வியாழன், 2 ஏப்ரல், 2015

கர்மாஷியன்கள் வரலாறு



கர்மாஷியன்கள் என்பவர்கள் (அரபியில் கராமிதா) ஷியா பிரிவின் இஸ்மாயிலிகளுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டவர்கள். இவர்கள் வெறும் சைவம் மட்டுமே சாப்பிடுவதால் தி கிரீன்க்ரோஸர்’ (அரபியில் அல் பக்லியாஹ்) என்றும் அறியப்பட்டனர். இவர்கள் 899 ல் அபி ஸைத் அல் ஜன்னபி என்பவரின் கீழ் ரிலிஜியஸ் உடோபியன் ரிபப்ளிக் என்று ஒரு அமைப்பை தொடங்கி கிழக்கு அரேபியாவில் அல் ஹஸா என்ற பகுதியை தலைமையகமாக ஆக்கிக்கொண்டார்கள். இந்த கர்மாஷியன்கள் அப்பாஸியர்களின் ஆட்சியில் புரட்சி செய்து புகழ் பெற்றார்கள். மக்காவிற்கு புனித யாத்ரீகர்கள் வந்திருந்த சமயத்தில் அதன் தலைவன் அபு ஸைத் அல் ஜன்னபி கருப்புக்கல்லை கொள்ளையடித்துக் கொண்டு, ஜம்ஜம் என்றும் நீரின் புனிதத்தையும் பாழ்படுத்தி இஸ்லாமிய உலகத்தை அதிர்ச்சிப்படுத்தினான்.
                           750 லிருந்து 1258 வரை ஆண்ட அப்பாஸிய       ( நபி (ஸல்)அவர்களின் வம்சத்து சுன்னிப்பிரிவு) ஆட்சியாளர்களை எதிர்த்து பல ஷியா பிரிவு குழுக்கள் தோன்றின. அதில் இஸ்மாயிலிக்கள் சமூகத்தைச் சேர்ந்த முதன்மைக் குழு முபாரகிய்யாஹ்ஆகும். அதன் தலைமை இமாம் ஜாஃபர் அல் சாதிக் என்பவர் தன் இரண்டாவது மகன் இஸ்மாயில் இப்ன் ஜாஃபரை கொன்றுவிட உத்திரவிடுகிறார். சிலர் அவர் தப்பி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல, இஸ்மாயிலிகள் அவர் இறந்து விட்டதாகக் கூறி அவரின் மூத்த மகன் முஹம்மது இப்ன் இஸ்மாயிலை இமாமாக ஏற்றுக்கொண்டார்கள். அவர் கூஃபாவில் தங்கியிருந்த பெரும்பான்மையான முபாரகிய்யாஹ் குழுவினருடன் தொடர்பில் இருந்தார். முஹம்மது இப்ன் இஸ்மாயில் இறந்து போக, இதை ஏற்றுக்கொள்ளாத அதிகப்படியானோர் அவர் இறக்கவில்லை அவர் ஒரு மஹ்தி என்றார்கள். இதனால் முபாரகிய்யாஹ்வில் பிளவு ஏற்படுகிறது. இறந்துவிட்டார் என்று நம்பிய குறைவானோர் ஃபாத்திமிட் இஸ்மாயிலிகள் என்று ஆனார்கள்.
                           இந்த அதிகப்படியானோர்கள் அல் ஹுஸைய்ன் அல் அஹ்வாஸி என்பவர் தலைமையில் ஸலாமியாஹ்(தற்போதைய சிரியா) மற்றும் குஸெஸ்தான்(தென்மேற்கு பெர்ஷியா) என்ற இடங்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். அதன் தலைவர் குஸெஸ்தானின் கூஃபன் மன் ஹம்தானை தங்கள் பிரிவுக்கு மாற்ற, அவர் கர்மத்என்று பெயர் பெற்றார். கர்மத்தும் அவரின் மதவாதி மருமகன் அப்தன் என்பவரும் புதிய மஹ்தி வரப்போகிறார் என்று தென் ஈராக்கில் மத மற்றும் இராணுவ அமைப்புகளை தயார் படுத்தினார்கள். இது மேலும் ஏமன், பஹ்ரைன் மற்றும் வட ஆப்பிரிக்காவிலும் பரவியது. இவர்களின் போதிப்பு கவர்ச்சியாக இருந்ததைக் கண்ட புதியதாக ஷியா பிரிவில் சேர்ந்தவர்கள் இதில் இணைந்து கொண்டார்கள். பின்னாளில் கர்மாஷியன்கள் ஈரான் மற்றும் ட்ரான்ஸோக்சியானா வரை பரவியது. ஸலாமிய்யாவில் இருந்தவர்களுக்கும், கர்மத் அவர்களுக்கும் இடையே மஹ்தியின் இறப்பு சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்து கலவரம் நடந்து மருமகன் அப்தன் கொல்லப்பட்டார். கர்மத் புதிய இமாமாகி அப்துல்லஹ் அல் மஹ்தி பில்லாஹ் என்று 909 ல் வட ஆப்பிரிக்காவில் ஃபாத்திமிட்கள்(நபி(ஸல்)அவர்களின் மகளார்) ஆட்சியை கொண்டு வந்தார். அபூ ஸைத் ஜன்னபி அப்பாஸியர்களிடமிருந்து பஹ்ரைன் மற்றும் அல் ஹஸா ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
                             அரேபிய பாலையைக் கடந்து மக்கா புனித யாத்திரை செல்பவர்களத் தாக்கி கொன்றார்கள். 906 ல் அதுபோல் 20,000 யாத்ரீகர்களின் வாகனத்தை வழி மறித்து கொன்றார்கள். 10 ம் நூற்றாண்டுகளில் பெரும் சக்தியாக வளர்ந்து ஓமனின் கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். மத்திய கிழக்கிலும், பெர்ஷியாவிலும் வளர்ந்திருந்தார்கள். கர்மாஷியன்களுக்கு எதிராக இருந்த இஸ்மாயிலிகளிடம்  கெய்ரோவிலிருந்து கொண்டு கப்பம் பெற்றார்கள்.
                        கர்மாஷியன்கள் கைப்பற்றி இருந்த இடங்கள் நல்ல வளமான இடங்கள். அடிமைச்சந்தை வாணிபத்தால் வரவு இருந்தது. பழங்களும், பருப்பு வகைகளும் விளையும் தீவுகள் நிறைந்திருந்தன. 1051 ல் அல் ஹஸா விஜயம் செய்திருந்த நஸிரி குஸ்ரு என்பவர்,’அங்கு ஒரு பண்னையில் 30,000 எத்தியோப்பிய அடிமைகள் பணியில் இருந்தார்கள். ஹஸாவாசிகளுக்கு வரிவிதிப்பில் விலக்கிருந்தது. ஏழையாய் இருந்தவர்களுக்கும், வியாபாரச்சரிவு கண்டவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டது.’ என்று கூறினார். ஒரு கர்மாஷியன் ஆட்சியாளர் 920 வெளியிட்டிருந்த நாணயம் 20 ம் நூற்றாண்டு வரை ஹஸாவில் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 931 ல் வந்த சனி கிரகத்தை கருத்தில் கொண்டு கர்மாஷியன்களின் தலைவர் அபூ தாஹிர் அல் ஜன்னபி உலகம் அழியப் போகிறது என்றார். ஸோரோஸ்ட்ரியன் மதத்தூதர் மறைந்து 1500 ஆண்டுகள் வேறு ஆகியிருந்தது. புது மெஹ்தி வரப்போகிறார் என்ற பரபரப்பு இருந்தது. அதை எதிர்நோக்கி அபூ தாஹிர் அல் ஜன்னபி தனக்கு நம்பிக்கையான ஒரு இளைஞரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.
                                     திடீரென்று அந்த பெர்ஷிய இளைஞர் இஸ்லாமிய சட்டம், தொழுகை ஆகியவற்றைப் புறக்கணிக்கச் சொன்னார், இறைத்தூதர்கள், இமாம்களை கேவலப்படுத்தினார். பல கர்மாஷியன் தலைவர்களைக் கொன்றார். இது முதல் தூதர் ஆதம்(அலை)அவர்களின் பூமி என்றார். 80 நாட்களே ஆண்ட அந்த இளைஞரை அபூ தாஹிர் கொன்று விட உத்தரவிட்டார். ஆனால், அந்த இளைஞர் ஏற்படுத்திய பாதிப்பு கர்மாஷியன்களின் அமைப்புக்கு சரிவைத் தந்தது. மேலும் 976 ல் சில பகுதிகளில் அப்பாஸியர்கள் கர்மாஷியன்களைத் தோற்கடித்தார்கள். ஈராக் போன்ற பகுதிகளிலிருந்து வந்த கப்பங்கள் நின்று போயின. உள்நாட்டுப் பொருளாதாரம் வீழ்ந்தது. பஹ்ரைனிலும் அபு அல் பஹ்லுல் அல் அவ்வாம் என்ற தலைவர் ஷியாபிரிவிலிருந்து விலகி சுன்னிப்பிரிவை ஏற்றுக் கொண்டார். இப்படி பல வகைகளிலும் சரிந்த கர்மாஷியன்கள் ஹோஃபுஃப் பகுதியில் சுருங்கி போனார்கள். அப்துல்லாஹ் பின் அலி அல் உயூனி என்பவர் செல்ஜுக் படைகளின் உதவியுடன் தொடர்ந்து 7 ஆண்டுகள் ஹோஃபுஃப் பகுதி மீது படையெடுத்து கர்மாஷியன்களின் இறுதி ஆட்சியை சரணடைய வைத்தார்.

இஸ்மாயிலிக்கள் வரலாறு



                                                 இஸ்மாயிலிக்கள் என்பவர்கள் “ஷியா” பிரிவிலிருந்து இமாம்களின் வரிசைப்போட்டியால் பிரிந்து போனவர்கள். எட்டாம் நூற்றாண்டில் ஏழாவது இமாமைத் தொடர்வதில் ஷியாக்களுக்கும், இஸ்மாயிலி களுக்கும் பிரிவு வந்தது. ஷியாக்கள் ஏழாவது இமாம் அந்தஸ்தை மூஸா என்பவ ருக்கு அளித்தார்கள். ஆனால், இஸ்மாயிலிக்கள் அவரின் மூத்த சகோதரர் இஸ் மாயில் இப்ன் ஜாஃபர் என்பவரை ஆதரித்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் இவர்கள் பிரபல்யமாகி சிரியாவில் பலமாக தளம் அமைத்து அப்பாஸிட் ஆட்சியாளர்களை எதிர்த்தார்கள். பத்தாம் நூற்றாண்டில் அப்பாஸிட் ஆட்சியின் ஒரு பகுதியான வட அப்பிரிக்காவின் கடற்கரை நகரங்கள் அத்தனையும் ஆண்டார்கள். இஸ்மாயிலிக்களின் தலைவர் உபைதுல்லா என்பவர் 909 ல் வட ஆப்பிரிக்காவின் கடற்கரைப் பகுதி மற்றும் அக்லாபித்கள் ஆண்ட கைரொவன் ஆகிய பகுதிகளை வென்றார். இவர் தனது பகுதிகளை “ஃபாத்திமிட்” பேரரசு என்று அழைத்து தான் ஷியாக்களின் கலீஃபாவும், அலி (ரலி) மற்றும் ஃபாத்திமா(ரஅ) அவர்களின் வழியில் வந்தவர் என்றும் அறிவித்துக்கொண்டார்.
                                          அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபாத்திமிட் இராணுவம் எகிப்தை வென்று தளமாக்கி வட ஆப்பிரிக்க கரைப் பகுதிகளை வென்றது. நைல் நதியின் கரையில் முஸ்லீம்களின் ஒற்றர்கள் நகரத்தை ஒட்டி “அல் கஹிரா” (கெய்ரோ) என்ற நகரை புதிய தலைநகராக ஆக்கிக்கொண்டனர். 970 ல் கெய்ரோவில் அல் அஸார் பல்கலைக்கழக மசூதியைக் கட்டி இஸ்லாமிய மதக்கல்வி பயிலும் கல்லூரி ஆக்கினார்கள். இவர்களின் ஆட்சியின் உச்சத்தில் பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவைத் தலைநகரமாக்கி சிஸிலி, மேற்கு அரேபியா(மக்கா, மதீனா உள்ளடக்கியது) மற்றும் மெடிட்டரேனியன் கரையைத் தொடந்து சிரியா வரை ஃபாத்திமிட் பேரரசாக ஆண்டார்கள். 1171 ல் இஸ்மாயி லிய பேரரசு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற சுல்தானாக ஸலாவுத் தீன் அவர்கள் கிளர்ந்தெழுந்து சிலுவைப்போராளிகளை எதிர்த்தபோது, இவர் களின் பேரரசும் நொறுங்கியது. ஸலாவுத்தீன் பெயர் பாக்தாதிலும், வெள்ளிக் கிழமை தொழுகை உரையில் கலீஃபாவின் பெயராகக் கூறும் போதும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனது. இஸ்மாயிலிக்கள் குறுக்கிடும் போது எகிப்து மீண்டும் இஸ்லாமிய சுன்னி பிரிவுக்கு மாறியிருந்தது.
                                         நிஸாரி இஸ்மாயிலிக்கள் என்ற ஒன்று தனி அமைப்பாக முன்னேறியது. அவர்கள் அலி(ரலி) மற்றும் ஃபாத்திம(ரஅ) அவர்களின் வழியில் வந்த நிஸார் என்பவரின் தொடர்ச்சியாளர்கள் என்றார்கள். பதினொன் றாம் நூற்றாண்டின் இறுதியில் வட பெர்ஷியாவைக் கைப்பற்றினர். அவர்கள் சரித்திரத்தில் தீவிரவாததிற்கும், இரகசிய கொலைகளுக்கும் பெயர் போனவர்கள். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் பலமாக இவர்கள் இருந்தபோது தகர்க்க முடியாத அலமுத் கோட்டையை பிடிக்கும்போது இவர்களின் இரகசியக் கொலைத்திட்டம் வெளியே தெரியவந்தது. இந்த கொலைகளுக்காக முகாம்கள் அமைத்து பயிற்சி கொடுத்தார்கள். உளவாளிகளை எதிரிகளின் நகரத்திலும் நடமாடவிட்டு கண்காணித்தார்கள். இவர்களின் எதிரிகள் பெரிய சாம்ராஜ்ஜி யத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். செல்ஜுக் துருக்கி மற்றும் பாக்தாத் கலீஃபாக்களை இந்த இரகசிய கொலையாளிகள் கொன்றார்கள். பயிற்சி பெற் றவர்கள் எப்படியாவது ஒரு பிரபலமானவரைக் கொன்றுவிடுவார்கள். சில சம யங்களில் கெய்ரோவில் இஸ்மாயிலைச் சேர்ந்தவர்களையே கொன்றார்கள். இருமுறை இந்த கொலையாளிகள் சுல்தான் ஸலாவுத்தீன் அவர்களைக் கொல்ல திட்டமிட்டு தவறினார்கள். இந்த கொலைகார நிஸாமி இஸ்மாயிலிகளை அழிக்க முடியாமல் திணறியபோது பனிரெண்டாம் நூற்றாண்டில் எகிப்து மம்லுக் சுல்தா னாலும், மங்கோலிய மன்னர் ஹுலகு வாலும் அழிக்கப்பட்டனர். இவர்களில் 1818 ல் பெர்ஷியாவின் ஷா ஒருவர் அகா கான் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
                                        இவரை இமாமாக ஏற்றவர்கள் இன்றும் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானில் பெருவாரியாகவும், பங்களாதேஷ், சிரியா, ஏமன், சௌதி அரேபியா, ஜோர்டான், கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா, லெபனான் ஆகிய நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள். தற்போது இவர்கள் சாதகமான கனடா, ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, டிரினிடாட் டொபாகோ (மேற்கு இந்தியத் தீவுகள்) ஆகிய நாடுகளில் குடியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபாத்திமா (ரஅ), அலி (ரலி) அவர்களின் மகளான ஸைனப் என்பவரின் கர்பலா பற்றிய தஃவாவே (ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரின் மரணம் குறித்த உரை) இஸ்மாயிலிக்களின் முதல் உரையாகக் கருதப்படுகிறது. இன்றளவும் பெருவாரியான சுன்னிப்பிரிவு முஸ்லீம்கள் இவர்களை உண்மை முஸ்லீம்களாகக் கருத்தில் கொள்ளாததால் இவர்களைப் பற்றிய சரித்திரம் முழுதாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலோட்டமாகத் தான் நானும் சொல்கிறேன்.
                                      மஹ்தியாகவும், பெர்ஷிய மன்னர் பரம்பரையில் வந்தவரென்றும் தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொண்ட அபுல் ஃபத்ல் அல் இஸ்ஃபஹானி என்பவரின் வழியில் வந்தவர்கள் பத்தாம் நூற்றாண்டுகளில் பஹ்ரைனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டனர். அபு தாஹிர் அல் ஜன்னபி என்பவன் தலைமையில் 930 ல் மக்காவின் கஃபாவின் கருங்கல்லை திருடினார்கள். இந்த இஸ்ஃபஹானியின் வருகைக்குப் பிறகு, தாங்கள் வணங்கும் திசையை கஃபாவிலிருந்து “ஸோரோஸ்டிரியன்கள்” (இவர்களைப் பற்றித் தனி கட்டுரை பின்னால் உண்டு) என்னும் பிரிவினரின் தீயின் திசையில் ஆக்கிக் கொண்டார்கள். 1056 ல் ஹசன் அல் ஸப்பாஹ் ( அரபியில் இவர்களை எழுவர் என்பார்கள். சபா என்றால் ஏழு என்று அர்த்தம்) என்பவரின் அலாமுத் தாக்குதல் மிகவும் புகழ் பெற்றது. இரண்டாண்டுகளில் அலாமுத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களை இஸ்மாயிலிக்குள் இணைய வைத்தார். இன்றும் அமெரிக்க, சியோனிச, மேற்கத்திய நாடுகள் உலகத் தீவிரவாத்திற்கு தேர்ந்தெடுக்கும் முஸ்லீம்கள் இந்த இஸ்மாயிலீக்களைத்தான். இவர்கள் தங்கள் கொள்கையில் வெல்ல யாருடனும் கூடி எதுவும் செய்வார்கள். அமெரிக்கர்களின் ரகசியத் தகவலை வெளியிட்ட அசான்கே (பெயர் சரியா?) என்பவரை நாடு நாடாகத் துரத்தி வேட்டையாடியவர்களுக்கு, 15 ஆண்டுக்கு முன்பே இறந்து போன பின் லாடனின் பெயரை வைத்து இன்றுவரை அல் காயிதே மிரட்டுகிறது என்று சொல்லி உலக அரசியல் நடத்துகிறார்களே, எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்றா தெரியவில்லை. தனக்கு என்றால் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதுவே உலக அரசியலுக்கு என்றால் மூன்று பெரிய போர்கப்பல்கள், 12 சிறிய போர்கப்பல்களை மத்திய ஆசியாவின் இஸ்லாமிய கடற்பகுதிகளிலும், இஸ்லாமிய நாட்டு துறைமுகங்களிலும் நிறுத்தி பல ஆண்டாக நேட்டொ என்னும் பல நாட்டு கூட்டுப்படைகளையும் சேர்த்துக் கொண்டு சுன்னி முஸ்லீம்களை வேட்டையாடுகிறார்கள். 20 ஆண்டுக்கும் மேலாக நடக்கும் இந்த வேட்டையின் துயரங்களை அறிந்தால் கத்தியின்றி எந்த கல் நெஞ்சமும் பிளந்து விடும். இதில் ஷியா பிரிவினரின் கூட்டு பெரும் பங்கு வகிக்கிறது.
      
                                       தய்யிபின் முஸ்தாலியன் இஸ்மாயிலி, இத்ரிஸ் இமாதத்தீன் எழுதிய ஏழு பகுதிகளைக் கொண்ட “உயூன் அல் அக்பர்” என்பது இவர்களின் வேத புத்தகமாகும். இஸ்மாயிலிகள் ஏழு என்ற எண்ணை பிரதானமாகக் கருதுவார்கள். ஏழு சொர்க்கம், ஏழு கண்டங்கள், மண்டையோட்டின் ஏழு பகுதி, ஏழு நாட்களைக் கொண்ட வாரம் இப்படியாக. திருக்குரானின் உண்மையான விளக்கம் இவர்களின் இமாம்கள் ‘பதின்’ என்ற பெயரில் உரைப்பது மட்டுமே நம்பத் தகுந்ததாகக் கருதுவார்கள். இவர்களின் இமாம் ஜகாத்தாக இஸ்மாயிலிகளிடம் 12.5% வசூலிப்பார். அதில் 2% ஏழைகளுக்கும், 10.5% இமாமுக்கும் ஆகும். ரசீதுகள் கொடுக்கப்படாது. திருக்குரானில் சொல்லப்பட்டுள்ள புனித பயணம் என்பது மக்காவின் கஃபா அல்ல. தங்களின் இமாமைத் தரிசித்தாலே போதும் என்று எண்ணுபவர்கள். இதை துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் வசிக்கும் நம் சகோதரர்கள் நன்கு அறிவார்கள். ஏனென்றால் அவர்களின் இமாம் இந்நாடுகளுக்கு வருகை தந்து தரிசனம் தருவதை அறிந்திருப்பார்கள். ‘சத் பந்தி’ என்னும் ஒரு பிரிவு உண்டு அவர்களும் இஸ்மாயிலிக்களின் ஒரு பிரிவு தான். இன்னுமொரு பிரிவு முஹம்மது புர்கானுத்தீன் தலைமையை ஏற்ற இந்தியா மற்றும் ஏமனிலுள்ள      ‘தாவூதி போரா முஸ்லீம்கள்’. இதிலும் அலபி போரா, குத்திபி போரா, சுலைமானிய போரா என்று பல பிரிவுகள் உண்டு.   
                                               1840 ல் அடுத்த ஷாவால் பிரச்சினை வர முதல் ஷா அகா கான் இந்தியாவுக்குச் சென்று விட்டார். அப்போது இந்தியாவில் ஆட்சியிலிருந்த பிரிட்டிஷார் முஸ்லீம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த அகா கானை பொருட்செலவும், ஆதரவும் தந்து புகழ் பெற வைத்தனர். அங்கிருந்து அவரும் அவர் வழிவந்தவர்களும் இஸ்மாயிலி சமுதாயத்தின் தலைவர்களாக இருந்து இந்தியா, சிரியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் உலகமெங்கும் லட்சக்கணக்கில் பரவினர். தற்போதைய அகா கான் 1936 ல் பிறந்த நான்கு வரிசையைச் சேர்ந்தவ ராவார். பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டில் பெர்பெர் பேரரசு சிதைந்து கொண்டிருந்தபோது மதிப்பு வாய்ந்த கடற்கரைப் பகுதியான வட ஆப்பிரிக்கா சக்திவாய்ந்த இரு நகரங்களை மேற்கில் ஸ்பெயினையும், கிழக்கில் துருக்கியை யும் ஈர்த்தன. ஸ்பெயின் துருக்கியின் பகை உணர்வு பதினாறாம் நூற்றாண்டில் ஒரு முடிவுக்கு வந்து வட ஆப்பிரிக்கா கடற்கரைப் பகுதியை துருக்கி கைப்பற்றி யது. துருக்கி கடற்கொள்ளையர்கள் அந்த கடற்கரைப் பகுதியை கையாண்டார் கள். பின் அந்தப் பகுதிகள் ஓட்டோமான் பேரரசால் அவர்களுக்கு பாதுகாப்பளிக் கப்பட்டது. 1512 ல் அல்ஜீரியாவின் கடற்கரைப் பகுதியில் தான் முதல் கடற்கொள் ளையர்கள் பரவினார்கள். 1551 ல் லிபியாவில் இரண்டு கடற்கொள்ளைக் கூட்டங் கள் பரவின. 1534 ல் துனீஷியாவில் புகழ்பெற்ற கடற்கொள்ளையராக கைர் அத் தீன் என்பவர் இருந்தார். ஐரோப்பியர்கள் இவரை பார்பரொஸ்ஸா என்று அழைத் தனர். இறுதியில் 1574 ல் துனீஷியா ஓட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் வந் தது.
                                        ஆனாலும், துருக்கியின் பகுதிகளுக்கு கடற் கொள்ளை நல்ல வருமானத்தைத் தந்ததால் தொடர்ந்து கடற்கொள்ளையர்கள் வட ஆப்பிரிக்க கரையோரங்களில் இருந்தார்கள். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பிரான்சின் அல்ஜீரிய படையெடுப்பின் மூலம் கடற்கொள்ளை முடிவுக்கு வந்தது. ஐரோப்பியர்கள் அந்த பகுதிகளைக் காவல் காத்ததால் துருக்கிய கடற் கொள்ளையர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 1881 ல் துனீஷியாவும், 1912 ல் மொரோக்கோவும் பிரான்சின் வசம் போனது. துருக்கிகளிடமிருந்து லிபி யாவை இத்தாலி கைப்பற்றியது. சுதந்திரம் அடையும் வரை கடற்கரைப் பகுதிகள் கொள்ளையர்கள் பகுதியாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத போதகரான அல் செனுஸ்ஸி அல் கபீரின் கட்டாய மதக்கோட்பாடுகளும் சாதா ரண இஸ்லாமிய சுன்னிப் பிரிவு வாழ்க்கையும் பிதோயின் பழங்குடியினரிடம்  பிரபல்யமானது. இவரின் வழிதொடர்ந்த இன்னொரு செனுஸ்ஸி என்பவரிடம் கிழக்கு மாகாணமான சைரினைகா முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.
                                     துருக்கிகளை வெளியேற்றியதால் மட்டும் அந்த பிராந்தியங்களில் பிரச்சினை தீர்ந்து விடவில்லை. பின்னால் வந்த இத்தாலியர் கள் அந்த வட ஆப்பிரிக்கா பகுதியில் குறிவைத்திருந்தார்கள். இருபதாம் நூற்றா ண்டின் முதல் பத்தாண்டுகளில் அல்ஜீரியாவும், துனீஷியாவும் பிரான்சின் வசமும்  எகிப்து பிரிட்டன் வசமும் இருந்தது. லிபியா பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் மத்தி யில் இருந்தது. இத்தாலி வட ஆப்பிரிக்காவில் வாணிபத்தை அபிவிருத்தி செய்வ தில் ஆர்வமாக இருந்தது. 1900 ல் பிரான்சும், இத்தாலியும் தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு பிரான்ஸ் மொரோக்கோவையும், இத்தாலி லிபியாவை யும் எடுத்துக்கொண்டு இருவரும் ஒருவர் பகுதியில் மற்றொருவர் சுலபமாகக் கையாள முடிவு செய்து கொண்டனர்.            

வியாழன், 29 ஜனவரி, 2015

மம்லுக்குகள் வரலாறு

மம்லுக்குகள் என்பவர்கள் பிறப்பால் அரபியரல்லாத முஸ்லீம்கள். புராதன காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். இவர்கள் நேர்மை யான நான்கு கலீஃபாக்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்த உமய்யாத்களின் ஆட்சியின் போதே இருந்தார்கள். ஆனால், அன்றைய உயர் அரபின மக்களால் கீழ்தரமாக நடத்தப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் நாடோடிகளாய் இருந்தவர்கள். அப்போது இஸ்லாம் புதிய மதமாக எழுச்சியுற்றபோது தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள். உமய்யாத்களுக்கு எதிராக ஆட்சியைப்பிடிக்க அப்பாஸிட்களுக்கு மத்திய கிழக்கில் பெரும் ஆதரவு தேவைப் பட்டது. தங்களைப் பலப்படுத்த அப்பா ஸிட்கள் துருக்கிய நாடோடிகளின் இனமான “மம்லுக்” (தமிழில்- சொந்தமாக்கப் பட்டவர்கள்) குகளின் ஆதரவைப் பெற்றார்கள். இவர்கள் அரசாங்கப் பணிகளிலும்  இராணுவத்திலும் பயன்படுத்தப்பட்டனர். நல்ல இடத்தில் பணியில் அமர்ந்த அவர் கள் தங்களின் சரியான அனுகுமுறையால் சந்தர்பம் வாய்க்கப் பெற்றனர்.

                                     மம்லுக்குகளில் முதன்முதலில் அஹ்மத் இப்ன் துலுன் என்பவர் 870 ன் ஆரம்பத்தில் எகிப்தின் அதிகாரத்தைப் பெற்றார். 877 ல் மெடிட்டரேனியன் கடற்கரைப் பகுதியில் பாலஸ்தீனத்திலிருந்து சிரியா வரை வென்றார். முதல் மம்லுக்குகளின் ஆட்சி 905 வரை சில ஆண்டுகளில் வீழ்ச்சி நோக்கி சென்றது. ஆனால், மீண்டும் முக்கியமாக மத்திய கிழக்கில் அதிகாரத்தை பெற்றனர். அடிப்படையிலேயே இயற்கையான பலத்தையும், இராணுவத் திறமை யும் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் சொந்த துருக்கி மொழியுடன் அரபு மொழியும் பேசினர். தங்கள் ஆட்சியின் அதிகாரத்தைப் பூர்த்தி செய்துகொள்ள திறமையான புதிய தைரியமான பழங்குடியினரை மத்திய ஆசியாவிலும், காகசஸிலும் பணி யில் அமர்த்திக்கொண்டனர். மம்லுக்குகளின் உச்ச அதிகாரம் அவர்கள் மீண்டும் 1250 ல் எகிப்தைக் கைப்பற்றிய போது வெளிப்பட்டது. அடுத்த பத்தாண்டுகள் கழித்து மங்கோலியர்களை எதிர்கொண்டனர்.

                                   பெய்பர்கள் எனப்படுபவர்கள் மம்லுக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இரக்கமற்ற காட்டுமிராண்டிகள். வட கஸ்பியன் கடலோரத் திலிருந்த கிப்சக் துருக்கிகளின் ஒரு சிறுவனைக் பெய்பர்கள் எகிப்துக்கு அடிமை யாகக் கடத்தி வந்தனர். அவன் தன் இணையற்ற திறமையால் மம்லுக்குகளின் இராணுவத்தில் தலைமைப் பதவிக்கு வந்தான். 1260 ல் ஐய்ன் ஜாலூத் என்ற பகுதியை வெற்றி கொண்டு சொந்த மம்லூக் இன சுல்தானையே கொன்று அந்த பகுதியை தனதாக அறிவித்துக் கொண்டான். அவனின் பதினேழு வருட ஆட்சி யில் சிரியாவில் பல படுகொலைத் தாக்குதல்களைச் செய்தும், சிலுவைப்போரா ளிகளைத் தூண்டிவிட்டும், எகிப்தில் செங்கடல் பகுதியில் இருந்து கொண்டு மதிப்புமிக்க புனிதநகரங்களான மக்கா மற்றும் மதீனாவை ஆதிக்கம் செலுத்தி னான். அவனின் இந்த நடவடிக்கைக்கு அவன் பாக்தாதின் அப்பாஸிய கலீஃபா வின் ஆதரவில் தான் இருப்பது போல் நாடகமாடினான். இவனின் வழிவந்த ஆட்சியாளர்களும் இதே நாடகத்தைத் தொடர்ந்தனர். மம்லுக் சுல்தான்கள் கலீஃபாக்களைப் போல் குடும்ப பாரம்பரிய வரிசையில் ஆட்சிக்கு வருவதில்லை. யாரிடம் இராணுவத்தின் பலம் இருக்கிறதோ அவர்கள் ஆள்பவர்களைக் கொன்று விட்டு சுல்தான் பதவிக்கு வந்துவிடுவார்கள். இதையே பிந்தைய காலத்தில் ரோம சாம்ராஜ்ஜியத்தினர் பின் பற்றினார்கள்.

                                       மம்லுக்கள் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். ஆனால், அதிகமான வன்முறைகளும், கலவரங்களும் நடந் தன. கெய்ரோ நகரத்தில் பல அழகான மசூதிகளைக் கட்டினார்கள். இடையே 500 மைல்கள் தொலைவுள்ள கெய்ரோவையும், டமாஸ்கஸையும் இணைந்த (TWIN CITY) நகரங்களாக நிர்வகித்தனர். இடையே புறாக்களின் கடிதப்போக்குவரத்து பயன்படுத்தப்பட்டது. மேலும் பெய்பர்கள் ஒரே வாரத்தில் இரு நகரங்களிலும் போலோ என்னும் விளையாட்டை விளையாடுவதில் பெருமை அடைந்தார்கள். மம்லுக்குகளின் ஒழுங்கான நிர்வாகத்திறமையையும், இராணுவ வீரர்களையும் ஓட்டோமான் சுல்தான்கள் மத்திய கிழக்கு ஆட்சியில் பயன்படுத்திக்கொண்டார். பதினெட்டாம் நூற்றாண்டில் எகிப்தில் கவர்னர்களை விட மிகுந்த செல்வாக்கில் இருந்தார்கள். 1749 லிருந்து பாக்தாதை அலுவல் ரீதியாக நிர்வகிக்க ஆரம்பித்தார் கள். அவர்களின் துல்லியமான சக்தி வெளிப்படுத்தப்பட்டது. 1811 ல் ஓட்டோமான் படைகள் எகிப்தில் மம்லுக்குகளைத் தாக்கினார்கள். 1831 ல் மம்லுக்குகளின் முக்கிய நபர்களைத் தேடிக்கொன்றார்கள்.

                                      ஆனாலும், ஓட்டோமான் பேரரசு வரும் வரை சுமுகமாகத் தங்கள் துருக்கியின சிறு ஆட்சியாளர்களுடன் பகுதிகளைப் பங்கு போட்டுக்கொண்டு ஆட்சி செய்தார்கள். ஓட்டோமான்கள் மம்லுக்குகளிடம் மிக வும் எச்சரிக்கையாக இருந்தார்கள். எகிப்தை எதிர்க்கும் போது அருகிலிருந்த பெர்ஷியர்களை திறமையாகக் கையாண்டார்கள். 1517 ல் முதலாம் செலிம் என்னும் ஓட்டோமான் சுல்தான் நைல் நதிவழியாக சென்று கெய்ரோவைக் கைப் பற்றி கடைசி மம்லுக் சுல்தானைக் கொன்றார்.