ஞாயிறு, 28 ஜூன், 2015

மொகலாய வரலாறு 6

                                         ஓமர் ஷெய்க் மிர்சாவுக்கு பாபர் தான் மூத்த பிள்ளை. இவர் தாயாரின் பெயர் கூத்லுக் நிகார் கானும். இரண்டு வயது இளையவராக ஜஹா ங்கீர் மிர்சா என்று ஒரு சகோதரர். இவரின் தாயார் பாரம்பரியமிக்க மொகல் துமான் என்ற பரம்பரையைச் சேர்ந்த ஃபாத்திமா சுல்தான் ஆவார். மூன்றாவது சகோதரர் நாசிர் மிர்சா இவரின் தாயார் அந்திஜான் நாட்டைச் சேர்ந்த உமெய்த் ஆவார். பாபரின் தாயாருக்குப் பிறந்த கான்ஸாதே பேகம் என்ற சகோதரி ஒரு வர் இருந்தார். உமெய்த் என்னும் தாயாருக்கு பிறந்த மெஹர்பானு பேகம், ஷெஹெர்பானு பேகம் என்று மேலும் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அகா சுல்தான் என்னும் அதிகாரமில்லாத தாயார் மூலம் யாத்கார் சுல்தான் என்ற சகோதரியும், சுல்தான் மக்தூம் பேகம் என்ற தாயாருக்குப் பிறந்த ருக் கையா சுல்தான் அல்லது கரகூஸ் பேகம் என்ற சகோதரியும் இருந்தார்கள். பாபரின் தாயார் கூட்லுக் நிகார் கானும் மகனுடன் பல போர்களில் உடன் சென் றார். பாபர் காபூலை வென்ற ஆறு மாதங்களில் தாயார் இறந்து போனார்.  
                                                      இவரின் உறவுக்காரர்கள் இவரைப் பதவியை விட்டு விரட்டி, இவரின் ராஜ்ஜியத்தை திருடிக்கொண்டார்கள். இவர் மீது கருணை கொண்ட சில மக்களும், சில நண்பர்களும் இவருக்கு உணவளித்து தங்க இடம் கொடுத்து ஆதரித்தனர். மூன்று முறை போரிட்டு வென்று சில மாதங்களே சமர்கண்டை வைத்திருந்தார். பின்னர் ஏழு மாத கடும் சிரமத்திற்குப்பின் பாபர் சமர்கண்டை நகரைக் கைப்பற்றினார். உடன் கடுமையான நோயில் விழுந் தார். நோய் வாய்பட்டிருந்த இந்த தருணத்தைப் பயன்படுத்தி, இவரின் பேரா சைப்பிடித்த மந்திரி ஒருவன் பாபர் இறந்துவிட்டதாகப் புரளி கிளப்பி ஃபர்கா னாவை  கைப்பற்ற சமர்கண்டிலிருந்து படையுடன் சென்றான். அவன் கிளம் பியவுடன் அவனின் உறவினன் அலி என்பவன் 1498 ல் சமர்கண்டை அபகரித் துக் கொண்டான். பின் 1499 ல் ஃபர்கானாவையும் கைப்பற்றிக் கொண்டான். ஆனால், உஸ்பெஸ்கிஸ்தான் அவனை அமைதியாக ஆட்சி செய்ய விடவில் லை. அவன் 1501 ல் கடுமையான போரில் தோற்கடிக்கப்பட்டு உயிர் தப்பி ஃபர் கானாவையும், சமர்கண்டையும் இழந்து ஓடினான்.
                                                    நோயிலிருந்து மீண்டு வந்த பாபர் இதன்பிறகு  1502 ல் இந்துகுஷ் பகுதியில் காபூலைக் கைப்பற்ற முயற்சி மேற் கொண்டார். இவரின் உறவினர்கள் ஆண்ட காபூலை இவர்களின் வம்சாவழியில் வரும் ஒரு இளவ ரசன் மட்டுமே ஆளமுடியும் என்று கேள்விப்பட்டார். 1504 ல் கடும் போராட்டத் திற்கு  பின் காபூலை வென்றெடுத்தார். தங்கள் மூதாதையர்களின் பாரம்பரிய முறைப்படி காபூலில் தோட்டம் அரண்மனை அமைத்து ஆட்சி புரியத் தொடங் கினார். மேற்கில் முதலாம் இஸ்மாயில் என்ற மன்னரின் தலைமையில் சக்தி வாய்ந்த பெர்ஷிய பேரரசும், வடக்கில் ஷைபானிகான் தலைமையில் முரட் டுத் தனமான உஸ்பெஸ்கிஸ்தான் அரசும் இருந்தது. இந்த இருஅரசுகளைத் தவிர்த்தே பாபர் இந்தியாவின் மீது வெற்றி கொள்ள விருப்பம் கொண்டார். அதைத் தொடர்ந்து கந்தஹார், ஹிராத், பதக் ஷான் ஆகிய நகரங்களையும் வென்றார். 1513 ல் பெர்ஷியாவின் ஷாவுடன் இணைந்து போகரா மற்றும் சமர்கண்டை மீண்டும் வென்றார். இவரையும் உஸ்பெஸ்கிஸ்தான் மக்கள் நிம்மதியாக ஆளவிடவில்லை. காரணம் இவர் ஷியா பிரிவு முஸ்லிம்களான அவர்களுக்கு எதிரான சுன்னி பிரிவைச் சேர்ந்தவராக இருந்தார். 24 காவது வய தில் முகச்சவரம் செய்யத் துவங்கினார். துருக்கிகள் முதன்முதலில் முகச்சவ ரம் செய்வதை சகவயது வாலிபர்களுடன் குதூகலமாக கொண்டாடுவார்கள். 1505 ஷாபான் மாதத்தில் ஹிந்துஸ்தானை வெல்லும் எண்ணத்துடன் காபூலி லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அதினாபூர் வந்தடைந்தார். பாபர் கண்ட மனிதர்கள், புல், மரங்கள், மிருகங்கள் அனைத்திலும் ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார்.
கைபரைக் கடந்து ஜாம் என்ற இடத்தில் முகாமிடு கிறார். பெஷாவரில் குர்கத்ரி என்ற இடத்திற்கு இந்துக்கள் தலைமுடி காணிக் கை செலுத்த வருவார்கள் என்று அறிகிறார்.  தங்களுக்கு ஹிந்துஸ்தானுக்கு வழிகாட்டியாக வந்த மாலிக் பு சயீத் கமரி என்பவரிடம் குர்கத்ரியைப் பற்றி விசாரித்தார். அவர் சரியான விளக்கம் சொல்லவில்லை.
                                                         கஸ்னினிலும், கோரசானிலும் தனது அதிகாரத்தை நிலை நாட்டிவிட்டு, சற்று பலத்துடன் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய இருந் தார். அப்போது டெல்லியை ஆப்கானைச் சேர்ந்த லோடிகள் ஆண்டு வந்தனர். இவர்களுக்கு முஸ்லீம் புரட்சி குழுக்களிடமிருந்தும், ராஜபுத்திர இந்து ஆட்சி யாளர்களிடமிருந்தும் மிரட்டல்கள் இருந்தன. திறமை வாய்ந்த ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி மரணித்திருந்தார். அவருக்குப்பிறகு, அவரின் முட்டாள் மகன் இப்ராஹிம் லோடி டில்லியில் பதவியிலிருந்தார். இவரின் திறமையற்ற ஆட் சியும், முரட்டுத்தனமான நடவடிக்கைகளும் இப்ராஹிம் லோடியின் உறவின ர்களுக்கு பிடிக்காமல் போனது. மேலும், அதிகாரிகளையும் தரக்குறைவாக நடத்தியதால் அவர்களும் இவர் மீது வெறுப்பாக இருந்தனர். இதனால் இப்ரா ஹிம் லோடிக்கு எதிராக இரகசிய திட்டம் தீட்டினார்கள். பெங்கால், ஜான்பூர், மால்வா, குஜராத் மற்றும் சில பிரதேசங்கள் சுதந்திரமாகிப் போயின. கிழக்கு மாநிலங்களான குத், பீஹாரில் மன்னனுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். இப்ரா ஹிம் லோடியின் உறவினர் அலாவுத்தீன் புரட்சியில் ஈடுபட்டு, ஏற்கனவே பாபரை இந்தியாவுக்கு வர ஆலோசனை கூறியிருந்தார். ஏற்கனவே நான்கு முறை இந்து ஆற்றின் கரையைக் கடந்து இந்தியா வர முயற்சித்த பாபர் ஏதே னும் ஒரு காரணத்தால் தோல்வி அடைந்து திரும்பியவர்.
                                                    1525 ல் இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கருதிய பாபர் லாஹூர் வழியாக இந்தியா வந்து தௌலத்கானுடன் போரிட்டு பஞ்சாபைக் கைப்பற்றி, டெல்லியை நோக்கி முன்னேறினார். இப்ராஹிம் லோடியும் படைகளை ஒன்று திரட்டி பாபரை ஆக்ராவில் எதிர்த்தான். 1526 ல் இரு படைகளும் நேருக்குநேர் சரித்திரப்புகழ் வாய்ந்த பானிபட் என்ற இடத்தில் சந்தித்தன. பாபர் தனது 12,000 வீரர்கள் அடங்கிய படையை திறமையாக திட்ட மிட்டு அமைத்திருந்தார். இப்ராஹிம் லோடி 100,000 வீரர்கள் அடங்கிய பிரமா ண்டமான படையுடன் வந்து போரிட்டான். பாபரின் பீரங்கி வீரர்கள் மிகச் சரி யான இடத்தில் நின்று போராடியதால், பாபர்,இப்ராஹிம் லோடியை வென்று டெல்லி மற்றும் ஆக்ராவைக் கைப்பற்றினார். 1526 ஏப்ரல் மாதம் 22 ந் தேதி வெள்ளிக்கிழமை டெல்லியின் தலைமை மசூதியின் உரை புதிய பேரரசர் பாப ரின் பெயரில் துவங்கியது. அந்த முதல் வெற்றி சாதாரணமானது அல்ல. எதிர் காலத்தில் இந்தியா என்ற பரந்ததேசத்தை ஆளப்போகும் அவர் சந்ததிக்களுக் கான முதல் வெற்றி. இந்த நிலையில் இப்ராஹிம் லோடியின் தாயார் பாபரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்தார். அது நடந்திருந்தால், இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரி மாறியிருக்கும். பாபருக்கு ஆரம்பத்தில் நிறைய எதிர் ப்பு கிளம்பியது. இவருக்கெதிராக நாடெங்கும் கலவரங்களும் நடந்தன. பாபர் தனது சாமர்த்தியமான பதவியேற்பு விழா பேச்சில் அனைத்தையும் அடக்கி னார். தன் எதிர்காலமும், மரணமும் இந்தியாவில் தான் நடக்குமென்றும், மிகச்சிறந்த ஆட்சியைத் தன்னிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கலாம் என்று உறுதிபட பேசினார்.
                                                     இவரின் இந்த பேச்சு இந்தியாவின் ராஜபுத்திரர்களை உசுப்பிவிட்டது. ராஜபுத்திரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருந்தார்கள். இந்தியாவின் ஆட்சி ஆப்கானைச் சேர்ந்த ஒருவருக்கும் பங்காகிப்போனதால், திட்டமிட்ட அனைத்து சிறு இந்து இளவரசர்களும், மேவாரின் ராஜாவும் ராணா சிங் தலைமையில் ஒன்று கூடினார்கள். இந்தியாவின் பல பகுதிகளை சிறு மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். ராஜபுத்திர வம்சத்தில் ராணா புகழ் பெற்றவ ராக இருந்தார். மேவார் ராஜா மற்றும் அஜ்மீர், சிக்ரி, ரைசின், புண்டி, சந்தர், கார் காவுன், ராம்பூரா இளவரசர்கள் ராணாவுக்கு தலை வணங்குபவர்களாக இருந் தார்கள். ராணா பாபரை சந்திப்பதற்கு முன்னாலேயே நூறு போர்களைச் சந்தி த்தவர். எண்பது வீரத்தழும்புகளை உடல் முழுதும் பெற்றிருந்தார். ஒரு கையையும், ஒரு காலையும், ஒரு கண்ணையும் போர்களில் இழந்திருந்தார். 1527 பிப்ரவரியில் ராணா முகாமிட்டிருந்த ஃபதே பூருக்கு அருகிலிருந்த சிக்ரி என்ற கிராமத்திற்கு, பாபர் ஆக்ராவிலிருந்து புறப்பட்டார். முதல் தாக்குதலி லேயே பாபரின் படையை ராஜபுத்திரர்கள் திருப்பி விரட்டினர். பாபரின் படை நட்சத்திரக் கூட்டம் போல் சிதறியது. இக்கட்டான ஒரு தருணத்தில் பாபரின் இரத்தக்குழாய் ஒன்று வெட்டுப்பட்டு, எப்போதுமே பயன் பெறாது போனது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக