சனி, 27 ஜூன், 2015

மொகலாய வரலாறு 3

                                               மொகலாயர்களின் ஆரம்பம்
கூ.செ.செய்யது முஹமது
                                             
                                           ஆரம்பத்திற்கான ஆதார புத்தகதகமாவது. கிழக்கிந்திய கம்பெனியின் கல்லூரியில் பல்மொழி பேராசிரியராக இருந்த மேஜர் சார்ல்ஸ் ஸ்டீவர்ட் என்பவர் 1830 ல் எழுதிய மொகல் எம்பெரர் டிமூர் ( பார்சி மொழியில் “முல்ஃபுஸாத் திமூரி”) என்ற புத்தகம் ஆன் லைனில் படிக்க நேர்ந்தது. சார்ல் ஸ் ஸ்டீவர்ட், 1636 ல் இப்ன் அரப் ஷா என்பவரால் எழுதப்பட்ட இதன் துருக்கி மொழி மூலப் புத்தகத்தை தேடிச் சென்றது போன்ற சுவாரசியமான சம்பவத் தையே ஒரு பெரிய கட்டுரையாகப் போடலாம். நான் சுருக்கமாக சொல்கி றேன். அபு தாலிப் ஹுஸ்ஸெய்ன் என்ற வரலாற்று ஆசிரியர், துருக்கிய மொழியில் தைமூர் அவர்களால் சுயசரிதை போல் எழுதப்பட்ட “முல்ஃபுஸத் திமூர்” என்ற மூலப் புத்தகத்தை, தனது பிறப்பிடமான மக்கா நகரிலிருந்த ஏமனின் கவர்னர் (ஹாகிம்) வீட்டில் தான் பார்த்து படித்ததாகக் கூறுகிறார். இந்தியாவை பெரிய சாம்ராஜ்ஜியமாக ஆண்ட மொகலாயர்களின் முதல் மனிதர் தைமூரியர் என்பதைப் புரிந்து கொண்ட அபு தாலிப் ஹுஸ்ஸெய்ன் அப்புத்தகத்தை பாரசீக மொழிக்கு மொழி மாற்றம் செய்தார். மொகலாயர் களின் சமகாலத்திலேயே 1610 ல் பாஷா என்பவரால் அந்த புத்தகம் ஏமனுக்கு வந்ததென்றும், அதன் காலத்தை வைத்து புத்தகத்தின் உண்மை தன்மையை உறுதி செய்கிறார். அபு தாலிப் ஹுஸ்ஸெய்ன் இதை எழுதும் போது ஷாஜ ஹான் அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். இந்த புத்தகத்தை தான் பாரசீக மொழியிலிருந்து மேஜர் சார்ல்ஸ் ஸ்டீவர்ட் ஆங்கிலத்தில் மொழி பெயர்த் தார். மொகலாய சாம்ராஜ்ஜியத்தை மன்னர் பாபரின் வம்சா வழியினரான தைமூரியலிருந்து பார்ப்போம். சுயசரிதை ஆகியதால் அதிலிருந்து தேவை யான பகுதியை மட்டும் எடுத்து தைமூரை பற்றி தெரிந்து கொள்ள சுருக்கமாக எழுதுகிறேன். ஐம்பது மைல்களுக்கு ஒரு ராஜா என்று சிதறுண்டு ஆண்டு கொண்டிருந்த ஒரு நாட்டை இந்தியா என்று மாபெரும் சாம்ராஜ்ஜியமாக ஒரே சக்கரவர்த்தியின் கீழ் கொண்டு வந்தவர்கள் மொகலாய மன்னர்கள். அன்றைய சிதறிய இந்தியாவை, கடல்நீர் குடித்துவிட்டு சுவையாக இருக்கிறது என்று சொல்வதற்கு தயாராய் இருக்கும் ஒருவன் கூட இந்தியா ஒன்றாகுமா என்று கேட்டால் புயல்காற்று வீசுவது போல் தலையை இடமும், வலமும் இல்லை என்று பலமாக ஆட்டுவான். அந்த மொகலாய மன்னர்களின் மூத்தவர் தான் இந்த தைமூர். இவரின் ஆரம்பகால டெல்லித் தாக்குதல் பயங்கரமானது. டெல்லி சீரடைய நூராண்டுகளுக்கும் மேலானது. அதனால் இவரிலிருந்து ஆரம்பிப்பது சரி என்று நினைக்கிறேன். சுன்னிப் பிரிவைச் சேர்ந்தவராக அறிய ப்பட்டாலும் இவரின் நடவடிக்கைகள் ஷியா பிரிவைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று கருதுகிறார்கள். காரணம் நபிகளாரின் குடும்ப வாரிசுகளுடன் நெருங்கி இருந்தார். ஆனால் இவரின் அரச மதகுரு ஹனஃபி பிரிவு அப்துல் ஜப்பார் க்வாரஸ்மி ஆவார். எதுவாக இருந்தாலும் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மூத்த வாரிசு. இவரின் செயல்பாடுகள் அறிவதால் இவரின் சந்ததிகள் எப்படி உயர்ந்தார்கள் என ஓரளவு ஊகிக்க முடியுமல்லவா?. மூன்று மொழிகளில் மாற்றம் பெறுவதால் பெயர் மற்றும் இடங்களில் சிறிது வித்தியாசம் (உ: அமிர், எமிர், ஆமீர்) இருக்கலாம்.
         தைமூரியர்கள் தங்கள் கால்நடைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கோத்ஸ், வண் டல்ஸ், ஹூன்ஸ், துர்க்ஸ் போன்ற பல டடார்களின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் கள். கிழக்குக் கரையிலிருந்து ஐரோப்பா வரை தோராயமாக ஒரு பிரிவுக்கு ஐந்தாயிரத்திலிருந்து, ஏழாயிரம் குடும்பங்களை  கொண்டவர்கள். தங்கள் குழுவிலேயே சிறப்பானவரின் பெயரையே கூட்டத்தின் பெயராக வைத்துக் கொள்வார்கள். இதில் ஒரு குழு ‘கான்’ (மன்னன்) என்பதாகும். இவர்களுடன் இன்னும் பல குழுக்கள் சேர்ந்து கொள்ள அதன் தலைவர் ‘காகான்’ (எம்பரர்) என்று அழைக்கப்பட்டார். பத்தாம் நூற்றாண்டில் துமேனாஹ் கான் என்பவர் தேர்ந்த சரித்திர ஆராய்ச்சியாளர்களால் இவரின் பூர்வீகம் நூஹ்(அலை) அவர் களின் பரம்பரை என்று கண்டறிந்து சொன்னார்கள். வடமேற்கு சீனாவின் மொகல் (துருக்கியமொழியில் மொகல் என்றால் இரும்பு) என்று தற்போதைய கூட்டப் பெயரில் இருந்த அவருக்கு ஒன்றாகப் பிறந்த இரட்டை குழந்தையாக குபேல் கான், கஜூலி பஹதூர் என்று இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். தனக்குப் பின்னால் தன் மகன்கள் தான் தலைமைக்கு வர வேண்டும் என்று கூட்டத்தாரிடம் சொல்லி இருந்தார். இந்த மகன்களில் ஒரு மகனின் நான்கா வது வரிசையில் வந்தவர் தான் 1154 ல் பிறந்த ஜெங்கிஸ்கான் (சீனர்களுக்கு-CHENG ZHE KAH HAN|) . மற்றொரு மகனின் எட்டாவது வரிசையில் மாவெரல்ன ஹெர்(மா வெரா அல் நெஹெர்-ட்ரான்ஸாக்சியானா) பகுதியில் கேஷ் மாகா ணத்தில் 1336 ல் பிறந்தவர்கள் தான் மொகலாய வம்சத்தினர்.
ஜெங்கிஸ்கானுக்கு ஜூஜி(டூச்சி), ஜக்தாய், ஒகுதாய், தூலி என்று நான்கு குழந்தைகள் இருந்தார்கள். முதல் பிள்ளை கிப்சாக்(கிரேட் டர்டார்) பகுதியையும், இரண்டாவது மகன் துர்கிஸ்தான் மற்றும் ட்ரான்ஸாக் சியானா பகுதியையும், மூன்றாவது பிள்ளை மொகலிஸ்தான் மற்றும் வட சீனாவையும், நான்காவது பிள்ளை பெர்ஷியா மற்றும் இந்தியாவின் ஒரு பகுதியான இந்துஸ் ஆற்றின் மேற்குப் பகுதியையும் ஆண்டு வந்தார்கள். இந்த பழங்குடியின டடார்களிலேயே புகழுக்கு வந்தவர்கள் ஜெங்கிஸ்கானும், தைமூரும் தான். தைமூரின் வழியில் கெராசார் நூயான் என்பவர் ஜெங்கிஸ் கானின் இரண்டாவது மகன் ஜக்தாயின் மகளை மணந்தவர். இப்புத்தகம் சுயசரிதை ஆனதால் நான்  நான் என்று தைமூர் சொல்வது போல் இருக்கிறது. அதனால் அதை மட்டும் மாற்றி சாதாரண வரலாறு அடிப்படையில் எழுது கிறேன்.
இவர்களின் பழங்குடி பரம்பரையில் இஸ்லாமைத் தழுவியர்கள் தைமூர் வம்சம் தான். ஜக்தாய் கானின் மருமகன் கெராச்சார் நூயன் என்பவர், தான் மறுமையில் ஒரு வாழ்வு இருப்பதை நம்புவதாகவும், இதையே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்வதால் தான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாகவும் சொல்லி இருந்தார். தன் தந்தைக்குப் பிறகு தைமூர் அவர் பணியைத் தொடர்ந்தார். தைமூர்  தன் பழங்குடியினரின் கால்நடை களை பிரித்து நூறு எண்ணிக்கை கொண்டப் பிரிவுக்கு ஒரு பாதுகாப்பாளரை நியமித்தார். அதன் வருவாய் பால், வெண்ணெய், தோல் முதலியவற்றி லிருந்து ஈட்டப்பட்டது. அதுபோல் கால்நடைகளில் ஆண்,பெண் என பிரித்து கூடும் காலங்களை முறைப்படுத்தி வருவாய் வரச் செய்தார்.
               எதிர் காலத்தில் பல வெற்றிகளை குவிக்கப் போகும் தன் பிள்ளைகளுக்கும், இளவரசர்களான தன் பேரப் பிள்ளைகளுக்கும் மற்றும் பின்வரும் சந்ததியினருக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஒரு சுய சரிதையை காஃப் என்னும் உயரமான மலைப்பகுதியிலிருந்து வெளி உலகத் துக்கு வந்த தைமூர் எழுதுகிறார். தன் வாரிசுகளின் மீது என்ன ஒரு கணிப்பு. பின்னாளில் 600 ஆண்டுகளுக்கு அவரின் வாரிசுகளுக்கு அல்லாஹ் ஆட்சியை இந்தியாவில் வழங்கினானே என்ன ஒரு சிறப்பு. என் செயல்களுக்கு உதவிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும், பாதுகாப்பாய் இருந்த இறைதூதரின் வழி காட்டலுக்கும் மிக்க நன்றி என்றும், தனது வெற்றிகளுக்கு காரணமாய் இருந்த மக்கள், வீரர்கள், மந்திரிகள் புரிந்து கொள்வதற்கும், தனது சட்டதிட்டங்கள் பின்வருபவர்களுக்கு ஆட்சியை வீழ்ந்து விடாமல் காப்பதற்கு ஏதுவாய் இருப் பதற்காகவும் சுயசரிதையை எழுதுவதாகவும் குறிப்பிடுகிறார். தோராயமாக 1320 லிருந்து 1330 வரை உள்ள காலத்தில் ட்ரான்ஸாக்சியானா பகுதியில் கேஷ் என்ற இடத்தில் பிறந்தார். தன் சிறப்புகளுக்கு கீழ் காணும் பனிரெண்டு கோட் பாடுகளே காரணம் என்று கூறுகிறார்:
1. எப்போது நீதியைக் கையில் எடுத்தாலும், அது குறைக்கப்பட்டாலும், கூட்டப்பட்டாலும் அனைவருக்கும் சமமாக இருக்க தான் பார்த்துக் கொண்ட தாகக் கூறுகிறார்.
2. நிர்வாகத்தில் உண்மை, பொய் கண்டறிந்து நேர்மையை நிலைநாட்ட எப்போதும் பெரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
3. அல்லாஹ்வின் கட்டளைகளையும், அதைக் கடைபிடித்தவர்களையும், அல்லாஹ் சிறப்பித்தவர்களையும் பின்பற்ற வேண்டும்.
4. அல்லாஹ்வின் படைப்புகளின் மீது கருணை காட்ட வேண்டும். எந்த ஒரு நபருக்கும் தவறான தீர்ப்பு வழங்கக்கூடாது. தன்னை நாடி வருபவருக்கு உதவ வேண்டும்.
5. மதத்தைச் சேராதவர்கள் மீது மதக்கோட்பாடைத் திணிக்கக்கூடாது. இறை வனுக்கு செய்ய வேண்டிய கடமையை முதலில் செய்ய வேண்டும்.
6. எப்போதுமே உண்மை பேச வேண்டும், உண்மைக்கு செவி சாய்க்க வேண் டும். குறுக்கான வழியை என்றும் தேர்ந்தெடுக்கக்கூடாது. முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்ட போது, மலக்குகளுக்கும், அல்லாஹ்வுக்கும் நடந்த உரையாடலை என்றும் நினைவில் வையுங்கள்.
7. யாருக்காவது வாக்கு கொடுத்தால் தான் அதை நிறைவேற்றாமல் இருந்ததில்லை. நீங்களும் வாக்கை தவறவிடாதீர்கள். உறவுகளிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கொடுங்கோல் தனத்தைக் காட்டாதீர்கள்.
8. ஆள்பவர்கள் கஜானாவை இறைவனின் சொத்தாக கருதவேண்டும். மத குருமார்களின் அனுமதியின்றி மதச்சொத்துகளை செலவிடக்கூடாது. தனது வசதிக்காகவும், அதிகாரத்திற்காகவும் செல்வம் படைத்தவர்களைச் தன்னைச் சுற்றி வைத்திருக்கக்கூடாது. வீரர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் நலனில் அக்கரை காட்ட வேண்டும்.
9. எந்நிலையிலும் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கும், நபி(ஸல்) நாதர் அவர்களின் போதனைகளுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
10. இஸ்லாமுக்காக சொத்துக்களை அள்ளிக் கொடுத்ததாகவும், அது எப்போ தும் மன்னனையும், மக்களையும் காக்கும் என்று தான் நம்பியதாகவும் சொன் னார்..
11. நபி(ஸல்) அவர்களின் வம்சாவழியினரை தான் நேசித்ததாகவும், எப்போ தும் தன் அரண்மனையில் அவர்களுக்கு இடமளித்து அலோசனைகளைக் கேட்டதாகவும் சொல்கிறார்.
12. எந்த காரணம் கொண்டும் நீதியைத் தவிர்த்து முஸ்லீம்களை கொன்ற தில்லை. எதிரிகளைக் கூட மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவராகவும் கூறுகிறார். தான் நாடியவருக்கே ஆட்சியைத் தருவதாக அல்லாஹ் சொல் கிறான். அப்படியானால் குறிப்பிட்ட சில பகுதியின் மக்களை அல்லாஹ் ஒரு மன்னனின் வசம் விடுகிறான். அப்படியானால் அம்மன்னன் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தான் உணர்ந்ததாகக் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக