத்தகுந்த தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் ஒரே நாளில் மதம்மாற மறுத்த 4500 சாக்ஸன்களைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக