ஸஹீருத்தீன் முஹம்மது என்ற பாபர்
கூ.செ.செய்யதுமுஹமது“மெமாயர்ஸ் ஆஃப் ஜஹீர் எத் தின் முஹம்மத் பாபர்” என்று பாபரால் கைப்பட துருக்கி மொழியில் எழுதப்பட்ட மூலப் புத்தகத்தை ஜான் லெய்டென் மற்றும் வில்லியம் எர்ஸ்கீன் ஆகியோர் 1826 ல் ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கப்பட்டு, இந்தியன் சிவில் சர்வீசிலும், யூனிவர்சிடி ஆஃப் டப்ளினில் அரபிக், பெர்ஷியன் மொழி மற்றும் இந்திய வரலாற்றுப் பேராசிரிய ராக இருந்த ஸர். லூகாஸ் கிங் அவர்களால் மறுபதிப்பும் செய்யப்பட்ட புத்தகத் தின் தமிழ் மொழி மாற்றம் இந்த வரலாறு. அவர், ஜஹீருத்தீன் முஹமது பாப ரின் உடை, உணவு மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். சென்ற நாடுகள், அதன் காட்சிகள், தட்பவெப்ப நிலை, கலைநயம், மனிதர்களின் குணாதிசயம் ஆகியவற்றைப் பற்றி பாபர் விளக்கி இருப்பதை படிக்கும் போது நாம் உடன் இல்லையே என்று வருத்தம் தருவதாக லூகாஸ் கிங் புகழ்கிறார். இதன் ஆதி பெர்ஷிய மொழி மூலப்புத்த கம் 1590 ல் அப்த் உர் ரஹீம் என்பவரால் எழுதப்பட்டது. இதன் இரண்டு புத்தகங் கள் பாரீஸ் ப்ப்ளிக் லைப்ரரியிலும், ஒரு புத்தகம் தன்னிடமும், ஒரு புத்தகம் இந்திய அரசாங்கத்திடமும் (பு. எண்:2989), ஒரு புத்தகம் பிரிட்டிஷ் அருங்காட்சி யகத்திலும் இருப்பதாக லூகாஸ் கிங் கூறுகிறார். பயண்டாஹ் கான் மற்றும் முஹம்மது கூலியின் 1586 ம் வருட இதே புத்தகம் இடங்களும், பெயர்களும் மற்றும் முழுமை பெறாத நிலையில் (6588 II- 913) இந்திய அரசில் இருப்பதாக வும், 1590 ல் ஷெய்க் ஸெய்னுத்தீன் க்வாஃபி அவர்களால் எழுதப்பட்ட இதே புத்தகம் முடிக்கப்படாத நிலையில் (1999-26202) ஒன்று உள்ளதாகவும் சொல்கி றார். 1817 ல் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட புத்தகம் ஏனோ வெளியிடவில்லை.
அப்போதைய ஆசியா கண்டம் இரு பகுதிகளாக இருந்தது. சீனாவிலிருந்து சங்கிலித் தொடர் போல் மலைகள் கிழக்கிலும், கருங்கடலும், மெடிட்டரேனியன் பகுதியுடன் மேற்கிலும், வட மேற்கில் மலைப் பகுதிகளாக அஸ்ஸாம், பூடான், நேபால், ஸ்ரீநகர், திபெத் மற்றும் லடாக் பகுதிகள் இருந்தன. மேற்கிலிருந்து வடக்காக பெஷாவர் மற்றும் காபூல் இருந்தது. மேற்கிலிருந்து தென் மேற்காக சிறு சிறு மலைகளாக பிரிந்து கோரசான் பகுதியை தனியாக்கி யது. கிழக்கு காஷ்மீர் பகுதி இந்துக்கள் நிறைந்ததாக இருந்தது. மேற்கு காஷ் மீர், தார்த், திபெத்பால்டி, சிறிய திபெத், சிட்ரால் மற்றும் காஃபிர்ஸ்தான் பகுதி களில் கோவார், பஞ்சாபி, ஷினா, காஃபிர் போன்ற மொழிகள் பேசிய மக்கள் கலந்திருந்தனர்.
முஸ்லிம் பேரரசர் பாபர் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர், இவர் திட்டமிட்டு வெற்றிகரமாக மொகலாயப் பேரரசை இந்தியா வில் நிறுவினார். பாபரின் தந்தை பெயர் உமர் ஷெய்க் மிர்ஸா, மத்திய ஆசியப் பகுதியின் தைமூர் இனத்தைச் சேர்ந்தவர். ஃபர்கானா என்ற மாகாணத்தின் ஆட்சியாளராக இருந்தார். பாபர் தந்தை வழியாக தைமூர் இனத்தையும், தாயின் வழியாக மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கானின் பரம்பரையையும் சேர்ந்தவர். இவர் தைமூரித் மற்றும் சகாதாய்-துர்கிக் என்னும் வழிமுறையி லேயே அறிமுகப் படுத்தப்பட்டார். இவரின் வீரம், பயிற்சி மற்றும் கலாச்சாரம் பெர்ஷிய கலாச்சாரத்தை ஒத்து இருந்தது. பாபர் 1483 பிப்ரவரி மாதம் 24 ந் தேதி இன்றைய உஸ்பெஸ்கிஸ்தான் பகுதியில் அண்டிஜான் என்ற இடத்தில் பிறந் தார். இவர் சார்ந்த மங்கோலிய வம்சம் துருக்கியையும், பெர்ஷியாவையும் ஆண்டது. இவரின் பெயர் ஸஹிருத்தீன் முஹம்மது ஆகும். பாபர் என்ற இவ ரது விருப்பப்பெயர் பெர்ஷிய மொழியில் சிங்கத்தைக் குறிக்கும்.
இந்தியாவில் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய பாபர் அவர்களின் ஆரம்ப வாழ்க்கை என்னதான் மன்னனின் மகனாய் இருந்தாலும் அவ்வளவு ஆனந்தமாக இருக்கவில்லை. துரோகம், கவலை, உயிர் காக்கும் போராட்டம் என்று வயதிற்கு மீறிய சிரமத்தில் இருந்தது. 1494 ல் தனது பனிரெ ண்டாவது வயதில் தந்தைக்குப் பிறகு, ஃபர்கானா மாகாணத்தின் மன்னனாக முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தார். ஃபர்கானாவைச் சுற்றியுள்ள சிறு சிறு பகுதிகளை இவரின் இரு பிரிவு குடும்பவாரிசுகளே போட்டி பொறாமையு டன் ஆண்டார்கள். பல ஆசிய பகுதிகளை வெற்றிகரமாக ஆண்ட மன்னரான தைமூர் பேக் 1405 ல் சிர் ஆற்றின் அருகில் ஓட்ரார் நகரத்தில் இறந்து போனார். இவரின் வாரிசுகள் ஆளத்தகுதி இல்லாமல் ஒற்றுமையின்றி இருந்தார்கள். இறக்கும் தருவாயில் மகன்களையும், மற்ற உறவினர்களையும் சிறு பகுதி யாக பிரதேசங்களைப் பிரித்து கொடுத்து ஆளச் செய்தார். இவரது பேரன் கலீல் என்பவர் பாட்டனாரின் தலைநகரான சமர்கண்டிலிருந்து ஆட்சி செய்தார். இவ ரை சுற்றி இருந்தவர்களே கலீலை கொன்று விடுகிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட கலீலின் மாமனும், தைமூரின் கடைசி மகனுமான ஷாருக் 1415 ல் தான் ஆண்டு கொண்டிருந்த கோரசான் பகுதியிலிருந்து வெகுண்டு வந்து கலகக்காரர்களை அடக்கி சமர்கண்டை கைப்பற்றினார். 1446 ல் இறக்கும் வரை ஆண்டு வந்தார். அவருக்குப் பிறகு அவ ரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை ஆங்காங்கிருந்த அவர் மகன்களும் கவர்னர்களும் பங்கு போட்டு ஆண்டார்கள். இவரின் பகுதி மூத்த மகனான உலுக் பேக் வசம் வந்தது. உலுக் பேக் திறமையுடன் சமர்கண்டை ஆண்டார். பதவிக்கு வந்தவுடன் கோரசானை அபகரித்த சகோதர் மகன் அலா உத் தௌ லத் மீது முர்காப் ஆற்றின் அருகே போரிட்டு விரட்டினார். அலா உத் தௌலத் தன் சகோதரன் பாபர் மிர்சாவிடம் ஓடி அடைக்கலம் அடைந்தான். பாபர் மிர்சா தனது பாட்டனார் ஷாருக் காலத்திலிருந்து கஸ்பியனின் தென் கிழக்கில் உள்ள ஜோர்ஜான் (அல்லது கோர்கான்) என்ற பகுதியை ஆண்டு வந்தான். தன் சகோதரன் அலா உத் தௌலதுக்கு உதவும் வண்ணம் பாபர் மிர்சா உலுக் பேக் மீது படையெடுத்து வந்தான். ஆனால் படுதோல்வி அடைந்து தன் சொந்த தலைநகரமான அஸ்தராபாத்தையும் இழந்தான். இரு சகோதரர்களும் உயிர் பிழைத்து ஈராக்கை ஆண்ட மற்றொரு சகோதரன் முஹம்மது மிர்சாவிடம் ஓடினார்கள். உலுக் பேக் திரும்பிய பிறகு தான் பாபர் மிர்சா கோரசான் வந்தார். இதற்கிடையே உலுக் பேக்கின் சொந்த மகன் அப்துல் லதீஃப் என்பவர் கலகம் செய்து பால்க் பகுதியைப் பிடித்துக் கொண்டார். உலுக் பேக்கின் துரதிஷ்டம் முஹம்மது மிர்சாவின் மகன் அபு சயீத் மிர்சா, தைமூரின் இன்னொரு பேர ரும், பாபரின் பாட்டனாருமான மிரான் ஷா என்பவரும் எதிர்த்தார்கள். முஹம் மது மிர்சாவின் மகன் அபு சயீதை, உலுக் பேக் தான் ஆதரவும், பாதுகாப்பும் தந்து படிக்க வைத்து ஆளாக்கினார். இவர்களை எதிர்க்கும் போது, சொந்த மகன் அப்துல் லதீஃபால் தந்திரமாக உலுக் பேக் கொல்லப்பட்டார். பின் அப்துல் லதீஃப் அபு சயீத் மிர்சாவை வென்று சிறை பிடித்து சமர்கண்டைக் கைப்பற்றி னார்.
அபு சயீத் மிர்சா சிறையிலிருந்து தப்பித்து பொகாராவில் தஞ்சமடைந்தார். அப்போது அப்துல் லதீஃப் சொந்த இராணுவத்தினரின் கலகத் தால் கொல்லப்பட்டு, ஷாருக்கின் இரண்டாவது மகன் இபுராஹீமின் மகன் அப் துல்லாஹ் ஆட்சிக்கு வந்ததாக அறிகிறார். இதை ஒரு சந்தர்ப்பமாகக் கருதிய அபு சயீத் மிர்சா தானிருந்த பால்கிலேயே கலகம் செய்து பால்கைக் கைப்பற்றி அங்கிருந்து சமர்கண்டின் மீது படையெடுத்தார். ஆனால் தோல்வியுற்று துர்கி ஸ்தான் (இது தாஷ்கண்டின் கீழுள்ள பகுதி) ஓடினார். அடுத்த ஆண்டு பாலை வன உஸ்பெக்குகளை துணைக்கு அழைத்துக் கொண்டு, சமர்கண்டில் அப்துல் லாஹ்வை எதிர்த்து கடுமையாகப் போரிட்டு மொத்த மாவெரல்நெஹாரையும் வென்றார். பாபர் மிர்சா தந்திரமாக அலா உத் தௌலத்தை கைது செய்து தீக்கம் பியினால் கண்களை குருடாக்க உத்தரவிடுகிறார். எதேச்சையாகவோ அல் லது தண்டிப்பவனின் கருணையாலோ அலா உத் தௌலத்தின் கண் குருடாக வில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அலா உத் தௌலத் தப்பித்து விடுகிறார். கோரசா னில் 1457 ல் அளவுக்கதிகமான மது அருந்தியதால் நோய்வாய்பட்டு பாபர் மிர்சா மரணமடைந்தார். இப்போது அபு சயீத் மிர்சா மீண்டும் கோரசானை வெல்ல முயன்றார். இதற்கிடையே துருக்கிய தலைவர் ஜிஹான் ஷா என்பவ ரும் கோரசானில் நுழைய இருவருவரும் சமாதானத்திற்கு முன் வந்தனர்.
செம்னான் நகரை எல்லையாகக் கொண்டு அப்புறம், இப்புறம் என்று பிரித்துக் கொண்டார்கள். இதுவரை சொன்னதுக்கே நீங்கள் தளர்ந்திருப்பீர்களோ என்று அச்சப்படுகிறேன். ஸஹீருத்தீன் பாபர் வெறுமனே இந்தியாவை ஆண்டவரில்லை. சாம்ராஜ்ஜியம் அமைத்தவர். அதனால் பாரம் பரிய பிண்னணியும், சூழ்நிலையும் மிக முக்கியம் என்பதாலேயே விளக்க வேண்டிய அவசியமாகிறது. இன்னும் நிறைய இருந்தாலும் நேரடியாக பாபரி ன் வருகைக்குள் செல்வோம்.
சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் பாபரின் உறவினர்கள் கௌரவத்திற்காகவும், அடாவடித்தனத்திற்காகவும் ஆட்சி செய்து வந்தனர். சமர்கண்டில் சுல்தான் அஹ்மது மிர்சாவும், டாஷ்கண்டில் சுல்தான் மஹ்மூத் கானும் ஆட்சி செய்து கொண்டிருந்த சூழ்நிலையில் தந்தை சுல்தான் ஒமர் ஷெய்க் மிர்சாவின் மரணத்திற்கு ஸஹீருத்தீன் முஹம்மது என்ற பாபர் ஃபர் கானாவில் ஆட்சிக்கு வந்தார். முஹர்ரம் 6 ல் ஃபிப்ரவரி 14 1483ல் பாபர் பிறந் தார். ஐந்து வயது ஆனபோது சமர்கண்டில் சுல்தான் அஹ்மத் மிர்சாவின் மகள் இளவரசி ஆயிஷா சுல்தான் பேகமுடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட் டது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக சொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வாஸ்கோடா காமா இந்தியாவில் கால் பதித்ததற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபர் ஃபர்கானாவில் ஆட்சிக்கு வந்தார். ஃபர்கா னாவின் கிழக்கில் காஷ்கரும், மேற்கில் சமர்கண்டும், தெற்கில் மலைகளைத் தொடர்ந்து பதக் ஷானும், வடக்கில் புராதன நகரங்களான அல்மாலி(G)க் (ஆப் பிள் மரங்கள் வளரும் இடம்), அல்மாட்டு, யாங்கி ஆகியவை இருந்தன. இந் நகரங்கள் சரித்திர ஆய்வாளர்களால் ஓட்ரார் என்றும் சமீபகாலங்களில் உஸ் பெக் என்றும் சொல்லப்படுகிறது. ஃபர்கானா நாடு சிறியதென்றாலும், தானியங் களும், பழவகைகளும் விளைந்தன. சமர்கண்டின் புறம் வெளிநாட்டு எதிரிகள் நுழைவதற்கு ஏதுவாய் இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக